Jump to content

ரணில் வீசிய கொழுக்கி ? - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் வீசிய கொழுக்கி ? - நிலாந்தன்

spacer.png

 

கனடாவில் உள்ள நண்பர் ஒருவர் கேட்டார்….”தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளையே எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை. இந்நிலையில்,புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும் நபர்களையும் ஒன்றிணைத்து தாயகத்தில் முதலீடு செய்வது நடக்கக்கூடிய காரியமா ? “என்று. ரணில் விக்ரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்கள் மற்றும் நபர்களின் மீது தடையை நீக்கியது தொடர்பில் நான் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாகவே அவர் அவ்வாறு கேட்டிருந்தார்.

நியாமான கேள்வி. தாயகத்தில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள்,மிகச்சிறிய சனத்தொகையின் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் மூன்று கட்சிகளை ஒன்றாக்க முடியவில்லை. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பு எனப்படுவது உலகம் முழுவதும் பரந்து விரிந்து சிதறிக்கிடக்கிறது. அது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளைப்  பேசுகிறது.வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு பொருளாதாரக் கட்டமைப்புகளில் வெவ்வேறு நிலையான பொருளாதார நலன்களோடு காணப்படுகிறது. தாயகத்தை நோக்கிய பிரிவேக்கம் என்ற ஒன்றைத்தவிர வேறு எதுவும் அந்த அமைப்புகளுக்கிடையில் இப்பொழுது பொதுவானதாக இல்லை. கடந்த 13ஆண்டுகளாக ஐக்கியப்பட முடியாத,ஐக்கியப்படுத்த யாருமில்லாத ஒரு புலம்பெயர் சமூகமாக தமிழ் சமூகம் காணப்படுகிறது.

கடந்த 13 ஆண்டுகளில் ஐநாவை நோக்கியும் உலகப்பொது மன்றங்களை நோக்கியும் நீதிக்காக அயராது உழைத்த ஒரு சமூகமாகவும்,இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக நெருக்கடியைக்  கொடுத்த ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது. தாயகத்தில் இருக்கும் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் தனிநபர்களுக்கும் நிதியை அள்ளி வழங்கிய காசு காய்க்கும் மரமாகவும் அது காணப்படுகிறது. உலகின் மிகவும் கவர்ச்சியான செயல்திறன்மிக்க ஒரு புலம்பெயர் சமூகமாக அது தன்னை வெளிக்காட்டியிருக்கிறது. ஆனாலும் மிகவும் சிதறிப்போன,கூட்டுச் செயற்பாடு இல்லாத ஒரு புலம்பெயர் சமூகமாகவும் அது தன்னை நிரூபித்திருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக ஜெனீவாவில் பொருத்தமான வெற்றிகளைப் பெறத் தவறியதற்கு அதுவும் ஒரு  காரணமா?

தாயகத்தில் இயங்கும் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் நிதி உதவ புரியும் அதேநேரம் அந்த நிதி உதவிதான் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் பிரித்து வைத்திருக்கிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அந்த நிதி உதவிகளால் தாயகத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை. அல்லது மறுவளமாகச் சொன்னால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் அந்த காசினால் தாயகத்தில் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை.இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் அவ்வாறு ஐக்கியம் ஏற்படாமைக்கு மேற்படி தனித்தனியான தூர இயக்கி-ரிமோட் கண்ட்ரோல்- உதவியும் ஒரு காரணம் எனலாம். இவ்வாறான கூட்டுச் செயற்பாடற்ற ஒரு புலம்பெயர்ந்த சமூகத்தை நோக்கி இலங்கை அரசாங்கம் கொழுக்கிகளை வீசியிருக்கிறது என்பதே உண்மை. தங்களுக்கிடையே ஒற்றுமைப்படாத ஒரு சமூகம் இந்த கொழுக்கிகளில் சிக்கி உதிரிகளாகத் தன் வலையில் வந்து விழும் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது.

அவ்வாறு சிந்திக்கத்தேவையான கொழுத்த அனுபவம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு. கடந்த 2015ல் ஆட்சி மாற்றத்தின் பின் அவர் அதைச் செய்தார். அப்பொழுதும் இதே அமைப்புகள்மீதும், நபர்கள் மீதும் தடைகள் நீக்கப்பட்டன. இப்பொழுது இருப்பதைப்போல பொருளாதார நெருக்கடி என்ற விவகாரம் அப்பொழுது இருக்கவில்லை. ஆனால் ஜெனிவாவை கையாள்வது, புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் பலத்தை உடைப்பது போன்ற நிகழ்ச்சிநிரல்கள் இருந்தன. அந்த நிகழ்ச்சிநிரலை முன்வைத்து குறிப்பிடத்தக்களவுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்நகரக் கூடியதாகவும் இருந்தது.

குறிப்பாக ஐநாவில் நிலைமாறு கால நீதியை நோக்கி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியை ஈர்த்து எடுப்பதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருந்தது. தாயகத்தில் கூட்டமைப்பும் அப்பொழுது அந்த நிகழ்ச்சி நிரலிற்கு  உட்பட்டு நிலை மாறுகால நீதியை ஆதரித்தது. இதனால் கூட்டமைப்பு மற்றும் தடை நீக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் போன்றன இணைந்து நிலைமாறு காலை நீதிக்குரிய நிகழ்ச்சிநிரலை பலப்படுத்தின. இதுவிடயத்தில் தடைநீக்கப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள் சில பெருமளவுக்கு தாம் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கங்களின் நிலைமாறு கால நீதிக்கான நிகழ்ச்சி நிரலை அதிகபட்சம் முன்னெடுத்தன. அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ்அமைப்புகள் நிலைமாறு கால நீதியா ?அல்லது பரிகார ரீதியா ? என்று ஜெனிவாவில்,தங்களுக்கிடையே பிரிந்துநிற்கும் ஒரு நிலை தோற்றுவிக்கப்பட்டது. அல்லது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் ஐநாவில் முன்னெடுத்த தமிழர் தொடர்பான நிகழ்ச்சிநிரலைப் பெருமளவுக்குப் பிரதிபலித்த தமிழ் அமைப்புகள்,அல்லது பிரதிபலிக்க மறுத்த தமிழ்அமைப்புகள் என்று புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் மத்தியில் பல்வேறு நிலைபாடுகள் தோற்றுவிக்கப்பட்டன.

இப்பொழுது மறுபடியும் ரணில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவர் தன்னுடைய நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சி காலத்தில் முன்னெடுத்த அதே நிகழ்ச்சிநிரலை அதாவது தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளின் உதவியோடு ஜெனிவாவைக் கையாள்வது என்ற நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கக்கூடும். அதைவிட மேலதிகமாக நாட்டில் இப்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் முதலீடுகள் என்ற நோக்கு நிலையில் இருந்தும் செயல்பட முடியும்.

இப்பொழுது வந்திருக்கும் தடைநீக்கம் ரணில் விக்ரமசிங்கவின் முன்னெடுப்பு மட்டுமல்ல. அது ஏற்கனவே கோதாபயவின் காலத்தில் தொடங்கப்பட்டது. ரணில் அதை முடித்து வைத்திருக்கிறார்.கோத்தாவும் ரணிலைப்போல முன்கண்ட இரண்டு நிகழ்ச்சி நிரல்களை மனதில் வைத்திருந்தார். ஒன்று ஜெனிவாவைக் கையாள்வது, இரண்டு பொருளாதார நெருக்கடியைக் கையாள்வது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஜெனிவாவைக் கையாள்வது என்பது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தை பிரித்துக் கையாள்வதன் மூலம்,புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துலக அரங்கில் முன்னெடுத்து வரும் நீதிக்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதுதான்.

தடை நீக்கப்பட்டால் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டிற்குள் வந்து போகும் நிலைமை திறக்கப்படும். அவர்கள் தாயக கள யதார்த்தத்தோடு நெருங்கி உறவாடும் ஒரு நிலைமை தோன்றும். இவ்வாறு தாயகத்துக்கு வந்து போகக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும் பொழுது, அந்த வாய்ப்புகளை எப்படி பாதுகாப்பது என்றுதான் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் சிந்திப்பார்கள். தாயகத்துக்கு வந்துபோகும் நிலைமைகளைப் பாதுகாப்பது என்பது அதன் தக்கபூர்வ விளைவாக தாயகத்துக்கு வெளியே அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் தீவிரத்தை குறைப்பதுதான்.அரசாங்கத்துக்கு எதிராக நீதியைக் கோரும் போராட்டத்தின் தீவிரத்தை குறைப்பதுதான்.எனவே தடை நீக்கத்தின்மூலம் வெளியரங்கில் தனக்கு எதிராகச் செயல்படக்கூடிய தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களின் தீவிரத்தை அரசாங்கம் குறைக்க முடியும். இது கடந்த நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக்காலத்திலும் அவதானிக்கப்பட்டது.

ஏன் கடந்த சில ஆண்டுகளாகவும் அதைக் காணமுடிகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜெனிவாவில் ஒப்பீட்டுளவில் குறைந்தளவு பக்க நிகழ்வுகளே இடம்பெற்றதாக ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார். அதற்குக் காரணம் பக்க நிகழ்வுகளுக்கு நிதியுதவி புரியும் ஒரு தமிழ் பெருவணிக நிறுவனம் அந்த நிதி உதவியை குறைத்தமைதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏனெனில் அந்த பெருவணிக நிறுவனம் தாயகத்தில் முதலீடுகளை செய்ய தொடங்கிவிட்டது. குறிப்பாக தென்னிலங்கையில் வங்குரோத்தான ஒரு சிங்கள கொம்பனியை அது விலைக்கு வாங்கியிருக்கிறது. தாயகத்தில் தனது முதலீடுகளை பத்திரமாக முன்னெடுப்பதற்கு அந்த நிறுவனம் அரசாங்கத்துக்கு எதிரான அதன் போக்கில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதன் விளைவுதான் கடந்த ஆண்டு பக்க நிகழ்வுகளில் அந்த நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பு குறைவாக காணப்பட்டமையும் என்று மேற்படி செயற்பாட்டாளர் தெரிவித்தார்.

இதைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தடை நீக்கப்பட்ட அமைப்புகளும் நபர்களும் புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் தீவிரம் குறையும். இது முதலாவது இலக்கு. இரண்டாவது இலக்கு முதலீடு.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய பொழுது ரணில் விக்கிரமசிங்க “புலம்பெயர் நிதியம்” ஒன்றை உருவாக்குவது தொடர்பாக யோசனையை முன் வைத்துள்ளார். வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருங்கிணைப்பு மையமாக தொழிற்படுகின்ற வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அலுவலகமொன்றினை ஸ்தாபிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

அதாவது புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் என்ற பொதுவான ஒரு பதத்தினை அவர் பயன்படுத்துகின்றார். தமிழ் முதலீடு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகத்தில் முதலீடு செய்யும்பொழுது அதன் இனரீதியான பரிமாணத்தை அகற்றிவிட்டு வெறும் முதலீடாகச் செய்வது சரியா? அல்லது ஒரு தேசமாக சிந்தித்து தாயகத்தில் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் முதலீடு செய்வது சரியா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் உதிரிகளாக வந்து தாயகத்தில் முதலீடு செய்தால் என்ன நடக்கும் ?அது  வழமையான திறந்த சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் நிகழும் ஒரு முதலீடு என்ற பொருளாதார பரிமாணத்தைத்தான் அதிகமாக கொண்டிருக்கும் .மாறாக அதற்கு தாயகம் நோக்கிய தமிழ்முதலீடு என்ற இனரீதியிலான பரிமாணமும் பண்பாட்டு ரீதியிலான பரிமாணமும் அல்லது தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலான பரிமாணமும் குறைவாகவே இருக்கும்.

புலம்பெயர்ந்த தமிழ் முதலீடுகளுக்கு எப்பொழுது தமிழ்த்தேசிய பரிமாணம் அதிகரிக்கிறது என்றால் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் ஒரு தேசமாக சிந்தித்து முடிவெடுக்கும் போதுதான். ஒரு தேசமாக சிந்திப்பது என்றால் என்ன? ஒரு மிகப்பெரிய மக்கள்திரளாகச் சிந்திப்பதுதான். தாயகத்துக்கு வெளியே அவ்வாறு சிந்திப்பது எப்படி? தாயகத்தில் தமிழ்மக்களை ஒரு பெரிய தேசமாகக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் முதலிடுவதுதான். அதாவது தாயகத்தில் தேசநிர்மாணத்தின் ஒரு பகுதியாக முதலீடு திட்டமிடப்பட வேண்டும்.மாறாக தனித்தனி வள்ளல்களின் உதவிகளோ,அல்லது தனித்தனி முதலாளிகளின் உதிரியான முதலீடுகளோ,தாயகத்தை கட்டியெழுப்புவது என்ற சமூகப்பொருளாதார அரசியல் பரிமாணத்தை கொண்டிருக்க போவதில்லை.

எனவே இப்பொழுது இக்கட்டுரை தொடங்கிய இடத்துக்கே வரலாம். எனது நண்பர் கேட்டது போல புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் முதலீட்டை ஒரு கூட்டுச் செயற்பாடாக செய்வதற்கான வாய்ப்புகள் அநேகமாக இல்லை. புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் ஒரு தேசமாக சிந்தித்து முதலீடு செய்யப் போவதில்லை என்ற எதிர்பார்ப்பில்தான் அரசாங்கம் இந்தக் கொழுக்கியை வீசியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் உதிரிகளாக நாட்டுக்குள் முதலீடு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதாவது ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி ஒரு பொறியை வைத்திருக்கிறார் என்று பொருள். அந்தப் பொறிக்குள் தமிழ் நிதி உதிரியாக வந்து சிக்குமா?

http://www.nillanthan.com/5633/

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யாழ் களத்தை புதுப்பொலிவுடன் மீண்டும் கண்டதில் சந்தோசம்.  பல சிரமங்களின் மத்தியிலும் இடைத்தடங்கலை சரி செய்த நிர்வாகத்தினர்க்கு மனமார்ந்த நன்றிகள். ஐயா மோகனுக்கும் நன்றிகள். உறவுகள் அனைவர்க்கும் கார்த்திகை தீப வாழ்த்துக்கள். வீடெங்கும் ஒளி பரவட்டும்.  
    • மதுவினால் நாளாந்தம் 55 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர் -சமாதி ராஜபக்ஷ, எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ, எச்சரித்துள்ளார். கடந்த புதன்கிழமை தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான ஆய்வுகள் 2022க்கான சர்வதேச கருத்தரங்கில் அவர் இந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ‘கேட்வே மருந்துகள்’ என்ற சொல், மது மற்றும் சிகரெட் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய சில மருந்துகளின் பயன்பாடு ஏனைய மருந்துகளின் பயன்பாடு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும் என்ற கோட்பாட்டை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பகாலத்தில் புகையிலை பொருட்கள் அல்லது மதுபானங்களை பயன்படுத்தத் தொடங்கும் நபர்கள் மரிஜுவானா, கொக்கெய்ன், ஹெரோயின், ஐஸ் போன்ற பிற பொருட்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை அடிக்கடி வளர்த்துக் கொள்வார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன என பேராசிரியர் ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் 2021 இல் இலங்கையின் மக்கள் தொகையில் 28% ஆனோர் மது அருந்தினர். உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், கல்லீரல் நோய்கள், செரிமான பிரச்சினைகள், புற்றுநோய்கள் (மார்பகம், வாய், தொண்டை, உணவுக்குழாய்) போன்ற மது அருந்துவதால் ஏற்படும் நோய்களால் இலங்கையில் நாளொன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக பேராசிரியர் ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார். , குரல்வளை, கல்லீரல், பெருங்குடல், மலக்குடல் போன்றவை) மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. அற்ககோல் குடும்பம் மற்றும் வேலை தொடர்பான உறுதியற்ற தன்மை உள்ளிட்ட சமூக பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. புகையிலை அதன் பாவனையாளர்களில் பாதிப்பேரைக் கொல்வதாகவும், புகையிலை தொடர்பான நோய்களால் ஒவ்வொரு நாளும் சுமார் 60 இலங்கைப் பிரஜைகள் மரணமடைவதாகவும் தெரியவந்துள்ளது. புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவை பயனர்களின் குடும்ப நல்வாழ்வையும் எதிர்மறையாகப் பாதிக்கின்றன. 2016 இல் புகையிலை வரி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 88.5 பில்லியனாகும் அதேவேளை புகையிலை தொடர்பான நோய்களுக்கான சுகாதாரச் செலவு 15.3 பில்லியனாகும். இந்தத் தொகையில், வரி செலுத்துவோர் ரூ.8.3 பில்லியனைச் சுமக்க வேண்டும், தனிநபர்கள் ரூ.5.9 பில்லியனைச் செலுத்தினர் மற்றும் சுகாதார காப்பீடு ரூ. 1.1 பில்லியன் எனவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/226417
    • இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் முன்வர வேண்டும். எம்மைப் பொறுத்தவரையில், தற்போது இந்த நாட்டின் அரசியல் யாப்பில் நடைமுறையில் இருக்கின்ற எமது அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம். இல்லாததைப் பற்றிக் கதைத்து இருப்பதையும் கைவிட்டு விடக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம். தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போதே சில நாடகங்கள் அரசியல் அரங்கில் மேடையேற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=168438
    • யாழ். பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!       யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளுடன் வீதிகளில் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் வாடகை அறைகளில் தங்கியுள்ள மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு தமது தங்குமிடத்திற்கு திரும்பும் வேளைகளில் பல்கலையை சூழவுள்ள வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்கும் இளைஞர்கள் கும்பல்கள் மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசுதல் , தமது அந்தரங்க உறுப்புக்களை காட்டுவது , ஆபாசமாக சைகைகளை காட்டுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் 300 பேர் கையொப்பம் இட்டு , பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முறையிட்டு இருந்தனர். பல்கலைக்கழகத்திற்கு வெளியே இவ்வாறான செயற்பாடுகள் நடப்பதனால் , மாணவிகளால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளத்துடன் ,பல்கலைக்கழக சூழலில் சிவில் உடைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.   -யாழ். நிருபர் பிரதீபன் https://tamil.adaderana.lk/news.php?nid=168441
    • 60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது!       அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம். மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு திருத்தத்துடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=168417
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.