Jump to content

ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவில் 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசு!

ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு!

ரஷ்யாவில்... 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான, குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்று ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புடின் வெளியிட்டுள்ள ஆணையில், ‘ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் 1 மில்லியன் ரூபிள் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த விருதை 10 அல்லது மேற்பட்ட குழந்தையை பெற்ற ரஷ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும்.

தகுதி பெற்ற பெண்களுக்கு அவர்களின் 10ஆவது குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்தவுடன் இவ்விருது கிடைக்கும். போர், தீவிரவாத செயல், உடல் நலக்குறைவு, விபத்து சூழல் காரணமாக ஒரு குழந்தையை இழந்தாலும் அவர்கள் விருதுக்கு தகுதி பெறுவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவில் பிறப்பு வீதம் குறைந்து வருவதாலும், கொரோனா உயிரிழப்பு- உக்ரைனுடனான போர் போன்ற காரணங்களால் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியில் ரஷ்யாவுக்கு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த உயிரிழப்பை ஈடுசெய்ய ரஷ்ய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய சோவியத் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ரஷ்ய பெண்களுக்கு பெரும் தொகையுடன் ‘மதர் ஹீரோயின்’ என்ற கவுர பட்டம் சோவியத் ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வந்தது. இந்த பட்டத்தினை சுமார் 4 லட்சம் தாய்மார்கள் அப்போது பெற்றனர். 1992ஆம் ஆண்டு சோவித் ஒன்றியம் வீழ்ந்த பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.

https://athavannews.com/2022/1295309

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு!
  • கருத்துக்கள உறவுகள்

sheperd putin | Vladimir Putin | Know Your Meme

மாண்புமிகு  பெரு மதிப்பிற்குரிய அதி உத்தம தன் இன கரிசனையாளர் புட்டின் அவர்களின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் சகல இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியில் மக்கள் செல்வமும் பல்கி பெருக வாழ்த்துகின்றேன்.

அதிலும் ரஷ்ய மக்களுக்கு என விளித்து கூறியது இன்னும் வரவேற்க தக்கதே. இல்லையேல் பிள்ளை பெறுவதில் ஜாம்பவன்களான அரபு உலகை சார்ந்தோர்  அகதி எனும் பெயரில் அடாத்தாக உட்புகுந்து ஏட்டிக்கு போட்டியாக சந்ததியை பெருக்கி விடுவர்.

வாழ்க மாண்புமிகு புட்டின் ,வளர்க உங்கள் கொள்கை, உயர்க உங்கள் நாமம். 💪🏼

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதிலும் ரஷ்ய மக்களுக்கு என விளித்து கூறியது இன்னும் வரவேற்க தக்கதே. இல்லையேல் பிள்ளை பெறுவதில் ஜாம்பவன்களான அரபு உலகை சார்ந்தோர்  அகதி எனும் பெயரில் அடாத்தாக உட்புகுந்து ஏட்டிக்கு போட்டியாக சந்ததியை பெருக்கி விடுவர்.

வாழ்க மாண்புமிகு புட்டின் ,வளர்க உங்கள் கொள்கை, உயர்க உங்கள் நாமம். 💪🏼

GIFs for Twitter — The 4C Summit

அதி உத்தம  ஜனாதிபதி புட்டின் அவர்களின்.. தூர நோக்கு பார்வையை, 
பாராட்ட வார்த்தைகளே இல்லை 💐.  அதிலும்... Cow Boy அமெரிக்கன் போல்... 
கண்டவன், நிண்டவன், வாறவன், போறவன்.. எல்லாருக்கும் 
அமெரிக்கன் குடியுரிமை  குடுத்து... சனத் தொகையை உயர்த்திக் காட்டுற... 
ஊத்தை வேலையை... மாண்புமிகு அதி உத்தமர் புட்டின் அவர்கள், செய்யவில்லை. 👍

ஒறிஜினல்  ரஷ்யனுக்கே அந்தப் பெருமையை கொடுப்பதன் மூலம் 
தன் இனத்தையும், நாட்டையும்  எவ்வளவு நேசிக்கின்றார் என்பது புரியும். ❤️

அதி உத்தம புட்டின் அவர்களின் கொள்கைகளை... யாழ்ப்பாண பாடசாலைகளில் 
ஒரு பாடமாக கற்பித்து,  மாணவர்களுக்கு... நாட்டுப் பற்றையும், இனப் பற்றையும்... 
ஊட்டி, வளர்க்க வேண்டும். 🥰

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

15 இலிருந்து 64 வயது வரையான வயதெல்லை உடையவர்களை உழைக்கும் சனத்தொகை என்பார்கள்.

இந்த எல்லைக்குள் இல்லாத மக்களை தங்கி வாழ்வோர் என அழைப்பார்கள், 60/40 எனும் விகிதத்தில் இருப்பது நல்லது என்பதாக நினைவில் உள்ளது ( தரவு மிக சரியாக நினைவில் இல்லை).

தங்கி வாழ்வோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பொருளாதாரம் அழுத்தத்திற்குள்ளாகும்.

இதனால்தான் அபிவிருத்தியடைந்த நாடுகள் வெளிநாடுகளிலிருந்து உழைக்கும் மக்களை குடிவரவின் மூலம் பெறுகிறார்கள்.

ஒரு குழந்தை உழைக்கும் வய்தெல்லையினை அடைவதற்கான மொத்த செலவு அவுஸ்ரேலியாவில் 400000 (2010 தரவு, தரவு சரியாக நினைவில் இல்லை) டொலராகவுள்ளது, இதற்கு பதில் வெளிநாட்டிலிருந்து உழைக்கும் மக்களை பெறுவது இலாபம்.

தற்போது அவுஸ்ரேலியாவில் உழைக்கும் சனத்தொகையினை விட தங்கிவாழ்வோரின் சனத்தொகை அதிகமாகவுள்ளது, அவுஸ்ரேலிய பொருளாதாரம் முன்னேற வேண்டுமானால் உழைக்கும் சனத்தொகையினரினை வெளிநாடுகளிலிருந்து பெறவேண்டும், கடந்த காலங்களில் அரசியலில் வெளிநாட்டிலிருந்து வரும் மக்களுக்கெதிரான பழமைவாதக்கட்சிகளின் அடிப்படை வாதம் நீண்டகால அடிப்படையில் அவுஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு முட்டுகட்டையாக உள்ளது.

அவுஸ்ரேலியாவும் இரஸ்சியாவும் அடிப்படையில் மிக குறைவான முன்னெடுப்பில் மீளப்பயன்படுத்தக்கூடிய சக்தியினை பயன்படுத்தும் நாடுகளாகவுள்ளன (மின் கார்கள்).

இதற்குக்காரணம் அரசியல் தலைவர்களின் தொலை நோக்கற்ற சிந்தனை மட்டுமல்ல, தெளிவற்ற மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தக்கூடிய தலமையின்மையும் காரணம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, vasee said:

மத்திய கிலக்கு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ, ஆட்சிக் கலைப்பு, கிளர்ச்சி நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் பின்னணியில் ஐரோப்பிய நாடுகளின்  இந்த உழைக்கும் வலுவுடையோர் தேவை மிகவும் முக்கியமான காரணியாக இருந்தது /இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

sheperd putin | Vladimir Putin | Know Your Meme

மாண்புமிகு  பெரு மதிப்பிற்குரிய அதி உத்தம தன் இன கரிசனையாளர் புட்டின் அவர்களின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் சகல இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியில் மக்கள் செல்வமும் பல்கி பெருக வாழ்த்துகின்றேன்.

அதிலும் ரஷ்ய மக்களுக்கு என விளித்து கூறியது இன்னும் வரவேற்க தக்கதே. இல்லையேல் பிள்ளை பெறுவதில் ஜாம்பவன்களான அரபு உலகை சார்ந்தோர்  அகதி எனும் பெயரில் அடாத்தாக உட்புகுந்து ஏட்டிக்கு போட்டியாக சந்ததியை பெருக்கி விடுவர்.

வாழ்க மாண்புமிகு புட்டின் ,வளர்க உங்கள் கொள்கை, உயர்க உங்கள் நாமம். 💪🏼

👇👆

அண்ணைமார் இது சரியில்லை.

நீங்களே எல்லா ஜோக்கையும் அடித்து - புட்ஸ்சை இந்த வாரு வாரிவிட்டால் பிறகு நான் என்னத்தை வைத்து கிண்டலாய் எழுதுவது🤣.

6 hours ago, தமிழ் சிறி said:

GIFs for Twitter — The 4C Summit

அதி உத்தம  ஜனாதிபதி புட்டின் அவர்களின்.. தூர நோக்கு பார்வையை, 
பாராட்ட வார்த்தைகளே இல்லை 💐.  அதிலும்... Cow Boy அமெரிக்கன் போல்... 
கண்டவன், நிண்டவன், வாறவன், போறவன்.. எல்லாருக்கும் 
அமெரிக்கன் குடியுரிமை  குடுத்து... சனத் தொகையை உயர்த்திக் காட்டுற... 
ஊத்தை வேலையை... மாண்புமிகு அதி உத்தமர் புட்டின் அவர்கள், செய்யவில்லை. 👍

ஒறிஜினல்  ரஷ்யனுக்கே அந்தப் பெருமையை கொடுப்பதன் மூலம் 
தன் இனத்தையும், நாட்டையும்  எவ்வளவு நேசிக்கின்றார் என்பது புரியும். ❤️

அதி உத்தம புட்டின் அவர்களின் கொள்கைகளை... யாழ்ப்பாண பாடசாலைகளில் 
ஒரு பாடமாக கற்பித்து,  மாணவர்களுக்கு... நாட்டுப் பற்றையும், இனப் பற்றையும்... 
ஊட்டி, வளர்க்க வேண்டும். 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

மத்திய கிலக்கு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ, ஆட்சிக் கலைப்பு, கிளர்ச்சி நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் பின்னணியில் ஐரோப்பிய நாடுகளின்  இந்த உழைக்கும் வலுவுடையோர் தேவை மிகவும் முக்கியமான காரணியாக இருந்தது /இருக்கிறது.

மேற்கு நாடுகளின் ஒவ்வொரு  இராணுவ நடவடிக்கையிலும் அரசியல் பொருளாதார நன்மை அடிப்படையிலேயே மேற்கொண்டார்கள், போருக்கு தேவையான பொருளாதார பலத்தினை வழங்க உழைக்கும் குடியேறிகளும் காரணம்தான் எனும் உங்கள் கூற்றினை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியில் ரஷ்யாவுக்கு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த உயிரிழப்பை ஈடுசெய்ய ரஷ்ய பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அப்போதைய சோவியத் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ரஷ்ய பெண்களுக்கு பெரும் தொகையுடன் ‘மதர் ஹீரோயின்’ என்ற கவுர பட்டம் சோவியத் ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வந்தது. இந்த பட்டத்தினை சுமார் 4 லட்சம் தாய்மார்கள் அப்போது பெற்றனர். 1992ஆம் ஆண்டு சோவித் ஒன்றியம் வீழ்ந்த பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.

இப்போது இத்திட்டத்தினை புதின் ஏன் அறிவித்தார்? ரஷ்யா படைகள் அதிகம் இறந்து விட்டார்களா?   அப்படியானால் யார் அவர்களை கொன்றார்கள்? மேலும் இத்திட்டம் வெற்றி அளிக்காது. ஏனெனில் ஸ்டாலின் காலத்தில் பரிசு  கொடுக்கமாலே  10 பிள்ளைகள் பெறுவார்கள்   இன்று பணம் /பரிசு கொடுத்தாலும் ஓன்றுஅல்லது இரண்டு மட்டுமே பெறுவார்கள்    அன்றைய காலத்தில் கருத்தடை மாத்திரைகள் இல்லை இன்று நிறையவே உண்டு”   அடுத்த பிரச்சனை ஆண்கள் எல்லாம் போரில் இறக்கிறார்கள்.   பெண்கள் தனியாக ஆண்கள் இன்றி பிள்ளைப்பெறமுடியுமா? முடியாது இல்லையா?. எனவே… கௌரவ மேன்மைமிகுந்த தரமிஸ்டர்  .........புதின் அவர்கள் போரை எவ்வாறு தொடங்கினாரோ அவ்வண்ணம்  போரை முடித்து வைக்கவும். உங்கள் நாட்டுக்கு மக்கள் தேவை என்றால் இலங்கை தமிழர்களை குடியோற்றலாம். 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

இரஸ்சியா தற்போதய உலக பொருளாதார தடைக்கு பின்னரே சில தமது பொருளாதாரத்தினை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள், தொழில்னுட்பதுறை, மீழ உருவாக்கும் சக்தி போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாகக்கூறுகிறார்கள் அதன் நீட்சியாக எதிர்கால பொருளாதார நோக்கில் இத்திட்டத்தினை அறிவித்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

புதின் அவர்கள் போரை எவ்வாறு தொடங்கினாரோ அவ்வண்ணம்  போரை முடித்து வைக்கவும். உங்கள் நாட்டுக்கு மக்கள் தேவை என்றால் இலங்கை தமிழர்களை குடியோற்றலாம். 🤣🤣

புதினுக்கு நன்றாக தெரியும் இலங்கை தமிழர்கள் போன்று தன் மீதும், ரஷ்யா மீதும் பாசம் கொண்டவர்கள் வேறு யாரும் கிடையாது என்பது. ஆனால் இலங்கை தமிழர்கள் தன் நாட்டில் வந்து குடியேறுகிறார்கள் இல்லையே என்ற பெரிய கவலை தான் அவருக்கு.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புதினுக்கு நன்றாக தெரியும் இலங்கை தமிழர்கள் போன்று தன் மீதும், ரஷ்யா மீதும் பாசம் கொண்டவர்கள் வேறு யாரும் கிடையாது என்பது. ஆனால் இலங்கை தமிழர்கள் தன் நாட்டில் வந்து குடியேறுகிறார்கள் இல்லையே என்ற பெரிய கவலை தான் அவருக்கு.

இரஸ்சியாவுடன் இலங்கையினை ஒப்பிடும் போது இலங்கையிலுள்ள மக்களுக்கு இரஸ்சியா மிக நல்ல தெரிவுதான், ஆனால் இரஸ்சியா இலங்கை மக்களை எடுக்குமா தெரியவில்லை.

கந்தையாவும் நீங்களும் நகைசுவையாக சொன்னாலும் அது ஒரு நல்ல தீர்வாக உள்ளது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

மத்திய கிலக்கு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ, ஆட்சிக் கலைப்பு, கிளர்ச்சி நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் பின்னணியில் ஐரோப்பிய நாடுகளின்  இந்த உழைக்கும் வலுவுடையோர் தேவை மிகவும் முக்கியமான காரணியாக இருந்தது /இருக்கிறது.

இதை நான் ஏற்கவில்லை. குடியேறிகள் தேவை எண்டால் “வாங்கோ” எண்டு கூப்பிட்டால் ஒட்டு மொத்த இலங்கையும் வாசலில் வந்து நிக்கும்🤣.

அதுவும் தேவையான தகுதியுடன் அல்லது தகுதி இல்லாமல் வடிவாக screening செய்து எடுக்கலாம். 

வருவோர்கு அகதிகளுக்கு கொடுக்க கூடிய கொடுப்பனவும் கொடுக்கத்தேவையில்லை.

அவர்களை பல மில்லியன் செலவழித்து, சட்ட போராட்டம் நடத்தி ருவாண்டா அனுப்ப முயற்சிக்கவும் தேவையில்லை.

மேற்கு நாடுகளின் தொழிலும், போரும் இனி தானியங்கி மயப்பட்டே இருக்கும்.

இப்போதே வேல்சில் வேலை இல்லாமல் அடிப்படை சம்பளம் (universal income) கொடுக்கும் மாதிரி திட்டம் (pilot) அமலாகிவிட்டது.

இப்போ இருக்கும் சனத்தொகையை அப்படியே வைத்துகொண்டால் மேற்குக்கு போதும்.

1 hour ago, vasee said:

மேற்கு நாடுகளின் ஒவ்வொரு  இராணுவ நடவடிக்கையிலும் அரசியல் பொருளாதார நன்மை அடிப்படையிலேயே மேற்கொண்டார்கள், போருக்கு தேவையான பொருளாதார பலத்தினை வழங்க உழைக்கும் குடியேறிகளும் காரணம்தான் எனும் உங்கள் கூற்றினை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

இரஸ்சியாவுடன் இலங்கையினை ஒப்பிடும் போது இலங்கையிலுள்ள மக்களுக்கு இரஸ்சியா மிக நல்ல தெரிவுதான், ஆனால் இரஸ்சியா இலங்கை மக்களை எடுக்குமா தெரியவில்லை.

கந்தையாவும் நீங்களும் நகைசுவையாக சொன்னாலும் அது ஒரு நல்ல தீர்வாக உள்ளது.

ஜோக்கடிக்காதேங்கோ வசி. இலங்கையில் இருந்து ஸ்டூடன் விசாவில் போறவையே அங்கு முழு நேர வேலை செய்தாலும் அவர்களின் செலவை கூட பார்ப்பது கஸ்டம்.

மேற்கில் இருந்து அல்லது இலங்கையில் இருந்து காசு அனுப்ப வேண்டும் (டியூசன் பீஸ் நீங்கலான வாழ்க்கை செலவு). 

மொஸ்கோவிலேயே தனியாக இருட்டிய பின் போவதில்லை.

கறுப்புத்தோலுக்கு அவ்வளவு மவுசு🤣

ஆரம்பத்தில் இந்திய, ஆபிரிக்க மாணவருக்கு உக்ரேனில் நடந்தது நினைவிருக்கும்.

ரஸ்யாவும் அதிக வித்தியாசமில்லை.

இதனால்தான் சவுதிக்கு போனாலும் இலங்கையர் ரஸ்யா போவதில்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கவலை பிரபாகரன் இருந்து இந்த கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவந்தால் முகநூளில் எப்படி படம் போடுவார்கள் என்றுதான் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புதினுக்கு நன்றாக தெரியும் இலங்கை தமிழர்கள் போன்று தன் மீதும், ரஷ்யா மீதும் பாசம் கொண்டவர்கள் வேறு யாரும் கிடையாது என்பது. ஆனால் இலங்கை தமிழர்கள் தன் நாட்டில் வந்து குடியேறுகிறார்கள் இல்லையே என்ற பெரிய கவலை தான் அவருக்கு.

இலங்கை தமிழன் அல்ல. புலம்பெயர் இலங்கை தமிழன்.

தான்மை மிகு புட்ஸ் அவர்களுக்கு நாம் வெளியில் இருந்து மட்டும் ஆதரவு அளிப்போம்.

அடி மடியில் கையை வைக்கப்படாது..ஆங்🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

மொஸ்கோவிலேயே தனியாக இருட்டிய பின் போவதில்லை.

கறுப்புத்தோலுக்கு அவ்வளவு மவுசு🤣

ஆரம்பத்தில் இந்திய, ஆபிரிக்க மாணவருக்கு உக்ரேனில் நடந்தது நினைவிருக்கும்.

ரஸ்யாவும் அதிக வித்தியாசமில்லை.

இதனால்தான் சவுதிக்கு போனாலும் இலங்கையர் ரஸ்யா போவதில்லை.

ஓமோம் கறுப்பருக்கு அமெரிக்காவிலையும் ஐரோப்பாவிலையும் பெரிய ராஜ மரியாதை தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஓமோம் கறுப்பருக்கு அமெரிக்காவிலையும் ஐரோப்பாவிலையும் பெரிய ராஜ மரியாதை தானே?

ஒப்பீட்டளவில் பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இலங்கை தமிழன் அல்ல. புலம்பெயர் இலங்கை தமிழன்.

தான்மை மிகு புட்ஸ் அவர்களுக்கு நாம் வெளியில் இருந்து மட்டும் ஆதரவு அளிப்போம்.

அடி மடியில் கையை வைக்கப்படாது..ஆங்🤣

என்னதான் இருந்தாலும் ஐரோப்பாவுக்கு வாறதுக்கு ஏரோபுளொட்டும் டச் பண்ணி வர மொஸ்கோவும் உங்கை கன பேருக்கு தேவைப்பட்டிருக்கு....இப்ப உவாக்....உவாக் 🤪

3 minutes ago, goshan_che said:

ஒப்பீட்டளவில் பரவாயில்லை.

எனவே மற்றவன் ஊத்தைகளை தொட்டு மணக்கப்படாது. அத விட உங்க அபிமான மேற்குலகின் ஊத்தைகள் படு மோசம் கண்டியளோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

என்னதான் இருந்தாலும் ஐரோப்பாவுக்கு வாறதுக்கு ஏரோபுளொட்டும் டச் பண்ணி வர மொஸ்கோவும் உங்கை கன பேருக்கு தேவைப்பட்டிருக்கு....இப்ப உவாக்....உவாக் 🤪

அதான் சொல்லுறன்.

மாஸ்கோவில் இறங்கி, பனிகுள்ளால போடர் நடந்து கடந்து (அதில பலர் பனியில் கால் கை முறிய அப்படியே சாக விட்ட சம்பவங்களும் உண்டு) மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடி வரும் அளவுக்கு வெளிநாட்டவர் குடியேற ஏற்ற நாடு, சொக்கத்தங்கம், சொக்கதங்கம் ரஸ்சியா🤣.

7 minutes ago, குமாரசாமி said:

எனவே மற்றவன் ஊத்தைகளை தொட்டு மணக்கப்படாது. அத விட உங்க அபிமான மேற்குலகின் ஊத்தைகள் படு மோசம் கண்டியளோ

ஒப்பீட்டளவு அண்ணை. 

இஞ்ச அடியள் விழுந்தாலும் ஹம் அம்மாலாட்சிக்கு கோபுரம் கட்டி, தேர் இழுக்கும் அளவுக்கு சுதப்திரமும் இருக்கெல்லே.  

பிகு

ரஸ்யாவில் இருக்கும் உள் வீட்டு ஜனநயகம் = மேற்கில் இருக்கும் உள்வீட்டு ஜனநாயகம் என  இன்னொரு திரியில் நீங்கள் வாதாடியது போலத்தான் அண்ணை இதுவும்.

உங்கள் கருத்து உங்களது அதை சொல்ல உங்களுக்கு பூரண உரிமை உண்டு.

ஆனால் இதை வாசிப்பவர்களும் எம்மை போலவே ஒத்த வாழ்க்கை அனுபவத்தை உடையோர் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

சனம், நீங்கள் சும்மா விதண்டாவாதம் பண்ணுறியள் என நினைக்ககூடாது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

அதான் சொல்லுறன்.

மாஸ்கோவில் இறங்கி, பனிகுள்ளால போடர் நடந்து கடந்து (அதில பலர் பனியில் கால் கை முறிய அப்படியே சாக விட்ட சம்பவங்களும் உண்டு) மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடி வரும் அளவுக்கு வெளிநாட்டவர் குடியேற ஏற்ற நாடு, சொக்கத்தங்கம், சொக்கதங்கம் ரஸ்சியா🤣.

ஒப்பீட்டளவு அண்ணை. 

இஞ்ச அடியள் விழுந்தாலும் ஹம் அம்மாலாட்சிக்கு கோபுரம் கட்டி, தேர் இழுக்கும் அளவுக்கு சுதப்திரமும் இருக்கெல்லே.  

பிகு

ரஸ்யாவில் இருக்கும் உள் வீட்டு ஜனநயகம் = மேற்கில் இருக்கும் உள்வீட்டு ஜனநாயகம் என  இன்னொரு திரியில் நீங்கள் வாதாடியது போலத்தான் அண்ணை இதுவும்.

உங்கள் கருத்து உங்களது அதை சொல்ல உங்களுக்கு பூரண உரிமை உண்டு.

ஆனால் இதை வாசிப்பவர்களும் எம்மை போலவே ஒத்த வாழ்க்கை அனுபவத்தை உடையோர் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

சனம், நீங்கள் சும்மா விதண்டாவாதம் பண்ணுறியள் என நினைக்ககூடாது.

நான் விதண்டாவாதம் செய்ய வரவில்லை. அவர்கள் பக்கத்திலும் நியாயங்கள் தர்மங்கள் உண்டு என்பதை சொல்லவருகின்றேன்.

எங்களுக்கு ஒரு நீதி மற்றவனுக்கு ஒரு நீதி என்ற நிலை இருக்கக்கூடாது.

எம்மவரை வைத்து ஒரு விடயத்தை கணக்கு போடாதீர்கள்.
அநேகமான எம்மவர் ரஷ்யா ஊடாக  ஜேர்மனிக்கு வந்து பிரான்ஸ்,டென்மார்க்,லண்டன் என மற்ற நாடுகளுக்கு பாய்ந்து ஓடியவர்கள் தான். ஏன் வந்த எல்லோரும் ஜேர்மனியில் தங்கவில்லை?  ஜேர்மனியில் இருந்து விட்டு தனி கப்பல் பிடித்து கனடா சென்றதெல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றதா? ஜேர்மனியிலிருந்தவர்கள் கனடா சென்றபின் எம்மை பார்த்து சிரித்தார்கள். விசா புதிப்பிக்க சென்ற போதெல்லாம் நீ கனடாவுக்கு செல்லவில்லையா என நக்கலாக கேட்டார்கள்

ஜேர்மனிக்கு வந்தார்கள்.....இங்கிருந்து லண்டன் சென்றார்கள்...  இப்போது லண்டனிலிருந்து கனடா அவுஸ்ரேலியா  செல்கிறார்கள். இதில் எனது உறவினர்களும் அடக்கம்.

இதுதான் அகதியாக வந்த சித்திரம். இதற்குள் எம்மவர்களுக்கு ரஷ்யா பிடிக்க வில்லையாம். சனநாயக நாடில்லையாம். கோவில் கட்டேலாதாம். ஜேர்மனி ஜனநாயக நாடில்லையோ? 🤣

அன்றைய லட்சக்கணக்கான வியட்நாம் அகதிகள் இன்றும் ரஷ்யாவில் வாழ்கின்றார்கள்.எம்மவர்களுக்கு இத்தாலியே சரிவரவில்லை.ஆபிரிக்காவில் எத்தனையோ ஜனநாயக நாடுகளில் தங்கியிருந்துதானே எம்மவர்கள் மேற்குலகம் நோக்கி வந்தார்கள்.😁

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நான் விதண்டாவாதம் செய்ய வரவில்லை. அவர்கள் பக்கத்திலும் நியாயங்கள் தர்மங்கள் உண்டு என்பதை சொல்லவருகின்றேன்.

எங்களுக்கு ஒரு நீதி மற்றவனுக்கு ஒரு நீதி என்ற நிலை இருக்கக்கூடாது.

எம்மவரை வைத்து ஒரு விடயத்தை கணக்கு போடாதீர்கள்.
அநேகமான எம்மவர் ரஷ்யா ஊடாக  ஜேர்மனிக்கு வந்து பிரான்ஸ்,டென்மார்க்,லண்டன் என மற்ற நாடுகளுக்கு பாய்ந்து ஓடியவர்கள் தான். ஏன் வந்த எல்லோரும் ஜேர்மனியில் தங்கவில்லை?  ஜேர்மனியில் இருந்து விட்டு தனி கப்பல் பிடித்து கனடா சென்றதெல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றதா? ஜேர்மனியிலிருந்தவர்கள் கனடா சென்றபின் எம்மை பார்த்து சிரித்தார்கள். விசா புதிப்பிக்க சென்ற போதெல்லாம் நீ கனடாவுக்கு செல்லவில்லையா என நக்கலாக கேட்டார்கள்

ஜேர்மனிக்கு வந்தார்கள்.....இங்கிருந்து லண்டன் சென்றார்கள்...  இப்போது லண்டனிலிருந்து கனடா அவுஸ்ரேலியா  செல்கிறார்கள். இதில் எனது உறவினர்களும் அடக்கம்.

இதுதான் அகதியாக வந்த சித்திரம். இதற்குள் எம்மவர்களுக்கு ரஷ்யா பிடிக்க வில்லையாம். சனநாயக நாடில்லையாம். கோவில் கட்டேலாதாம். ஜேர்மனி ஜனநாயக நாடில்லையோ? 🤣

எம்மவர்களை மட்டும் இல்லை. ஒட்டு மொத்த குடியேறிகளையும் வைத்தே நான் சொல்கிறேன்.

சும்மா கதையாதங்கோ அண்ணை. எத்தனை வேறு நாட்டவர் வாழ என ரஸ்யாவை தேர்ந்து செல்கிறார்கள்?

இன்னொரு திரியில் கந்தையா அண்ணையும் கேட்டிருந்தார். ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்துக்கு போவார்கள் அதேபோல் ஒத்த அளவில் இங்கிருந்து உங்கே வருவார்கள்.

ஆனால் ரஸ்யாவில் இருந்து? 1000 பேர் வந்தால் 10 பேர் போவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

மாஸ்கோவில் இறங்கி, பனிகுள்ளால போடர் நடந்து கடந்து (அதில பலர் பனியில் கால் கை முறிய அப்படியே சாக விட்ட சம்பவங்களும் உண்டு) மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடி வரும் அளவுக்கு வெளிநாட்டவர் குடியேற ஏற்ற நாடு, சொக்கத்தங்கம், சொக்கதங்கம் ரஸ்சியா🤣.

இலங்கையர்கள் ரஷ்யாவில் அகதி விண்ணப்பம் கோரினார்களா?

2 minutes ago, goshan_che said:

இன்னொரு திரியில் கந்தையா அண்ணையும் கேட்டிருந்தார். ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்துக்கு போவார்கள் அதேபோல் ஒத்த அளவில் இங்கிருந்து உங்கே வருவார்கள்.

ஆனால் ரஸ்யாவில் இருந்து? 1000 பேர் வந்தால் 10 பேர் போவார்கள்.

நான் இப்போது கதைப்பது தமிழர்களை குறித்து......பிற நாட்டவர்களை பற்றியல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஜோக்கடிக்காதேங்கோ வசி. இலங்கையில் இருந்து ஸ்டூடன் விசாவில் போறவையே அங்கு முழு நேர வேலை செய்தாலும் அவர்களின் செலவை கூட பார்ப்பது கஸ்டம்.

மேற்கில் இருந்து அல்லது இலங்கையில் இருந்து காசு அனுப்ப வேண்டும் (டியூசன் பீஸ் நீங்கலான வாழ்க்கை செலவு). 

ஒரு குத்துமதிப்பாக சொன்னேன், சரியான தரவுகள் தெரியாமையினால் தவறான கருத்தாக இருக்கலாம்.

1 hour ago, goshan_che said:

மொஸ்கோவிலேயே தனியாக இருட்டிய பின் போவதில்லை.

கறுப்புத்தோலுக்கு அவ்வளவு மவுசு🤣

ஆரம்பத்தில் இந்திய, ஆபிரிக்க மாணவருக்கு உக்ரேனில் நடந்தது நினைவிருக்கும்.

ரஸ்யாவும் அதிக வித்தியாசமில்லை.

இதனால்தான் சவுதிக்கு போனாலும் இலங்கையர் ரஸ்யா போவதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு இரஸ்சியரை சந்தித்தேன் மிக மோசமான நிறவெறி கொண்டவர் அவுஸ்ரேலியாவில் ( அவுஸ்ரேலியர்கள் மற்ற நாட்டிலுள்ளவர்களை விட நிற வெறி கொண்டவர்கள்) கூட அவ்வாறான நிறவெறி கொண்டவர்களை சந்தித்ததில்லை. அதனை மனதில் வைத்தே இரஸ்சியா இலங்கையரை ஏற்குமா எனக்குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இலங்கையர்கள் ரஷ்யாவில் அகதி விண்ணப்பம் கோரினார்களா?

ரஸ்யாவில் கோரவில்லை. ஏன்?

ஏன் வடகொரியாவில், ஈரானில், துருக்கியில் கோருவதில்லையோ அதே காரணம்தான். 

உடல்/உடமை பாதுகாப்பின்மை (physical security), கூடிய இன ஒதுக்கல், மனிதாபிமான சட்டங்களின் செயலற்ற நிலை, பொருளாதார, கல்வி வாய்புகள் மறுக்கபடும் என்ற யதார்த நிலை.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.