Jump to content

இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு

34 நிமிடங்களுக்கு முன்னர்
காணொளிக் குறிப்பு,

கூந்தலை வெட்டி, ஹிஜாபை கொளுத்தி போராடும் முஸ்லிம் பெண்கள்

ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் இரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஓர் 22 வயது இளம் பெண்ணின் மரணம் அந்நாட்டில் கடுமையான போராட்டங்களைத் தூண்டியுள்ளது.

மாசா அமினி என்ற 22 வயது இரானிய பெண், இஸ்லாமிய அடிப்படைவாத காவல் குழுவால் கைது செய்யப்பட்டார். இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத அமலாக்கக் காவல்துறை என்று புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய மத நெறிமுறகளை மீறினால் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அப்படித்தான், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாசா அமினியும் கைது செய்யப்பட்டார்.

ஹிஜாப் குறித்து அவர் அளித்த விளக்கங்களுக்காகவும் கருத்துகளுக்காகவும் அவர் கைது செய்யபட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாசா இறந்தார். அவருக்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டு இறந்ததாகக் டெஹ்ரான் காவல்துறை தெரிவித்தது.

ஆனால், மாசாவின் பெற்றோர் இதை மறுக்கின்றனர். தங்கள் மகள் ஆரோக்கியமாக இருந்ததாகவும் இதுவரை அப்படி எந்த கோளாறும் அவருக்கு ஏற்பட்டதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேசிய மாசாவின் தந்தை "என் மகளின் உடநிலை குறித்து காவல்துறை சொல்லும் கருத்துகளை நான் தனிப்பட்ட முறையில் மறுக்கிறேன்" என்று சீர்திருத்தங்களுக்கு ஆதரவான எம்தெதாத் எனும் ஊடகத்திடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

 

மாசா அமினி

பட மூலாதாரம்,MAHSA AMINI FAMILY

 

படக்குறிப்பு,

மாசா அமினி

அதேபோல, மாசா கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்படும்போதே அவரை காவல்துறையினர் அடித்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.

கூந்தல் முழுமையாக மறையும்படி ஹிஜாப் அணியாததாக் கூறி கைது செய்யப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இறக்கும் முன்பு கோமா நிலையில் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த நிலையில்தான், இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக தங்கள் கூந்தலை கத்தரித்துக் கொண்டும், ஹிஜாபை எரித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் இரானிய பெண்கள்.

 

வீடியோ வெளியிடும் இரானிய பெண்கள்

பட மூலாதாரம்,WANA NEWS AGENCY

ட்விட்டரில் மாசா அமினி என்ற ஹேஷ்டேகின் கீழ் தங்கள் கண்டனத்தை கருத்துகளாகவும், வீடியோவாகவும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, "லாக்கப் மரணம்" என்று இதைக் குற்றம்சாட்டும் சிலர், "காவல்துறையே கொலை செய்தால் யாரை அழைப்பீர்கள்" என்று புகைப்படங்களை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

கட்டாய ஹிஜாப் முறைதான் இதற்குக் காரணம் என்று குறிப்பிடும் சிலர், 'இந்த பாலினப் பாகுபாடு காட்டும் ஆட்சியாளர்களால்' தாங்கள் சலிப்படைந்து விட்டதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Twitterவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Twitter பதிவின் முடிவு, 2

அதுமட்டுமன்றி இந்த விவாகரத்தில் இரானிய அதி உயர் தலைவர் அலி காமனெயி மீதும் சிலர் நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

குர்து இனத்தைச் சேர்ந்தவரான மாசா அமினியின் இறுதிச்சடங்கில் கூடிய இரானிய குர்திஸ்தான் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அங்கு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திலும் இரானிய காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதையடுத்து, "இதுதான் உண்மையான இரான்" என்றும், "கட்டாய ஹிஜாப் மற்றும் இந்த அடிப்படைவாத காவல் குழுவை ஏற்றுக்கொள்ளாதீர்கள்" என்றும் இரானிய ஊடகவியலாளர் மாசி அலிககாட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இறுதிச் சடங்கில் நடந்த போராட்டத்தின்போது, 'சர்வாதிகாரிக்கு சாவு' என்று பொருள்படும் விதமாக 'டெத் டூ டிக்டேட்டர்' என்று அதி உயர் தலைவர் அலி காமனெயியைக் குறிப்பிட்டு முழக்கங்களை எழுப்பியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. அப்போதும் ஒரு சிலர் தங்கள் ஹிஜாபைக் கழற்றினர்.

 

அலி காமனெயி

பட மூலாதாரம்,REUTERS

மேலும் இந்த அடிப்படைவாத அமலாக்க காவல்துறை குறித்து பேசிய, காமனெயியின் பழைய உரைகளின் பகுதிகள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரப்பப்படுகின்றன. அந்த வீடியோவில் "இஸ்லாமிய அரசின் கீழ் பெண்கள் அனைவரும் இஸ்லாமிய உடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதை உறுதி செய்வதே இந்த காவல் குழுவின் வேலை" என்று அவர் பேசியுள்ளார்.

ஹிஜாப் உள்ளிட்ட மத விவகாரங்களுக்காக நடைபெறும் கைது சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாசா அமினியின் மரணம் இந்த விவாகரத்தை போராட்டமாக மாற்றியுள்ளது.

முன்னதாக, இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், மாசா அமினி தாக்கபட்டதாக எந்த அறிக்கைகளும் இல்லை என்றும் இரான் உள்துறை அமைச்சர் அப்டொல்ரா ரஹ்மானி ஃபஸ்லி அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார்.

இரானில் சுமார் 8 முதல் 10 லட்சம் குர்து இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீது நீண்டகாலமாகவே தாக்குதல் நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடிப்படைவாத ஆட்சியாளர்களுக்கும் நாட்டின் பெரும்பகுதி இளம் கூட்டத்துக்கும் இடையிலான போராட்டமாக இது மாறியுள்ளது.

இதுதொடர்பாக இரானிய ஊடகவியலாளர் மாசி அலிககாட், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. https://www.bbc.com/tamil/global-62964959

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன்பு முஸ்லிம் மதபாதுகாப்பு பொலிசினால் நடந்த இந்த ஹிஜாப் கொடுமை தமிழில் செய்திகள் வரவில்லையோ வந்தால் நீங்களோ, சிறி அண்ணாவோ யாழ்களத்தில் போடுவீர்களே என்று பார்த்து கொண்டிருந்தேன். நன்றி

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரானில் ஹிஜாப்பை தீயிட்டுக் கொளுத்தும் பெண்கள் - என்ன நடக்கிறது?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

போராட்ட காட்சி

பட மூலாதாரம்,TWITTER

இரானில் ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைதுசெய்யப்பட்ட இளம்பெண் மாசா அமினி, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

ஐந்தாவது நாளாக தொடரும் இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளுக்குப் பரவிவரும் நிலையில், சரி நகரில் நடந்த போரட்டத்தில் பெண்கள் தங்களுடைய ஹிஜாப்பைத் தீயிட்டுக் கொழுத்தினர். அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் அதனை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

வட மேற்குப்பகுதியான உர்மியா, பிரன்ஷாஹர் மற்றும் கெர்மன்ஷாவில் நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக செயற்பாட்டாளாகள் தெரிவிக்கின்றனர்.

கெர்மன்ஷாவில் இரண்டு குடிமக்களையும், ஷிராஸில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் உதவியாளர் ஒருவரையும் போராட்டக்காரர்கள் கொன்றுவிட்டதாக அதிகாரிகள் குற்ற்ம்சாட்டுகின்றனர்.

 

மாசா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் சட்டம் மற்றும் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறை காவல்துறையினருக்கு எதிராக நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமேற்கு நகரமான சாகேஸ் பகுதியைச் சேர்ந்த 22 வயதான குர்து இன பெண், மாசா அமினி, மூன்று நாள் கோமா நிலையில் அவதியுற்ற பின்பு, கடந்த வெள்ளியன்று உயிரிழந்தார்.

ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக போராட்டம்

 

உயிரிழந்த மாசா அமினி

பட மூலாதாரம்,MAHSA AMINI FAMILY

 

படக்குறிப்பு,

உயிரிழந்த மாசா அமினி

டெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது, தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக மாசா அமினி, ஹிஜாப் ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த அவர், மயங்கி விழுந்த சில நிமிடங்களிலேயே கோமா நிலைக்குச் சென்றார்.

அமினியின் தலையில் காவல்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும், காவல்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மாசா அமினியின் இந்தத் துயர மரணமும், அவர் சித்ரவதை படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் சுயாதீன மற்றும் உகந்த அதிகாரம் கொண்ட நிறுவனத்தால் பாரபட்சமின்றி துரிதமாக விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கூறும் நஷிப், அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார்.

ஹிஜாப் சட்டங்களை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக கடந்த சில மாதங்களாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினர் தங்களது ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தியிருத்த நிலையில், பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான உறுதிசெய்யப்பட்ட பல காணொளிகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு நடவடிக்கை - விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள்

 

ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்கள்

பட மூலாதாரம்,AFP

ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறும் நடா அல்-நஷிப், இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்.

இரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் உதவியாளர் அமினியின் குடும்பத்தை திங்கட்கிழமை சந்தித்து, மீறப்பட்ட உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்படை இரானுக்கு இழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக மூத்த எம்.பி ஜலால் ரஷிதி கூச்சி வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் தேவையற்ற மற்றும் அளவுக்கதிகமான காவல்துறையினர் பயன்படுத்தப்பட்டு வருவதாக நடா அல்-நஷிப் எச்சரிக்கிறார்.

மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பிரன்ஷாஹர் மற்றும் உர்மியா பகுதியில் செவ்வாய் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவனும் 23 வயது இளைஞரும் கொல்லப்பட்டதாக ஹெங்காவ் அமைப்பு தெரிவிக்கிறது. நார்வேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, இரானின் குர்து இன பகுதியில் மனித உரிமைகளை கண்காணித்து வருகிறது. மேலும், அண்டை மாகாணமான கெர்மன்ஷாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணை சுட்டு கொன்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

இந்தப் போராட்டமானது 15 நகரங்களில் நடந்து வருவதாக இரான் தெரிவிக்கிறது. வீதிகளை முடக்கியுள்ளவர்கள், கல்லெறியில் ஈடுபடுவர்கள், காவல்துறையினரின் வாகனங்களுக்குத் தீ வைப்பவர்களுக்கு எதிராக கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்துவதாகவும், கைது நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இரான் அரசு தெரிவித்துள்ளது.

ஹிஜாபை எதிர்க்கும் பெண்கள்

 

செய்திகள்

பட மூலாதாரம்,WANA NEWS AGENCY

தலைநகரில் நடந்த போராட்ட காணொளியில் பெண் ஒருவர் தன்னுடைய ஹிஜாப்பை கழட்டிவிட்டு 'சர்வாதிகாரி ஒழியட்டும்' எனக் கூச்சலிடுகிறார். இது இரானின் அதிவுயர் தலைவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படும் முழக்கமாகும். அந்தக் காணொளியில் மற்றவர்கள் நீதி, சுதந்திரம், கட்டாய ஹிஜாப் வேண்டாம் என கத்தினர்.

ராஷ்ட் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர், தன்னை காவல்துறையினர் தடிகள் மற்றும் குழாய்களைக் கொண்டு தாக்கியதாக குற்றம்சாட்டி, காயமுற்ற புகைப்படங்களை பிபிசி பாரசீக மொழி சேவையிடம் பகிர்ந்து கொண்டார்.

காவல்துறையினர் தொடர்ந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால், கண்ணெரிச்சல் ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். "நாங்கள் அங்கிருந்து ஓடினோம். ஆனாலும், அவர்களை என்னைக் குறிவைத்து தாக்கினர். என்னுடய உடலை விற்பதற்காக பொதுவெளியில் நிற்பதாகவும், என்னை விபச்சாரி என்றும் காவல்துறையினர் கூறினர்" என்கிறார் அவர்.

இஸ்பஹானில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்த பெண் ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, "ஹிஜாப்பை கழற்றி அசைத்த தருணத்தில், ஆண்களால் சூழப்பட்டு தான் பாதுகாக்கப்பட்டதைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். இந்த ஒற்றுமையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்த அவர், உலக மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த தெளிவான திட்டமிடலுடன் நடந்துவருவதாக டெஹ்ரான் ஆளுநர் மொஹ்சென் மன்சூரி கடந்த செவ்வாயன்று ட்வீட் செய்திருந்தார். அதேபோல, குர்து இன பிரிவினைவாதிகளாலும் அரசை விமர்சிப்பவர்களாலும் அமினியின் மரணம் சாக்குப்போக்காக பயன்படுத்தப்படுவதாக அரசு தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது.

என்ன சொல்கிறது ரானின் ஹிஜாப் சட்டம்?

1979 இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு, இரானில் ஹிஜாப் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பெண்கள் தலையை முழுமையாக மறைக்கும் வகையிலான ஹிஜாப்பையும், முழு உடலை மறைக்கும் வகையிலான தளர்வான ஆடையையும் கட்டாயம் அணிய வேண்டும்.

இதனை உறுதிசெய்வதற்காக காஷ்ட்-இ எர்ஷாத் என்றழைக்கப்படும் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்படை உருவாக்கப்பட்டது. பெண்களை பொதுவெளியில் நிறுத்தி தலைமுடி தெரியும்படி ஹிஜாப் அணிந்திருக்கிறாரா? அணிந்திருக்கும் உடை குட்டையாக உள்ளதா? இறுக்கமான உடை அணிந்திருக்கிறாரா? எனச் சோதனையிட அனைத்து அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல், விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக அபராதம், கைது, கசையடி உள்ளிட்டவற்றை வழங்கவும் அதிகாரம் உண்டு.

2014ஆம் ஆண்டு இரானியப் பெண்கள் ஹிஜாப் சட்டத்தை மீறி "என் திருட்டுத்தனமான சுதந்திரம்" என்ற பெயரில் தங்களுடைய புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்து இணையதள பிரசாரத்தை மேற்கொண்டனர். இது 'வெள்ளை புதன்கிழமைகள்', 'புரட்சித் தெரு பெண்கள்' போன்ற இயக்கங்களுக்கும் உத்வேகம் அளித்தது.

https://www.bbc.com/tamil/global-62983959

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாசா அமினி மரணம்: இரான் போலீஸோடு மோதும் போராட்டக்காரர்கள்

21 செப்டெம்பர் 2022
புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்
 

இரானில் வன்முறை

பட மூலாதாரம்,EPA

இரானின் தலைநகர் டெஹ்ரானில் அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக அமைதியின்மையாக இது பார்க்கப்படுகிறது.

தன்னுடைய பக்கத்து வளாகம் போர்க்களம் போல கட்சியளித்ததாக ஒருவர் பிபிசி பாரசீக மொழி பிரிவிடம் தெரிவித்தார்.

ஏழாவது நாளாக தொடரும் இந்த போராட்டங்கள் 80 பெருநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு பரவியுள்ளன.

31 பொது மக்கள் உயிரிழந்திருப்பதாக மனித உரிமை குழு ஒன்று தெரிவிக்கும் நிலையில், இந்த எண்ணிக்கையை 17 என கூறுகிறது அரசு தொலைக்காட்சி.

 

ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட மாசா அமினி என்ற பெண் போலீஸ் காவலில் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த அமைதியின்மை தோன்றியது.

வட மேற்கிலுள்ள சாகேஸ் நகரை சேர்ந்த 22 வயதான குர்து இன பெண்ணான மாசா அமினி, 3 நாட்கள் கோமா நிலையில் துன்பப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக போராட்டம்

 

உயிரிழந்த மாசா அமினி

பட மூலாதாரம்,MAHSA AMINI FAMILY

 

படக்குறிப்பு,

உயிரிழந்த மாசா அமினி

இரானில் ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட இளம்பெண் மாசா அமினி, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

டெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது, தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக மாசா அமினி, ஹிஜாப் ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த அவர், மயங்கி விழுந்த சில நிமிடங்களிலேயே கோமா நிலைக்குச் சென்றார்.

அமினியின் தலையில் காவல்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும், காவல்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

போராட்ட காட்சி

பட மூலாதாரம்,TWITTER

மாசா அமினியின் இந்தத் துயர மரணமும், அவர் சித்ரவதை படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் சுயாதீன மற்றும் உகந்த அதிகாரம் கொண்ட நிறுவனத்தால் பாரபட்சமின்றி துரிதமாக விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கூறும் நஷிப், அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார்.

ஹிஜாப் சட்டங்களை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக கடந்த சில மாதங்களாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினர் தங்களது ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தியிருத்த நிலையில், பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான உறுதிசெய்யப்பட்ட பல காணொளிகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு நடவடிக்கை - விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள்

 

ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்கள்

பட மூலாதாரம்,AFP

ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறும் நடா அல்-நஷிப், இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்.

முன்னதாக, இரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் உதவியாளர், அமினியின் குடும்பத்தை திங்கட்கிழமை சந்தித்து, மீறப்பட்ட உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்படை இரானுக்கு இழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக மூத்த எம்.பி ஜலால் ரஷிதி கூச்சி வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் தேவையற்ற மற்றும் அளவுக்கதிகமான காவல்துறையினர் பயன்படுத்தப்பட்டு வருவதாக நடா அல்-நஷிப் எச்சரிக்கிறார்.

மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பிரன்ஷாஹர் மற்றும் உர்மியா பகுதியில் செவ்வாய் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவனும் 23 வயது இளைஞரும் கொல்லப்பட்டதாக ஹெங்காவ் அமைப்பு தெரிவிக்கிறது. நார்வேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, இரானின் குர்து இன பகுதியில் மனித உரிமைகளை கண்காணித்து வருகிறது. மேலும், அண்டை மாகாணமான கெர்மன்ஷாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணை சுட்டு கொன்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

இந்தப் போராட்டமானது 15 நகரங்களில் நடந்து வருவதாக இரான் தெரிவிக்கிறது. வீதிகளை முடக்கியுள்ளவர்கள், கல்லெறியில் ஈடுபடுவர்கள், காவல்துறையினரின் வாகனங்களுக்குத் தீ வைப்பவர்களுக்கு எதிராக கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்துவதாகவும், கைது நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இரான் அரசு தெரிவித்துள்ளது.

ஹிஜாபை எதிர்க்கும் பெண்கள்

 

செய்திகள்

பட மூலாதாரம்,WANA NEWS AGENCY

தலைநகரில் நடந்த போராட்ட காணொளியில் பெண் ஒருவர் தன்னுடைய ஹிஜாப்பை கழட்டிவிட்டு 'சர்வாதிகாரி ஒழியட்டும்' எனக் கூச்சலிடுகிறார். இது இரானின் அதிவுயர் தலைவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படும் முழக்கமாகும். அந்தக் காணொளியில் மற்றவர்கள் நீதி, சுதந்திரம், கட்டாய ஹிஜாப் வேண்டாம் என கத்தினர்.

ராஷ்ட் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர், தன்னை காவல்துறையினர் தடிகள் மற்றும் குழாய்களைக் கொண்டு தாக்கியதாக குற்றம்சாட்டி, காயமுற்ற புகைப்படங்களை பிபிசி பாரசீக மொழி சேவையிடம் பகிர்ந்து கொண்டார்.

காவல்துறையினர் தொடர்ந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால், கண்ணெரிச்சல் ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். "நாங்கள் அங்கிருந்து ஓடினோம். ஆனாலும், அவர்களை என்னைக் குறிவைத்து தாக்கினர். என்னுடய உடலை விற்பதற்காக பொதுவெளியில் நிற்பதாகவும், என்னை விபச்சாரி என்றும் காவல்துறையினர் கூறினர்" என்கிறார் அவர்.

இஸ்பஹானில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்த பெண் ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, "ஹிஜாப்பை கழற்றி அசைத்த தருணத்தில், ஆண்களால் சூழப்பட்டு தான் பாதுகாக்கப்பட்டதைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். இந்த ஒற்றுமையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்த அவர், உலக மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த தெளிவான திட்டமிடலுடன் நடந்துவருவதாக டெஹ்ரான் ஆளுநர் மொஹ்சென் மன்சூரி கடந்த செவ்வாயன்று ட்வீட் செய்திருந்தார். அதேபோல, குர்து இன பிரிவினைவாதிகளாலும் அரசை விமர்சிப்பவர்களாலும் அமினியின் மரணம் சாக்குப்போக்காக பயன்படுத்தப்படுவதாக அரசு தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது.

என்ன சொல்கிறது ரானின் ஹிஜாப் சட்டம்?

1979 இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு, இரானில் ஹிஜாப் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பெண்கள் தலையை முழுமையாக மறைக்கும் வகையிலான ஹிஜாப்பையும், முழு உடலை மறைக்கும் வகையிலான தளர்வான ஆடையையும் கட்டாயம் அணிய வேண்டும்.

இதனை உறுதிசெய்வதற்காக காஷ்ட்-இ எர்ஷாத் என்றழைக்கப்படும் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்படை உருவாக்கப்பட்டது. பெண்களை பொதுவெளியில் நிறுத்தி தலைமுடி தெரியும்படி ஹிஜாப் அணிந்திருக்கிறாரா? அணிந்திருக்கும் உடை குட்டையாக உள்ளதா? இறுக்கமான உடை அணிந்திருக்கிறாரா? எனச் சோதனையிட அனைத்து அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல், விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக அபராதம், கைது, கசையடி உள்ளிட்டவற்றை வழங்கவும் அதிகாரம் உண்டு.

2014ஆம் ஆண்டு இரானியப் பெண்கள் ஹிஜாப் சட்டத்தை மீறி "என் திருட்டுத்தனமான சுதந்திரம்" என்ற பெயரில் தங்களுடைய புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்து இணையதள பிரசாரத்தை மேற்கொண்டனர். இது 'வெள்ளை புதன்கிழமைகள்', 'புரட்சித் தெரு பெண்கள்' போன்ற இயக்கங்களுக்கும் உத்வேகம் அளித்தது.

https://www.bbc.com/tamil/global-62983959

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரான் ஹிஜாப் எரிப்பு போராட்டம்: "என் மகளை பார்க்க விரும்பினேன். ஆனால் அவர்கள் விடவில்லை" - மாசா அமினி தந்தை பேட்டி

7 மணி நேரங்களுக்கு முன்னர்
காணொளிக் குறிப்பு,

கூந்தலை வெட்டி, ஹிஜாபை கொளுத்தி போராடும் முஸ்லிம் பெண்கள்

"என் மகள் மரணத்தில் அதிகாரிகள் சொல்வது பொய்". இரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எரிப்பு போராட்டங்களுக்கு வித்திட்ட மாணவி மாசா அமினியின் மரணம் குறித்து அவரது தந்தை அம்ஜத் அமினி வைக்கும் குற்றச்சாட்டு இது.

பிபிசி பாரசீக சேவையிடம் பேசிய அவர், தன் மகளது உடற்கூராய்வு அறிக்கையைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்பதுடன் தன் மகளுக்கு உடல்நிலை மோசமாக இருந்தது என்பதையும் மறுக்கிறார்.

மேலும், காவலில் வைக்கப்பட்ட மாசா தாக்கப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தன் குடும்பத்திடம் தெரிவிப்பதாகவும் தந்தை கூறினார். ஆனால், இரான் அதிகாரிகள் இதை மறுக்கின்றனர்.

ஹிஜாப் அணிவதற்கான விதிகளை மீறியதற்காக, இரான் இஸ்லாமிய அடிப்படைவாத அமலாக்க காவல்துறையால் மாசா கைது செய்யப்பட்டார்.

 
 

மாசா அமினி

பட மூலாதாரம்,MAHSA AMINI FAMILY

 

படக்குறிப்பு,

மாசா அமினி

வடமேற்கு நகரமான சாகேஸ் பகுதியில் வசிக்கும் குர்து இனத்தைச் சேர்ந்த இளம்பெண்னான மாசா, வெள்ளிக்கிழமை டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் கோமா நிலையை எய்தி மூன்று நாட்களுக்குப் பின் இறந்தார்.

 

சிவப்புக் கோடு

அடிப்படைவாத அமலாக்க காவல்துறை என்றால் என்ன?

இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத நடைமுறைகளை அமல்படுத்தும் காவல் பிரிவு என்று புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய மத நெறிமுறகளை மீறினால் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அப்படித்தான், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாசா அமினியும் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த அடிப்படைவாத அமலாக்க காவல்துறை குறித்து பேசிய, இரான் அதி உயர் தலைவர் அலி காமனெயியின் பழைய உரைகளின் பகுதிகள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரப்பப்படுகின்றன. அந்த வீடியோவில் "இஸ்லாமிய அரசின் கீழ் பெண்கள் அனைவரும் இஸ்லாமிய உடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதை உறுதி செய்வதே இந்த காவல் குழுவின் வேலை" என்று அவர் பேசியுள்ளார்.

 

சிவப்புக் கோடு

முறையற்ற உடை

மாசா அமினி துன்புறுத்தப்படவில்லை. ஆனால், அவருக்கு திடீரென இதயக் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் அடிப்படைவாத அமலாக்க காவல்துறையால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று இரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், கைது செய்யப்படும்போது மாசா தாக்கப்பட்டார் என்று, சம்பவத்தின்போது உடனிருந்த மாசாவின் தம்பி கியாராஷ் தெரிவிக்கிறார்.

என் மகன் அவளோடுதான் இருந்தான். சில சாட்சியங்கள் அவள் கைது செய்யப்படும்போதும், வேனிலும் பின் காவலில் இருந்தபோதும் தாக்கப்பட்டாதாக தெரிவிக்கின்றன " என்கிறார் தந்தை அம்ஜத் அமினி.

"என் மகளை கைது செய்யவேண்டாம் என்று என் மகன் கெஞ்சியுள்ளான். ஆனால், அவனும் தாக்கப்பட்டான். அவனது உடைகள் கிழிக்கப்பட்டன". அவர்களது உடையில் இருக்கும் கேமரா பதிவுகளைக் காட்டும்படி நான் கேட்டேன். ஆனால், கேமராக்களில் பேட்டரி தீர்ந்துவிட்டது என்று அவர்கள் சொன்னார்கள்."

கைது செய்யப்படும் வேளையில், மாசா 'முறையற்ற உடை' அணிந்திருந்ததாக இரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், எப்படியானலும் ஒரு நீளமான மேலங்கியை எப்போதும் அணிவார் என்று தந்தை கூறுகிறார்.

"நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்"

இறந்த பிறகும் தன் மகளைப் பார்க்கவிடாமல் தான் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டதாக தந்தை கூறுகிறார்.

"நான் என் மகளைப் பார்க்க விரும்பினேன். ஆனால், என்னை உள்ளே விடவில்லை. நான் என் மகளின் உடற்கூராய்வு அறிக்கையை பார்க்க வேண்டும் என்று கேட்டேன், ஆனால், நான் என்ன வேண்டுமானலும் எழுதுவேன். அதில், நீங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை" என்று மருத்துவர் சொன்னதாகவும் அம்ஜத் தெரிவிக்கிறார்.

 

டெஹ்ரானில் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

டெஹ்ரானில் போராட்டம்

குடும்பத்தினருக்கு உடற்கூராய்வு அறிக்கை குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இறுதிச் சடங்குக்காக பொட்டலம் கட்டி தரப்பட்ட தன் மகளின் உடலை மட்டுமே அவர் பார்த்தார். வெறும் பாதமும் முகமும் மட்டுமே அதில் தெரிந்தன.

"அவளது காலில் கன்றிப்போன தடயங்கள் இருந்தன. பாதங்களை சோதனை செய்யுங்கள் என்று நான் கேட்டேன்." சோதனை செய்வதாக அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தனர். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. "அப்போது என்னை தவிர்த்தனர். இப்போது பொய் சொல்கின்றனர்"

முன்னதாக, டெஹ்ரான் காவல்துறையின் தடயவியல் மருத்துவப்பிரிவின் தலைமை இயக்குநர் மேடி ஃபரூசேஷ் வெளியிட்ட அறிக்கையில், "தலை, முகத்தில் எந்த அறிகுறிகளும் இல்லை. கண்ணைச்சுற்றி கன்றிப்போன தடயங்களும் இல்லை. மண்டை ஓட்டில் முறிவுகளும் ஏதுமில்லை என்பது ஆய்வில் அறியப்பட்டது" என்று தெரிவித்திருந்தார்.

வேறெந்த உள்காயங்களும் கூட இல்லை என்று அதிகாரிகளும் தெரிவித்தனர்.

உடல்நலக் குறைவா?

மாசாவின் மரணத்துக்கு அவரது உடல்நலக்கோளாறுகள் காரணம் என்ற குற்றச்சாட்டின் மீது தந்தை அம்ஜத்துக்கு முரண்பாடு உண்டு. அவர் அதை விமர்சிக்கிறார்.

8 வயதில் மாசாவுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்று டெஹ்ரான் காவல்துறையின் தடயவியல் மருத்துவப்பிரிவின் தலைமை இயக்குநர் தெரிவித்திருந்தார். ஆனா, "அது பொய்" என்கிறார் தந்தை அம்ஜத்.

"சளி தொடர்பாக மருத்துவமனை சென்றதைத் தவிர, கடந்த 22 ஆண்டுகளாக அவள் எந்த கோளாறுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. அவளுக்கு எந்த மருத்துவக் கோளாறும் இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் நடைபெறவில்லை" என்கிறார் அம்ஜத்.

 

மாசாவுக்கு நியாயம் வேண்டி ஜெர்மனியில் போராட்டம்

பட மூலாதாரம்,EPA

 

படக்குறிப்பு,

மாசாவுக்கு நியாயம் வேண்டி ஜெர்மனியில் போராட்டம்

மாசாவின் வகுப்பு நண்பர்கள் இருவரிடம் பிபிசி பேசியது. அப்போது "அவள் உடல்நலக் கோளாறு காரணமாக இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தங்களுக்கு தெரியவில்லை" என்றனர்.

அதேபோல, மாசாவின் உடல்நிலை குறித்த ஒன்னொரு கூற்றையும் அம்ஜத் மறுக்கிறார். அண்மையில் ஒரு கடையில் வேலை செய்து வந்தபோது மாசா அடிக்கடி மயங்கி விழுவார் என்ற அந்தக் கூற்றை 'பொய்யானது' என்று மறுக்கிறார் அவர்.

குடும்பம் என்ன செய்கிறது?

பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை அடுத்த வாரம் தொடங்கவிருந்தார் மாசா என்கிறது மாசாவின் குடும்பம். அதற்கு முன்பாக விடுமுறை நாளைக் கழிக்கவே டெஹ்ரானுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

"அவள் நுண்ணுயிரியல் படிக்க விரும்பினாள். மருத்துவராக வர வேண்டும் என்பது அவள் கனவு. அவளது தாய் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். எங்களுக்கு அவள் நினைவாகவே இருக்கிறது."

எல்லாவற்றுக்கும் மேலாக, "அவள் இருந்திருந்தால் நேற்று (செப்டம்பர் 22) அவளது 23 ஆவது பிறந்தநாளாக இருந்திருக்கும்" என்று தெரிவித்தது மாசாவின் குடும்பம். https://www.bbc.com/tamil/global-63004213

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளர் ; பேட்டி அளிக்க மறுத்த ஈரான் ஜனாதிபதி

By T. SARANYA

23 SEP, 2022 | 08:39 PM
image

ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளருக்கு பேட்டி அளிக்க மறுத்த ஈரான் ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஈரானில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த 13 ஆம் திகதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை பொலிஸார் மாஷா அமினி மற்றும் அவது குடும்பத்தினரை இடைமறித்துள்ளனர்.

மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி அவரை பொலிஸார் கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர். மாஷா அமினி தனது தலைபகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். 

பொலிஸார் தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா அமினியை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர். 

கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் கடந்த 17 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸார் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் பெரும் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால், மாஷா மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்ததாக ஈரான் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸார் தாக்கியதில் இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஈரானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. 

பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்க பொலிஸார் எடுத்த நடவடிக்கையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

மேலும், பெண்களின் இந்த போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக ஈரானில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஐ.நா. பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அமெரிக்கா வந்துள்ள ஈரான் ஜனாதிபதி ரைசியிடம் பேட்டி எடுக்க அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் திட்டமிட்டிருந்தது. 

ஈரான் அதிபரிடம் சிஎன்என் செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் கிறிஸ்டினா அமன்புர் பேட்டி எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், பேட்டி எடுக்க வேண்டுமானால் செய்தியாளர் கிறிஸ்டினா ஹிஜாப் அணிய வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ரைசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் இங்கு ஹிஜாப் சட்டமில்லை என்றும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கிறிஸ்டினாவுக்கு பேட்டி அளிக்க ஈரான் அதிபர் மறுத்துவிட்டார். மேலும், அந்த நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/136302

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ; 83 பேர் பலி

30 SEP, 2022 | 04:43 PM
image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

ஈரானில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13 ஆம் திகதி பொலிஸார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். 

இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவத்தொடங்கியது. 

ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்கைப், பேஸ்புக், டுவிட்டர், டிக் டொக் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், சீர்திருத்த ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரண்டு வாரமாக நீடிக்கும் போராட்டத்தில் குறைந்தது 83 பேர் இறந்துள்ளனர்.

அதில் பெரும்பாலானோர் போராட்டக்காரர்கள் என்றும், போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

https://www.virakesari.lk/article/136754

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய ஆர்ப்பாட்டங்கள்: முதலாவதாக ஒருவருக்கு மரண தண்டனை

By DIGITAL DESK 3

14 NOV, 2022 | 11:42 AM
image

ஈரானில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் முதல் தடவையாக ஒருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தலையை மறைக்கும் ஹிஜாப் அணியாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாஷா அமினி எனும் யுவதி, பொலிஸ் காவலில் இருந்தபோது கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி உயிரிழந்ததையடுத்து, ஈரானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இவர்களில் ஏற்கெனவே சுமார் 2,000 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், மேலும் 750 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்துடன் தொடர்பில் ஒருவருக்கு முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நீதித்துறை இணையத்தளமான மிஸான் தெரிவித்துள்ளது.

அரச கட்டடங்களுக்கு தீவைத்தல், பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தல், தேசிய பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களுக்காக ஒன்றுதிரண்டமை மற்றும் சதிசெய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த இணைத்தளம் தெரிவித்துள்ளது. அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானதிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் 326 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என நோர்வேளையை  தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைகள் எனும் அரச சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/139958

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரான் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை - வெடிக்கும் மக்கள் எழுச்சி

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,டேவிட் கிரிட்டென்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இரான் - போராடினால் மரணம் தண்டனை

பட மூலாதாரம்,TWITTER/@VAHID

இரானில் சமீபத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“கடவுளுக்கு எதிரான பகைமை” காட்டியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

பெயர் கூறப்படாத “கலவரக்காரர்களில்” ஒருவர் தனது காரைக் கொண்டு ஒரு போலீஸ்காரரை தாக்கிக் கொன்றதாக தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றம் கூறியுள்ளதாக நீதித்துறையின் மிசான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இரண்டாவதாக ஒருவர் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தார். மூன்றாவது நபர் போக்குவரத்தைத் தடுப்பதற்கு “அச்சுறுத்தலை” ஏற்படுத்தினார்.

 

நான்காவது நபர் கத்தியால் தாக்கியதாக செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மிசான் அறிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை முதல் ஐந்து மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனைகளைக் கண்டித்துள்ளனர். அவை நியாயமற்ற விசாரனைகளின் முடிவுகள் என்று கூறியுள்ளனர்.

“போராட்டக்காரர்கள் விசாரணையின்போது வழக்கறிஞர்களை அணுக முடியாது. அவர்கள் தவறான வாக்குமூலங்களை வழங்குவதற்காக உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பிறகு அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று நார்வேவை தளமாகக் கொண்டு இயங்கும் இரான் மனித உரிமைகள் இயக்குநரான மஹ்மூத்த் அமிரி-மொகத்தம் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து நபர்களின் அடையாளத்தை நீதித்துறை வெளியிடவில்லை என்றாலும், அவர்களுடைய குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்கள், அவர்கள் முகமது கோபட்லூ, மனுச்சேர் மெஹ்மான் நவாஸ், மஹான் செதரத் மதனி, முகமது பொரோஹானி, சஹந்த் நூர்முகமது-சாதே ஆகியோராக இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் நம்புவதற்கு வழிவகுத்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்தது.

இரானின் ஷரியா அடிப்படையிலான சட்ட அமைப்பின் கீழ், மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய “கடவுளுக்கு எதிரான பகை” மற்றும் “பூமியில் செய்யும் ஊழல்” போன்றவற்றோடு சேர்த்து பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 பேரில் அவர்களும் இருந்தனர்.

இரானின் தலைவர்கள் வெளிநாட்டு ஆதரவு “கலவரங்கள்” என்று சித்தரித்த பாதுகாப்புப் படைகளின் ஒடுக்குமுறையில் குறைந்தது 348 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர், 15,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இரானுக்கு வெளியே செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமான HRANA தெரிவித்துள்ளது.

ஹிஜாப் அணிவது தொடர்பான கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி அறநெறி போலீசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்த மாசா அமினி என்ற 22 வயது பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு காவலில் மரணமடைந்த பிறகு, மதகுரு ஆட்சிக்கு எதிராகப் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் வெடித்தன.

செவ்வாய்க்கிழமையன்று தொடங்கிய புதிய பதற்றத்துக்கு மத்தியில், 12 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து நீதித்துறையின் மரண தண்டனை அறிவிப்புகள் வந்துள்ளன.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

2019ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, திடீர் எரிபொருள் விலையேற்றத்தால் கோபம் கொண்ட இரான் மக்கள் பெரிய நாடு தழுவிய போராட்டங்களை மேற்கொண்டனர். அதன் நினைவாக மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களை மேற்கொள்வதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் “சர்வாதிகாரிக்கு மரணம்” உட்பட, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதைக் காட்டியது.

தலைநகரில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில், அயதுல்லா கமேனி “வீழ்த்தப்படுவார்” என்று ஒரு கூட்டம் கூச்சலிட்டது, போராட்டக்காரர்கள் ஒரு மேடையில் தலையை மறைக்கும் ஆடையைத் தீ வைத்து எரித்தனர்.

ஒரு மெட்ரோ நிலையத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு காணொளியில் ரயில் பெட்டிக்குள் அதிகாரிகள் மக்களை அடிப்பதைக் காட்டுகிறது. மூன்றாவதாக இன்னொரு காணொளியில், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும்போது, மக்கள் ஓடுவதையும் கீழே விழுவதையும் காண முடிந்தது.

புதன்கிழமை இரவு, தென்மேற்கு நகரமான ஐசேவில் உள்ள சந்தையில் எதிர்ப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது ஆயுதம் ஏந்திய “பயங்கரவாத நபர்கள்” துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு பெண் குழந்தை அடங்குவதாக குசெஸ்தான் மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவித்தார்.

செயல்பாட்டாளர் அமைப்பான '1500தஸ்விர்', ஐசேவில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் 10 வயது சிறுவனைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சில போராட்டக்காரர்கள் நகரிலுள்ள செமினரிக்கு தீ வைப்பதைக் காட்டுவதாகக் கூறிய காணொளியையும் வெளியிட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

முன்னதாக, குர்திஷ் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவ், மாசா அமினியின் சொந்த மாகாணமான குர்திஸ்தானில் அமைந்துள்ள வடமேற்கு நகரமான கம்யரனில், பாதுகாப்புப் படையினரால் ஓர் ஆண் எதிர்ப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரின் நேரடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மற்றொரு நபருடைய வீட்டின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார் என்று கூறியது. அதோடு மேலும் இருவர், அருகிலுள்ள சனந்தாஜ் நகரிலும் கொல்லப்பட்டனர் எனவும் ஹெங்காவ் தெரிவித்தது.

நார்வேவை தளமாகக் கொண்ட ஹெங்காவ், செவ்வாய்க்கிழமை இரவு அண்டை நாடான மேற்கு அசர்பைஜானில் உள்ள புகான் நகரத்தின் கட்டுப்பாட்டை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியதாகவும் கூறினார்.

செவ்வாய்க்கிழமையன்று புகான், கம்யரனில் “கலவரக்காரர்கள்” இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஒரு கர்னல் உட்பட இரு உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் கட்டுப்படுத்தப்படும் துணை ராணுவ பாசிஜ் எதிர்ப்புப் படையில் உறுப்பினராக இருந்த ஒரு மதகுரு, தெற்கு நகரமான ஷிராஸில் பாட்டில் குண்டுகளால் தாக்கியதில் உயிரிழந்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டங்கள் தொடக்கியதிலிருந்து இதுவரை 38 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமான HRANA, 43 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c881qlgyl23o

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஆர்ப்பாட்டத்திற்கு 100 நாட்கள்

By RAJEEBAN

26 DEC, 2022 | 03:43 PM
image

பிபிசி

 

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பித்து 100 நாட்களாகிவிட்டதுஇ 1979 ம் ஆண்டின் இஸ்லாமிய புரட்சியின் பின்னர் அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ள ஆர்ப்பாட்டம் இது.

ஆனால் மக்கள் இதற்காக பெரும் விலையை செலுத்தநேர்ந்துள்ளது.

iran_prote_main.jpg

69 சிறுவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது - மேலும் 26 ஆர்ப்பாட்டக்காரர்கள் மரண தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சர்வதேச மன்னிப்புச்சபை இவற்றை போலியான விசாரணைகள் என்கின்றது.

iran_pro11.jpg

ஈரானில் கடந்த காலங்களில் தேசிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் - 2017 முதல் 2018 வரை- பின்னர்நவம்பர் 2019 இந்த ஆர்ப்பாட்டம் தனித்துவமானது.சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்இ பெண்கள் வாழ்க்கை சுதந்திரம் என்ற தலைப்பில் பெண்கள் இதற்கு தலைமை தாங்குகின்றனர்.

ஈரானின் சில பிரபலங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளனர் இதன் காரணமாக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்இ அல்லது  வெளிநாடுகளில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஈரானின் நன்கறியப்பட்ட நடிகை இளம் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் கொலையை கண்டித்ததை தொடர்ந்து அவரை கைதுசெய்த அதிகாரிகள் ஈரானின் மிகவும் பயங்கரமான எவின் சிறையில் அடைத்துள்ளனர்.

அவர் ஈரானில் கட்டாயமாக அணியவேண்டிய தலையை மூடியணியும் ஆடையின்றி ஆர்ப்பாட்ட்க்காரகளின் சுலோகங்களுடன் தான் காணப்படும் படத்தை வெளியிட்டிருந்தார்.

நான் டாரானேயுடன் நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன்இதற்போது தனது சக மக்களிற்கு ஆதரவளித்த உரிய செயலிற்காக அவர் சிறையில் உள்ளார்இ- ஈரானில் வழங்கப்படும் நீதியற்ற தண்டனைகளிற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என ஒஸ்கார் வென்ற த சேல்ஸ்மன் படத்தை இயக்கிய அஸ்கார் பர்காடி  இன்ஸடகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவளிப்பது குற்றம் என்றால் இந்த நாட்டின் மில்லியன் கணக்கான மக்களும் குற்றவாளிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் அலி கரிமி - துபாயில் தற்போது தங்கியுள்ள அவர் ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவளித்துள்ளார்.

iran_pro.jpg

தன்னை கொலை செய்யப்போவதாக ஈரானிய புலனாய்வாளர்கள் எச்சரித்தனர் என தெரிவித்துள்ள அவர் இதனை தொடர்ந்து தற்போது தான் அமெரிக்கா சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தற்போது ஈரான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவராக மாறியுள்ளார்.இன்ஸ்;டகிராமில் அவரை 14 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

ஈரானின் மற்றுமொரு  கால்பந்தாட்ட வீரரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த பின்னர் ஈரானின் நீதித்துறை தனது நகை கடையையும் உணவகத்தையும் மூடி விட்டது என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/144165

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஜாப் இல்லாமல் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் ஈரான் வீராங்கனைகள்

By RAJEEBAN

29 DEC, 2022 | 11:03 AM
image

சர்வதேச சதுரங்க போட்டியொன்றில் ஈரானை சேர்ந்த பெண் வீராங்கனை சாரா கடெம் ஹிஜாப் இன்றி கலந்துகொண்டுள்ளார்.

செப்டம்பரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமான பின்னர் ஈரானின் வீராங்கனைகள் பலர் ஹிஜாப் இன்றி சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். இந்த வரிசையில் சாரா கடெம் இணைந்துகொண்டுள்ளார்.

கஜகஸ்தானின் அல்மைட்டியில் இடம்பெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் ஈரானில் கட்டாயமாக காணப்படும் ஹிஜாப் இன்றி அவர் கலநதுகொண்டுள்ளதை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

sara-khadem-chess-iran_6007065.jpg

சர்வதேச சதுரங்க தரவரிசையில் 804வது இடத்தில் உள்ள சாரா கடெம் ஈரானில் பத்தாவது இடத்தில் உள்ளார்.

கடந்த ஒக்டோபரில் தென்கொரியாவில் இடம்பெற்ற மலையேறும் போட்டியில் ஈரானை சேர்ந்த  எல்னாஸ் ரெகாமி ஹிஜாப் இன்றி கலந்துகொண்டார்.

பின்னர் அவர் ஹிஜாப் தவறுதலாக விழுந்து விட்டது என தெரிவித்திருந்தார்.

நவம்பரில் ஈரானின் வில்வித்தை வீராங்கனை  டெஹ்ரானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஹிஜாப் இன்றி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களிற்கான ஆதரவை வெளியிட்டார்.

அவர் ஹிஜாப்பை வேண்டுமென்றே தவறவிடுவதை வீடியோக்கள் காண்பித்தன.அவர் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவை வெளிப்படுத்தினார் என்ற கருத்து உருவாகியிருந்தது.

https://www.virakesari.lk/article/144413

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படும் இரான் இளைஞர்கள் - வாதாட 15 நிமிடம்தான் கொடுக்கப்படுகிறது

ஹிஜாப் போராட்டம், ஈரான்

பட மூலாதாரம்,REUTERS

19 ஜனவரி 2023

ஹிஜாப் அணிவதற்கு எதிராக இரானில் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் சம்பந்தபட்டுள்ள  மற்றொரு 22 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் இயங்கிவரும் `மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனமான  HRANA - வின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொகமத் மெஹ்தி கராமி என்னும் 22 வயது கராத்தே வீரர் கடந்த ஜனவரி 7ஆம் தேதி தூக்கிலிடப்பட்டுள்ளார். பிபிசியின் பாரசீக  மொழி சேவையிடம் பேசிய சிலர், மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக தன் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு அவருக்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து சரியாக 65ஆவது நாளில் மொகமத் மெஹ்தி கராமி தூக்கிலிடப்பட்டார்.

தங்களது சுதந்திரத்திற்காகவும், ஈரானின் மதகுரு ஆட்சியிலிருந்து விடுபடுவதற்காகவும் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக இரானின் அதிகார மையங்கள் எப்படி செயல்படுகிறது என்பதற்கு  மொகமத் மெஹ்தி கராமின் கதை ஓர் உதாரணம்.

அதேப்போல் சமீபத்தில் பிரிட்டிஷ்- ஈரானிய நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்ற அலிரேசா அக்பரி என்பவர் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பல கண்டனங்களை எழுப்பியுள்ளது. பிரிட்டனின் உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்ட இவர், எந்தவொரு வகையிலும்  ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இவரிடம்  வலுகட்டாயமாக வாக்குமூலம் வாங்கப்பட்டு, தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது இந்த நிலைமைதான்  ஈரான் சிறையிலிருக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து வருகிறது.

 

நான் மரணிக்கப்போவது  அம்மாவுக்கு தெரிய வேண்டாம்!

இரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் பெண் சரியான முறையில் ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக இரான் காவல்த்துறையினரால் அழைத்துசெல்லப்பட்டார். அங்கு நடந்த விசாரணையின்போது தலையில் பலமாக தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். இதனையடுத்துதான் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு எதிராக  இரானில் மீண்டும் போராட்டம் எழுந்துள்ளது.

இதனையடுத்து ஈரானின் துணைராணுவத்தைச் சேர்ந்த பாசிஜ் என்பவர் கடந்த நவம்பர்3-ஆம் தேதி கராஜ் பகுதியில் கொல்லப்பட்டார். இந்த  வழக்கில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டு மொகமத் மெஹ்தி என்னும் இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தெஹ்ரான் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள கராஜ் நீதிமன்றத்தில் ஒரே நாளில் விசாரிக்கப்பட்டனர்.

மொஹமத் மெஹ்தி, ஈரான், ஹிஜாப் போராட்டம்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

 
படக்குறிப்பு,

மொஹமத் மெஹ்தி கராமி

இரானில் குற்றம்சாட்டப்படுபவர்கள்  தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக  சொந்த வழக்கறிஞர்களை பெறுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதுப்போன்ற வழக்குகளில் அந்த முறை சுதந்திரமாக பின்பற்றப்படுவதில்லை. ஏற்கனவே அதிகாரிகள் தயார் செய்த பட்டியலில் இருந்துதான் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அதேபோல் பத்திரிகையாளர்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே உண்மையிலேயே நீதிமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை, நீதிமன்றம் சார்பில் வெளியிடப்படும் தொகுக்கப்பட்ட காட்சிகளின் மூலமே நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

அப்படி வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் தோன்றும் மொஹமத் மெஹ்தி, `தான்தான் அந்த  துணைராணுவ அதிகாரியை பாறையில் அடித்து கொன்றதாக ஒப்புகொள்கிறார்`. இந்த வழக்கை மொஹமத் மெஹ்தி தரப்பில் வாதாடுவதற்காக நியமிக்கபட்ட வழக்கறிஞர் இதற்கு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக மொஹமத் மெஹ்தியை மன்னிக்குமாறு நீதிபதியிடம் கேட்கிறார்.

அதனை தொடர்ந்து பேசும் மொஹமத் மெஹ்தி, `தான் முட்டாளாக்கப்பட்டதாக கூறிவிட்டு அமர்கிறார்`.அதன்பின்னர், குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டு, அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது. 

பொதுவாக தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பாக வெளியே பேசுவதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த வழக்கில் மொஹமத் மெஹ்தியின் தந்தை மாஷால்லா கராமி, ஈரானின் எடிமட் நாளிதழிடம் பேட்டியளித்துள்ளார். அதில், `அப்பா எனக்கு மரண தண்டனை அளித்துவிட்டார்கள், ஆனால் இது அம்மாவுக்கு தெரிய வேண்டாமென அப்பாவித்தனமாக மொஹமத் மெஹ்தி அழுதுக்கொண்டே கேட்டுக்கொண்டதாக` அவர் கூறியுள்ளார்.

மொஹமத் மெஹ்தி அனுபவத்த சித்திரவதைகள்!

மொஹமத் மெஹ்தியின் இறப்புக்கு பிறகு  ‘1500 இமேஜஸ் (images) என்ற பெயர்கொண்ட சமூகவலைதள கணக்கு ஒன்று  மொஹமத் மெஹ்தி எவ்வளவு கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார் என்பது குறித்த பல தகவல்களை வெளியிட்டது. 

அதில், ` தான் சுயநினைவை இழக்கும் அளவுக்கு  தாக்கப்பட்டதாகவும், தான் இறந்துவிட்டதாக கருதிய சிறைக்காவலர்கள் தன்னை ஏதோவொரு இடத்தில் வீசிவிட்டு சென்றதாகவும், ஆனால் தான் அப்போது உயிருடன் பிழைத்திருந்ததாகவும்` தன் குடும்பத்தினர் மொஹமத் மெஹ்தி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய அந்தரங்க பகுதியை தொடும் சிறைக்காவலர்கள், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தததாகவும் கூறியுள்ளார்.

எடிமெட் நாளிதழிடம் பேசிய மொஹமத் மெஹ்தியின் தந்தை, `இந்த வழக்கில் தன் மகனுக்காக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞரை தொடர்புக்கொள்ள தான் பலமுறை முயற்சி செய்ததாகவும், ஆனால் அதற்கான வாய்ப்பு  ஒருதடவை கூட கிடைக்கவில்லையெனவும்` தெரிவித்துள்ளார்.

பின்னர் இரானில் மிகவும் திறன்வாய்ந்த மனித உரிமை வழக்கறிஞராக அறியப்படும் மொஹமத்  ஹோசேன் அகாசியை தனது மகனுக்காக வாதாடுமாறு அழைத்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு மொஹமத் தரப்பில் வாதாடுவதற்காக பலமுறை மனு அளித்திருக்கிறார் ஹோசேன் அகாசி. ஆனால் அவையனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும் ஈரான் மக்கள் 

ஈரான் ஹிஜாப் போராட்டம்

பட மூலாதாரம்,REUTERS

இந்த நிலையில் காரஜ் பகுதியில்  மொஹமத் ஹொசைனி என்னும் மற்றொரு இளைஞர் இரானின் போலியான சட்ட நடவடிக்கைகளால் தூக்கிலிடப்பட்டார். இவருக்கு பெற்றோர்கள் இல்லை.  அதனால் இவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டபோது இவருக்காக நியாயம் கேட்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் என யாரிமில்லாத சூழலில், ஈரானைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் சமூக ஊடகங்களில் 'We are all Mohammad's family' என்று பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

அந்த சமயத்தில் மொஹமத் ஹொசைனி bipolar disorder என்னும் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று பிபிசியின் பாரசீக சேவை நிறுவியிருந்தது.

இத்தகைய சூழலில், தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு தனக்கென ஒரு வழக்கறிஞர் வைத்துகொள்வதற்கு மொஹமத் ஹொசைனிக்கு அனுமதி கிடைத்திருந்தது.

அவரின் வழக்கறிஞரான அலி ஷரிப்சாதே அர்டகானி, மொஹமத் ஹொசைனியை சிறையில் சென்று சந்தித்தது குறித்து, பின்னாளிள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். 

அதில், `நான் சிறைக்கு சென்றபோதெல்லாம் அவர் அழுதுக்கொண்டே இருந்தார். தான் அனுபவித்த சித்ரவதைகள் குறித்தும், கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு தான் துன்புறுத்தப்பட்டது குறித்தும், காவலர்களால் தலையில் தாக்கப்பட்டு சுயநினைவை இழந்தது குறித்தும் அவர் என்னிடம் பேசினார்` என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரான், ஹிஜாப் போராட்டம்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

மொஹமத் ஹொசைனி

எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல், சித்ரவதைகளின் மூலம் மட்டுமே அவரிடம் அனைத்து வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன எனவும் அலி ஷரிப்சாதே அர்டகானி கூறுகிறார்.

இதுகுறித்த ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்வதற்கு கடந்த ஜனவரி 7ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி அந்த தேதியில் ஆவணங்களை சமர்ப்பிக்க அலி ஷரிப்சாதே அர்டகானி நீதிமன்றம் சென்றுக்கொண்டிருந்தபோது, மொஹமத் ஹொசைனி ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுவிட்டார் என்ற செய்தியை அறிந்து அதிர்ந்து போகிறார்.

அதன் பின்னர் அலி ஷரிப்சாதே அர்டகானியும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் வெளியில் வந்திருக்கிறார்.

இரானில் தொடரும் துயரக்காட்சிகள்

ஈரான்,ஹிஜாப் போராட்டம்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

 
படக்குறிப்பு,

மாஷல்லா கராமி, மொஹமத் மெஹ்தியின் தந்தை

குற்றம் சாட்டப்படுபவர்கள் எந்தவொரு தவறும் செய்யாத சமயத்தில், வலுகட்டாயமாக அவர்கள் குற்றத்தை ஒப்புகொள்வதற்கு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு எதிராக இரானின் மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து பிபிசி பாரசீகத்திடம் பேசிய ஒருவர், `பாதிக்கப்படுபவர்களுக்காக நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் அவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக , அவர்களை குற்றத்தை ஏற்றுகொள்வதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்` என்றார்.

இதுத்தவிர ஈரானில் மேலும் 109 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக இரானின் மனித உரிமை அமைப்புகளும், அரசு சாரா நிறுவனங்களும் கூறுகின்றன.

அதில் 60 வயது நிறைவடைந்தவர்களை அடையாளம் காண முடிகிறது எனவும், தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் சராசரியாக 27 வயதை ஒத்தவர்கள் எனவும், அதில் 3 பேர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் எனவும் அமைப்பு சாரா நிறுவனங்கள் கூறுகின்றன.

`மொஹமத் மெஹ்தியின் தந்தை மாஷல்லா கராமி தனது மகனின் கல்லறையில்  மண்டியிட்டு அழுகிறார். கருப்பு சட்டை அணிந்த தனது மகனின் புகைப்படத்தை தனது கைகளில் ஏந்திக்கொண்டு மற்றொரு கையால் அவர் தனது கழுத்தை இறுக்கி பிடித்துக்கொள்கிறார்`. ஈரான் மக்களின் போராட்டங்களின் மற்றொரு துயரமான காட்சியாக இது இப்போது சமூக ஊடகங்களில் பரவிக்கிடக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c72zv37g33wo

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மஹ்ஸா அம்னியின் மரணம் குறித்த செய்திகளை முதன்முதலில் வெளியிட்ட ஈரானின் இரு பெண் பத்திரிகையாளர்கள் சிறையில் - நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம்

Published By: RAJEEBAN

31 MAY, 2023 | 01:06 PM
image
 

கடந்தவருடம் செப்டம்பர்மாதம் மாசா அமினியின் மரணம் குறித்த செய்தியை உலகிற்கு தெரியப்படுத்திய இருபெண் பத்திரிகையாளர்கள் ஈரானில் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரானின் பெண்பத்திரிகையாளர்கள் இருவரையுமே  அதிகாரிகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ஹாம் மிகான் செய்தித்தாளின்  இலாஹே முகமதி மஹ்சா அமினியின் இறுதிசடங்குகள் குறித்த செய்தியொன்றை வெளியிட்டிருந்தார் .தற்போது சிறையில் உள்ள அவர்  திங்கட்கிழமை ஈரானின் புரட்சிகர நீதிமன்றத்தின்  விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

mahsa.jpg

திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைகளின் போது பெண் பத்திரிகையாளர்களின் சார்பில்ஆஜரான சட்டத்தரணிகள் தங்கள்கருத்துக்களை வெளியிடவோ தங்கள்கட்சிக்காரர்களிற்கு ஆதரவாக வாதிடவோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என இலாஹே முகமதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்தவழக்கை தகுதிவாய்ந்த குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யவேண்டும் என என இலாஹே முகமதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மஹ்சா அமீனியின் மரணம் குறித்த செய்தியை வெளியிட்டஷார்க் செய்தித்தாளின் நிலௌபர் ஹமேதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார் .அவரும் ஈரானின் புரட்சிகர நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

இருபெண் பத்திரிகையாளர்களும் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

https://www.virakesari.lk/article/156600

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் மகளிர் கால்பந்து அணி வந்த விமானத்தில் மாஷா அமினி புகைப்படம்: கவனம் ஈர்த்த வாசகம்

1038425.jpg

உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பிரேசில் மகளிர் கால்பந்து அணியினர் ப்ரிஸ்பேன் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்திறங்கிய விமானம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

காரணம், அவர்கள் வந்த விமானத்தின் வால் பகுதியில் இடம் பெற்றிருந்த இரண்டு புகைப்படங்கள்.

அதில் ஒன்று ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இறந்த இளம் பெண் மாஷா அமினியின் புகைப்படம்.

இன்னொன்று ஈரானிய கால்பந்தாட்ட வீரர் அமீர் நாசர் அசாதனியின் புகைப்படம். இவர் மாஷா அமினிக்கு நீதிகோரி நடந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

Brazil arrive for World Cup in plane with Iran protesters tribute | AJ  #shorts - YouTube

இவர்கள் இருவரின் புகைப்படமும் அந்த விமானத்தின் வால் பகுதியின் இரண்டு புறங்களில் இடம்பெற்றிருந்தன. அவை கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்தன. கூடவே விமானத்தில் ஒரு நீண்ட வாசகம் எழுதப்பட்டிருந்தது.

அதில், “எந்த ஒரு பெண்ணையும் அவர் அவருடைய தலையை துணியால் மூடச் சொல்லி நிர்பந்திக்கக் கூடாது. அதேபோல் எந்த ஒரு ஆணும் இதை வலியுறுத்துவதற்காக தூக்கிலிடப்படக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதான் பிரேசில் கால்பந்து மகளிர் அணியினர் வந்த விமானம் சர்வதேச கவனம் பெறக் காரணமாக அமைந்துள்ளது.

யார் இந்த மாஷா அமினி?

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு பொலிஸார் பொது இடங்களில் ரோந்தில் ஈடுபடுவர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை பொலிஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். பொலிஸ் காவலில் இருந்த அவர் கடந்த செப்டெம்பர் 16ஆம்திகதி உயிரிழந்தார். அதனைக் கண்டித்து மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அதனைக் கட்டுப்படுத்த சிறைத் தண்டனைகள், மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 354 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகவும், அதில் பெரும்பாலான தண்டனைகள் ஈரான் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டவை என்றும் அண்மையில் ஒரு மனித உரிமைகள் சார் அமைப்பு அறிக்கை வெளியிட்டது

Brazil makes bold statement with Iran tribute on arrival in Brisbane

https://thinakkural.lk/article/261696

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் பொலிஸ் ஈரானிய பெண்கள் ஹபாயா ஹிஜாப் எல்லாம் அணிந்து  நன்றாக தங்களை மூடி மறைத்து கொள்கிறர்களா என்பதை கண்காணிக்கும் கெடுபிடிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
https://www.bbc.com/news/world-middle-east-66218318

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.