கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி பதியப்பட்டது September 3, 2022 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது September 3, 2022 கொவிட் தொற்று: சீனாவில்... சுமார் 21 மில்லியன் மக்கள், வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவு! சீனா தனது சர்ச்சைக்குரிய பூஜ்ஜிய கொவிட் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுவதால், முடக்கநிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சமீபத்திய சீன நகரமாக செங்டு மாறியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சுமார் 21 மில்லியன் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு ஒருவர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செய்ய அனுமதிக்கப்படுகிறார். நேற்று (வியாழக்கிழமை) நகரத்தில் 157 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இதில் 51 அறிகுறிகளும் இல்லை. இதனைத்தொடர்ந்து, வியாழக்கிழமை, உள்ளூர் நேரப்படி 18:00 முதல் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட செங்டுவின் குடியிருப்பாளர்கள், எதிர் வரும் நாட்களில் அனைவரும் சோதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சீனாவின் கொவிட் கொள்கைகளின் படி, ஒரு சில தொற்று பதிவாகியிருந்தாலும் கூட நகரங்கள் கடுமையான முடக்க நிலைக்குள் நுழைய வேண்டும். எவ்வாறாயினும், பூஜ்ஜிய கொவிட் கொள்கையை உறுதி செய்வதற்கான சீனாவின் உந்துதல் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் குடிமக்களிடமிருந்து அரிதான பொது எதிர்ப்பைத் தூண்டியது. https://athavannews.com/2022/1297176 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts