Jump to content

T20 2022 உலகக் கிண்ணப் போட்டி - செய்திகள்


Recommended Posts

நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தெரிவு

நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தெரிவு

ரி20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் இன்று (04) நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதனடிப்படையில் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களால் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதி வாயிலுக்குள் ஒரு காலை வைத்துள்ள நியூஸிலாந்து

By DIGITAL DESK 5

04 NOV, 2022 | 03:51 PM
image

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு 1க்கான தனது கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 35 ஓட்டங்களால் அவசியமான வெற்றியை நியூஸிலாந்து ஈட்டிக்கொண்டது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் இப்போதைக்கு 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் நியூஸிலாந்து அரை இறுதி வாயிலுக்குள் ஒரு காலை நுழைத்துள்ளது.

அப் போட்டியில் அயர்லாந்து வீரர் ஜொஷ் லிட்ல் ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்த போதிலும் அவரது அணி இறுதியில் தோல்வியைத் தழுவயது.

தற்போது நடைபெறும் ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டி, நியூஸிலாந்தின் நிகர ஓட்ட வேகமான நேர்மறை 2.133 ஐ விட சிறந்த நிகர ஓட்ட வேகப் பெறுதியை அவுஸ்திரேலியா பதிவுசெய்தால் அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெறும்.

அல்லது நியூஸிலாந்து முதலாவது அணியாக தகுதிபெற்றுவிடும். எனவே தனது நிலை குறித்து திட்டவட்டமாக அறிந்துகொள்ள அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முடிவுவரை நியூஸிலாந்து காத்திருக்க வேண்டியுள்ளது.

இது இவ்வாறிருக்கு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டவேண்டும் என எதிர்பார்த்த நியூஸிலாந்துக்கு கிடைத்த வெற்றி திருப்தி தருவதாக அமைந்திருக்காது.

 

Ish Sodhi finished with figures of 2 for 31, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தப் போட்டியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டவேண்டும் என்பதை அறிந்திருந்த நியூஸிலாந்து, ஆரம்பம் முதல் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது.

முதல் 3 ஓவர்களில் நிதானத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நியூஸிலாந்து, படிப்படியாக 7 ஓட்டங்களிலிருந்து 9 ஓட்டங்கள் வரை உயர்த்திக்கொண்டது.

Devon Conway bided his time at the crease but could not accelerate, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

பின் அலன் (32), டெவன் கொன்வே (28) ஆகிய இருவரும் 35 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அலன் ஆட்டமிழந்த பின்னர் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸுடன் 2ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களை கொன்வே பகிர்ந்தார்.

கொன்வே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட க்ளென் பிலிப்ஸ் 17 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். (114 - 3 விக்.)

அதனைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனும் டெரில் மிச்செலும் 4ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது 19ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் அணித் தலைவர் கேன் வில்லியம்சனை கெரத் டிலேனி எடுத்த பிடி மூலம் ஆட்டமிழக்கச் செய்த லிட்ல், அடுத்த 2 பந்துகளில் ஜேம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர் ஆகிய இருவரையும் எல்.பி.டபிள்யூ. முறையில் களம் விட்டு வெளியேறச் செய்து ஹெட்- ட்ரிக்கை பதிவு செய்தார்.

Mark Adair celebrates along with team-mates after dismissing Finn Allen, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் பதிவான இரண்டாவது ஹெட் - ட்ரிக் இதுவாகும்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய வீரர் தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கார்த்திக் மெய்யப்பன் முதலாவது ஹெட்-ட்ரிக்கைப் பதிவுசெய்திருந்தார்.

அத்துடன் உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்து சார்பாக பதிவான 2ஆவது ஹெட் - ட்ரிக் இதுவாகும்.

George Dockrell made a 15-ball 23, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் கெம்ஃபர் கேர்ட்டிஸ் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இதுவரை இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில்  ப்றெட் லீ, கேம்ஃபர், வனிந்து ஹசரங்க, கெகிசோ ரபாடா, கார்த்திக் மெய்யப்பன், ஜொஷ் லிட்ல் ஆகிய அறுவரே ஹெட் - ட்ரிக் பதிவு செய்துள்ளனர்.

ஜொஷ் லிட்ல் ஹெட் - ட்ரிக்கைப் பதிவு செய்ததால் அதிர்ச்சி அடைந்த நியூஸிலாந்து ஒருவாறு ஓட்ட வேகத்தை சிறப்பாக கடைப்பிடித்து இன்னிங்ஸை நிறைவுக்கு கொண்டுவந்தது.

 கேன் வில்லியம்சன் 35 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.  

டெரில் மிச்செல் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

Josh Little leaps in celebration of his hat-trick, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

அயர்லாந்து பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெரத் டிலேனி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி (37), போல் ஸ்டேர்லிங் (30) ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

Hat-trick taker Josh Little is congratulated by his team-mates, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்டெக்ளை இழந்த அயர்லாந்தினால் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ முடியாமல்போனது.

ஒன்பது ஓவர்கள் நிறைவில் 70 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மிகச் சிறந்த நிலையில் இருந்த அயர்லாந்து 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

மத்திய வரிசையில் ஜோர்ஜ் டொக்ரெல் (23) மார்த்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் லொக்கி பேர்குசன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 26 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டிம் சௌதீ 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஷ் சோதி 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Kane Williamson was able to get off the blocks, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

ஆட்டநாயகன்: கேன் வில்லயம்சன்.

https://www.virakesari.lk/article/139132

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஷித் கான் அதிரடி : அவுஸ்திரேலியாவின் அரை இறுதி  வாய்ப்பை  தள்ளிப்போட்டுள்ள ஆப்கானிஸ்தான் !  

04 NOV, 2022 | 07:14 PM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான தனது கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 4 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

சகலதுறை வீரர் ராஷித் கானின் கடைசிக் கட்ட அதிரடி ஆட்ட முயற்சி ஆப்கானிஸ்தானுக்கு  பலனளிக்காமல் போனது. ஆனால், நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பை அவரது அதிரடி தள்ளிப்போட்டுள்ளது.

இன்றைய போட்டியில் பெறப்பட்ட சுமாரான வெற்றி அரை இறுதி வாய்ப்பை பெறுவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு போதமானதாக அமையவில்லை. இதன் காரணமாக இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நாளை சனிக்கிழமை (05) நடைபெறவுள்ள போட்டி முடிவின் பின்னரே அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட தகுதிபெறுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

மேலும், இன்றைய போட்டி முடிவுகளை அடுத்து நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் தலா 7 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் நிகர ஓட்ட வேக  (+2.113)  அடிப்படையில் நியூஸிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று   தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர் உஸ்மான் கானி (2) 3ஆவது ஓவரிலும் ரஹ்மானுல்லா குர்பாஸ் (30) 6ஆவது ஓவரிலும் ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை 40 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஸத்ரான் (26), குல்பாதின் நய்ப் (39) ஆகிய இருவரும் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தைக் கொடுத்தனர்.

எனினும், இப்ராஹிம் ஸத்ரான், குல்பாதின் நய்ப், நஜிபுல்லா ஸத்ரான் (0) ஆகிய மூவரும் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது அடுத்தடுத்து ஆட்டமிழக்க  ஆப்கானிஸ்தான்  நெருக்கடிக்குள்ளானது.

அணித் தலைவர் மொஹமத் நபி ஒரு ஓட்டத்துடன் களம் விட்டு வெளியேறியமை ஆப்கானிஸ்தான் மேலும் அழுத்தத்திற்குள்ளானது. (103 - 6 விக்.)

தார்விஷ் ரசூல் (15), ராஷித் கான் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் இணைந்து 33 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு தெம்பூட்டிய அதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.

கடைசி ஓவரில் ஆப்பானிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் வீசிய முதலாவது பந்து வைட் ஆனது. அதேவேளை ராஷித் கான் பந்துவீச்சாளர் எல்லையிலிருந்து துடுப்பாட்ட வீரர் எல்லைக்கு ஓடினார்.

மெத்யூ வேட் எறிந்த பந்து விக்கெட்டில் படாததால் ராஷித் கான் தப்பித்துக்கொண்டார். ஆனால், மறுமுனையில் தார்விஷ் ரசூலை ஸ்டொய்னிஸ் ரன் அவுட் செய்தார்.

இந்நிலையில் கடைசி 6 பந்துகளில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ராஷித் கான் 16 ஓட்டங்களை விளாசிய போதிலும் அவரது கடைசிக் கட்ட முயற்சி பலனற்று போனது.

23 பந்துகளை எதிர்கொண்ட ராஷித் கான் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

வழமையான அணித் தலைவர் ஆரோன் பின்ச் உபாதை காரணமாக விளையாடாததுடன் அவருக்குப் பதிலாக தலைமைப் பொறுப்பு மெத்யூ வேடிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்ச்சுக்குப் பதிலாக ஆரம்ப வீரராக அணியில் இணைக்கப்பட்ட கெமரன் க்றீன் (3) துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார்.

டேவிட் வோர்னர் (25), அணிக்கு மீளழைக்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் (4) ஆகியோர் ஆட்டமிழக்க பவர் ப்ளே நிறைவில் அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 52 ஓட்டங்களாக இருந்தது.

தொடர்ந்து மிச்செல் மார்ஷ் (45) மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (25) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தபோது மார்ஷ் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், க்ளென் மெக்ஸ்வேல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். (139 - 4 விக்.)

ஆனால், அதன் பின்னர் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்டொய்னிஸ், மெத்யூ வேட் (6), பெட் கமின்ஸ் (0), கேன் ரிச்சர்ட்ஸன் (1) ஆகியோர் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலியா 168 ஓட்டங்களைப் பெற்றது.

க்லென் மெக்ஸ்வெல் 32 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பஸால்ஹக் பாறூக்கி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட், Australia, Afghanistan, Twenty20 World Cup Cricket

https://www.virakesari.lk/article/139158

large.778494680_t20pt04-11.JPG.65b1a1c18

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ராஷித் கான் அதிரடி : அவுஸ்திரேலியாவின் அரை இறுதி  வாய்ப்பை  தள்ளிப்போட்டுள்ள ஆப்கானிஸ்தான் !  

04 NOV, 2022 | 07:14 PM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான தனது கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 4 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

சகலதுறை வீரர் ராஷித் கானின் கடைசிக் கட்ட அதிரடி ஆட்ட முயற்சி ஆப்கானிஸ்தானுக்கு  பலனளிக்காமல் போனது. ஆனால், நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பை அவரது அதிரடி தள்ளிப்போட்டுள்ளது.

இன்றைய போட்டியில் பெறப்பட்ட சுமாரான வெற்றி அரை இறுதி வாய்ப்பை பெறுவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு போதமானதாக அமையவில்லை. இதன் காரணமாக இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நாளை சனிக்கிழமை (05) நடைபெறவுள்ள போட்டி முடிவின் பின்னரே அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட தகுதிபெறுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

மேலும், இன்றைய போட்டி முடிவுகளை அடுத்து நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் தலா 7 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் நிகர ஓட்ட வேக  (+2.113)  அடிப்படையில் நியூஸிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று   தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர் உஸ்மான் கானி (2) 3ஆவது ஓவரிலும் ரஹ்மானுல்லா குர்பாஸ் (30) 6ஆவது ஓவரிலும் ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை 40 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஸத்ரான் (26), குல்பாதின் நய்ப் (39) ஆகிய இருவரும் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தைக் கொடுத்தனர்.

எனினும், இப்ராஹிம் ஸத்ரான், குல்பாதின் நய்ப், நஜிபுல்லா ஸத்ரான் (0) ஆகிய மூவரும் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது அடுத்தடுத்து ஆட்டமிழக்க  ஆப்கானிஸ்தான்  நெருக்கடிக்குள்ளானது.

அணித் தலைவர் மொஹமத் நபி ஒரு ஓட்டத்துடன் களம் விட்டு வெளியேறியமை ஆப்கானிஸ்தான் மேலும் அழுத்தத்திற்குள்ளானது. (103 - 6 விக்.)

தார்விஷ் ரசூல் (15), ராஷித் கான் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் இணைந்து 33 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு தெம்பூட்டிய அதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.

கடைசி ஓவரில் ஆப்பானிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் வீசிய முதலாவது பந்து வைட் ஆனது. அதேவேளை ராஷித் கான் பந்துவீச்சாளர் எல்லையிலிருந்து துடுப்பாட்ட வீரர் எல்லைக்கு ஓடினார்.

மெத்யூ வேட் எறிந்த பந்து விக்கெட்டில் படாததால் ராஷித் கான் தப்பித்துக்கொண்டார். ஆனால், மறுமுனையில் தார்விஷ் ரசூலை ஸ்டொய்னிஸ் ரன் அவுட் செய்தார்.

இந்நிலையில் கடைசி 6 பந்துகளில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ராஷித் கான் 16 ஓட்டங்களை விளாசிய போதிலும் அவரது கடைசிக் கட்ட முயற்சி பலனற்று போனது.

23 பந்துகளை எதிர்கொண்ட ராஷித் கான் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

வழமையான அணித் தலைவர் ஆரோன் பின்ச் உபாதை காரணமாக விளையாடாததுடன் அவருக்குப் பதிலாக தலைமைப் பொறுப்பு மெத்யூ வேடிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்ச்சுக்குப் பதிலாக ஆரம்ப வீரராக அணியில் இணைக்கப்பட்ட கெமரன் க்றீன் (3) துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார்.

டேவிட் வோர்னர் (25), அணிக்கு மீளழைக்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் (4) ஆகியோர் ஆட்டமிழக்க பவர் ப்ளே நிறைவில் அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 52 ஓட்டங்களாக இருந்தது.

தொடர்ந்து மிச்செல் மார்ஷ் (45) மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (25) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தபோது மார்ஷ் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், க்ளென் மெக்ஸ்வேல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். (139 - 4 விக்.)

ஆனால், அதன் பின்னர் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்டொய்னிஸ், மெத்யூ வேட் (6), பெட் கமின்ஸ் (0), கேன் ரிச்சர்ட்ஸன் (1) ஆகியோர் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலியா 168 ஓட்டங்களைப் பெற்றது.

க்லென் மெக்ஸ்வெல் 32 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பஸால்ஹக் பாறூக்கி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட், Australia, Afghanistan, Twenty20 World Cup Cricket

https://www.virakesari.lk/article/139158

large.778494680_t20pt04-11.JPG.65b1a1c18

 

அவுஸ்ரேலியாவின் ஆப்கானிஸ்தான போட்டியின் முன்பே அவுஸ்ரேலியா அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டு விட்டது.

தற்போது இலங்கை அணி இங்கிலாந்து அணியினை வீழ்த்தும் என அவுஸ்ரேலியா எதிர்பார்க்கிறது இது நடைபெறுவதற்கான சாத்தியகூறு அதிகம் உள்ளது.

போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது, இறுதியாக பாகிஸ்தான் அணி தென் ஆபிரிக்க அணியினை வெற்றி கொண்டிருந்தது, இடையில் சிறிய மழை குறுக்கீடு இருந்தபோதும் பாகிஸ்தான் அணி வெற்றி உறுதியாகியிருந்தது.

சிட்னி ஆடுகளம் மற்ற அவுஸ்ரேலிய ஆடுகளம் போலில்லாமல் மெதுதுவான ஆடுகளம் அத்துடன் அதிகமாக பந்து மேலெழாது என கூறப்படுகிரது.

இந்த வகை சூழ்நிலை இலங்கை பந்து வீச்சாளர் கசரங்காவிற்கு சாதகமாகவிருக்கும், அவர் மற்றய அவுஸ்ரேலிய ஆடுகளங்களில் இருக்கின்ற பந்து மேலெழுவதை குறைப்பதற்காக பந்தினை வீசும்போது மிகவும் குனிந்து பந்தினை தட்டையாக வீச முற்பட்டார் ஆனாலும் பேர்த்தில் அவரது முயற்சி பலிக்கவில்லை, மட்டையாளர்கள் மிக இலகுவாக பந்தினை தூக்கி அடிக்க ஆடுகளத்தின் பந்தின் மேலெழும் தன்மை உதவியது.

ஆரம்ப ஓவர்களின், உடனடி ஆடுகளம் பயன்படுத்துவதால் வேகப்பந்து வீச்சாளரிற்கு சிறிது சாதகமாக இருக்கலாம், அதனால் முதலில் பந்து வீச அணிகள் முற்படலாம், அத்துடன் மைதானம் இரண்டாவதாக பந்து வீசுபவர்களுக்கு பெரிதாக மைதான ஈரப்பதன் இருக்காது என கருதுகிறேன், அதனால் சுழற்பந்து விச்சாளர்கள் இரண்டாவதாக பந்து வீசும் போது அதிக பந்தின் ஈரம் இருக்காது என கருதுகிறேன்.

அதிக ஓட்டங்களை முதலில் ஆடும் அணி எடுக்குமாயின் எதிரணியின் மீது அழுத்தம் ஏற்படுத்தலாம்,நியுசிலண்ட், பாகிஸ்தான் அணிகள் அவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தின ஆனால் இங்கிலண்ட் அணியினது சுழல்பந்து வீச்சு பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் அணி இல்லை என்பதால் இங்கிலாந்து நாணய சுழற்சியில் வென்றால் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்யாது என கருதுகிறேன், ஆனால் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்யும் என கருதுகிறேன்.

நாணய சுழற்சி ஆடுகளத்தில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தாது என கருதுகிறேன்.

இந்த ஆடுகளம் மட்டையாளருக்கு சாதகமான ஆடுகளம் இலங்கை அணி 185 ஓட்டங்களுக்கு மேல் குவித்தால் இலங்கை அணியினரால் இங்கிலண்ட் அணியினரை அவர்களது பந்து வீச்சினால் கட்டுப்படுத்தலாம் என கருதுகிறேன்.

இலனகையணியில் 3 சுழல் பந்து வீச்சாளர்களும், 2 மித வேக பந்து வீச்சாளர்களும், 1 வேக பந்து வீச்சாளர்களும் உள்ளனர், அத்துடன் 2 பகுதி நேர மித வேக பந்துவீச்சாளர்கள் உள்ளனர், இதனால் இலங்கை அணி முதல் 6 ஒவர்களுக்குள் சுழற்பந்து வீச்சினை வீசி ஓட்டங்களை மட்டுபடுத்தலாம்.

மித வேக பந்துவிச்சாளர்களில் பந்தின் கட்டினை பயன்படுத்தி பந்து வீசும் பிரமோத் மதுசன் ஆட்டத்தின் நடுப்பகுதியில் மிக முக்கிய தாககத்தினை ஏற்படுத்தலாம்.

இஙிலண்ட் அணி வூட்டினை இந்த மைதானத்தில் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை பார்க்க ஆவலாக உள்ளது, இவர் பந்தின் வேகத்தில் மாறுபாட்டினை காட்டுவதில்லை, தொடர்ச்சியாக அதி வேகமாகவே பந்தினை வீசுபவர், சிட்னி மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் வேக மாறுபாடு, சரியான அளவு மற்றும் நேர்த்தியாக பந்து வீசினால் மட்டுமே ஓட்டத்தினை கட்டுப்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் இந்த போட்டி பற்றி உள்ளது, இவர் கூறும் கருத்துகள் நன்றாக உள்ளது எனது கருத்துக்கு முற்றிலும் நேரெதிராக  இருந்த போதும் இவர் ஒரு தொழில்முறை  வர்ணையாளராக உள்ள அனுபவம் கொண்டவர் அவரது கருத்து சரியாக வருவதற்கு வாய்பு அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு கூறியது போல உடனடி ஆடுகளம் இந்த போட்டிக்கு பயன்படுத்தப்படவில்லை, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் பயன்படுத்தப்படவுள்ளது இப்போது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

இது இலங்கைக்கு சாதகமாகவுள்ளது, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம், அத்துடன் இரட்டை வேகம் கொண்ட ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் மெதுவான பந்து வீச்சினை எதிர்கொள்வது கடினம்.

மித வேகப்பந்து வீச்சாளர்களின் விக்கெட்டிலிருந்து விக்கெட்டுக்கு வீசப்படும் அளவான பந்துகள் அதிகமான தாக்கத்தினை ஏற்படுத்தும், சிட்னி மைதானம் நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாக உள்ள ஆடுகளம்.

ஆடுகளத்திற்கு ஏற்ப துடுப்பாட்டக்காரர்கள் சுழல் பந்து வீச்சாளர்களை சுவீப் செய்ய முற்படுவார்கள், சுழல் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டிற்கு நேராகவும் அளவுகுறைந்த பந்துகளையும் வீசுவர் இதன் மூலம் துடுப்பாட்டக்காரர்களை சுவீப் செய்யாமல் நீண்ட மைதானத்தில் இறங்கி வந்து நேராக 6 ஓட்டங்களை அடிக்க தூண்ட முற்படுவர் அதன் மூலம் விக்கெட்டுகளை எடுக்க முற்படுவர் அல்லது ஓட்டங்களை மட்டுபடுத்துவர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலக கோப்பை: இலங்கையின் கையில் ஆஸ்திரேலியாவின் கோப்பைக் கனவு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ரஷீத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலக கோப்பையில் இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவு-2 இல் அரையிறுதிக்கு செல்லப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் பிரிவு ஒன்றிலும் அதே நிலைமை நீடித்திருக்கிறது.

வலுவான அணியாகவும் கோப்பையை வெல்லப் போகவும் அணியாகவும் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் கனவைச் சிதைத்துப் போட்டுவிட்டார் ரஷீத் கான். அடிலெய்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு மரண பயத்தை அவர் காட்டினார் என்று சமூக ஊடகங்களிள் எழுதுகிறார்கள்.

அது உண்மைதான்.மிக எளிதாகவும் சுமார் 60 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று அரையிறுதிக்குள் நுழைந்துவிடலாம் என்றுதான் ஆஸ்திரேலிய அணியினர் நினைத்திருக்கும். ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.

அடிலெய்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெரிய அளவில் அவை கைகொடுக்கவில்லை. நம்பிக்கையோடு அணியில் சேர்க்கப்பட்ட கிரீனும் ஸ்மித்தும் ஒற்றை இலக்க ரன்களைத்தான் எடுத்தார்கள். மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுக்க முடிந்தது.

 

ஆப்கானிஸ்தானை குறைந்த 106 ரன்களில் வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்யலாம் என்ற வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு இருந்தது. அல்லது 119 ரன்களுக்குள் சுருட்டினால் இங்கிலாந்துக்கு நிகரான ரன்ரேட்டை கொண்டிருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமையை தலைகீழாக மாறியிருந்தது. ஆட்டத்தில் வெற்றி பெறுவதுகூட சந்தேகம் என்றாகிவிட்டது. கடைசி 3 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் ஆடியபோது, நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ரஷீத் கான் பேட்டிங்கில் அதிரடி காட்டினார்.

கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்றபோதும் அவர் தளரவில்லை. அந்த ஓவரிலும் சிக்சரும் பவுண்டரியும் விளாசினார். ஆயினும் 17 ரன்கள்தான் அவரால் எடுக்க முடிந்தது. அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ரஷீத் கான் 23 பந்துகளில் 48 ரன்களை அடித்திருந்தார்.

ரஷீத் கானின் பேட்டிங் குறித்து புகழ்ந்து பேசிய அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட், "அவருடைய ஆடுகள நடவடிக்கை உலகம் முழுவதுமுள்ள வீரர்களுக்கு முன்னுதாரணம்" என்று கூறியுள்ளார்.

காணொளிக் குறிப்பு,

விராட் கோலியின் 'போலி ஃபீல்டிங்' வங்கதேச ரசிகர்களைக் கடுப்பாக்கியது ஏன்?

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும் அதன் ரன் ரேட் மைனஸ் 0.173 என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கிறது. ரன் ரேட் அடிப்படையில் மிக உச்சத்தில் இருக்கும் நியூஸிலாந்து ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இப்போது ஆஸ்திரேலியாவா, இங்கிலாந்தா என்ற நிலையில் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கும் இங்கிலாந்து தனது கடைசிப் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது.

5 புள்ளிகளைப் பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் வென்றால், ஆஸ்திரேலியாவை விட ரன் ரேட் அதிகமாக இருப்பதால் அரையிறுதிக்குச் சென்றுவிடும். போட்டியில் இலங்கை வென்றாலோ, போட்டி மழையால் கைவிடப்பட்டாலோ அது ஆஸ்திரேலிவுக்குச் சாதகமாக அமைந்துவிடும்.

இலங்கை அணி 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்குச் செல்ல முடியாது. ஆனால் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்வதற்கு உதவலாம்.

 

ரஷீத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் பிரிவு ஆட்டம் இன்றுடன் முடிவடையும் நிலையில், குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருக்கும் அனைத்து அணிகளும் தங்களது கடைசி ஆட்டங்களை நாளை ஆடுகின்றன. நாளை நடக்கப்போகும் 3 போட்டிகளுமே புள்ளிப் பட்டியலை தலைகீழாகப் புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டவை.

குரூப்-2 பிரிவில் என்ன நிலைமை

குரூப்-2 இல் பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். எனினும் அடுத்து நடக்கும் இந்தியா-ஜிம்பாப்வே ஆட்டத்துக்காக பாகிஸ்தான் காத்திருக்க வேண்டும். இந்தியா தோல்வியடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

இந்தியா தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?

இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும்.

அடுத்த ஆட்டத்தில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற வேண்டும். அதாவது மழையாவது பெய்ய வேண்டும்.

 

விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதனால் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால் ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடக்க இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணியின் நிலைமை என்ன?

தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம். ஆனால் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் சிக்கல்தான்.

வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும். எனினும் தற்போது அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியிருக்கும்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தவிர பிரிவு-2 இல் உள்ள ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் இனி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

அரையிறுதிக்குத் தகுதிபெறப் போவது யார் என்பதைத் தெரிந்து கொள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/sport-63516011

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20: இந்தியா, பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோத எது நடக்க வேண்டும்?

  • தினேஷ் உப்ரேதி
  • பிபிசி செய்தியாளர்
36 நிமிடங்களுக்கு முன்னர்
 

இந்தியா- பாகிஸ்தான்

பட மூலாதாரம்,DANIEL POCKETT-ICC,GETTY

நீங்கள் கிரிக்கெட் பிரியர் என்றால், ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும் என்ற குழப்பம் இருந்தால், அதை போக்கிக்கொள்ள இந்தத் தேதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தேதி - நவம்பர் 6, 2022 ஞாயிற்றுக்கிழமை

டி20 உலக கோப்பையில் அதிமுக்கியமான போட்டி நாள் இது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் மீண்டும் ஒரு முறை ரசிகர்கள் பார்ப்பார்களா என்பதை தீர்மானிக்கும் நாள் இது.

ஞாயிற்றுக்கிழமை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி அதே மைதானத்தில் வங்கதேசத்துடன் மோதும்.

 

இந்த மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெல்போர்னின் எம்.சி.ஜி. விளையாட்டரங்கில் இந்தியா ஜிம்பாவேயை எதிர்த்து விளையாடும்.

வியாழனன்று சிட்னியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான், அரையிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

மழை குறுக்கிட்ட இந்த ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது, அதன் பிறகு பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

சூப்பர் 12 மற்றும் குறிப்பாக குரூப் 2 போட்டிகளில் பரபரப்பும், த்ரில்லும் காணப்படுகின்றன. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் நாக் அவுட் கட்டத்தை அடையும் அணி பற்றிய வாய்ப்புகள் உருவாகின்றன. அவை கலையவும் செய்கின்றன.

தீர்மானிக்கும் போட்டிகளுக்கு முன், சமன்பாடு மிகவும் சிக்கலாக உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளில் எதுவேண்டுமானாலும் அரையிறுதிக்கு வரலாம்.

குரூப்-2ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறினால், குரூப்-1 தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன் மோதும். அதாவது நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, இந்தியாவுக்கும் பரம எதிரியான பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற வாய்ப்பு உள்ளது.

இது எப்படி சாத்தியம்? தலா நான்கு போட்டிகளில் விளையாடிய பிறகு, இப்போது அணிகளின் நிலை என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.

இந்தியா

 

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

விளையாடிய போட்டிகள் - 4, புள்ளிகள் - 6, நிகர ரன் விகிதம்: 0.730, மீதமுள்ள ஆட்டம் - ஜிம்பாப்வேக்கு எதிராக.

இந்தியா தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், அரையிறுதிக்கு அதாவது நாக் அவுட் நிலைக்கு செல்வதற்கான உத்தரவாதத்தை இன்னும் பெற முடியவில்லை. தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் தோல்வியடைந்த காரணத்தால், இந்திய அணி இந்தப் புதிரை குறைந்தது நவம்பர் 6 வரை கொண்டு சென்றுள்ளது.

இப்போதும் மூன்று சாத்தியங்கள் உள்ளன.

ஜிம்பாப்வேயை இந்தியா வீழ்த்தினால் 8 புள்ளிகளுடன் அரையிறுதியில் தனது இடத்தை உறுதி செய்து கொள்ளும்.

மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைக்கும். இந்தியா ஏழு புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும்.

ஜிம்பாப்வேயிடம் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டால், வங்க தேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றால், நிகர ரன் ரேட் அங்கு முக்கிய பங்கு வகிக்கும். (தற்போது நிகர ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது)

ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தாலும், கடைசி நான்கு இடத்தை பிடிப்பதற்கான இரண்டு சாத்தியகூறுகள் இந்தியாவுக்கு உள்ளது.

முதலாவதாக, தென்னாப்பிரிக்கா நெதர்லாந்திற்கு எதிரான தனது கடைசி போட்டியில் தோல்வியடைவது. இரண்டாவதாக, வங்கதேசம் பாகிஸ்தானை தோற்கடித்தது, நிகர ரன் விகிதத்தில் இந்தியாவை விட குறைவாக இருப்பது.

ஞாயிற்றுக்கிழமை குரூப் 2வின் கடைசி ஆட்டத்தை இந்தியா விளையாட இருப்பதால், கடைசி நான்கில் வருவதை தீர்மானிக்கும் சமன்பாடுகள் என்ன என்பது போட்டி தொடங்குவதற்கு முன்பே அணிக்கு தெரிந்துவிடும்.

பாகிஸ்தான்

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விளையாடிய போட்டிகள்-4, புள்ளிகள்-4, நிகர ரன் விகிதம் - 1.117, மீதமுள்ள போட்டி- வங்கதேசத்திற்கு எதிராக.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி பெற்ற போதிலும், பாகிஸ்தானின் அரையிறுதிக்கான பாதை 'இப்படி நடந்தால், அப்படி நடந்தால்' என்பதில் சிக்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான், வங்க தேசத்தை வீழ்த்தினால் கூட நாக் அவுட்டை எட்டிப் பிடிக்க முடியாது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தத்தமது போட்டிகளில் வெற்றி பெற்றால், பாகிஸ்தானின் T20 பயணம் முடிந்துவிடும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல, வங்கதேசத்தை வெல்ல வேண்டியது அவசியம்.

தென்னாப்பிரிக்கா நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைகிறது அல்லது மழையால் போட்டி ரத்து செய்யப்படுகிறது. என்று வைத்துக்கொண்டால், அத்தகைய சூழ்நிலையில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுமே தலா 6 புள்ளிகளைப் பெறும். ஆனால் பாகிஸ்தான் மூன்று வெற்றிகளையும் தென்னாப்பிரிக்கா இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் என்பதால், முதலில் வெற்றி பெற்ற போட்டிகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிறகுதான் ரன் விகிதம் பார்க்கப்படும்.

இரண்டாவதாக, ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றால், இரு அணிகளும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருக்கும், ஆனால் நிகர ரன் ரேட் அடிப்படையில், பாகிஸ்தான் அரையிறுதியை எட்டும்.

தென்னாப்பிரிக்கா

 

தென்னாப்பிரிக்கா அணி

பட மூலாதாரம்,PAUL KANE

விளையாடிய போட்டிகள் - 4, புள்ளிகள் - 5, நிகர ரன் விகிதம்: 1.441, மீதமுள்ள போட்டி - நெதர்லாந்துக்கு எதிராக.

அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேற வேண்டுமானால் நெதர்லாந்தை வீழ்த்த வேண்டும். இந்தப் போட்டியில் மழை வில்லனாக மாறி இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால், தென்னாப்பிரிக்கா சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடும்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் மழை வில்லனாக மாறுவதற்கான அறிகுறி, வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் இல்லை. எனவே தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து போட்டி, முழுமையாக நடைபெற்று, அந்த அணி நெதர்லாந்தை வெற்றிகொள்ளும் சூழல் உருவாகக்கூடும்.

வங்கதேசம்

 

வங்கதேச அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

விளையாடிய போட்டிகள்-4, புள்ளிகள்-4, நிகர ஓட்ட விகிதம்: -1.276, மீதமுள்ள போட்டி - பாகிஸ்தானுக்கு எதிராக.

குரூப் 2வில் அரையிறுதிக்கான சமன்பாடுகள் இப்போதும் தெளிவாக இல்லை.

வங்கதேசம் இந்தப்போட்டியில் முன்னேறிச்செல்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதற்குக் காரணம் அவர்களின் மிக மோசமான நிகர ரன் விகிதம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னால் முன்னேற முடியாமல் போனாலும்கூட மற்ற அணிகளின் ஆட்டத்தை கெடுக்கும் வல்லமை அதன் கையில் இருக்கிறது.

வங்கதேசம் கடைசி நான்கிற்கு வரக்கூடிய ஒரு சாத்தியகூறு மீதமுள்ளது.

முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது போட்டியில் வெற்றி பெறவேண்டும். பின்னர் ஜிம்பாப்வே இந்தியாவை தோற்கடிக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். கூடவே, நிகர ரன் விகிதத்தில் இந்தியாவைத் தாண்டும் அளவிற்கு அபாரமான ரன் வித்தியாசத்தில் அது வெற்றிபெற வேண்டும் அல்லது இந்தியா அதிக ரன் வித்தியாசத்தில் தோற்கவேண்டும்.

இரண்டாவதாக, நெதர்லாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி, ஒரு புள்ளிக்கு மேல் பெறக்கூடாது.

ஜிம்பாப்வே

 

ஜிம்பாப்வே அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

விளையாடிய போட்டிகள்-4, புள்ளிகள்-3, நிகர ரன் விகிதம்: -0.313, மீதமுள்ள போட்டி - இந்தியாவுக்கு எதிராக.

ஜிம்பாப்வே இந்தியாவை வீழ்த்தினாலும், அது மொத்தமாக 5 புள்ளிகள் மட்டுமே பெற முடியும்.

பாகிஸ்தான் - வங்கதேசத்திற்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அத்தகைய சூழ்நிலையில் மூன்று அணிகளின் புள்ளிகளும் சமமாக இருக்கும். ஆனால் நிகர ரன் விகிதத்தில் ஜிம்பாப்வே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்தியாவை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினாலும், அதே அளவு வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்த வேண்டும் என்று அது பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதன் காரணமாக நாக் அவுட் நிலையை எட்டும் அதன் வாய்ப்பு மிகவும் பலவீனமாக உள்ளது.

இறுதிப் போட்டியில் மோதிய இந்தியா, பாகிஸ்தான் அணிகள்

டி20 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஒரே ஒரு முறைமட்டுமே இறுதி ஆட்டத்தில் மோதியுள்ளன. அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

அந்த போட்டி 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி ஜோஹேன்னஸ்பர்க்கில் (தென்னாப்பிரிக்கா) நடந்தது.

 

2007 டி20 வென்ற இந்திய அணி

பட மூலாதாரம்,SAEED KHAN,GETTY

 

படக்குறிப்பு,

2007 டி20 வென்ற இந்திய அணி

நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் ஷர்மாவின் அந்த பந்தில், மிஸ்பா உல் ஹக் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் பந்தை காற்றில் விளாசிய தருணம் மற்றும் ஸ்ரீசாந்த் அதை கேட்ச் பிடித்த தருணம், இந்தியர்களின் இதயங்களில் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அவை பாகிஸ்தான் இதயங்களில் அம்புபோல குத்துகின்றன.

முதல் டி20 உலகக் கோப்பை 2007ஆம் ஆண்டு விளையாடப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பெரும்பாலான அணிகளை வீழ்த்தி பட்டத்திற்காக மோதியது. மகேந்திர சிங் தோனி புதிய கேப்டனாகி இருந்தார். இந்திய அணியில் அனுபவத்தைக்காட்டிலும் இளமை, கோலோச்சியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 157 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அபாரமான இன்னிங்ஸை விளையாடினார். கடைசி ஓவரில், தற்போதைய கேப்டனும் அந்த சகாப்தத்தின் இளம் பேட்ஸ்மேனுமான ரோஹித் ஷர்மா ரன் ரேட்டை அதிகரிக்கும் விதமாக 30 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தொடக்கம் முதலே பிரமாதமாக பந்துவீசியதால், பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் மிஸ்பா உல் ஹக் கடைசி ஓவர் வரை நம்பிக்கையை கைவிடவில்லை. அவர் எடுத்த 43 ரன்கள் இந்திய அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனால் கடைசி ஓவரை ஜோகிந்தர் ஷர்மாவுக்குக் கொடுக்க தோனி எடுத்த முடிவு மேஜிக் போல வேலை செய்தது. இதுவரை செய்து வந்த அற்புதத்தை அந்த கடைசி ஷாட்டில் மிஸ்பாவால் செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை வெறும் 5 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமிருந்து கை நழுவிப்போனது.

https://www.bbc.com/tamil/sport-63519033

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலக்கோப்பை: இலங்கையின் தோல்வியால் தகர்ந்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை - தொடரும் வரலாறு

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இலங்கை அணியின் தோல்வியால் தவறிப் போயிருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பு இலங்கைக்கும் கிடைக்கவில்லை. மாறாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்கிறது.

ஆஸ்திரேலிய அணி போட்டியில் இருந்து வெளியேறியது மூலம், போட்டியை நடத்தும் அணி டி20 உலகக் கோப்பையை வெல்லாது என்ற நிலை நீடிக்கிறது.

பலமான அணிகள் உள்ள குரூப்-1 பிரிவில் அதிக ரன்ரேட் கொண்டிருக்கும் நியூஸிலாந்து அணி ஏற்கெனவே அரையிறுதிப்போட்டிக்குச் சென்றுவிட்டது. இன்னொரு அணி எது என்று முடிவு செய்யும் ஆட்டம் இன்று நடந்தது.

இந்தப் போட்டியில் மோதிய இலங்கை அணிக்கு இந்தப் போட்டியில் வென்றாலும் தோற்றாலும் அரையிறுதிக்குச் செல்ல முடியாத நிலைதான். ஆனால் இங்கிலாந்து அணிக்கு இது வாழ்வா சாவா போராட்டம். போட்டியில் தோற்றால் போட்டியைவிட்டு வெளியேறிவிட வேண்டியதுதான் என்ற நிலை.

 

இரு அணி வீரர்களிடம் இருந்த வெற்றிக்கான வேட்கையின் அளவில் இருந்து வேறுபாட்டை இந்தப் போட்டியில் காண முடிந்தது. இங்கிலாந்து அணிக்கு மட்டுமே வெற்றி தேவையாக இருந்தது. அதுவே அந்த அணிக்குச் சாதகமாகவும் அமைந்தது.

இங்கிலாந்து எப்படி அரையிறுதிக்கு முன்னேறியது?

குரூப் 2 பிரிவில் அனைத்துப் போட்டிகளும் முடிவடைந்த நிலையில், நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளுமே 7 புள்ளிகளைப் பெற்றுள்ளன. மூன்று அணிகளும் மூன்று போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியும் பெற்றிருக்கின்றன.

ஆனால் நியூஸிலாந்தும், இங்கிலாந்தும் மட்டுமே அரையிறுதிக்குச் செல்கின்றன. அதற்குக் காரணம் ரன் ரேட். நியூஸிலாந்து அணி 2.113 ரன்ரேட்டை கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அணி 0.473 ரன்ரேட்டையும், ஆஸ்திரேலிய அணி மைனஸ் 0.173 ரன் ரேட்டையும் பெற்றிருக்கின்றன. ஆஸ்திரேலிய அணியை விட கூடுதலாக ரன்ரேட்டைப் பெற்றிருப்பதால் நியூஸிலாந்தும் இங்கிலாந்தும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன.

ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் குறைந்ததற்கு முக்கியமான காரணம் அந்த அணி நியூஸிலாந்து அணியுடன் மோதிய போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதுவே நியூஸிலாந்து அணி அதிக ரன்ரேட் பெற்றதற்கும் காரணமானது. இதுதவிர இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராகவும் நியூஸிலாந்து அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பலமான நியூஸிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, பலம் குறைந்ததாகக் கருதப்படும் அயர்லாந்து அணியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய நேர்ந்தது. மழையால் ஆட்டங்கள் ரத்தானதும், தடைபட்டதும்கூட புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தின.

போட்டியில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. முதல் ஓவரிலேயே சிக்சருடன் கணக்கைத் தொடங்கிய அந்த அணியின் நிசாங்காவும் மெண்டிஸும் அதிரடியாக ஆடினர். ஆனால் 4-ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். இதன் பிறகு நிசாங்கா அதிரடியைத் தொடர்ந்தார். ஆயினும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சில ஓவர்களில் கட்டுப்பாடாகவே ரன்களைக் கொடுத்தனர்.

9-ஆவது ஓவரில் தனஞ்செயா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எல்லைக் கோட்டுக்கு அருகே தலைக்கு மேலே வந்த பந்தை அற்புதமாகப் பிடித்தார் பென் ஸ்டோக்ஸ். அதன் பிறகு இலங்கையின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. 11-ஆவது ஓவரில் அசலங்கா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

காணொளிக் குறிப்பு,

டி20 உலக்கோப்பை: பாகிஸ்தான் வெற்றி பெறுவதால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

எனினும் மறுமுனையில் பொறுப்பாக ஆடி வந்த நிசாங்கா அரை சதம் அடித்தார். 67 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத்தின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

குறைந்த இலக்காக இருந்தாலும் இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கியது. பவர்பிளே ஓவர்களில் 70 ரன்களைக் குவித்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரரான பட்லர் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10-ஆவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹேல்ஸ் 47 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 86 ரன்கள் எடுத்திருந்தது.

 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த நேரத்தில் மிக எளிமையாக இங்கிலாந்து அணி வென்றுவிடும் என்றே கருதப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

கடைசி நேரப் பதற்றம்

மிகவும் மெதுவாகவே ரன் எடுக்கத் தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது. 15 ஓவர் முடிவில் 113 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது அந்த அணி. அதன் பிறகு 30 பந்துகளுக்கு 29 ரன்களை அந்த அணி எடுக்க வேண்டியிருந்தது.

ஒரு கட்டத்தில் 15 ரன்களுக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 18-ஆவது ஓவரின் இறுதியில் சாம் கரன் ஆட்டமிழந்தபோது கடைசி 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்றானது. அப்போது பெவிலியனில் இருந்து இங்கிலாந்து வீரர்களிடையே பதற்றைக் காண முடிந்தது.

இருப்பினும் ஒன்றும் இரண்டுமாகத் தட்டி எடுத்து, அந்த அணி ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையிலேயே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூப்பர் ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமையன்று குரூப்-2 பிரிவில் மூன்று போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க இருக்கின்றன. பி பிரிவின் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகளாக இருக்கும். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும்.

https://www.bbc.com/tamil/sport-63525893

large.1395007566_t20pt05-11.JPG.b587a10d

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா போட்டிகளில் நடக்கப் போகும் 'ட்விஸ்ட்' என்ன?

  • எம் மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
5 நவம்பர் 2022
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் மூன்று போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க இருக்கின்றன.

இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தப் பிரிவில் இருக்கும் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகளாக இருக்கும். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும்.

தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி வங்கதேசத்தையும், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் சந்திக்கின்றன. அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளுமே தத்தமது போட்டிகளில் வென்றுவிடப் போராடும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மூன்று போட்டிகளுமே பரபரப்பாக இருக்கப் போகின்றன.

 

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா?

பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அந்தப் போட்டி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். ஆனால் அதுமட்டும் போதாது. மற்ற இரு போட்டிகளின் முடிவும் பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைய வேண்டும்.

நெதர்லாந்து அணியுடன் தென்னாப்பிரிக்க அணி மோதும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் அல்லது தென்னாப்பிரிக்க அணி தோற்றால் அது பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமையும்.. ஏனென்றால் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற அடிப்படையில் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவை முந்திவிடும்.

இல்லையென்றால், கடைசியாக நடக்கும் இந்தியா - ஜிம்பாப்வே போட்டியில் இந்தியா தோல்வியடைய வேண்டும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்ற வேண்டும்.

இந்தியாவுக்கு ஜிம்பாப்வேயுடனான போட்டி எந்த அளவு முக்கியம்?

நெதர்லாந்து அணியுடன் தென்னாப்பிரிக்க அணி மோதும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் அல்லது தென்னாப்பிரிக்க அணி தோற்றால் அப்போதே இந்திய அணி அரையிறுதிக்குச் சென்றதாகக் கருதலாம். அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வென்றால் அந்த அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும். அதனால் ஜிம்பாப்வேயுடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் மழைபெய்து ஆட்டம் ரத்தாகி ஒருபுள்ளியையாவது பெற வேண்டும்.

 

இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு மழையால் ஆபத்து

தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம்.

 

டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானால் அது அந்த அணி தொடரை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்துவிடும். ஏனென்றால் தென்னாப்பிரிக்க அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா மூன்று போட்டிகள் ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வெல்லும்பட்சத்தில் மூன்று போட்டிகளில் வென்றுவிடும். அதிக வெற்றி என்ற அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

அடிலெய்டில் மழை வராமல் இருப்பதுதான் தென்னாப்பிரிக்காவுக்கு நல்லது.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது.

வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா?

கணக்கீடுகளின்படி இருக்கத்தான் செய்கிறது.

வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும்.

 

டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நெதர்லாந்துடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டு புள்ளிகளைப் பெற முடியாமல் போய், பாகிஸ்தான் அணியை வங்கதேசம் வீழ்த்தினால், வங்கதேசம் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

இந்தியாவை வென்றால் ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு இருக்கிறதா?

கணக்கீடுகளின்படி இதற்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஜிம்பாப்வே இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணிக்கு 5 புள்ளிகள் கிடைக்கும். அதே நேரத்தில் பாகிஸ்தான் - வங்கதேச ஆட்டம் மழையால் கைவிடப்பட வேண்டும். தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்துடன் தோற்க வேண்டும். ஆனாலும் பெரிய வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுடன் தென்னாப்பிரிக்க அணியும் நெதர்லாந்துடன் பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.

இப்போதைக்கு அரையிறுதிக்கான எந்த வாய்ப்பும் இல்லாத ஒரே அணி நெதர்லாந்து மட்டும்தான்.

இந்தியா - ஜிம்பாப்வே போட்டி

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கும் மெல்போர்ன் மைதானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. ஞாயிற்றுக்கிழமை என்பதும் இந்தியாவுக்கு இது முக்கியமான போட்டி என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

 

டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் மெல்பர்ன் மைதானத்தைப் பற்றிய ஒரு சிக்கல் இருக்கிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துப்போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்து அது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது என இந்திய ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம், அதற்கு சற்று முன்பாக நடந்து முடியும் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான போட்டியின் முடிவைப் பொறுத்து, இந்தியா கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தைக் கொண்டதாகவும் இந்தியா-ஜிம்பாப்வே போட்டி மாறக்கூடும். ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த வரலாறு உண்டு.

ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்தியாவும் - ஜிம்பாப்வேயும் மோதுவதும் இதுவே முதல்முறை.

இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரைப் போல ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ரஸாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கே.எல். ராகுலும் சிறப்பான தொடக்கத்தை அளிக்கத் தவறிவிடுகிறார்கள். புள்ளி விவரங்களின்படி இந்திய அணியின் தொடக்க இணை இந்தத் தொடரில் அடித்த சராசரி ரன்கள் 13 மட்டுமே.

https://www.bbc.com/tamil/sport-63529292

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து அளித்த அதிர்ச்சி; இந்தியா, பாகிஸ்தானுக்கு கோப்பை வாய்ப்பு

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அபாரமான ஆட்டத்தால் வெற்றிபெற்று கிரிக்கெட் உலகை மீண்டும் ஒருமுறை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது நெதர்லாந்து.

இந்தப் போட்டியின் முடிவால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா வெளியேறி இருப்பதுடன், இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 158 ரன்கள் எடுத்த நிலையில் அந்த ரன்களை எடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி சுருண்டது. 13 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

சிறப்பான பேட்டிங், அற்புதமான பீல்டிங், கிரேட் கேட்ச்கள் என நெதர்லாந்து அணி ஆட்டம் முழுவதுமே ஆக்கிரமித்திருந்தது.

 

போட்டியின் முடிவில் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, 'இது ஜீரணிக்க முடியாத தோல்வி' என்று கூறினார். அது உண்மைதான் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் நெதர்லாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. ஆனால் அடுத்த உலகக் கோப்பை டி20 போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றிவிட்டது. அதாவது இந்த ஆண்டைப்போல இனி தகுதிச் சுற்றில் ஆட வேண்டியதில்லை.

போட்டியில் என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் முதலில் பேட்டி செய்தது நெதர்லாந்து. தொடக்க ஆட்டக்காரர்கள் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சிறப்பாகச் சமாளித்து ரன்குவித்தனர்.

அணியின் முதல் நான்கு வீரர்களுமே கணிசமாக ரன் எடுத்தனர். தென்னாப்பிரிக்காவின் முக்கியப் பந்துவீச்சாளர்களான ரபாடா, லுங்கி நிகிடி ஆகிய இருவரின் பந்துகளையும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினர். இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்களை எடுத்தது.

நெதர்லாந்தின் காலின் ஆக்கர்மன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 41 ரன்களை எடுத்தார்.

 

நெதர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள். பீல்டர்கள் சில அற்புதமான கேட்ச்களைப் பிடித்தார்கள். அதனால் தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அந்த அணி 13 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரன்ரேட்டும் பாகிஸ்தானை விடச் சரிந்தது.

வங்கதேசம் - பாகிஸ்தானுக்கு வாழ்வா, சாவா போட்டி

தென்னாப்பிரிக்க அணி போட்டியில் இருந்து வெளியேறிருப்பது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுக்குமே சாதகமாக அமைந்திருக்கிறது. இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், வங்கதேசமும், பாகிஸ்தானும் வெற்றி பெற்றாலே போதும். ரன் ரேட்டை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

அதே நேரத்தில் மழையால் ஆட்டம் ரத்தானால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துவிடும். ஏனென்றால் பாகிஸ்தானும், வங்கதேசமும் 5 புள்ளிகளைப் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அந்தச் சூழலில்கூட 5 புள்ளிகளைப் பெற்றிருக்கும் தென்னாப்பிரிக்கா ரன்ரேட்டில் குறைந்துவிட்டதால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

உண்மையில் வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டி அவ்விரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போராட்டமாக இருக்கும். வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

ஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் நடக்கும் இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிப்பவையாகவே கருதப்பட்டன.

 

தென்னாப்பிரிக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் உள்ளவையாக கருதப்பட்டன. முதல்போட்டி முடிவடைந்த நிலையி்ல் வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது

இந்தப் பிரிவில் இருக்கும் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகள். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் என்ற நிலை இருந்தது.

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா?

பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அந்தப் போட்டி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

இந்தியாவுக்கு ஜிம்பாப்வேயுடனான போட்டி எந்த அளவு முக்கியம்?

நெதர்லாந்து அணியுடன் தென்னாப்பிரிக்க தோற்றுவிட்டதால் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது.

இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது.

வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா?

வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்தியா - ஜிம்பாப்வே போட்டி

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கும் மெல்போர்ன் மைதானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. ஞாயிற்றுக்கிழமை என்பதும் இந்தியாவுக்கு இது முக்கியமான போட்டி எனக் கருதப்பட்டதுமே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

 

டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் மெல்பர்ன் மைதானத்தைப் பற்றிய ஒரு சிக்கல் இருக்கிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துப்போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்து விடக்கூடாது என இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் இந்திய அணி தோற்றாலும் அதன் அரையிறுதி வாய்ப்பு பாதிக்கப்படப்போவதில்லை. காரணம், அதற்கு சற்று முன்பாக நடந்து முடியும் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான போட்டியின் முடிவில் எந்த அணியும் 6 புள்ளிகளுக்கு மேல் எடுக்கப் போவதில்லை.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த வரலாறு உண்டு. ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்தியாவும் - ஜிம்பாப்வேயும் மோதுவதும் இதுவே முதல்முறை.

இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரைப் போல ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ரஸாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கே.எல். ராகுலும் சிறப்பான தொடக்கத்தை அளிக்கத் தவறிவிடுகிறார்கள். புள்ளி விவரங்களின்படி இந்திய அணியின் தொடக்க இணை இந்தத் தொடரில் அடித்த சராசரி ரன்கள் 13 மட்டுமே.

https://www.bbc.com/tamil/sport-63529301

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20: அரையிறுதிக்குள் பாகிஸ்தான்: இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதுமா?

  • அஷ்ஃபாக்
  • பிபிசி தமிழ்
13 நிமிடங்களுக்கு முன்னர்
 

வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா, ஜிம்பாப்வே என அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த பாகிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பு மங்கிப்போய் இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால், தனது கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது பாகிஸ்தான் அணி.

நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளுக்கு நாள் பல திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிகழ்ந்து வருகின்றன. 2 முறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸால் உலக கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனது, ஆசிய கோப்பையை வென்ற இலங்கையை நமீபியா தோற்கடித்தது, அயர்லாந்திடம் இங்கிலாந்து சறுக்கியது, பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது, நெதர்லாந்திடம் தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை தென்னாப்பிரிக்கா நழுவவிட்டது, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது என நடப்பு தொடரில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லாமல் போனது.

"தென்னாப்பிரிக்காவுக்கு என்னதான் பிரச்னை"என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு, அந்த அணியின் நிலைமை கவலைக்கிடமாக மாறியிருக்கிறது.

இந்தியாவை வீழ்த்திய கையோடு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவை தனது அட்டகாசமான ஆட்டத்தால் வீழ்த்தி அரையிறுதி கனவை கானல் நீராக்கியது நெதர்லாந்து. இதனால் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே அரையிறுதிக்கான பந்தயம் இன்று சூடுபிடித்தது.

 

அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான்

ஆஸ்திரேலியாவின் அடிலைட் மைதானத்தில், இரு அணிகள் மோதிய கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் மிடில் ஆர்டரின் தடுமாற்றத்தால் வெறும் 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

எளிய இலக்குடன் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. தனக்கு பேருதவி செய்த நெதர்லாந்துக்கு பாகிஸ்தான் ஒரு பிரதிபலனையும் செய்திருக்கிறது.

வங்கதேசத்தை வீழ்த்தியதால் புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தை பிடித்து அடுத்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு நெதர்லாந்திற்கு கிடைத்துள்ளது. ஆனால் இது சாத்தியமாக இந்தியாவின் உதவியும் தேவை. இந்தியா ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி அடையாமல் இருக்க வேண்டும்.

மூன்றாவது நடுவரால் ஏற்பட்ட சர்ச்சை

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்க தேச அணி 73 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சமயத்தில், பேட்டிங் ஆட வந்தார் கேப்டன் ஷாகிப் அல் ஹசன். சதாப் கான் வீசிய பந்தில் LBW முறையில் நடுவர் அவுட் வழங்கினார்.

இதை வங்கதேசம் அணி டி.ஆர்.எஸ் முறையில் ரிவ்யூ செய்தது. பந்து பேட் எட்ஜில் பட்டது போன்ற திரையில் தெரிந்தாலும், மூன்றாவது நடுவர் பேட் தரையில் பட்டதாக எண்ணி அவுட் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. அவுட் வழங்கிய பின்னும் ஷாகிப் அல் ஹசன் நடுவரிடம் பேசி முறையிட்டார்.

இருப்பினும் முடிவில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் களத்தில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பினார். முக்கியமான ஆட்டத்தில் மூன்றாவது நடுவர் வழங்கிய தீர்ப்பு இணையத்தில் டிரெண்டானது. வங்கதேச ரசிகர்கள் நடுவர்களை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

இதேபோல பாகிஸ்தான் பேட்டிங்கின்போது ஷாகிப் அல் ஹசன் டி.ஆர்.எஸ் எடுப்பதற்கான நேரம் முடிந்ததும் அப்பீல் செய்தார். இதனை நடுவர் ஏற்க மறுத்ததால் ஆவேசம் அடைந்த ஷாகிப், தனது தொப்பியை கழற்றி தரையில் தூக்கி வீசியவாறு கோபத்தை வெளிப்படுத்தினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோத வாய்ப்புள்ளதா?

இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினால் வரும் 10ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்த்து அரையிறுதியில் விளையாடும். ஒருவேளை தோல்வியைத் தழுவினால் 9ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்த்து களமிறங்கும்.

அதே சமயம், அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளுமே வெற்றிபெறும் பட்சத்தில், இறுதிப்போட்டியில் மீண்டும் ஒரு கடும் மோதலை எதிர்பார்க்கலாம். வரும் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பைக்காக பலப்பரிட்சை நடத்தும். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஆகச்சிறந்த விருந்தாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

https://www.bbc.com/tamil/sport-63532373

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

By DIGITAL DESK 5

06 NOV, 2022 | 02:49 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற தீர்மானம் மிக்க குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதியில் கடைசி அணியாக இணைந்துகொண்டது.

சுப்பர் 12 சுற்றில் தனது முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவிடமும் ஸிம்பாபப்வேயிடமும் கடைசி பந்துகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான், தொடர்ச்சியாக நெதர்லாந்து, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளை வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

Shaheen Shah Afridi celebrates after dismissing Litton Das, Bangladesh vs Pakistan, Men's T20 World Cup 2022, Adelaide, November 6, 2022

ஷஹின் ஷா அப்றிடியின் நான்கு விக்கெட் குவியல் பங்ளாதேஷை கட்டுப்படுத்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு அடிகோலியது.

இந்த வெற்றியினால் பாகிஸ்தான் வீரர்கள் அடைந்த  ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

இன்று காலை நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து நம்பமுடியாத வெற்றியை ஈட்டியதைத் தொடர்ந்து இந்தியாவுடன் பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் அரை இறுதிக்கு செல்வது உறுதியாகி இருந்தது.

இந் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில்  பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், வெற்றியை மாத்திரம் குறிவைத்து நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அதனை நிறைவெற்றிக்கொண்டது.

முதலாவது ஓவரில் தஸ்கின் அஹ்மதின் பந்துவீச்சில் மொஹமத் ரிஸ்வான் கொடுத்த இலகுவான பிடியை விக்கெட் காப்பாளர் நூருள் ஹசன் தவறவிட்டார்.

Mohammad Rizwan top-edged a pull off Taskin Ahmed for a six, Bangladesh vs Pakistan, Men's T20 World Cup 2022, Adelaide, November 6, 2022

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் அதன் பின்னர் எல்லாம் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது.

அணித் தலைவர் பாபர் அஸாமும் மொஹமத் ரிஸ்வானும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பாபர் அஸாம் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து மொஹமத் ரிஸ்வான் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மொஹமத் நவாஸ் (4), ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Mohammad Rizwan sweeps the ball for a boundary, Bangladesh vs Pakistan, Men's T20 World Cup 2022, Adelaide, November 6, 2022

எனினும் மொஹமத் ஹரிஸுடன் நவாஸ் 31 ஒட்டங்களைப் பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது. (91 - 3 விக்.)

அதனைத் தொடர்ந்து மொஹமத் ஹரிஸும் ஷான் அஹ்மதும் 4ஆவது விக்கெட்டில் 13 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்கச் செய்தனர்.

Mohammad Haris plays a cover drive, Bangladesh vs Pakistan, Men's T20 World Cup 2022, Adelaide, November 6, 2022

இப்திகார் அஹ்மத் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தபோதிலும் ஷான் மசூத் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தானின் வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதிசெய்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் நசும் அஹ்மத், ஷக்கிப் அல் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், எபாதொத் ஹொசெய்ன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தபோதிலும் பின்னர் சரிவுகண்டு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் லிட்டன் தாஸும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி 21 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லிட்டன் தாஸ் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் ஷன்டோவும் சௌம்யா சர்க்காரும் 2ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சிக்கையில் சர்க்கார் 20 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

அடுத்த பந்தில் ஷிக்கிப் அல் ஹசன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்ததாக கள மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்கினார். அதனை உடனடியாகவே ஷக்கிப் அல் ஹசன் மீளாய்வுக்கு உட்படுத்தினார்.

Nasum Ahmed celebrates with teammates after dismissing Babar Azam, Bangladesh vs Pakistan, Men's T20 World Cup 2022, Adelaide, November 6, 2022

மூன்றாவது மத்தியஸ்தரின் மீளாய்வின்போது ஷக்கிப் அல் ஹசன் எல்லைக்கோட்டிலிருந்து சிறிது தூரம் முன்னால் நகர்ந்திருப்பதும் பந்து அவரது துடுப்பை உராய்ந்து செல்வதும் சலன அசைவுகளில் தெரிந்தது. ஆனால், மூன்றாவது மத்தியஸ்தர் பந்து துடுப்பில் படவில்லை என தீர்மானித்து களமத்தியஸ்தரின் முன்னைய தீர்ப்பை அங்கீகரித்தார்.

இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பினால் ஷக்கிப் அல் ஹசன் களம் விட்டு வெளியேறாமல் சற்று நேரம் ஆடுகளத்தில் நின்றார். பின்னர் கள மத்தியஸ்தர் அவரை ஆடுகளம் விட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைய அவர் களம் விட்டு வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழக்க அவ்வணியினால் மீள முடியாமல் போனது.

முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ், கடைசி 10 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 48 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 54 ஓட்டங்களைப் பெற்றார். மத்தியவரிசையில் அபிப்  ஹொசெய்ன் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷதாப் கான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Shadab Khan celebrates after dismissing Soumya Sarkar, Bangladesh vs Pakistan, Men's T20 World Cup 2022, Adelaide, November 6, 2022

ஆட்டநாயகன்: ஷஹீன் ஷா அப்றிடி

https://www.virakesari.lk/article/139277

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை 2022: அதிரடி காட்டிய சூர்யகுமார்; 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி

  • அஷ்ஃபாக்
  • பிபிசி தமிழ்
59 நிமிடங்களுக்கு முன்னர்
 

சூரிய குமார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிக்கெட் காலண்டரில் 2022ம் ஆண்டு விராட் கோலிக்கானது மட்டுமல்ல.. 360 கோணங்களில் தனது அதிரடியான ஷாட்களால் அடித்து பலரையும் அன்னார்ந்து பார்க்க வைத்த சூர்யகுமாருக்கும் இது ஒரு சிறந்த ஆண்டு. ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டம் ஒன் சைடட் கேமாக இருந்தாலும் சூர்யகுமாரின் ஆட்டம் ரசிகர்களை இருந்த இடத்திலேயே கட்டிப்போட்டது என்றே சொல்லலாம். சச்சின், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் போற்றும் அளவுக்கு தனது பேட்டிங்கை கூர் தீட்டியிருக்கிறார் சூர்யகுமார்.

'எனக்கு உதவியது ரப்பர் பால் கிரிக்கெட்'

டி20 கிரிக்கெட்டில் சொற்பமான வீரர்கள் மட்டுமே சூர்யகுமார் இப்போது ஆடுவதை போல மிரட்டியிருக்கிறார்கள் என மூத்த கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டுள்ளார். ரப்பர் பந்துகளை வைத்துதான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடினேன். பலமுறை பந்தடிபட்டுள்ளது. அந்த கிரிக்கெட்தான் இப்போது என்னை சிறப்பான ஷாட்களை ஆட வைத்திருக்கிறது. உலகத்தில் ஒரேயொரு 360 டிகிரி கிரிக்கெட் வீரர் தான் இருக்கிறார். அவர் தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ். அவரைபோல நானும் விளையாட முயற்சிப்பேன் என்கிறார் சூர்யகுமார் யாதவ். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் ஆடிய பெரும்பாலான ஆட்டங்கள் ரன் ரேட்டை எகிற வைத்திருக்கிறது. 3 முறை அரை சதங்களையும் பதிவு செய்திருக்கிறார். நடப்பாண்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததோடு ஐசிசி டி20 தரவரிசையிலும் முதலிடத்தில் ஜொலிக்கிறார் சூர்யகுமார் யாதவ். எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திலும் சூர்யா எதிரணி பவுலர்களை கடுமையாக அச்சுறுத்துவார் என்றே எதிர்பார்க்கலாம். இந்த முறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் அதைத் தாங்கிப் பிடித்து உச்சிமுகர சூர்யகுமாருக்கு அத்தனை தகுதிகளும் உள்ளன.

இன்றைய போட்டி சுருக்கம்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் 15, கோலி 26 ரன்களில் வெளியேற கே.எல்.ராகுல், சூர்யகுமார் இருவரும் எதிரணி பந்துவீச்சை பொளந்து கட்டினர்.

 

கோலி மற்றும் சூர்யகுமார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோலி மற்றும் சூர்யகுமார்

51 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் விக்கெட் இழந்தாலும் இறுதிவரை களத்தில் நின்ற சூர்யகுமார் 25 பந்துகளில் 4 சிக்சர் 6 பவுண்டரிகள் விளாசி 61 ரன்கள் குவித்தார். பண்ட் 3, ஹர்திக் 18 ரன்களில் விடைபெற்றனர். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே 115 ரன்களில் ஆல் அவுட்டானது. பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களை வீசி 3 விக்கெட்களையும் ஷமி, பாண்டியா தலா 2 விக்கெட்களும், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

தினேஷ் கார்த்திக் Vs ரிஷப் பண்ட் - யார் பெஸ்ட்?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்கம் முதலே தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அணியில் ஜடேஜா இல்லாததால் ஃபினிசர் ரோலில் தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்துவது இந்திய அணியின் திட்டம். இருப்பினும் இதுவரை நடந்த ஆட்டங்களில் அவர் பெரியளவில் ரன் குவிப்பில் பங்களிக்கவில்லை. குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் அவர் சோபிக்காதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அந்த போட்டியில் அவர் 15 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 6 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க, ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பண்ட் இதுவரை ஒரு போட்டிக்கூட விளையாடவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பண்ட் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தவறான ஷாட் ஆடி 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த சமயத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரையிறுதி ஆட்டங்களில் விக்கெட் கீப்பராக ரோஹித் சர்மா யாரை தேர்ந்தெடுக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர், போட்டியை முடித்துக் கொடுப்பவர் என்கிற அடிப்படையில் தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இந்தியா - இங்கிலாந்து கடந்து வந்த பாதை

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 1 தோல்வியும் 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. அயர்லாந்திடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது பல விமர்சனங்களுக்கு வித்திட்டது. அதேசமயம், இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளையும் தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் ஒரு தோல்வியையும் சந்தித்திருக்கிறது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது

இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் விளையாடுமா?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப்-ஏ புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்தும், 2வது இடத்தை இங்கிலாந்தும் பிடித்துள்ளது. பி பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. வரும் 9ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. 10ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா களமிறங்குகிறது. இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெல்லும் பட்சத்தில் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரிட்சை நடத்தும்.

https://www.bbc.com/tamil/india-63533542

large.961640385_t20pt06-11.JPG.9107a9665

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை 2022: உலகக்கோப்பை கனவை நனவாக்குமா இந்தியா? பாகிஸ்தானுக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது?

  • அஷ்ஃபாக்
  • பிபிசி தமிழ்
6 நவம்பர் 2022
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையுடன் சூப்பர் 12 ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முதல் அரையிறுதி ஆட்டம் சிட்னி மைதானத்தில் வரும் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்த நியூசிலாந்தும் குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தானும் மோதுகின்றன. மறுநாள், அதாவது 10ம் தேதி வியாழக்கிழமை அடிலைட் மைதானத்தில் 2வது அரையிறுதி நடைபெறுகிறது. இதில் குரூப் 2 சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியாவும் குரூப் 1 சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்தும் விளையாடுகின்றன.

இங்கிலாந்து அணி எப்படி?

நடப்பு டி20 தொடரில் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடியது. இதில் நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான கம்பேக்கை கொடுத்தது. இதுதவிர, ஆஸ்திரேலியா உடனான ஆட்டம் மழையால் ரத்தானது. இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 4 போட்டிகளில் விளையாடி 125 ரன்களையும், ஜாஸ் பட்லர் 119 ரன்களையும் சேர்த்துள்ளனர். இது இந்தியாவுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவு.

 

டேவிட் மாலன் பேட்டிங்கில் கணிசமான ரன்களை சேர்க்கிறார். ஆனால் அவர் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருவது அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. அரையிறுதியில் அவர் விளையாடாத பட்சத்தில் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையக்கூடும்.

பந்துவீச்சில் சாம் கரண் இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி மிரட்டியிருக்கிறார். மார்க் உட் 9 விக்கெட்களை இதுவரை சாய்த்துள்ளார். இதுதவிர பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் பங்களிப்பு செய்வார்.

இங்கிலாந்தை மிரட்டிய அந்த 2 வீரர்கள்

இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் 2 - 1 கணக்கில் இந்தியா தொடரையும் வென்று திரும்பியது. இதில் கவனிக்கப்பட வேண்டியது சூர்யகுமாரும் புவனேஸ்வர் குமாரும்தான். கடைசி டி20 ஆட்டத்தில் டேவிட் மாலன் அதிரடியால் இங்கிலாந்து 215 ரன்களை சேர்த்தது.

இந்தியா இந்த போட்டியை தோற்றிருந்தாலும் சூர்யகுமாரின் ஆட்டம் சற்று ஆறுதலை தந்தது. இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து 55 பந்துகளில் 117 ரன்கள் விளாசினார் சூர்யகுமார். தற்போது அவர் நல்ல ஃபாமில் இருப்பது நிச்சயம் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலை தரும். இதேபோல அந்த தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர் புவனேஸ்வர் குமார். துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து பேட்டிங்கை திணறடித்தது கவனிக்கத்தக்கது.

ஜொலிக்கும் கோலி, சூர்யகுமார்; ஆனால்..

விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் இருவருமே அற்புதமான ஃபார்மில் வலம் வருகின்றனர். இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இருவரும் தலா 3 அரைசதங்களை விளாசியுள்ளனர். நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 246 ரன்களுடன் கோலி முதலிடமும் 225 ரன்களுடன் சூர்யகுமார் 2ம் இடமும் வகிக்கினறனர். ஆசிய கோப்பை தொடரில் கோலி சதம் விளாசிய பிறகு அவர் பேட்டிங் திறன் அபாரமாக உள்ளது.

 

சூரிய குமார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கோலி பெற்றுக்கொடுத்த வெற்றி பலருக்கும் நம்பிக்கை அளித்திருக்கிறது. கோலி - சூர்யகுமார் இருவருமே இங்கிலாந்தை அச்சுறுத்த காத்திருப்பார்கள். இருப்பினும் அவர்கள் இருவரை மட்டுமே இந்திய அணி சார்ந்திருக்க முடியாது.

இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பேட்டிங்கை பொறுத்தவரை ரோஹித்தின் ஃபார்ம் கவலையை அளிக்கிறது. இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் அவருக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை ராகுலோ ரோஹித்தோ பவர் பிளேவுக்குள் விக்கெட்டை இழந்தால் கர்ரனை சமாளிக்க இடக்கை வீரரான ரிஷபை இறக்குவதும் ஒரு நல்ல ஆப்சனே! மிடில் ஓவர்களில் மார்க் வுட் தவிர நம்பகமான ஒரு பவுலர் இங்கிலாந்துக்கு இல்லை.

பலவீனமான இங்கிலாந்து டெத் பவுலிங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள பிராப்பர் பேட்ஸ்மேன் ஆன கோலி இறுதிவரை களத்தில் நிற்பது அவசியம். மார்க் வுட் Vs சூர்யகுமார் யாதவ் ஒரு முக்கியமான மோதலாக இருக்க வாய்ப்புள்ளது. பெரிய அணிகளுடனான போட்டிகளில் முதலில் பேட் செய்யும் போது இந்தியா தடுமாறுவது வாடிக்கையாக உள்ளது; அதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

டாப் ஆர்டர்தான் இந்த தொடரில் இங்கிலாந்தின் பலமாக உள்ளது. குறிப்பாக கேப்டன் பட்லரை விரைவாக வீழ்த்த வேண்டியது அவசியம். ஆகவே பவர் பிளேவில் அர்ஸ்தீப் சிங் உடன் புவனேஷ்வர் குமாரும் பொறுப்புடன் வீச வேண்டிய தேவையுள்ளது" என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் தினேஷ் அகிரா.

இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா தனது அணி வீரர்களை தேர்வு செய்ததில் தவறிழைத்தது. அதன் விளைவாக தொடரில் இருந்து விலகவும் நேரிட்டது. இந்த முறை ரோஹித் சர்மா, பெரிய மாற்றங்களின்றி ஒரே வீரர்களை கொண்டு போட்டிகளை எதிர்கொண்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு பதில் தீபக் ஹூடா களமிறக்கப்பட்டாலும் அவரிடம் இருந்து எந்த பங்களிப்பும் கிடைக்காததால் அடுத்த போட்டியே அவர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அக்சர் படேல் கொண்டு வரப்பட்டார்.

காணொளிக் குறிப்பு,

பேட்டிங்கில் மிரள வைத்த சூரியகுமார் யாதவ்; அரையிறுதிக்கு தெம்புடன் நுழைந்த இந்தியா

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக ரிஷப் பண்ட் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். வீரர்களை தேர்வு செய்வதில் ரோஹித் அதிக கவனத்துடன் செயல்படுவது தெரிகிறது. பெரும்பாலும் இந்தியா சூப்பர் 12 சுற்றில் விளையாடிய அதே வீரர்களை கொண்டு அரையிறுதி ஆட்டத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

உத்தேச ஆடும் லெவன்: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங், புவனேஸ்வர் குமார், முகமது சமி

நியூசிலாந்து - பாகிஸ்தான் ஆட்டம் எப்படி இருக்கும்?

நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் போட்டியிலேயே 200 ரன்களை குவித்ததோடு ஆஸ்திரேலியாவை வெறும் 111 ரன்களில் சுருட்டியது. இங்கிலாந்திடம் வீழ்ந்திருந்தாலும் இலங்கை, அயர்லாந்து அணிகளை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் மழையால் ரத்தானது. பேட்டிங்கில் க்ளென் பிலிப்ஸ், கேன் வில்லியம்சன், டெவோன் கான்வே ஆகியோர் கவனிக்கப்பட வேண்டியவர்கள். நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சும் பாகிஸ்தானுக்கு சவாலாக அமையக்கூடும்.

மறுபுறம் பாகிஸ்தான் தனது சொந்த ஆட்டத்திறனால் அரையிறுதிக்கு வரவில்லை. அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் அடைய பிற அணிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்டிங். கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் மிரட்டிய பாபர் ஆசாம் இந்த தொடரில் சொற்ப ரன்களில் நடையை கட்டுவது, எந்த ஒரு பேட்ஸ்மேனிடமும் கன்சிஸ்டன்சி இல்லாதது உள்ளிட்ட பல பிரச்னைகளை சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது பாகிஸ்தான். பேட்டிங்கை சிறப்பாக செய்யும் பட்சத்தில் நியூசிலாந்துக்கு சவாலாக மாறலாம். இல்லை எனில், முதல் அரையிறுதி ஆட்டம் ஒன் சைடட் கேமாக மாறிவிடும்.

https://www.bbc.com/tamil/sport-63536272

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாபரிடமிருந்து மிக விசேடமான ஒன்றை காண்போம்: மெத்யூ ஹைடன்

By DIGITAL DESK 3

08 NOV, 2022 | 05:42 PM
image

2022 ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் மிகச் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை எனவும் அணித்தலைவர் பாபர் அஸாமிடமிருந்து மிகச் சிறந்த ஆட்டமொன்றை நாம் காணப்போகிறோம் என தான் எண்ணுவதாகவும் அவ்வணியின் ஆலோசகரான அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெத்யூ ஹைடன் கூறியுள்ளார். 

இத்தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் நியூ ஸிலாந்தும் நாளை  புதன்கிழமை மோதவுள்ளன. இந்நிலையில், சிட்னியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் மெத்யூ ஹைடன் இவ்வாறு கூறினார்.

இத்தொடரில் பாகிஸ்தான் அணி நெருக்கடியிலிருந்த நிலையில், சுப்பர் 12 கடைசி நாள் போட்டியொன்றில் தென் ஆபிரிக்காவை எதிர்பாராத விதமாக நெதர்லாந்து தோற்கடித்தமை பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பை இலகுவாக்கியது. 

இது குறித்து மெத்யூ ஹைடன் கூறுகையில், அது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தது. ஆனால், நாம் (பாகிஸ்தான் அணி) எமது சிறப்பான ஆட்டத்தை ஆடவில்லை என நான் உண்மையாக நம்புகிறேன். அது எதிரணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்' என்றார்.

103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 161 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய மெத்யூ ஹைடன், ஆக்ரோஷமான ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளங்கியவர். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாமின் ஆற்றல் குறித்து ஹைடன் நம்பிக்கை தெரிவித்தார். 

இத்தொடரின் 5 போட்டிகளில் 39 ஓட்டங்களையே பாபர் அஸாம்  பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாபர் அஸாம் குறித்து ஹைடன் கூறுகையில், 'பாபர் சில கஷ்டங்களை எதிர்கொள்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது அவரை மேலும் சிறந்த வீராகவே உருவாக்கும்.

வானிலை அமைதியாக இருந்தால், அடிக்கடி அதைத் தொடர்ந்து புயல் வரும், எனவே பாபரிடமிருந்து  மிக விசேடமான ஒன்றை நாம் பார்க்கவுள்ளோம் என எண்ணுகிறேன்' என்றார்.

பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் அணி வென்ற பின்னர், அணி வீரர்கள் மத்தியில் உரையாற்றிய மெத்யூ ஹைடன், பாகிஸ்தான் அணி இப்போது மிக ஆபத்தானது. ஏனைய அணிகள் அதைப் பார்த்து பயப்படுகின்றன என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நியூஸிலாந்து அணி குறித்து மெத்யூ ஹைடன் இன்று கூறுகையில்,  

எதிரணிகளை துடுப்பாட்டத்தினால் அழுத்தத்துக்கு உள்ளாக்கக்கூடிய வீரர்கள் நியூ ஸிலாந்து அணியில் உள்ளனர். அவர்களிடம் சிறந்த சமநிலையான பந்துவீச்சு வரிசையும் உள்ளது.

சிறந்த வேகப்பந்துவீச்சு வரிசையும் உள்ளது. அனுபவம் மிக்க வீர்ரகள், போட்டிகளை வெல்லக்கூடிய வீரர்கள் அவர்களிடம் உள்ளனர் என்றார்.

https://www.virakesari.lk/article/139486

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை - பாகிஸ்தான்: 'நியூஸிலாந்துடன் இதுவரை தோற்றதில்லை, கோப்பை எங்களுக்குத்தான்'

  • எம் மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
9 நவம்பர் 2022, 02:01 GMT
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்
 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1992 உலகக் கோப்பை தொடரை நினைவிருக்கிறதா ? இல்லையென்றால் இல்லையென்றால் சமூக ஊடகங்களில் சற்று உலவிப் பாருங்கள். பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அந்தக் காலத்தை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.

எங்கோ காணாமல் இருந்த, வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட ஒரு அணி இன்சமாமின் அதிரடியாலும், வாசிம் அக்ரமின் யாக்கர்களாலும் கோப்பையைத் தட்டிச் சென்றதை இன்றும் நினைத்து பாகிஸ்தான் ரசிகர்கள் சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் தோற்கும், பிறகு வெற்றி பெறும், மீண்டும் தோற்கும், தட்டுத்தடுமாறி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பிறகு நான்கு கால் பாய்ச்சலில் கோப்பையை வென்றுவிடும். இந்த உலகக் கோப்பையிலும் பாகிஸ்தான் ரசிகர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள்.

இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் பாகிஸ்தான் இதுபோன்று வெற்றி பெறும் என்று அந்நாட்டு அணியினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

 

1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றில் இங்கிலாந்து அணியுடன் வெறும் 74 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி சுருண்டபோது, அந்த அணி தொடரின் கடைசி நிலை நிலை அணிகளாகக் கருதப்பட்ட ஜிம்பாப்வே மற்றும் இலங்கையுடன் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆட்டம் மழையில் தடைபட்டு தோல்வியில் தப்பிய பாகிஸ்தான் அணி வீழ்த்த முடியாது என்று கருதப்பட்ட அணிகளையெல்லாம் தோற்கடித்தது.

1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருடன் இப்போது நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரை ஒப்பிட முடியுமா என்று கேட்டால், ஏராளமான நிகழ்வுகளை பாகிஸ்தான் ரசிகர்கள் அள்ளி வீசுகிறார்கள். புள்ளி விவரங்களும் பாகிஸ்தானுக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றன.

"1992 உலகக் கோப்பை போட்டியிலும் கடைசி நிலையில் இருந்து பாகிஸ்தான் மேலே வந்தது" என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

இதுவரை மூன்று முறை உலகக் கோப்பை உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் மோதிக் கொண்டிருக்கின்றன. ஒருமுறைகூட நியூஸிலாந்து வென்றதில்லை. 1992-ஆம் ஆண்டு, 50 ஓவர் உலகக் கோப்பை, 1999-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை ஆகிய மூன்று தொடர்களிலும் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தியிருக்கிறது. அதுவும் அரையிறுதிப் போட்டிகளில்.

1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் என்ன நடந்தது?

1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய முதல் 5 போட்டிகளை எடுத்துப் பார்த்தால் மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும், மழையால் ரத்து செய்யப்பட்ட ஓர் ஆட்டமும்தான் இருக்கும். அடுத்ததாக பலமான ஆஸ்திரேலியாவையும், நியூலாந்தையும் எதிர்கொள்ள வேண்டும். இலங்கையுடனான மற்றொரு போட்டியும் இருந்தது.

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது பற்றி யாருமே கணித்திருக்க மாட்டார்கள். ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆஸ்திரேலியாவை வென்ற பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கையையும் வீழ்த்தியது.

அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் மோதியது. மொத்தமாக 8 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அதுவரை ஒரு போட்டியில் கூட நியூஸிலாந்து தோற்கவில்லை. அப்படிப்பட்ட அணியை 166 ரன்களுக்குச் சுருட்டியது பாகிஸ்தான். அரைச் சதமும், சதமும் அடித்துக் கொண்டிருந்த கேப்டன் மார்ட்டின் க்ரோவ் அந்தப் போட்டியில் 20 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களை எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்து விட்டுக் கொடுத்ததாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஏனென்றால் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்துவது எளிது என நியூஸிலாந்து அணி கணித்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் ஆக்லாந்து மைதானத்தில் நடந்த அரையிறுதியில் நியூஸிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது வேறு முகங்களைக் காட்டினார்கள். கேப்டன் இம்ரான் கான், மியான் தத், ரமீஸ் ராஜா, இன்சமாம் உல் ஹக் என அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்த இன்சமாம் தனது அதிரடியை உலகுக்கு நிரூபித்த தருணங்களுள் முக்கியமானது அது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தியது. ஒன்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். லீக் போட்டியில் வெறும் 74 ரன்களுக்குச் சுருண்ட அதே பாகிஸ்தான் அணிதான் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெறுங்கையுடன் வெளியேற்றியது.

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த விஸ்வரூப மாற்றத்தைத்தான் பாகிஸ்தான் ரசிகர்கள் இப்போது எதிர்பார்க்கிறார்கள். இதே வகையில் கோப்பையை வெல்லும் என்றும் நம்புகிறார்கள்.

1999-உலகக் கோப்பை அரையிறுதி

1999-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடந்தது. அதிலும் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை பாகிஸ்தான் எதிர்கொண்டது. 1992-ஆம் ஆண்டு தோல்விக்குப் பழிதீர்க்க வேண்டும் என்ற கருத்துகளுக்கு மத்தில் நடந்த இந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் அணியே வென்றது.

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சயீத் அன்வர் 113 ரன்களை எடுத்து பாகிஸ்தான் வெல்வதற்கு உதவினார். எனினும் இந்தத் தொடரில் பாகிஸ்தானால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மிக மோசமாகத் தோற்றுப் போனது.

2007 டி20 உலகக் கோப்பை அரையிறுதி

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடந்த அரையிறுதிப் போட்டியில் மீண்டும் ஒருமுறை நியூஸிலாந்தும் பாகிஸ்தானும் மோதின. ஆனால் நியூஸிலாந்து அணியால் 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 19-ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டி பாகிஸ்தான் வென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1992 உலகக் கோப்பையுடன் ஒப்பிடுவதற்கான காரணங்கள்

1992 உலகக் கோப்பையைப் போலவே இருப்பதால் இந்த உலகக் கோப்பையும் பாகிஸ்தானுக்குத்தான் என்பதற்கு சில காரணங்களை பாகிஸ்தான் ரசிகர்கள் அடுக்குகிறார்கள். அவை

  • முந்தைய உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. (அப்போது 1987, இப்போது 2021)
  • முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி
  • லீக் சுற்றில் இந்தியாவுடன் தோல்வி
  • கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர் வெற்றி
  • கடைசி நாள்வரை ஒரு புள்ளிக்காக காத்திருந்து அரையிறுதிக்குத் தகுதி

1992 உலகக் கோப்பையா? 2011 உலகக் கோப்பையா?

பாகிஸ்தான் ரசிகர்கள் 1992 உலகக் கோப்பையில் நடந்தது போன்று இப்போதும் நடக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், இந்திய ரசிகர்கள் 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, அல்லது 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் நடந்தது போன்று நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

1987-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அடுத்தடுத்த அரையிறுதிப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேறியதை மட்டும் இரு நாட்டு ரசிகர்களும் விரும்பவில்லை.

இப்போதைய நிலை என்ன?

இந்த உலகக் கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் தலா 3 போட்டிகளில் வென்றிருக்கின்றன. பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் இணை பெரிய அளவில் ரன்குவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்திருக்கிறது.

தனிப்பட்ட முறையிலும் அவர்களது ஆட்டம் சிறப்பாக இல்லை. குறிப்பாக பாபர் ஆசம் மிகச் சொற்ப ரன்களையே எடுத்திருக்கிறார். விரைவாக அவுட் ஆகிய வெளியேறிவிடுகிறார். அதனால் அணியின் டாப் ஆர்டர் பதற்றமாகி விடுகிறது.

சிட்னி மைதானம் எப்படி?

பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி நடக்கும் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானம் முதலில் பேட் செய்யும் அணிக்குச் சாதகமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் ஆடப்பட்ட 6 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் ஆடிய அணியே வென்றிருக்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டும் இங்கிலாந்து அணி இரண்டாவது பேட் செய்து வென்றது. அதிலும் வெறும் இரண்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில்தான் இங்கிலாந்தால் 142 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடிந்தது.

முதலில் ஆடும் அணி சராசரியாக 160 ரன்களை எடுக்கலாம், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வேகப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகவும் இந்த ஆடுகளம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

https://www.bbc.com/tamil/sport-63552046

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் நுழைய இந்தியா என்ன செய்ய வேண்டும்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நிதின் ஸ்ரீவஸ்தவா
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய ஐந்து குரூப் ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது குரூப்பைச் சேர்ந்த இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இரு அணிகளும் சந்திக்கும் முதல் மற்றும் நாக் அவுட் பந்தயம் இதுவாகும். இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது நியூசிலாந்து. இந்தப் போட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது. அடிலெய்டில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய கேள்வி.

அடிலெய்ட் மைதானம்

அடிலெய்ட் ஓவல் மைதான ஆடுகளம் வடக்கு ஸ்டாண்டில் இருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இது எப்போதுமே பேட்டிங்கிற்கு துணைநிற்கும் மைதானமாக இருந்துள்ளது. இங்கு தங்கள் திறமையைக் காட்ட, மாறும் வானிலை மற்றும் மேகங்களின் வருகையை பந்துவீச்சாளர்கள் எதிர்நோக்குகிறார்கள். ஆனால் 2013-ல் இந்த ஆடுகளம் டிராப்-இன் பிட்சாக மாற்றப்பட்டது அதாவது இந்த ஆடுகளம் விரிக்கப்படுகிறது. அமைக்கப்படுவதில்லை. சிறப்பான விஷயம் என்னவென்றால் மைதானம் உண்மையில் ஓவல் வடிவத்தில் உள்ளது. நேராக அதாவது ஸ்ட்ரெய்ட் ஷாட்களால் சிக்ஸர் அடிப்பது கடினம். ஆனால் ஸ்கொயர் பவுண்ட்ரி சிறியது. அதை இந்திய பேட்ஸ்மேன்கள் குறிவைக்க வேண்டியிருக்கும்.

பெரிய இலக்கு எதிர்பார்ப்பு

"போட்டி மாலையில் தொடங்கும் என்பதால், கடலில் இருந்து வீசும் காற்று, வேகமாக அல்லது மெதுவாக பந்துவீசுவதற்கான திசையை தீர்மானிக்கும். ஆனாலும், விக்கெட் சிறப்பாக இருப்பதால் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்,”என்று மைதானத்தில் பணியாற்றும் பில்லி ஜான் பிபிசியிடம் கூறினார். இந்தியா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். ஏனெனில் அடிலெய்டின் T20 வரலாற்றில் முதலில் மட்டை வீசுபவர்களின் வெற்றி சதவிகிதம் அதிகமாக உள்ளது. அடிலெய்டு விக்கெட் மற்றும் வானிலையை கருத்தில் கொண்டு இறுதி 11 வீரர்கள் குறித்து முடிவெடுக்கப்போவதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். “அணியில் உள்ள 15 வீரர்களும் இறுதி அணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு முன் பரிசீலிக்கப்படுவார்கள். யார் விளையாடினாலும், விளையாடாமல் இருந்தாலும் அணி பலவீனமாக இருக்காது,” என்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அவர் கூறினார். ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு முன் இருக்கும் சவால்கள் பற்றி பார்ப்போம்.

 

அடிலெய்டு

கேப்டனின் ஃபார்ம்

முதல் கவலை கேப்டன் ரோஹித் ஷர்மா தான். இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காரராக அவர் எடுத்த ரன்கள் 4, 53, 15, 2 மற்றும் 15. சிட்னியில் நெதர்லாந்திற்கு எதிராக அவர் அரைசதம் அடித்தார். தொடக்கத்திலேயே அவருடைய ஒரு எளிய கேட்ச் தவறவிடப்பட்டது. அதே நேரத்தில் பெரிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் தடுமாறுவது போல காணப்பட்டார். அவரது தொடக்க ஜோடியான கே.எல். ராகுல் ஐந்து போட்டிகளில் கடைசி இரண்டில் அரைசதம் அடித்துள்ளார். ஆனால் முதல் மூன்று போட்டிகளிலும் அவரது ஸ்கோர் 4, 9 மற்றும் 9 ரன்கள் ஆகும். பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் மற்றும் சாம் கரன் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் முதல் ஐந்து ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் இந்திய துவக்க ஜோடி வேகமாக விளையாட வேண்டும் என்பதுதான் விஷயம். ஏனெனில் இதுவரை டி20 உலகக் கோப்பையில் பவர்பிளேயில் மோசமாக விளையாடியுள்ள வீரர்களில் ரோஹித் ஷர்மாவும், கேஎல் ராகுலும் அடங்குவார்கள். இந்தப் போட்டியிலும் இந்திய அணி மிடில் ஆர்டரையே அதிகம் சார்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் விராட் கோலி ஒன்-டவுனிலும், சூர்யகுமார் யாதவ் டூ-டவுனிலும் கிட்டத்தட்ட எல்லாப் போட்டிகளிலும் ஆரம்ப சரிவில் இருந்து அணியை மீட்டுள்ளனர். " விராட்கோலி அல்லது சூர்யகுமார், கடைசி ஓவர் வரை கிரீஸில் இருந்ததுதான் இந்தியாவுக்கு சாதகமாக இருந்த ஒரே விஷயம். இது போன்ற திறமையான வீரர்களால் இன்னிங்ஸை கட்டிநிறுத்தவும் முடியும், சிக்ஸர்களை விளாசவும்முடியும்,” என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் குறிப்பிடுகிறார்.

 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியும், அதே ஆட்டத்தில் விக்கெட்டின் மறுமுனையில் கோலிக்கு ஆதரவாக நின்று 40 ரன்கள் எடுத்ததன் மூலமும் ஹார்திக் பாண்டியா அணிக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

 

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த்?

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரில், எந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யவேண்டிய பெரிய தலைவலி ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு உள்ளது. நல்ல அனுபவமும், கடந்த ஐபிஎல் போட்டியின் சிறப்பான பேட்டிங் புள்ளி விவரமும் தினேஷ் கார்த்திக்கிடம் உள்ளது. ஆனால் இந்த தொடரில் அவர் தனது முத்திரையை பதிக்க தவறிவிட்டார். இங்கிலாந்து அணியில் ஆதில் ரஷித் மற்றும் மொயின் அலி போன்ற இரண்டு சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.அவர்களுக்கு எதிராக கார்த்திக் அல்லது ரிஷப், இவர்களில் யார் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதையும் பயிற்சியாளர் டிராவிட் சிந்திக்க வேண்டும். கடந்த போட்டியில் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்தபோதிலும் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை அவர் கோட்டைவிட்டார். அரையிறுதியில் இத்தகைய அவசரத்திற்கு பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும். தினேஷ் கார்த்திக்கின் பிரச்னை என்னவென்றால், அவர் தனதுஆட்டத்தை மெதுவாக தொடங்குகிறார். இதை கருத்தில்கொண்டு பார்க்கும்போது, ரிஷப் பந்திற்கு வாய்ப்பு அதிகம். இந்த வாய்ப்பு அவரது கேரியருக்கு முக்கியமானதாக இருக்கும்.

பந்துவீச்சில் யார் மீது அழுத்தம்

பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் அணியின் ஆல்ரவுண்டரைப் பற்றி முதலில் பார்ப்போம். ஹார்திக் பாண்டியா தனது பங்கை நன்றாகவே வகித்து வருகிறார். ஆனால் இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா இல்லாதது மிக அதிகமாக உணரப்படுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே ஜடேஜாவுக்கு முழங்கால் காயம் ஏற்பட்ட காரணத்தால், அவரால் விளையாட முடியவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார். அவர் இதுவரை அவ்வளவாக எதையும் சாதிக்கவில்லை. அவர் நான்கு போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். பேட்டிங்கில் இதுவரை அவரது அதிகபட்ச ஸ்கோர் ஏழு ரன்கள் ஆகும். மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய ஒரே ஓவரில் அவர் 21 ரன்கள் கொடுத்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 3.2 ஓவரில் 40 ரன்களை வாரி வழங்கினார். அரையிறுதியில் விளையாடும் இந்திய அணியில் அவரை சேர்ப்பதா, வேண்டாமா என்பது நிர்வாகத்தின் முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி. அடிலெய்டின் விக்கெட் சற்று மெதுவாக இருப்பதாகவும், சிறப்பான வானிலையில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அது உதவும் என்றும் பயிற்சியாளர் டிராவிட்டும், கேப்டன் ரோஹித் ஷர்மாவும் கருதினால், சாஹலுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்.

இங்கிலாந்து அணி எப்படி?

 

இங்கிலாந்து அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து அணியில் சிறப்பாக மட்டைவீசிவந்த டேவிட் மலான் முந்தைய போட்டியில் காயமடைந்தார். அரையிறுதியில் அவருக்கு பதிலாக பில் சால்ட், 3-வது இடத்தில் இறக்கப்படலாம். தொடக்க ஆட்டக்காரர் பட்லர் ஏற்கனவே ஃபார்மில் உள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சை திறமையாக விளையாடக்கூடியவர்கள். இலங்கைக்கு எதிரான போட்டியில் தங்கள் திறமையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அர்ஷ்தீப், புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி ஆகியோர் பவர்பிளே ஓவர்களிலேயே தொடக்க ஜோடியின் விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும். இதனால் அஷ்வின் மற்றும் சாஹல், மிடில் ஆர்டர் மீது சுழல்பந்து அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். "சிறப்பாக பந்துவீசும் இரண்டு அணிகளே, அரையிறுதியில் வெற்றி பெற்று முன்னேறும். ஏனெனில் இதுவரை நடந்த போட்டிகளில் எதிலுமே பெரிய ஸ்கோரை பார்க்கமுடியவில்லை,” என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக் கருதுகிறார். இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை அடிலெய்டில் ஒரு டி20 போட்டியில் கூட தோற்றதில்லை. அப்படிப்பட்ட சூழலில் இந்த அரையிறுதி பந்தயத்தின் முடிவு சுவாரசியமாக இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cn45lvpl6e7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20: 1992 அரையிறுதி அற்புதத்தை மீண்டும் நிகழ்த்திய பாகிஸ்தான்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம். மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 27 நிமிடங்களுக்கு முன்னர்
 

டி20 போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தானின் ஷதாப் கான் மற்றும் அணி வீரர்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது பாகிஸ்தான். இந்தியாவும்  இங்கிலாந்து ஆடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெல்லும் அணியுடன் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் ஆடும்.

நியூஸிலாந்து அணி பலமானது என்று கூறுவதெல்லாம் பாகிஸ்தான் அணியைச் சந்திக்கும் வரைதான் என்று வாசிம் அக்ரம் கூறியிருந்தார். சிட்னி மைதானம் அதற்கு இன்னொரு சாட்சியாகிவிட்டது.

பாகிஸ்தான் அணி முதல் ஓவரைச் சந்தித்தபோது ஒரு ரன் எடுத்திருந்த பாபர் ஆஸம் தட்டிவிட்ட பந்து நியூஸிலாந்து விக்கெட் கீப்பரின் கையைத் தழுவிச் சென்றது. அப்போதே நியூஸிலாந்தின் வெற்றியும் நழுவிப் போய்விட்டது.

அரையிறுதிக்குத் தகுதிபெறுமா என்று கருதப்பட்ட அணி கடைசி நிமிடத்தில் காட்சிகளையெல்லாம் மாற்றி அரையிறுதிக்குள் நுழைந்தததுடன், இதோ இன்று இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டது.

 

பாகிஸ்தான் ரசிகர்கள் கூறுவது போல இன்னும் கோப்பை வெல்வதுதான் பாக்கியிருக்கிறது.

ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான்

திணறடிக்கும் பந்துவீச்சு, துல்லியமான பேட்டிங் என போட்டியின் தொடக்கம் முதலே ஆக்கிரமித்து வந்த பாகிஸ்தான் அணி இன்னொரு முறை உலக கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. 

ஒரேயொரு போட்டியில் தங்கள் மீதான அனைத்து விமர்சனங்களையும் துடைத்து எறிந்துவிட்டது பாகிஸ்தான் அணி. 

பாகிஸ்தான் அணி தோற்கும், பிறகு காணாமல் போகும், அதன் பின்னர் எங்கிருந்தோ வந்து கோப்பையை வெல்லும் என்று சொல்வார்கள்.

நியூஸலாந்துக்கு எதிரான போட்டி அப்படித்தான் இருந்தது.

உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் அணியை நியூஸிலாந்து அணி வென்றதில்லை என்ற வரலாற்றை கேன் வில்லியம்ஸால் இன்றும் மாற்றி எழுத முடியவில்லை.

1992 உலக் கோப்பை முதல் பாகிஸ்தான் அணியைப் பழி தீர்ப்பதற்காக மேற்கொண்ட முயற்சியும் பலிக்கவில்லை.

 

டி20 போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

யூஸ்டு பிட்ச் என்று கூறப்படும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட களத்தில் ஆடுவது இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்குச் சாதகமாக அமையும் என்று கூறப்படும் நிலையில், பாகிஸ்தானின் பேட்டிங்கில் அப்படியொரு சிரமத்தையும் காண முடியவில்லை.

ஏனென்றால் அதன் பிறகு பாபர் ஆஸமும் ரிஸ்வானும் சேர்ந்து பந்துவீச்சாளர்களைத் திணறவைத்தார்கள். அடிக்கடி பந்துகள் பவுண்டரிகளைத் தாண்டிக் கொண்டிருந்தன. இந்தத் தொடரில் முதல் முறையாக நீடித்து நின்று ஆடியது இந்த இணை. பாபர் ஆஸம் தனது முதலாவது அரைச் சதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்தார்.

 

டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் வீரர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்

 

டி20 கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் பாகிஸ்தான் ரசிகர்கள்

சோதனை கட்டத்தில் நியூஸிலாந்து

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.

இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணியிலும், பாகிஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசிப் போட்டியில் ஆடியே அணிகளே இதிலும் களமிறங்கின.

முதல் ஓவரிலேயே ஷாஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரரான ஃபின் ஆலன் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து அந்த அணியைச் சோதனைக்கு உள்ளாக்கினார்.

அந்தத் தருணத்திலேயே பாகிஸ்தான் ரசிகர்களின் ஆராவாரம் சிட்னி மைதானம் முழுவதும் கேட்டது.

ஹாரிஸ் ராஃப் வீசிய பவர் பிளேயின் கடைசிப் பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 21.  

 

டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆட்டத்தின் போது நியூசிலாந்தின் டிம் செளதி அவரை ரன் அவுட் செய்ய முயன்றபோது பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தனது மட்டையை தரையில் படச் செய்தார்.

இந்த் தடுமாற்றங்களுக்கு மத்தியிலும் நியூஸிலாந்து அணிக்கு ஆறுததாக இருந்தது கேப்டன் வில்லியம்சனும் அவருடன் இணை சேர்ந்த மிட்சலும்தான். 

இவர்கள்தான் அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார்கள். 17 ஆவது ஓவரில் கேன் வில்லியம்ஸன் 46 ரன்களை எடுத்திருந்தபோது சாஹீன் ஷா அப்ரிடி பந்தை ஸ்வீப் செய்ய முயன்று போல்டானார்.

20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. டேரில் மிட்சல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 ரன்களை எடுத்திருந்தார். 

இந்தப் போட்டியில் ஷாஹின் ஷா அப்ரிடியின் பந்துகள் விக்கெட்டுகளை நோக்கி அம்புகள் போலப் பாய்ந்து கொண்டிருந்தன.

நான்கு ஓவர்களை வீசிய அவர் 24 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூஸிலாந்தின் அடித்தளத்தை நொறுக்கியவர் அவரே.

 152 ரன்கள் இலக்கை எட்டும் பணியே சலனமே இல்லாமல் செய்து முடித்தது பாகிஸ்தான் அணி. பாபரும் ரிஸ்வானும் சேர்ந்து 105 ரன்கள் என்ற பெருங் கோட்டையைக் கட்டிக் கொடுத்துவிட்டார்கள்.

ரிஸ்வான் 57 ரன்களும், பாபர் ஆஸம் 53 ரன்களும் எடுத்தார்கள்.  அதன் பிறகு வந்தவர்கள் படிப்படியாக ரன் சேகரிக்க, கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.

30 ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி வரலாறு

இதற்கு முன் மூன்று முறை உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் மோதி இருக்கின்றன.

ஆனால், ஒருமுறை கூட நியூஸிலாந்து வென்றதில்லை. 1992-ஆம் ஆண்டு,  50 ஓவர் உலக கோப்பை, 1999-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை, 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை ஆகிய மூன்று தொடர்களிலும் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தியிருக்கிறது. அதுவும் அரையிறுதிப் போட்டிகளில்.

இப்போது நான்காவது முறையாக அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியிருக்கிறது பாகிஸ்தான்.

1992-இல் என்ன நடந்தது?

1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய முதல் 5 போட்டிகளை எடுத்துப் பார்த்தால் மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும், மழையால் ரத்து செய்யப்பட்ட ஓர் ஆட்டமும்தான் இருக்கும்.

அங்கிருந்து மீண்டுவந்த பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது வரலாறு.

அந்த வரலாறு இந்த உலக கோப்பையிலும் திரும்பப் போகிறது என்று ஏற்கெனவே பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். இந்தப் போட்டி அந்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cv2pjklj0l4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான நேரத்தில் நியூஸிலாந்துக்கு சங்கடத்தை ஏற்படுத்திய சாதனை மிகு அஸாம் -ரிஸ்வான் ஜோடி

09 NOV, 2022 | 09:28 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் சாதனை மிகு ஆரம்ப ஜோடியினர் ஸ்திரமான தொடக்கத்தை இட்டுக்கொடுத்து தமது அணியின் வெற்றியை இலகுபடுத்தினர்.

மிகவும் அவசியமான வேளையில் திறமையை வெளிப்படுத்திய பாபர் அஸாமும் மொஹமத் ரிஸ்வானும் எட்டக்கூடிய ஆனால் சற்று சிரமத்தைத் தோற்றுவித்த வெற்றி இலக்கை பாகிஸ்தான் அடைவதற்கு உதவினர்.

எவ்வாறாயினும் நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடியபோது ஷஹீன் ஷா அவ்றிடி தனது முதலாவது ஓவரில் ஃபின் அலனையும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த கேன் வில்லியம்சனையும் ஆட்டமிழக்கச் செய்தததன் மூலம் தமது அணியின் வெற்றிக்கு வித்தி டப்பட்டதாக அணித் தலைவர் பாபர் அஸாம் தெரிவித்தார்.

Babar-Azam_-Mohammad-Rizwan_-Twenty20-Wo

  ஷஹீன் ஷா அவ்றிடி    4 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 12 சுற்றில் பிரகாசிக்கத் தவறிய பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் மிக முக்கிய போட்டியில் திறமையை வெளிப்படுத்தி அரைச் சதங்களைக் குவித்து நியூஸிலாந்தை வெளியேறச் செய்தனர்.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவர்களது இணைப்பாட்டங்கள் சாதனை மிக்கவை. நியூஸிலாந்துடனான வெற்றியின்போதும் அவர்கள் இருவரும் சாதனை நிலைநாட்டத் தவறவில்லை.

0911_babar_azam_mhd_rizwan_vs_nz.jpg

இன்றைய போட்டியில் அவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 105 ஓட்டங்கள், இருபது 20 உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட அவர்களது மூன்றாவது சத இணைப்பாட்டமாகும். இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் வேறு எந்த ஜோடியும் இந்த சாதனையை நிலைநாட்டவில்லை.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் அவர்கள் பகிர்ந்த 9ஆவது சத இணைப்பாட்டமும் ஒரு சாதனையாகும். அவர்களுக்கு அடுத்ததாக இந்தியாவின் கே.எல். ராகுல், ரோஹித் ஷர்மா ஆகிய ஆரம்ப ஜோடியினர் 5 தடவைகள் சத இணைப்பாட்டத்தைப் பதிவு செய்து இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் அவர்கள் இருவரும் இணைந்து 2509 ஓட்டங்களை பாகிஸ்தானுக்காக பகிர்ந்துகொடுத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த இருக்கும் ஜோடி 621 ஓட்டங்கள் குறைவாக பகிர்ந்துள்ளனர்.

0911_pak_vs_nz.jpg

இந்த வருட உலகக் கிண்ண அரை இறுதி போட்டிக்கு முன்னர் ஒரே ஒரு போட்டியிலேயே அதுவும் பங்களாதேஷுக்கு எதிராகவே  பாபர் அஸாம்  இரட்டை இலக்க எண்ணிக்கையான 25 ஓட்டங்களைப் பெற்றார்.

இன்றைய போட்டியில் ட்ரென்ட் போல்டிடமிருந்து எதிர்கொண்ட முதல் பந்திலேயே பாபர் அஸாம் கொடுத்த சற்று கடினமான பிடியை விக்கெட் காப்பாளர் டெவன் கொன்வே தவறவிட்டது அவருக்கு அதிர்ஷ்டமாக மாறியது. அதன் பின்னர் திறமையாகவும் தன்னம்பிக்கையுடனும் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் உலகக் கிண்ணத்தில் தனது முதலாவது அரைச் சதத்தைக் குவித்தார்.

பாபர் அஸாமைப் போன்றே இந்த உலகக் கிண்ணத்தில் மொஹமத் ரிஸ்வானும் முதலாவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார்.

0911_pak_vs_nz_celebrations.jpg

0911_pak_supporters_in_sydney.jpg

அவர்கள் இருவரும் மீண்டும் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளமையும் ஷஹீன் ஷா அப்றிடியின் அற்புதமான பந்துவீச்சும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள அணிக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஒருவேளை, இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றால் பாகிஸ்தானின் ஆக்ரோஷத்தை மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (13) பார்க்கக்கூடியதாக இருக்கும். அப்படித்தான் இந்தியாவும்.

2007இல் போன்ற மீள் இறுதி ஆட்டம் இடம்பெறுமா என்பதை அறிந்துகொள்ள இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாளைய போட்டி முடிவரை காத்திருப்போம்.

நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதும் பஞ்சாப் உட்பட பாகிஸ்தான் முழுவதும் இரசிகர்கள் ஆரவாரம் செய்து தமது அணியின் வெற்றியைக் கொண்டாடினர்.

https://www.virakesari.lk/article/139576

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலக கோப்பை: இது 1992 ஸ்கிரிப்ட்டா, 2007 ஸ்கிரிப்ட்டா? வைரல் ஆகும் மீம்ஸ் 

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விவேக் ஆனந்த்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அது அக்டோபர் 27-ம் தேதி, பெர்த் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியும் பாகிஸ்தான் அணியும் விளையாடிக் கொண்டிருந்தன. 

 பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்தன. 

 டி20 ஃபார்மெட்டில் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் அடிப்பது ஒன்றும் அத்தனை கடினமான காரியம் அல்ல தான். 

 ஆனால் அந்த மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தது பாபர் ஆஸம் அணி. அதுதான் பாகிஸ்தான். 

 

எளிதில் வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் போட்டியில் தோற்பதும், நம்பவே முடியாத வகையில் ஒரு மிரட்டல் 'கம்பேக்' கொடுப்பதும் பாகிஸ்தான் அணியின் தனித்துவமான பாணி. 

தனது ஸ்டெயிலில்  இதோ இன்னொருமுறை இறுதிப்போட்டி வரை வந்துவிட்டது பாகிஸ்தான் . 

விராட் கோலியின் விடாப்பிடியான போராட்டத்தால் கடைசி மூன்று ஓவர்களில் கோட்டைவிட்ட பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணியுடன் தோல்வியடைந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் லாஹூருக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான் என விமர்சனங்கள் குவிந்தன. 

ஆனால், இந்தியாவை வீழ்த்தியிருந்த  தென் ஆப்பிரிக்காவை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு நேர்த்தியாக விளையாடி அநாயசமாக வீழ்த்தியது பாகிஸ்தான்.  

பின்னர் நெதர்லாந்து அணி தென்னாப்ரிக்காவின் பேட்ஸ்மேன்களை ஒவ்வொருவராக வீழ்த்தும்போதெல்லாம் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 

இறுதியில் நெதர்லாந்து தென்னாப்ரிக்காவையும் கையோடு ஆஸ்திரலியாவில் இருந்து கூட்டிச் செல்ல, வங்கதேசத்துடனான போட்டியில் கவனமாக விளையாடி அரைஇறுதிக்கு முன்னேறியது. 

அரை இறுதியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் எதிர்கொண்ட விதம் அபாரம். பந்துவீச்சோ, ஃபீலடிங்கோ, பேட்டிங்கோ எல்லாவற்றிலும் டாப் கிளாஸ். 

வெற்றி வாய்ப்பை சிந்தாமல் சிதறாமல் மிக நேர்த்தியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

  

Instagram பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Instagram பதிவின் முடிவு

"ஏ..எப்பர்ரா பாகிஸ்தான் ஃபைனலுக்கு வந்துச்சு" என மீம்ஸ் பறக்கிறது. 

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதில் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது 1992 உலக கோப்பை மற்றும் 2007 உலகக்கோப்பை. 

இது ஒருபுறமிருக்க, நாளைய தினம் இந்தியா இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுவதால் இந்திய ரசிகர்கள் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். 

இந்த உலகக்கோப்பைத் தொடரில் லீக் சுற்றில்  நான்கு போட்டிகளில் வென்ற ஒரே அணி இந்தியா மட்டும்தான். 

அயர்லாந்திடம் தோல்வியடைந்த இங்கிலாந்து ஒருவழியாக நியூசிலாந்து, இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி ரன்ரேட் உதவியால் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நாளைய தினம் இந்தியா இங்கிலாந்து அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. 

 இதற்கிடையில் தான் இது அந்த உலகக்கோப்பை தொடரின் முடிவை ஒத்ததாய் இருக்கிறது, இது இந்த உலகக்கோப்பை தொடரின் முடிவை ஒத்ததாய் இருக்கிறது என ட்வீட், மீம்ஸ் எல்லாம் பகிரப்பட்டு வருகின்றன.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

1992 ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் அரை இறுதியில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆஃப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின.

இதில் அரை இறுதியில் பாகிஸ்தான் நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் சேஸிங்கில் வென்றது. இந்த முறையும் அரை இறுதியில் சேஸிங்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது. 

அந்த உலக கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இந்த உலகக்கோப்பை தொடரும் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற்று வருகிறது. 

 

டி20 கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி ஆடவர் இருபது20 உலக கோப்பை 2022 அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதை பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் கொண்டாடுகிறார்கள்.

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

1992 உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இம்முறையும் இறுதிப்போட்டி மெல்போர்னில் தான் நடக்கிறது. 

1992 இறுதி போட்டியில் பாகிஸ்தானும் இங்கிலாந்து அணிகளும் மோதின.

அதில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் ஆனது. 

இந்த முறை இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிபோட்டிக்கு வரும். 

இறுதிப் போட்டியில்  இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் ஆகும் என பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 

இன்னொருபுறம் இது 2007 உலகக்கோப்பை ஸ்க்ரிப்ட் என ரசிகர்கள் குதூகலிக்கிறார்கள். 

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2007 டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

அதன்பின்னர் இன்றுவரை இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பை  இறுதிப்போட்டியில் மோதியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இரண்டு முறை டி 20 உலக கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன. அதில் இந்த அணிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளன. 

2007 மற்றும் 2014 உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்தியா விளையாடியது. 2007 மற்றும் 2009 உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடியது. இங்கிலாந்து அணி 2010 மற்றும் 2016 உலக கோப்பைகளில் இறுதிப்போட்டிகளில் விளையாடியது.  

இதோ பாகிஸ்தான் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது. அந்த அணியை எதிர்கொள்ளப்போவது இந்தியாவா, இங்கிலாந்தா என்பதை அறிய நாளை மாலை வரை காத்திருக்க வேண்டும். 

https://www.bbc.com/tamil/articles/crgqy2ny00ro

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை துவம்சம் செய்த இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது

By DIGITAL DESK 3

10 NOV, 2022 | 04:56 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 8 ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிறன்று எதிர்த்தாட இங்கிலாந்து தகுதிபெற்றது.

அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெடக்ளால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட இரண்டாவது அணியாக இங்கிலாந்து தகதிபெற்றது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் முழுமையான ஆதிக்கம் செலுத்தி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

அணித் தலைவர் ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்து இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனையுடன் கூடிய 170 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.

இந்தியாவை விட மிக வேகமாக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து பவர் ப்ளே நிறைவில் விக்கெட் இழப்பின்றி 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் உட்பட 86 ஓட்டங்களுடனும் ஜொஸ் பட்லர் 49 பந்ந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 80ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

விராத் கோஹ்லியும் ஹார்த்திக் பாண்டியாவும் அரைச் சதங்கள் குவித்ததுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர்.

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் தனது 4ஆவது அரைச் சதத்தைக் குவித்த விராத் கோஹ்லி சரியாக 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழழந்தார்.

இதனிடையே கோஹ்லி 42ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 4,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டினார்.

மறுபக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹார்திக் பாண்டியா 33 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் உட்பட 63 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஹிட்-விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவர்களை விட ரோஹித் ஷர்மா 27 ஓட்டங்களையும் சூரியகுமார் யாதவ் 14 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட் 6 ஓட்டங்களையும் கே. எல். ராகுல் 5 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/139657

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலக கோப்பை: கண் கலங்கிய ரோஹித் ஷர்மா - ட்ரெண்டாகும் ‘கேப்டன்சி’

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

44 நிமிடங்களுக்கு முன்னர்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறது.

சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக விளையாடி வந்த இந்தியா, இந்த முறை ரோஹித் தலைமையில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்தின் அபாரமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு தோல்வியே கிடைத்தது.

ஆட்டத்தின் போக்கு இந்தியாவிடம் இருந்து மாறத் தொடங்கியதில் இருந்தே இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பரபரப்புடன் காணப்பட்டார்.

முகமது ஷமி ஃபீல்டிங்கின்போது செய்த தவறால் ஆத்திரம் அடைந்தார். டிரிங்க்ஸ் பிரேக்கின் போது வீரர்களுடன் ஆலோசித்த சமயம், அவர் முகத்தில் கோபமும் பதற்றமும் தெரிந்தது.

 

ஆட்டம் முற்றிலும் இங்கிலாந்து வசம் மாறியபோது, மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.

போட்டி முடிந்ததும் இங்கிலாந்து வீரர்களுடன் கைகுலுக்கிய பிறகு, டக் அவுட்டில் அமர்ந்து கண் கலங்கினார். அவரது முகம் முற்றிலும் வாடிப்போய் இருந்தது. பயிற்சியாளர்கள் அவரை சமாதானப்படுத்திய காட்சிகள் வெளியாயின.

ஐபிஎல் தொடரை சுட்டிக்காட்டிய ரோஹித்

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லருடன் (வலது) கைகுலுக்கும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (இடது)

தோல்விக்கு பின்னர் பேசிய ரோஹித் சர்மா, ‘இன்றைய ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்துடன் முடிந்திருக்கிறது. கடைசி நேரத்தில் நன்றாக பேட் செய்தோம், ஆனால் எங்கள் பந்துவீச்சு போதுமானதாக இல்லை. 16 ஓவர்களில் ஒரு அணி வந்து சேசிங் செய்து வெற்றிபெறும் அளவுக்கு ஆடுகளம் அவ்வளவு மோசமாகவும் இல்லை.

பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாக் அவுட் சுற்றை பொருத்தவரை, அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது.

வீரர்களுக்கு ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தனித்தனியாக நெருக்கடியை சமாளிக்க சொல்லித் தர வேண்டியதில்லை,” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் பந்துவீச்சை தொடங்கிய விதம் சிறப்பாக இல்லை. நாங்கள் கொஞ்சம் பதற்றமாக இருந்தோம். வீரர் புவி வீசிய முதல் ஓவர் ஸ்விங்கானது. ஆனால் சரியான இடத்தில் ஆகவில்லை.

நாங்கள் நெருக்கடி அளிக்க நினைத்தோம். இருப்பினும் பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தனர். பெரும்பாலான ரன்கள் சிறிய பவுண்டரிகளைக் கொண்ட ஸ்குயர் திசையில் இருந்தே கிடைத்தன,” என்கிறார்.

ரோஹித்துக்கு கேப்டன்சியில் பிரச்னையா?

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

2017ல் எம்.எஸ்.தோனி கேப்டன்சியில் இருந்து விலகியபோது, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார்.

அந்த ஆண்டே விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கேப்டனாக களம் கண்டார் ரோஹித்.

2021 டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி கேப்டன்சியில் இருந்து விலகியதும் ரோஹித் சர்மா அடுத்த கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனவரி 2022-ல் டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அனைத்து ஃபார்மேட்களிலும் கேப்டனாக அவர் செயல்படத் தொடங்கினார்.

டி20 போட்டிகளில் இதுவரை 51 போட்டிகளை ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியுள்ள இந்திய அணி 39 வெற்றிகளையும் 12 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

டி20 தொடர்களில் பெருவாரியான வெற்றிகளை இந்தியா குவித்திருந்த போதிலும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து தொடர் தோல்வியால் வெளியேறியது.

தற்போது டி20 உலக கோப்பை அரையிறுதியிலும் தோல்வியுடன் வெளியேறியுள்ளது.

“ஒரு அணிக்கு 7 கேப்டன் தேவையா?”

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி எப்போதெல்லாம் மோசமான தோல்விகளை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் கேப்டன்சியும் பேசுபொருளாவது வழக்கம். அந்த வகையில் தற்போது இணையத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பொறுப்பு குறித்து பல விமர்சனங்கள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது பல பேர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா தவிர்த்து, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் அணியை வழிநடத்தியுள்ளனர்.

இதனை சுட்டிக்காட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

“ஒரு அணியை கட்டமைப்பது கேப்டனின் பொறுப்பு. நமக்கு கீழ் உள்ள அணியுடன் தொடர்ந்து ஒரு வருடமாவது பயணிக்க வேண்டும்.

இந்த ஆண்டு இந்தியாவுக்காக எத்தனை தொடரில் ரோஹித் சர்மா விளையாடியுள்ளார்? அணிக்கு ஒரு தலைவர்தான் இருக்க வேண்டும். 7 பேர் இருந்தால் அணியை வழிநடத்துவது கடினம் தான்” என முன்னணி கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல கேப்டன்சி பொறுப்பு எவ்வளவு கடினமானது என்பதை ரோஹித் தற்போது உணர்ந்திருப்பார் என்கிற வாசகத்துடன் விராட் கோலியின் ஷேஷ்டேகும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/cyxyxngg5x2o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலக கோப்பை: இந்தியாவின் கனவு கானல் நீரானது - படுதோல்விக்கு காரணம் என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அஷ்ஃபாக்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 10 நவம்பர் 2022, 11:21 GMT
    புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்
 

டி20உலககோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர்.

டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா படுதோல்வி அடைந்திருக்கிறது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இதையடுத்து பாகிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இந்தியாவுக்கு இந்த முறையும் உலக கோப்பை கைகூடவில்லை. 

2022 டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறது இந்தியா.

ஆனால் அதை விட ஒருபடி மேலாக இந்தியாவுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது இங்கிலாந்து.

 

பொய்த்துப் போன நம்பிக்கை

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் அரையிறுதி ஆட்டத்தை போன்றே  இரண்டாவது அரையிறுதியிலும் ஒரு அணியின் ஆதிக்கமே முழுவதுமாக மேலோங்கியிருந்தது.  

ஆனால் அதை விட ஒருபடி மேலாக இந்தியாவுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது இங்கிலாந்து. 

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு  மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இந்தியா ஒருவேளை டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங்தான் செய்திருக்கும். அதனால் எங்களுக்கு இது எந்தவிதத்திலும் பாதிப்பில்லை என பெரியளவில் நம்பிக்கையுடன் பேசினார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. 

ஆனால் அந்த நம்பிக்கை அவரது பேட்டிங்கில் துளியும் தென்படவில்லை. 

இந்தியாவின் தோல்விக்கு தொடக்க ஆட்டக்காரர்களின் பங்களிப்பு ஒரு முக்கிய காரணம். கே.எல்.ராகுல் - ரோஹித் சர்மா ஜோடி இந்த தொடரில் ஒருமுறை கூட 50 ரன்களை கூட சேர்த்ததில்லை. அதே போல பவர்பிளேவில் அதிக ரன்களை குறிக்க இந்த இணை தவறியது. 

இந்த உலக கோப்பை தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் ரன்கள்  சேர்க்க தடுமாறிய கே.எல்.ராகுல் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 2 அரை சதங்களை பதிவு செய்தார். ஆனால் இன்றைய முக்கிய ஆட்டத்தில் வெறும்  5 ரன்களில் நடையைக் கட்டினார். 

ரோஹித் சர்மா - கோலியுடன் இணைந்து அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதுவும் நடக்கவில்லை. அவர் 27 ரன்களில் வெளியேறினார்.

குறுகிய பவுண்டரிகளை கொண்ட அடிலெய்டில் ஒரு சிக்சரை கூட ரோஹித் விளாசவில்லை.

இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை ஹிட் மேன் என அறியப்பட்ட ரோஹித்தால் சமாளிக்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை தந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்  14 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். கோலி நிதானமாக விளையாடி அரைசதம் பதிவு செய்தார்.

முதல் 15 ஓவர்களில் இந்தியா வெறும் 100 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறிக் கொண்டிருந்தபோது ஹர்திக் பாண்டியா களத்திற்குள் வந்து அதிரடி காட்டினார்.

பந்துகள் பவுண்டரியை நோக்கி பறக்க 33 பந்தில் 63 ரன்களை எடுத்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

எனினும்,  இந்தியாவின் வெற்றி பந்துவீச்சாளர்கள் கையில்தான் இருந்தது. 

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் கோணல் முற்றிலும் கோணலானது

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப அமைந்தது புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவர். பெரும்பாலும் பந்துகள் அவுட் ஸ்விங்காக மாற, அதை லாவகமாக பவுண்டரிக்கு விளாசினார் ஜாஸ் பட்லர். 

முதல் ஓவரில் மட்டுமே 3 பவுண்டரிகளை விளாசி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது இங்கிலாந்து.

இந்திய அணியின் பவுலர்களை மாற்றிப்பார்த்தும் இங்கிலாந்தின் ரன் மழையை நிறுத்த யாராலும் முடியவில்லை. பவர் பிளே முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தது. அதுவே இந்தியாவின் வெற்றியை கிட்டதட்ட பறித்த தருணம். 

இங்கிலாந்து அணி எந்த ஒரு சிறிய தவறையும் செய்யாமல், அற்புதமான ஷாட்களை ஆடி ரன் வேட்டையை தொடர்ந்தது. அலெக்ஸ் ஹேல்சும்  ஜாஸ் பட்லரும் மாறி மாறி அரைசதம் விளாசினர்.

தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு விக்கெட்டை கூட இந்தியாவால் எடுக்க முடியாமல்போனது.

49 பந்துகளில் பட்லர் 80 ரன்களும் 47 பந்துகளில் அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் எடுக்க, அதிரடி சிக்சருடன் அபார வெற்றியை ருசித்தது இங்கிலாந்து.

ரோஹித் சர்மா அணி களத்தை விட்டு சோகத்துடன் வெளியேறியது. கேப்டன் ரோஹித்தின் முகம் முற்றிலும் வாடிப்போன நிலையில், பயிற்சியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். 

தடுமாறிய இந்தியா

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து ஒரு அற்புதமான கிரிக்கெட்டை ஆடியிருந்தாலும் இந்தியாவின் பந்துவீச்சில் பெரிய சிக்கல் இருப்பது மீண்டும் தெளிவாகியிருக்கிறது. பவர் பிளேவில் தொடர்ந்து இந்தியா தடுமாறுகிறது. 

புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் பெரியளவில் வேரியேஷன் இல்லாமல் போனது, அர்ஷ்தீப் சிங் விக்கெட் எடுக்கத் திணறியது. ஃபீல்டிங் சொதப்பல், சுழற்பந்துவீச்சால் எந்த பலனும் கிடைக்காதது உள்ளிட்டவை இந்தியாவின் படுதோல்விக்கு பிரதான காரணிகளாக அமைந்தன. 

இந்தியா அரையிறுதி வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தாலும் சில நல்ல போட்டிகளை விளையாடியிருக்கிறது என்றே நிபுணர்கள், விமர்சகர்கள் கருதுகிறார்கள். 

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. 

1992 உலக கோப்பையை போன்று இந்த தொடரிலும் பாகிஸ்தான் மேஜிக் நிகழ்த்துமா? அல்லது இதே அதிரடியில் இங்கிலாந்து கோப்பையை உச்சி முகருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"ஆட்டம் ஏமாற்றம் தருகிறது"

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்விக்கு பின்னர் பேசிய ரோஹித் சர்மா, ‘இன்றைய ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்துடன் முடிந்திருக்கிறது. கடைசி நேரத்தில் நன்றாக பேட் செய்தோம், ஆனால் எங்கள் பந்துவீச்சு போதுமானதாக இல்லை என்று கூறினார்.

16 ஓவர்களில் ஒரு அணி வந்து சேசிங் செய்து வெற்றிபெறும் அளவுக்கு ஆடுகளம் அவ்வளவு மோசமாகவும் இல்லை. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

நாக் அவுட் சுற்றை பொறுத்தவரை அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. வீரர்களுக்கு ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது.

நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் நாங்கள் பந்துவீச்சை தொடங்கிய விதம் சிறப்பாக இல்லை. நாங்கள் கொஞ்சம் பதற்றமாக இருந்தோம்.

புவி வீசிய முதல் ஓவர் ஸ்விங்கானது. ஆனால் சரியான இடத்தில் ஆகவில்லை. நாங்கள் நெருக்கடி அளிக்க நினைத்தோம்.

இருப்பினும் பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தனர். பெரும்பாலான ரன்கள் சிறிய பவுண்டரிகளைக் கொண்ட ஸ்குயர் திசையில் இருந்தே கிடைத்தது’என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cld5d6xd6ego

சித்தப்பா சொன்னார் பாகிஸ்தானிடம் இறுதிப்போட்டியில் தோற்பதை விட இங்கிலாந்திடம் அரையிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது அணி வீரர்கள் வசைமழையில் இருந்து தப்பிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதியில் ஹிந்தியா தோற்று பாகிஸ்தான் வென்றது ரசிக்கத்தக்க விடயம். ஹிந்தியர்களின் கிரிக்கெட் வெறியாட்டம் அடங்க வேண்டும். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.