Jump to content

" இதுவும் கடந்து விடுவேன்"  .......

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

" இதுவும் கடந்து விடுவேன்"  .......

காலச்சக்கரத்தின் வேக  சுழற்சியால்  வாழ்க்கை 

இன்பமும் துன்பமுமாய்  போராடடமும்  வெற்றியுமாய் 

நகர்ந்து செல்கையில் ...நோய்வாய்ப்படுதல் 

 ஒரு திடீர் விபத்தாக  வந்து விடுகிறது . 

நோயற்று  வாழவே  எல்லோரும் விரும்புவோம்

நோய்  கண்டு, மருத்துவ மனைகண்டு 

தாதியர் துணை கொண்டு  படுக்கைதனில் வீழும்போது ..

"என்னடா வாழ்க்கை"  இது என்று  சலிக்க தோன்றி விடும்.  

அரை மயக்கத்தில்  உன் உறவினர் ,அருகில் அப்போது தான் 

 சத்திரசிகிச்சை முடித்து  படுக்கையில் கிடத்தியிருப்பார்கள்.  

எல்லாம்   மரத்துப்போய்  அசைக்க முடியாமல்  

உன் உடலின் அங்கமே உனக்கு சுமையாக 

கொக்கியில் மாட்டிய ஜீவ  நீர் " சேலைன் " வழியாக 

துளித்துளியாக இறங்கி  கொண்டிருக்கும்.  நடப்புகள்   உறவுகளும் 

நினைவில் வந்து போவர் ,

அண்மையில் இந்நிலை கண்ட  நண்பன் 

அடிக்கடி வந்து போவான். இரண்டு வார்த்தை  அவனுடன்

 பகிர்வோமென்றால்   ஏன்  மீண்டும் அவனை  கவலைப்பட வைப்பான்" 

இது என்னுடனே போகட்டும் "என்பேன் .

 வலி கண்டவருக்குத் தானே  வலி உணர முடியும்.  "இது வும் கடந்து 

போகும்..." என  மனசு தன வலியை தேற்ற  முயலும்.  நாட்கள் ஒவ்வொன்றாக 

நகரும் . நிற நிறமாய்  தாதியர் அவசர வேகத்தில்  ."இந்தா  மருந்து" ..

.நாளை  எழுந்து நடக்க தயாராக இரு .... 

இயற்கை உபாதைகளை துணையின்றி  சென்று  

முடிக்க முடியாதிருக்கும் .  என் மீதே எனக்கு கோபம் வரும். 

 கை பிடித்து  ஆதரவாய்   கதை சொல்ல ஒரு உறவைத்தேடும்.   

இரவு உறக்கமும்  விழிப்புமாய்  வந்துபோகும்.  

காலை  விடியும் , கட்டிடம் கலகலப்பாகி விடும்.  சிட்டுக்களாக 

பறந்து திரியும்  தாதியரும்  உதவியாளர்களுமாய். 

உணவு வரும்  உயிரை பிடித்து வைக்க வேண்டுமே 

என உண்ணத்தோன்றும் . நாக்கு செத்துப்போகும்.   

வைத்தியர் வருவார் ..உடற்பயிற்சியாளர்  வருவார்.  

தங்கள் கடமை முடிந்ததென   கை கழுவி செல்வர்.  

மீண்டும் தனிமை  ..ஆட்டி  அசைத்த  கால் வலியெடுக்கும்.  

ஒரு வித மயக்க நிலைக்கும்  சோர்வுக்குமாய் கண் யாரும்.

கடைக்கு கண் வழியே  நீர் சொரியும்.   "பாவி என்னை  மறுபடியும் 

பிறக்க  வைக்காதே ".. என  மனம் ஓலமிடும்.   வீட்டுக்கு செல்ல அனுமதி  

தரப்படும்.அன்பான  ஒருவரின் கவனிப்பால்   நாட்கள்  நகரும் . 

"என்னால் இயங்க முடியவில்லையே என " மனம்  ஏங்கும் "  

"இதுவும் கடந்துபோகும். மீண்டு விடுவேன்"  என  

பழையபடி எண்ணத்தோன்றும். 

 என்னை நானே கொண்டு  நடத்த முடியாத  வாழ்க்கை ...

.சலிக்க தொடங்கு ம்.  அரிது அரிது மானிட ராதல் அரிது 

அதிலும் நோய் நீங்கி  பிறத்தல் அரிது.ஏன்  இத்தனை  துயரம் ? கர்மாவா ?

உணவுப் பழக் க வழக்கமா ?  உடல் உறுப்புகளின் இயக்க மின்மையா? 

 அவசர உலகில்   பிடுங்கி நடப்பட்ட்  மரமாக அந்நிய தேச கால  நிலையா ?

நஞ்சேற்றப்பட்ட் உணவா ?...  வேறு மருந்துகளின் தாக்கமா ? உன்னை நோய் 

பிடித்துக் கொள்ள (கொல்ல )....

உன் உடல் ஒரு கோவில் அதை  கவனித்து பேணு .

இல்லையேல்   நோய்  பிணியும்  துயரமும்  தொற்றிக்கொள்ளும். 

சந்தர்ப்பங்கள் சம்பவங்களை  ஆக்கு கின்றன . சம்பவங்களை

 இறக்கி  வைக்கும்போது  மனதின் ஒரு ஓரத்தில்  சின்ன  அமைதி .

நீண்ட நேரம்  தடடச்சியதில்   கால் செங்குத்தானதில் ஒரு வலி ..முள்ளாக 

ஆரம்பிக்கிறது.   மீண்டும் பேசுகிறேன்  " காணும்  என்னும் கண்டிப்பான"    

கடடளையுடன்  படுக்கையில் ச ரிகிறே ன்.  "யாரும் கவலைப்படாதீர்கள்".  

என் நடப்புகள் தவிர வேறு யாரிடம்  பேசுவேன்..... ஆறு நாட களாக கனன்று 

கொண்டிருந்த  தீ ... தணியத்துடிக்கிறது.  எனக்கும் சத் திர சிகிச்சைக்  

  இரவும் பகலும் போல ........"இதுவும் கடந்து விடுவேன் .."...

Edited by நிலாமதி
 • Like 5
 • Thanks 2
 • Sad 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிலாமதி said:

ஒரு நோயாளியின் நிலையில் இருந்து…. அத்தனை நினைவுகளையும்,
தவறாமல் வடித்த அழகிய கவிதை. 👍🏽

ஆஸ்பத்திரி சாப்பாட்டை, சாப்பிட்டு… செத்துப் போன நாக்கு,
வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்குவதைப் பற்றியும் எழுதி இருக்கலாம்.
அருமையான கவிதைக்கு, நன்றி நிலாமதி அக்கா. 👍🏽

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிறீத்தம்பி ...........சில நாட்களாக நினைத்து கொண்டிருந்த ஒருவர்  நீங்கள் தான்  தற்போது சற்று தேறி வருகிறேன். மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆஸ்பித்திரி சாப்பாடு பழகி விட்ட்து . வீட்டுச் சாப்பாடு  என் அன்பான  கணவனால்  தரப்படுகிறது.  பசியில்லை  மனமில்லை ...மிகவும் கஷ்ட படுத்துகிறேன் என் உள்ளுணர்வு ....காதல் மனைவியை கண் கலங்காமல் கவனிக்கும்   கடமையை செய்யும் திருப்தி  அவருக்கு . நல்ல காலம் "பென்சனியார் " அவர் பொழுது என்னுடனே  கழிகிறது . இல்லவிட்டால் பேரப்பிள்ளைகளுடன்  செலவிடுவார். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிலாமதி said:

நிலாமதி அக்கா…   நீங்கள் நோய் வாய்ப்பட்டு, மருத்துவ மனையில் இருந்ததை,
யாழ். கள உறவுகள் எவருமே அறியவில்லை. தற்போது… உங்கள் மூலமே அறிந்தோம்.
விரைவில் பூரண சுகம் பெற, பிரார்த்திக்கின்றோம். 🙏

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

நிலாமதி நீங்கள் மருத்துவமனையில் இருந்து வீடு வந்ததை அறிந்து சந்தோசம். பூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

" இதுவும் கடந்து விடுவேன்"  .......

ஒரு வயது வர எதுவும் வரும் என்னவும் வரும் என மனதை திடப்படுத்திக்கொண்டு வாழ வேண்டிய காலம்.

பூரண நலம் பெற்று வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

அக்கா நலம் பெற வேண்டுகிறேன். ஓய்வெடுங்கள். உடற்பயிற்சி (அவர்கள் சொன்னபடி) செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சகோதரி நீங்கள் பூரண சுகத்துடன் வாழ்வீர்கள்.....நாங்கள் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் வருத்தம் வந்து தொல்லை தரும் எண்டால் அது தந்தே தீரும்......எனக்கும்தான்  கடந்த ஒன்றரை மாதத்துக்குள் பல்வலி + காது  என்னை சிப்பிலியாட்டி கொண்டிருக்கு.......என்ன இதுவும் கடந்து போகும் என்றுதான் வாழவேண்டி இருக்கு......துணைவர்கள் அன்பாய் இருப்பது பெரிய பாக்கியம்.......! 

கவிதைமூலம் அறியத்தந்ததுக்கு நன்றி.....!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அக்கா என்னாச்சு?

பூரண குணமடைந்து பழையபடி சந்தோசமாக இருக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிலாக்கா பூரண நலம் பெற்று மீண்டும் வர எல்லாம் வல்லானை இறைஞ்சுகின்றேன்..!

கவிதை கனக்கின்றது…!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா பூரண நலம்பெற வேண்டுகிறேன், ஓய்வெடுத்து ஆரோக்கியத்துடன் மீளவும் யாழுக்கு வாருங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா விரைவில் பூரணமாகக் குணமடைந்து பழையபடி யாழில் வலம்வரவேண்டும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பூரண நலம்பெற வேண்டுகிறேன் 🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மீண்டு வந்ததில் சந்தோசம் அக்கா மனச்சுமைய இறக்கி விட்டீர்கள் இனியெல்லாம் நலமே இறைவன் துணைபுரிவாராக

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பூரண குணமடைந்து பழையபடி சந்தோசமாக இருக்க எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகின்றேன்🙏🙏🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா முழுமையான சுகம் பெற வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்   பாட்டி

இதுவும் கடந்து  போகும்...

கிட்டத்தட்ட  இந்த  நேரத்தில் நான்  கனடாவில் தான் நின்றேன்

தம்பியின் இழப்பால் சோர்ந்து  போயிருக்கும் எனக்கும் 

அதே நிலையில்  உள்ள  அக்காக்கும்  ஒத்தொடமாக  இருக்கவே  வந்தேன்

அதனால்  இம்முறை வெளியே  எங்கும் செல்லவில்லை  செல்லும் மனநிலையுமில்லை

ஆனால் இப்பொழுது ஒரு  உறவு தனித்திருந்து  எமை  நினைத்திருக்கிறதே  எனும்போது

வாழ்வில்  எத்தனை  போற்றுதற்குரிய கணங்களை இழந்து  வருகிறோம் என்று வருத்தமாக  இருக்கிறது

ஒருவர் மறைந்த  பின்  அழுவதிலும் இரங்கல்  போடுவதிலும்  உடன்பாடில்லாதவன்  என்ற வகையில் தான் ஒவ்வொரு  வருடமும் ஒவ்வொரு  சகோதரிகள்  வீடுகளுக்கு  சென்று சில நாட்கள் தங்கி  வருவதை  கடந்த  சில  வருடங்களாக செய்து  வருகிறேன். ஆனால் ......???

வாழ்வின்  ஒரு  படி  மேலே நீங்கள்

நாங்கள்  அடுத்தபடியில்

அவ்வளவு  தான் வாழ்வு

இதுவும் கடந்து  போகக்கடவது  பாட்டி

வாழ்க  நலமுடன்....

Edited by விசுகு
எழுத்துப்பிழை
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகளின் ஆறுதல் வார்த்தை என்னை விரைந்து குணமடைய வைக்கும் என நம்புகிறேன். நான் விருப்பும் பொழுதுபோக்கு .அதிக நேரம் செலவிடும் தளம். தற்போது  குறிக்க படட   நேரமே என்னவர் அனுமதிப்பார்.  கால் தொங்க விடும்போது வீக்கம் அதிகரிக்கும். சில மணித்துளிகளாவது   எட்டிப்பாராமல் இருக்க முடியாது. என பாரங்களை இறக்கி  வைத்த ஒரு அமைதி . சிறகில்லாத இந்த மனம் எங்கெங்கோ  அலைகிறது.வருந்தாதே மனமே 

 • Like 4
Link to comment
Share on other sites

நிலாமதி அக்கா!  யாழில் நான் இணைந்தவுடன் என்னை முதன் முதலில் வரவேற்ற நிலாமதி அக்கா, மீண்டும் சுகமாகி முன்னர் போன்று எம்முடன் இணைந்திருப்பார் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.