Jump to content

ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி : இராணுவ வீரரான புவிதரன் கோலூன்றிப் பாய்தலில் சாதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி : இராணுவ வீரரான புவிதரன் கோலூன்றிப் பாய்தலில் சாதனை

By T YUWARAJ

18 SEP, 2022 | 10:18 PM
image

 

 

(நெவில் அன்தனி)

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இராணுவ வீரர் ஏ. புவிதரன் 5.15 உயரம் தாவி  புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார்.

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றுக்கான திறன்காண் மெய்வல்லுநர் போட்டியிலேயே சாவகச்சேரி இந்து கல்லூரியின் முன்னாள் பழைய மாணவன் புவிதரன் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

விமானப்படை வீரர் இஷார சந்தருவன் 2017ஆம் ஆண்டு நிலைநாட்டிய 5.11 மீற்றர் என்ற முந்தைய தேசிய சாதனையை புவிதரன் 0.04 சென்றிமீற்றர்களால் முறிடியத்து தேசிய சாதனையைப் புதுப்பித்தார்.

இந்தப் போட்டியில் இராணுவத்தைச் சேர்ந்த ஈ. ஜனித் 4.90 மீற்றர் உயரம் தாவி இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன் சந்தருவனினால் 4.80 மீற்றர் உயரத்தையே தாவ முடிந்தது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் போட்டியில் 5.00 மீற்றர் உயரம் தாவி சந்தருவனுக்கு சொந்தமாகவிருந்த 4.70 மீற்றர் என்ற கனிஷ்ட தேசிய சாதனையை புவிதரன் முறியடித்திருந்தார்.

அதே போட்டியில் சந்தருவனின் தேசிய சாதனையான 5.11 மீற்றர் உயரத்தை முறியடிக்க புவிதரன் எடுத்த முயற்சி கைகூடாமல் போனது.

எனினும் இம்முறை அந்த சாதனையை முறியடித்ததையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாக புவிதரன் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/135908

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.