Jump to content

தாய்­லாந்தின் யூரியூப் பிர­பலத்திற்கு எதிராக முறைப்­பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாய்­லாந்தின் யூரியூப் பிர­பலத்திற்கு எதிராக முறைப்­பாடு

By VISHNU

31 AUG, 2022 | 03:39 PM
image

 

தாய்­லாந்தின் யூரியூப் பிர­ப­ல­மான யுவ­தி­யொ­ருவர் சுமார் 6,000 பேரிடம் சுமார் 200 கோடி தாய் பாத் (சுமார் 55 மில்­லியன் டொலர்)  பணத்தை மோசடி செய்­து­விட்டு வெளி­நாட்­டுக்கு தப்­பி­யோ­டி­யுள்ளார் என தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. 

நேதாமொன் கோங்சக் எனும் இந்த யுவதி 'நட்டி' எனும் பெயரில் பிர­ப­ல­மா­னவர். யூரி­யூப்பில் அவரை 8 லட்சம் ரசி­கர்கள் பின்­தொ­டர்­கின்­றனர். இன்ஸ்­டா­கி­ராமில் 300,000 இற்கு அதி­க­மானோர் பின்­தொ­டர்­கின்­றனர்.

தன்னை பாடகி, நட­னக்­ கலை­ஞ­ரா­கவும் கோங்சக் கூறிக்­கொள்­வ­துடன் நிறு­வ­ன­மொன்றின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி எனவும் கோங்சக் வெளி­பப்­டுத்திக் கொண்டார். 

வெற்­றி­க­ர­மான வெளி­நாட்டு நாணய வர்த்­த­ராக தன்னை காட்­டிக்­கொண்ட அவர், தன்­னிடம் பணத்தை முத­லீடு செய்­ப­வர்­க­ளுக்கு பெரு­ம­ளவு லாபம் வழங்­கு­வ­தாக கூறி­யி­ருந்தார். 

தன்­னிடம் பணத்தை 3 மாத காலத்­துக்கு வைப்­பி­லி­டு­ப­வர்­க­ளுக்கு 25 சத­வீதம் லாபம் வழங்­கப்­படும் என அவர் உறு­தி­ய­ளித்தார். 6 மாத கால வைப்­பு­க­ளுக்கு 30 சத­வீ­தமும் 12 மாத காலத்­துக்கு 35 சத­வீத லாபம் வழங்­கப்­படும் என கோங்சக் கூறி­னராம்.

6,000 இற்கும் அதி­க­மா­னோ­ரிடம் நேதாமொன் கோங்சக் பணத்தைப் பெற்று மோசடி செய்­துள்ளார் என பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் சட்­டத்­த­ரணி பைசால் ருவான்­கிரிட் தெரி­வித்­துள்ளார். 

சுமார் 200 கோடி தாய் பாத் (சுமார் 2,000 கோடி இலங்கை ரூபா, 437 கோடி இந்­திய ரூபா,  சுமார் 55 மில்­லியன் டொலர்) பணத்தை அவர் மோசடி செய்­துள்ளார் என முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

குறு­கிய காலத்தில் பெருந்­தொகை பணத்தை சம்­பா­திக்­கலாம் என மக்­களை நம்பச் செய்­வ­தற்கு தனது புகழை கோங்சக் பயன்­ப­டுத்திக் கொண்­டுள்ளார் எனவும் ருவான்­கிரிட் கூறி­யுள்ளார். 

 நேதாமொன் கோங்சக், தமக்கு உறு­தி­ய­ளித்­த­வாறு பணம் வழங்­க­வில்லை என கடந்த ஏப்ரல் மாதத்­தி­லி­ருந்து பலர் முறைப்­பாடு செய்ய ஆரம்­பித்­தனர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஒருவர் மாத்­திரம் 18 மில்­லியன் தாய் பாத் பணத்தை நுட்­டி­யிடம் கொடுத்­துள்ளார் என ருவான்­கிரிட் கூறியுள்ளார். 

பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் 30 பேர் தாய்­லாந்தின் பொரு­ளா­தார குற்ற விசா­ரணைப் பிரிவில் கடந்த 24 ஆம் திகதி முறைப்­பாடு செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த மே 25 ஆம்  திகதி இன்ஸ்­டா­கி­ராமில் வெளி­யிட்ட பதிவில், தான் வர்த்­த­கத்தில் தவ­றொன்றைச் செய்­ததால் அனைத்து பணத்­தையும் இழந்­து­விட்­ட­தாக கோங்சக் கூறினார். எனினும், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பணம் திருப்பிச் செலுத்­தப்­படும் என அவர் உறு­தி­ய­ளித்தார். 

கடந்த ஜூன் 24 ஆம் திகதி அவர் விடுத்த அறி­விப்பில், தனக்கு எதி­ராக இரு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும், ஆனால், தான் சிறை­யி­ல­டைக்­கப்­பட்டால் தன்னால் பணத்தை செலுத்த முடி­யாமல் போய்­விடும் எனவும் கூறினார்.

இந்­நி­லையில், நேதாமொன் கோங்சக் வெளி­நாட்­டுக்கு தப்பிச் சென்­று­விட்டார் என உள்ளூர் ஊடக­மொன்று தெரி­வித்­துள்­ளது. 

அவரை கைது செய்­வ­தற்கு உதவும் தக­வல்­களை வழங்­கு­ப­வர்­க­ளுக்கு 10 லட்சம் பாத் வெகு­மதி வழங்­கு­வ­தாக பாதிக்கப்பட்ட ஒருவர்களில் ஒருவரான நோக் என்பவர் தெரிவித்துள்ளார் எனவும் மேற்படி ஊடகம் தெரிவித்துள்ளது.

பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து இந்த வெகுமதி தொகையை 20 மில்லியன் தாய் பாத் ஆக அதிகரித்துள்ளனர் என உள்ளூர் தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/134734

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

 

image

இந்தப் பிள்ளையின் முகத்தில்… பால் வடியுது. 😛
இது…. 200 மில்லியன் டொலரை மோசடி செய்தது? என்பதை.. நம்ப கஸ்ரமாக இருக்கு. 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தில் மட்டுமா.......

உதட்டிலும்கூட.. 😉

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா 12 மாத காலத்­துக்கு 35 சத­வீத லாபம் வழங்­கப்­படும் என்று சொல்லி ஏமாற்றியுள்ளா. இந்தியாவில் கோவை என்ற இடத்தில்  12 மதத்தில் 240 வீதம் லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்ல அதை நம்பி ஏமாந்து  இருக்கிறார்களே 🙁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை பாலலுக்கு பெரும் தட்டுப்பாடு.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

முகத்தில் மட்டுமா.......

உதட்டிலும்கூட.. 😉

அட… ஆமா….
உதட்டில,  வடியிற பாலை… இப்பதான் கவனிச்சேன். 😂

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.