Jump to content

நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா

By PRIYATHARSHAN

16 SEP, 2022 | 12:11 PM
image

 

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டை விட பணக்காரர்களாக உள்ளது என  அதன்  தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகை தற்போது 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் காணப்படுகின்றது. இது கடந்த 2 - 3 வருடங்களாக தற்போதைய நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஷம்மி சில்வா தெரிவித்தார்.

307266769_6433424440022042_7309943185466

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறுகையில்,

தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம் பொறுப்பேற்க முன், இலங்கை கிரிக்கெட் தனது கணக்கில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பேணவில்லை.

இருப்பினும், தற்போதைய நிர்வாகம் கடந்த 2-3 ஆண்டுகளில் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வசூலித்துள்ளது.

35 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட்டைவிட தற்போது இலங்கை கிரிக்கெட்டிடம் அதிக நிதி உள்ளது.

இலங்கை ஆசியக் கிண்ணப் போட்டிகளை நடத்த முடியாத போதிலும் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெற்றுள்ளது.

307141206_6433424546688698_3139770808499

இலங்கை கிரிக்கெட் கடந்த 2-3 வருடங்களாக கடனைக் கோராதது சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகையில் உள்ள நிதி விவரங்களை அறிந்தவர்கள் இப்போது சேறுபூசும் பிரச்சாரத்தை உருவாக்குவதுடன் குற்றச்சாட்டுகளை சுமந்துகின்றனர். இது இறுதியில் கிரிக்கெட்டை மீண்டும் அழிவுப்பாதை்கு இட்டுச்செல்லும்.

இதேவேளை, வெளிச்சக்திகள் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை அழிக்க முற்பட்டால் அதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அனுமதிக்காது எனவும் ஷம்மி சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

306981110_6433423903355429_2582380266160

https://www.virakesari.lk/article/135764

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் ம‌க்க‌ள் கிரிக்கேட் விளையாட்டுக்கு பெரிய‌ முக்கிய‌த்தும் கொடுற‌ மாதிரி தெரிய‌ வில்லை , உள்ளூர் கிரிக்கேட் எல்லாம் ஏனோ தானோ என்று தான் வைப்பின‌ம் , வெளி நாட்டு வீர‌ர்க‌ள் சேர்ப்ப‌து கிடையாது 😏

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த டொலரை ரணிலிடம் கையளிக்கலாமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nedukkalapoovan said:

அப்ப இந்த டொலரை ரணிலிடம் கையளிக்கலாமே. 

சொந்தப் பணத்தை  கொடுக்க மாட்டார்கள்.
அப்படி கொடுப்பதாக இருந்தால்.... 
கொள்ளை அடித்த பணத்தை, எப்பவோ கொடுத்திருப்பார்கள்.

மற்ற நாட்டுக்காரனின்... வரியில் சேர்த்த பணத்தை மட்டும், 
கடன் என்ற போர்வையில் பெறுவார்கள். வெட்கம் கெட்டவர்கள்.

நியூசிலாந்தை விட தங்களிடம் நிறைய பணம் இருக்கு என்று சொல்பவர்கள்,
நியூஸிலாந்திடமே கடன் கேட்பார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அப்ப இந்த டொலரை ரணிலிடம் கையளிக்கலாமே. 

வாயால் வெடி போடுபவர்கள் சிங்களவர்களுக்கு டொலர் டொலர் கனவு  வாழைபழம் வித்து டொலர் வருகிறது என்று ஊடகங்களில் புளுகுகிறார்கள் மன்னாரின் கடற்படுக்கையில்  ரில்லியன் கணக்கான எண்ணெய் வளம் என்று வெடி கொளுத்தினார்கள் பின்பு பாரிய கல் ஒன்றை அங்கும் இங்கும் அலைவித்து பில்லியன் டொலர் பெறுமதியான இரத்தின கல் என்று சவுடால் விட்டு பார்த்தார்கள் .இப்ப அமெரிக்காவால் இலங்கை பெறும் அதிகளவான டொலர் கடன் என்கிறார்கள் இந்த செய்திகளை படித்துவிட்டு சிங்களம்  வெறும் வயித்தில் ஈரதுணியை கட்டிக்கொண்டு பாயிலை சுருண்டு படுக்க வேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஆசியாக் கோப்பை வென்ற திமிர்க் கதை ..உலகக் கிண்ணத்துக்குப் பிறகு கதை கந்தல்..

  • Haha 1
Link to comment
Share on other sites

 

 ஒன்றோ இரண்டோ மேற்கு குழுக்கள் சிறிலங்காவுக்கு ஓட ஓட கொடுத்தவுடன் கதை அடங்கி விடும்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.