Jump to content

இனப்படுகொலையாளிகளை ஆதரிக்கும் சீனத்தூவரின் கருத்தை கண்டிக்கின்றோம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.நியூட்டன்)

இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமையை  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றோம் என அறிக்கை வெளியிட்டுள்ளது அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர், இலங்கையில் தமிழ் சமூகம் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமையை  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தத்தின் போது தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை சீனா நன்கு அறிந்திருக்கிறது.

ஐ.நா சபையின் அறிக்கையின் பிரகாரம், இனவழிப்பு யுத்தத்தின் இறுதி ஆறு மாத காலப் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும் சிறிலங்கா ஆயுத படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். 

29 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார அலுவலகத்தின்படி, 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் தமிழர் பகுதிகளில் ஏராளமான துன்பங்களை தொடர்ச்சியாக எதிர் கொண்டு வருகின்றனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இலட்சக்கணக்கான சிறிலங்கா படையினர் எமது தாயக பூமியை ஆக்கிரமித்து நிற்கின்றனர்.

யுத்தத்தின் பின்னர் எமது பாரம்பரிய தாயகத்தில் எம்மை சிறுபான்மை ஆக்குவதற்காக சிங்கள பௌத்த மக்களை குடியேற்றுவதற்கு எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துவதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதியைப் பெறுவதே எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் நாம் கூட்டாக இணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்தும் கடிதத்தை தமிழர்கள் ஐக்கியமாக அனுப்பிய அதே நாளில், சீனத் தூதுவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக ருவீட் செய்துள்ளார்.

ஐநா மனித உரிமை பேரவையில் இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா, ஜேர்மனி உட்பட பல நாடுகள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் நிலையில் சீனத் தூதரகத்தின் குறித்த கருத்தானது இலங்கையில் தமது ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்கு இலங்கை அரசை வசை பாடுவதாக அமைகிறது.  தமிழ் மக்கள் விரோத மனப்பான்மை கொண்டுள்ள சீனாவின் ஆதிக்கம் வடக்கு கிழக்கில்  அதிகரித்து வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்ட தமிழராகிய நாம் சீன தூதுவரின் பொறுப்பற்ற இந்த ருவீட் குறித்து நாங்கள் மிகவும் வேதனையடைவதுடன் இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இச்செய்கையானது "மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்தது போல்" உள்ளது.     

ஆகவே இலங்கைக்கான சீன தூதரகம் தாங்கள் டுவிட்டரில் வெளியிட்ட உள்ளடக்கத்தை திரும்பப் பெறுமாறு சீனத் தூதரை நாங்கள் வலியுறுத்துவதுடன், மேலும் வரவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் எங்கள் அழைப்பை ஆதரிக்குமாறும்  அவரை வலியுறுத்துகிறோம்.

சீனத் தூதுவர் தமிழ்ப் பகுதிகளுக்குச் சென்று நேர்மையுடன் உதவிகளை வழங்கினார். என கேள்வி எழுப்புகின்றோம். நல்லூர் முருகன் கோவிலுக்கு நீங்கள் தமிழர் பாரம்பரிய உடையுடுத்தி வருகை தந்தது தமிழர்களை ஏமாற்றும் செயலா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

நீங்கள் ஒரு பொறுப்புள்ள நாடாகச் செயற்படுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் எங்கள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க வேண்டாம் என்றும் எங்கள் துன்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மீண்டும் ஒருமுறை, யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியமாக நாங்கள் சீனத் தூதரின் ருவீட்டை மீளப்பெறுமாறும் பெறுமாறும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்துவத்துக்கான எங்களின் அழைப்பை ஆதரிக்குமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தமிழர்களைக் கொன்றவர்கள் மற்றும் தமிழ்ப் பெண்களை பலாத்காரம் செய்தவர்களையும் ஆதரிக்கக் கூடாது என வலியுறுத்துவதோடு ஐ.நா வில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் நேச நாடுகளை திசை திருப்ப முயலக் கூடாது எனவும் வலியுறுத்துகிறோம் என்றுள்ளது.

இனப்படுகொலையாளிகளை ஆதரிக்கும் சீனத்தூவரின் கருத்தை கண்டிக்கின்றோம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா அழிய வேண்டும் 😡

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

சீனா அழிய வேண்டும் 😡

வாய்ப்பில்லை ஐயா வாய்ப்பில்லை. முந்தி ஒன்று இப்போ இரண்டு பெறலாம். ஆனபடியால் ...

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சீனா அழிய வேண்டும் 😡

எதுக்கு இந்த ஆவேசம் விசகர்?

கீரைக்கடைக்கும் எதிர்கடை வேணும்.

இந்தியா செய்த நேரடி கொலைகளை, அழிவுகளை சீனா செய்யவில்லையே.

சீனா இருந்தால் தான், இந்தியாவுக்கு நம்ம மேல அக்கறை வரும். இல்லாவிடில், நாம, அவர்களுக்கு, தீண்டப்படாத இராவணண் வம்சம்.

இராமர் வம்சம், என்ன துரோகம் செய்தாலும், கண்டு கொள்ள மாட்டார்கள்.....

சீனாக்காரன் கெடுத்துக் போட்டான்.... 🤪

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த tweet என்ன சொல்கிறது ? 

2 hours ago, விசுகு said:

சீனா அழிய வேண்டும் 😡

விசுகர் எங்கேயோ மாட்டுப்பட்டுவிட்டார...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்டமையை  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றோம் என அறிக்கை வெளியிட்டுள்ளது அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தமிழ் அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை பல்கலை மாணவர்கள் செய்ய வேண்டிய கெட்ட நேரம் தமிழருக்கு தமிழ் அரசியல்வாதிகள் பெட்டி வாங்கி கொண்டு வாய்க்கு பூட்டு போட்டு கொண்டு உள்ளார்கள் . சைக்கிள் கூட தாங்கள் கோழைகள் என்று மவுனமாக இருக்கினம் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன தூதரகத்துக்கு  முன்னால் யாரும் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்ய மாட்டார்களா? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த tweet ஐ யாராவது கண்டீர்களா ? 

இங்கே இணைத்துவிடுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு, தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு வசனம் சீனா தெரிவிக்க வேண்டும், அல்லது சீனத் தூதுவர் தனது ருவீட்டை மீளப்பெற வேண்டும், சீனத் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் என்ன, கொடியையே கிழித்து எரித்துப்போடுவார்கள்.  எங்கே அந்த  ஞானசார தேரரை கூப்பிடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை மாணவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள், இதுவரைகாலமும் இந்தியா  தனது படைகளை அனுப்பி தமிழர்களை கொண்றொழித்தற்காகவோ அல்லது தொடர்ச்சியான் ஐ நா விலும் ஐ ம் எப் உதவி வழங்களில் மனித உரிமையினை அடிப்படையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிகளிலும்  ஓடோடி வந்து இலங்கைக்கு உதவி செய்து தமிழ் மக்கள் இனவழிப்பை நியாப்படுத்துகின்ற இந்தியாவினை கண்டிக்காமல், சீன தூதுவரின் சாதாரண கீச்சகப்பதிவிற்கு கண்டனம் தெரிவித்திருப்பதன் மூலம் தமிழிளம் கல்விசார் சமூகம் சீனாவிற்கு தமது சமிங்ஞ்சையினை காட்டியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். 

இதனை தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் பாணியில் கூறுவதனால் தமிழ் சமூகம் நுண் அரசியல் செய்கிறது😄.

இந்தியாவினை கைவிட்டு சீனாவின்  பக்கம் தமிழ் சமூகம் தனது பார்வையினை திருப்பியுள்ளதின் மூலம் தமிழ் சமூகம் சர்வதேச அரசியலில் காலடி எடுத்து வைக்கிறது. 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அந்த tweet ஐ யாராவது கண்டீர்களா ? 

இங்கே இணைத்துவிடுங்கள் 

எப்போதும் இலங்கை அரசு தமிழருக்கு எதிராக இழைத்த அனிஞாயங்களை கண்டிக்கும் நாடுகளை சீனா எச்சரிப்பது வழமை, இது ஒன்றும் புதிதில்லையே. ஒருவேளை அப்படி ஒன்று சீனா வெளியிட்டிராது என்று நம்புகிறீர்களா? இல்லை, சீனாவின் அதி விசுவாசிகள் இப்போ அதிகம், அதனால கேக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

அப்படி அல்ல சாத்,

என்ன ஏது என்று தெடியாமலேயே திட்ட முடியாதல்லவா ? அதனாலதான் கேட்டேன். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, vasee said:

இதனை தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் பாணியில் கூறுவதனால் தமிழ் சமூகம் நுண் அரசியல் செய்கிறது😄.

நீங்கள் எழுதியதை இரசித்தேன் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

அப்படி அல்ல சாத்,

என்ன ஏது என்று தெடியாமலேயே திட்ட முடியாதல்லவா ? அதனாலதான் கேட்டேன். 

🤣

அது ஏதென்றால், என்னவென்றால்; ஏன் இப்படி தமிழரை கொன்றழித்தீர்கள்? தெருவில் அலைய விட்டீர்கள்? அவர்களின் இழப்பை எப்படி ஈடு செய்வீர்கள்? அவர்களின் ஆறாத புண்களுக்கு கட்டுப்போட்டீர்களா? மருந்திட்டீர்களா என்று சில நாடுகள் கேட்க்கின்றன இலங்கையை. அதுக்கு சீனாவுக்கு ஏன் கோபம் வரவேணும்? இலங்கையின் இறையாண்மையில் மற்றவர்கள் தலையிடக்கூடாதாம். அப்படியென்றால் எங்கள் இறையாண்மையில் சிங்களவன் எப்படி தலையிடலாம்? அதை எப்படி சீனா நிஞாயப்படுத்தலாம்? இது தான் காரணம். இப்போ சொல்லுங்கள்! நீங்கள் எப்படி சீனாவை திட்டப்போகிறீர்கள்? கேட்க ஆவலாயிருக்கிறேன்!        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2022 at 03:14, vasee said:

யாழ் பல்கலை மாணவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள், இதுவரைகாலமும் இந்தியா  தனது படைகளை அனுப்பி தமிழர்களை கொண்றொழித்தற்காகவோ அல்லது தொடர்ச்சியான் ஐ நா விலும் ஐ ம் எப் உதவி வழங்களில் மனித உரிமையினை அடிப்படையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிகளிலும்  ஓடோடி வந்து இலங்கைக்கு உதவி செய்து தமிழ் மக்கள் இனவழிப்பை நியாப்படுத்துகின்ற இந்தியாவினை கண்டிக்காமல், சீன தூதுவரின் சாதாரண கீச்சகப்பதிவிற்கு கண்டனம் தெரிவித்திருப்பதன் மூலம் தமிழிளம் கல்விசார் சமூகம் சீனாவிற்கு தமது சமிங்ஞ்சையினை காட்டியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். 

இதனை தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் பாணியில் கூறுவதனால் தமிழ் சமூகம் நுண் அரசியல் செய்கிறது😄.

இந்தியாவினை கைவிட்டு சீனாவின்  பக்கம் தமிழ் சமூகம் தனது பார்வையினை திருப்பியுள்ளதின் மூலம் தமிழ் சமூகம் சர்வதேச அரசியலில் காலடி எடுத்து வைக்கிறது.

சீனா விடயத்தில் அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டிய கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2022 at 22:09, satan said:

அது ஏதென்றால், என்னவென்றால்; ஏன் இப்படி தமிழரை கொன்றழித்தீர்கள்? தெருவில் அலைய விட்டீர்கள்? அவர்களின் இழப்பை எப்படி ஈடு செய்வீர்கள்? அவர்களின் ஆறாத புண்களுக்கு கட்டுப்போட்டீர்களா? மருந்திட்டீர்களா என்று சில நாடுகள் கேட்க்கின்றன இலங்கையை. அதுக்கு சீனாவுக்கு ஏன் கோபம் வரவேணும்? இலங்கையின் இறையாண்மையில் மற்றவர்கள் தலையிடக்கூடாதாம். அப்படியென்றால் எங்கள் இறையாண்மையில் சிங்களவன் எப்படி தலையிடலாம்? அதை எப்படி சீனா நிஞாயப்படுத்தலாம்? இது தான் காரணம். இப்போ சொல்லுங்கள்! நீங்கள் எப்படி சீனாவை திட்டப்போகிறீர்கள்? கேட்க ஆவலாயிருக்கிறேன்!        

இதுக்குத்தன் கிழக்கு பல்கலையில் 4.3 மில்லியன் ரூபா கொட்டியிருக்கிறான்..

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.