Jump to content

வழியுண்டு வாழ்ந்துப்பார்ப்போம் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்பத்தில் மகிழ்ந்து  துன்பத்தில் துவண்டு 

வாழ்க்கையே முடிந்ததென அலைபாயும் மானிடா,

சோகங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

மகிழ்வான தருணங்களை எண்ணிப்பா பார் 

கட்டிளம் காளையாய் மண   மேடையில்  

மகிழ்வை அமர்ந்திருந்த தருண ங்கள் 

உறவுகளின் வாழ்த்துமழையில் பூரித்த  தருணங்கள். 

 

அன்பு மனையாள் உன்  உயிர் சுமந்த சேதி

வாய் மலர்ந்த  இன்ப அதிர்வு வினாடிகள் 

கருவாகி உருவாகி  ஜனித்து  துணி பொதிந்து 

சிறு மலராக  குறு வென்ற    பார்வையில் 

பிஞ்சு விரல்களும் எட்டி உதைக்கும்   கால்களையும் 

கொண்டு பொக்கிஷமாய் உன்  கை சேர்ந்த தருணங்கள். 

 

"அப்பா "என   பதவி கொடுத்த   குழந்தைகளை கண்டு 

குடும்ப பொறுப்போடு   மனைவி மக்களை 

கண் போல   காத்த தருணங்கள்  தத்தி  தவழ்ந்து 

 தளிர் நடைபோட்டு  பள்ளிக்கு அடியெடுத்து 

வைத்த அத்தருணங்கள்.,கல்லூரி   புகுந்து 

கலாநிதி படடம்   பெற்று  சீருடையுடன் காண்கையில் 

என் மகன் /மகள் என் பெருமை கொண்ட தருணங்கள்.

 

பணியிடம் தேடி  பணிக்கமர்ந்து  முதல் சம்பளம்பெற்று 

தாய் தந்தை பணிந்து  சாண்பிள்ளையானாலும் 

ஆண் பிள்ளை /என் பெண் பிள்ளை  என்னையும் தங்குவான் /வாள்  

தோள்  கொடுப்பான்/பாள் என் நெஞ்சம் நிமிந்த வேளை

 

கால சக்கர ஒடடத்தில்   மக்கள் மணப்பருவம் அடைந்த வேளை 

ஒரு துணை தேடி //தேர்ந்து   மணக்கோலம் கண்ட  நேரம் 

இன்ப பிரிவால் தலைமகனை /மகளை இன்னொரு அம்மாவை 

பிரிந்த நேரம் ,ஆண் பிள்ளைக்கு அம்மா   மீதும் பெண் மகவுக்கு  

 அப்பா மீதுமான ஈர்ப்பு,   முதற் பேரக் குழந்தை என் கையில் தவழ்கையில் 

என் குலம் தழைக்க வந்த குல  விளக்கே என நெஞ்சம் மகிழ்ந்த  வேளை 

பிஞ்சுவிரல்கள் என் விரல் பிடித்த  வேளை குச்சிக் கால்கள்

 எட்டி உதைத்த   தருணம்  உலகமே என் வசம் என எண்ணியிருந்தேன். 

 

காலச்சுழற்சி  வயதின் முதிர்ச்சி சற்று நோய்வாய்ப்படட போது  

நினைவலைகள்  கடந்த காலத்தை    மீட்டிட  சோகங்கள் மட்டுமே 

வாழ்க்கையில்லை , இன்னும் சற்று மன உறுதி யோடு  

 

வாழ  வழியுண்டு என வாழ மனம் திடம் கொள்கிறது

இத்தனையும் கடந்தாலும் இன்றுவரை என வாழ வைக்கும் 

அந்த தெய்வ கருணை  அன்பான உறவுகளின் ஊக்கம்  

"வருந்தாதே மனமே  அவனின்றி ஓர் அணுவும் 

 அசையாதே "  வருவது வரட்டும்  வழியுண்டு வாழ்ந்துப்பார்ப்போம் 

 

Edited by நிலாமதி
  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிலாமதி said:

காலச்சுழற்சி  வயதின் முதிர்ச்சி சற்று நோய்வாய்ப்படட போது  

நினைவலைகள்  கடந்த காலத்தை    மீட்டிட  சோகங்கள் மட்டுமே 

வாழ்க்கையில்லை , இன்னும் சற்று மன உறுதி யோடு  

 

வாழ  வழியுண்டு என வாழ மனம் திடம் கொள்கிறது

இத்தனையும் கடந்தாலும் இன்றுவரை என வாழ வைக்கும் 

அந்த தெய்வ கருணை  அன்பான உறவுகளின் ஊக்கம்  

"வருந்தாதே மனமே  அவனின்றி ஓர் அணுவும் 

 அசையாதே "  வருவது வரட்டும்  வழியுண்டு வாழ்ந்துப்பார்ப்போம் 

 

நோய் வாய்ப்படும் போது... மனத்தைரியம்  தான், முதலாவது மருந்து.
நம்பிக்கையூட்டும் அழகிய கவிதைக்கு... நன்றி, நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலச் சக்கரத்தை அழகாக வடித்துள்ளீர்கள்.நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

1 hour ago, நிலாமதி said:

அன்பு மனையாள் உன்  உயிர் சுமந்த சேதி

வாய் மலர்ந்த  இன்ப அதிர்வு வினாடிகள் 

கருவாகி உருவாகி  ஜனித்து  துணி பொதிந்து 

சிறு மலராக  குறு வென்ற    பார்வையில் 

பிஞ்சு விரல்களும் எட்டி உதைக்கும்   கால்களையும் 

கொண்டு பொக்கிஷமாய் உன்  கை சேர்ந்த தருணங்கள். 

வாழ்வின் மிக அற்புதமான தருணங்கள் அவை.
நினைவூட்டல் கவிதைக்கு நன்றி  நிலா அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது இடைவேளை இல்லாத ஒரு நாடகம். அதில் ஒவ்வொரு பாத்திரங்களும் வயதிற்கேற்ப மாறிக்கொண்டேயிருக்கும்.

நல்லதொரு அனுபவக்கவிதை....👍 

  • Like 1
Link to comment
Share on other sites

On 13/9/2022 at 02:03, நிலாமதி said:

வருந்தாதே மனமே  அவனின்றி ஓர் அணுவும் 

 அசையாதே "  வருவது வரட்டும்  வழியுண்டு வாழ்ந்துப்பார்ப்போம் 

நல்லதோர் அனுபவக் கவிதை அக்கா. இந்த மாதிரியான தருணங்களில் ஆன்மிக, தத்துவார்த்தமான சிந்தனைகள் மனதில் எழுவது இயல்பு. கஷ்டமான காலங்களைக் கடப்பதற்கு மட்டுமன்றி, இனி வரும் காலங்களில் வாழ்க்கையை முதிர்ச்சியான மனநிலையுடன் அணுகுவதற்கும் இந்த சிந்தனைகள் உதவும். வாழ்த்துக்கள் அக்கா. 😊💐

 

On 13/9/2022 at 07:52, குமாரசாமி said:

வாழ்க்கை என்பது இடைவேளை இல்லாத ஒரு நாடகம். அதில் ஒவ்வொரு பாத்திரங்களும் வயதிற்கேற்ப மாறிக்கொண்டேயிருக்கும்.

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.