Jump to content

காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்

By Rajeeban

01 Sep, 2022 | 12:40 PM
image

சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30 செவ்வாயன்றுஇலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாயகத்து தாய்மார்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.

அந்தவகையில் கனடாவில் கனடா ஒன்ராறியோ மாகாணசபை முன்றிலில் ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றிருந்தது.

ஒன்ராறியோ மாகாணசபையில் தமிழினப் படுகொலை கற்கைநெறி தீர்மானம் நிறைவேற்றலுக்கு முழுமையாக பணியாற்றியவர்களான மாகாணமன்ற உறுப்பினரும் கலாச்சார அமைச்சின் செயலருமான மதிப்புக்குரிய லோகன் கணபதி, மாகாண கல்வி அமைச்சர் மதிப்புக்குரிய Stephen Lecce ஆகியோர் கலந்து கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதிக்கான குரலை எழுப்பியிருந்தனர்.canada_4.jpg
நூற்றுக்கும் மேற்பட்ட வேற்று இனத்தவர்கள் இந்த ஒளிப்படகாட்சிப்படுத்தலை பார்த்தும், கேட்டும் அறிந்து கொண்டதுடன், தமது சமூக வலைத்தளங்களில் இதனை நேரடியாக பகிர்ந்து கொண்டமை நீதிக்கான போராட்டத்துக்கு நம்பிக்கையினை தந்திருந்தது என நிகழ்வு ஒருங்கிணைப்பாளான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி திரு.மகா ஜெயம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.canada_5.jpg
தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்பதோடு, பொறுப்புக்கூற வைப்பத்தற்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.canada_6.jpg
நிகழ்வு நாளில் கொட்டிய கடுமை மழையானது, நீதிகோரி 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக போராடும் தாய்மார்கள், உறவுகளின் கண்ணீரை நினைவுபடுத்தியதாக அமைந்ததென உணர்வுகளை பகிர்த்தனர்
canada_7.jpg


 

https://www.virakesari.lk/article/134821

 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பலரது கவனத்தையும்… ஈர்க்கக் கூடிய, வித்தியாசமான  காட்சிப்படுத்தல்.

Link to comment
Share on other sites

தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் இத்தகைய போராட்டங்கள் விரிவு படுத்தப்பட வேண்டும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம வூட்டுச் சந்தியிலை நடந்த்திருக்கு....நமக்குத் தெரியாமப் போச்சே...அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

Edited by alvayan
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டது By SETHU 01 FEB, 2023 | 02:55 PM அவுஸ்திரேலியாவில் 2 வாரங்களுக்கு மேல் காணாமல் போயிருந்த, ஆபத்தான கதிரியக்கப் பொருள் கொண்ட சிறிய கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். 8 மில்லிமீற்றர் நீளமும் 6 மில்லிமீற்றர் அகலமும் கொண்ட இச்சிறிய கொள்கலனில், சீசியம்-137 எனும் கதிரியக்கப் பொருள் இருந்ததாக மேற்கு அவுஸ்திரேலிய  சுகாதாரத் திணைக்களம் தெரிவித்திருந்தது.  சுரங்க நடவடிக்கைகளுக்காக இது பயன்படுத்துபட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. மேற்படி கொள்கலன் கதிரியக்கத்தினால் எரிகாயங்கள் அல்லது நோய்கள் ஏற்படலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்திலுள்ள சுரங்கப் பணிக்காக 1400 கிலோமீற்றர் தூரம் கொண்ட  பயணத்தின்போது கடந்த 12 -16 ஆம் திகதிகளுக்கு இடையில் இக்கொள்கலன் காணாமல் போயுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.  இக்கொள்கலனானது, லொறி ஒன்றிலிருந்து விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில் இக்கொள்கலன்  வீதியோரமொன்றிலிருந்து 2 மீற்றர் தூரத்தில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர். இத்தேடுதல் நடவடிக்கைக்காக கதிரியக்கத்தை கண்டறியும் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. https://www.virakesari.lk/article/147177
  • நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை முழு விவரம் - நேரலை பட மூலாதாரம்,ANI 1 பிப்ரவரி 2023, 04:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.   புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையை ஏற்றுக் கொண்டவர்கள், அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு பெறவும் முடிவும். எதிர்பார்க்கப்பட்டபடியே, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்கான நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய முன்னுரிமை அடிப்படையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபேட்கள், நீர்வழி விமான தடங்கள் புத்துயிரூட்டப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் உருவாக்குவோம் என்ற தொலைநோக்கு அடிப்படையில் 3 நகரங்களில் சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் சால் மையம் உருவாக்கப்படும். ரயில்வேக்கு மூலதன செலவாக 2.40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நகரங்கள், பேரூராட்சிகளில் கழிவறைத் தொட்டி, சாக்கடைகளை இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யும் நிலை உருவாக்கப்படும். மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும். மத்திய அரசின் மூலதன முதலீடு 33 சதவீதம் உயர்ந்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது நாட்டின் ஜி.டி.பி.யில் 3.3. சதவீதமாகும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் அதிகரித்து ரூ.79,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 740 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஊராட்சிகள், வார்டுகள் வாரியாக நூலகம் உருவாக்க மாநில அரசுகளுக்கு ஊக்கம் தரப்படும். அந்த நூலகங்களை தேசிய டிஜிட்டல் நூலகத்துடன் இணைக்க தேவையான கட்டமைப்புகள் செய்யப்படும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நாடு முழுவதும் தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும். அனைத்து தரப்பினர், மொழிகள், துறைகள், தொழில்நுட்ப சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் அது இருக்கும். 2014-க்கு பிறகு தொடங்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்படும். சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு; மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து புதிய திட்டம் - இளைஞர்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும், வேளாண் கடன் வழங்குவதற்கான இலக்கு 20 லட்சம் கோடியாக அதிகரிப்பு வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும்.   "உச்சநிலையில் பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை" - இந்திய அரசின் பட்ஜெட் சவால்கள்31 ஜனவரி 2023 கடந்த பட்ஜெட்டில் அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றியதா?29 ஜனவரி 2023 அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு: நேசக்கரம் நீட்டும் அபுதாபி31 ஜனவரி 2023 மக்களவையில் லேப்டாப் உதவியுடன் பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையாக முடித்ததும், பட்ஜெட் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பட்ஜெட் மொபைல் ஆப்பை (Budget Mobile app) செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் பட்ஜெட் உரையை முழுமையாக பெறலாம்.     பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 4-4.5 சதவிகிதம் இருந்த நிலையில், தற்போது 6.4 சதவிகிதமாக உள்ளது. அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அதாவது ஏற்றுமதியில் இருந்து அரசாங்கம் ஈட்டும் வருவாய்க்கும் இறக்குமதியில் செலவழிக்கும் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம், மற்றொரு சவாலாக உள்ளது. பணப் பற்றாக்குறையை சிறப்பாக சமாளிக்க பட்ஜெட் அறிவிப்புகளைத் தாண்டி, தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c0x9p4p8294o
  • தமிழ்த்தேசியம், தமிழரசு இந்த பெயர்களை இழக்கவோ அல்லது யாருக்கும் விட்டுகொடுக்கவோ விரும்பாமல் அதை வைத்து மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்கிறார்கள். அதனாற்தான் சுமந்திரன் விக்கினேஸ்வரனுக்கு சவால் விட்டார். "முடிந்தால் த. தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலில் வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டட்டும்" என்றார். நின்றார் வென்றார். தற்போது கூட பங்காளிக்கட்சிகளை விரட்டிவிட்டு போட்ட தடை த.தே. கூட்டமைப்பின் தேர்தல் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்பதே. அதாவது தேசியப்பெயர், சின்னம் எல்லாம் தாங்கள் பாவித்து மக்களை முட்டாளாக்கி அதன்மூலம் வெற்றி பெற்று அதை இல்லாமல் அழித்து பேரினவாத கட்சியின் பிரதிநிதிகளை களமிறக்கி இறுதியில் பேரினவாதத்தின் கையில் ஒப்படைப்பது. தமிழரசுக்கட்சி இளைஞரை உசுப்பேத்தி அழித்து முடிந்தது, இருப்பவர்களையும் அடிமைகளாக விற்று விட்டு, அவர்கள் சிங்கள இனத்தோடு கலந்து அவர்களோடு வாழ்வது எமது அதிஷ்டம் என்று அறிக்கை விட்டு தப்பிவிடுவார்கள். இழப்பு, அடிமை வாழ்வு எல்லாம் இந்த போக்கத்ததுகளை நம்பியவர்களுக்கே.
  • அதானி குழுமத்துக்கு 'உயிர் கொடுக்கும்' அபுதாபி நிறுவனத்தின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் 3,260 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.   இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் 20,000 கோடி ரூபாய் ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபரில்(FPO) முதலீடு செய்துள்ளது.     திங்கட்கிழமை பங்குச்சந்தை முடிவில், இந்த FPO பங்குகளில் 3% மட்டுமே வாங்கப்பட்டிருந்தன.   ஆனால் இதற்குப் பிறகு அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது. அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு: நேசக்கரம் நீட்டும் அபுதாபி31 ஜனவரி 2023 வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு ஆபத்தா?28 ஜனவரி 2023 அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?30 ஜனவரி 2023 'அதானி குழுமத்தின் மீதான எங்கள் ஆர்வத்திற்கு காரணம் அதானி எண்டர்பிரைசஸின் பொருளாதார ஆரோக்கியத்தின் மீதுள்ள நம்பிக்கைதான். இந்த நிறுவனத்தில் நீண்ட கால வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சையத் பஸர் ஷுயேப் கூறினார்.   அதானி குழுமம் எல்லா தரப்பிலிருந்தும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS/AMIT DAVE ஹிண்டன்பர்க் அறிக்கை நஷ்டம் விளைவித்ததா? அமெரிக்க தடயவியல் நிதி நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் மீது நிதி முறைகேடுகள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் முன்வைத்தது. அதன்பிறகு அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. மூன்று வணிக நாட்களில் அதாவது ஜனவரி 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 29 சதவிகிதம் சரிவை பதிவு செய்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 5.6 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை மாலை இது தொடர்பாக 413 பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் என்று அது கூறியது. இருப்பினும் இதற்குப் பிறகும் அதானி குழுமங்களின் பங்குகள் திங்கள்கிழமை சரிந்து, அதன் சந்தை மூலதனத்தில் 1.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அபுதாபியின் IHC நிறுவனத்தின் முதலீட்டு அறிவிப்புக்குப் பிறகு வேறு சில குடும்ப நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. துபாய் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள சில குடும்ப நிறுவனங்களும் அதானி குழுமத்தின் FPO இல் 9000 கோடி ரூபாய் முதலீடு செய்யக்கூடும் என்று இந்து பிசினஸ் லைன், செவ்வாயன்று தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அதானி குழுமத்தில் ஐ.ஹெச்.சி. முதலீடு புதிதல்ல அபுதாபியின் அரச குடும்பத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு இந்தக்குழு, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களில் இரண்டு பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் சகோதரர் ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் இந்த நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் அபுதாபியின் பங்குச் சந்தையின் வெற்றிப் படிக்கட்டுகளில் வேகமாக ஏறியுள்ளது. இந்த நிறுவனம் அபுதாபியின் பங்குச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிறுவனம் இந்த ஆண்டு வெளிநாடுகளில் தனது முதலீட்டை 70 சதவிகிதம் அதிகரிக்க முயற்சிக்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கை கூறுகிறது. வெளிநாட்டு முதலீடுகளை செய்யும் போது இந்த நிறுவனம், தூய்மையான எரிசக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த விரும்புகிறது. ஆனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்ததில் இருந்தே இந்த நிறுவனம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES 40 பணியாளர்களைக் கொண்ட நிறுவனம்     மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிறுவனத்தில் நாற்பது பேர் மட்டுமே பணிபுரிந்தனர் என்று இந்த நிறுவனம் தொடர்பான ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனத்தின் பெயரை பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த நிறுவனம் மீன் வளர்ப்பில் இருந்து உணவு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகம் வரை செயல்பட்டு வந்தது என்று பைனான்சியல் டைம்ஸில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இப்போது அபுதாபியில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த குழுமத்தின் சந்தை மூலதனம் 240 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. சந்தை மூலதனத்தைப் பொருத்தவரை இந்த நிறுவனம், சர்வதேச நிறுவனங்களான சீமென்ஸ் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 42,000 சதவிகிதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கில் இந்த நிறுவனம் இப்போது செளதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. பட மூலாதாரம்,IHC   படக்குறிப்பு, இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி வானளாவிய வெற்றியின் ரகசியம் என்ன?               இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனியின் மகத்தான வெற்றிக்கான காரணம் புரியாத புதிர் தான். உலகின் பிற நாடுகளில் இந்த நிறுவனத்தின் பொருளாதார வெற்றியைப் பற்றி குறைவான தகவல்களே கிடைக்கின்றன. அதே நேரம் அபுதாபியின் பொருளாதார உலகத்துடன் தொடர்புடைய நபர்களிடமும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து அதிக தகவல்கள் இல்லை. இந்த நிறுவனம் எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தது என்பது யாருக்கும் தெரியாது என்று வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஒரு சர்வதேச வங்கியாளர், பைனான்சியல் டைம்ஸ் உடனான உரையாடலில் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சையத் பாஸர் ஷுயேப், இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தை ’சிறப்பானது’ என்று விவரிக்கிறார். "நாங்கள் எந்த விதமான டிவிடெண்டும் தருவதில்லை. 2020, 2021-ம் ஆண்டுகளில் கிடைத்த லாபம், திரும்ப முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு மாபெரும் நிறுவனத்தை உருவாக்க முயற்சித்து வருகிறோம்... உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற முயற்சிக்கிறோம்,"என்று அவர் கூறினார். இருப்பினும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் வணிகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே’மங்கலாகும் கோடு’ என்று சிலர் இந்த நிறுவனத்தை பார்க்கின்றனர். நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் இந்த மாபெரும் வளர்ச்சியைப் பற்றிய கவலைகள் இருக்கும் காரணத்தால் துபாய் அதிகாரிகள் தங்கள் பங்குச் சந்தையை ADX உடன் இணைக்கும் வாய்ப்பில் இருந்து பின்வாங்கத்தொடங்கியுள்ளனர் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c3g3xdlpg52o
  • தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டமும் வலுவடடைவதுபோல் தெரிகிறது. ஈழத் தமிழரில் சில பழமைவாதிகள் இந்துத்துவாவை ஒட்டிய மனநிலையில் உள்ளனர். 🙂
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.