Jump to content

மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போனது.. #இலங்கை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன்

ரூபாவுக்கு ஏலம் போன நிகழ்வொன்று வவுனியாவில்

இடம்பெற்றுள்ளது.

வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில்

அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார

திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி

நடைபெற்றது.

அன்று கோயிலுக்கு படைக்கப்பட்ட மூன்று

மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்டது.

போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற

மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம்

எடுத்துள்ளார்.

கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு

மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும்

வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏலத்தில் கிடைக்கப்பெற்ற

பணம், ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என

ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

https://www.madawalaenews.com/2022/08/i_822.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் புண்ணாக்குகளின் வேலையாக இருக்கும்  🤣

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாம்பழங்களை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்த தமிழர் - ஏன்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 
மாம்பழம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியவற்றை 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் பெற்றுக்கொண்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டம் கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கார திருவிழா உற்சவம் நடைபெற்று வருகின்றது.

இதன்படி, இந்த திருவிழா உற்சவத்தின் விசேட பூஜைகள் நேற்றைய தினம் நடைபெற்றன.

இதன்போது, விநாயகருக்கு மாம்பழங்கள் மற்றும் மாலை அணிவித்து, விசேட பூஜைகள் நடைபெற்றன.

விநாயகருக்கு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் மற்றும் மாலைகள் இதன்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட மாம்பழங்கள் மற்றும் மாலையை ஏலத்தில் கொள்வனவு செய்வதற்காக பலரும் முன்வந்துள்ளனர்.

குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்திருந்த பலர், இந்த ஏல விற்பனையில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, குறித்த மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியன 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபா வரை ஏலத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கணேசபுரம் பகுதியில் வசிக்கும் மோகன் குமார் குடும்பம் இறுதியாக 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தை கோரியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், குறித்த மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியன 10 லட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

10 லட்சம் ரூபாவிற்கு மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியவற்றை ஏலத்தில் பெற்றுக்கொண்ட மோகன்குமார், பிபிசி தமிழிடம் பேசினார்.

மோகன் குமார்

''கணேசபுரம் - சித்திவிநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு மாம்பழங்கள் படைக்கப்பட்டன. மாம்பழங்கள் விநாயகருக்கு விசேசமானவை. அந்த மாம்பழங்களை ஏலத்தில் வைத்தார்கள். மூலஸ்தானத்தில் வைத்து, பிறகு எழுந்தருளி பிள்ளையாரிடம் வைத்தார்கள். எழுந்தருளி பிள்ளையார் கோவிலை சுற்றி வந்ததன் பிறகு, பிள்ளையாருக்கு அணிவித்த பெரிய ஆண்டாள் மாலையொன்றும், இந்த மூன்று மாம்பழத்தையும் ஏலத்தில் விட்டார்கள்.

இந்த ஏலத்தை மூன்று நான்கு பேர் போட்டியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த சமயம் கோவிலுக்கு போயிருந்தோம். ஏலம் நடந்துகொண்டிருக்கும் போதே நாங்கள் கோவிலுக்கு போனோம். பிள்ளையார் மாம்பழத்தில் பிரசித்தி பெற்றவர் தானே, ஏலத்தை கேளுங்கள் என குடும்பத்தவர்கள் சொன்னார்கள். 2 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் போய் கொண்டிருக்கு, இந்தளவிற்கு கேட்க முடியாது என்றேன். கோவிலுக்கு ஒரு நேர்த்தி வைத்திருந்தோம். அதனால், அந்த நேர்த்தியுடன் கேளுங்கள் என குடும்பத்தார் கூறினார்கள். அதன் பிறகு கேட்டோம். இறுதியாக 9 லட்சத்து 70 ஆயிரம் வரை கேட்கப்பட்டது. நாங்கள் 10 லட்சம் ரூபாவிற்கு கேட்டோம். 10 லட்சம் ரூபாவோடு ஏலம் நிறைவு பெற்றது. பிள்ளையாரின் அருள் எங்களுக்கு கிடைத்தது." என அவர் கூறினார்.

இவ்வாறு ஏலத்தில் பெற்றுக்கொண்ட ஒரு மாம்பழத்தை ஆலயத்தில் வைத்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளித்ததாக அவர் கூறுகின்றார்.

ஏனைய இரண்டு மாம்பழங்களையும் வீட்டிற்கு கொண்டு வந்து, அதனை பூஜை அறையில் வைத்து, தாமும் தமது குடும்பத்தாரும் உட்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், குறித்த மூன்று மாம்பழங்களின் விதைகளை தமது காணியில் விதையிட்டுள்ளதாகவும் மோகன்குமார் குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62642032

Link to comment
Share on other sites

20 minutes ago, ஏராளன் said:

10 லட்சம் ரூபாவோடு ஏலம் நிறைவு பெற்றது. பிள்ளையாரின் அருள் எங்களுக்கு கிடைத்தது." என அவர் கூறினார்.

பணம் இருந்தால் அருள் கிடைக்குமம்.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன எழவுடா இது..🤦🏻

32 minutes ago, Kapithan said:

புலம்பெயர் புண்ணாக்குகளின் வேலையாக இருக்கும்  🤣

மரத்தடியில  சிவனே எண்டு இருந்த வைரவருக்கு கோபுரம் கட்ட 10 மில்லியன் குடுத்ததை விட இது பரவாயில்லை தானே 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

புலம்பெயர் புண்ணாக்குகளின் வேலையாக இருக்கும்  🤣

தவறு

உங்கள் பார்வையை மாற்ற முயலுங்கள் நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

தவறு

உங்கள் பார்வையை மாற்ற முயலுங்கள் நன்றி 

எப்படி ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன எழவுடா இது..🤦🏻

1 hour ago, Kapithan said:

புலம்பெயர் புண்ணாக்குகளின் வேலையாக இருக்கும்  🤣

அந்தப் பணம்... கோவிலுக்குத் தானே, பயன் படப் போகுது.
சாமத்திய சடங்கு.. என்று தென் இலங்கையில் இருந்து... யானை, குதிரைகளை...
கொண்டு வந்து, அதற்கு செலவழிப்பதை விட இது எவ்வளவோ மேல்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

எப்படி ? 

வாங்கியவர் புலம்பெயர் தமிழர் அல்லவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

அந்தப் பணம்... கோவிலுக்குத் தானே, பயன் படப் போகுது.
சாமத்திய சடங்கு.. என்று தன் இலங்கையில் இருந்து, யானை, குதிரைகளை...
கொண்டு வந்து, அதற்கு செலவழிப்பதை விட இது எவ்வளவோ மேல்.

எது மேல்? 

முல்லைத்தீவு, 4 மாவீரர்களின் தாயார், அவர்களில் மூவர் கரும்புலிகள், ஒரே ஒரு மகள் , அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது, கடைசி மகனும் மனநலம் பாதிக்கப்பட்டவர், வீடு வீடாய் கோப்பை பீங்கான் கழுவி பிழைப்பை நடாத்திக்கொண்டிருந்தவர். 

அண்மையில் தேடுவாரற்று நிலத்தில் மலசலம் கழித்தபடியே நோய்வாய்ப்பட்டிருந்தார். இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறார். 

இறுதியில் அவரைப் பராமரிக்க முன்வந்தவர் ஓர் முன்னாள் போராளி, அவருக்கு ஒரு கால் இல்லை. மூன்று பிள்ளைகள்.  போராளிக் கணவன் இறுதி யுத்தத்தில் காணாமல் போனார். 

ஆனால் அவருக்கோ எந்த வருமானமும் இல்லை. 

நிலைமை இப்படி இருக்கையில், நான் 10 லட்சம் ரூபாவிற்கு மூன்று பழம் வாங்குவேன். அதனைச் செய்தியாக்கி விளம்பரம் செய்வேன்.  தாரை தப்பட்டை, யானையெல்லாம் பிடித்து என்னுடைய பிள்ளை திருமணத்திற்குத் தயார் என ஊரெல்லாம பறையறிவிப்பேன். 

ஆனால் நான, செய்தியை வாசிப்பவன் முகத்தைச் சுழிக்கக் கூடாது. 

44 minutes ago, விசுகு said:

வாங்கியவர் புலம்பெயர் தமிழர் அல்லவே. 

அட, நீங்கள் அப்படி வாறீங்கள? 

புலன் பெயர்ந்த தமிழராக இருக்கும். 

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தவறு

உங்கள் பார்வையை மாற்ற முயலுங்கள் நன்றி 

குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்திருந்த பலர், இந்த ஏல விற்பனையில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

👆விசுகு இதை நீங்கள் வாசிக்கவில்லையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்திருந்த பலர், இந்த ஏல விற்பனையில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

👆விசுகு இதை நீங்கள் வாசிக்கவில்லையா??

பார்த்தேன் சகோ

ஆனால் புலம்பெயர் புண்ணாக்கு தான் வாங்கியதா??

அதைத்தான் அவருக்கு சுட்டிக்காட்டினேன்

மற்றும் படி இங்கிருந்து செல்பவர்கள் செய்யும் ஆலவட்டங்களை அறியாதவன் அல்ல. அதேநேரம் ஒரு பக்க சிந்தனை அல்லது நிலை ஆபத்தானது 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இந்த நிலையில், குறித்த மூன்று மாம்பழங்களின் விதைகளை தமது காணியில் விதையிட்டுள்ளதாகவும் மோகன்குமார் குறிப்பிடுகின்றார்.

பொம்பிளை போட்டியா இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

பொம்பிளை போட்டியா இருக்குமோ?

விதைகள் முளை விடுமா ? 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

விதைகள் முளை விடுமா ? 😉

ஒரு வருடம் காத்திருக்கேலாதோ?

ரொம்ப அவசரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 
மாம்பழம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியவற்றை 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் பெற்றுக்கொண்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

எவை அந்த மூன்று மாம்பழங்கள்?🤔

நான் பார்த்த இணையத்தில் இப்படி படம் இருக்கு!

spacer.png

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எவை அந்த மூன்று மாம்பழங்கள்?🤔

நான் பார்த்த இணையத்தில் இப்படி படம் இருக்கு!

spacer.png

spacer.png

இதில் 4 பழங்கள் அல்லவா இருக்கின்றன. 3 வேண்டினால் ஒன்று இலவசமோ ? 

(படம் இணையத்தில் எடுத்ததாக இருக்கும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அங்கு சென்ற  "புலம்  பெயர்ந்தவர்கள்"  விலையை ஏற்றி  விட்டிருப்பார்கள். ஆனால் நிதி  கோவிலுக்காக என்பதால் குறை சொல்ல இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 அங்கு சென்ற  "புலம்  பெயர்ந்தவர்கள்"  விலையை ஏற்றி  விட்டிருப்பார்கள். ஆனால் நிதி  கோவிலுக்காக என்பதால் குறை சொல்ல இடமில்லை.

கோவிலுக்குக் கொடுப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லைத்தன். ஆனாலும் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதிலும் எங்களுக்காக உயிரைக் கொடுத்த, கொடுக்கத் துணிந்தவர்கள் ஒரு நேர உணவிற்காக  அல்லாடுகிறார்கள். அதிலும் , பக்கத்து வீட்டில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Kapithan

வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கும் அளவிற்கு முல்லைத்தீவில் பலர் இல்லை. மேலும் சமூர்த்தி கொடுப்பனவு உட்பட அரச உதவிகள் உண்டு. கிராம உத்தியோகத்தர் ஊடாக தனியார் வெளிநாட்டு உதவிகள்.

இவற்றை விட புலம் பெயர் தமிழர்களின் உதவிகள் என்று பல உள்ளபோது இந்த அம்மா தவறவிடப்பட்டுள்ளார் என்பதை நம்ப இயலாமல் உள்ளது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

@Kapithan

வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருக்கும் அளவிற்கு முல்லைத்தீவில் பலர் இல்லை. மேலும் சமூர்த்தி கொடுப்பனவு உட்பட அரச உதவிகள் உண்டு. கிராம உத்தியோகத்தர் ஊடாக தனியார் வெளிநாட்டு உதவிகள்.

இவற்றை விட புலம் பெயர் தமிழர்களின் உதவிகள் என்று பல உள்ளபோது இந்த அம்மா தவறவிடப்பட்டுள்ளார் என்பதை நம்ப இயலாமல் உள்ளது.

***

நிற்க, 

நான் கூறுவதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் நீங்கள் யாழ் களத்தின் ஊடாக அவருக்கு நிரந்தர வாழ்வாதாரத்திற்கும் அவரது மருத்துவ செலவுகளுக்கும், அவரை வைத்துப் பராமரிக்கும் முன்னாள் போராளியின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கும் உங்களால் ஆவன செய்வீர்களா ?

ஆகக் கூடியது

RS 1,000,000+1,000,000+1,000,000 =  Can $ 11,000.தான் 

இதை ஒரு சவாலாகவே கேட்கிறேன்?

முடிந்தால் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள். ஓகேயா ? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

***

நிற்க, 

நான் கூறுவதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் நீங்கள் யாழ் களத்தின் ஊடாக அவருக்கு நிரந்தர வாழ்வாதாரத்திற்கும் அவரது மருத்துவ செலவுகளுக்கும், அவரை வைத்துப் பராமரிக்கும் முன்னாள் போராளியின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கும் உங்களால் ஆவன செய்வீர்களா ?

ஆகக் கூடியது

RS 1,000,000+1,000,000+1,000,000 =  Can $ 11,000.தான் 

இதை ஒரு சவாலாகவே கேட்கிறேன்?

முடிந்தால் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள். ஓகேயா ? 

🤣

கோவில் விடயம் தொடர்பாக எதுவும் எழுதவில்லை. இருந்தும் மாட்டை மரத்தில் கட்டுவதில் குறியாக இருக்கிறீர்கள்.

உங்கள் சவாலை ஏற்கும் முன்னர்,

இந்த அம்மாவிற்கு 2009 இல் இருந்து ஒரு உதவியும் இன்றுவரை கிடைக்கவில்லை (சமூர்த்தி உடபட) என்பதை உறுதிப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

கோவில் விடயம் தொடர்பாக எதுவும் எழுதவில்லை. இருந்தும் மாட்டை மரத்தில் கட்டுவதில் குறியாக இருக்கிறீர்கள்.

உங்கள் சவாலை ஏற்கும் முன்னர்,

இந்த அம்மாவிற்கு 2009 இல் இருந்து ஒரு உதவியும் இன்றுவரை கிடைக்கவில்லை (சமூர்த்தி உடபட) என்பதை உறுதிப்படுத்துங்கள்.

சவாலை ஏற்றுக்கொள்ள முடியுமா முடியாதா? 

ஏற்றுக்கொண்டால் யாழ் களத்தில் பகிரங்கமாகவே எல்லாவற்றையும் இணைக்கிறேன். இல்லாவிட்டால் பூசாமப் போயிடணும், ச்சரியா ? 

(மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டியது நீங்கள் என்பதை மறக்க வேண்டாம் 😉)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

சவாலை ஏற்றுக்கொள்ள முடியுமா முடியாதா? 

ஏற்றுக்கொண்டால் யாழ் களத்தில் பகிரங்கமாகவே எல்லாவற்றையும் இணைக்கிறேன். இல்லாவிட்டால் பூசாமப் போயிடணும், ச்சரியா ? 

(மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டியது நீங்கள் என்பதை மறக்க வேண்டாம் 😉)

சைவ சமயம் தொடர்பான திரிகளில் வந்து மாட்டை கட்ட முயல்வது தாங்கள் தான். 

தேவையற்ற வீண் விவாதங்கள் வேண்டாம்.

நான் கேட்டதை முதலில் நிரூபியுங்கள்..

நீங்கள் இணைத்த தகவலை / செய்தியை நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும்.

நீங்கள் பம்முவதிலிருந்தே தெரிகிறது நீங்கள் எழுதிய விடயம் பொய் என்று.

அதற்குள் சவால் வேறு…..😂

தயவு செய்து பொய் பரப்புவதை நிறுத்துங்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.