Jump to content

தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று ஆரம்பம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று ஆரம்பம்!

 
தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் நினை வேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது . தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26ஆம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறும் .

நினைவேந்தல் ஆரம்ப நிகழ்வுகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் . தியாக தீபம் திலீபன் உண்ணாவிரத மேடையில் அமர்ந்த நேரமாகிய காலை 9.45 இற்கு திலீபனின் திருவுருவப்படம் பண்டிதர் அவர்களின் தாயாரினால் திரைநீக்கம் செய்து வைக்கப்படும் .

அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் . இதில் முத ன்மை சுடரினை பண்டிதர் அவர்களின் தாயார் தினமும் காலை 9.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். நினைவேந்தல் நிகழ்வுகளின் போது ஒவ்வொரு நாளும் முதன்மைச் சுடரினை மாவீரச் செல்வங்களின் பெற்றோர்கள் ஏற்றிவைப்பதற்கு ஏற்றவகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/தியாக-தீபம்-திலீபனின்-நி-4/

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கே… உண்ணாவிரதம் என்றால், என்ன என்று காட்டிய…
தியாக தீபம் திலீபனுக்கு, நினைவு வணக்கங்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, beard and text that says ""அவன் வயிற்றில் பற்றிய தீதான், இன்னும் எரிகிறது எங்கள் நெஞ்சிலே...! அவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான், இன்றும் தணியாத தாகமாய் எம்மிலே...!! ၁ Gnanam"

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்த யாழ்களத்தின் பின்புல தொழில்நுட்ப விசயங்களை தெரிந்துகொள்ள ஆவலும் உண்டு. ஆனால் பாருங்கோ, இவற்றை பற்றி அதிகம் வெளியில் எழுதினால் போட்டி, பொறாமை, காண்டு உள்ளவர்களிடம் தகவல் சேர்ந்தால் வீண் பிரச்சனை, இணய தாக்குதல் நடத்தவும் வாய்ப்புண்டு. நிர்வாகத்தை, பொறுப்பாளர்களின் சிரமத்தை புரிந்து பாராட்டி, களம் சிறக்க ஒத்துழைப்பதோடு, கமுக்கமா அப்படியே விட்டுடுவோம்..! 🤝 💐
  • சரி, சரி ஆளாளுக்கு நன்றி, வணக்கம் சொல்லி நேரத்த தின்னாமல், ஆளுக்கு ஒரு திரியா பிரிச்சு குத்து பாட்டில் இறங்குங்கோ🤣
  • ஜேர்மனியில் கத்திக்குத்துக்கு பள்ளி மாணவி பலி! மற்றொருவர் படுகாயம்! தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை காலை  இல்லர்கிர்ச்பெர்க் (Illerkirchberg) கிராமத்தில் உள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து மாணவர்களைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கத்திக்குத்து இலக்காகிய 14 வயதுச் சிறுதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் அங்கு உயிரிழந்தார். இச்சிறுதி துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த ஜெர்மன் குடியுரிமை பெற்றவர். சந்தேகத்தின் பெயரில்  எரித்திரியாவைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் எனக்கூறிய 27 வயது இளைஞரை ஜேர்மன் காவல்துறையினர் கைது செய்தனர். 13 வயது சிறுமிக்கு கத்தியால் பலத்த காயங்கள் ஏற்பட்டாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர் தாக்குதலில் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று அகதிகள் தங்குமிடத்திற்கு சென்றுள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தியுடன் அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சந்தேக நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயம் அவரின் கத்தியால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சந்தேக நபருக்கு மனநல பிரச்சினைகள் உள்ளதா என்பதையும், தாக்குதலுக்கு முன்னர் இரண்டு சிறுமிகளையும் அவர் அறிந்திருந்தாரா என்பதையும் உறுதி செய்ய வழக்கறிஞர்கள் முயன்றனர். வெளிநாட்டினர் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவத்தை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினர் ஒரு அறிக்கையில் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர் இது தொடர்பான அனைத்தும் இதுவரை முற்றிலும் தெளிவாக இல்லை என்று காவலதுறைச் செய்தித் தொடர்பாளர்  வொல்ப்காங் ஜூர்கன்ஸ் (Wolfgang Jürgens) செய்தியாளர்களிடம் கூறினார்.  இருப்பினும், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஜேர்மனியின் குடியேற்றக் கொள்கையை தீவிர வலதுசாரி AfD உடனடியாகக் குற்றம் சாட்டியது. இல்லர்கிர்ச்பெர்க் என்பது 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமமாகும். துருக்கிய தூதர் அஹ்மத் பாசார் சென் செவ்வாயன்று பேடன்-வூர்ட்டம்பேர்க் மாநிலத்தின் துணைத் தலைவருடன் கிராமத்திற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேயர் Markus Häußler, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறினார்.  அதே நேரத்தில் ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் „பயங்கரமான செய்தி“ தன்னை உலுக்கியது என்றார். கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்த சிறுமி குணமடைவாள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அனைத்து பின்னணிகளையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்று அமைச்சர் ட்விட்டரில் (ஜெர்மன் மொழியில்) எழுதினார். https://eelattamilan.stsstudio.com/2022/12/07/ஜேர்மனியில்-கத்திக்குத்/?
  • ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் மாணவிபலி - புகலிடக்கோரிக்கையாளர் மீது குற்றச்சாட்டு By RAJEEBAN 06 DEC, 2022 | 12:29 PM ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பாடசாலை மாணவியொருவர் கொல்லப்பட்டுள்ளார். ஜேர்மனியின் தென்பகுதியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 14 மற்றும் 13 வயது மாணவிகள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இல்லர்கிர்ச்பேர்க் என்ற கிராமத்தில் உள்ள அகதிகளிற்கான நிலையமொன்றிலிருந்து  வெளியே வந்த நபர் ஒருவர் இந்தகத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது 14 வயது மாணவி உயிரிழந்துள்ளார். எரித்திரியாவை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே இந்த கத்திக்குத்தில் ஈடுபட்டார் என பொலிஸார்தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள கட்டிடமொன்றை சோதனையிட்டவேளை கத்தியுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் இந்த கத்தியை அவர் தாக்குதலிற்கு பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் வேறு இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதேவேளை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார் இந்த சம்பவத்தை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் அல்லது புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு எதிராக பதற்றத்தை அதிகரிக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல விடயங்கள் தெளிவற்றவையாக காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் மாணவிபலி - புகலிடக்கோரிக்கையாளர் மீது குற்றச்சாட்டு | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.