Jump to content

தமிழ் பகுதிகளில் சீனாவின் ஆர்வம்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பகுதிகளில் சீனாவின் ஆர்வம்? - யதீந்திரா

 

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகம் பேசப்படும் ஒன்று. சர்வதேசளவில் இலங்கையின் நெருக்கடிகள் சீன-சிறிலங்கா உறவின் வழியாகவே நோக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணமாகவும் சீனாவே நோக்கப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க வெளியக உளவுத் துறையான சி.ஜ.ஏயின் தலைவர் கூட, ஒரு கலந்துரையாடலின் போது, சீனாவுடன் தூரநோக்கின்றி பொருளாதார தொடர்புகளை பேணிக் கொள்ளும் நாடுகள் இலங்கையிலிருந்து கற்றுகொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார். இலங்கை தூரநோக்கின்றி சீனாவின் திட்டங்களை அனுமதித்ததன் விளைவாகவே, இன்று பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சி.ஜ.ஏயின் தலைவர் இவ்வாறு கூறுவதிலிருந்து எந்தளவிற்கு, சீன விவகாரம் மேற்குலகால் நோக்கப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சீனாவிற்கும் சிறிலங்காவிற்குமான இருதரப்பு உறவு 1957களிலிருந்து நீடிக்கின்றது. ஆனாலும் நாடுகளுக்கிடையிலான சாதாரண உறவாகவே அது இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போதுதான், சீன-இலங்கை உறவில் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி யுத்தத்தின் போது, ஆயுதளபாட உதவிகளை செய்வதற்கு மறுத்திருந்த நிலையில்தான், சீனா அந்த இடத்தை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டது. இந்த பின்னணியில் நோக்கினால், மகிந்த ராஜபக்ச காலம்தான் சீனாவிற்கும் சிறிலங்காவிற்குமான தேனிலவுக் காலமாக இருந்தது. 1978இலிருந்து இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை ஜப்பானே பெற்றிருந்தது. மகிந்த காலத்தில் ஜப்பானின் இடத்தை சீனா எடுத்துக் கொண்டது.

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் முதல் பார்வையில் இந்தியாவிற்கே சிக்கலானது. ஏனெனில் இலங்கை ஒரு உடனடி அயல்நாடு. இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றிற்குள், சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது நீண்டகால நோக்கில் இந்தியாவிற்கு சிக்கலானதாகும். அடுத்தது அமெரிக்காவின் நோக்கிலும் சீனாவின் பிரசண்ணம் சிக்கலானது. ஆனால் அமெரிக்காவின் அவதானம் உலகளாவியது. சீனாவின் செல்வாக்கு இந்து சமூத்திர பிராந்தியத்தில் அதிகரித்துச் செல்லுதல் என்னும் நோக்கில்தான் இந்த விடயத்தை அமெரிக்கா நோக்கும். இந்த பின்னணியில்தான், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர், மைக் பொம்பியோ, இலங்கையின் இறைமையை சீனா, கடலிலும் நிலத்திலும் மோசமாக மீறிவருவதாக குற்றம்; சாட்டிருந்தார். சீனாவின் பிரசண்ணம் சிக்கலானது என்னுமடிப்படையில்தான் இவ்வாறானதொரு கடுமையான அறிக்கையை பொம்பியோ வெளியிட்டிருந்தார். பொம்பியோவின் கூற்றுக்கள், சீனாவின் பிடிக்குள் அகப்பட்டிருக்கும் ஒரு நாடாக இலங்கையை நோக்குவதற்கான பார்வையை முன்வைத்தது. இன்று இலங்கை தொடர்பில் வெளிவரும் உலகளாவிய அவதானம் இந்த பின்புலத்தில்தான் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால் சீனா இவ்வாறான கடுமையான குற்றச்சாட்டுக்களால் பின்வாங்கும் நிலையிலில்லை. கிடைத்த சந்தர்பத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. தெற்கில் வலுவாக காலூன்றிருக்கும் சீனா, தற்போது தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் காலூன்றுவதற்கான வாய்ப்புக்களை தேடுவது போல் தெரிகின்றது. சீனத் தூதுவர், வடக்கு கிழக்கிற்கு விஜயங்களை மேற்கொள்வதில் அதிக ஆர்வத்தை காண்பிக்கின்றார். இவ்வாறானதொரு ஆர்வத்தை முன்னர் சீனா ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. வடக்கிற்கு விஜயத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்களில் தூதுவர் ஈடுபடுகின்றார். அதே போன்றுதான் கிழக்கிலும். சமூக நலத்திட்டங்களுக்கு நிதியளிப்பதில் ஆர்வம் காண்பிக்கின்றார். இதன் மூலம் முழு இலங்கையிலும் தங்களின் பிரசண்ணத்தை வைத்திருக்க வேண்டுமென்று சீனா விரும்புவது போல் தெரிகின்றது. கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் நலிவுற்றவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான சிறியளவிலான உதவிகளை சீனா செய்திருக்கின்றது. அதே போன்று விவசாய திட்டமொன்றையும் பரீசிலிக்கவுள்ளது.

 

http://www.samakalam.com/wp-content/uploads/2022/09/China-Ambassador-Sri-Lanka-Qi-Zenhong-1024x569.jpg

சீனாவிற்கும் தமிழர்களுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகளுண்டு. இந்த தொடர்புகளை ஆராயும் முயற்சியிலும் சீனா முன்னர் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில்தான் அண்மைக்காலமாக தமிழ் பகுதிகளுடானான தொர்புகளை அதிகரிக்க முயற்சிக்கின்றது. இதுவும் இந்தியாவிற்கு சிக்கலான ஒன்றுதான். ஏனெனில் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், எவர் ஆதரவளித்தாலும், அதனை பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருக்கின்றனர். இந்த நிலைமையானது மறுபுறமாக, தமிழர்களுடனான சீனாவின் ஊடாட்டங்களை அதிகரிப்பதற்கு மிகவும் சாதகமானது. குறிப்பாக கிழக்கிலங்கையிலுள்ள மாவட்டங்களில் வாழும் வறுமைநிலையிலுள்ள தமிழ் மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிளை எதிர்கொண்டு வருகின்றனர். கிழக்கிலங்கை தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்தங்கியிருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதான பார்வையொன்றும் கிழக்கிலங்கையின் படித்த தமிழர்கள் மத்தியிலுண்டு. இந்த பின்புலத்தில்தான் சீனத் தூதரகத்தை நாடும் போக்கு உருவாகியது. வடக்கு கிழக்கில் வாழும் பின்தங்கிய மக்கள் தொடர்பில் சீனத் தூதரகம் பிரத்தியேக மதிப்பீடுகளையும் செய்திருக்கலாம்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் மட்டுமே, உணர்வு ரீதியாக பிணைந்திருக்கின்றனர். இதற்கு தமிழ் நாடு ஒரு பிரதான காரணமாகும். இரண்டாவது காரணம் இந்து மதமாகும். வடக்கு கிழக்கு இந்து தமிழர்களை பெரும்பாண்மையாக கொண்டிருக்கும் ஒரு தமிழ் பகுதி. இவ்வாறானதொரு ச10ழலில்தான் பொருளாதார தேவைகளை ஒரு விடயமாகக் கொண்டு, சீனா அதன் நகர்வுகளை மேற்கொள்கின்றது. நிலைமை சீனாவிற்கு சாதகமாகவே இருக்கின்றது. சீனா கொஞ்சம் கொஞ்சமாக முன்னெடுக்கும் திட்டங்கள் காலப் போக்கில், தமிழ் பகுதிகளில் சீன ஆதரவு பிரிவுகளை ஏற்படுத்தினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் முஸ்லிம்கள் ஒரு அரசியல் பிரிவாக வளர்ச்சியுற்றிருக்கின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவிற்கு நெருக்கமானதொரு மக்கள் பிரிவாக ஒரு போதுமே இருக்கப் போவதில்லை. இந்த பின்புலத்தில் கிழக்கு மாகாணத்தில் இந்தியாவிற்கு நெருக்கமான மக்கள் கூட்டமென்றால், அது இந்து தமிழ் மக்கள் மட்டும்தான். அந்த மக்கள் மத்தியிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால் அது இந்தியாவிற்கு நல்லதல்ல.

இந்தியா பல்வேறு உதவிகளை செய்திருக்கின்றது. ஆனால் சமூகத்தோடு ஊடாடக் கூடிய திட்டங்களில் இந்திய தூதரகம் அதிகம் நாட்டம் கொள்வதில்லை. இனியும் அப்படி இருக்க முடியுமா? சர்வதேச அரசுசாரா நிறுவனங்கள் உள்ளுர் நிறுவனங்களின் திட்டங்களுக்கு நிதியளித்தாலும் கூட, அவைகள் எந்தளவிற்கு சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதில் கேள்விகளுண்டு. நிபுனத்தும் வாய்ந்த உள்ளுர் நிறுவனங்கள் மூலம் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதிலும் சந்தேகங்கள் உண்டு.

சீனா ஒவ்வொரு அடியையும் அவசரப்படாமல் எடுத்துவைப்பதாகவே தெரிகின்றது. அதே வேளை சீனாவின் நகர்வுகள் நீண்டகால நோக்கம் கொண்டது. இந்தியாவின் ஆர்வங்களை நன்கு கணித்தே சீனா ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றது. வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் மீது இந்தியா செல்வாக்குச் செலுத்த முடியும் ஆனால் கிழக்கு அப்படியல்ல. ஏனெனில் கிழக்கிலங்கை தமிழ் மக்கள், தாங்கள் பல்வேறு விடயங்களில் பின்தங்கியிருப்பதாக கருதுகின்றனர். வடக்கிற்கு இருப்பது போன்று புலம்பெயர் ஆதரவு கிழக்கிலங்கை தமிழர்களுக்கில்லை. இந்த இடைவெளி சீனாவிற்கு மிகவும் சாதகமானது.

சீனா என்ன நோக்கில் இலங்கையை பயன்படுத்த விளைகின்றது என்னும் கேள்விகளுடன்தான் அனைத்தும் தொடர்புபட்டிருக்கின்றது. தன்னை நோக்கி மேற்கொள்ளப்படும் மேற்குலக நகர்வுகளை எதிர்கொள்ளுவதற்கான ஒரு தடுப்பரனாக இலங்கையை பயன்படுத்த முயற்சிக்கின்றதா? இந்தியாவுடன் எல்லைப்புறங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்கான ஒரு துப்புச் சீட்டாக இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றதா? இவைகள் ஊகங்கள் மட்டுமே ஏனெனில் புவிசார் அரசியல் மோதல்கள் தொடர்பில் துல்லியமான கணிப்புக்களை எவருமே செய்ய முடியாது. சில அவதானங்களை மட்டுமே முன்வைக்கலாம். புவிசார் அரசியல் போட்டிகளில் எதுவும் நடக்கலாம். ஆனால் சீனா அண்மைக்காலமாக, தமிழ் பகுதிகள் மீது ஆர்வம் காண்பித்துவருகின்றது என்பது மட்டும் உண்மை. உதவித் திட்டங்கள் மூலம், சீனா தமிழ் மக்களுடன் நெருங்க முயற்சிக்கின்றது – நெருங்கும் என்பதும் உண்மை.
 

 

http://www.samakalam.com/தமிழ்-பகுதிகளில்-சீனாவின/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கில் நடந்த மாற்றங்களை பற்றி அறியாமல், வாள், குதிரை படை, மனித வலு போன்றவற்றால் எந்த எதிரியையும் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டு, எமது இராச்சியங்களை மேற்கு வல்லரசுகளுக்கு இழந்தோம் 500 வருடங்களுக்கு முதல்.

அதன் பின்பு நடந்தது எல்லாம் வரலாறு என்று சுருக்கி இருக்கிறோம்.

அது போன்ற தவறை மீண்டும் செய்கிறோம். 

சீனாவில் என்ன நடக்கிறது, என்ன மாற்றம், எந்த வேகத்தில் மாற்றம் என்பதை அறியாமல்,  ஈழத்தமிழர்கள் (பூகோள) அரசியல் செய்கிறார்கள்.

யதீந்திரா கூட வரலாற்று தொடர்பு என்பதாய் புரியாதவராக இருக்கிறார்.  இந்தியாவுடன் எப்போது வரலாற்று தொடரப்பு இருந்தது. இந்திய எனப்படுவது (அது அது எது வாகிலும் ) 1947. வரலாற்று தொடர்பு என்பது ஒருபோதுமே இருந்து இருக்க முடியாது, இப்பொது இந்தியா எனறு அதுவாக கருதும் இந்தியாவுடன். ஏனெனில், இந்தியா எனறு அதுவாக கருதும் இந்தியாவுக்கு  75 வருடமே அதன் வரலாறு.

உணர்வு அடிப்படையிலான உறவை, நாமே உருவகித்து, இல்லாத ஒன்றை இருப்பதான மாயைக்குள் சிக்கி, அதை விட முடியாமல் (பகுதியாக புலிகளுக்கும் கூட), புலிகளின் மற்றும் இனப்பப்டுகொலையின் அழிவுடன் மாயை அகன்றது.  

யதீந்திரா இன்னும்  அந்த மாயைக்குள் இருந்து வெளிவர  முடியாதவராக இருக்கிறார் போல இருக்கிறது, அவரின் ஆய்வுகள்.

வரலாற்று தொடர்பு இருந்து இருக்குமாயின், இனப்படுகொலையை ஹிந்தியா முன்னின்று நடத்தி இருக்காது, எந்தவிதமான கசப்புகள் இருந்து இருக்குமாயினும்.

சீனா, இந்தியா என்ற சொல்லை பிரித்தானியர் அறிமுகப்படுத்தும் முன்பே இருந்தது. சோழர் காலத்திலும் இருந்தது சீனாவே, ஆண்ட வம்சங்கள் எதுவாகிலும். 

அனால், இந்தியா என்று அதுவாக கருதும் இந்தியா, இந்த பிராந்திய வரலாற்றில் ஒரு (anglo saxon) பிறழ்வு, இது ஒரு போதும் நிலைத்து நிற்காது என்பதே எனது மதிக் கண்களுக்கு தெரிவது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களிலும் தற்ப்பொதும் தமிழர் தரப்பு இந்திய மேற்கு சார்பு நிலைப்பாடே எடுத்து வருகிறது ஒரு வித்தியாசம் விடுதலை புலிகள் இந்திய இறையாணமைக்கு வேறு நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு உடன்படவில்லை அதே நேரம் இலங்கையின் இறையாண்மைக்கு இந்தியாவினால் அச்சுறுத்தல் ஏற்பட்ட போதும் அதற்கு உடன்பாடான முடிவினை எடுத்திருக்கவில்லை.

ஆனால் இந்தியாவிற்கோ அல்லது மேற்குக்கோ கண்ணை மூடிக்கொண்டு தமிழர்களின் உரிமைகளை சமரசம் செய்ய எந்த நிலையிலும் முயல்வில்லை.

ஒரு புறம் இந்தியா தமிழர்களுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் போரில் குதித்து பேரழிவினை உருவாக்கியது, இந்திய மத்தியரசின் தமிழர் விரோத கொள்கை வகுப்பில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை ஆனால் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படலாம் அல்லது இதே நிலை தொடரலாம்.

மறுவளமாக மேற்கின் நிலை தமிழர்களை பகடைகாய்களாக இலங்கையினை வழிக்கு கொண்டு வருவதற்காக  பேச்சளவில் மட்டுமே ஆர்வம் காட்டுவது போல காட்டி தமது தேவைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே இதுவரைகாலமும் மேற்கு இயங்கிவந்துள்ளது இந்த நிலை மாறுமா? என்பதனை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே இந்திய நலனுக்காக பெரிய அளவில் இழப்புகளை சந்தித்த தம்ழ் மக்கள் சீனாவிடம் பெறும் நலனுகளுக்கெதிராக  எதற்கெடுத்தாலும் இந்தியாவிற்காக வரிந்து கட்டிகொண்டு எதிர்க்கும் தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த தமிழ் அரசியல்வாதிகளால் எந்த பிரயோசனமும் தமிழ் மக்களுக்கு இதுவரை ஏற்படவிலை இனியாவது அவர்களுக்கு வரும் இந்த உதவிகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் பேசாமல் இருப்பதே பெரிய உதவியாக இருக்கும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kadancha said:

மேற்கில் நடந்த மாற்றங்களை பற்றி அறியாமல், வாள், குதிரை படை, மனித வலு போன்றவற்றால் எந்த எதிரியையும் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டு, எமது இராச்சியங்களை மேற்கு வல்லரசுகளுக்கு இழந்தோம் 500 வருடங்களுக்கு முதல்.

அதன் பின்பு நடந்தது எல்லாம் வரலாறு என்று சுருக்கி இருக்கிறோம்.

அது போன்ற தவறை மீண்டும் செய்கிறோம். 

சீனாவில் என்ன நடக்கிறது, என்ன மாற்றம், எந்த வேகத்தில் மாற்றம் என்பதை அறியாமல்,  ஈழத்தமிழர்கள் (பூகோள) அரசியல் செய்கிறார்கள்.

யதீந்திரா கூட வரலாற்று தொடர்பு என்பதாய் புரியாதவராக இருக்கிறார்.  இந்தியாவுடன் எப்போது வரலாற்று தொடரப்பு இருந்தது. இந்திய எனப்படுவது (அது அது எது வாகிலும் ) 1947. வரலாற்று தொடர்பு என்பது ஒருபோதுமே இருந்து இருக்க முடியாது, இப்பொது இந்தியா எனறு அதுவாக கருதும் இந்தியாவுடன். ஏனெனில், இந்தியா எனறு அதுவாக கருதும் இந்தியாவுக்கு  75 வருடமே அதன் வரலாறு.

உணர்வு அடிப்படையிலான உறவை, நாமே உருவகித்து, இல்லாத ஒன்றை இருப்பதான மாயைக்குள் சிக்கி, அதை விட முடியாமல் (பகுதியாக புலிகளுக்கும் கூட), புலிகளின் மற்றும் இனப்பப்டுகொலையின் அழிவுடன் மாயை அகன்றது.  

யதீந்திரா இன்னும்  அந்த மாயைக்குள் இருந்து வெளிவர  முடியாதவராக இருக்கிறார் போல இருக்கிறது, அவரின் ஆய்வுகள்.

வரலாற்று தொடர்பு இருந்து இருக்குமாயின், இனப்படுகொலையை ஹிந்தியா முன்னின்று நடத்தி இருக்காது, எந்தவிதமான கசப்புகள் இருந்து இருக்குமாயினும்.

சீனா, இந்தியா என்ற சொல்லை பிரித்தானியர் அறிமுகப்படுத்தும் முன்பே இருந்தது. சோழர் காலத்திலும் இருந்தது சீனாவே, ஆண்ட வம்சங்கள் எதுவாகிலும். 

அனால், இந்தியா என்று அதுவாக கருதும் இந்தியா, இந்த பிராந்திய வரலாற்றில் ஒரு (anglo saxon) பிறழ்வு, இது ஒரு போதும் நிலைத்து நிற்காது என்பதே எனது மதிக் கண்களுக்கு தெரிவது.

நல்ல கருத்து.

எமது நலனுக்கு தாம் எதிரானவர்கள் என்பதை இந்தியா ஆணித்தரமாக இதுவரை சொல்லி வந்துள்ளதுதான் உண்மை, இந்த நிலையில் எமக்கெதிரான நடவடிக்கையினை செய்த போதும் தமிழ் மக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்திய இறையாண்மைக்கு எந்த காலத்திலும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உடன்படுவதில்லை.

ஆனால் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்படாமல் தொடரும் பட்சத்தில், எமக்காதரவான சூழ்நிலைகளை தமிழர்கள் புறந்தள்ளுவது தமிழர்களின் வாழ்வாதாரத்தினைக்கேள்விக்குறியாக்கிவிடும்.

எமது நலஙளும் பேணப்பட வேண்டும் அதே நேரம் மற்றவர்களும் பாதிக்கப்படக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யதீந்திரா...

நீங்கள்  கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது ...😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2022 at 08:49, vasee said:

ஏற்கனவே இந்திய நலனுக்காக பெரிய அளவில் இழப்புகளை சந்தித்த தம்ழ் மக்கள் சீனாவிடம் பெறும் நலனுகளுக்கெதிராக  எதற்கெடுத்தாலும் இந்தியாவிற்காக வரிந்து கட்டிகொண்டு எதிர்க்கும் தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த தமிழ் அரசியல்வாதிகளால் எந்த பிரயோசனமும் தமிழ் மக்களுக்கு இதுவரை ஏற்படவிலை இனியாவது அவர்களுக்கு வரும் இந்த உதவிகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் பேசாமல் இருப்பதே பெரிய உதவியாக இருக்கும்

நல்ல கருத்து.
இந்தியாவிற்காக வரிந்து கட்டிகொண்டு தமிழர்களுக்கு கிடைக்கும் உதவிகளை எதிர்க்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல மட்டுமல்ல அது மாதிரி செயல்படும் யாழ்பாணத்து பல்கலை மாணவர்களும் தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2022 at 08:49, vasee said:

இந்தியாவிற்காக வரிந்து கட்டிகொண்டு எதிர்க்கும் தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த தமிழ் அரசியல்வாதிகளால் எந்த பிரயோசனமும் தமிழ் மக்களுக்கு இதுவரை ஏற்படவிலை இனியாவது அவர்களுக்கு வரும் இந்த உதவிகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் பேசாமல் இருப்பதே பெரிய உதவியாக இருக்கும்.

நன்று, நன்றி.
அவர்கள் இருக்கமாட்டார்கள், குறிப்பாக சுரேஸ்.பி மற்றும் செல்வம் அடைக்கலம் நாதன். இவர்கள் ஈழத்தமிழராக இருக்கும் இந்தியாவினது முகவர்கள்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2022 at 18:08, விளங்க நினைப்பவன் said:

நல்ல கருத்து.
இந்தியாவிற்காக வரிந்து கட்டிகொண்டு தமிழர்களுக்கு கிடைக்கும் உதவிகளை எதிர்க்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல மட்டுமல்ல அது மாதிரி செயல்படும் யாழ்பாணத்து பல்கலை மாணவர்களும் தான்.

 

On 13/9/2022 at 18:42, nochchi said:

நன்று, நன்றி.
அவர்கள் இருக்கமாட்டார்கள், குறிப்பாக சுரேஸ்.பி மற்றும் செல்வம் அடைக்கலம் நாதன். இவர்கள் ஈழத்தமிழராக இருக்கும் இந்தியாவினது முகவர்கள்.  

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கையின் அரசியலில், இந்தியா ( தமக்காதரவான அல்லது எந்த இலங்கை அரசும் இந்தியாவிற்கெதிராக செயற்படாமல் இருக்க) தமது பிடியினை பேண பயன்படுத்தப்படும் ஒரே ஆயுதம் தமிழர்களும், அவர்களது பிரச்சினையும்தான்.

இந்த பொருளாதார பிரச்சினையின் உடனடிக்காரணம் ஊழலாக இருந்தாலும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான் மூலகாரணம்.

இந்தியா எமது பிரச்சினையினை தீர்க்க முன்வரும் என தமிழர்கள் நினைப்பது அப்பாவித்தனம், எமது பிரச்சினை தீர்ந்து விட்டால் இலங்கையின் மீதிருக்கும் தமது பிடி நழுவி விடும் என இந்தியா நம்புகிறது.

இலங்கை மிக தெளிவாக தனது நிலைப்பாட்டினை ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படுத்தி வருகிறது வங்கதேசப்போரின் போது பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்ட போது, இலங்கை பாகிஸ்தான் போர் விமானங்களை இலங்கையில் தளமாகப்பயன்படுத்த அனுமதித்தது.

இந்தியா இதுவரைகாலமும் நினைத்தது, இலங்கை தற்போதுள்ள சூழ்நிலையில் ( இந்தியாதான் இலங்கையின் நெருங்கிய நண்பன்) இந்திய எதிர்ப்பு நிலை எடுக்காது என ஆனால் சீன யுத்த கப்பலை இலங்கையில் தரிக்க அனுமதித்ததன் மூலம் இந்திய நலஙளை பற்றி இலங்கை எப்போதும் அலட்டி கொள்ள போவதில்லை என்பதுதான்.

இந்தியாவா மற்ற நாடுகளா? என வரும்போது இலங்கை மிகத்தெளிவாக இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டையே இலங்கை எடுத்துவருகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கையின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைக்கு இலங்கைக்கு உள்ளிருந்து தமிழர்கள் எதிர்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினையினை அவர்களாக தீர்த்து கொள்ளட்டும்.

நாங்கள் பொறுமையாக இருந்தால் இந்தியா தாமாக எம்மை தேடி வருவார்கள் "கரும்பு கட்டாக இருந்தால் எறும்பு தானாக வரும்".

இந்தியா எமது மக்களை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது, எமது மக்களின் இழப்புகளிலும் அவர்களது வேதனைகளிலும் குளிர் காய்கிறது, இதனை எவ்வளவு காலத்திற்கு நாம் இன்னமும் அனுமதிக்க போகின்றோம்?

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.