Jump to content

சோழா சோழா பாடல் வரிகள் | கொடி கொடி கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

 

கொடி கொடி கொடி பறக்க
தடதடத்து
பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில்
வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை
வாளாடு வேலோடு 
ஓய்...
போராடு போராடு
ஓய்...
படபட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்

வரி வரி புலி அஞ்சாதடா
துஞ்சாதடா சோழா சோழா
மற மற புலி வீழாதடா
தாழாதடா சீலா சீலா

வீரம் மானம்
புலிமகன் இரு கண்ணல்லோ!
ஏறே வாடா
பகைமுகம் செகும் நேரம் வீரா!

கொடி கொடி கொடி பறக்க
தடதடத்து
பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில்
வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை
வாளாடு வேலோடு
ஓய்...
போராடு போராடு
ஓய்...
படபட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்

அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாதிதா
ஆசை தீதா 

மண்ணான மண்மேல் பித்தானேன் - ஏய்
விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் - ஏய்
கண்ணான குடிமேல் பித்தானேன் - ஏய்
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
ஏ...ஏ...ய்...
மண்ணான மண்மேல் பித்தானேன் - ஏய்
விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் - ஏய்
கண்ணான குடிமேல் பித்தானேன் - ஏய்
பெண்ணான பெண்ணாலே பித்தானேன்

அரக்கி, எனது தேயமும் காயமும் நீயடி

உடல் உடல் உடல் முழுக்க 
செருக்களத்து வடு வடு வடுவிருக்க
ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க
வருத்தமென்ன கொடு 
சோமரசம் குடடா மறடா - இவன் 
பயணம் இனி ஓயாதே - எடு 
வாளை எடு நடடா நடடா - வெறி 
பிடித்த புலி ஓயாது

அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாதிதா
ஆசை தீதா

சிந்தித்தோம் பெருந்தேசக் கனவினை
சந்திதோம் கடும் போரின் கெடு வினை
நிந்திதோம் கொடும் கூற்றப்பகை அழித்தோம்
ஓ...ஓ...ஓ...

மன்னித்தோம் அடி வீழ்ந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம்
ஓ...ஓ...ஓ...

கற்பித்தோம் உயிர் சோழம் என
ஒப்பித்தோம் அதை வேதமென
மேகந்தொட்டு வானம் எட்டு
வேங்கைப் புலி இமயம் நாட்டு

கொடி கொடி கொடி பறக்க
தடதடத்து
பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில்
வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை
கொடு 
சோமரசம் குடடா மறடா - இவன் 
பயணம் இனி ஓயாதே - எடு 
வாளை எடு நடடா நடடா - வெறி
பிடித்த புலி ஓயாது

 

 

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம் //இன்னாதிதான்// --> இன்னாதிதா
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவின் அடிப்படையில் 2009இற்கு முந்தைய காலத்திலான சூழமைவைக்கொண்டதான திரித்து எழுதப்பட்ட பாடல். 

பாடல்வரிப் புரவு: மெய்யான பாடலாசிரியருக்கு

 

கொடி கொடி கொடி பறக்க
சடசடத்து
ரவை ரவை ரவை பறக்க
- கடும்மனதில்
வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை
குண்டோடு துவக்கோடு
ஓய்...
போராடு போராடு
ஓய்...
படபட புலிக்கொடி வானம் ஏறட்டும்
வடநிலம் தென்நிலம் ஈழம் ஆகட்டும்

வரி வரி புலி அஞ்சாதடா
துஞ்சாதடா தமிழா தமிழா
மற மற புலி வீழாதடா
தாழாதடா சீலா சீலா

வீரம் மானம்
புலிமகன் இரு கண்ணல்லோ!
ஏறே வாடா
பகைமுகம் செகும் நேரம் வீரா!

கொடி கொடி கொடி பறக்க
சடசடத்து
ரவை ரவை ரவை தெறிக்க - கடும்மனதில்
வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை
குண்டோடு துவக்கோடு
ஓய்...
போராடு போராடு
ஓய்...
படபட புலிக்கொடி வானம் ஏறட்டும்
வடநிலம் தென்நிலம் ஈழம் ஆகட்டும்

அக முக நக போராடிட வென்றாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாதிதா
ஆசை தீதா 

மண்ணான மண்மேல் பித்தானேன் - ஏய்
விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் - ஏய்
கண்ணான குடிமேல் பித்தானேன் - ஏய்
தலையான தலைமேல் பித்தானேன்
ஏ...ஏ...ய்...
மண்ணான மண்மேல் பித்தானேன் - ஏய்
விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் - ஏய்
கண்ணான குடிமேல் பித்தானேன் - ஏய்
தலையான தலைமேல் பித்தானேன்

ஈழம், எனது தேயமும் காயமும் நீயடி

உடல் உடல் உடல் முழுக்க 
செருக்களத்து வடு வடு வடுவிருக்க
ஊர் தந்த வடுமட்டும் உயிர் துடிக்க
வருத்தமென்ன கொடு 
ஈழரசம் குடடா மறடா - எம் 
பயணம் இனி ஓயாதே - எடு 
துவக்கை எடு நடடா நடடா - வெறி 
பிடித்த புலி ஓயாது

அக முக நக போராடிட வென்றாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாதிதா
ஆசை தீதா

சிந்தித்தோம் பெருந்தேசக் கனவினை
சந்திதோம் கடும் போரின் கெடு வினை
நிந்திதோம் கொடும் கூற்றப்பகை அழித்தோம்
ஓ...ஓ...ஓ...

மன்னித்தோம் அடி வீழ்ந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம்
ஓ...ஓ...ஓ...

கற்பித்தோம் உயிர் ஈழம் என
ஒப்பித்தோம் அதை வேதமென
மேகந்தொட்டு வானம் எட்டு
வேங்கைப் புலி ஈழம் நாட்டு

கொடி கொடி கொடி பறக்க
சடசடத்து
ரவை ரவை ரவை பறக்க - கடும்மனதில்
வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை
கொடு 
ஈழரசம் குடடா மறடா - எம் 
பயணம் இனி ஓயாதே - எடு 
வாளை எடு நடடா நடடா - வெறி
பிடித்த புலி ஓயாது!

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்// சிரை -> சிறை //
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நன்னிச் சோழன் said:

பரி பரி பாரி துடிக்க

பரி பரி பரி துடிக்க?

23 minutes ago, நன்னிச் சோழன் said:

சிரை எடுத்தோம்

சிரை எடுத்தோமா? சிறை எடுத்தோமா?

நேரம் எடுத்து எழுதியமைக்கு நன்றி.

3 minutes ago, நன்னிச் சோழன் said:

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவின் அடிப்படையில் 2009இற்கு முந்தைய காலத்திலான சூழமைவைக்கொண்டதான திரித்து எழுதப்பட்ட பாடல். 

பாடல்வரிப் புரவு: மெய்யான பாடலாசிரியருக்கு

 

கொடி கொடி கொடி பறக்க
சடசடத்து
ரவை ரவை ரவை பறக்க
- கடும்மனதில்
வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை
குண்டோடு துவக்கோடு
ஓய்...
போராடு போராடு
ஓய்...
படபட புலிக்கொடி வானம் ஏறட்டும்
வடநிலம் தென்நிலம் ஈழம் ஆகட்டும்

வரி வரி புலி அஞ்சாதடா
துஞ்சாதடா தமிழா தமிழா
மற மற புலி வீழாதடா
தாழாதடா சீலா சீலா

வீரம் மானம்
புலிமகன் இரு கண்ணல்லோ!
ஏறே வாடா
பகைமுகம் செகும் நேரம் வீரா!

கொடி கொடி கொடி பறக்க
சடசடத்து
ரவை ரவை ரவை தெறிக்க - கடும்மனதில்
வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை
குண்டோடு துவக்கோடு
ஓய்...
போராடு போராடு
ஓய்...
படபட புலிக்கொடி வானம் ஏறட்டும்
வடநிலம் தென்நிலம் ஈழம் ஆகட்டும்

அக முக நக போராடிட வென்றாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதான்
இன்னாதிதான் ?
ஆசை தீதா !

மண்ணான மண்மேல் பித்தானேன் - ஏய்
விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் - ஏய்
கண்ணான குடிமேல் பித்தானேன் - ஏய்
தலையான தலைமேல் பித்தானேன்
ஏ...ஏ...ய்...
மண்ணான மண்மேல் பித்தானேன் - ஏய்
விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் - ஏய்
கண்ணான குடிமேல் பித்தானேன் - ஏய்
தலையான தலைமேல் பித்தானேன்

ஈழம், எனது தேயமும் காயமும் நீயடி

உடல் உடல் உடல் முழுக்க 
செருக்களத்து வடு வடு வடுவிருக்க
ஊர் தந்த வடுமட்டும் உயிர் துடிக்க
வருத்தமென்ன கொடு 
ஈழரசம் குடடா மறடா - எம் 
பயணம் இனி ஓயாதே - எடு 
துவக்கை எடு நடடா நடடா - வெறி 
பிடித்த புலி ஓயாது

அக முக நக போராடிட வென்றாடிட வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதான்
இன்னாதிதான்?
ஆசை தீதா!

சிந்தித்தோம் பெருந்தேசக் கனவினை
சந்திதோம் கடும் போரின் கெடு வினை
நிந்திதோம் கொடும் கூற்றப்பகை அழித்தோம்
ஓ...ஓ...ஓ...

மன்னித்தோம் அடி வீழ்ந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம் அடங்காரை சிரை எடுத்தோம்
ஓ...ஓ...ஓ...

கற்பித்தோம் உயிர் ஈழம் என
ஒப்பித்தோம் அதை வேதமென
மேகந்தொட்டு வானம் எட்டு
வேங்கைப் புலி ஈழம் நாட்டு

கொடி கொடி கொடி பறக்க
சடசடத்து
ரவை ரவை ரவை பறக்க - கடும்மனதில்
வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை
கொடு 
சோமரசம் குடடா மறடா - எம் 
பயணம் இனி ஓயாதே - எடு 
வாளை எடு நடடா நடடா - வெறி
பிடித்த புலி ஓயாது!

சும்மா சிலிர்க்குது. எழுத்தில் அதே தரம் அல்லது சற்று கூட👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

பரி பரி பரி துடிக்க?

சிரை எடுத்தோமா? சிறை எடுத்தோமா?

நேரம் எடுத்து எழுதியமைக்கு நன்றி.

சும்மா சிலிர்க்குது. எழுத்தில் அதே தரம் அல்லது சற்று கூட👏

//பரி பரி பரி துடிக்க?//

குதிரை துடித்து ஓடுவதை அவ்வாறு குறித்துள்ளனர். 
துடித்தல் - படபடவென வேகமாக ஓடுதல்.

 

//சிரை எடுத்தோமா? சிறை எடுத்தோமா?//

தெரிவு இரண்டு... யாழில் இதை எழுதியவரின் எழுத்துப்பிழை. அவரை மன்னித்தருள்க.

 

நன்றி. இதை விட இன்னும் தரமான வரிகள் புகுத்தி - குறிப்பாக அந்த "ஈழரசம்" பகுதியில் - பாட்டாக எமது நாட்டின் சாந்தன் மாமா போன்றோரின் துள்ளல் பாடலையொப்ப பாடினால் நன்றாக இருக்கும்.

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலிர்ப்பான வரிகள்.......இணைப்புக்கு நன்றி நன்னி ......!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@நன்னிச் சோழன் சோழா, இரு சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் முழித்தேன். ஒன்றை கண்டுபிடித்து விட்டேன்.

செகு: அழி, ஆக்கிரமி 

https://agarathi.com/word/செகு

இன்னாதி என்றால் என்ன?

இன்+ஆதி ?

இனிமையான தொடக்கம் அல்லது ஆதி முதல் எமக்கு இன்பம் தருவது என்று பொருள் கொள்ளலாமோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, goshan_che said:

@நன்னிச் சோழன் சோழா, இரு சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் முழித்தேன். ஒன்றை கண்டுபிடித்து விட்டேன்.

செகு: அழி, ஆக்கிரமி 

https://agarathi.com/word/செகு

இன்னாதி என்றால் என்ன?

இன்+ஆதி ?

இனிமையான தொடக்கம் அல்லது ஆதி முதல் எமக்கு இன்பம் தருவது என்று பொருள் கொள்ளலாமோ?

 

அது இன்னாதிதா... 
அதாவது இன்னா3+இதா 

பொருள்: சுகம் எல்லாம் இதா, இதோ இதா.... 

இன்னா3: இதோ

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//அக முக நக கள்ளாடிட தள்ளாடிட    வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாதிதா
ஆசை தீதா //

இதனை இப்படியும் பொருள் கூறலாமா?👇🏽 

“அகமும் முகமும் நக(மலர/சிரிக்க), சோமரசம்(கள்) அருந்தி, தள்ளாடி வாடா தோழா!!
பூலோக வாழ்க்கை(இக), மேல் உலக{சொர்க்கம்/நரகம்(?)} வாழ்க்கை(பர) சுகம் எல்லாமே இதுதான் இவற்றில் ஆசை வைத்தல் தீதா/பிழையா? (ஆசை தீதா)
இன்னல் தருமா??(இன்னல் இதா)”

எனவும் கூறலாமா?

இந்த YouTubeல் கூறுவதை முழுமையாக ஏற்க முடியாது என தோன்றுகிறது ஆனால் இந்த அக முக நக வரிகளுக்கு கொஞ்சம் சரியாக உள்ளது என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

//அக முக நக கள்ளாடிட தள்ளாடிட    வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா
இன்னாதிதா
ஆசை தீதா //

இதனை இப்படியும் பொருள் கூறலாமா?👇🏽 

“அகமும் முகமும் நக(மலர/சிரிக்க), சோமரசம்(கள்) அருந்தி, தள்ளாடி வாடா தோழா!!
பூலோக வாழ்க்கை(இக), மேல் உலக{சொர்க்கம்/நரகம்(?)} வாழ்க்கை(பர) சுகம் எல்லாமே இதுதான் இவற்றில் ஆசை வைத்தல் தீதா/பிழையா? (ஆசை தீதா)
இன்னல் தருமா??(இன்னல் இதா)”

எனவும் கூறலாமா?

இந்த YouTubeல் கூறுவதை முழுமையாக ஏற்க முடியாது என தோன்றுகிறது ஆனால் இந்த அக முக நக வரிகளுக்கு கொஞ்சம் சரியாக உள்ளது என நினைக்கிறேன்

அப்படியும் பொருள் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்.

நான் பின்வருமாறு பொருள் கொள்கிறேன்.

அகமும் முகமும் நக(மலர/சிரிக்க), சோமரசம்(கள்) அருந்தி, தள்ளாடி வாடா தோழா!!
பூலோக வாழ்க்கை(இக), மேல் உலக{சொர்க்கம்/நரகம்(?)} வாழ்க்கை(பர) யில் உயர்ந்த சுகம் இதுதான் (கள்ளடித்து களித்திருத்தல்).

இது தீதாகுமா??(இன்னா - தீமை - இன்னா செய்தாரை ஒறுத்தல்…)”

இப்படி கள்ளடித்து களித்திருத்தல் மேல் ஆசை வைத்தல் தீதா/பிழையா? (ஆசை தீதா)

Edited by goshan_che
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.