Jump to content

ட்விட்டருக்கு எதிராக முன்னாள் அதிகாரி புகார்- ஈலோன் மஸ்க் மகிழ்வது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ட்விட்டருக்கு எதிராக முன்னாள் அதிகாரி புகார்- ஈலோன் மஸ்க் மகிழ்வது ஏன்?

29 நிமிடங்களுக்கு முன்னர்
 

ட்விட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சிலவற்றை முன்வைத்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் அதன் பயனர்களை தவறாக வழிநடத்தியதாகவும் ட்விட்டர் சமூக வலைதள பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ட்விட்டர் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்து அந்நிறுவனம் குறைவாக மதிப்பிட்டுள்ளதாக, முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான பீட்டர் ஸட்கோ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உலகின் பெரும்பணக்காரர்களுள் ஒருவரான ஈலோன் மஸ்க் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, ட்விட்டர் நிறுவனத்திற்கும் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே நடைபெறும் சட்டப் போராட்டத்தை பாதிக்கச் செய்வதாக பீட்டர் ஸட்கோவின் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அவருடைய குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் முரணானவை என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

செயல்திறனற்ற தலைமை மற்றும் மோசமான பணித்திறனுக்காக கடந்த ஜனவரி மாதம் ட்விட்டரில் இருந்து பீட்டர் ஸட்கோ நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸட்கோ முன்வைத்த குற்றச்சாட்டுகள்

பீட்டர் ஸட்கோவின் இந்த பகிரங்க குற்றச்சாட்டுகளை சிஎன்என் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட் ஊடகங்களால் முதலில் வெளிக்கொண்டு வரப்பட்டன. கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற ட்விட்டர் தவறிவிட்டதாகவும் "ஈலோன் மஸ்க்கிடம் ட்விட்டர் பாட்-கள் (மென்பொருள் மூலம் இயக்கப்படும் பாட் (Bot), தானாக ட்விட்டர் பதிவுகளை வெளியிடும்) குறித்து பொய் சொல்லியதாகவும்" அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் இதுகுறித்த தனது புகாரை பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்தில் ஜூலை மாதத்தில் பதிவு செய்தார். சிபிஎஸ் ஊடகம் வாயிலாக பகிரப்பட்ட அப்புகாரின் திருத்தப்பட்ட நகலை பிபிசி கண்டது.

அதில், உணர்வுபூர்வமான சில தகவல்களை ட்விட்டர் நிறுவனம் கையாண்ட விதம் குறித்து விமர்சித்துள்ள ஸட்கோ, அவற்றில் சில விவகாரங்களை அமெரிக்க நெறிமுறை அமைப்புகளிடம் சரியாக பதிவு செய்ய ட்விட்டர் நிறுவனம் தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபலமான தலைவர்களான பாரக் ஒபாமா, ஜோ பைடன், கான்யே வெஸ்ட் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் கூட முடக்கப்பட்டன.

ட்விட்டர் நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஸட்கோ குற்றம்சாட்டியுள்ளார். "பாதுகாப்பு தொடர்பான சம்பவம் வாரத்திற்கு ஒன்று நிகழ்ந்தாலே அது குறித்து ட்விட்டர் நெறிமுறை அமைப்பிடம் புகார் தெரிவிப்பதற்கு போதுமானது" என அவர் தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிறுவனத்திற்கு உள்ளிருந்து தீங்கிழைக்கும் நோக்கத்துடன் ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் "கிட்டத்தட்ட கண்காணிக்கப்படாமலேயே" விடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனம் தரவுகளை கையாள்வது குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ள அவர், உணர்வுப்பூர்வமான அமைப்புகள் மற்றும் பயனர்களின் தரவுகளை ட்விட்டர் பணியாளர்கள் பெரும்பாலானோர் கையாளும் வகையில் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மோசமான நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கான செயல்படத்தக்க திட்டம் எதுவும் ட்விட்டரிடம் இல்லை என வருத்தம் தெரிவித்துள்ள அவர், கடந்த காலங்களில் தங்கள் கணக்குகளை ரத்து செய்த பயனர்களின் தரவுகளை முறையாக நீக்குவதில் ட்விட்டர் நிறுவனம் தவறி விட்டதாக கூறியுள்ளார்.

போலி மற்றும் ஸ்பேம் கணக்குகளை "வேண்டுமென்றே புறக்கணிப்பது வழக்கமாக இருந்தது" என தெரிவித்துள்ள அவர், ட்விட்டர் தளத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக அறிய ட்விட்டர் செயல் அலுவலர்களுக்கு போதிய ஊக்கம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும், இக்குற்றாச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் வகையில் "சிறு ஆதாரங்களையே ஸட்கோ வழங்கியுள்ளதாக" தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக, ஈலோன் மஸ்க்கின் வழக்குரைஞர்கள் உடனடியாக கருத்து தெரிவித்துள்ளனர். ஈலோன் மஸ்க்கை ட்விட்டர் ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவருடைய சட்டக்குழு, ட்விட்டரில் தினசரி செயல்படும் 229 மில்லியன் பயனர்களில் எத்தனை பேர் மனிதர்கள் என்பதை நிரூபிக்க ட்விட்டரிடம் எந்த வழியும் இல்லை என வாதிடுகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பான தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஈலோன் மஸ்க், "கொண்டாட தொடங்குங்கள்" என தொனிக்கும் விதமாக "give a little whistle" என்ற வாசகம் அடங்கிய படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஈலோன் மஸ்க்கின் ஒப்பந்தம் (தற்போது ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது) பொதுவெளியில் வைக்கப்படுவதற்கு முன்பாகவே, ஸட்கோ ட்விட்டர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை வைத்ததாக சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்துள்ள ஸட்கோவின் வழக்குரைஞர், ஈலோன் மஸ்க்கை அவர் தொடர்புகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

ஈலோன் மஸ்க்கின் வழக்குரைஞர்களுள் ஒருவரான அலெக்ஸ் ஸ்பைரோ, ஸட்கோ ட்விட்டருக்கு எதிரான ஒரு சாத்தியமான சாட்சியாக இருக்க வேண்டும் என கூறினார்.

 

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,REUTERS

கணினி பாதுகாப்பு வட்டாரத்தில் பெரிதும் அறியப்படுபவரான பீட்டர் ஸட்கோ, ஒரு முன்னாள் ஹேக்கரும் கூட.

'மட்ஜ்' என அழைக்கப்படும் இவர், கணினி பாதுகாப்பு தொடர்பான 'லாஃப்ட்' L0pht என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1998-ல் சைபர் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற செனெட் விசாரணைகளில் பங்கேற்றுள்ளார்.

கூகுள் நிறுவனத்திலும் அமெரிக்க அரசால் நடத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முகமையான DARPA-ல் மூத்த பொறுப்புகளை வகித்துள்ளார்.

ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "ட்விட்டர் குறித்தும் எங்கள் தனியுரிமை மற்றும் தரவு-பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் இப்போது நாம் பார்ப்பவை தவறானவை. முரண்பாடானவை, முக்கியத்துவம் அற்றவை.

"ஸட்கோவின் குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றை முன்வைத்த சந்தர்ப்பவாத நேரம் ஆகியவை கவனத்தை ஈர்க்கவும், ட்விட்டர், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

"ட்விட்டரில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு நீண்ட காலமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

பீட்டர் ஸட்கோவுக்கு இவ்விவகாரத்தில் உதவிபுரியும் அமைப்பை சேர்ந்த ஜான் டை, ஸட்கோவை ஒரு "நாயகர்" என தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-62657131

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.