Jump to content

இலங்கையின்... 19 வயதுக்குட்பட்ட, கிரிக்கெட் அணிக்குள் நுழையும்... மற்றொரு தமிழ் வீரர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின்... 19 வயதுக்குட்பட்ட, கிரிக்கெட் அணிக்குள் நுழையும்... மற்றொரு தமிழ் வீரர்!

தோமியன் 1ஆவது XI துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவர் கனிஸ்டன் குணரத்னம், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் மாகாண போட்டியில் சிறப்பாக செயற்பட்டதன் பின்னணியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவர், இந்த வார இறுதியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தோமியன் துணைக் தலைவரும், தொடக்க வேகப்பந்து வீச்சாளருமான கனிஸ்டன் குணரத்னம், சமீபத்தில் முடிவடைந்த இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

19 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண போட்டித் தொடரில், 11போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (சராசரி 7.93)

https://athavannews.com/2022/1294484

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கனிஸ்டன் குணரத்னம். போட்டிகள் 21/8/22 ஆரம்பமாகி நடந்து கொண்டு இருக்கின்றன. இன்னும் இவர் விளையாடும் 11 இக்கு தேர்வு செய்யப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின்... 19 வயதுக்குட்பட்ட, கிரிக்கெட் அணிக்குள் நுழையும்... மற்றொரு தமிழ் வீரர்!

இப்படி செய்திகளையே காண முடியுது.

போட்டிகள் நடக்கும் போது தமிழ் பெயரையே காண முடிவதில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓர் இனம் வாழவேண்டுமாயின் அந்த இனத்தின் இருப்பையும் பரம்பலையும் உறுதிசெய்ய வேண்டும் - வைத்தியர் பாலகோபி By VISHNU 06 DEC, 2022 | 08:45 PM ( எம்.நியூட்டன் )   ஓர் இனம் வாழவேண்டுமாயின் அந்த இனத்தின் இருப்பையும் பரம்பலையும் உறுதிசெய்ய வேண்டும் என  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளரும் சிறுநீரக தொகுதி அறுவை சிகிச்சை நிபுணருமான பா.பாலகோபி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நடைபெற்ற நூல் வெளியீட்டின் போது உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இன்று (6)குழந்தையின்மைப் பிரச்சினை தீவிரம் பெற்றுள்ளது. குழந்தையின்மைக்கான மருத்துவத் தேவைப்பாடுடையவர்களாக 50 வீதம் பெண்களும் 50 வீதம் ஆண்களும் காணப்படுகின்றனர். ஆனால், சமூகத்தில் பெண்களை மட்டுமே குறைகூறுகின்றோம். பெண்களை மட்டுமே மருத்துவத் தேவைப்பாடுடையவர்களாகப் பார்க்கின்றோம். இந்த நிலைமை மாற்றம் பெறவேண்டும்.    குழந்தையின்மைப் பிரச்சினைக்காக ஆண்கள் உண்மையில் சிறுநீரக சனனித் தொகுதி மருத்துவரைத்தான் நாட வேண்டும். ஆனால், இது தொடர்பான போதிய அறிவு விழிப்புணர்வு எவரிட மும் இல்லை. அத்துடன், இந்தத் துறை உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடை யாத துறையாகவே இருக்கின்றது. இந்ததுறையை விருத்தி செய்ய வேண்டியது காலத்தினுடைய கட்டாயமாகக் காணப்படுகின்றது.   ஆண்களினுடைய விந்து உருவாக்கத் திலிருந்து விந்து கடத்தப்படுகின்ற பாதையிலிருந்து கருத்தங்காமை பிரச்சினை ஏற்படுகின்றது. முட்டையைத் தேடி மில்லியன் கணக்கான விந்தணுக்கள் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. விந்தணுக்களின் எண்ணிக்கைகள் குறைகின்றபொழுது பிரச்சினை ஏற்படுகின்றது. வால்களற்ற விந்துக்களால் முன்னோக்கிச் செல்ல முடியாது. இவற்றாலும் கருக்கட்டலில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடல் வெப்பநிலை கூடுகின்றபொழுது அல்லது சுற்றாடல் வெப்பநிலை கூடு கின்றபொழுது அல்லது எம்மிடம் இருக்கின்ற புகைத்தல், மது உள்ளிட்ட தீய பழக்கவழக்கங்களாலும் இந்த விந்தணுக்களின் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இன்று எமது இளைஞர்கள் நீண்ட நேரம் வேலை செய்கின்றார்கள். பலர்  சாரதிகளாகப் பணிபுரிகின்றார்கள். பத்து மணித்தியாலங்கள் தொடர்ந்து அந்த இருக்கையில் இருக்கின்ற பொழுது விந்துகள் இறந்து விடுகின்றன. எனவே இது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தி போதிய மருத்துவ அறிவுறுத்தல்களை பின் பற்றவேண்டும். விந்துக்களையும் முட்டைகளையும் சேர்க்கின்ற பொறிமுறை தனியார் மருத்துவமனைகளில் மாத்திரமே காணப்படுகிறது. அரச மருத்துவமனைகளில் இல்லை. இதனால் ஏழைக்குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. ஆதலால், தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் அத்தனை வசதி வாய்ப்புக்களும் அரச மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்படவேண்டும். எமது சமுதாயத்துக்காக எம் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக நாம் அர்ப்பணிப்பானதும் ஆக்கபூர்வமான துமான பல திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும் என்றார். இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, மருத்துவ பீட பீடாதிபதி ரா.சுரேந்திரகுமாரன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், விரிவுரையாளர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். வைத்தியர் பா. பாலகோபி வைத்தியர் சி.இரகுராமன் இருவரும் இணைந்து  "குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும்" என்ற நூலை எழுதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. ஓர் இனம் வாழவேண்டுமாயின் அந்த இனத்தின் இருப்பையும் பரம்பலையும் உறுதிசெய்ய வேண்டும் - வைத்தியர் பாலகோபி | Virakesari.lk
    • யாழை மீட்டெடுத்து மீண்டும் உறவுகள் மீட்டும் வகையிற் கடின உழைப்பினை நல்கிய நிர்வாகத்தினர் மற்றும் மோகன் அவர்களுக்கும் நன்றி.
    • நான் இத்தொடரில் பின்னாட்களில் எழுதிய பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது. அவற்றைச் சேமித்து வைக்கத்தவறியமைக்காக வருந்துகிறேன். நேர விரயம். 
    • பெரும்பாலான நேரங்களில் அது மறைக்கப்பட்டு இருப்பதால் மர்ம உறுப்பென்று கூறுகிறார்களோ என்னவோ??? சும்மா ஆளாளுக்குப் பயப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.😄
    • கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு  .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த  நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.