Jump to content

இலங்கைக்கு... கடன் வழங்குவதில், சீனாவைவிட... இந்தியா முன்னிலையில் உள்ளதாக, தெரிவிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான ஒத்துழைப்பை இலங்கை கவனத்தில் கொண்டிருக்கும் – அரிந்தம் பாக்சி

இலங்கைக்கு... கடன் வழங்குவதில், சீனாவைவிட... இந்தியா முன்னிலையில் உள்ளதாக, தெரிவிப்பு.

இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இந்த வருடத்தின் நான்கு மாதங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன் தொகை 968 மில்லியன் டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு சீனா 947 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

https://athavannews.com/2022/1299787

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இது தவறான தகவல், இந்தியாவின் கடன் 2%, சீனாவின் கடன் 10%, ஜப்பான் கடன் 10%, முதலீட்டாளரிடம் வாங்கின் கடன் 47% இந்தியாவினை விட அதிகமாக கடன் வழங்கின சீனாதான் இன்றைய நிலமைக்கு காரணம் என குற்றம் சாட்டுவது ஒரு அரசியல் பின்புலம் கொண்ட திட்டமிட்ட பொய் பிரச்சாரம் அதே வேளை சீனாவை விட 5 மடங்கு குறைவான கடன் (இனாம் அல்ல) கொடுத்து விட்டு இலங்கையினை தாங்கள்தான் காப்பாற்ற வந்த தேவதூதுவர் போல பிரச்சாரம் செய்யும் இந்தியாவின் செயல் சாத்தான் வேதம் ஓதுவதத்திற்கு ஒப்பானது.

ஆமை ஆயிரம் முட்டை போட்டாலும் அமைதியாக போய்விடும், ஆனால் ஒரு முட்டை போட்ட கோழியின் கத்தல்கள்தான் தாங்கமுடியாது.

http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=article&id=102&Itemid=308&lang=en

அடிப்படையில் இலங்கையில் தமது குறுகிய அரசியல் இலாப நோக்கில் ஆயுதப்போராட்டத்திற்கு தூபமிட்டு, இலங்கையினை ஆக்கிரமிக்க எடுத்த முடிவு தோல்வியினை சந்தித்த பின் இலங்கை பொருளாதார மீட்சி அடையக்கூடாது என்பதில் இந்தியாவிற்குதான் அக்கறை அதிகம், அப்போதுதான் தம்மால் இலங்கை மீது அதிகாரம் செலுத்தலாம். 

சீனாவை பொறுத்தவரையில் வியாபாரம்தான் இலங்க பொருளாதார மேன்மை அடைவதில் சீனாவிற்குதான் அக்கறை உண்டு, ஆனால் இந்தியாவின் நோக்கமே இலங்கை பொருளாதார மீட்சி அடையக்கூடாது என்பதுதான்.

இலங்கை மக்கள் தமது உண்மையான நண்பனை கண்டறிவதில்தான் அவர்கள் எதிர்காலம் தங்கியுள்ளது.

  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vasee said:

அது சிங்களத்துக்கு தெரிந்துள்ளது.

தமிழருக்கு புரியும் போது, தீர்வு கிடைக்கும்.

இந்தியாவை நம்பும் கூத்தமைப்பினர், ஒருதீர்வையும் கொண்டுவரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அது சிங்களத்துக்கு தெரிந்துள்ளது.

தமிழருக்கு புரியும் போது, தீர்வு கிடைக்கும்.

இந்தியாவை நம்பும் கூத்தமைப்பினர், ஒருதீர்வையும் கொண்டுவரவில்லை.

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியாதான் என கூறுகிறார் இந்த காணொளியில், இந்தக்காணொளியினை 3 மணித்தியாலங்களின் முன்னர் பதிவேற்றி உள்ளார் என காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியாதான் என கூறுகிறார் இந்த காணொளியில், இந்தக்காணொளியினை 3 மணித்தியாலங்களின் முன்னர் பதிவேற்றி உள்ளார் என காட்டுகிறது.

இலங்கையின் நண்பன் இந்தியா.

ஆனால் இந்தியாவின் நண்பன் தமிழர்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையின் நண்பன் இந்தியா.

ஆனால் இந்தியாவின் நண்பன் தமிழர்கள் தான்.

சிங்களவரின் உண்மையான நண்பன் சீனா.

தமிழர்களுடன் நேர்மையான நட்பை பேணுவது இந்திய நலன்களுக்கு மிக முக்கியமானது.

ஏனெனில் தமிழருக்கு இழக்க எதுவுமே இல்லை.

இந்தியாவுக்கு, இழக்க அதிகம் உள்ளது.

இன்றைய நிலையில் சீனா, இலங்கையின் தனது கடனை தள்ளுபடி செய்து, அதன், இந்திய, ஜப்பானிய கடன்களை அடைக்க கடனுதவியும் செய்தால்..... சீன - சிங்கள உறவு அசைக்கமுடியாமல் போவதுடன், அம்பாந்தோட்டை ஊடாக இ்ந்து சமுத்திர ஆளுமை சீன வசமாகும். 🤗

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு  இலங்கைக்குள்ளே   அமெரிக்கனையும் விட முடியாது, சீனாவையும் விட முடியாது. அப்ப காசு கொடுத்துத்தானே ஆகவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

சிங்களவரின் உண்மையான நண்பன் சீனா.

தமிழர்களுடன் நேர்மையான நட்பை பேணுவது இந்திய நலன்களுக்கு மிக முக்கியமானது.

ஏனெனில் தமிழருக்கு இழக்க எதுவுமே இல்லை.

இந்தியாவுக்கு, இழக்க அதிகம் உள்ளது.

இன்றைய நிலையில் சீனா, இலங்கையின் தனது கடனை தள்ளுபடி செய்து, அதன், இந்திய, ஜப்பானிய கடன்களை அடைக்க கடனுதவியும் செய்தால்..... சீன - சிங்கள உறவு அசைக்கமுடியாமல் போவதுடன், அம்பாந்தோட்டை ஊடாக இ்ந்து சமுத்திர ஆளுமை சீன வசமாகும். 🤗

சீனா, இந்தியா நினைப்பது போல இந்தியா தொடர்பாக பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்பது தான் உண்மை அவ்வாறு சீனா இலங்கை தொடர்பாக சிந்திப்பதாயின் நீங்கள் கூறுவது போல செய்தால், 

22 minutes ago, Nathamuni said:

இன்றைய நிலையில் சீனா, இலங்கையின் தனது கடனை தள்ளுபடி செய்து, அதன், இந்திய, ஜப்பானிய கடன்களை அடைக்க கடனுதவியும் செய்தால்..... சீன - சிங்கள உறவு அசைக்கமுடியாமல் போவதுடன், அம்பாந்தோட்டை ஊடாக இ்ந்து சமுத்திர ஆளுமை சீன வசமாகும். 🤗

இலங்கையினூடாக இந்திய பொருளாதாரத்தினையே சீனாவினால் ஆட்டங்காணச்செய்யலாம், ஏனெனில் இந்தியாவின் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து இலங்கை கொழும்பு துறைமுகம் ஊடாகவே நிகழ்கிறது, ஏற்கனவே கொழும்புதுறைமுகப்பங்குகளில் 85% பங்குகளை சீனா  மறைமுகமாக தனதாக்கியுள்ளது என கூறப்படுகிறது.

சிங்கப்பூர் தற்போது முழுமையான வழ்ங்கலை செய்யமுடியாமல் உள்ள நிலையில் இலங்கை அதன் அமைவிடம் மூலமாக மிக முக்கிய கேந்திர நிலையில் உள்ளது (சிங்கப்பூரை விட), சீனா தனது வியாபார அடிப்படயிலேயே கொழும்பு துறை முகத்தில் ஆர்வம் காட்டுகிறது என கருதுகிறேன் இந்தியா நினைப்பது போல இந்தியாவையெல்லாம் ஒரு தனது எதிரியாக சீனா நினைக்கவில்லை என கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

இந்தியா நினைப்பது போல இந்தியாவையெல்லாம் ஒரு தனது எதிரியாக சீனா நினைக்கவில்லை என கருதுகிறேன்.

அப்ப பயப்படும் அளவுக்கு இந்தியா ஒண்டும் பெரிய ஆளில்லை எண்டுறியள்? போர் மூண்டிடுமோ என்று பயந்துபோனேன். அதுதானே பாத்தேன்! இலங்கை இந்தியாவை வைத்து போடுற ஆட்டத்திலேயே நினைச்சேன் உவர் ஒண்டும் பெரிய ஆளில்லை எண்டு, இப்ப நீங்கள் அதை உறுதிப்படுத்திபோட்டீங்கள். சீனா வரமுதல், ஆர்ப்பாட்டம் பண்ணி, பாதுகாப்பு விமானத்தை கொடுத்து, கண்கொத்திப்பாம்பு போல வைச்ச கண் வாங்காமல் பாத்துக்கொண்டிருக்க, சீனாவோ திட்டமிட்டபடி வந்து போய், அவர்களின் திட்டத்தையெல்லாம் புஷ்வணமாக்கிப்போட்டுது. இப்போ வெக்கினோம் விடிஞ்சோம் எண்டு பொத்திக்கொண்டு இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

ஆனால் இந்தியாவின் நண்பன் தமிழர்கள் தான்.

என்று தமிழர்களின் தன் விளக்கமே தவிர, கிந்தியா அப்படியாயாதொரு உறவை, விளக்கத்தை கொண்டு இருக்கவில்லை. அப்படி இருக்கவும் கிந்தியாவுக்குக்கு விருப்பும் இல்லை.   

கிந்தியா எப்போதுமே தமிழர்களின் எதிரியம் அல்லாமல், தமிழர்கள் என்ற கருத்துருவாக்கம், இனம் இருக்கக்கூடாது என்றே   நினைக்கிறது.        

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kadancha said:

என்று தமிழர்களின் தன் விளக்கமே தவிர, கிந்தியா அப்படியாயாதொரு உறவை, விளக்கத்தை கொண்டு இருக்கவில்லை. அப்படி இருக்கவும் கிந்தியாவுக்குக்கு விருப்பும் இல்லை.   

கிந்தியா எப்போதுமே தமிழர்களின் எதிரியம் அல்லாமல், தமிழர்கள் என்ற கருத்துருவாக்கம், இனம் இருக்கக்கூடாது என்றே   நினைக்கிறது.        

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்...

இந்தியா, 13 அமுலாக்கப்படவேண்டும் என்று சொல்லி விட்டு வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்தது.

ஆக, அது எந்தப்பக்கம் நிக்கிறது என்பதில் இன்னும் தெளிவில்லை, அதன் காரணமாக, சிங்களத்துக்கு ஆதரவு என்பதில் தெளிவாக உள்ள சீனா, இலங்கையில் தனது நலன்களை பாதுகாத்துக் கொள்கிறது. 

  • Like 1
Link to comment
Share on other sites

16 minutes ago, Nathamuni said:

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்...

இந்தியா, 13 அமுலாக்கப்படவேண்டும் என்று சொல்லி விட்டு வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்தது.

ஆக, அது எந்தப்பக்கம் நிக்கிறது என்பதில் இன்னும் தெளிவில்லை, அதன் காரணமாக, சிங்களத்துக்கு ஆதரவு என்பதில் தெளிவாக உள்ள சீனா, இலங்கையில் தனது நலன்களை பாதுகாத்துக் கொள்கிறது. 

இந்தியா மதில் மேல் பூனையாக தான் இருக்கும். அத்தோடு ஆப்பிழுத்த குரங்காகவும் உள்ளது.🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

China கொடுத்தால் அது கடன்பொறி, இந்தியா கொடுத்தால் அது உயிர் மூச்ச..🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்...

இந்தியா, 13 அமுலாக்கப்படவேண்டும் என்று சொல்லி விட்டு வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்தது.

ஆக, அது எந்தப்பக்கம் நிக்கிறது என்பதில் இன்னும் தெளிவில்லை, அதன் காரணமாக, சிங்களத்துக்கு ஆதரவு என்பதில் தெளிவாக உள்ள சீனா, இலங்கையில் தனது நலன்களை பாதுகாத்துக் கொள்கிறது. 

2 hours ago, nunavilan said:

இந்தியா மதில் மேல் பூனையாக தான் இருக்கும். அத்தோடு ஆப்பிழுத்த குரங்காகவும் உள்ளது.🤣

இறுதி யுத்தத்தில் இந்தியா நடந்து கொண்ட விடயம் காலம் முழுவதும் சிங்களத்தின் காலை கழுவ வைத்துவிட்டது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இறுதி யுத்தத்தில் இந்தியா நடந்து கொண்ட விடயம் காலம் முழுவதும் சிங்களத்தின் காலை கழுவ வைத்துவிட்டது.

சரியாக சொன்னீர்கள். 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

இறுதி யுத்தத்தில் இந்தியா நடந்து கொண்ட விடயம் காலம் முழுவதும் சிங்களத்தின் காலை கழுவ வைத்துவிட்டது.

32 minutes ago, தமிழ் சிறி said:

சரியாக சொன்னீர்கள். 🙂

விமான மூலம் பருப்பு, அரிசி போட்ட போது இந்திய ஆளுமை தெரியப்படுத்தப்பட்டது.

ஒபரேசன் வடமராட்சி (என்பது சரி என்று நிணைக்கிறேன்.) இராணுவத்தை தடுத்த வகையில் இந்திய ஆளுமை தெரியப்படுத்தப்பட்டது.

பின்னர், ஓயாத அலைகள், வவுனியா அல்லது யாழ்பாணம் என்ற நிலையில், புலிகளை தடுத்த போது இந்திய ஆளுமை தெரியப்படுத்தப்பட்டது.

முள்ளிவாய்காலில் கண்ணையும், காதையும் , வாயையும் முடிக் கொண்டிரு்ததால், இன்று இந்திய ஆளுமை இருந்த தடமேயில்லாமல் போய்விட்டது.

சோனியா குடும்பத்தின், பலி வாங்கும் வெறி, இந்திய நலன்களுக்கு பேராபத்தாக வந்து முடிந்து விட்டது.

இலங்கையினை சாமர்தியமாக கையாழும் தகமையும் அறவே இல்லை என்பதே இந்தியாவின் துரதிருஷ்டம்.

தமிழர்களுக்கோ, இழக்க எதுவே இல்லை, என்பதால் காசி சன்னாசி போல..... அட போங்கப்பா என்று பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கவேண்டியது தான்.

Edited by Nathamuni
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

விமான மூலம் பருப்ப, அரிசி போட்ட போது இந்திய ஆளுமை தெரியப்படுத்தப்பட்டது.

ஒபரேசன் வடமராட்சி என்பது சரி என்று நிணைக்கிறேன். இராணுவத்தை தடுத்த வகையில் இந்திய ஆளுமை தெரியப்படுத்தப்பட்டது.

பின்னர், ஓயாத அலைகள், வவுனியா அ்லது யாழ்பாணம் என்ற நிலையில், புலிகளை தடுத்த போது இந்திய ஆளுமை தெரியப்படுத்தப்பட்டது.

முள்ளிவாய்காலில் கண்ணையும், காதையும் , வாயையும் முடிக் கொண்டிரு்ததால், இன்று இந்திய ஆளுமை இருந்த தடமேயில்லாமல் போய்விட்டது.

சோனியா குடும்பத்தின், பலி வாங்கும் வெறி, இந்திய நலன்களுக்கு பேராபத்தாக வந்து முடிந்து விட்டது.

இலங்கையினை சாமர்தியமாக கையாழும் தகமையும் அறவே இல்லை என்பதே இந்தியாவின் துரதிருஷ்டம்.

தமிழர்களுக்கோ, இழக்க எதுவே இல்லை, என்பதால் காசி சன்னாசி போல..... அட போங்கப்பா என்று பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கவேண்டியது தான்.

ஆனால்… இந்தியர்களின் நினைப்பை பார்க்க சிரிப்பு வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால்… இந்தியர்களின் நினைப்பை பார்க்க சிரிப்பு வருகின்றது.

யூடியூபில் இந்த, ஓய்வு பெற்ற வகையறாக்கள் செய்யும் அலப்பறைகள், வடிவேலு காமெடியிலும் சிரிப்பு வரவழைக்கும்.

இவர்கள் அந்த ஆங்கில சொல்வடையினை நினைவு படுத்துவார்கள்.

அதன் பொழிப்பு: டாக்குத்தர் அய்யா, டாய்லட் போனா, கணக்கு புருக், புரூக் சத்தம் வருகுது, சங்கதி வெளில வருதில்லை.

ஆனால், இந்த சீனாக்காரர்.... கதைச்சு மினக்கடுவதில்லை. action only! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

விமான மூலம் பருப்பு, அரிசி போட்ட போது இந்திய ஆளுமை தெரியப்படுத்தப்பட்டது.

ஒபரேசன் வடமராட்சி (என்பது சரி என்று நிணைக்கிறேன்.) இராணுவத்தை தடுத்த வகையில் இந்திய ஆளுமை தெரியப்படுத்தப்பட்டது.

Operation Poomalai  என்பதுதான் சரி என நினைக்கிறேன. 
 
Operation Poomalai

Operation Poomalai (Pūmālai, lit. "Flower Garland"), also known as Eagle Mission 4, was the codename assigned to a mission undertaken by the Indian Air Force for airdropping supplies over the besieged town of Jaffna in Sri Lanka on 4 June 1987 to support the Tamil Tigers during the Sri Lankan Civil War.

Operation Poomalai
Part of Indian intervention in the Sri Lankan Civil War
Paradropped Supply.jpg
Relief supplies drifting towards Jaffna
Location
Objective
Date June 4, 1987
15:55 – 18:13 (IST)
Executed by 23px-Air_Force_Ensign_of_India.svg.png Indian Air Force
Outcome Success
  • LTTE successfully supplied
  • Second Phase of Operation Liberation halted the same day

Jaffna was then under blockade by Sri Lankan troops as a part of Colombo's offensive against the Tamil separatist movement. Concerned over alleged violations of interests of the Tamils, who had broader support among the Tamil population of South India as well as the government, India attempted to negotiate a political settlement but the Indian offers had been rebuffed by Colombo. As civilian casualties grew,[2][3] calls grew within India to intervene in what was increasingly seen in the Indian (and the Tamil) media as a developing humanitarian crisis, especially with reports of aerial bombardment against rebel positions in civilian areas.[3][4]

The Indian government, under Rajiv Gandhi, decided to attempt to deliver aid to the northern area of Sri Lanka as a symbolic act of support to the rebels. The first of those efforts, a naval flotilla, was intercepted by the Sri Lanka Navy and was ordered to withdraw. Two days later, India mounted the airdrop over Jaffna.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

முள்ளிவாய்காலில் கண்ணையும், காதையும் , வாயையும் முடிக் கொண்டிரு்ததால், இன்று இந்திய ஆளுமை இருந்த தடமேயில்லாமல் போய்விட்டது.

நாதம் இந்தியா எங்கை மூடிக் கொண்டிருந்தது?

கடைசி யுத்தத்தை தடை செய்யப்பட்ட எரிகுண்டுகளைப் பாவித்து

இயலாத நேரத்திலும் ராஜதந்திரமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு போராளிகளையும் பொதுமக்களையும் சரணடையும் நிகழ்ச்சி நிரலையும் நம்பியாரை வைத்து போர் மரபுகளுக்கப்பால் எல்லோரையும் சுட்டு கொன்றது யார்?

இறுதி யத்தத்தில் மனித உரிமையை மீறினவர்கள் பட்டியலில் இலங்கையை விட இந்தியா தான் முதலிடம்.

அதனால்த் தான் சர்வதேச விசாரணையை இந்தியா ஏதோவிதமாக தடுத்து வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கெடுவான், கேடு நினைப்பான்.

3 hours ago, Kapithan said:

Operation Poomalai  என்பதுதான் சரி என நினைக்கிறேன. 
 
Operation Poomalai

Operation Poomalai (Pūmālai, lit. "Flower Garland"), also known as Eagle Mission 4, was the codename assigned to a mission undertaken by the Indian Air Force for airdropping supplies over the besieged town of Jaffna in Sri Lanka on 4 June 1987 to support the Tamil Tigers during the Sri Lankan Civil War.

Operation Poomalai
Part of Indian intervention in the Sri Lankan Civil War
Paradropped Supply.jpg
Relief supplies drifting towards Jaffna
Location
Objective
Date June 4, 1987
15:55 – 18:13 (IST)
Executed by 23px-Air_Force_Ensign_of_India.svg.png Indian Air Force
Outcome Success
  • LTTE successfully supplied
  • Second Phase of Operation Liberation halted the same day

Jaffna was then under blockade by Sri Lankan troops as a part of Colombo's offensive against the Tamil separatist movement. Concerned over alleged violations of interests of the Tamils, who had broader support among the Tamil population of South India as well as the government, India attempted to negotiate a political settlement but the Indian offers had been rebuffed by Colombo. As civilian casualties grew,[2][3] calls grew within India to intervene in what was increasingly seen in the Indian (and the Tamil) media as a developing humanitarian crisis, especially with reports of aerial bombardment against rebel positions in civilian areas.[3][4]

The Indian government, under Rajiv Gandhi, decided to attempt to deliver aid to the northern area of Sri Lanka as a symbolic act of support to the rebels. The first of those efforts, a naval flotilla, was intercepted by the Sri Lanka Navy and was ordered to withdraw. Two days later, India mounted the airdrop over Jaffna.

அது, operation poomaalai அரிசி பருப்பு இறக்கினது.

ஓப்பரேசன் வடமராட்சியின் போது, இராணுவம், ஜேஆர் காலத்தில் கிளம்பி வர இந்தியா தடுத்தது.

பின்னர், சந்திரிகா காலத்தில், யாழ் வீழ்ந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

கெடுவான், கேடு நினைப்பான்.

அது, operation poomaalai அரிசி பருப்பு இறக்கினது.

ஓப்பரேசன் வடமராட்சியின் போது, இராணுவம், ஜேஆர் காலத்தில் கிளம்பி வர இந்தியா தடுத்தது.

பின்னர், சந்திரிகா காலத்தில், யாழ் வீழ்ந்தது.

அதைக் கொஞ்சம் விரிவாகக் கூறுங்கள். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kapithan said:

அதைக் கொஞ்சம் விரிவாகக் கூறுங்கள். 🙏

https://en.m.wikipedia.org/wiki/Vadamarachchi_Operation

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதைக் கொஞ்சம் விரிவாகக் கூறுங்கள். 🙏

நான் கேள்விப்பட்ட வகையில் 1987 ஆம் ஆண்டு அப்போது வடமாராட்சி தங்கியிருந்த தலைவரை இலக்காகக்கொண்டு இலங்கை இராணுவத்தினர் விடுதலை நடவடிக்கை (Operation liberation) என்னும் இராணுவ நடவடிக்கை ஒன்றினை  மேற்கொள்ள தயாராக இருந்தனர்,

இந்த திட்டத்தினை அறிந்து கொண்ட அல்லது தெரியாமலேயோ ( சிங்களம் வேண்டும் என்றே தவறான தகவலை கசிய விட்டிருக்கலாம்) இந்திய  றோ உளவு அமைப்பு இலங்கை இராணுவம் யாழ்நகரை கைப்பற்ற வலிகாமம் மீது தாக்குதல் மேற்கொள்ள உள்ளதாக புலிகளிடம் தகவல் தெரிவித்திருந்தது.

புலிகள் தமது படைகளை வலிகாமம்  நோக்கி திருப்பியிருந்த வேளையில் வடமராட்சியில் இராணுவத்தால் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கேள்விப்பட்டேன், இந்த தாக்குதலை டென்சில் கொப்பே கடுவ எனும் சிங்கள இராணுவத்தளபதி மேற்கொண்டாராம்.

இராணுவம் முழுமையாக வடமாராட்சியினை கைப்பற்றிய பின்னர் இந்திய விமானம் மூலம் வடமாராட்சியில் உணவு பொதி போடப்பட்டது (தரமற்ற உணவுப்பொருள்கள் என கேள்விப்பட்டேன்).

அதன் பின்னர் நெல்லியடி முகாம் கருபுலிதாக்க்குதலில் அழிப்பு, அதனை தொடர்ந்து இந்திய இலங்கை ஒப்பந்தம் நிகழ்ந்தேறியதாக கேள்விப்பட்டேன்.

தரவுகள் தவறாக இருக்கலாம்.

Edited by vasee
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.