Jump to content

யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரி... எப்போது உருவானது? அதன் வரலாறு என்ன?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Sir Percival Akland Dyke 1$t Government Agent Jaffna District 01.10.1829 09.10.1867'

யாழ் போதனா வைத்தியசாலை (பெரியாஸ்பத்திரி) Jaffna Teaching Hospital எப்போது உருவானது? அதன் வரலாறு என்ன?

முதலாவது யாழ் அரசாங்க அதிபர்

(1829 –1867).
அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அதிகாரிகளில்
அக்லண்ட் டைக்... முதன்மையானவர். தற்போது பழைய பூங்கா என அழைக்கப்படும் அரச அதிபர்,
ஆளுநர் இல்லம் மற்றும் அயலில் உள்ள அலுவலகங்களில் உள்ள மரங்கள் யாவும் இவரால் நாட்டப்பட்டவையே.
 
டைக்.. இங்குள்ள மரங்களில் உள்ள பூக்களின் நறுமணத்தை சுவாசித்தும்,
பழமரங்களின் கனிகளை... சுவைத்தும் வந்தார். பொதுக்களும் அனுமதி பெற்று இப் பூங்காவைப் பார்வையிட்டும்
பூங்காவிலுள்ள கனிகளைப் புசித்தும் வந்தனர்.
 
தற்போது போதனா வைத்தியசாலையாக உருவாகியுள்ள யாழ்ப்பாணம் வைத்தியசாலையை தாபித்தவர் இவரே.
1850 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital)
என்ற பெயரில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது.
 
யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த... பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke)
உதவி அரசாங்க அதிபராக இருந்த வில்லியம் துவைனம் (William Tywnam) ஆகியோரிடம்
வைத்தியசாலை கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
 
அரசாங்க அதிபர் டைக் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மூலமும்
தனது நண்பர்களிடமும், நிதி சேகரித்து.. ரூபா பத்தாயிரம் வழங்கினார்.
 
அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக் தனது வருமானத்தின் பெரும் பகுதியை
யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் (F.N.S. Hospital) கட்டடிப் பணிகளுக்காகச் செலவிட்டார்.
 
கோப்பாயில் வசித்து வந்த.. அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக்கின் பூதவுடல்..
அவர் காலமான 1867 ஒக்டோபர் 9 ஆம் திகதியன்றே
யாழ் பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
டைக்கிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக...
யாழ்ப்பாணத்திலிருந்த அரச அலுவலகங்கள் 4 – 5 தினங்கள் மூடப்பட்டன.
 
நன்றி: ஆதவன் வசந்த்.
  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுபோலவே 1848 இல் அமெரிக்க வைத்தியர் டாக்டர் Samuel Fisk Green அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மானிப்பாய் வைத்தியசாலையும் (பின்னாளில் Dr. Green நினைவு வைத்தியசாலை என அழைக்கப்பட்டது) நினைவுகூரத்தக்கது.

மேலை தேச மருத்துவத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இந்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருந்த தாதியர் பயிற்சி நிலையமும் வைத்தியர் பாடசாலையும் இலங்கையின் முதன் முதலாக வைத்திய சேவைக்கான உயர்நிலை கல்வித் தராதரங்களை உள்ளுர் மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழங்கி சேவையாற்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் எங்கள் ஆட்கள் என்ன செய்தவர்கள்  என்கிற கேள்வி எழுகிறதல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கரான டாக்டர் Green இலங்கை வருவதற்கு முன்பாக(1819) Dr. John Scudder என்ற இன்னுமொரு அமெரிக்க வைத்தியர்  வடபகுதிக்குச் சென்று பண்டத்தரிப்பு கிராமத்தில் சிறிய டிஸ்பென்சரி ஒன்றை அமைத்து உள்ளூர் வாசிகளுக்கு வைத்தியம் செய்தும் மருந்துகளை வினியோகித்தும் வந்ததாக அறியக்கிடக்கிறது.

இவர்கள் வைத்தியர்களாக தொண்டு செய்த அதேவேளை கிறித்தவ மிசனரிகளாகளாகவும் இருந்தார்கள். இந்த மிசனரிகள் கல்வி மற்றும் வைத்திய சேவை என்பவற்றை தமிழர் தாயகத்தில்  வழங்கியதன்மூலம் பெருமளவு உள்ளூர்வாசிகளை மதமாற்றம் செய்யவும்  இது  காரணமாக அமைந்தது.

வடக்கின் முதலாவது வைத்திய பட்டதாரிகள்.

images?q=tbn:ANd9GcTbusAXQYMvd6GlmGosrPK

ஆதாரம்: Royal College of Physicians, London

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியர் தமிழர்களுக்கு பரிவு காட்டினர், அதுவும் ஓர் முக்கிய காரணம்  சிங்களவர்  தமிழரை இந அடிப்படையிலன் ஒடுக்குவதற்கு என்று   இப்போதும்   சிங்களத்தாலும், பிரித்தானிய சிவில், மற்றும் வெளிநாட்டு  சேவையாலும் கட்டுஅவிழித்து  விடப்பட்ட கதை , இப்போதும் தொடரும் வாதம் , இந்த வரலாற்று  குறிப்பு பொய் ஆக்கும் ஓர் உதாரணம் ஆகும்.

உண்மையில், பிரித்தானிய சிங்களவருக்கே முழு வசதிகள், சலுகைகளை கொடுத்தனர்.  

தமிழர்களை, கறிவேப்பிலையிலும் கீழாக, நன்கு பாவித்துவிட்டு, எறிந்து விட்டு, சிங்களத்துடன் சேர்ந்து இனவழிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்; இப்போதும், என்பதே உண்மை.      

குறிப்பாக, இந்த வரலாற்று குறிப்பில் இருந்து,  யாழ் வைத்தியசாலை, பிரித்தானிய அரசால் அமைக்கப்படவில்லை. தனிப்பட்ட, அப்போதைய அரச அதிபர் மற்றும் தனியார் உதவி மூலமே கட்டப்பட்டு இருக்கிறது.   

ஆனா, தெற்கில் (குறிப்பாக கொழும்பை சுற்றி) , காலியை சுற்றி, கண்டியில், பிரித்தானியர் வைத்தியசாலைகள், பாடசாலைகள், போக்குவரத்துக்கு வசதிகள் என்று  (அப்போதைய நிலையில் ) பாரிய கட்டுமானங்களை   அமைத்தனர்.

தொல் பொருள் ஆராய்ச்சியில் கூட, பிரித்தானியர் குருந்தூரை கூட புத்த  எச்சங்கள் என்றே  வகைப்படுத்தி உள்ளனர். 

விஜயன் இறங்கியாகியதாக சொல்லப்படும் மன்னார் பகுதியில் தொல்பொருள் ஆய்வை தவிர்த்து, சிங்கள பௌத்த வாததுக்கு அத்திவாரமாக வாய்ப்பை கொடுக்கும் இடங்களையே பிரித்தானியர் தொல்பொருள் ஆய்வுகளை நடத்தினர், குறிப்பு எடுத்தனர், வகைப்படுத்தினர்.

இதை இப்பொது, Professor Coningham தொடருகிறார், அதை யாழ் பல்கலைக்கழகம் கண்டிக்காமல் பார்த்து கொண்டு இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kadancha said:

மலையாளிகள் போல் சிங்களவரும் தங்களுக்கு காரியம் ஆகணும் என்றால் வாயில் தேன்ஊற கதைத்து உபசரித்து காரியம் ஆக்குவதில் வல்லவர்கள் .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

மலையாளிகள் போல் சிங்களவரும் தங்களுக்கு காரியம் ஆகணும் என்றால் வாயில் தேன்ஊற கதைத்து உபசரித்து காரியம் ஆக்குவதில் வல்லவர்கள் .

தமிழர்களின் பிறவிக்குணங்களில் ஒன்று பொய்யாக வாழத்தெரியாதது.பொய்க்கு சிரிக்கவும் மாட்டார்கள். அதனாலேயே சகலதையும் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது. இது எல்லா நாட்டு தமிழினத்தவர்களுக்கும் பொருந்தும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பிரித்தானியர் தமிழர்களுக்கு பரிவு காட்டினர், அதுவும் ஓர் முக்கிய காரணம்  சிங்களவர்  தமிழரை இந அடிப்படையிலன் ஒடுக்குவதற்கு என்று   இப்போதும்   சிங்களத்தாலும், பிரித்தானிய சிவில், மற்றும் வெளிநாட்டு  சேவையாலும் கட்டுஅவிழித்து  விடப்பட்ட கதை , இப்போதும் தொடரும் வாதம் , இந்த வரலாற்று  குறிப்பு பொய் ஆக்கும் ஓர் உதாரணம் ஆகும்.

உண்மையில், பிரித்தானிய சிங்களவருக்கே முழு வசதிகள், சலுகைகளை கொடுத்தனர்.  

தமிழர்களை, கறிவேப்பிலையிலும் கீழாக, நன்கு பாவித்துவிட்டு, எறிந்து விட்டு, சிங்களத்துடன் சேர்ந்து இனவழிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்; இப்போதும், என்பதே உண்மை.      

குறிப்பாக, இந்த வரலாற்று குறிப்பில் இருந்து,  யாழ் வைத்தியசாலை, பிரித்தானிய அரசால் அமைக்கப்படவில்லை. தனிப்பட்ட, அப்போதைய அரச அதிபர் மற்றும் தனியார் உதவி மூலமே கட்டப்பட்டு இருக்கிறது.   

ஆனா, தெற்கில் (குறிப்பாக கொழும்பை சுற்றி) , காலியை சுற்றி, கண்டியில், பிரித்தானியர் வைத்தியசாலைகள், பாடசாலைகள், போக்குவரத்துக்கு வசதிகள் என்று  (அப்போதைய நிலையில் ) பாரிய கட்டுமானங்களை   அமைத்தனர்.

தொல் பொருள் ஆராய்ச்சியில் கூட, பிரித்தானியர் குருந்தூரை கூட புத்த  எச்சங்கள் என்றே  வகைப்படுத்தி உள்ளனர். 

விஜயன் இறங்கியாகியதாக சொல்லப்படும் மன்னார் பகுதியில் தொல்பொருள் ஆய்வை தவிர்த்து, சிங்கள பௌத்த வாததுக்கு அத்திவாரமாக வாய்ப்பை கொடுக்கும் இடங்களையே பிரித்தானியர் தொல்பொருள் ஆய்வுகளை நடத்தினர், குறிப்பு எடுத்தனர், வகைப்படுத்தினர்.

இதை இப்பொது, Professor Coningham தொடருகிறார், அதை யாழ் பல்கலைக்கழகம் கண்டிக்காமல் பார்த்து கொண்டு இருக்கிறது. 

Professor Coningham ,

இவரை எதனை அடிப்படையாக வைத்துக் கண்டிப்பதாம் ? செவிவழிக் கதைகளை நம்பி வாய் திறக்க முடியாதல்லவா ? 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.