Jump to content

பொன்னியின் செல்வன் படம் பார்க்க முன் பார்க்க வேண்டிய காணொளிகள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உலத்தில் ஆக பெரிய சிறுமை எதுவென்றால் அது ஒருவர் தனது வரலாற்றை அறியாமல் இருந்தலே.

அதை விட பெரிய சிறுமை என்றால் அது திரிக்கப்பட்ட, அல்லது புனைவு வரலாற்றை, நம் வரலாறு என நம்புவதாகத்தான் இருக்கும்.

இந்த வகையில் ஒரு நாவலை, அதை தழுவிய படத்தை நாம் நம் வரலாறு  என நம்பிவிடக்கூடாது என்பதை நினைவூட்ட இந்த திரி ஆரம்பிக்கபடுகிறது.

பொன்னியின் செல்வன் ஒரு நாவல். புனைவு. அதில் வரும் சில பாத்திரங்கள், சம்பவங்கள் நிஜமானவை, சில பாத்திரங்கள், சம்பவங்கள் புனைவு. அதை தழுவி வரும் படமும் அப்படியே.

வரலாறு என்றால் சர்ச்சை இருக்கும். சோழ வரலாறும் அதற்கு விதி விலக்கல்ல.

உதாரணமாக இராஜராஜன் காலத்தில் பிராமணர் ஆளுமை எந்தளவு இருந்தது என்பது பற்றிய சர்ச்சை. ஒரு சாரார் அவர் பிராமணரை நாடு கடத்தினார். ஏனைய குடிகள் போன்றே அவர்கள் இருந்தார்கள் எனவும். (https://www.bbc.com/tamil/india-48587731.amp).

இன்னொர் சாரார் அவர் ஆட்சியில் பிராமணர்களுக்கு அதிக ஆதிக்கம் கொடுக்கப்பட்டது என்றும் வாதாடுகிறார்கள். 

அதே போல் சோழர்கள் தெலுங்கர் என்று ஒரு சர்ச்சையும் அனல் பறந்தது.

இதிலும் முற்கால சோழர்கள், மத்திய கால சோழர்கள் தெலுகர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனிலும், ராஜேந்திரனின், மகள் இரெண்டாம் குந்தவையின் பேரன் முதலாம் குலோத்துங்கனின் 50% மரபுரிமை கீழை சாளுக்கியம் (தெலுகு) என்பதையும், கலகத்தில் ஆழ்ந்த சோழ பேரரசை அவர் கீழை சாளுக்கியத்தில் இருந்து வந்தே பொறுப்பெடுத்தார் என்பதையும் பேரா தெய்வநாயகம் போன்றோரே ஏற்கின்றனர்.

ஆகவே சர்ச்சைகளுக்கு புதியதல்ல சோழ வரலாறு. அவற்றை தீர்ப்பது இந்திரியின் நோக்கமும் அல்ல. அது முடியாத காரியமும் கூட. 

இந்த திரியில் சோழ வரலாறு பற்றி கிடைக்கும் நம்பதகுந்தவை என நான் காணும் காணொளிகளை இணைக்கவுள்ளேன்.

காணொளி 1

இராஜராஜனின் பெயர் அருள்மொழிவர்மனா, அருண்மொழிவர்மனா?

Edited by goshan_che
 • Like 5
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காணொளி 2

ஆதித்த கரிகாலன் கொலை - நடந்தது என்ன?

சதிகாரர் எச்சாதியினர்?

ஏன் காந்தளூர் சாலை போரை செய்தார் இராஜராஜ சோழன்?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி தொடருங்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

பொன்னியின் செல்வன் படம் பார்க்க முன் பார்க்க வேண்டிய காணொளிகள்

உலத்தில் ஆக பெரிய சிறுமை எதுவென்றால் அது ஒருவர் தனது வரலாற்றை அறியாமல் இருந்தலே.

அதை விட பெரிய சிறுமை என்றால் அது திரிக்கப்பட்ட, அல்லது புனைவு வரலாற்றை, நம் வரலாறு என நம்புவதாகத்தான் இருக்கும்.

கோசான் சே அவர்களே நல்லதொரு திரியைத் தொடங்கியுள்ளீர்கள். 'பொன்னியின் செல்வன்' புனைவு திரைப்படமாகவருகின்ற சூழலில் இது குறித்தான விடயங்கள் பகிரப்படுவதும், பேசப்படுவதும் அவசியம். இவ்வுலகானது வென்றவர்களின் அல்லது வலியோரின் வகிபாகங்களே வரலாறாகப் பதிவாகி வருகிறது. அதற்கான எடுத்துக்காட்டாக எமது தாயகமே சான்றாக உள்ளது. மனித நாகரீகத்தையும், உடற்கூற்றறிவியலையும் வினாவுக்குட்படுத்தும் 'மகாவம்சம்' என்ற புனைவு எமை அழித்துவருவதுபோன்று  'பொன்னியின் செல்வன்' என்ற புனைவுகளையும் உள்ளடக்கியதை  வரலாறென எமது அடுத்த தலைமுறை நம்பிவிடாதிருக்க இந்தத் திரி பங்களிக்கட்டும். உங்கள் நேரத்துக்கும் தேடலுக்கும் நன்றி.

Edited by nochchi
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நன்றி தொடருங்கள் 

🙏

1 hour ago, nochchi said:

கோசான் சே அவர்களே நல்லதொரு திரியைத் தொடங்கியுள்ளீர்கள். 'பொன்னியின் செல்வன்' புனைவு திரைப்படமாகவருகின்ற சூழலில் இது குறித்தான விடயங்கள் பகிரப்படுவதும், பேசப்படுவதும் அவசியம். இவ்வுலகானது வென்றவர்களின் அல்லது வலியோரின் வகிபாகங்களே வரலாறாகப் பதிவாகி வருகிறது. அதற்கான எடுத்துக்காட்டாக எமது தாயகமே சான்றாக உள்ளது. மனித நாகரீகத்தையும், உடற்கூற்றறிவியலையும் வினாவுக்குட்படுத்தும் 'மகாவம்சம்' என்ற புனைவு எமை அழித்துவருவதுபோன்று  'பொன்னியின் செல்வன்' என்ற புனைவுகளையும் உள்ளடக்கியதை  வரலாறென எமது அடுத்த தலைமுறை நம்பிவிடாதிருக்க இந்தத் திரி பங்களிக்கட்டும். உங்கள் நேரத்துக்கும் தேடலுக்கும் நன்றி.

நன்றி நொச்சி,

கண்ட களம் ஒன்றில் தன்னும் தோல்வி முகம் காணா வெற்றியாளர்கள் இராஜராஜனும், இராஜேந்திரனும்.

ஆனால் அவர்களிடம் தோற்றுப்போன நம்பூதிரிகளினதும், அவரால் நாடு கடத்தப்பட்ட அந்தணர்களினதும் வாரிசுகள் இப்போ நாவலாசிரியர், இயக்குனர், வசன கர்த்தா என்று கதை சொல்லிகளாய் இருப்பதாலும், கவர்சிகரமான கதையே வரலாறு என நம்பும் போக்கிருப்பதாலும், எங்கே “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வீரன்” ஆதித்த கரிகாலனை “கள்ளடிக்கும் வெறி குட்டி”யாக, பெண்பித்தனாக காட்டிவிடுவார்களோ என்ற பயமும்தான் இந்த திரியை ஆரம்பிக்க வைத்தது.

 ஏனையோரும் பொருத்தமான நம்பகதன்மை சேர் ஒளிபதிவுகளை பகிரலாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கோஷான் - சே  அவர்களே நல்லதொரு திரி........நடத்துங்கள் உங்கள் ராஜாங்கத்தை ......!  👍

 ஆதித்ய கரிகாலன் சதியால் கொல்லப்பட்டார் .......ஆழ்வார்க்கடியான் பாத்திரம் கதை சுவாரஸ்யத்துக்காக சேர்க்கப்பட்டது என்று நினைக்கின்றேன்......!    😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உலத்தில் ஆக பெரிய சிறுமை எதுவென்றால் அது ஒருவர் தனது வரலாற்றை அறியாமல் இருந்தலே.

அதை விட பெரிய சிறுமை என்றால் அது திரிக்கப்பட்ட, அல்லது புனைவு வரலாற்றை, நம் வரலாறு என நம்புவதாகத்தான் இருக்கும்.

இந்த வகையில் ஒரு நாவலை, அதை தழுவிய படத்தை நாம் நம் வரலாறு  என நம்பிவிடக்கூடாது என்பதை நினைவூட்ட இந்த திரி ஆரம்பிக்கபடுகிறது.

பொன்னியின் செல்வன் ஒரு நாவல். புனைவு. அதில் வரும் சில பாத்திரங்கள், சம்பவங்கள் நிஜமானவை, சில பாத்திரங்கள், சம்பவங்கள் புனைவு. அதை தழுவி வரும் படமும் அப்படியே.

வரலாறு என்றால் சர்ச்சை இருக்கும். சோழ வரலாறும் அதற்கு விதி விலக்கல்ல.

உதாரணமாக இராஜராஜன் காலத்தில் பிராமணர் ஆளுமை எந்தளவு இருந்தது என்பது பற்றிய சர்ச்சை. ஒரு சாரார் அவர் பிராமணரை நாடு கடத்தினார். ஏனைய குடிகள் போன்றே அவர்கள் இருந்தார்கள் எனவும். (https://www.bbc.com/tamil/india-48587731.amp).

இன்னொர் சாரார் அவர் ஆட்சியில் பிராமணர்களுக்கு அதிக ஆதிக்கம் கொடுக்கப்பட்டது என்றும் வாதாடுகிறார்கள். 

அதே போல் சோழர்கள் தெலுங்கர் என்று ஒரு சர்ச்சையும் அனல் பறந்தது.

இதிலும் முற்கால சோழர்கள், மத்திய கால சோழர்கள் தெலுகர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனிலும், ராஜேந்திரனின், மகள் இரெண்டாம் குந்தவையின் பேரன் முதலாம் குலோத்துங்கனின் 50% மரபுரிமை கீழை சாளுக்கியம் (தெலுகு) என்பதையும், கலகத்தில் ஆழ்ந்த சோழ பேரரசை அவர் கீழை சாளுக்கியத்தில் இருந்து வந்தே பொறுப்பெடுத்தார் என்பதையும் பேரா தெய்வநாயகம் போன்றோரே ஏற்கின்றனர்.

ஆகவே சர்ச்சைகளுக்கு புதியதல்ல சோழ வரலாறு. அவற்றை தீர்ப்பது இந்திரியின் நோக்கமும் அல்ல. அது முடியாத காரியமும் கூட. 

இந்த திரியில் சோழ வரலாறு பற்றி கிடைக்கும் நம்பதகுந்தவை என நான் காணும் காணொளிகளை இணைக்கவுள்ளேன்.

காணொளி 1

இராஜராஜனின் பெயர் அருள்மொழிவர்மனா, அருண்மொழிவர்மனா?

 நல்லதொரு விழிப்பூட்டும் தலைப்பு. நன்றி கோசான்.  👍

நீங்கள் மிகச் சரியான தகவல்களை... தருவீர்கள், 
என்ற நம்பிக்கை எனக்கு 100 வீதம் உண்டு. 🙂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆனால் அவர்களிடம் தோற்றுப்போன நம்பூதிரிகளினதும், அவரால் நாடு கடத்தப்பட்ட அந்தணர்களினதும் வாரிசுகள் இப்போ நாவலாசிரியர், இயக்குனர், வசன கர்த்தா என்று கதை சொல்லிகளாய் இருப்பதாலும், கவர்சிகரமான கதையே வரலாறு என நம்பும் போக்கிருப்பதாலும், எங்கே “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வீரன்” ஆதித்த கரிகாலனை “கள்ளடிக்கும் வெறி குட்டி”யாக, பெண்பித்தனாக காட்டிவிடுவார்களோ என்ற பயமும்தான் இந்த திரியை ஆரம்பிக்க வைத்தது.

ஜெயமோகன் என்னும்  நஞ்சை உமிழும் உயிரினத்தை அதன் போக்கில் விட முடியாது. தொடருங்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

கோஷான் - சே  அவர்களே நல்லதொரு திரி........நடத்துங்கள் உங்கள் ராஜாங்கத்தை ......!  👍

 ஆதித்ய கரிகாலன் சதியால் கொல்லப்பட்டார் .......ஆழ்வார்க்கடியான் பாத்திரம் கதை சுவாரஸ்யத்துக்காக சேர்க்கப்பட்டது என்று நினைக்கின்றேன்......!    😁

6 hours ago, தமிழ் சிறி said:

 நல்லதொரு விழிப்பூட்டும் தலைப்பு. நன்றி கோசான்.  👍

நீங்கள் மிகச் சரியான தகவல்களை... தருவீர்கள், 
என்ற நம்பிக்கை எனக்கு 100 வீதம் உண்டு. 🙂

4 hours ago, பகிடி said:

ஜெயமோகன் என்னும்  நஞ்சை உமிழும் உயிரினத்தை அதன் போக்கில் விட முடியாது. தொடருங்கள் 

நன்றி🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காணொளி 3

இராஜராஜன் என்ன சாதி?

இந்த படத்தின் முன்னோட்டத்தை பார்த்து விட்டு நாமம், பட்டை, உருத்திராட்ச கொட்டை என பல புனைவான அடையாளங்கள் சோழர் கூட்டத்துக்கு வலிந்து சுமத்தபடுவதாக பெரும் கண்டனம் எழுந்தது.

அது மட்டும் அன்றி, தேவன், தேவர் {இறை(மை) என்ற பொருளில்}, மறவன் {வீரன் என்ற பொருளில்}, உடையார் {உடைமையாளன்) போன்ற காரண விழிப்புகளை வைத்து இராஜராஜன் இன்ன சாதி என தவறாக கற்பிதம் செய்யபடுவதும் உண்டு. 

அந்தவகையில்  இந்த காணொளி சில விடயங்களை தெளிவாக்குகிறது.

உபரியாக - சாதிக்கும், குடிக்குமான வேறுபாடு. சாதி எப்படி 800 வருடங்கள் முன்பு மட்டும் தமிழர் வாழ்வியலில் இருக்கவில்லை. என்பதை பற்றியும் இந்த பேச்சாளர் விளக்குகிறார்.

பேச்சாளர் செந்தலை கவுதமன் எம் ஏ.

https://ta.m.wikipedia.org/wiki/செந்தலை_ந._கவுதமன்

இவர் தொல்லியல் நிபுணரோ, கல்வெட்டு ஆராய்சியாளரோ அல்ல. ஆனால் தமிழ் இலக்கண, இலக்கியம் ஆய்ந்த புலவர். தமிழறிஞ்ஞர். வரலாற்றை இலக்கியத்திலும் தேடலாம்  என்றவகையில் இவரின் கருத்தை இணைக்கிறேன்.

இணைப்பை தந்துதவிய @ஏராளன் ஏராளன் தம்பிக்கு நன்றி.

Edited by goshan_che
 • Like 2
Link to comment
Share on other sites

இவரின் சமஸ்கிருதத்தை எப்படி புகுத்தினார்கள், பிரிட்டிஸ், பிரமணருடன் சேர்ந்து)தமிழை எப்படி தரம் தாழ்த்தினார்கள் எனும் காணொளியை வட்சப்பில் பார்த்தேன். இப்போதும் ஏன்  வடக்கில் உள்ளவர்கள் தெற்கை கீழ்தரமாக பார்க்கிறார்கள் என்பது புரிந்தது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிறு குறிப்புக்கள்

காணொளி 4கை காணும் முன் சில சிறு குறிப்புக்களை காண்போம்.

கவனம் - இந்த சிறுகுறிப்பை வாசித்தால் நாவலின் கதை, சுவாரசிய முடிச்சு அவிழ்ந்து விடும்.

சிறு குறிப்பு 

உண்மையான சோழ அரச பரம்பரையும் - நாவலின் புனையப்பட்ட காரணங்களும்

இடைக்கால சோழ அரச வழியானது

விஜயாலய சோழன்

அவர் மகன்

ஆதித்த சோழன்

அவர் மகன்

பராந்தக சோழன்

அதன் பின் அவரின் மகன் முதல் மகன் இறந்து விட இரெண்டாம் மகன்

கண்டராதித்தன் அரசராகிறார்.

கண்டராதித்தன் மனைவி செம்பியன் மாதேவி.

கண்டராதித்தர் இறக்கும் போது அவர் மகன் மதுராந்தகனுக்கு சிறு வயது என்பதால்

கண்டராதித்தரின் தம்பி

அரிஞ்சயன் அரசராகிறார்.

அவரும் விரைவில் இறக்க, அப்போதும் மதுராந்தகன் சிறுவன் என்பதால்

அவரின் தம்பி

சுந்தர சோழர் அரசராகிறார்.

செம்பியன் மாதேவி வளர்ந்து விட்ட மதுராந்தகனை சிவ பக்தனாக வளர்க்க,

சுந்தர சோழன் தன் மகனான

ஆதித்த கரிகாலனை அடுத்த அரசனாக பட்டத்து இளவரசன் ஆக்கிறார்.

ஆதித்த கரிகாலன் கொல்லப்பட, சுந்தர சோழனுக்கு பின் அரியணை இராஜராஜனுக்கு வருகிறது. மக்களும் அவரையே அடுத்த அரசர் என கொண்டாடுகிறனர்.

ஆனால் இராஜராஜன் தன் சிறிய தந்தைக்கு வழிவிட்டு விலகி நிற்க, சிவபக்தனான

மதுராந்தகன் உத்தம சோழன் என்ற பெயரில் அரசராகிறார்.

உத்தம சோழனின் பின்

இராஜராஜன் அரசனாகினார்.

இதுதான் இராஜராஜன் வரையான இடைக்கால சோழர் மன்னர் வரிசை.

ஆனால் நாவலில் கல்கி சில கற்பனை பாத்திரங்கள் மூலம் கதையை சற்றே மாறுபட்டு சொல்கிறார்.

கல்கியின் கதை உண்மை வரலாற்றில் இருந்து எப்படி மாறுபடுகிறது என்பதை பார்க்கும் முன் அவரின் சில கற்பனையான பாத்திரங்களை பார்ப்போம். 

 கற்பனை பாத்திரம் 1 

சிங்கள நாச்சியார்/ செங்கமல நாச்சியார்/ ஊமைப் பெண்/ மந்தாகினி

பொன்னியின் செல்வன் நாவலில் ஒரு பாத்திரம் வரும் அதை ஆரம்பத்தில் இலங்கையில் ஓர் தீவில் வாழும் ஊமை பெண், இராஜராஜனை தேடி இலங்கை போகும் வந்தியதேவனை கூட்டி செல்லும் படகோட்டி பூங்குழலியின் அத்தை என அறிமுகம் செய்வார் கல்கி.

அதே போல் வாய்மொழி கதையாக, ஒருமுறை குழந்தை இராஜராஜ சோழன் படகில் பயணிக்கும் போது பொன்னி நதியே அவரை மீட்டு படகுக்கு திருப்பியதாயும் அதனாலே அவர் “பொன்னியின் செல்வன்” என அறியப்பட்டார் எனவும் கூறுவார்கள்.

நாவலில் கல்கி தான் உருவாக்கிய இந்த ஊமை பெண், இலங்கையில் சுந்தர சோழர் போரிட்ட காலத்தில் கந்தர்வ மணம் செய்து பின் கைவிட்ட மந்தாகினி என்பார்.

இந்த மந்தாகினியே பொன்னி ஆற்றில் இருந்தும், இலங்கையில் ஓர் ஆபத்தில் இருந்தும் இராஜராஜ சோழனை காத்ததாக உருவமைத்திருப்பார்.

அதே போல் சுந்தர சோழரால் கைவிடப்பட்டபின் மந்தாகினி அவரின் பரம வைரியான வீரபாண்டியனிடம் உறவில் இருந்து அதன் மூலம் ஆண், பெண்ணாக இரு குழந்தைகளை பெற்றதாயும். கர்பமாக இருந்த மந்தாகினியை செம்பியன் மாதேவி பராமரித்ததயும் எழுதுவார்.

கதையில் மந்தாகினிக்கு இரு குழந்தைகள் பிறக்கும் வேளை - செம்பியன் மாதேவிக்கும் ஒரு குழந்தை இறந்து பிறக்கும்.

கருத்திருமன் என்ற ஒருவரிடம் இறந்த தன் குழந்தையை (கண்டராதித்தனின் உண்மையான மகன்) புதைக்கும் படி கூறிய செம்பியன் மாதேவி, மந்தாகினியின் மகனை தான் வளர்ப்பு பிள்ளையாக எடுத்து கொண்டு, மகளை இன்னொரு தம்பதியிடம் வளர்ப்பு பிள்ளையாக கொடுக்கிறார்.

மந்தாகினி ஊமை பெண்ணாக இலங்கையின் தீவொன்றுக்கு திரும்புகிறார்.

மேலே சொன்ன மூன்று குழந்தைகளில், இறந்ததாக கருதப்பட்ட உண்மையான சோழ வாரிசு (கண்டராதித்தன்+செம்பியன்மாதேவி மகன்) இறக்கவில்லை அது ஒரு கோவில் சேவகர் வீட்டில் வளர்கிறது - அந்த பாத்திரத்தின் பெயர் சேந்தன் அமுதன் என கல்கி எழுதி இருப்பார்.

வீரபாண்டியன்+மந்தாகினி மகள் நந்தினி எனவும். மகன் தான் செம்பியன் மாதேவியிடம் மகனாக வளரும் மதுராந்தகன் எனவும் எழுதி இருப்பார்.

கதையின் ஓட்டத்தில் நந்தினி , மதுராந்தகன் ஆகியோர் (பல சதிகளை செய்து) பின்னர் தாம் பாண்டிய வாரிசுகள் என அறிந்து விலகிவிட, கோவிலில் பூக் கட்டி கொண்டிருக்கும் சேந்தன் அமுதன் தான் உண்மையான கண்டராதித்தன் மகன் என உணர்ந்த இராஜராஜன் அவருக்கு பட்டத்தை விட்டு கொடுக்கிறார். இவ்வாறு “உண்மையான மதுராந்தகன்” , உத்தம சோழனாக அரியணை ஏறுகிறார் என கதையை முடிப்பார் கல்கி.

நான் மேலே சொன்னதில் கற்பனை பாத்திரம் 1 என்பதன் கீழே எழுதியவை எல்லாம் கற்பனையே.

ஆனால் நாவலின் ஓரிடத்தில் இன்றும் தஞ்சையில் சிங்களநாச்சியார் நினைவாக இராஜராஜன் எழுப்பிய கோவில் உள்ளது என சொல்லி இருப்பார் கல்கி.

ஆனால் இந்த கோவில் (செங்கமல நாச்சியார் கோவில்) இருந்தாலும் அதை சோழர் கட்டினர் என்பதற்கோ, இன்ன காரணத்தால் கட்டப்பட்டது என்பதற்கோ போதிய ஆதாரம் ஏதுமில்லை.

இந்த கோவில் உருவாக்க காரணம் பற்றி மேலும் இரு வேறு கதைகளும் உண்டு (கீழே காண்க - comments ஐயும் வாசிக்கவும்)

http://idaivaellai.blogspot.com/2013/07/blog-post.html?m=1

http://muthusidharal.blogspot.com/2012/02/blog-post_08.html?m=1

எது, எப்படியோ, சிங்கள நாச்சியார் என ஒருவர் இருந்தாலும் கூட, அவர் தான் ஊமை பெண், மந்தாகினி என்பதுவும், அவருக்கும் வீரபாண்டியனுக்கும் பிறந்த பிள்ளைகள்தான், நந்தினி, மதுராந்தகன் என்பதும், கண்டராதித்தன் மகன் சேந்தன் அமுதன் என்பதும் கல்கியின் கலப்படமில்லாத கற்பனை என்பது தெளிவு.

Edited by goshan_che
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கற்பனைப்பாத்திரம் 2 

நந்தினி

நாம் மேலே பார்த்ததின் படி நந்தினி என்ற கதாபாத்திரம் முழுக்க முழுக்க கற்பனையே.

தாம் யார் என்பதை அறியாமலே சுந்தர சோழன் மகன் ஆதித்த கரிகாலனும், சுந்தர சோழனின் காதலியான மந்தாகினிக்கும், சோழவம்ச முதல் எதிரியான வீர பாண்டியனுக்கும் பிறந்த பிள்ளை நந்தினியும் காதல் வசபடுவதாயும். பிரிவதாயும் கல்கி எழுதி இருப்பார்.

அதேபோல் வீர பாண்டியன் தலையை ஆதித்தகரிகாலன் கொய்த போது (உண்மை சம்பவம்) அந்த குடிலில் நந்தினி இருந்ததாயும், வீர பாண்டியனை விட்டு விடுமாறு கெஞ்சுவதாயும் எழுதி இருப்பார்.

மேலும் நந்தினியின் அழகில் மயங்கி பெரிய பழுவேட்டரையர் (உண்மையான கதாபாத்திரம்) திருமணம் செய்வதாயும், அவரின் சிற்றரசியாக இருந்த படி, பாண்டிய ஆபத்து உதவிகளுடன் கூடி, மதுராந்தகனுக்கு அரச ஆசை ஊட்டி, ஆதித்த கரிகாலனை அழிக்க அல்லது சோழ அரசை பிரிக்க நந்தினி சதி செய்வதாகவும் எழுது இருப்பார்.

நந்தினி என்ற கதாபாத்திரமும் மேலே சொன்னவற்றில் எல்லாமுமே கற்பனையே.

ஆதித்த கரிகாலன் வீர பாண்டியன் தலை கொய்தார். மர்மாக இறந்தார். இராரஜாஜன் ஆட்சியின் 2ம் வருடத்தில் நாலு பிராமண சகோதரர்கள், ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரணமானவர் என அறியப்பட்டு அவர்கள் உறவுகள், ஈறாக சொத்துக்கள் பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர் என்பது மட்டுமே வரலாறு

கற்பனை பாத்திரங்கள் 3 - 4

மதுராந்தகன் - சேந்தன் அமுதன்

மேலே சொன்னபடி சேந்தன் அமுதன் என்ற பாத்திரம் முழுக்கற்பனை. 

அதே போல் மதுராந்தகன் என வளர்ந்தவர் வீரபாண்டியன் மகன் என்பதும், சேந்தன் அமுதந்தான் சோழ(கண்டராதித்தன்) வாரிசு என்பதும் கற்பனையே.

கண்டராதித்தன்+செம்பியன் மாதேவி மகன் மதுராந்தகன். பட்டத்து இளவரசர் ஆதித்தகரிகாலன் மர்மாக இறக்க, இவர் சுந்தரசோழனின் பின் அரசரானார் என்பது மட்டுமே வரலாறு.

Edited by goshan_che
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே தந்த விளக்கங்களை படித்த பின் காணொளி 4கை காண்க.

இதில் சிங்களநாச்சியார் உண்மை பாத்திரம் என சொல்லுகிறார் - அதை பற்றிய விளக்கத்தை மேலே காண்க.

காணொளி 4

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2022 at 02:52, goshan_che said:

எங்கே “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வீரன்” ஆதித்த கரிகாலனை “கள்ளடிக்கும் வெறி குட்டி”யாக, பெண்பித்தனாக காட்டிவிடுவார்களோ என்ற பயமும்தான் இந்த திரியை ஆரம்பிக்க வைத்தது.

ஓரளவிற்கு பல சோழ, சேர பாண்டிய மன்னர்கள் தொடக்கம் சில வடநாட்டு அரசர்களைப் பற்றி எழுதிய நாவல்களை வாசித்திருக்கிறேன், ஆனால் சோழ சிரஞ்சீவியான ஆதித்த கரிகாலனைப் பற்றி தனியே ஒரு கதையை காணவில்லை. 

இப்பொழுது இந்த படத்தில் ஆதித்த கரிகாலனை படமாக்கியிருக்கும் விதம், வேண்டும் என்றே ஆதித்த கரிகாலனை மறைக்கப் பார்க்கிறார்களோ என தோன்றுகிறது. 

வடநாட்டவர், அக்பரையும், அசோகரையும், சிவாஜியையும் புகழ்ந்து எழுதியதை பாடசாலைகளில் வரலாற்றுப் பாடத்தில் படிக்கும் பொழுது எங்களிலும போற்றத்தக்க தமிழ் மன்னர்கள் இருந்தார்கள் என்பதை கூற வருவதுதான் இந்தப் பொன்னியின் செல்வன் என பாரதி பாஸ்கர ஓரிடத்தில் கூறுகிறார். ஆனால் இது முழுவதும் உண்மை சொல்லும் வரலாற்றுப் படமாக அமையுமா? வரலாற்றுப் படங்கள் ஒரு பொழுதும் முற்றுமுழுதாக உண்மையை கூறியதாக இருந்ததில்லை என்றே நினைக்கிறேன்

“ ஆதித்த கரிகாலன் “ இந்த பெயரை கூறும் பொழுது ஏற்படும் உணர்வே வித்தியாசம்.. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

“ ஆதித்த கரிகாலன் “ இந்த பெயரை கூறும் பொழுது ஏற்படும் உணர்வே வித்தியாசம்

என்மனதில் ஆதித்த கரிகாலன் இராஜராஜன், இராஜேந்திரனை காட்டிலும் சமரசம் இல்லாமல் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பும் ஒருவராகவே தெரிகிறார்.

இவரும் இன்னுமொரு பாண்டியனுமே எதிரி மன்னன் தலை கொய்தவர்கள் என்கிறார்கள்.

அதாவது சோழத்துக்குகான பகைவரை, பரம்பரையோடு அடியோடு அழிக்கும் முனைப்பு.

பட்டத்து இளவரசனாக ஆகியபின் அவர் ஒரு இணை-சக்கரவர்த்தி (co-regent) ஆகவே செயல்பட்டாராம்.

அவர் கொல்லப்படாது அரியணை ஏறி இருந்தால் - பாண்டிய, அவர்கள் கூட்டாளிகளான சிங்கள அரச வம்சங்கள் இனி தலையெடுக்கா வண்ணம் துடைத்தழிக்கப்பட்டிருக்கலாம்.

அப்படி நடந்திருந்தால் - அதன் பின் வரலாறு எப்படி திரும்பி இருக்கும்? என்பது சுவாரசியமான கற்பனை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வடநாட்டவர், அக்பரையும், அசோகரையும், சிவாஜியையும் புகழ்ந்து எழுதியதை பாடசாலைகளில் வரலாற்றுப் பாடத்தில் படிக்கும் பொழுது எங்களிலும போற்றத்தக்க தமிழ் மன்னர்கள் இருந்தார்கள் என்பதை கூற வருவதுதான் இந்தப் பொன்னியின் செல்வன் என பாரதி பாஸ்கர ஓரிடத்தில் கூறுகிறார். ஆனால் இது முழுவதும் உண்மை சொல்லும் வரலாற்றுப் படமாக அமையுமா? வரலாற்றுப் படங்கள் ஒரு பொழுதும் முற்றுமுழுதாக உண்மையை கூறியதாக இருந்ததில்லை என்றே நினைக்கிறேன்

இந்திய தீபகற்பம் தாண்டிய இந்திய மன்னர்கள் எண்டால் இராஜராஜனும், இராஜேந்திரனும்தான்.

மிச்சம் எல்லாரும் இமயத்துக்கும், விந்தியதுக்கும் இடையில் குண்டு சட்டியில் குதிரை ஓட்டியோரே🤣.

ஆனால் இவர்களை மறைத்து விட்டு அவர்களை தூக்கி பேசுவார்கள். 

கல்கி ஆதித்த கரிகாலனின் கொலையில் பிராமணர் பங்கையும், நம்பூதிரி பிராமணர்கள் காந்தளூர் சாலை போன்ற கல்லூரிகள் மூலம், சேர தமிழரை ஏனைய தமிழரிடம் இருந்து பிரித்தாண்ட சூழ்சியையும் சொல்லவில்லை என்ற விமர்சனம் இருந்தாலும்,

கல்கி இதை எழுதியிராவிட்டால் நாமே சோழரை பற்றி அறிந்திருப்போமா என்பதும் சந்தேகமே.

ஆகவே இந்த படம் வருவது நல்லதே.

எமது வரலாற்றின் மீது ஆர்வம் எப்படி வந்தாலும் நல்லதே.

கூடவே கற்பனை எது, உண்மை எது என்பதை முடிந்தளவு விளக்கி விடவேண்டும்.

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆதித்த கரிகாலன் கொலையும் கருணையும்

ஆதித்த கரிகாலன் என்ற ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான். அவன் சுந்தர சோழன் இறக்கும் முன்னரே கொலை செய்யப்பட்டு மாண்டுபோனான் என்பதை வரலாற்று ஆசிரியர்களான் கே.கே. பிள்ளை, சதாசிவப் பண்டாரத்தார், கெ.ஏ.நீலகணட சாஸ்திரிகள் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொண்டு தங்களது வரலாற்று நூலகளை எழுதியுள்ளனர். ஆனால் திருவாலாங்காட்டு செப்பேடுகள் அந்த உண்மையை மறைத்து உள்ளன.

மேற்சொன்ன நூலாசிரியர்களும் ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதைப் பற்றித் தெளிவாக எழுதவில்லை. கே.கே.பிள்ளை ஆதித்த கரிகாலன் கொலையுண்ட பிறகு சுந்தரசோழனாகிய இரண்டாம் பராந்தகன் மனம் நொந்து தில்லை சென்று இறந்து போனான்; அதனால் பொன்முற்றத்து துஞ்சிய சோழன் அல்லது குளமுற்றத்து துஞ்சிய சோழன் என்று பெயர் பெற்றான் என்று எழுதி முடித்துக் கொள்ளுவார் [காண்க மேலது] சதாசிவப் பண்டாரத்தார் இன்னும் சற்று விரிவாக "அந்த கொலைப்பழியை மதுராந்தகன் மேல் சிலர் சுமத்துவர் ஆயின் அதற்கு தக்க சான்றுகள் இல்லை. மேலும் ராச ராச சோழன் தன்னுடைய அண்ணைக் கொன்ற மதுராந்தகன் இடத்தில் எப்படி அன்பு செலுத்தி இருப்பான்? ஆனால் ராச ராச சோழன் தன்னுடைய நாட்டு மக்கள் விரும்பியபோதும் தான் முடி சூடாமல் தன்னுடைய சிற்றப்பனுக்கு [மதுராந்தகத் தேவனுக்கு] விட்டுக் கொடுத்திருப்பானா?" என்ற வினாவை எழுப்புகிறார்.

இவ்வாறு எதிர்க் கேள்வியின் மூலம் ஆதித்த கரிகாலன் கொலையைப் பற்றி முடித்துவிடுகிறார். நமது ஆய்விற்கு இது போதாது. கெ.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் தமது நூலில் உடையார்குடி கல்வெட்டுகள் பற்றி குறிப்பிட்டு உள்ளார். அதை வைத்து கொலையாளிகள் யார் என்பதையும் அவர்களை ராச ராச சோழன் சரியாக தண்டனை கொடுக்காமல் தப்பிக்கவிட்டு விட்டான் என்ற நோக்கிலும் அவர் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்பது ஆகும். கொலையாளிகள் யார் என்பதை வீர நாராயண நல்லூர் சதுர்வேதி மங்கலம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட [தற்போது காட்டு மன்னார்கோவில் அருகில் உள்ள உடையாளூர்] ஊரைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ஆகும். இவர்களுடன் பாண்டிய நாட்டைச் சேர்ந்த சில பார்ப்பனர்களும் கூடி ஆதித்த கரிகாலன் என்ற பட்டத்து இளவரசனைக் கொன்றுவிட்டனர்.

பட்டத்து இளவரசன் என்பது அரசனுக்கு மிக அணுக்கமான அதிகார மையமாகும். முப்படைகளின் தலைவன் அவனேயாகும். அவன் தனியாக ஆட்சி செய்வதற்கு என்று ஒரு பகுதியை அரசன் ஒதுக்கியும் கொடுக்கலாம். பொதுவாக இளவரசுப் பட்டம் கட்டும்போது அவனுக்கு மணம் முடித்திருப்பார்கள். ஆனால் ஆதித்த கரிகாலன் அவ்வாறு மணம் முடித்ததாகத் தெரியவில்லை.

அரசியலில் திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட குறுநில மன்னனின் ஆதரவை பெற்றுத்தரும். அது போல மற்ற குறுநில மன்னர்களின் எதிர்ப்பையும் பெற்றுத்தரலாம். ஆனால் இந்த வாய்ப்பு ஆதித்த கரிகாலனுக்கு இல்லை. எனவே அவன் கொலை செய்யப்பட்டதைக் குறித்து யாரும் கவலைப்படாமல் இருந்ததிருக்கக் கூடும். அவனுடைய நண்பனாகக் கல்வெட்டுகளிலும் கல்கி ரா .கிருட்டிணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்திலும் குறிக்கப்பட்டுள்ளவன் பார்த்திபேந்திர பல்லவன் என்னும் குறுநில மன்னனாகும். இவன் பல்லவ குலத்தைச் சேர்ந்தவன். தொண்டை மணடலத்தை ஆண்டவன். அங்குள்ள பல கோவில்களுக்கு கொடை அளித்த செய்திகள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இவனுக்கும் வீரபாண்டிய தலைகொண்டவன் என்ற பட்டபெயரும் குறிக்கப்பெறுவதால் இவனும் சேவூர் போரில் பங்கெடுத்திருப்பான் என்று எண்ண வேண்டி இருக்கிறது.

ஆதித்த கரிகாலனைப் பற்றிய செய்திகளில் இரண்டு செய்திகள் உற்று கவனிக்கத்தக்கன.

1.கொலைக்கான காரணம் .

2. கொலையின் பயன் யாருக்குப் போய்ச் சேருகிறது?

கொலையாளிகளின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப் பட்டுள்ளது .

# 1 சோமன் ''''''

2 இவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதி ராஜன் இவன் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன்

2 இவன் தம்பி பரமேசவ்ரன் ஆனா இருமுடிச் சோழ பிரும்மாதி ராஜனும்

3 இவரகள் உடன் பிறந்த மலையனூரானும் [ இவன் பெயர் மலையனூரன பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன் தாய்பெரிய நங்கைச் சாணியும்]

இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களும்

4 ராமத்ததம் பேரப்பன் மாரும்

5 இவர்களுக்கு பிள்ளைக் கொடுதத மாமன் மாரிடும் இவர்கள் உடன் பிறந்த பெண்களை வேட்டரினவும்

6 இவர்கள் மக்களை வேட்டரினவும் ஆக #

இவ்வனைவரும் கொலையில் தொடர்புடையவர்கள் என்று உடையாளூர்க் கல்வெட்டு கூறுகிறது.. இவர்களுடைய நிலத்தைப் பறிமுதல் செய்துவிடுமாறு ராச ராச சோழன் முன்பு உத்திரவு இட்டதை இந்த கல்வெட்டு சுட்டுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தை அல்லது நிலத்தின் ஒரு பகுதியை வேறு ஒருவருக்கு (வெண்ணையூருடையார் பரதன் என்னும் விஜய மல்லன் என்பவன்)115 பொன்னுக்கு வாங்கி அதை திருவனந்தீஸ்வரர் பட்டாரகர் கோவில் சிவப் பிராம்மணர்களுக்கு உணவு கொடுப்பதற்கு உரிய தானமாக வழங்கினான் என்பதே இந்த கல்வெட்டு கூறும் நேரிடைச் செய்தியாகும். இந்த கல்வெட்டு ஒன்றில்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி காணப்படுவதால் இதை இன்னும் சிறிது உற்று நோக்குவது கட்டாயமாகும்.

1 திரு குடவாயில் பாலசுப்ரமணியன் என்ற ஆய்வாளர் இந்த கல்வெட்டு கூறும் நேரிடையான செய்திகளை மட்டும் கணக்கில் கொண்டு உடையார்க்குடி கல்வெட்டு ஒரு மீள்பார்வை என்ற தலைப்பில் ஒரு சிறு நூலினை எழுதியுள்ளார். அதைக் கொண்டு அவர் கல்வெட்டில் கூறாத செய்திகளையும் கூறி இந்த கல்வெட்டை கொண்டு ராச ராச சோழன் தன் தமையனாகிய ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களை முறையாகத் தண்டிக்கவில்லை என்ற கூற்றை மறுக்கவும் செய்கிறார்.

அதற்கு அவர் கூறும் காரணம் கொலையாளிகள் உடனே தப்பிச் சென்று இருப்பார்கள். அதனால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பதில் அவர்களுடைய நிலத்தை ராச ராச சோழன் பறிமுதல் செய்தான் [இந்த செய்தி கல்வெட்டில் ஒருவாறு கூறப்பட்டிருக்கிறது] அந்த நிலம் ஊர் சபையின் நிர்வாகத்தில் இருந்ததது. பிறகு அதை ஒரு தனி மனிதர் வாங்கி சிவப் பார்ப்பனர்களுக்கு உணவு கொடுப்பதற்காக கோவிலுக்கு அளித்தார் என்று முடிக்கிறார். அத்துடன் விட்டிருந்தால் சரி. சேவூர் என்ற இடத்தில் நடந்த கடும் சண்டைக்குப்பிறகு ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வென்று அவன் தலையைக் கொய்து குச்சியில் நட்டு நகர்வீதி வலம் வந்ததாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குடவாயில் பால சுப்பிரமணியன் இதைப்பற்றி எழுதும்போது “இது போர் விதிகளுக்கு முரண்பட்டது. இத்தகைய அறங்கொன்ற செய்கைக்கு பழிவாங்கும் பொருட்டு ஆதித்த கரிகாலன் பாண்டிய நாட்டை சேர்ந்த சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டான் என்று எழுதுகிறார். ஏதோ மற்ற அரசர்கள் தங்களுடைய போர்களில் நீதி தவறாமல் நடந்து கொண்டதுபோலவும் ஆதித்த கரிகாலன் விதிவிலக்கு போலவும் நமக்கு தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் போர் என்பதே கொடுமையான ஒன்றுதான். எல்லா மன்னர்களும் தங்களது போர்களில் அரசர்களைக் கொல்வதுடன் மட்டுமின்றி பொதுமக்களையும் துயர்படுத்தியே வந்திருக்கின்றனர். சங்ககாலத்தில் மன்னர்கள் தாங்கள் வென்ற மன்னர்களின் பற்களைப் பிடுங்கி அதை தங்கள் அரண்மனைக் கதவுகளில் பதித்து வைத்திருந்தனர் என்ற செய்திகள் காணப்படுகின்றன.

சத்யாசிரியன் என்ற மேலைச் சாளுக்கிய மன்னன் நாட்டின் மீது படையெடுத்த ராச ராச சோழன் அந்த நாட்டில் செய்த கொடுமைகளை வேங்கி நாட்டுக் கல்வெட்டில் காணலாம். எனவே ஆதித்த கரிகாலன் எல்லை மீறி நடந்தான்; அதனால் பழி வாங்கும் நோக்கத்துடன் அவன் கொல்லப்பட்டான் என்பது சரியல்ல. எதற்காக கொல்லப்பட்டிருந்தாலும் கொலைகாரர்களை மதுராந்தகன் தன்னுடைய ஆட்சிக் காலமாகிய 15 வருடங்களும் பிடிக்கவில்லை. ராச ராச சோழன் தன்னுடைய ஆட்சிக் காலதிலும் பிடிக்கவில்லை. அவர்கள் உறவினர்கள் நிலங்களை மட்டும் பறித்துக் கொண்டான். அவ்வாறு நிலங்களைப் பறித்துக் கொண்டபோது அவர்கள் சோழ நாட்டில் இருந்தனரா அல்லது வேறு நாட்டிற்கு ஓடி விட்டனரா என்பதைப்பற்றி இக்கல்வெட்டு ஒரு சொல்லும் சுட்டவில்லை.

அப்படி இருக்க அவர்கள் சோழ நாட்டில் இருந்திருக்கமாட்டார்கள்; தப்பி சேர நாட்டுக்கு சென்று ஒளிந்து கொண்டிருப்பார்கள் என்று வலிந்து பொருள் கொள்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். பாண்டிய நாடு என்று சொல்லவில்லை ஏன்? அப்போது பாண்டிய நாடும் சோழ ஆட்சியில் கீழ் தான் இருந்தது. இவ்வளவு வலிந்து பொருள் கொள்ளக் காரணம் ராச ராச சோழன் தவறு செய்யவில்லை என்பதை காட்டுவதற்கே ஆகும்.

இனி அவர்கள் பார்ப்பனர் என்பதற்காக ராச ராச சோழன் கொலையாளிகளைத் தண்டிக்கவில்லை என்ற செய்தியும் இதில் அடங்கியுள்ளது. கொன்றவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே. அவர்களில் பாண்டியன் நாட்டைச் சேர்ந்தவர்கள் இருவர். மீதிப்பேர் சோழ நாட்டை சேர்ந்தவர்கள். பாண்டிய மன்னன் தலையைக் கொய்ததற்கு சோழ நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ஏன் சினம் கொள்ளவேண்டும்? பார்ப்பனர்களுக்கு நாட்டுபற்றை விட சாதிப்பற்று அதிகம் என்பது இங்கு தெரியவரும் மற்றுமொரு செய்தியாகும்.  அது செல்க.

மேலும் நமக்கு சில தகவல்களையும் அருளிச் செல்லுகிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். அக்காலத்தில் பார்ப்பனர்கள் [பிராமணர்கள் என்ற சொல்லைத்தான் அவர் பயன்படுத்தி உள்ளார்] வாளெடுத்து போர் புரிந்தனர். போர்களில் பார்பபனர்களும் கொல்லப்பட்டனர் என்பதுதான் அது! நன்றி அய்யா! உங்களது செய்திகளுக்கு நன்றி! பார்ப்பனர்கள் போர் புரியும் திறம் படைத்தவர்கள் என்பதை நாங்களும் அறிவோம். நந்த மரபைச் சேர்ந்த மன்னர்களையும் போர்வீரர்களையும் அவர்கள் உறங்கும்போதும் கொன்றவன் புஸ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பனன் தான் என்பதையும் அறிவோம்.

கிருஸ்னன் ராமன் என்ற மும்முடிச்சோழன் பிரும்மாதிராஜன் ராச ராச சோழன் படைத்தலைவன் என்ற உண்மையை அருள் கூர்ந்து தமிழ்த் தேசியர்களுக்கு சொல்லவும். அவர்கள்தான் ராச ராச சோழன் பார்ப்பனர்களை தன்னிடம் நெருங்கவே விடவில்லை என்று நமக்கு பாலர் பாடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது சிக்கல் போரில் பார்ப்பனர்கள் கொல்லப்பட்டனரா இல்லையா என்பது அல்ல. ஆதித்தகரிகாலனைக் கொன்ற பார்ப்பனர்களை ராச ராச சோழன் தண்டிக்காமல் விட்டு விட்டான் என்பதே. மனுநீதி கூட கொலை, திட்டமிட்ட கொலை புரியும் பர்ப்பனர்களுக்கு மரணதண்டனை வழங்கலாம் என்றுதான் கூறுகிறது. ராச ராச சோழன் மனு நீதியையும் விஞ்சிய பார்ப்பன அடிமை என்பதே எமது முடிவு. அதைத்தான் இந்த செய்தியும் உறுதி செய்கிறது.

கல்வெட்டுகள் கூறாத செய்திகளிலிருந்து திரு குடவாயில் பாலசுப்ரமணியன் சில முடிவுகளை செய்தது போலவே நாமும் சிலமுடிவுகளை செய்யவேன்டி இருக்கிறது. ஏன் வேறு சான்றுகள் இல்லை .

ராச ராச சோழன் ஒரு பேரரசன் தன்முனைப்பும் தான் என்ற கர்வமும் மிக்கவன். தன்னுடைய ஆட்சிக் காலதில் நடந்த செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளில் பதிவு செய்தவன். தனக்கென்று ஒரு மெய்க் கீர்த்தியை ஏற்படுத்தி தன்னுடைய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்தவன். பதிவு என்றால் அப்படி இப்படி இல்லை. ஒரு சிறிய தகவல் கூட விட்டு விடாதபடிக்கு மிகக் கவனமாக பதிவு செய்தவன். ஒரு எடுத்துக்காட்டு காண்போம் .

தன்னுடைய பெரியகோவிலில் தேவரடியாளர்களாகக் கொண்டு வந்த பெண்டுகளின் பெயர்கள், அவர்கள் எந்த ஊரில் இருந்து வந்தனர் என்பதை எல்லாம் ஒரு தகவல் கூட தவறாமல் பதிவு செய்தவன். ஒரே ஊரில் இருந்து இரு பெண்கள் கொண்டு வரப்பட்டிருந்தால் எ.க திருவடி என்ற பெயருடைய இருபெண்கள் ஒரே ஊரில் இருந்து கொண்டுவரப் பட்டனர் எனவே அவர்களை தனித் தனியாக அடையாளம் பிரிப்பதற்காக ஒருத்திக்கு பெரிய திருவடி. மற்றவளுக்கு சிறிய திருவடி என்று வேறுபடுத்தி தளிச்சேரி கல்வெட்டில் பதிவு செய்தவன். தான் செய்த சிலைகளின் உயரம் எடை இவற்றை மிக நுணுக்கமாகப் பதிவு செய்தவன்.

கல்வெட்டுகளைப் பதிவு செய்வதற்காகவே பெரிய கோவிலைக் கட்டினானோ என அய்யுறும் விதமாக அக்கோவிலின் விமானம் தொடங்கி திருச்சுற்றுவரை [வெளி சுவர்] வரை எழுத்துக்களைப் பொறித்தவன். யாருடைய தானம் எங்கு பொறிக்கப்படவேண்டும் என்று முறைசெய்தவன்; அப்படிப்பட்ட ராச ராச சோழன் தன்னுடைய கல்வெட்டு ஒன்றில் கூட தமையன் ஆகிய ஆதித்த கரிகாலனைப் பற்றிக் குறிக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த உண்மை நம்மை மேலும் பல உண்மைகளை ஊகிக்கத் தூண்டுகிறது. சதாசிவப் பண்டாரத்தார், குடவாயில் பாலசுபிரமணியன் போன்றோர் (இவர்களுக்குப் பின் தற்போது நடன காசிநாதன்) ராச ராச சோழனைக் கொலை சதியில் இருந்து தப்புவிக்க முயல்கின்றனர். அவர்களுடைய வாதத்தை பின் வருமாறு கூறலாம்.

ராச ராச சோழன் தன்னுடைய தமக்கை [அக்கா] ஆகிய குந்தவையிடம் மிக்க அன்பு கொண்டிருந்தவன். அதுபோன்றே தன்னுடைய சிற்றப்பன் ஆகிய மதுராந்தக உத்தம சோழனிடம் மிக்க அன்பு கொண்டிருந்தான். மதுராந்தக உத்தம சோழன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுடன் தொடர்பு உடையவனாக இருந்தால் ராச ராச சோழன் அவனிடம் அன்பு செலுத்தியிருப்பானா?

நம்முடைய வாதம் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுடன் மதுராந்தக உத்தம சோழன், ராச ராச சோழன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்தது. அதனால் தான் இருவரும் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களை தண்டிக்காமல் விட்டு விட்டனர். தமயன் கொலை செய்யப்பட்டவுடன் தம்பியாகிய ராசராச சோழன் முடிசூட்டிக்கொண்டால் அது மக்கள் மத்தியில் பல அய்யங்களை உண்டாக்கும். ராச ராச சோழனின் நற்பெயருக்கு களங்கம் உண்டாகும். எனவே தான் சோழ மணிமகுடத்தை மதுராந்தக உத்தம சோழனுக்கு விட்டுக் கொடுத்தான். அதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தான். ஒன்று தன்னுடைய நற்பெயருக்கு எவ்வித களங்கமும் ஏற்படாது காத்துக் கொண்டான் . இரண்டாவது, இது கவனிக்கத்தக்கது, மதுராந்தக உத்தம சோழனுக்குப் பிறகு தான் ஆட்சிக்கு வரும்படியாக ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். அதன்படி மதுராந்தக உத்தம சோழன் ஆட்சிக்குப்பின்னர் ராச ராச சோழன் பதவி ஏற்கும் வண்ணம் அவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டப்பட்டது.

தமையன் கொலைக்குப் பிறகு துக்கத்தில் மூழ்கிப் போயிருந்த காரணத்தால் ராச ராச சோழன் மணிமகுடத்தை மறுத்துவிட்டான் என்று கூறுபவர்கள் இந்த செய்தியை கவனத்தில் கொள்ளவேண்டும். அரச பதவியை மறுதலித்தவன் இளவரசுப் பதவியை மறுதலிக்கவில்லை. என்வே இவை எல்லாம் திட்டமிட்டு நடிக்கப்பட்ட நாடகம். இந்த நாடக அரங்கேற்றத்திற்கு உடையார்குடி பார்ப்பனர்கள் உதவியுடன் ஆதித்த கரிகாலனைக் கொல்வது முக்கியமான கட்டமாகும். அதில் உதவிய பார்ப்பனர்களை மதுராந்தக உத்தம சோழனோ அல்லது ராச ராச சோழனோ எவ்விதம் தண்டிக்க இயலும்? இதுவே அவர்கள் தண்டிக்காமல் விடப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். மேலும் கொலையாளிகள் பார்ப்பனர்கள். எனவே அவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்தினால் அரசனுக்கு ப்ரம்மஹத்தி தோஸம் உண்டாகுமென்று மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கும் நல்ல வாய்ப்பு. இந்த காரணத்தால் தான் தன்னுடைய எந்த கல்வெட்டிலும் ராச ராச சோழன் ஆதித்த கரிகாலனைப் பற்றி குறிப்பிடவில்லை.

அவன் மட்டுமன்று அவனுக்குப்பின்னர் வந்த எந்த சோழ மன்னனும் அவனைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மதுராந்தக உத்தம சோழன் கலி இருள் நீங்கும்படி ஆட்சி செலுத்தி மறைந்தவுடன் ராச ராச சோழன் மணி முடி சூடிக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. அப்பொழுது . மதுராந்தக உத்தம சோழனின் மகன் வயதுக்கு வந்தவனாய் இருந்தான். எனவே அவனை தன்னுடைய அமைச்சரவையில் ஒரு முக்கிய பொறுப்பு கொடுத்து மகிழ்வித்தான் .

இவ்வாறாக சைவப் புலி, சிவபாத சேகரன் என்றெல்லாம் புகழப்படும் ராச ராச சோழன் சோழநாட்டின் ஆட்சி அவனுக்கு உரியதாக இருந்தும் அதை தன்னுடைய சிற்றப்பனுக்கு விட்டுக் கொடுத்த தியாகச் செம்மல்; இவ்வாறு எல்லாம் புகழப்படும் ராச ராச சோழன் ஒரு அரசியல் சாணக்கியன். சுந்தரசோழனின் இரண்டாவது மகனாகப் பிறந்தும் தனக்கு எவ்விதத்திலும் உரிமை இல்லாத சோழ நாட்டு மகுடத்தை சூதால் கைப்பற்றியவன் என்பது நமது கருத்து ஆகும். இதற்கு பார்ப்பனர்கள் மிகவும் உதவியாக இருந்திருத்தல் வேண்டும். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே அவன் பார்ப்பனர்களுக்கு பல கொடைகளை வழங்கினான். அவர்கள் மனம் கோணாதபடி தன்னுடைய ஆட்சியைச் செலுத்தினான். ஆதித்த கரிகாலன் பெயரை வரலாற்று ஆவணங்களில் பதிவு பெற்றுவிடாதபடி பார்த்துக்கொண்டான்.

அவனுடைய காலத்திற்குப் பிறகு எழுதப்பட்ட திருவாலங்காட்டு செப்பேடுகள் ஆதித்த கரிகாலன் மரணத்தைப் பற்றி பொய்யான தகவல்களைக் கூறுவதற்கும் இதுவே காரணமாகும். இந்த கொலையினால் ஏற்பட்ட குற்ற உணர்வின் காரணமாகவே பிற்காலத்தில் இறைத்தொண்டில் ஈடுபட்டு தஞ்சை பெரியகோவிலைக் கட்டினான். மரபுப்படி சோழ மன்னர்கள் தில்லையில் முடிசூடிக் கொள்ளுவதே வழக்கமாகும். ஆனால் ராச ராச சோழன் முடிசூட்டு விழா அப்படி நடக்கவில்லை. தில்லை வாழ் பார்ப்பனர்களுக்கும் அவனுக்குமிடையில் சிறிது உரசல் இருந்ததாகத் தெரிகிறது. தில்லைக் கோவிலுக்கு எவ்விதகொடையும் அளிக்காத சோழ மன்னன் ராச ராச சோழனாகத்தான் இருக்கமுடியும். தில்லைக்குப் போட்டியாக தஞ்சை ராஜராஜேஸ்வரத்துப் பெரியகற்றளியை கட்டி முடிக்க நினைத்தான். அதில் ஒர் அளவிற்கு வெற்றியும் பெற்றான். ஆனால் சிவ மதத்தில் இக் கோவில் சிறப்பிடத்தைப் பெற முடியவில்லை. கட்டிடக் கலையில் பெற்ற சிறப்பை அது மத அளவில் பெறமுடியவில்லை.

1 பிற்காலசோழர் வரலாறு சதாசிவப்பண்டாரத்தார் ராமையா பதிப்பகம் சென்னை

பாகம் 1 பக்கம் 84 -85

2 கே .கே பிள்ளை

3 குடவாயில் பாலசுப்ரமணியம். வரலாறு காம் இதழ் 2425 , 26 உடையார்க்குடி கல்வெட்டுகள் ஒரு மீள் பார்வை. இணையதளம் www. varalaru .com

4 நடன காசி நாதன் கீற்று இணையதளம் www. keetru .com

5 கே.ஏ நிலகணட் சாஸ்த்ரி THE CHOLAS
6 திருவாலாங்காட்டு செப்பெடுகள்south indian inscriptions XVI.- Inscriptions of Parakesarivarman (Aditya II Karikala) who took the head of Vira-Pandya or the Pandya (King)
# குறியிடப்பட்டவை கல்வெட்டுகளில் காணப்படும் வரிகள். அவைகளில் இருக்கும் பிழைகளை திருத்தும் உரிமை நமக்கு இல்லை

https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/12679-2011-01-27-11-19-24

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

சிந்திக்க வைக்கும் பதிவு.

1. ஆனால் இவ்வளவு திட்டமிட்டு அடுத்த மன்னன் ஆதித்த கரிகாலனை கொன்ற இராஜராஜனுக்கு, கொலையாளிகளை சத்தம் இல்லாமல் கொல்ல தெரிந்திராதா?

2. ஒரு இளவரசன், பட்டத்து இளவரசனை கொல்லும் சதியை செய்து, கொலையின் பின் கொலையாளிகளை தப்பிக்க விடுகிறான் என்ற வாதத்தில் உள்ள பெரிய ஓட்டை - அவன் அவர்களின் பெரும் சொத்தை பறித்து நாடு கடத்தினான் என்பதே.

கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுத்தால் அவர்கள் உண்மையை சொல்லிவிடுவார்கள் என இராஜராஜன் பயந்தான் என்றால் - சொத்தை பறித்து அவர்களின் ஒட்டு மொத்த பரம்பரையையே நாடற்ற ஏதிலிகளாக்கும் போது அவர்கள் உண்மையை சொல்ல மாட்டார்களா?

நாடு கடத்தி எதிரி நாட்டுக்கு அனுப்பினால் அங்கே எதிரி மன்னன் தயவில் இருந்த படி உண்மையை கூற இன்னும் வாய்ப்பு அதிகம் இல்லையா?

சதிகளை செய்தவர்களை செய்விப்பவர் அழித்து விடுவதுதான் அன்றும் இன்றும் வழமை. இராஜராஜன் தான் சொல்லி, தன் அண்ணனை கொன்றவர்களை, பத்திரமாக எதிரி நாட்டிடம் கையளிக்கும் அளவுக்கு மூடனாக இருக்க முடியாது.

3. ஆதித்தனை கொன்றவர்கள் சோழ நாட்டில் உயர் பதவியில் இருந்த பிராமணர் என்பது சரியே.

அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சோழ நாட்டில் தமது சாதிய ஆதிக்கத்துக்கு ஆதித்தனை விட, மதுராந்தக-உத்தமன் உகந்தவர் என்ற நிலை வந்திருக்க வேண்டும்.

ஆகவே இதில் உத்தமனின் உதவியோடோ அல்லது இல்லாமலோ, பாண்டிய வன்மத்தோட்டோ அல்லது இல்லாமலோ அவர்கள் இதை செய்திருக்கலாம்.

உத்தமன் மேல் சந்தேகம் வரக் காரணம் அவரின் ஆட்சியில் விசாரணை நடக்கவில்லை என்பதே.

4. இராஜராஜன் - பிராமணரை எதிர்த்தால் - ஆதித்தனுக்கு நடந்தது தனக்கும் நடக்கலாம் என விளங்கி - அவர்களை நாடு கடத்தி இருக்கலாம். பிரம்மஹத்தி தோசத்துக்கு நிஜமகவே அஞ்சியும் இருக்கலாம்.

தவிரவும் கொலையாளிகள் தப்பியும் ஓடி இருக்கலாம். நாடு கடத்தல் என்பது அவர்கள் இல்லாமல்- பிரஜா உரிமை பறித்தல் போல ஒரு செயலாக நடந்திருக்கலாம்.

ஆகவே கொலையாளிகளை இராஜராஜன் கொல்லவில்லை என்பதை வைத்து அவர்தான் கொலையின் மூளை என சொல்ல முடியாது.

5. இராஜராஜனின் கல்வெட்டு எதிலும் ஆதித்தன் இல்லை - எப்போதும் அப்போதைய மன்னனை பாடுவதே, நடப்பு விபரத்தை பதிவதே வழக்கம். ஆகவே நடப்பு செய்திகளோடு சேர்த்து, மன்னரின் இறந்து போன அண்ணனை பற்றி கல்வெட்டில் எழுத வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

இராஜராஜனுக்கு இராஜேந்திரன் எழுப்பிய பள்ளிபடை கோயில் கூட இதுவா அதுவா என சரியாக தெரியவில்லை. ஆதித்த கரிகாலன் காஞ்சியில் எழுப்பிய பொன்மாளிகையின் சுவடே இல்லை. இளவயதில் இறப்போருக்கு பள்ளிபடை எழுப்புவதும் மரபில்லை என்கிறார்கள்.

யார் கண்டது ஆதித்தகரிகாலனுக்கு இராஜராஜன் ஒரு நினைவு கல்வெட்டை எழுதி, அதில் கொலையை விபரித்தும் இருக்கலாம் - அது அழிக்கப்பட்டிருக்கலாம், அழிந்துபட்டிருக்கலாம்.

முடிவாக இராஜராஜ சோழனை போற்ற பலதும் விமர்சிக்க சிலதும் உள்ளன, ஆனால் அவர் ஆதித்யகரிகாலனை கொலை செய்வித்தார் என்பது - உள்நோக்கம் கொண்ட, ஊக கல்லின் மீது கற்பனை சாந்து பூசி எழுப்பிய அபத்த கோட்டை. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காணொளி 5

பிராமணர்களும் - இராஜராஜனின் தர்ம சங்கடமும்.

சிதம்பர தீட்சிதர்களை எதிர்க்க முடியாமல், தமிழில் ஓத என்பதற்காகவே தஞ்சை கோவிலை கட்டிய இராஜராஜன்.

ஆனால்

சிருங்கேரியிலும், சேர நாட்டிலும் போராடும் பிராமண வகுப்பான நம்பூதிரிகளை கொன்ற இராஜராஜன்.

சேர நாட்டினரை கலப்பினமாக்கி, தமிழர் விரோதிகள் ஆக்கிய பிராமண சதி.

நம்பூதிரிகளின் தமிழர் மீதான இன்றும் தொடரும் வரலாற்று வன்மம்.

சுப்ரமணிய சாமி, ஆசிரியர் வீரமணி பற்றி தொகுப்பாளரின் கருத்து (ஆசிரியர் பற்றிய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை - அவர் இராஜராஜனை விமர்சிக்க வேண்டியவைக்காகவே விமர்சித்தார்).

இந்த காணொளியை பார்த்தால் எப்படி பிராமணர்களை லாவகமாக இராஜராஜன் கையாண்டார் எனப்புரியும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு  கோஷான்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லதொரு பதிவு  கோஷான்

நன்றி 🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

என்மனதில் ஆதித்த கரிகாலன் இராஜராஜன், இராஜேந்திரனை காட்டிலும் சமரசம் இல்லாமல் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பும் ஒருவராகவே தெரிகிறார்.

இவரும் இன்னுமொரு பாண்டியனுமே எதிரி மன்னன் தலை கொய்தவர்கள் என்கிறார்கள்.

அதாவது சோழத்துக்குகான பகைவரை, பரம்பரையோடு அடியோடு அழிக்கும் முனைப்பு.

பட்டத்து இளவரசனாக ஆகியபின் அவர் ஒரு இணை-சக்கரவர்த்தி (co-regent) ஆகவே செயல்பட்டாராம்.

அவர் கொல்லப்படாது அரியணை ஏறி இருந்தால் - பாண்டிய, அவர்கள் கூட்டாளிகளான சிங்கள அரச வம்சங்கள் இனி தலையெடுக்கா வண்ணம் துடைத்தழிக்கப்பட்டிருக்கலாம்.

அப்படி நடந்திருந்தால் - அதன் பின் வரலாறு எப்படி திரும்பி இருக்கும்? என்பது சுவாரசியமான கற்பனை.

ஆதித்த கரிகாலனை அவசரக்காரனாகவும் மூர்க்கனாகவும் தான் சித்திரிக்கிறார்கள்.. அதனால்தான் சமரசம் இல்லாமல் பகைவர்களை அடியோடு அழிக்கும் ஒருவர் என நினைக்க தோன்றும்.. 

மேலும், நீங்கள் இணைத்த காணெளி 2 மற்றும் காணெளி 3 அருமை..

அதே போல ஏராளன் இன்னொரு திரியில் இணைத்திருந்த ஆதித்த கரிகாலனை கொன்றது யார என்ற காணெளியும் அருமை.. 

மற்றையவற்றை இனித்தான் பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் - எது கதை? எது வரலாறு? mannar mannan speech | payitru | ponniyin selvan | #PS1

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜெனீவா உடன்படிக்கை ஜெனீவா உடன்படிக்கை' என அழைக்கப்படுவது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும். இரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுக்கின்றது.இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன.மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்புகளையும் வரையறுக்கிறது மற்றும் உயிர் இரசாயன ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் உடன்படிக்கை(1899 ஆண்டு முதல் ஹேக் மாநாடு, 1907 ஆம் ஆண்டு இரண்டாம் ஹேக் மாநாடு) படி நுண்ணுயிரிகள்,நச்சு வாயுக்களை பயன்படுத்தி போர் செய்வதை தடை செய்கிறதது. வரலாறு.தொகு இதன் வரலாறு செஞ்சிலுவை சங்கத்தின (Red Cross); வரலாற்றுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தந்தையான கென்றி டுனான்ற்(Jean Henri Dunant) 1864 ல் யுத்தத்தில் காயமடையும் போர் வீரர்கள்பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த முதலாவது உடன்படிக்கையை பிரதான ஐரேப்பிய வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. 1906 ல் இரண்டாவது உடன்படிக்கையில் முக்கிய அம்சங்கள் விரிவாக்கப் பட்டதுடன் கடலில் ஏற்படும் போர்களுக்கும் இவை பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1929 ல் மூன்றாவது உடன்படிக்கையின்போது யுத்தக் கைதிகளைக் கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை 1948 ஆகஸ்டு 23 – 30 வரையான காலப்பகுதியில்; சுவீடன் நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 ஆகஸ்ட் 12 ல் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது. இவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ நாடு கடத்தல், ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை பாலியல் தாக்குதல்களுக்குஉள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி கூட்டுத்தண்டணை வழங்குதல், பழி வாங்குதல், நியாயமின்றி சொத்துக்களை அழித்தல், இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்பு வந்த குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சிகள், விடுதலைப்போராட்டங்கள் காரணமாக மீண்டும் இவ் உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போகும் நிலமை ஏற்பட்டது. இதன் விளைவாக 1977 ஜூன் 8 ல் 1949உடன்படிக்கைகளுடன் மேலும் 2 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டது. ஆயினும் அமேரிக்கா, பிருத்தானியாபோன்ற நாடுகள் 1977 உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்து விட்டன. அங்கீகரிக்கப்பட்ட பிரேரணைகள்தொகு 1864 ல் முதலாவது உடன்படிக்கைதொகு 1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது. 2. எல்லாத்தரப்பைச் சேர்ந்த வீரர்களும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும். 3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும். 4. இந்த உடன் படிக்கையின் கீழ் பணிபுரியும் ஆட்களையும் உபகரணங்களையும் இனம்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும். 1929 ல் மூன்றாவது உடன்படிக்கைதொகு 1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவும். 2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கவும். 3. கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவது. 1949 ல் நான்காவது உடன்படிக்கைதொகு 1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது. 2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது 3. யுத்த கைதிகளை நடத்தும் விதம் பற்றியது 4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது. 1977 உடன்படிக்கையின் சாரம்தொகு சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் கரந்தடிப் போராளிகள் (கொரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது. நடைமுறை படுத்தல்தொகு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அமலாக்க அதிகாரம்தொகு ஜெனீவா உடன்படிக்கை மற்றும் பிற ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை விசாரிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா. அரிதாகவே ஜெனீவா உடன்படிக்கை தொடர்பான தனது அதிகாரத்தை செயல்படுத்துகிறது அதனால் பெரும்பாலான பிரச்சினைகள் பிராந்திய ஒப்பந்தங்கள் மூலம் அல்லது அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படும். அதிகாரங்களை பாதுகாத்தல்தொகு இந்த நடவடிக்கையினை பாதுகாத்தல் ஆயுத மோதலில் பகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது.போரின் போது அந்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இரு கட்சிகளுக்கிடையே நடுநிலையான பேச்சுவார்த்தையை நடத்துகிறது. போர் குற்றங்கள்தொகு உடன்படிக்கையின் அனைத்து மீறல்களும் சமமாக கருதப்படுவதில்லை எனினும் மிக மோசமான குற்றங்களை எதிர்த்து ஒரு சட்ட வரையறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இது கல்லறை மீறப்படுதல்(Grave breaches) என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஜெனீவா உடன்படிக்கை மாநாட்டின் மூலம் போர் குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பின்வரும் நடவடிக்கைகள் பூற்குர்ரங்கள் என வரையறுக்கப்படுகின்றன,அவை வேண்டுமென்றே கொலை,சித்திரவதை அல்லது உயிரியல் சோதனைகள் செய்தல் வேண்டுமென்றே உடல் அல்லது சுகாதார கேடுகளை விளைவித்தல் எதிரி படைகளுக்காக வேலை செய்ய நிர்பந்திதல் வேண்டுமென்றே ஒரு நியாயமான போர் குற்றம் விசாரணைக்கு மறுத்தல் நான்காம் ஜெனிவா உடன்படிக்கை பின்வருபவற்றயும் போர் குற்றமாக கருதுகிறது அவை  பிணைய கைதிகளாக பிடித்தல் தேவையில்லாத இராணுவ நடவடிக்கைகளுக்காக வேண்டுமென்றே ஒருவரின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தல் சட்டவிரோத நாடுகடத்தல் மற்றும் இடப்பெயர்த்தல் இதன் மீதான விசாரணைகளை ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழியாக நடத்தப்படும்.     மேற்கோள்கள்     https://ta.m.wikipedia.org/wiki/ஜெனீவா_உடன்படிக்கை
  • ஜெனீவா உடன்படிக்கையை புரிந்துகொள்வதற்கு அரசியல் அறிவு தேவையில்லை  கந்தையா அண்ணர், எழுத வாசிக்கத் தெரிந்தாலே போதும். 
  • இஸ்ரேல் பல பாலஸ்தீனர்களை வீடற்றவர்களாக ஆக்குகிறது, யாரும் கண்டிக்கத் துணியவில்லை…    
  • இது ஒரு மிக சிறந்த சிந்தனை   🤪 உங்கள் காலத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சனை முடித்து வைக்கப்படும் 🤣.  எப்படியென்றால்   நீங்கள் விரும்பும்படி வடக்கு கிழக்குலிருந்து தமிழர்கள் வெளியேற்றி    😂 அந்த பேச்சுவார்த்தை குழுவுக்கு நீங்கள் தான் தலைவர்     .......உங்களது இந்த இரண்டாவது இலக்க கருத்துகள் போர் குற்றம் நடந்தது என்பதை ஐயம்திரிபுற சந்தேகம் இல்லாமல் உறுதிப்படுத்தியுள்ளது  நன்றிகள் பல கோடி  கபிதன்..தயவுசெய்து யார் போர் குற்றவாளிகள் என்பதையும் சொல்லிவிடுங்கள். ...போறவழிக்கு புண்ணியங்கள் கிடைக்கும்   தமிழர்கள் தங்கள் சொந்த பூமியான வடக்கு கிழக்கு. இல் இருப்பதும் வந்தேறி ரஷ்யான் உக்ரேனில். இருப்பதும் உங்களுக்கு ஒன்றாக....அதாவது ஒத்த நிகழ்வாக தெரியுமானால்  உங்கள் அரசியல் அறிவு பூச்சியமாகும்.....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.