Jump to content

T20 2022 உலகக் கிண்ணப் போட்டி - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவுக்கு எதிராக...  கார்த்திக் மெய்யப்பன் என்ற தமிழர்... ஹாற்றிக்  எடுத்த போது....

Cricket T20 World Cup: Karthik Meiyappan Hat-Trick

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
SL FlagSL
152/8
UAE FlagUAE
(4.6/20 ov, T:153) 21/3

U.A.E. need 132 runs in 90 balls.

SL FlagSL
152/8
UAE FlagUAE
(5.6/20 ov, T:153) 23/4

U.A.E. need 130 runs in 84 balls.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்து நமீபியாவை வென்றது : இலங்கையின் நிலை என்ன ?

By DIGITAL DESK 5

18 OCT, 2022 | 01:17 PM
image

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஏ குழுவுக்கான முதலாவது சுற்றில் தனது 2ஆவது வெற்றியை ஈட்டிய நெதர்லாந்து, சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது.

மெல்பர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற நமிபியாவுடான போட்டியில் 5 விக்கெட்களால் நெதர்லாந்து வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட இப் போட்டியில் நமிபியாவை சகல துறைகளிலும் விஞ்சும் வகையில் விளையாடிய நெதர்லாந்து மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொண்டது.

நமிபியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 122 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்தெடுத்தாடிய நெதர்லாந்து, ஓவர்களில் 19.3 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Vikramjit Singh gets down to sweep, Namibia vs Netherlands, T20 World Cup 2022, First Round, Geelong, October 18, 2022

மெக்ஸ் ஓ'டவ்ட், விக்ரம்ஜித் சிங் ஆகிய இருவரும் 8.2 ஓவர்களில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த விக்ரம்ஜித் சிங் 31 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 39 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் பாஸ் டி லீடுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 33 ஓட்டங்களைப் பகிர்ந்த மெக்ஸ் ஓ'டவ்ட் 35 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 101 ஓட்டங்களாக இருந்தபோது டொம் கூப்பர் (6), கொலின் அக்கர்மன் (0) ஆகிய இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 4 ஓட்டங்கள் மாத்திரம் சேர்ந்தபோது அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (1) களம் விட்டகன்றார்.

Tim Pringle and Bas de Leede walk off the field after the chase, Namibia vs Netherlands, T20 World Cup 2022, First Round, Geelong, October 18, 2022

எனினும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய பாஸ் டி லீட் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களைப் பெற்று நெதர்லாந்தின் வெற்றியை உறுதி செய்தார். டொம் ப்ரிங்ள் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய நமிபியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 121ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் டிவான் டி கொக் (0) 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்ததால் நமிபியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த மைக்கல் வன் லிங்கென் (20), ஸ்டெஃபான் பார்ட் (19) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 30 ஓட்டங்களாக உயர்த்தியபோது வன் லிங்கென் ஆட்டமிழந்தார்.

Tim Pringle struck early for the Netherlands, Namibia vs Netherlands, T20 World Cup, First Round, Geelong, October 18, 2022

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 2 ஓட்டங்கள் மாத்திரம் சேர்நத நிலையில் ஜான் நிக்கல் (0) களம் விட்டகன்றார்.

எனினும் இலங்கைக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து ஆட்டநாயகனான ஜான் ஃப்றைலின்க் மீண்டும் அணியை மீட்டெடுப்பதில் பங்காற்றினார்.

ஸ்டெபான் பார்டுடன் 4ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களையும் அணித் தலைவர் கேர்ஹார்ட் இரேஸ்முஸுடன் 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களையும் ஜான்  ஃப்றைலின்க் பகிர்ந்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டார்.

ஃப்றைலின்க் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 43 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய ஸ்டெஃபான் பார்ட் 19 ஓட்டங்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்முஸ் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

டேவிஸ் வைஸ் 11 ஓட்டங்களுடனும் ஜொஹானெஸ் ஸ்மித் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/137905

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியது இலங்கை 

By VISHNU

18 OCT, 2022 | 08:23 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக மெல்பர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் சுற்று போட்டியில் 79 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை இலங்கை ஈட்டிக்கொண்டது.

நமிபியாவுக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் 55 ஓட்டங்களால் தோல்வி அடைந்து  ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான    இரண்டாவது போட்டியில் 79 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன்  பலனாக ஆசிய கிண்ண சம்பியனும் முன்னாள் உலக சம்பியனுமான இலங்கைக்கு சுப்பர் 12 சுற்றில் நுழைவதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும் இந்தப் போட்டி முடிவுடன் நிகர ஓட்ட வேக வித்தியாசத்தில் இலங்கை 3ஆம் இடத்திலேயே இருக்கிறது. எனவே வியாழக்கிழமை நடைபெறவுள்ள நெதர்லாந்துடனான போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் மாத்திரமே சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெறும்.

311470336_648802516876298_13307285888069

 

ஐக்கிய அரபு இராச்சியத்துடனான போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அரைச் சதம், வனிந்து ஹசங்க டி சில்வா, துஷ்மன்த சமீர ஆகியோரின துல்லியமான பந்துவீச்சு என்பன இலங்கையின் வெற்றியில் பெரும் பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை துடுப்பாட்டத்தில் முதல் 3 வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பெத்தும் நிஸ்ஸன்க அபார அரைச் சதம்

ஆரம்ப விரர் பெத்தும் நிஸ்ஸன்க அரைச் சதம் குவித்து இரண்டு இணைப்பாட்டங்ளில் முக்கிய பங்கு வகித்திராவிட்டால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கும்.

312109651_435470502042231_91147430713580

 

 

குசல் மெண்டிஸுடன் ஆரம்ப விக்கெட்டில் 28 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்த பெத்தும் நிஸ்ஸன்க, 2ஆவது விக்கெட்டில் தனஞ்சய டி சில்வாவுடன் 39 பந்துகளில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

குசல் மெண்டிஸ் 18 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஒரு கட்டத்தில் 117 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை மாத்திரம் இழந்திருந்த இலங்கை, கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடைசி 8 விக்கெட்களை இலங்கை இழந்தமை இரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

8ஆவது ஐசிசி இ20 உலகக் கிண்ணத்தில் கார்த்திக் மெய்யப்பன் ஹெட் - ட்ரிக்

 

தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சுழல்பந்துவீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவு செய்து வரலாறு படைத்ததுடன் இலங்கை அணியை நெருக்கடிக்குள்ளாக்கினார்.

பானுக்க ராஜபக்ஷ (5), சரித் அசலன்க (0), தசுன் ஷானக்க (0) ஆகிய மூவரை 15ஆவது ஓவரின் கடைசி 3 பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து ஹெட் - ட்ரிக்கை மெய்யப்பன் பூர்த்தி செய்தார்.

பைசலாபாத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வேகப்பந்துவீச்சாளர் ஸஹூர் கானும் சிறப்பாக பந்துவீசியிருந்தார்.

இலங்கை அணியின் மத்தியவரிசை  துடுப்பாட்டக்காரர்களான வனிந்து ஹசரங்க டி சில்வா (2), சாமிக்க கருணாரட்ன (2), ப்ரமோத் மதுஷான் (1) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர்.

மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் கடைசி ஓவர்வரை துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 60 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைப் பெற்று ஒரு பந்து மீதமிருக்க ஆட்டமிழந்தார்.

ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சில் கார்த்திக் மெய்யப்பன் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸஹூர் கான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆயன் அப்ஸால் கான் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ப்ரமோத் மதுஷான் விசிய முதலாவது பந்திலும் நான்காவது பந்திலும் இரண்டு கடினமான பிடிகள் நழுவிப்போயின.

எனினும் இலங்கையின் துல்லியமான பந்துவீச்சுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஐக்கிய அரபு இராச்சியம் 3ஆவது ஓவரிலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் ஆயன் அப்ஸால் கான் (19), ஜுனைத் சித்திக் (18), சிராக் சூரி (14) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்குமேல் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 4 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 3.5 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

துஷ்மன்த சமீரவின் தொடை எலும்பில் உபாதை ஏற்பட்டபோதிலும் அது பாரதூரமானதல்லவென அறிவிக்கப்படுகிறது. அவர் 4ஆவது ஓவரைப் பூர்த்தி செய்யாமல் ஓய்வறைக்கு திரும்பினார். அவரது ஓவரை தசுன் ஷானக்க பூர்த்தி செய்தார்.

போட்டி முடிவில் ஆட்டநாயகன் விருது பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு கிடைத்தது.

https://www.virakesari.lk/article/137938

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியது இலங்கை 

By VISHNU

18 OCT, 2022 | 08:23 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக மெல்பர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் சுற்று போட்டியில் 79 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை இலங்கை ஈட்டிக்கொண்டது.

நமிபியாவுக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் 55 ஓட்டங்களால் தோல்வி அடைந்து  ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான    இரண்டாவது போட்டியில் 79 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன்  பலனாக ஆசிய கிண்ண சம்பியனும் முன்னாள் உலக சம்பியனுமான இலங்கைக்கு சுப்பர் 12 சுற்றில் நுழைவதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும் இந்தப் போட்டி முடிவுடன் நிகர ஓட்ட வேக வித்தியாசத்தில் இலங்கை 3ஆம் இடத்திலேயே இருக்கிறது. எனவே வியாழக்கிழமை நடைபெறவுள்ள நெதர்லாந்துடனான போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் மாத்திரமே சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெறும்.

311470336_648802516876298_13307285888069

 

ஐக்கிய அரபு இராச்சியத்துடனான போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அரைச் சதம், வனிந்து ஹசங்க டி சில்வா, துஷ்மன்த சமீர ஆகியோரின துல்லியமான பந்துவீச்சு என்பன இலங்கையின் வெற்றியில் பெரும் பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை துடுப்பாட்டத்தில் முதல் 3 வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பெத்தும் நிஸ்ஸன்க அபார அரைச் சதம்

ஆரம்ப விரர் பெத்தும் நிஸ்ஸன்க அரைச் சதம் குவித்து இரண்டு இணைப்பாட்டங்ளில் முக்கிய பங்கு வகித்திராவிட்டால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கும்.

312109651_435470502042231_91147430713580

 

 

குசல் மெண்டிஸுடன் ஆரம்ப விக்கெட்டில் 28 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்த பெத்தும் நிஸ்ஸன்க, 2ஆவது விக்கெட்டில் தனஞ்சய டி சில்வாவுடன் 39 பந்துகளில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

குசல் மெண்டிஸ் 18 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஒரு கட்டத்தில் 117 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை மாத்திரம் இழந்திருந்த இலங்கை, கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடைசி 8 விக்கெட்களை இலங்கை இழந்தமை இரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

8ஆவது ஐசிசி இ20 உலகக் கிண்ணத்தில் கார்த்திக் மெய்யப்பன் ஹெட் - ட்ரிக்

 

தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சுழல்பந்துவீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவு செய்து வரலாறு படைத்ததுடன் இலங்கை அணியை நெருக்கடிக்குள்ளாக்கினார்.

பானுக்க ராஜபக்ஷ (5), சரித் அசலன்க (0), தசுன் ஷானக்க (0) ஆகிய மூவரை 15ஆவது ஓவரின் கடைசி 3 பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து ஹெட் - ட்ரிக்கை மெய்யப்பன் பூர்த்தி செய்தார்.

பைசலாபாத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வேகப்பந்துவீச்சாளர் ஸஹூர் கானும் சிறப்பாக பந்துவீசியிருந்தார்.

இலங்கை அணியின் மத்தியவரிசை  துடுப்பாட்டக்காரர்களான வனிந்து ஹசரங்க டி சில்வா (2), சாமிக்க கருணாரட்ன (2), ப்ரமோத் மதுஷான் (1) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர்.

மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் கடைசி ஓவர்வரை துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 60 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைப் பெற்று ஒரு பந்து மீதமிருக்க ஆட்டமிழந்தார்.

ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சில் கார்த்திக் மெய்யப்பன் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸஹூர் கான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆயன் அப்ஸால் கான் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ப்ரமோத் மதுஷான் விசிய முதலாவது பந்திலும் நான்காவது பந்திலும் இரண்டு கடினமான பிடிகள் நழுவிப்போயின.

எனினும் இலங்கையின் துல்லியமான பந்துவீச்சுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஐக்கிய அரபு இராச்சியம் 3ஆவது ஓவரிலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் ஆயன் அப்ஸால் கான் (19), ஜுனைத் சித்திக் (18), சிராக் சூரி (14) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்குமேல் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 4 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 3.5 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

துஷ்மன்த சமீரவின் தொடை எலும்பில் உபாதை ஏற்பட்டபோதிலும் அது பாரதூரமானதல்லவென அறிவிக்கப்படுகிறது. அவர் 4ஆவது ஓவரைப் பூர்த்தி செய்யாமல் ஓய்வறைக்கு திரும்பினார். அவரது ஓவரை தசுன் ஷானக்க பூர்த்தி செய்தார்.

போட்டி முடிவில் ஆட்டநாயகன் விருது பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு கிடைத்தது.

https://www.virakesari.lk/article/137938

இலங்கை அணி தகுதிகாண் போட்டியில் தோல்வியடைந்து போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நாடு திரும்பினால் எப்படியிருக்கும்?

இலங்கை அணி நெதர்லண்ட் அணியினை இலகுவாக வென்றுவிடும் என்பதால் அது நிகழ்வதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

ஆனால் ஏனோ இந்த இலங்கை அணியினை பார்த்து இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள் (தமக்கு அச்சுறுத்தலாக) என்பதுதான் விளங்கவில்லை? 

Link to comment
Share on other sites

59 minutes ago, vasee said:

இலங்கை அணி தகுதிகாண் போட்டியில் தோல்வியடைந்து போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நாடு திரும்பினால் எப்படியிருக்கும்?

இலங்கை அணி நெதர்லண்ட் அணியினை இலகுவாக வென்றுவிடும் என்பதால் அது நிகழ்வதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

ஆனால் ஏனோ இந்த இலங்கை அணியினை பார்த்து இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள் (தமக்கு அச்சுறுத்தலாக) என்பதுதான் விளங்கவில்லை? 

சில கிழனைகளுக்கு முன் நடந்த ஆசிய கிண்ண போட்டியில் இந்தியர்களுக்கும், பாகிஸ்தானியர்களுக்கும்(இறுதிப்போட்டி)  சிறிலங்கா அணி செம சாத்து சாத்தி சம்பியனாகியது தான் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் சாதனை… யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?

christopherOct 18, 2022 18:25PM
Karthik-Meiyappan3.jpg

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை சென்னையில் பிறந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி வரும் கார்த்திக் மெய்யப்பன் படைத்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுப்பதை அரிதாகவே பார்க்க முடியும். அதிலும் உலகக்கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுப்பது ஒரு வீரரின் உயரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 3வது நாளிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் இளம் வீரரான கார்த்திக் மெய்யப்பன்.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் சுற்றுப் போட்டி ஜீலோங்கில் உள்ள சைமண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது இலங்கை அணி. முதல் ஆட்டத்தில் கத்துக்குட்டி நமீபியா அணியிடம் அடிபணிந்த நிலையில், இந்த ஆட்டத்தை இலங்கை அணி கவனமுடன் நிதானமாக துவங்கியது.

ஹாட்ரிக் விக்கெட்டில் சிதறிய இலங்கை!

இதனால் 14 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது இலங்கை அணி. இந்நிலையில் 15 ஓவரை யுஏஇ அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் வீசினார். அதுவரை நன்றாக விளையாடிய இலங்கை அணி மெய்யப்பனின் அந்த ஓவரில் சட்டென சிதற தொடங்கியது.

who is the Karthik Meiyappan

முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில், 4வது பந்தில் இலங்கை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பஷில் ராஜபக்‌ஷே விக்கெட்டை வீழ்த்தினார். 5வது பந்தில் தனது கூக்லி பந்துவீச்சில் அசலங்காவை அலேக்காக டக்அவுட் ஆக்கினார்.

இதனையடுத்து பரபரப்பான ஓவரில் கடைசி பந்தினை வீசினார் மெய்யப்பன். இதில் இலங்கை அணி கேப்டன் ஷனகா கிளீன் போல்டாக, நடப்பு உலகக்கோப்பை போட்டியில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கார்த்திக் மெய்யப்பன்.

மேலும் டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 5வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் கார்த்திக் மெய்யப்பன்.

who is the Karthik Meiyappan

யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?

ஆகா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் கார்த்திக் மெய்யப்பனா… பெயரைக் கேட்டதும் தமிழ் பெயர் போன்று தோன்றுகிறதே… அவர் இந்தியரா என்று உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? ஆம் அதில் 100 சதவீதம் உண்மை உள்ளது என்பது அனைவருக்கும் நிச்சயம் ஆச்சரியமளிக்கும்.

22 வயதான கார்த்திக் மெய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் கடந்த 2006ம் ஆண்டு துபாய்க்கு குடிப்பெயர்ந்த நிலையில், அங்குள்ள வின்செஸ்டர் பள்ளியில் கல்வி பயின்றார்.

who is the Karthik Meiyappan

அப்போது வலது கை சுழற்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்த கார்த்திக் மெய்யப்பன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை U-19 போட்டியில் யுஏஇ அணிக்கு மெய்யப்பன் கேப்டனாக செயல்பட்டார், அதனைத் தொடர்ந்து வங்காளதேசம் 2020ம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பையிலும் அவர் தனது நாட்டுக்காக விளையாடினார். அதே ஆண்டில் யுஏஇ யில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியிலும் இடம்பிடித்தார்.

பின்னர் கடந்த ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 தொடரில் அறிமுகமானார் மெய்யப்பன். அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடருக்கும் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

who is the Karthik Meiyappan

இந்நிலையில் தனது முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார் கார்த்திக் மெய்யப்பன்.

இதுவரை இந்திய அணி வீரர்கள் யாரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் சாதனை படைத்தது இல்லை. இந்நிலையில் இந்திய வம்சாவளியும், தமிழகத்தில் பிறந்தவருமான கார்த்திக் மெய்யப்பன் சாதனை குறித்து பலரும் சமூக வலை தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

எனினும் இலங்கைக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளது.

ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் இதுவரை ஹாட்ரிக் சாதனை படைத்தவர்கள் பட்டியல்:

பிரட் லீ vs பங்களாதேஷ், 2007

கர்டிஸ் கேம்பர் vs நெதர்லாந்து, 2021

வனிந்து ஹசரங்க vs தென்னாப்பிரிக்கா, 2021

காகிசோ ரபாடா vs இங்கிலாந்து, 2021

 

 

https://minnambalam.com/sports/who-is-the-karthik-meiyappan/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்தின் ஜோன்ஸ் அபாரம் : சவாலான இலக்கை விரட்டும் அயர்லாந்து

By DIGITAL DESK 5

19 OCT, 2022 | 11:45 AM
image

(என்.வீ.ஏ.)

அயர்லாந்துக்கு எதிராக ஹோபார்ட் பெலேவியர் ஓவல் விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகளை தோல்வி அடையச் செய்திருந்த ஸ்கொட்லாந்து, இன்றைய போட்டியிலும் வெற்றிபெறுவதைக் குறியாகக் கொண்டு அயர்லாந்துக்கு சவால் விடுக்கும் மொத்த எண்ணிக்கையைக் குவித்துள்ளது.

ஆரம்ப வீரர் மைக்கல் ஜோன்ஸ் குவித்த அதிரடி அரைச் சதமும் அணித் தலைவர் றிச்சி பெறிங்கடனின் அதிகப்பட்ட பங்களிப்பும் ஸ்கொட்லாந்தை பலமான நிலையில் இட்டுள்ளது.

347790.webp

அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 77 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

Michael Jones made a 55-ball 86, Ireland vs Scotland, Group B, T20 World Cup, Hobart, October 19, 2022

மைக்கல் ஜோன்ஸ் 55 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைக் குவித்தார். பெறிங்டன் 37 ஓட்டங்களையும் மெத்யூ க்ரொஸ 28 ஓட்டங்களையும் கை;கல் லீஸ்க் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

Michael Jones plays a short ball, Ireland vs Scotland, Group B, T20 World Cup, Hobart, October 19, 2022

பந்துவீச்சில் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Mark Adair had George Munsey lbw after a successful DRS review, Ireland vs Scotland, Group B, T20 World Cup, Hobart, October 19, 2022

177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தற்போது அயர்லாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது.

https://www.virakesari.lk/article/137980

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
176/5
IRE FlagIRE
(15.6/20 ov, T:177) 142/4

Ireland need 35 runs in 24 balls.

உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறினார் துஷ்மந்த சாமிர !

By VISHNU

19 OCT, 2022 | 10:34 AM
image

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சாமிர, அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஐக்கிய அரவு இராஜ்ஜியத்திற்கு எதிராக இலங்கை அணி விளையாடியபோது தனது 4 ஆவது ஓவரின் இறுதிப் பந்தை வீச முயன்ற துஷ்மந்த  சாமிர தொடை தசைப்பிடிப்பு காரணமாக பந்து வீச முடியாது மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் துஷ்மந்த சாமிரவுக்கு தொடர்ந்து விளையாடி முடியாத நிலையில் அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது அவரால் இருபதுக்கு - 20 உலகக் கிண்ண தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் வைத்தியக் குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/137967

176/5
IRE FlagIRE
(17/20 ov, T:177) 153/4

Ireland need 24 runs in 18 balls.

Link to comment
Share on other sites

சமீரவுக்கு பதிலாக கசுன் ராஜித

சமீரவுக்கு பதிலாக கசுன் ராஜித

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக கசுன் ராஜிதவை இலங்கை அணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் துஷ்மந்த சமீரவின் காலில் காயம் ஏற்பட்டது.

மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டில்ஷான் மதுசங்கவின் காயம் காரணமாக மேலதிக வீரராக இருந்த பினுர பெர்னாண்டோ 15 பேர் கொண்ட குழுவில் இணைக்கப்பட்டிருந்தார்.

15 பேர் கொண்ட குழுவிற்குள் பினுர வரவிருப்பதால் வெற்றிடமான இடத்திற்கு மேலதிக வீரராக அசிதா பெர்னாண்டோ பெயரிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் அயர்லாந்து அபார வெற்றி

By DIGITAL DESK 5

19 OCT, 2022 | 02:02 PM
image

(என்.வீ.ஏ.)

ஸ்கொட்லாந்துக்கும் அயார்லாந்துக்கும் இடையில் ஹோபார்ட் பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பி குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் அயர்லாந்து 6 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

மேற்கிந்தியத் தீவுகளை ஆரம்பப் போட்டியில் அதிரவைத்த ஸ்கொட்லாந்தினால் இன்றைய தினம் நிர்ணயிக்கப்பட்ட 177 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

Curtis Campher upped the ante after early wickets, Ireland vs Scotland, Group B, T20 World Cup, Hobart, October 19, 2022

கேர்ட்டிஸ் கெம்ஃபர், ஜோர்ஜ் டொக்ரெல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த பெறுமதிமிக்க 119 ஓட்டங்கள் அயர்லாந்தின் வெற்றியை சுலபப்படுத்தியது.

அயர்லாந்து 10 ஓவது ஓவரில் 4 விக்கெட்டை இழந்தபோது மொத்த எண்ணிக்கை 61 ஓட்டங்களாக இருந்தது. இதனால் ஸ்கொட்லாந்து அணியினர் பெரும் உற்சாகம் அடைந்தனர்.

Curtis Campher slammed 72 not out off just 32 balls, Ireland vs Scotland, T20 World Cup, Hobart, October 19, 2022

ஆனால், அதன் பின்னர் கேர்ட்டிஸ் கெம்ஃபரும் ஜோர்ஜ் டொக்ரெலும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அயர்லாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அதிரடி வேகத்தில் துடுப்பெடுத்தாடிய கெம்ஃபர் 32 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காதிருந்தார்.

டொக்ரெல்   27 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றார்.

Curtis Campher lets out a big roar after hitting the winning runs, Ireland vs Scotland, Group B, T20 World Cup, Hobart, October 19, 2022

அவர்களை விட லோர்க்கன் டக்கர் 20 ஓட்டங்களையும் அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி, ஹரி டெக்டர் ஆகிய இருவரும் தலா 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் மைக்கல் ஜோன்ஸ் குவித்த அதிரடி அரைச் சதமும் அணித் தலைவர் றிச்சி பெறிங்கடனின் அதிகப்பட்ச   பங்களிப்பும் ஸ்கொட்லாந்தை பலமான நிலையில் இட்ட போதிலும் அவர்களது முயற்சி இறுதியில் வீண் போனது.

Curtis Campher and George Duckell shared a crucial century stand, Ireland vs Scotland, Group B, T20 World Cup, Hobart, October 19, 2022

அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 77 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

மைக்கல் ஜோன்ஸ் 55 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைக் குவித்தார். பெறிங்டன் 37 ஓட்டங்களையும் மெத்யூ க்ரொஸ்   28 ஓட்டங்களையும் மைக்கல் லீஸ்க் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/138000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்துவீச்சில் ஜோசப், ஹோல்டர் அசத்தல் ; சிம்பாப்வேயை வென்றது மேற்கிந்தியத்தீவுகள்

19 OCT, 2022 | 08:40 PM
image

(என்.வீ.ஏ.)

ஹோபார்ட், பெலேரிவ் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் சுற்று போட்டியில் 154 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து ஸிம்பாப்வேயை 122 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் 31 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

ஆரம்பப் போட்டியில் ஸ்கொட்லாந்திடம் முற்றிலும் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு இன்றைய வெற்றி ஓரளவு திருப்தியைக் கொடுத்துள்ளது.

அல்ஸாரி ஜோசப் பதிவுசெய்த இந்த வருட உலகக் கிண்ணத்திற்கான அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியும் ஜேசன் ஹோல்டரின் துல்லியமான பந்துவீச்சும் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை இலகுவாக்கின.

அப் போட்டியில் கணிசமான ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதை அறிந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த  மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் மேயர்ஸ் கய்ல் (13) குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதிலும் ஜொசன்சன் சார்ள்ஸ், எவின் லூயிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 49 ஓட்டங்கள் மேற்கிந்தியத் திவுகளுக்கு சற்று தெம்பூட்டுவதாக அமைந்தது.

எனினும் சுழல்பந்துவீச்சாளரகளை  ஸிம்பாப்வே   அறிமுகப்படுத்தியதும் விக்கெட்கள் சரியத் தொடங்கின.

சார்ள்ஸ், லூயிஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தை சிக்கந்தர் ராஸா முடிவுக்கு கொண்டுவந்ததை அடுத்தே மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட்கள் சரியத் தொடங்கின.

10ஆவது ஓவரில் 77 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அதன் பின்னர் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை இழந்தது. (101 - 6 விக்.)

எனினும் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல், அக்கீல் ஹொசெய்ன் ஆகிய இருவரும் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து  மொத்த எண்ணிக்கை 150 ஓட்டங்களைக் கடப்பதற்கு உதவினர்.

துடுப்பாட்டத்தில் ஜோன்ச்ஸ் சார்ள்ஸ் 45 ஓட்டங்களையும் ரோவ்மன் பவல் 28 ஓட்டங்களையும் அக்கீல் ஹொசெய்ன் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் எவின் லூயிஸ் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஸிம்பாப்வே பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸாரபனி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சோன் வில்லியம்ஸ் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

154 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 18 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

வெஸ்லி மெதேவியர், ரெஜிஸ் சக்கப்வா ஆகிய இருவரும் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சக்கப்வா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஸிம்பாப்வேயின் விக்கெட்கள் சரியத் தொடங்கியதுடன் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கவில்லை.

மத்திய வரிசை வீரர் லூக் ஜொங்வே 29 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். அவரைவிட ஆரம்ப வீரர்களில் ஒருவரான மெதேவியர் 27 ஓட்டங்களையும் ரெயான் பூரி 17 ஒட்டங்களையும் பெற்றனர்.

முதலாவது போட்டியில் போன்று இந்தப் போட்டியிலும் துடுப்பாட்டத்தில் அசத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராஸா 14 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜேசன் ஹோல்டர் 3.2 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அல்ஸாரி ஜோசப்பின் பந்துவீச்சுப் பெறுதி அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக இப்போதைக்கு பதிவாகியுள்ளது.

இந்தப் போட்டி முடிவை அடுத்து பி குழு அணிகளின் சுப்பர் 12 சுற்றுக்கான வாயில் அகல திறந்துவிடப்பட்டுள்ளது. நான்கு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளதால் எஞ்சியிருக்கும் 2 போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெறும்.

ஆனால், வெள்ளிக்கிழமை மழை பெய்து இரண்டு போட்டிகளும் கைவிடப்பட்டால், தற்போது அணிகள் நிலையில் நிகர ஓட்ட வித்தியாசத்தில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஸ்கொட்லாந்தும் ஸிம்பாப்வேயும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

ஒருவேளை, மேற்கிந்தியத் தீவுகளுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டி விளையாடப்பட்டு மற்றைய போட்டி கைவிடப்பட்டால் விளையாடப்படும் போட்டியில் வெற்றிபெறும் அணியும் ஸ்கொட்லாந்தும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

ஸ்கொட்லாந்துக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையிலான போட்டி விளையாடப்பட்டு மற்றைய போட்டி கைவிடப்பட்டால் விளையாடப்படும் போட்டியில் வெற்றிபெறும் அணியும் மேற்கிந்தியத் தீவுகளும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

https://www.virakesari.lk/article/138045

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தை வென்ற இலங்கை அடுத்த சுற்றுக்கு தகுதி !

20 OCT, 2022 | 01:12 PM
image

நெதர்லாந்துக்கு எதிராக மெல்பர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஏ குழுவுக்கான தனது கடைசி ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண முதல் சுற்று கிரிக்கெட் போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

குசல் மெண்டிஸ் குவித்த அபார அரைச் சதம் மற்றும் துல்லியமான பந்துவீச்சு என்பன இலங்கையின் வெற்றியையும் சுப்பர் 12 க்கு தகுதிபெறுவதையும் உறுதிசெய்தன.

 

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் சுற்று போட்டியில் இன்று இடம்பெறும் ஏ குழுவுக்கான போட்டி இலங்கை அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டி இலங்கை அணிக்கு முக்கிய போட்டியாக அமைந்திருந்தது. இப்போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தது.

இப்போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் நெதர்லாந்து அணி வெற்றிபெற 20 ஓவர்களில் 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்தது.

மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

குசல் மெண்டிஸ் 44 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களையும் சரித் அசலன்க 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட பானுக்க ராஜபக்ஷ 19 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

நெதர்லாந்து பந்துவீச்சில் போல் வென் மிக்கெரென் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட்ஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுக்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நெதர்லாந்து சார்பாக ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓ'டவ்ட் தனி ஒருவராக போராடி 53 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தபோதிலும் இலங்கையின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது.

https://www.virakesari.lk/article/138079

Link to comment
Share on other sites

டி20 உலகக் கிண்ணம் - வீரர் விலகல்!

டி20 உலகக் கிண்ணம் - வீரர் விலகல்!

 

டி20 உலகக் கிண்ண அவுஸ்திரேலிய அணியில் இருந்து ஜோஷ் இங்லிஷ் விலகியுள்ளார். அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கிண்ண போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன.

நவம்பர் 9, 10 திகதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

டி20 உலகக் கிண்ண போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களததேஷ், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் பெர்த்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கிண்ண போட்டியில் இருந்து அவுஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்க்லிஷ் விலகியுள்ளார். சிட்னியில் கோல்ஃப் விளையாடியபோது கையில் காயம் ஏற்பட்டதால் தற்போது உலகக் கிண்ண போட்டியில் இருந்து விலக வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. ஆஸி. அணியின் மாற்று விக்கெட் கீப்பராக ஜோஷ் இங்லிஷ் கருதப்பட்டதால் இன்னொரு விக்கெட் கீப்பரைத் தேர்வு செய்யவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அலெக்ஸ் கேரி தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பெத்தும் நிஸ்ஸங்க உபாதைக்கு?

பெத்தும் நிஸ்ஸங்க உபாதைக்கு?

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெத்தும் நிஸ்ஸங்க உபாதைக்கு உள்ளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் பெத்தும் நிஸ்ஸங்க ஸ்கேன் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உபாதை காரணமாக இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் போது அவர் பீல்டிங்கில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பான போட்டியில் நமீபியாவை தோற்கடித்த ஐக்கிய அரபு இராச்சியம் : சுப்பர் 12 சுற்றுக்குள் இலங்கை, நெதர்லாந்து

20 OCT, 2022 | 06:14 PM
image

 

(நெவில் அன்தனி)

எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் ஏ குழுவுக்கான கடைசி 2 போட்டிகள் கடைசிவரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்த கடைசி ஓவர்களில் முடிவுகள் ஈட்டப்பட்டன.

மெல்பேர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற நெதர்லாந்துடனான போட்டியில் 16 ஓட்டங்களால் அவசியமான வெற்றியை ஈட்டியதன் மூலம் இக் குழுவிலிருந்து முதலாவது அணியாக சுப்பர் 12 சுற்றில் விளையாட இலங்கை தகுதிபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நமிபியாவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான போட்டியின் கடைசிப் பந்தில் ஐக்கிய அரபு இராச்சியம் 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியதை அடுத்து நெதர்லாந்து சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

ஆரம்பப் போட்டியில் இலங்கையை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த நமீபியாவுக்கு இந்தத் தோல்வியும் சுப்பர் 12 சுற்றுக்கு செல்ல முடியாமல் போனமையும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நமிபியா தோல்வி அடைந்தன் காரணமாக சுப்பர் 12 சுற்று வாயிலில் காத்திருந்த நெதர்லாந்துக்கு உள்ளே நுழைவதற்கான அதிர்ஷ்டம் கிட்டியது. 

இலங்கை ஏற்கனவே சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையும் நெதர்லாந்தும் தலா 4 புள்ளிகளைப் பெற்று இக் குழுவில் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றன.

இன்று மாலை கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் நமிபியாவை 7 ஓட்டங்களால் ஐக்கிய அரபு இராச்சியம் வெற்றிகொண்டது.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

முஹம்மத் வசீமின் சகலதுறை ஆட்டமும் கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அணித் தலைவர் சுண்டங்காபோயில் ரிஸ்வானின் அதிரடி துடுப்பாட்டமும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெற்றிக்கு வித்திட்டன.

முஹம்மத் ரிஸ்வான், விரித்தியா அரவிந்த் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 49 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அரவிந்த் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆனால் அதன் பின்னர் வசீமும் ரிஸ்வானும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 41 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து அணி வலுவான நிலையை அடைய உதவினர்.

வசீம் 41 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 50 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரைத் தொடர்ந்து அலிஷான் ஷராபு 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் ரிஸ்வானும் பாசில் ஹமீதும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 18 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து நமிபியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

ரிஸ்வான் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் பாசில் ஹமீத் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

13ஆவது ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நமிபியா படு தோல்வியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டேவிட் வைஸ் 36 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களைப் பெற்று நமிபியாவுக்கு வெற்றியீட்டிக்கொடுக்க முயற்சித்தார்.

ரூபன் ட்ரம்ப்பெல்மான்  ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார். வைஸும் ட்ரம்ப்பெல்மானும் 8ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

கடைசி ஓவரில் நமிபியாவின் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மொஹமத் ரிஸ்வான் வீசிய கடைசி ஓவரின் 4ஆவது பந்தை வைஸ், சிக்ஸாக விசுக்கி அடிக்க விளைந்து எல்லைக் கோட்டுக்கு அருகே பிடிகொடுத்து ஆட்டமிழந்ததுடன் நமிபியாவின் எதிர்பார்ப்பு அற்றுப்போனது.

அடுத்த இரண்டு பந்துகளில் தேவைப்பட்ட 9 ஓட்டங்களில் 2 ஓட்டங்கள் மட்டுமே பெறப்பட்டன.

பந்துவீச்சில் ஸஹூர் கான் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்க்ளையும் முஹம்மத் வசீம் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை யும்    கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/138103

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் .......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து சுப்பர் 12 க்கு தகுதி

By DIGITAL DESK 5

21 OCT, 2022 | 01:28 PM
image

(நெவில் அன்தனி)

இரண்டு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த அயர்லாந்து, ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது..

ஹோர்பார்ட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான முதலாம் சுற்று போட்டியில் அயர்லாந்திடம் 9 விக்கெட்களால் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது.

அப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய   அயர்லர்நது 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

Gareth Delany bowled a top spell,  Ireland vs West Indies, ICC Men's T20 World Cup, Hobart, October 21, 2022

கெரத் டிலானியின் துல்லியமான பந்துவீச்சு, போல் ஸ்டேர்லிங் குவித்த அரைச் சதம், அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி, லோர்க்கன் டக்கர் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன அயர்லாந்தின் வெற்றியை சுலபமாக்கின.

சிரேஷ்ட வீரர் போல் ஸ்டேர்லிங்கும் அண்டி பெல்பேர்னியும் 45 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து அழுத்தத்தை குறைத்தனர்.

பெல்பேர்னி 23 பந்துகளில் தலா 3 சிக்ஸ்களையும் 3 பவுண்டறிகளையும் அடித்து 37 ஓட்டங்ளைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து போல் ஸ்டேர்லிங், லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

Paul Stirling made a bright start,  Ireland vs West Indies, ICC Men's T20 World Cup, Hobart, October 21, 2022

போல் ஸ்டேர்லிங் 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 66 ஓட்டங்களுடனும் டக்கர் 35 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்கள் உட்பட 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பம் சிறப்பாக அமையாதபோதிலும் ப்றெண்டன் கிங் பெற்ற ஆட்டமிழக்காத  அரைச் சதம் சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது.

Brandon King pulls the ball away,  Ireland vs West Indies, ICC Men's T20 World Cup, Hobart, October 21, 2022

கய்ல் மெயர்ஸ் (1), ஜோன்சன் சார்ள்ஸ் (24) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க, 5ஆவது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 27 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் எவின் லூயிஸ் (13), ப்றெண்டன் கிங் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

எவின் லூயிஸைத்  தொடர்ந்து நிக்கலஸ் பூரண் (13), ரோவ்மன் பவல் (6) ஆகியோரும் ஆட்டமிழக்க மேற்கிந்தியத் தீவுகள் நெருக்கடியை எதிர்கொண்டது.

Barry McCarthy celebrates after dismissing Kyle Mayers,  Ireland vs West Indies, ICC Men's T20 World Cup, Hobart, October 21, 2022

எனினும் ப்றெண்டன் கிங் 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 62 ஓட்டங்களையும் ஓடியன் ஸ்மித் 19 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவினர்.

பந்துவீச்சில் கெரத் டிலானி 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளை வீழ்த்தினார்.

https://www.virakesari.lk/article/138142

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.t20pt.JPG.34f0555b29c1c8024c2b9ef5

ரி20 தெரிவுப் போட்டி முடிவில் அணிகளின் தரவரிசை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.