கருத்துக்கள உறவுகள் colomban பதியப்பட்டது August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது August 18, 2022 யாழ். இந்துக் கல்லூரியில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். தற்போது நாடு வறுமைகோட்டின் கீழ் உள்ளது அனைவரும் அறிந்த விடயமே இதனால் பல்வேறு நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவும் தங்களால் முடிந்த உதவியை இலங்கைக்கு நிவாரணபொதி அனுப்புதல் போன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதைனைத்தொடர்ந்து யாழில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியை யாழிற்கு வந்து பிரபல பாடசாலையான யாழ். இந்துக்கல்லூரியில் ஹிந்து மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழ் நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பை பல தமிழர்கள் ஏற்ப மறுத்து அதற்கெதிரக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. https://www.todayjaffna.com/312224 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 தமிழ் மக்களே! ஆங்கிலம் படியுங்கள்,ஏன் பிரான்ஸ்,ஜேர்மன்,டென்மார்க்,சீனா மொழி படியுங்கள், இவை தொழில்சார்பு மொழிகள் பிற்கால வாழ்க்கைக்கு உதவும். சிங்களம்,ரஷ்ய மொழிகூட படிக்கலாம். ஆனால் ஹிந்தி படிக்காதீர்கள்.இந்தியாவில் கூட பிரயோசனமில்லாத மொழி. உலகில் மதிப்பில்லாத மொழி. அந்த மொழி உலகிற்கே உதவாத மொழி. ஹிந்தியன் பாணிப்பூரி யாழ்ப்பாணத்திலை விக்கப்போறான் எண்டது தெளிவாய்த்தெரியுது. 3 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 20 minutes ago, குமாரசாமி said: தமிழ் மக்களே! ஆங்கிலம் படியுங்கள்,ஏன் பிரான்ஸ்,ஜேர்மன்,டென்மார்க்,சீனா மொழி படியுங்கள், இவை தொழில்சார்பு மொழிகள் பிற்கால வாழ்க்கைக்கு உதவும். சிங்களம்,ரஷ்ய மொழிகூட படிக்கலாம். ஆனால் ஹிந்தி படிக்காதீர்கள்.இந்தியாவில் கூட பிரயோசனமில்லாத மொழி. உலகில் மதிப்பில்லாத மொழி. அந்த மொழி உலகிற்கே உதவாத மொழி. ஹிந்தியன் பாணிப்பூரி யாழ்ப்பாணத்திலை விக்கப்போறான் எண்டது தெளிவாய்த்தெரியுது. மக்கள் இதை முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும். இந்தியா கல்வியை மேம்படுத்துவதாயின் பல விடயங்களை செய்யலாம். எமது பிள்ளைகளை தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னேற்றி, ஐதரபாத், பெங்களூரு போல் யாழ்பாணத்தை முன்னேற்றலாம். அதை விடுத்து ஒரு நாட்டில் கூட தேசிய மொழியாக இல்லாத, இந்தியாவின் வட பிராந்திய மொழியை கற்பிற்பது மொழித்திணிப்பே. இதுதான் என் மனநிலையும். ஆனால்……. எமது படித்த வருங்கால சந்ததி இந்தி ஆற்றல் பெற்றிருந்தால் - அதை வைத்து டெல்லியின் போக்கை மாற்ற கூடியதாக இருக்குமோ? ஒரு மொழியை பேசும் போது இயல்பாகவே “அட இவர் நம்மாள்” என்ற மனநிலை. அல்லது “வெளியாள் எமது மொழி பேசுகிறாரே” என்ற பூரிப்பு ஏற்படும். வெள்ளையர் தமிழ் பேசும் போது எமக்கு ஏற்படும் அனுபவம் போல. இது எமக்கு எதிர்காலத்தில் அனுகூலமாக அமையலாம். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 (edited) 43 minutes ago, குமாரசாமி said: தமிழ் மக்களே! ஆங்கிலம் படியுங்கள்,ஏன் பிரான்ஸ்,ஜேர்மன்,டென்மார்க்,சீனா மொழி படியுங்கள், இவை தொழில்சார்பு மொழிகள் பிற்கால வாழ்க்கைக்கு உதவும். சிங்களம்,ரஷ்ய மொழிகூட படிக்கலாம். ஆனால் ஹிந்தி படிக்காதீர்கள்.இந்தியாவில் கூட பிரயோசனமில்லாத மொழி. உலகில் மதிப்பில்லாத மொழி. அந்த மொழி உலகிற்கே உதவாத மொழி. ஹிந்தியன் பாணிப்பூரி யாழ்ப்பாணத்திலை விக்கப்போறான் எண்டது தெளிவாய்த்தெரியுது. குமாரசாமி அண்ணை... நாங்கள் இந்தி கற்றால், உதயநிதி... சாரி... சின்னவர், வெளியிடும் இந்திப் படங்களை பார்த்து, இலகுவில் விளங்கக் கூடியதாக இருக்கும் அல்லவா? 😎 Edited August 18, 2022 by தமிழ் சிறி Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 23 minutes ago, goshan_che said: எமது படித்த வருங்கால சந்ததி இந்தி ஆற்றல் பெற்றிருந்தால் - அதை வைத்து டெல்லியின் போக்கை மாற்ற கூடியதாக இருக்குமோ? ஒரு மொழியை பேசும் போது இயல்பாகவே “அட இவர் நம்மாள்” என்ற மனநிலை. அல்லது “வெளியாள் எமது மொழி பேசுகிறாரே” என்ற பூரிப்பு ஏற்படும். வெள்ளையர் தமிழ் பேசும் போது எமக்கு ஏற்படும் அனுபவம் போல. இது எமக்கு எதிர்காலத்தில் அனுகூலமாக அமையலாம். நாங்களும், அவர்களும் இந்து சமயமாக... இருக்கும் போதே, துடிக்க துடிக்க கொன்றவன் இந்தியன். நாங்கள் எத்தனையோ தடவை, நேசக்கரம் நீட்டி... இந்தியா எமது தந்தை நாடு என்று சொன்ன போதும் காதில் வாங்கிக் கொள்ளாமல்... முன்னாள் இந்தியப் பிரதமரை.. அடித்த சிங்களத்துக்கு, ஆயுத உதவிகளையும், போர்ப் பயிற்சியும் கொடுத்து எம்மை அழித்தவன். அவனிடம் எந்த நன்மையையும் நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களின் பாசையில் நாம்... சூத்திரர். எம்மை அழிக்கவே எப்போதும் நினைப்பார்கள். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 32 minutes ago, goshan_che said: ஆனால்……. எமது படித்த வருங்கால சந்ததி இந்தி ஆற்றல் பெற்றிருந்தால் - அதை வைத்து டெல்லியின் போக்கை மாற்ற கூடியதாக இருக்குமோ? ஒரு மொழியை பேசும் போது இயல்பாகவே “அட இவர் நம்மாள்” என்ற மனநிலை. அல்லது “வெளியாள் எமது மொழி பேசுகிறாரே” என்ற பூரிப்பு ஏற்படும். வெள்ளையர் தமிழ் பேசும் போது எமக்கு ஏற்படும் அனுபவம் போல. இது எமக்கு எதிர்காலத்தில் அனுகூலமாக அமையலாம். ஹிந்தியாவிற்கு அந்த நல்லெண்ணம் இருந்திருந்தால் சிறிலங்காவில் 40 வருடங்களாக எவ்வித சர்ச்சைகளும் இருந்திருக்காதல்லவா? ஏனெனில் சிங்கள இனவாதிகளையும் கட்டிப்போடும் வல்லமை அவர்களுக்கு உண்டு.இதை அண்மைக்காலங்களில் பார்த்திருந்தோம். இன்றைய கிந்தியாவின் திட்டம் சங்கி கொள்கைகளை பரப்புவதும் மொழி பரப்பலும் மட்டுமே. அதாவது அகன்ற ஹிந்தியா? தமிழ்நாட்டில் அவர்கள் செய்ய தலைப்படுவதை பார்த்தாலே புரிகின்றது அல்லவா. ஹிந்தியாவுக்கு சுட்டுப்போட்டாலும் நல்லெண்ணம் வரவே வராது. 30 minutes ago, தமிழ் சிறி said: குமாரசாமி அண்ணை... நாங்கள் இந்தி கற்றால், உதயநிதி... சாரி... சின்னவர், வெளியிடும் இந்திப் படங்களை பார்த்து, இலகுவில் விளங்கக் கூடியதாக இருக்கும் அல்லவா? 😎 எதுக்குமே உதவாத திராவிட மொடல் பற்றி யாழில் எழுதினால் ஒவ்வாமை வரும்.😂 1 Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted August 18, 2022 Share Posted August 18, 2022 வரவேற்கப்பட வேண்டிய விடயம். தமிழ் இளையோர்கள் அப்படியே சீன மொழியையும் கற்றுக் கொள்வது அவசியம். இங்கு தக்கண பிழைக்கும் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 5 hours ago, குமாரசாமி said: ஹிந்தியாவிற்கு அந்த நல்லெண்ணம் இருந்திருந்தால் சிறிலங்காவில் 40 வருடங்களாக எவ்வித சர்ச்சைகளும் இருந்திருக்காதல்லவா? ஏனெனில் சிங்கள இனவாதிகளையும் கட்டிப்போடும் வல்லமை அவர்களுக்கு உண்டு.இதை அண்மைக்காலங்களில் பார்த்திருந்தோம். இன்றைய கிந்தியாவின் திட்டம் சங்கி கொள்கைகளை பரப்புவதும் மொழி பரப்பலும் மட்டுமே. அதாவது அகன்ற ஹிந்தியா? தமிழ்நாட்டில் அவர்கள் செய்ய தலைப்படுவதை பார்த்தாலே புரிகின்றது அல்லவா. ஹிந்தியாவுக்கு சுட்டுப்போட்டாலும் நல்லெண்ணம் வரவே வராது. உண்மைதான். என்னதான் நாங்கள் தூய ஹிந்தியில் கதைத்தாலும், ஹிந்தியா இலங்கைக்கு சூ (சப்பாத்து) கழுவுவதில்தான் மினகெடும். 5 hours ago, குமாரசாமி said: எதுக்குமே உதவாத திராவிட மொடல் பற்றி யாழில் எழுதினால் ஒவ்வாமை வரும்.😂 தற்காலிகம்…தற்காலிகம் *** Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 1 hour ago, குமாரசாமி said: தமிழ் மக்களே! ஆங்கிலம் படியுங்கள்,ஏன் பிரான்ஸ்,ஜேர்மன்,டென்மார்க்,சீனா மொழி படியுங்கள், இவை தொழில்சார்பு மொழிகள் பிற்கால வாழ்க்கைக்கு உதவும். சிங்களம்,ரஷ்ய மொழிகூட படிக்கலாம். ஆனால் ஹிந்தி படிக்காதீர்கள்.இந்தியாவில் கூட பிரயோசனமில்லாத மொழி. உலகில் மதிப்பில்லாத மொழி. அந்த மொழி உலகிற்கே உதவாத மொழி. ஹிந்தியன் பாணிப்பூரி யாழ்ப்பாணத்திலை விக்கப்போறான் எண்டது தெளிவாய்த்தெரியுது. மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள். அரசியல் தலைவர்மார் இதற்கு எப்படி ஒத்துப் போனார்கள்? இந்திய உதவி தூதராலயம் யாழில் இருந்து சிங்களவனை விட அநிஞாயம் செய்து மக்களையும் கட்சிகளையும் குழப்பியடித்துக் கொண்டிருக்கிறது. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 (edited) தமிழ்ப் சிங்களம் கற்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயுதமேந்திப் போராடிவிட்டு, கிந்தி கற்பிப்பதற்கு சம்மதமா ? தியாகி திலீபனின் ஆன்மாவே மன்னிக்காது. இதற்கு ஒத்தூதியவர்கள் யார் ? 😡 Edited August 18, 2022 by Kapithan 3 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Elugnajiru Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 இந்துவின் மைந்தர்களே பெருமைப்படுங்கோ. இனிமேல் புலம்பெயர் தேசத்தில் இந்துவின் பழைய மாணவர்கள் என ஒரு கூட்டம் கிந்தியில் கதைச்சுக்கொண்டு திரியப்போகுதுகள் என்னை எல்லோரும் விளக்குமாறால டிக்க வெளிக்கிடுவினம் எனத்தெரியும் இந்த இந்துக்கல்லூரி இப்போது இந்தியக்கல்லூரி ஆகிவிட்டுது இது இனி இருந்தென்ன இல்லாதுவிட்டால் என்ன பெருமாள் கோவிலடி சேணியதெருப்பள்ளிக்கூடம் பரவாயில்லை. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 இதை நிறுத்த பழைய மாணவர்கள் அளுத்தம் கொடுக்க முடியாதா? இலங்கை கல்வி திணக்கள கட்டாய பாடம் இல்லை. மாணவர்கள் புறக்கணிக்க முடியுமாயின் முற்றாக புறக்கணித்து விடலாம். சில பிக்குமாருக்கு விடயத்தை சொல்லி மூட்டி விட்டாலும் வேலை செய்யும். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 1 hour ago, ஈழப்பிரியன் said: அரசியல் தலைவர்மார் இதற்கு எப்படி ஒத்துப் போனார்கள்? அவையள ஏன் கேக்க வேணும்?😁 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 அப்ப, தெற்கில் சீனாக்காரன் ஆழமாக கால்பதிக்க, வடக்கு, கிழக்கு பகுதியில் இந்தியா ஆழமாக கால்பதிக்க முடிவு செய்தாச்சு என்று சொல்ல வருகின்றனரோ.... 🤔 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 56 minutes ago, Nathamuni said: அப்ப, தெற்கில் சீனாக்காரன் ஆழமாக கால்பதிக்க, வடக்கு, கிழக்கு பகுதியில் இந்தியா ஆழமாக கால்பதிக்க முடிவு செய்தாச்சு என்று சொல்ல வருகின்றனரோ.... 🤔 நாதம்ஸ்... இன்றைய கருத்து ஓவியத்தில், உங்கள் கேள்விக்கான பதிலை, வெளிப்படுத்தி உள்ளார்கள். 🙂 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 விருப்பத் தெரிவாக சமஸ்கிரதமே படிக்கலாம்.. சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றலாம். அதில் ஹிந்தி மட்டுமல்ல.. உலகின் முக்கிய மொழிகளும் கற்பிக்கப்பட்டால் விருப்பத் தெரிவாக எவரும் தெரிவு செய்து படிக்கலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் கட்டாயம் ஹிந்தி படி.. சிங்களம் படின்னு தாய்மொழியான தமிழை ஒருக்கழித்து கற்பிக்க முனைவது அடிப்படை மனித உரிமை மீறலாகும். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 தென்பகுதியில், சீன மொழியில் போர்டு, பெயர்ப்பலகை எல்லாம் வந்து விட்டது. எல்லாம் கையை விட்டு போகும் வரை, வெள்ளி பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இப்ப, இந்தி படிப்பிக்கிறோம், தமிழர் பகுதியில் நாம், என்று பம்மாத்து வேலை பார்க்கிறது, இந்தியா. தமிழர் நம்பிக்கை பெறாமல், இந்தியா எதுவுமே செய்யமுடியாது. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புலவர் Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 யார் இடத்தில வந்து யார் சுpன் போடுறது?இது இராமன் பூமியோ> பெரியார் பூமியோ கிடையாது. இராவணன் பூமி.மொழிக்காக ஆயிரம்ஆயிரம் மாவீரர்களும் மக்களும் உயிர்க் கொடை கொடுத்த பூமி!! தமிழர்கள் சுpனமொழிபடித்தாலும் படிப்பார்களே ஒழிய இந்தி மொழியைத் திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.இந்தியா எங்களைக்காப்பாற்றும் என்று இந்தியாவின் காலை நக்கும் அரசியல்வாதிகள் மட்டும் இந்தி படிக்கட்டும்.தமிழர்களை சீனாவை நோக்கி இந்தியா நகர்த்துகிறது. ஒரு வகையில் அதுவும் நல்லதே. தமிழர்களுக்கும் சுpனர்களுக்கும் உள்ள தொடர்பு சிங்கள வட இந்தியர்களின் தொடர்மப விட ஆழமானது.சீன்கள் பெருமதிப்பு வைத்திருக்கும் போதிதர்மரும் ஒரு தமிழரே! இந்தியா இதை நிறுத்தாவிட்டால் தமிழர்கள் சீனாவுக்கு நேசக்கரத்தை நீட்டுவோம். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புலவர் Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 இந்தியா திருந்த வாய்ப்பில்லை. அதனாலேதான் சீனக்கப்பல் இலங்கையில் நிற்கிறது.மாட்டு முத்திரம் குடிக்கிறவன் மூளை அப்படித்தான் இருக்கும். இந்தியா தனக்குத்தானே மண் அள்ளிப்போடுகிறது. இந்தியாவின் மாநிலங்களிலேயே இந்தியை கடுமையாக எதிர்க்கும் மாநிலம் தமிழகம். சினிமாவிலும் கிரிக்கட்டிலும் திட்டமிட்டு மூழ்கடிக்கப்பட்ட தமிழகமே இந்தி விடயத்தில் இப்படி இருந்தால் தமிழுக்காக உயிதைக் கொடுத்துப் போராடிய தமிழீழம் எப்படி இருக்கும் . தேவையில்லாமல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் வந்த விளைவுகளை இந்தியா திரம்ப படிக்க வேண்டும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புலவர் Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 சீனாக்காரன் துறைமுகம் கட்டித்தாறான் வீதிகள் போட்டுத்தாறான் புதிதாக ஒரு நகரமெ உருவாக்கித்தாறான்.இந்தியா க்காரன் இந்தியைப் படித்து மாட்டு மூத்திரத்தைக்குடிக்கச'; சொல்கிறான் எது நல்லது தமிழ்மக்களுக்குத் தெரியும்.அதைவிட்டு விட்டு 500 வருட த்து கைபர்கணவாய் வழியா வந்து உள்ளுர் மொழிகளுடன்கலந்து உருவாகிய பரிசோதனைக்குழாய் மொழியை ஆதியாய் அநாதியாய் பிறந்த தமிழ்மொழியின் உலகமொழிகளின் தாய்மொழியைப் பேசும் தமிழர்கள் எப்படி ஏற்பார்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் வாலி Posted August 18, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 18, 2022 எங்கண்ட யப்னா ஹிண்டு ஸ்கூல் அந்தம் “வாழிய யாழ்நகர் இந்துக் கல்லுரி” கூட இண்டியாவிண்ட நசனல் அந்தம் “ஜன கண மன” வங்க மொழி மெட்டில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது. 🤓 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted August 19, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 19, 2022 1 hour ago, வாலி said: எங்கண்ட யப்னா ஹிண்டு ஸ்கூல் அந்தம் “வாழிய யாழ்நகர் இந்துக் கல்லுரி” கூட இண்டியாவிண்ட நசனல் அந்தம் “ஜன கண மன” வங்க மொழி மெட்டில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது. 🤓 அந்தம் கூட ஒரே மெட்டில் என்றால் ஆதியிலேயே கோளாறு இருந்திருக்கு😎. ஆனால் பள்ளி தொடங்கினது 1886 லாம். ஜனகன மண முதலில் சபை ஏறியது 1921லாம். ஆதியில் பள்ளிக்கு அந்தம் இல்லாமல் இருந்து பின் இடையில் வந்திருக்குமோ? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted August 19, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 19, 2022 13 hours ago, colomban said: இதைனைத்தொடர்ந்து யாழில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியை யாழிற்கு வந்து பிரபல பாடசாலையான யாழ். இந்துக்கல்லூரியில் ஹிந்து மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியாவின் தேசிய மொழி(National Language) எது எனக் கேட்டால் பலர் இந்தி(Hindi) என்று பதில் கூறுகின்றனர்.வட இந்தியாவைச் சேர்ந்தவர் ஹிந்திதான் தேசிய மொழி என்கின்றனர்.ஆனால் உண்மையில் ஹிந்தி தேசிய மொழி அல்ல.இந்தியாவின் அரசு ஏற்பு பெற்ற 22 மொழிகளில் இந்தியும் ஒன்று.வட மாநிலங்களில் அதிகமாக பேசப்படும் மொழியாக இந்தி உள்ளது.அவ்வளவுதானே தவிர இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் Posted August 19, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 19, 2022 1 hour ago, goshan_che said: அந்தம் கூட ஒரே மெட்டில் என்றால் ஆதியிலேயே கோளாறு இருந்திருக்கு😎. ஆனால் பள்ளி தொடங்கினது 1886 லாம். ஜனகன மண முதலில் சபை ஏறியது 1921லாம். ஆதியில் பள்ளிக்கு அந்தம் இல்லாமல் இருந்து பின் இடையில் வந்திருக்குமோ? கோசான், உங்கள் கருத்துப்படி பார்த்தால், யாழ் இந்து அந்தத்தில் இருந்து தான், இந்திய தேசீய கீதம் வந்திருக்கும் போல…!😊 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கிருபன் Posted August 19, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted August 19, 2022 17 hours ago, colomban said: யாழ். இந்துக் கல்லூரியில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். தற்போது நாடு வறுமைகோட்டின் கீழ் உள்ளது அனைவரும் அறிந்த விடயமே இதனால் பல்வேறு நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவும் தங்களால் முடிந்த உதவியை இலங்கைக்கு நிவாரணபொதி அனுப்புதல் போன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதைனைத்தொடர்ந்து யாழில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியை யாழிற்கு வந்து பிரபல பாடசாலையான யாழ். இந்துக்கல்லூரியில் ஹிந்து மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழ் நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பை பல தமிழர்கள் ஏற்ப மறுத்து அதற்கெதிரக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. https://www.todayjaffna.com/312224 ஹிந்தி மொழி ஏன் கற்பிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லாமல் வந்த “செய்தி”யை வைத்து வீணான கற்பனைகளில் கருத்துக்கள் வருகின்றன. அடுத்த வாரம் ஜேர்மன் மொழி கற்பித்தல் ஆரம்பிக்கவுள்ளது. பின்னர் பிரெஞ்ச் மொழியும் கற்பிக்கப்படுமாம். — யாழ் இந்துக் கல்லூரியில் அண்மையில் திறக்கப்பட்ட வெளிநாட்டு கற்கைகள் மற்றும் திறன்விருத்தி நிலையத்தில் ஜேர்மன், பிரஞ், ஹிந்தி போன்ற பல பிறமொழி கற்கைகளை மாணவர்களுக்கு கற்பிக்கவிருக்கின்றோம். அதன் முதற்கட்டமாக ஹிந்தி மொழி கற்கை நெறியினை 17.08.2022 அன்று ஆரம்பித்திருக்கின்றோம். மேற்படி கற்கை நெறியின் வளவாளராக முன்னாள் களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி ஹாந்தி டீ சொய்சா அவர்கள் கடமையாற்றுவார். இவ்விரிவுரையாளரை ஒழுங்கமைத்து தந்த இந்திய துணைத்தூதரகம் யாழ்ப்பாணத்திற்கு நன்றிகள். மேற்படி மொழித்தேர்ச்சியூடாக எமது மாணவர்கள் உயர் புலமைப்பரிசில்களை இந்திய பல்கலைக் கழகங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும். கற்கைநெறி வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை முடிவடைந்ததும் இடம்பெறும். பழைய மாணவர்களும் பங்கேற்கலாம். வரும் வாரம் ஜேர்மன் மொழி கற்கையை ஆரம்பிக்கின்றோம். ஆர்வமுள்ள பழைய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். https://www.facebook.com/134653173274570/posts/7819827461423731/?d=n Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts