Jump to content

கோட்டாபய...  எதிர்வரும் 24ஆம் திகதி, இலங்கை வருவார் என...  அறிவித்தார் உதயங்க !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

கோட்டாபய...  எதிர்வரும் 24ஆம் திகதி, இலங்கை வருவார் என...  அறிவித்தார் உதயங்க !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பி மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும் இருப்பினும் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

மக்கள் போராட்டத்தை அடுத்து முன்னாள் ஜனாதிபதி, மாலைதீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று பின்னர் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1295058

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கோட்டாபய...  எதிர்வரும் 24ஆம் திகதி, இலங்கை வருவார் என...  அறிவித்தார் உதயங்க !

வந்து............?????????? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

வந்து............?????????? :cool:

ஆசியாவிலேயே… இனி இல்லை என்ற அளவுக்கு, அவமானப் பட்ட ஜனாதிபதிதான் கோட்டா.
வேறு நாட்டில் குழப்பம் ஏற்பட்டால்… தப்பி ஓடிய ஜனாதிபதிக்கு, அடைக்கலம் கொடுக்க ஒரு நாடாவது இருக்கும்.
இவரைப் பார்த்து.. எல்லா நாடும், கதவை அடித்து… சாத்தி விட்டார்கள்.
தமிழனுக்கு செய்த… ஊழ்வினை, பழிவாங்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாடு திரும்பி மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும் இருப்பினும் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

இப்ப ஏதோ கோத்தவின்ரை ஆட்சியில்லாத மாதிரிப் பேசுகின்றார்கள். ஓநாய்க்குப் பதிலா நரி கதிரையிலை இருக்குது. ஆனா ஓநாயின்ர கட்டுப்பாட்டிலையிருந்து ஊளையிடுகுது. அவளவுதான் வித்தியாசம். இதிலை கோட்டுh வந்தாலென்ன வராவிட்டாலென்ன இரண்டுமே ஒன்றுதான். ஆள் வெளியே இருந்து ஆட்சிநடத்துவதில் கில்லாடிதான்.

Link to comment
Share on other sites

நாடகம்

பெயர் - ஓடிப்போன ங் …கோட்ட

நடிகர்கள் - கோட்ட, ரணில், அறகளையவில் ஒரு பகுதியினர்

டைரக்சன் - அது ரகசியம் (சீனா?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

வந்து............?????????? :cool:

 

10 hours ago, தமிழ் சிறி said:

நாடு திரும்பி மக்களுக்கு சேவையாற்றுவார் என்றும் இருப்பினும் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார்

ஜனாதிபதி, மக்களின் தியாகியாகப்போகிறார் பாருங்கோ! புலி தருப்பைக் காப்போடு திரும்பப்போகுதாம் கேளுங்கோ, அவரிடம் ஆசி பெறப்போகுது சனம்! நாடு செழிக்கப்போகுது. இடி அமீனுக்கு கூட அடைக்கலம் கொடுத்தவர்கள், இவரை விரட்டுகிறார்கள் என்றால் பாருங்கோவேன்! இலங்கையின் சாபம் தங்களை தொடர வேண்டாமே என்றுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அடுத்த வாரம் திரும்புகிறாரா?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.

ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் மிக் (MIC) விமான கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், எதிர்வரும் 24ம் தேதி அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.

 

நாட்டிற்கு வருகைத் தரும் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிற்காக சேவையாற்ற எதிர்பார்த்துள்ளதாக கூறிய அவர், அரசியலில் அவர் ஈடுபட போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசியல்வாதி என்ற விதத்தில் திறமையானவர் கிடையாது எனவும் ஒரு நிர்வாகியாக திறமையானவர் எனவும் அவர் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் தேதி நாடு திரும்புகின்றார் என்பதை பொறுப்புடனா கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

''சில சந்தர்ப்பங்களில் மாற்றங்கள் வரலாம். இன்று பொறுப்புடன் கூறுகின்றேன். நாளை சில வேளைகளில் மாற்றம் வரலாம். அவர் தேதியை மாற்றினால், ஒன்றும் செய்ய முடியாது" என அவர் குறிப்பிட்டார்.

 

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து, மக்கள் சுமார் நான்கு மாத காலம் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்த போராட்டங்கள் வலுப் பெற்ற நிலையில், கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி கொழும்பை லட்சக்கணக்கான மக்கள் சுற்றி வளைத்து, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் வாசஸ்தலம் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர்.

இதையடுத்து, தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த மாதம் 13ம் தேதி மாலைத்தீவு சென்று, அங்கிருந்து 14ம் தேதி சிங்கப்பூர் பயணமானார்.

சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கோட்டாபய ராஜபக்ஷ, சிறிது காலம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்தார்.

அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து கடந்த 11ம் தேதி தாய்லாந்து நோக்கி தனது மனைவியுடன் பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது அங்கு தங்கியுள்ளார்.

வெளிநாட்டில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் செலவீனங்கள் அனைத்தும், அவரது சொந்த பணத்திலேயே செலவிடப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-62591633

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிடுகின்றார் கோட்டாபய ராஜபக்ச

By RAJEEBAN

18 AUG, 2022 | 08:55 AM
image

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக  கீரீன்கார்ட்டிற்கு காத்திருக்கின்றார் அங்கு தனது குடும்பத்துடன் வசிப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அமெரிக்க பிரஜை என்பதால் முன்னாள் ஜனாதிபதி கிறீன்கார்ட்டிற்கு தகுதியானவர் அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் சட்டத்தரணிகள் கடந்த மாதமே இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டனர் என விடயங்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது கொழும்பில் உள்ள அவரது சட்டத்தரணிகள் மேலதிக ஆவணங்களை தகவல்களை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும்.

இதேவேளை தாய்லாந்தில் நவம்பர் மாதம் வரை தங்கியிருக்கும் தனது முன்னையை திட்டத்தை கைவிட்டுவிட்டு முன்னாள் ஜனாதிபதி 25 ம் திகதி இலங்கை திரும்பவுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களால் தாய்லாந்தில் அவர் எதிர்பார்த்த நடமாட்ட சுதந்திரம் கிட்டாததால் இரண்டு நாட்களிற்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து இலங்கை திரும்புவதற்கு தீர்மானித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களிற்காக அவரை ஹோட்டலி;றகுள்ளேயே தங்கியிருக்குமாறு தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோட்டாபய இலங்கை திரும்பியதும் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குவது குறித்து அமைச்சரவை ஆராயும்.

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிடுகின்றார் கோட்டாபய ராஜபக்ச | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2022 at 02:12, பிழம்பு said:

கோட்டாபய இலங்கை திரும்பியதும் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குவது குறித்து அமைச்சரவை ஆராயும்.

கொள்ளைக்காரர் குடியிருக்கும் நாடுதானே, தலைவனுக்குரிய சலுகைகளை அதன் உறுப்பினர்கள் செய்து கொடுப்பதுதானே நிஞாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரென எதிர்பார்க்கவில்லை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

19 Aug, 2022 | 09:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபடுவார் என்பதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்து விட்டு நாட்டுக்கு சேவையாற்றுவதற்காகவே அவர் அரசியலில் ஈடுப்பட்டார்.

பல்வேறு காரணிகளினால் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது என ஆளும் தரப்பின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கண்டி நகரில் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆவர் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்களுக்கு உள்ள சுதந்திரம் மற்றும் உரிமை அவருக்கும் உண்டு. அந்த உரிமை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிறகும் கிடைக்கப்பெற வேண்டும்.போராட்டகாரர்களினால் அவர் தொடர்ந்து வெளிநாட்டில் வசிப்பது அவருக்கு எதிரான மனித உரிமை மீறலாக கருதப்படும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி,நாட்டுக்கு வருகை தருவதற்கான சூழலை ஏற்படுத்தி அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும்,மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கும்.

பாராளுமன்றில் 145பேர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கமைய அரச நிர்வாகத்தை முன்னெடுக்க பொதுஜன பெரமுன பாராளுமன்ற மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது சகல அரசியல் கட்சிகளினதும் தலையாய கடமையாகும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கையினை ஏற்றுக்கொண்டவர்களில் பெரும்பாலானோர் எதிர்க்கட்சியில் உள்ளார்கள்.

மக்கள் விடுதலை முன்னணிமுஸ்லிம் காங்கிரஸ் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கொள்கை திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்பதை எதிர்பார்க்கிறேன்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கம் அல்லது சர்வ்க்கட்சி நிர்வாகம் ஸ்தாபிக்கப்படுமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதான அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/133963

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.