Jump to content

மூடப்படும் கதவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூடப்படும் கதவு

By VISHNU

16 SEP, 2022 | 09:41 PM
image

சத்ரியன்

இலங்கையில் உள்ள தூதரகத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் மூடி விடுவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

K1RIGHT_02.jpg

‘நோராட்’ எனப்படும், அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நோர்வே முகமையின் அலுவலகம், 1976ஆம் ஆண்டு இலங்கையில் அமைக்கப்பட்டதில் இருந்து, நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான அபிவிருத்தி மற்றும் இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பமாகின.

K1RIGHT_01.jpg

அதன் பின்னர், இருபது ஆண்டுகள் கழித்து, 1996ஆம் ஆண்டு, கொழும்பில் தமது தூதரகத்தை நோர்வே திறந்தது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு, நோர்வே கொழும்பிலுள்ள தமது தூதரகத்தை மூடுவதற்கு முடிவு செய்திருக்கிறது.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலத்தில் இலங்கையின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பல முயற்சிகளில்- நோர்வே பங்காளியாக இருந்து வந்திருக்கிறது.

கொழும்பில் தமது தூதரகத்தை திறந்த போது, இலங்கையில் போர் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. மிகப்பெரிய இடம்பெயர்வுகள், மனித அவலங்களுக்கு மத்தியில் இலங்கையில் தமது தூதரகத்தை அமைத்த நோர்வே, குறுகிய காலத்திலேயே அதன் செயற்பாடுகளால் உலகளவில் பிரபலத்தைப் பெற்றது.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் போர்நிறுத்தம் மற்றும் பேச்சுக்கான வசதிகளை ஏற்படுத்துதல், அமைதி மற்றும் அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காக நோர்வே தீவிரமான பங்களிப்புகளை வழங்கியிருந்தது.

2002இல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்துவதில், நோர்வே பிரதான பங்கு வகித்தது.

அதற்காக கொழும்பில் இருந்த நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்பேர்க் தீவிர பங்கை ஆற்றியிருந்ததுடன், இலங்கைக்கான விசேட தூதுவராக எரிக் சொல்ஹெய்மும் நியமிக்கப்பட்டிருந்தார்.

போர்நிறுத்தம், 2006ஆம் ஆண்டு முறிவடையும் வரையான காலப்பகுதி இலங்கையில் நோர்வே தூதரகம் மற்றும் தூதுவர்களின் பணிகள் மிகவும் சவாலானதாகவே இருந்தது.

போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் பிரதான இலக்காக நோர்வே காணப்பட்டது.

கொழும்பில் இருந்த நோர்வே தூதரகம் எந்த நேரத்திலும் எதிர்ப்புக் போராட்டங்கள் நடத்தப்படும் இடமாக அப்போது இருந்தது.

இலங்கையில் அதிகளவில் தீக்கிரையாக்கப்பட்ட வெளிநாட்டுக் கொடி என்றால் அது நோர்வேயினுடையதாகத் தான் இருக்கும்.

நோர்வே தூதரகம் முன்பாக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய, போன்ற சிங்கள அடிப்படைவாத சக்திகள் இறுதியில் நோர்வே கொடியை எரித்து ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வது வழமை.

போர்நிறுத்த உடன்பாடு மற்றும், நோர்வேக்கு எதிரான போராட்டங்களின் ஊடாகவே, ஜேவிபியில் இருந்த விமல் வீரவன்ச பிரபலம்மிக்க அரசியல்வாதியாக மாறினார்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் தோல்வியைத் தழுவத் தொடங்க, மெல்ல மெல்ல மோதல்கள் உருவாகிய போது, நோர்வேயின் பங்கும் சரிவைக் காணத் தொடங்கியது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன், நோர்வேயை ஒரு வேண்டாத தரப்பாகவே நடத்த தொடங்கினார்.

அதன் நடுநிலையை – அனுசரணையையும் அவர் அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை.

ஆயினும், ஜெனிவாவில் கடைசியாக நடந்த அமைதிப் பேச்சுக்களில், நோர்வேயின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக இருந்த்து.

இலங்கையின் அமைதி முயற்சிகளில் நோர்வே தனது கொழும்பில் உள்ள தூதரகத்தை மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதற்கு அப்பால், தனது விசேட தூதுவர், வெளிவிவகார அமைச்சர்களையும், இந்தப் பணிகளில் ஈடுபடுத்தியது. ஆனாலும், நோர்வேக்கு இந்த அமைதி முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

நோர்வே ஒரு அனுசரணை நாடாக மாத்திரமே இந்தப் பேச்சு முயற்சிகளில் பங்கேற்றிருந்தது. அதற்கு அப்பால் செயற்படக் கூடியளவுக்கு நோர்வே ஒரு அழுத்த சக்தியாக இருக்கவில்லை.

பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இருந்தாலும், நோர்வே உலகளவில் பலம் கொண்டதொரு நாடு அல்ல.

அதேவேளை, இலங்கையில் மாத்திரமன்றி, முரண்பாடுகள் நிலவிய நாடுகள் பலவற்றில் நோர்வே இவ்வாறான அமைதி முயற்சிகளில் பங்கேற்று வந்திருக்கிறது.

1993ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், நோர்வே தீவிரமாக ஈடுபட்ட நாடுகளின் பட்டியல் நீளமானது.

ஆப்கானிஸ்தானில் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டது. வெற்றி கிடைக்கவில்லை.

கொலம்பியாவில் பார்க் கெரில்லா அமைப்புடன் அரசாங்கம் உடன்பாட்டை செய்து கொள்வதற்கு நோர்வே கியூபாவுடன் இணைந்து செயற்பட்டது.

இஸ்ரேல்- பலஸ்தீனத்துக்கு இடையில் ஒஸ்லோ உடன்பாடு நோர்வேயின் முயற்சியால் தான் கையெழுத்திடப்பட்டது.

மேலும் மியான்மார், பிலிப்பைன்ஸ், சோமாலியா, சூடான்,வெனிசுவேலா, நேபாளம் என உள்நாட்டுப் போர் அல்லது மோதல்கள் இடம்பெற்ற நாடுகளில் அமைதியை ஏற்படுத்துவதில் நோர்வே பங்களித்தது.

ஆச்சே, புருண்டி, கொங்கோ, கென்யா, மொசாம்பிக், சிரியா மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் அமைதி செயல்முறைகளுக்கு நோர்வே நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கியுள்ளது. 

ஹைட்டி, டொமினிக்கன் குடியரசு மற்றும் திமோர்-லெஸ்தே உட்பட பல நாடுகளில் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் இரகசியமாக நடைபெறுவதால், இந்தப் பட்டியல் முழுமையானதல்ல என்று குறிப்பிடுகிறது, நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு.

அமெரிக்கா, நேரடியாக தலையிட முடியாத, அல்லது தலையிட விரும்பாத, இடங்களில் அமைதி முயற்சிகளில் நோர்வேயை ஈடுபடுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்திருந்த நிலையில், அவர்களுடனான அமைதிப் பேச்சுக்களில் நேரடி அனுசரணையாளராக இறங்க முடியாத நிலை காணப்பட்டது.

அதைவிட, அமெரிக்காவை நம்பகமானதொரு தேசமாக அங்கீகரிக்க சிங்கள மக்கள் தயாராக இல்லாத நிலையையும் அந்த நாடு கவனத்தில் கொண்டிருக்கும்.

இவ்வாறான நிலையில் தான் நோர்வேயை பயன்படுத்தி இலங்கை அமைதி முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டன. அந்தக் கட்டத்தில் போரிடும் தரப்புகளை ஒரு இடத்தில் சந்திக்க வைப்பதே பெரும் விடயமாக இருந்தது.

ஆனால் போரிடும் தரப்புகள் இரண்டும் களைத்துப் போயிருந்தன. அவர்களுக்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் நோர்வே அமைதி முயற்சிகளை முன்னெடுத்தது.

ஆனால் காலப்போக்கில் நோர்வே, சிங்கள பௌத்த பேரினவாத தரப்புகளின் இலக்காக தொடங்கியதுடன், சிங்கள மக்களால் நம்பக்கூடிய நாடு அல்ல என்ற நிலைக்கும் தள்ளப்பட்டது.

அது நோர்வேயை சலிப்படைய வைத்ததுடன், அவர்களின் அமைதி முயற்சிகளையும், வெற்றியின் திசையில் இருந்து திருப்பி விட்டது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் நோர்வேயின் செயற்பாடுகள் ஆர்ப்பரிப்பில்லாமல் அமைதியானதாகவே இருந்து வந்தது.

அவர்களைப் பயன்படுத்தவும் யாரும் இருக்கவில்லை. அவர்களும் அதற்கு இடமளிக்கவில்லை.

இந்தநிலையில் தான், கொழும்பை விட்டுப் புறப்படும் முடிவை எடுத்திருக்கிறது நோர்வே.

இந்தியாவில் இருந்து, இலங்கையில் தமது தூதரகச் செயற்பாடுகளை முன்னெடுக்க நோர்வே தீர்மானித்திருக்கிறது.

1996இல் இலங்கையில் நோர்வே தனது தூதரகத்தை நிறுவ முடிவு செய்த காலத்துக்கும், இப்போதைய காலகட்டத்துக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.

இருக்கின்ற ஒரே வித்தியாசம், அப்போது போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த்து. இப்போது இல்லை. மற்றபடி மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய முன்னேற்றங்கள் எதுவுமில்லை.

இவ்வாறான நிலையில் இலங்கையில் நோர்வே தனது தூதரகத்தை அமைக்க முடிவு செய்ததற்குப் பின்னால், போர் தொடர்பான அமைதி முயற்சிகளில் பங்கெடுப்பது மட்டும் தான் காரணமாக இருந்ததோ என்ற கேள்வி எழுகிறது.

அதேவேளை தூதரகத்தை மூடினாலும் இலங்கையுடனான உறவுகள் தொடரும் என்று நோர்வே கூறியிருக்கிறது.

ஏற்கனவே நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் என்பது, ராஜபக்ஷவினரின் ஆட்சிக்காலங்களில் ஒரு விதமாகவும், மற்றைய தரப்பினரின் காலகட்டங்களில் மற்றொரு விதமாகவும் தான் இருந்து வந்திருக்கிறது.

இவ்வாறான நிலையில், தூதரகம் இல்லாத போது, நோர்வே தனது உதவிகளையும் திட்டங்களையும் பிற தரப்புகளின் ஊடாகத் தான் முன்னகர்த்தப் போகிறது.

இது, நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் பேரினவாத கண்ணோட்டத்தில் ஆட்சிக்கு வரும் இலங்கை அரசாங்கம் கவலையடையக் கூடிய நிலையும் இல்லை. 

https://www.virakesari.lk/article/135784

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
    • நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.