Jump to content

துறைத்தலைவர் பதவி கோரி யாழ்.பல்கலை பேராசிரியர் உயிர் மாய்க்க முயற்சி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துறைத்தலைவர் பதவி கோரி யாழ்.பல்கலை பேராசிரியர் உயிர் மாய்க்க முயற்சி

August 16, 2022

spacer.png

தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது. 

அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார். 

அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார். 

அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் , நேற்றைய தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார். 

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். 

அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு , அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். 

இதேவேளை பகிடிவதை புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 18 மாணவர்களின் படங்களை விரிவுரையில் பேராசிரியர் ஒருவர் காண்பித்து , ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள் ” என கூறியமையால் மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவன் ஒருவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

அத்துடன் மற்றுமொரு பல்கலை கழக மாணவி ஒருவர் யாழ்.புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

யாழ்.பல்கலைக்கழக பேராசியர், மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாழ்.பல்கலை சமூக மட்டத்தில் அதிருப்தியும் விசனமும் எழுந்துள்ளது. 

https://globaltamilnews.net/2022/179750/

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலை பேராசிரியர் பதவிக்காக உயிர் மாய்க்க முயற்சி!

யாழ்.பல்கலை பேராசிரியர் பதவிக்காக...  தீக்குளித்து,  உயிர் மாய்க்க முயற்சி!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது.

அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார்.

அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார்.
அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் , நேற்றைய தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு , அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை பகிடிவதை புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 18 மாணவர்களின் படங்களை விரிவுரையில் பேராசிரியர் ஒருவர் காண்பித்து , ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள் ” என கூறியமையால் மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவன் ஒருவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் மற்றுமொரு பல்கலை கழக மாணவி ஒருவர் யாழ்.புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக பேராசியர், மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாழ்.பல்கலை சமூக மட்டத்தில் அதிருப்தியும் விசனமும் எழுந்துள்ளது.

https://athavannews.com/2022/1295003

  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

எங்களின் படித்த சமூகம் ஏன் இப்படியான கோழைத்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். ?சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் அல்லவா!!!

  • Like 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

யாழ்.பல்கலை பேராசிரியர் பதவிக்காக...  தீக்குளித்து,  உயிர் மாய்க்க முயற்சி!

உப்பிடியான  நட்டு களண்ட மரமண்டையளிட்டை பிள்ளையளை படிக்க விடக்கூடாது.😡

  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நேரம் செய்யிற வேலையா இது?!

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உப்பிடியான  நட்டு களண்ட மரமண்டையளிட்டை பிள்ளையளை படிக்க விடக்கூடாது.😡

ஊடக அவியலில் எப்படியான செய்தியும் வரலாம். ஏன் அவசரப்பட்டு உணர்ச்சிகளை கொட்டுவான்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஊடக அவியலில் எப்படியான செய்தியும் வரலாம். ஏன் அவசரப்பட்டு உணர்ச்சிகளை கொட்டுவான்?

யாழ் பல்கலையைத் த்தோண்டினால் விடயம் பிண நாற்றம் அடிக்கும்.

🤣

Edited by Kapithan
  • Like 2
Link to comment
Share on other sites

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஊடக அவியலில் எப்படியான செய்தியும் வரலாம். ஏன் அவசரப்பட்டு உணர்ச்சிகளை கொட்டுவான்?

குருபரன் நம்பிக்கையான ஊடகவியலாளர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

எங்களின் படித்த சமூகம் ஏன் இப்படியான கோழைத்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். ?சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் அல்லவா!!!

இதுதான் ஓசி விசுகோத்து படிப்பு என்பது கொஞ்சம் புலம்பெயர் தேசங்களிலும் அகதி அசெலம் ஏன் அடிக்க வைக்க பட்டம் என்று தெரியாமல் நீதி நேர்மை நியாயம் என்று யானை வாலை பிடித்து தொங்கும் கூட்டம் ஏன் இங்கும் உண்டு .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

இதுதான் ஓசி விசுகோத்து படிப்பு என்பது

பெருமாள் அண்ணா, இந்த ஓசி விசுகோத்து படிப்பை வைத்துத்தான் பலர் இன்று பொருளாதார ரீதியில் ஏதோ சமாளித்து வாழ்கிறார்கள். எல்லோராலும் தந்திரமாகவும், அரசியல்வாதிகளுக்கு கும்பிடு போட்டும் வாழத் தெரியாது..

இதுவே லண்டன், அவுஸ் போன்ற நாடுகள் என்றால் கூட பரவாயில்லை ஏதோ அரசு social money/Centrelink allowance கொடுக்கும் மிகுதியை பகுதி நேர வேலை பார்த்து படித்து முடிக்கலாம். பல்கலை கழகத்திற்கு HECS எடுத்து படித்து பின்பு சம்பளத்தில் கழிக்கலாம். 

ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இந்த இலவசப் படிப்பும் இல்லை என்றால் எங்கட பல பிள்ளைகள் பள்ளிக்கூட வாசலையோ, பல்கலைகழகத்திற்குள்ளோ போயிருந்திருக்க மாட்டார்கள். இன்றும் வறிய, நடுத்தர வருமான குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த மகாபொல கொடுப்பனவு மட்டும் வைத்து படிப்பை தொடர முடியாது. அவர்களுக்கு தொலைநோக்கும் சமூக நலனில் அக்கறையுள்ள விரிவுரையாளர்கள் சிலர் கொடைவள்ளல்கள்(உள்நாடு, வெளிநாடு), அறக்கட்டளைகளின் உதவிகளை பெற உதவி செய்கிறார்கள். உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும் ஆனாலும் ஏதோவொரு கோபத்தில் ஒசி விசுக்கோத்து படிப்பு என்று கூறிவிட்டீர்கள்!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது இரெண்டு பேருக்குமிடையிலான போட்டியால் வந்த வினை ஒருவர் வரணியைச் சேர்ந்தவர், மற்றையவர் வரணியில் பெண்ணெடுத்தவர். இருவரும் ஒரே கல்வியாண்டைச் சேர்ந்தவர்கள் (same batch 1990)

இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டியின் விழைவுதான் இந்த தற்கொலை முயற்சி. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் தற்போது இருவார விடுமுறையில் அனுப்பப்பட்டிருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இலவச ஆரம்ப கல்வி/நடுத்தர வகுப்பு கல்வி வசதிகள் இல்லாத நாடுகள் ஏதாவது இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

 இலவச ஆரம்ப கல்வி/நடுத்தர வகுப்பு கல்வி வசதிகள் இல்லாத நாடுகள் ஏதாவது இருக்கின்றதா?

சிந்திக்க வைத்த கேள்வி👏. தேடிப்பாப்பம்.

Link to comment
Share on other sites

31 minutes ago, குமாரசாமி said:

 இலவச ஆரம்ப கல்வி/நடுத்தர வகுப்பு கல்வி வசதிகள் இல்லாத நாடுகள் ஏதாவது இருக்கின்றதா?

பிலிப்பைன்சில் இலவச கல்வி இல்லையாம் அண்ணை. ( ஆரம்ப கல்வியில் இருந்து பல்கலைகளகம் வரை)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தியை சற்று தாமதமாகத்தான் பார்த்தேன்.  தாமதமானாலும் நானும் ஒரு ஆசிரியன் என்ற முறையில் என் கருத்தினைப் பதிவு செய்வது  பொறுப்பாகக் கருதுகிறேன். 

        ஆசிரியர் பொறுப்பு என்பது உலகில் அனைத்திலும் தலைசிறந்த ஒன்று. வெற்றி, தோல்வி, மேடு, பள்ளம் அனைத்தையும் சமநிலையுடன் பார்க்கும் பக்குவத்தைப் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் கடமை ஏற்றவர் ஆசிரியர். நடைமுறை உலகில்  திறமைக்கும் அதன் பயனாகிய அங்கீகாரத்திற்கும் தெளிவான சமன்பாடு இருந்தேயாக வேண்டும் என்பதில்லை. கற்றலும் கற்ற வழி நிற்றலுமே நமக்கான உரிமையும் பெருமையும். துறைத்தலைவர் என்பது கூடுதல் பொறுப்பு. அவ்வளவே. அப்பொறுப்பினைக் கொடுத்தால் பணி செய்வோம். இல்லையென்றால் மாணவர்க்கும் மக்கள் சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய பணிக்கு இன்னும் நேரம் அதிகம் கிடைத்துள்ளது எனக் கொள்வோம். 

       இவற்றையெல்லாம் மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் நிலையிலுள்ள ஆசிரியர் ஏதோ கூடுதல் பொறுப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை வரை போவது  சிறுபிள்ளைத்தனமாகவே தோன்றுகிறது. பணி ஓய்வு பெற்ற பின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கையில், "இதற்காகவா அன்றைக்கு நேரத்தையும் நிம்மதியையும் இழந்து தவித்தோம்?" என்று அவரே வெட்கப்படப் போகும் நிகழ்வு இது.

             ஆசிரியர் பதவியே கிடைத்து விட்டது. வேறு என்ன வேண்டும் உலகில் ? எல்லோருக்குமா கிடைத்தது ? பெரியதொரு உலகிற்குச் சொந்தக்காரர் தம்மைச் சிறு கூட்டுக்குள் அடைக்க ஏங்குவது வேடிக்கையும் வேதனையும். 

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2022 at 07:20, nunavilan said:

எங்களின் படித்த சமூகம் ஏன் இப்படியான கோழைத்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள். ?சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் அல்லவா!!!

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேணும். வெளியில் சொல்லாவிட்டாலும் அவர்கள் எம்மை ஒரு வழிகாட்டியாகவே பார்க்கிறார்கள். வேலைக்கு போகும்போது தனிப்பட்ட பிரச்சனைகளை ஒரு கரையில் வைத்துவிட்டு எம்மை நம்பி வரும் மாணவர்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள வேணும்.

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2022 at 08:21, குமாரசாமி said:

உப்பிடியான  நட்டு களண்ட மரமண்டையளிட்டை பிள்ளையளை படிக்க விடக்கூடாது.😡

இவர்கள் பதவிக்காக, சம்பள உயர்வுக்காக அதற்கும் மேலாக சுயகௌரவத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அத்துடன் பழிவாங்கும் எண்ணமும் இருந்ததால்தான் பல்கலை கழக வளாகத்தில் முயற்சித்து இருக்கிறார். எதைப்பற்றியும் எவரைபற்றியும் சிந்தனை இல்லாதவர்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nilmini said:

இவர்கள் பதவிக்காக, சம்பள உயர்வுக்காக அதற்கும் மேலாக சுயகௌரவத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அத்துடன் பழிவாங்கும் எண்ணமும் இருந்ததால்தான் பல்கலை கழக வளாகத்தில் முயற்சித்து இருக்கிறார். எதைப்பற்றியும் எவரைபற்றியும் சிந்தனை இல்லாதவர்கள்.

அக்கா,

இவர்கள் இருவரையும் நன்கறிவேன்.  உண்மையில் இதுதான்  நடந்தது.👇

"உது இரெண்டு பேருக்குமிடையிலான போட்டியால் வந்த வினை ஒருவர் வரணியைச் சேர்ந்தவர், மற்றையவர் வரணியில் பெண்ணெடுத்தவர். இருவரும் ஒரே கல்வியாண்டைச் சேர்ந்தவர்கள் (same batch 1990)

இவர்கள் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட ரீதியிலான போட்டி பொறாமையின் விழைவுதான் இந்த தற்கொலை முயற்சி."

யாழ் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கும் இந்தத் தற்கொலை முயற்சிக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இதனை என்னால் உறுதியாகக் கூற முடியும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அக்கா,

இவர்கள் இருவரையும் நன்கறிவேன்.  உண்மையில் இதுதான்  நடந்தது.👇

தகவலுக்கு நன்றி தம்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்வேன் என்று மிரட்டுவது,பிறகு அதனை செய்வது இதெல்லாம் யாழ் சமூகத்தில் சர்வ சாதாரணம். இன்றைய திகதியில் மட்டும் யாழ்ப்பாணம் முழுவதும் குறைந்து ஆயிரம் குடும்பங்களிலாவது தற்கொலை செய்வேன் போன்ற கதையாடல்கள் நடந்து இருக்கும். பிரச்சனை எம் சமூகத்தின் மனோவியல் சம்பந்தப்பட்டது.யாரும் சைக்கோலஜி படித்தவர்கள் தான் விடை தர வேண்டும் 

Link to comment
Share on other sites

தற்கொலை செய்வேன்,தற்கொலை செய்வேன் என சிலர் மற்றையோரைப் பயமுறுத்தவும் சொல்வதுண்டு.அதைவிடுத்து சிலரது உள்ளத்தில் உண்மையாகவே தற்கொலை எண்ணம் உருவாகி விடுவதுண்டு.இவர்களை இனம்கண்டு உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்தல் மிக மிக அவசியம். இல்லையேல் ஒருநாள் இல்லை ஒருநாள் ஏதோ ஒரு வழியில் அவர்கள் இன்னுயிரை போக்கிக்கொள்ளலாம்.அடி மனதில் உறைந்திருக்கும் இவ்உணர்வு ஆபத்தானது.இவ்வாறு தற்கொலை உணர்வு உள்ளவர்களை இனம் காண்பதில் அவரது உறவுகளுக்கும்,நணபர்களுக்கும்,உடன் பணிபுரிபவர்களுக்கும் உள்ள பங்களிப்பு மிக அபரிமிதமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

இவர்கள் பதவிக்காக, சம்பள உயர்வுக்காக அதற்கும் மேலாக சுயகௌரவத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அத்துடன் பழிவாங்கும் எண்ணமும் இருந்ததால்தான் பல்கலை கழக வளாகத்தில் முயற்சித்து இருக்கிறார். எதைப்பற்றியும் எவரைபற்றியும் சிந்தனை இல்லாதவர்கள்.

சரியாக சொன்னீர்கள்.

3 hours ago, நந்தி said:

தற்கொலை செய்வேன்,தற்கொலை செய்வேன் என சிலர் மற்றையோரைப் பயமுறுத்தவும் சொல்வதுண்டு.

நானும்   சின்னவயதிலை  வெருட்டலுக்கு பொலிடோல் குடிச்சு சாகப்போறன் எண்டுட்டு பூவரசம் மரத்திலை ஏறி ஒளிச்சு மூண்டு மணித்தியால கணக்கிலை  இருந்தனான்.:cool:

ஒருத்தரும் தேடவுமில்லை.....சத்தம் போடவுமில்லை 🙃

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நானும்   சின்னவயதிலை  வெருட்டலுக்கு பொலிடோல் குடிச்சு சாகப்போறன் எண்டுட்டு பூவரசம் மரத்திலை ஏறி ஒளிச்சு மூண்டு மணித்தியால கணக்கிலை  இருந்தனான்.:cool:

ஒருத்தரும் தேடவுமில்லை.....சத்தம் போடவுமில்லை 🙃

துலைஞ்சுது போ என்று விட்டுவிட்டினம் போல கிடக்கு.. 😀

12 hours ago, nilmini said:

இவர்கள் பதவிக்காக, சம்பள உயர்வுக்காக அதற்கும் மேலாக சுயகௌரவத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அத்துடன் பழிவாங்கும் எண்ணமும் இருந்ததால்தான் பல்கலை கழக வளாகத்தில் முயற்சித்து இருக்கிறார். எதைப்பற்றியும் எவரைபற்றியும் சிந்தனை இல்லாதவர்கள்.

போட்டியும், பழிவாங்கும் உணர்வும்தான் இங்கே வெளிவந்தது. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

துலைஞ்சுது போ என்று விட்டுவிட்டினம் போல கிடக்கு.. 😀

 நீங்களே சொல்லுங்கோ ப்ரோ? ராசா நாள் முழுக்க ஊர் மேய்ஞ்சிட்டு நேரகாலத்துக்கு கொட்ட வந்துட்டார் எண்டு   உங்களுக்கு சொன்னால் கோவம் வருமோ வராதோ? 😃

அதுதான் வேற லெவெல்ல சம்பவம் செய்து காட்டுவம் எண்டு பாத்தால் கோதாரி விழ எடுபடேல்லை 😂

  • Haha 3
Link to comment
Share on other sites

20 hours ago, குமாரசாமி said:

நானும்   சின்னவயதிலை  வெருட்டலுக்கு பொலிடோல் குடிச்சு சாகப்போறன் எண்டுட்டு பூவரசம் மரத்திலை ஏறி ஒளிச்சு மூண்டு மணித்தியால கணக்கிலை  இருந்தனான்.:cool:

அந்தக்காலத்திலேயே நீங்க அந்த மாதிரித்தான் இருந்திருக்கிறியள்.ஏறினதுதான் ஏறின ஒரு முருங்க மரத்திலயாவது ஏறி இருந்தால் இரும்புச்சத்துள்ள இலையாவது பறிச்சிருக்கலாம்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.