Jump to content

அன்னை எலிசபெத் இன்னுயிர் நீத்தனள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"C:\Users\Karu\OneDrive\Desktop\Queen Elisabeth.jpg"

அன்னை எலிசபெத் இன்னுயிர் நீத்தனள்

அன்னை  இரண்டாம் எலிசபத்

தன்னைக் கவர்ந்தனன் காலன்

ஐக்கிய ராச்சிய அரசியாக

ஆண்டுகள் எழுபதைக் கடந்து

முக்கிய உலகத் தலைவியாக

முடியுடன் வாழ்ந்தவள் அன்னை

 

அநீதிகள் நிறைந்த உலகினில் தன்றன்

ஆற்றலால், அன்பினால் பலத்தால்

தனிப்பெரும் சிறந்த தலைவியாய் மிளிர்ந்த

தாயவள் எலிசபத் அரசி

இனியொரு தலைமை இங்கிலாந்திற்கு

இப்படியமையுமா அறியோம்

இறைவனின் தயவால் இவ்வுலகிருந்த

இனியதாய் மறைந்தனள் அந்தோ

 

பொதுநலவாயத் தலைமையை ஏற்று

பொறுப்புடன் கடமைகள் ஆற்றி

அதிகரித்திட்ட அகதிகட்குதவி

ஆற்றிய சேவைகள் பலதாம்

விதியது முடிய அமைதியைத் தேடி

விண்ணுலகடைந்தனள் அன்னை

பதியொடுமிணைந்து பரமனின் நிழலில்

பக்தியோடின்புற வாழ்க.

 

Edited by karu
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது... அடிமைகளாக வாழப்பழகி விட்டோம் . அழுகின்றோம் ...👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2022 at 22:23, Kapithan said:

உவர் ஏன்  அழுது வடியிறார். 😏

சிங்களவருக்கும், இந்துத்துவ வடக்கத்தையாருக்கும் அடிமைகளாக வாழ்ந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் எங்களைப்போன்றோர் ஆங்கிலேயன் தந்த அகதியென்னும் பேரோடு சிறிதளவாவது விடுதலைக்காற்றைச் சுவாசிக்க உதவியிருக்கும் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் அரசியான மூதாட்டி 2ம் எலிசபத்தின் மறைவையிட்டுக் கவலையடைவதில் சற்றும் தவறு இல்லை நண்பரே! துக்கம் வந்தால் கொண்டாடுங்கள் அல்லாவிடில் குதூகலித்து மகிழுங்கள்.   எங்கள் மனம் இப்படி, சகலதுமறிந்த அறிவாளிகளான நீங்கள் அப்படி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2022 at 22:42, வாத்தியார் said:

என்ன செய்வது... அடிமைகளாக வாழப்பழகி விட்டோம் . அழுகின்றோம் ...👍

வடக்கத்தையாருக்கும், தெற்கத்திச் சிங்களவருக்கும் அடிமைகளாக வாழப் பழகாமல், அடிமைகளாக ஆக்காமல் உரிய மதிப்புத்தந்து ஆதரிக்கும் பிரித்தானிய சாம்ராச்சியத்திற்கு விசுவாசமாக இருந்து அதன்அரசி 2ம் எலிசபத்தின் மரணத்தில் துயருறுதல் மேலானதாகப் படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, karu said:

சிங்களவருக்கும், இந்துத்துவ வடக்கத்தையாருக்கும் அடிமைகளாக வாழ்ந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் எங்களைப்போன்றோர் ஆங்கிலேயன் தந்த அகதியென்னும் பேரோடு சிறிதளவாவது விடுதலைக்காற்றைச் சுவாசிக்க உதவியிருக்கும் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் அரசியான மூதாட்டி 2ம் எலிசபத்தின் மறைவையிட்டுக் கவலையடைவதில் சற்றும் தவறு இல்லை நண்பரே! துக்கம் வந்தால் கொண்டாடுங்கள் அல்லாவிடில் குதூகலித்து மகிழுங்கள்.   எங்கள் மனம் இப்படி, சகலதுமறிந்த அறிவாளிகளான நீங்கள் அப்படி.

எப்படி அடிமையானோம் என்பதை மறந்துவிட்டீர் நண்பரே ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

எப்படி அடிமையானோம் என்பதை மறந்துவிட்டீர் நண்பரே ☹️

ஆண்ட  ஆங்கிலேயன் கைவிட்டுப் போனான், ஆட்சியைப் பிடித்துக் கொண்டவன் அடிமையாக்கினான்.  இது புரியாமல் இருக்கிறீரே நண்பா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, karu said:

ஆண்ட  ஆங்கிலேயன் கைவிட்டுப் போனான், ஆட்சியைப் பிடித்துக் கொண்டவன் அடிமையாக்கினான்.  இது புரியாமல் இருக்கிறீரே நண்பா. 

கைவிட்டு சென்றபோது இவதானே இளவரசி! சரி அப்பத்தான் அதிகாரம் இல்லாவிட்டாலும் ராணியாக வந்தபின்னாவது எதுவும் செய்தவவோ நாங்கள் இவவுக்காக இரங்குவதற்கு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஏன் அகதியானோம் என்பதற்கு நதிமூலம் ரிசிமூலம் தேடினால் மண்டைதான் வெடிக்கும். தனியரசுகளாக இருந்த தமிழினத்தை தங்கள் சுக போகத்திற்காக இணைத்த ஆங்கிலேய அரசபரம்பரை இலங்கையை விட்டுச்செல்லும் போது நயவஞ்சகத்தையும் விதைத்து விட்டே சென்றார்கள்.ஆசிய ஆபிரிக்க,மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் இனவாத மதவாத சண்டைகளுக்கும் காரணகர்தாக்கள் கூட இந்த மகாராணி வம்சம் தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோல்பரி பிரபு வந்து 60 க்கு 40 பிரதிநிதித்துவும் தருகிறோம் கூட்டாக ஆளுங்கள் என்றார்.  ஜிஜி பொன்னர் போன்றோர் குழப்பியடித்தார்கள். பண்டாரநாயக்காகூட அப்படிச் செய்ய ஒத்துக்கொண்டாராம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.   பிறகு உவர்கள் சரிவர மாட்டார்கள் என்று புரிந்து கொண்டு சர்வஜன வாக்கெடுப்பைப் பரிந்துரைத்துவிட்டுப் போய்விட்டார்.  தற்போது அணிலேறவிட்ட நாய்களாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற்கிறோம்.   அதற்கு அந்த மனுசி என்னசெய்யும்.   96 வயது வரை வாழ்ந்து காமன் வெல்த்தைத் தனது செல்வாக்கால் கட்டிக்காத்த மனுசி.  இன்றும் பலருக்கு அ தைவிட்டுப் பிரிய மனமில்லை.   சும்மா ஒரு 20 லட்சம்பேரில் ஒரு சிலர் அந்தப் பெரிய சாம்ராச்சியத்தைப்பார்த்துக் குரைத்துக் கொண்டிருப்பதில் என்ன அறிவு ஜீவித்தனம் வெளிப்படுகிறதோ தெரியவில்லை.  இப்போதும் அவர்களிடம்தானே கெஞ்சிக்கொண்டு நிற்கிறார்கள்.  ஆங்கிலேயனில்லாது எதுவும் சரிவராது தம்பிமாரே!   வாயைத் திறந்தால் ஆங்கிலம் அதற்குள் பெரும் சவடால்.  உலகமே யந்த மனுசிக்காக இரங்குகிறது.  இது என்னடாவென்றால் செக்கும் தெரியாமல் சிவலிங்கமும் தெரியாமல்  நக்கி முகர்வதனால் நயமென்ன வந்துவிடும்.
 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.