Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல

கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல 

      — கருணாகரன் — 

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஐ.எம்.எவ்வின் நிதி உதவி உதவும். இதற்கு ஐ.எம்.எவ் உத்தியோகத்தர் மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் முதற்கட்டமாக கடனுதவி – நிதி கிடைத்து விடும். நான்கு ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவி தொடரும். ஆகவே இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலானவர்கள் உள்ளனர். 

இதுவரையிலும் நாடுகளிடம் கடன் பட்டு வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு இன்னொரு கடனைப்படுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. கடன் வாங்கிக் கலகலப்பாகக் கல்யாணம் செய்வதைப்போலவே நாம் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டோம். இதனால் எந்தக் கடனும் நமக்குப் பிரச்சினையாகப் படுவதில்லை. 

ஆனால், இந்தக் கடன் சாதாரணமானதல்ல. நாடுகளின் கடனிலாவது, அந்த நாடுகளின் அரசியல் தலைமைகள், ஆட்சிக் கொள்கைகளுக்கு அமைய விலக்களிப்பதாகவோ வட்டிக் குறைப்புச் செய்வதாகவோ இருக்க வாய்ப்புண்டு. இது நிதி நிறுவனக் கடன். ஆகவேதான் கடனைத் தருவதற்கு முன்பே நிபந்தனை விதிக்கப்படுகிறது. நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால்தான் கடன். அதுவும் தவணை அடிப்படையில். ஆகவே இந்தக் கடனோடு விளையாட முடியாது. கழுத்தில் சுருக்குத்தான் விழும். 

அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? என்று நீங்கள் கேட்கிறீர்கள். 

ஆம், அந்தக் கேள்வி உங்களுக்கானதே. 

முதலில் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு மிகப் பெரிய தேசிய நெருக்கடி என்பதை நாம் புரிந்து (உணர்ந்து) கொள்ள வேண்டும். இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திருக்காத ஒன்று. “நாம் இப்பொழுது வங்குரோத்து நிலையில் இருக்கிறோம்”என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகவே கூறியுள்ளதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். உண்மையும் அதுதான். ஆகவேதான் உலகம் முழுவதிலும் நாம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்த வேண்டியேற்பட்டுள்ளது. 

ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் மிகச்செழிப்பாக இருந்த நாடு. அதனுடைய அந்நியச் செலாவணி பிற நாடுகளுக்கு உதவும் நிலையில் தாராளமாக இருந்தது. குறிப்பாக ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகளின் பொருளாதார நிலையை விட இலங்கை பல படிகளில் மேலே நின்றது. இவ்வளவுக்கும் அது 400 ஆண்டுகளுக்கும் அதிககாலம் அந்நியரின் பிடியின் கீழிந்த காலமாகும். அப்படியிருந்தும் பொருளாதார வளம் மேலோங்கியிருந்தது. 

அதற்குப் பின்னர் இலங்கையை ஆட்சி செய்த நம்மவர்கள்  இன்றைய வங்குரோத்து நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்து விட்டுள்ளார்கள். கடன் சுமையில் நாடு திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இன்னும் கடன்பொறிக்குள்ளேதான் நாட்டைக் கொண்டு போவதற்கு முயற்சிக்கிறார்கள். கேட்டால், வேறு வழியில்லை என்று ஒற்றைச்சொல்லில் கதையை முடித்து விடப்பார்க்கிறார்கள். 

ஆனால், நாடு மிகப் பெரிய தேசிய நெருக்கடிகளால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. முக்கியமாக இரண்டு நெருக்கடிகளால் (பிரச்சினைகளால்). ஒன்று பொருளாதார நெருக்கடி. அடுத்தது இனப்பிரச்சினை. 

இந்த இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. ஒன்றை விட்டு ஒன்றைச் சீர் செய்ய முடியாது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு போரும் அதற்கான செலவும் ஒரு காரணம் என்றால், நாட்டில் பிளவுண்ட சமூக நிலை தொடர்வது இன்னொரு காரணம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது எளிய உண்மை. ஆனால், இந்த எளிய உண்மை இனவாதத்தினால் புறக்கணிக்கப்பட்டு, நான்காகத் துண்டுபட்டால் உண்டு வாழ்வு என்று செயற்பட்டதன் விளைவே இன்றைய நெருக்கடியாகும். 

தேசிய நெருக்கடி என்பது அனைவரையும் பாதிக்கும் ஒன்றாகும். இனம், மதம், பிரதேசம், சாதி, பால், வயது என எந்த வேறுபாடுகளையும் அது பார்க்காது. ஆகவே அவ்வாறான தேசிய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பும் அவசியமானது. இல்லையென்றால் அந்த நெருக்கடியைக் கடக்கவோ முறியடிக்கவோ முடியாது. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மிகப் பாரிய சிக்கலை உண்டாக்கியுள்ள ஒன்று. நாளாந்த உணவுப் பொருட்களுக்கே பல லட்சக்கணக்கான மக்களைச் சிரமப்பட வைத்துள்ளது. பல தொழில்துறைகள் படுத்து விட்டன. விலை வாசியும் மின்சாரம், நீர் போன்றவற்றின் பாவனைக் கட்டணங்களும் மிக உச்சத்துக்கு ஏறியுள்ளன. மருந்துப் பொருட்களுக்கு மிகப் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நலத்திட்டங்கள் அனைத்தும் படுத்துக் கொண்டிருக்கின்றன. அபிவிருத்தி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றாகி விட்டது. வசதிகளைக் குறைக்குமாறு அரசு மக்களுக்கு ஆணையிடும் அளவுக்கு நிலைமை வந்துள்ளது. தேவையற்ற செலவீனங்களைக் குறையுங்கள் என்று ஜனாதிபதி கெஞ்சுகிறார். அடுத்த ஆண்டைக் கடப்பது கடினமானது என்று அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. 

இப்படியெல்லாம் இருந்தாலும் சனங்கள் இன்னும் வழமையைப் போலவே வாழ முற்படுகிறார்கள். பொருட்களை வாங்கிச் சேகரிக்க முற்படுகிறார்களே தவிர, புதிய சூழலை உருவாக்க முயற்சிக்கவில்லை. எந்தச் செலவீனத்தையும் குறைத்ததாகக் காணவில்லை. நிலைமையைக் கருத்திற் கொண்டு வாழ்க்கை முறையில் மாற்றத்தைச் செய்வதற்கான எந்த அடையாளமும் தெரியவேயில்லை. வருமானத்தைக் கூட்டுவதற்கான வழிகளையும் காணவில்லை. இதுதான் ஆகப் பெரிய பிரச்சினை. செலவு வரவரக் கூடிச் செல்கிறது. அதேவேளை வருமானமோ வரவரக் குறைந்து கொண்டு போகிறது. அதிலும் விவசாயம், மீன்பிடி போன்ற தொழிலில் ஈடுபடுகின்றவர்களின் பாடு மிகச் சிக்கலானது. அவர்கள் தொழிலைச் செய்வதற்கான அடிப்படை ஆதாரங்களே இல்லை என்ற நிலையில் அவர்களால் எப்படித் தொழிலைச் செய்ய முடியும்?ஆகவே அவ்வாறான குடும்பங்களின் பொருளாதாரம் படு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஒருவேளை உணவுக்கே சிரமப்படுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்து விட்டது என்கிறது ஒரு புள்ளி விவரம். 

இந்த நிலையில் நாம் நிச்சயமாக ஒரு மாற்றுப் பொருளாதார முறைமைக்கும் மாற்று வாழ்க்கை முறைக்கும் செல்ல வேண்டும். இது ஒரு பண்பாடாக வளர்த்தெடுக்கப்படுவது அவசியம். எதுவும் பழக்கப்பட்டால் சரியாகி விடும் என்பார்கள். மனிதனே ஒரு பழக்கத்திற்கு இசைவான பிராணிதான். இதுவரையான வாழ்க்கை முறையை விட்டு புதிய வாழ்க்கை முறைக்குப் பழகினோம் என்றால் பாதிப்பிரச்சினையை எளிதாகக் கடந்து விட முடியும். 

முக்கியமாக சுய உற்பத்தி சார்ந்த உணவு தொடக்கம் பாவனைப்பொருட்கள் வரையில் நாமே தயாரிக்க வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உணர்வோடு அனைவரும் வேலை செய்ய வேண்டும். இதற்கும் பிரச்சினை உண்டென்பது உண்மை. குறிப்பாக “உற்பத்தித்துக்குத் தேவையான மின்சாரம்,எரிபொருள் போன்றவை சீரில்லாதிருக்கும்போது எப்படி உற்பத்தியில் ஈடுபட முடியும்?” என்று யாரும் கேட்கலாம். 

நெருக்கடி என்றாலே அப்படித்தான். சிக்கலும் சிரமங்களும் அதிகமாக இருக்கும். அதற்குத்தான் இப்பொழுது பெறப்படுகின்ற கடனை எப்படி முகாமைத்துவம் செய்வது என்பதைக் குறித்த கரிசனை வேண்டும் என்கிறோம். உற்பத்தித்துறைக்கும் சுற்றுலா போன்ற வருவாய்த்துறைக்கும் கூடுதல் முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலமாக இதைச் சரிசெய்து கொள்ள முடியும். 

இளைய தலைமுறையினர் இதில் அதிகமான பங்களிப்பைச் செய்வது அவசியம். அவர்கள் புதிதாக –வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். இலகு தன்மைகளை உண்டாக்கும் ஆற்றலுடையவர்கள். ஆகவே “நாட்டை நாம் மீட்டெடுப்போம். ஒரு புதிய யுகத்தைப் படைப்போம்” என்று அவர்கள்செயலில் இறங்க வேண்டும். இதற்கு இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டம் அவசியம். தீர்மானங்களை எடுக்கின்ற இடங்களிலும் அவர்களுக்கான இடம் அளிக்கப்படுவது அவசியம். 

அவர்களுக்கான வாய்ப்புகளை– வசதிகளை தாராளமாக அளிக்க வேண்டும். அவர்கள் நினைத்தால் இந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில், மிகச் சிறப்பான முறையில் மீட்டெடுப்பார்கள். அத்தகைய ஆற்றல் இளைய தலைமுறையினரிடத்தில் உண்டு. உலகிலே உற்பத்தித் துறையில் ஈடுபடுகின்றவர்களில் 80 வீதமானோர் இளையோரே. ஆகவே இந்த உலகத்தை இயங்க வைப்பது இளைய தலைமுறையினரே. அவர்களை நாம் சரியாக ஏற்றுக் கொண்டால் அவர்கள் நாட்டை வளர்த்தெடுப்பார்கள். 

இப்பொழுது 25 வயதுக்குட்பட்ட இளைஞர் – யுவதிகளில் பெரும்பாலானோர் எந்தத் தொழிலும் இல்லாமல், உயர் கல்வியைத் தொடராமல் சும்மாவே உள்ளனர். அவர்களுடைய கைகளில் செல்ஃபோனும் தலைக்குள்ளே யூரியுப் காட்சிகளுமே நிறைந்துள்ளன. இதற்கு அவர்களைக் குறை சொல்லிப் பயனில்லை. அவர்கள் படிக்கின்ற காலத்திலேயே வேலையைச் செய்யக் கூடிய ஏற்பாடு நாட்டில் இருக்க வேண்டும். 

இன்று பல லட்சம் பேருக்கு வேலையே இல்லை. வேலையில்லாத பட்டதாரிகளை வைத்திருக்கும் நாடு அல்லவா நமது! வேலையில்லாத இளையோரையும் அப்படித்தான் வைத்திருக்க முயற்சிக்கும். பழக்க தோசம் அப்படி. 

ஆனால், அதற்கு இனிச் சாத்தியமே இல்லை. இனி ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். முன்பை விட இரண்டு மடங்கு, பல மடங்கு உழைக்க வேண்டும். வருவாயைப் பெருக்க வேண்டும். இதை ஒரு அவசரகால நிலையாக அரசாங்கம் பிரகடனப்படுத்துவது அவசியம். அரச உத்தியோகத்தர்களின் பணித் தன்மை தொடர்பாகவும் பணி நேரம் தொடர்பாகவும் புதிய முறையில் சிந்திக்க வேண்டும். அனைவரும் ஒரு குறுகிய காலத்திற்காவது பொருளாதார மேம்பாட்டுக்குப் பங்களிக்க வேண்டும் என்ற கட்டாய நிலை கொண்டுவரப்படுவது அவசியம். சில நாடுகளில் இருக்குமே, கட்டாய இராணுவப் பயிற்சி. அதைப்போல, இங்கே கட்டாயப் பொருளாதார மீட்சித்திட்டத்தில் பங்கேற்பு என்ற திட்டத்தைக் கொண்டு வருவது அவசியம். 

ஏனென்றால் ஏற்கனவே நாம் வாங்கியது கடன். வாங்கிக் கொண்டிருப்பதும் கடன். வாங்கப் போவதும் கடன். ஆகவே இந்தக் கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். கொடுத்தே ஆக வேண்டும். தப்ப முடியாது. இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சினைகள் எல்லாம் வரும். மேலும் பல தடைகளையும் இறுக்கங்களையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அது நம்முடைய எதிர்காலத்தையே இல்லாதொழித்து விடும். இப்போதைய நிலையை விட மோசமான நிலையை உண்டாக்கும் என்ற புரிதல் –எச்சரிக்கை வேண்டும். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியொரு ஆளாக நின்று பதவிகளை எடுத்துக் கொண்டவர், ஏற்றிருப்பவர். இன்று அரசியற் சவால்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் நின்று நாட்டை நிர்வகிக்கிறார். இந்த இடத்தில் அவர் மேலும் சில விடயங்களைக் குறித்துத் துணிவாகவும் சரியாகவும் சிந்திக்க வேண்டும். அது காலத்தின், களத்தின் அவசியமாகும். அப்படிச் செய்தால் உண்மையில் அவர் வரலாற்றுத் தலைவராக காலத்தினால் நினைவு கொள்ளப்படுவார். 

தேசிய பொருளாதாரக் கொள்கையை அவர் சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்ற ஊழல், இனமுரண், அரசியல் முரண்பாடுகள், பொருத்தமற்ற பொருளாதாரத் திட்டங்கள் போன்றவற்றைக் கடக்கக் கூடிய அடிப்படைகளை உருவாக்க வேண்டும். அவரால் இவற்றைச் செய்ய முடியும். அதைச் செய்யக் கூடிய காலமும் இதுதான். இந்த நெருக்கடியின்போதுதான் ஏனைய பிரச்சினைகளுக்கான மருத்துவத்தையும் செய்யக் கூடியதாக இருக்கும். 

இளைய தலைமுறையினரை அவர் அரவணைத்துக் கொள்வது அவசியம். அவர்களுக்கான அங்கீகாரத்தையும் இடத்தையும் அவர் சரியாக வழங்கினால் மாற்றங்களை இலகுவாக எட்ட முடியும். 

இப்பொழுது பாராளுமன்றத்தைப் பார்த்தீர்கள் என்றால் புரியும். அத்தனை தலைகளும் கிழடு தட்டியவை. ஊழல், இனவாதம், பொறுப்பின்மை போன்றவற்றின் திரண்ட வடிவமாக இருப்பவை. ஆனால், இதைப்பற்றிப் பொருட்படுத்தாமல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசுப்பணிகளில் இருந்து ஓய்வு என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்புச் சரியானதே. அதே அறிவிப்பு நம்முடைய அரசியல் தலைமைகளுக்கும் பொருந்தக் கூடியதாக இருந்தால் சிறப்பு. கழிவுகளைக் கையில் வைத்துக்கொண்டு, உருப்படியாக எந்தப் புதிய நன்மைகளையும் செய்ய முடியாது. 

தேசிய நெருக்கடிக்கு தேசிய இடர் நீக்க வேலைத்திட்டம் அவசியம். அதையே நாடும் நாமும் வேண்டி நிற்கிறோம். எல்லோரும் திடமாக எண்ணிக் கொண்டால், ஐந்து ஆண்டுகளில் இலங்கையை மிகப் பெரிய பொருளாதார வளமுடைய நாடாக வளர்த்தெடுத்து விட முடியும். அதை நோக்கிப் பயணிப்பதைப்பற்றிச் சிந்திப்போம். 
 

https://arangamnews.com/?p=8036

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கடன்வாங்கி கல்யாணம் செய்யும் காலமல்ல

நல்லதொரு கட்டுரை.

இணைப்புக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எனக்கு இந்த செய்தியில்... சந்தேகமாக இருக்கு. இவரின் இயற்கை மரணத்தை, அரசியலுக்கு பயன் படுத்துகிறார்கள் போலுள்ளது. கட்சி அலுவலகத்தில், காலை 11 மணிக்கு.... இந்த 85 வயது மனிதரின்  தற்கொலையை தடுக்கக் கூட ஒருவரும் இல்லையா? 
  • இந்த பெல்ஜியம் டீம் golden generation இல்லை old generation. கிழட்டு பரதேசிகளை செலக்ட் பண்ணி களமிறக்கும்  Martinez இதோட வீட்டை போக வேண்டியதுதான். Completely disjointed team. 
  • இன்று இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மொரோக்கோ அணி பெல்ஜியம் அணியை 2-0 கோல் கணக்கில் வெற்றியீட்டியது. முடிவு: பெல்ஜியம்  0 - 2  மொரோக்கோ மொரோக்கோ வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு மாத்திரம் ஒரு புள்ளி கிடைக்கும்!
  • வட, கிழக்கில் உணர்வபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு : அஞ்சலிக்காக திரண்ட மக்கள் கூட்டம் ! 27 Nov, 2022 | 08:17 PM வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர். வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்ததன் பிரகாரம் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் தீவகம் சாட்டி, கோப்பாய்,, கொடிகாமம், உடுத்துறை, ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றதுடன் , அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மாவீரர் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து தமிழர் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. நந்திக்கடலில் மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செய்தார் ரவிகரன் உயிர்நீத்த மாவீரர்களுக்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (27)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.   யாழ். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக சிவாஜிலிங்கம் அஞ்சலி யாழ். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தினர்.  கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மாவீரர்களை நினைவு கூர்ந்து அன்னதான நிகழ்வு இதேவேளை, யாழ். அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் இன்றைய தினம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் இறுதி நாளில் அன்னதான நிகழ்வு இடம் பெற்றது. உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வினை  முன்னாள் வலி வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது. முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அஞ்சலி முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கப்பல் மலையில் உள்ள அவரது வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதன் போது வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் அஞ்சலி மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றினார். அச்சுவேலி பகுதியில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) மரணமடைந்திருந்தார். மாவீரா் மில்லருக்கு அஞ்சலி  மாவீரா் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரா் மில்லரின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.  வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினா் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்திருந்தனா்.  இதன்போது மாவீரா்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் ஆலங்குளத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி மாவீரர் தின நாளான இன்று (27) திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக அக வணக்கத்துடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.  இதில் பெரும்பாலான உறவுகள் ஈகைச் சுடரேற்றி அஞ்சலிகளை செலுத்தினர். புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பெருந்திரளானவர்கள் இதனை அனுஷ்டித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். பலர் வீடுகளிலும் மாலை 6.00 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலிசெலுத்தினர்   வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டின் போது பொலிஸார் வருகைதந்து விபரங்களை திட்டியுள்ளனர். இதனையடுத்து மாவீரர்களை நினைவுகூறும் திருவுருவப்படத்தில் விடுதலைப்புலிகளை நினைவுகூறுவதாக உள்ளதென தெரிவித்து குறித்த உருவப்படத்தினையும் அங்கிருந்து எடுத்து சென்றனர். எனினும் குறித்த உருவப்படத்திற்கு ஏற்பாட்டாளர்கள் கறுப்பு நிற வர்ணம் தீட்டி மீண்டும் வைத்து அஞ்சலி செலுத்தினர். யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பண்டிதரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார். முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல் முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. அந்தவகையில் பிரதான சுடரினை மூன்று மாவீரர்களது சகோதரியான உடுப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் வேணன் அக்கினேஸ் என்பவர் ஏற்றினார். முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மீள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்கு முன்பாக வீதியோரமாகவே உறவுகளால் மாவீரர்களுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந் நிலையில் இராணுவத்தினரின் பலத்த கண்காணிப்பிற்கு மத்தியில் ஒருவித அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே உறவுகளால் அஞ்சலி செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. மேலும் இந்த மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களது உறவுகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு- தரவை மற்றும் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. மட்டக்களப்பு- தரவை     அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் திரண்டு அஞ்சலி   அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டு மாவீரர் நாள் நினைவேந்தல்களை மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுத்தனர். மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல் முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. அந்தவகையில் பிரதான சுடரினை மூன்று மாவீரர்களது சகோதரியான உடுப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் வேணன் அக்கினேஸ் என்பவர் ஏற்றினார். முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மீள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்கு முன்பாக வீதியோரமாகவே உறவுகளால் மாவீரர்களுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந் நிலையில் இராணுவத்தினரின் பலத்த கண்காணிப்பிற்கு மத்தியில் ஒருவித அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே உறவுகளால் அஞ்சலி செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது. மேலும் இந்த மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களது உறவுகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன் இடம்பெற்ற மாவீரர் நாள் அஞ்சலி யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் - எள்ளாங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  பிரதான ஈகை சுடரினை மேஜா் சோதியாவின் (சோதியா படையணி)  தாயாா் ஏற்றிவைத்தாா்.  அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் , சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த ஏனையவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  யாழ். - கோப்பாயில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். யாழ். சாட்டி துயிலும் இல்லத்தில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மன்னாரில் மாவீரர் தின நினைவேந்தல் முன்னெடுப்பு மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு மாவீரர்  நினைவு தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நினைவு கூரப்பட்டுள்ளது.   தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூரப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி  மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு .இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஆட்காட்டி வெளி  மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் தற்போது ஒன்று திரண்டு   உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.  கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி   கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.     https://www.virakesari.lk/article/141428
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.