Jump to content

தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று ஆரம்பம்!

 
தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் நினை வேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது . தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26ஆம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறும் .

நினைவேந்தல் ஆரம்ப நிகழ்வுகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் . தியாக தீபம் திலீபன் உண்ணாவிரத மேடையில் அமர்ந்த நேரமாகிய காலை 9.45 இற்கு திலீபனின் திருவுருவப்படம் பண்டிதர் அவர்களின் தாயாரினால் திரைநீக்கம் செய்து வைக்கப்படும் .

அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் . இதில் முத ன்மை சுடரினை பண்டிதர் அவர்களின் தாயார் தினமும் காலை 9.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். நினைவேந்தல் நிகழ்வுகளின் போது ஒவ்வொரு நாளும் முதன்மைச் சுடரினை மாவீரச் செல்வங்களின் பெற்றோர்கள் ஏற்றிவைப்பதற்கு ஏற்றவகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/தியாக-தீபம்-திலீபனின்-நி-4/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கே… உண்ணாவிரதம் என்றால், என்ன என்று காட்டிய…
தியாக தீபம் திலீபனுக்கு, நினைவு வணக்கங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, beard and text that says ""அவன் வயிற்றில் பற்றிய தீதான், இன்னும் எரிகிறது எங்கள் நெஞ்சிலே...! அவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான், இன்றும் தணியாத தாகமாய் எம்மிலே...!! ၁ Gnanam"

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.