Jump to content

இலங்கை தமிழர்களின் கண்ணீர் கதை: "ரஷ்ய படையினர் நகங்களை பிடுங்கினர், கொடுமைப்படுத்தினர்"

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலுஜன் பத்தினஜகன்.

யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக, இலங்கையர்கள் குழுவொன்று மாதக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கதை இங்கே.

நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலூஜன் பத்தினஜகன். கடந்த மே மாதம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய ஏழு பேரில் இவரும் ஒருவர்.

ரஷ்யா, யுக்ரேன் இடையே மோதல் தீவிரம் அடைந்தபோது, யுக்ரேனின் வடகிழக்கில் உள்ள குப்யான்ஸ்க் நகரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள கார்கிவ் நகரம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி அதை நோக்கிய நெடிய நடை பயணத்தை இந்த இலங்கையர்கள் தொடங்க ஆயத்தமாகினர்.

ஆனால், எதிர்கொண்ட முதலாவது சோதனைச்சாவடியிலேயே ரஷ்ய படையினரால் அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். கண்களும் கைகளும் கட்டப்பட்டு ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள வொசான்ஸ்க் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

எச்சரிக்கை: இனி வரும் தகவல்கள் உங்களை சங்கடப்படுத்தலாம்

இந்த குழுவினர் படிப்புக்காகவோ வேலை தேடியோ யுக்ரேனுக்கு வந்தவர்கள். ஆனால், கடைசியில் கைதியாகி மிகச் சொற்ப உணவை உண்டு பிழைத்துள்ளனர். நாளொன்றுக்கு ஒரு முறை இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே இவர்கள் கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில நேரத்தில் தலைக்கு குளிக்க அனுமதிக்கப்படுவர். அதுவும் இரண்டு நிமிடங்களுக்குள்ளாக முடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்படும்.

ஆண்கள், பெரும்பாலும் 20களில் இருந்தவர்கள் - அனைவரும் ஒரே அறையில் வைக்கப்பட்டிருந்தனர். அந்தக் குழுவில் இருந்த ஒரேயொரு பெண்ணான 50 வயது எடித் உதஜ்குமார் தனியாக வைக்கப்பட்டார்.

மேரி

"எங்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர். யாரையும் சந்திக்க விடவில்லை. குளிக்கப் போகும்போது கூட அடிப்பர். மூன்று மாதங்களாக உள்ளேயே சிக்கியிருந்தோம்," என்கிறார் மேரி.

இலங்கையில் நடந்த ஒரு கார் குண்டுவெடிப்பில் இவரது முகம் முழுக்க தழும்புகள் ஆயின. மேரிக்கு இதய பிரச்னையும் உள்ளது. அதற்கு எந்த மருந்தையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தனிமையின் விளைவுதான் இந்த பிரச்னையை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

தனிமையில் நான் மிகவும் பதற்றத்துடன் இருந்தேன். எனக்கு மன நல பிரச்னைகள் உள்ளது என்று கூறி அவர்கள் எனக்கு மாத்திரைகளை கொடுத்தனர். ஆனால் அவற்றை நான் உட்கொள்ளவில்லை," என்கிறார் மேரி.

நகங்களை பிடுங்கினர்

இங்கே மற்றவர்கள் நாள்பட அனுபவித்த கொடுமைகளின் அடையாளம் மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. அதில் ஒரு ஆண் தனது ஷூவை கழற்றிக் காண்பித்தபோது, அவரது கால் நகங்கள் கட்டிங்ப்ளேயர் மூலம் பிடுங்கப்பட்டிருந்தன. இரண்டாவது நபரும் அதே மாதிரியான துன்புறுத்தலை அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இந்த குழு தேவையற்ற காரணங்களுக்காக தாங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஒரு ரஷ்ய வீரர் குடித்து விட்டு தங்களை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவர்கள் கூறினர்.

"அவர்கள் என் உடல் முழுவதும் துப்பாக்கியால் தாக்குவார்கள்," என்று 35 வயதான தினேஷ் குகேந்திரன் கூறினார். ஒருவர் தன்னை வயிற்றில் குத்திய பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு வலியால் அவதிப்பட்டேன். பிறகு அந்த நபர் என்னிடமே பணம் கேட்டார்," என்கிறார் அவர்.

"நாங்கள் மிகவும் கோபத்தோடும் வருத்தத்தோடும் ஒவ்வொரு நாளும் அழுதோம். அனைத்தையும் கடந்து எங்களை பிடிப்புடன் வைத்திருந்தது பிரார்த்தனையும் குடும்பத்தின் நினைவுகளும்தான்" என்கிறார் 25 வயதான திலுக்ஷன் ராபர்ட்கிளைவ்.

ரஷ்யா மறுப்பு

இதேவேளை, ரஷ்ய படையோ சிவில் மக்களை இலக்கு வைக்கவில்லை அல்லது போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. ஆனால், ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் கொடுமைகள் பற்றிய மற்ற தகவல்களை போலவே இலங்கையர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளும் உள்ளன.

லீயம் அருகே உல்ள காட்டில் உள்ள புதைகுழியில் இருந்து உடல்களை யுக்ரேன் தற்போது தோண்டி எடுத்து வருகிறது. அவற்றில் சில சித்ரவதையின் அடையாளங்களை கொண்டுள்ளன.

இந்த நிலையில், யுக்ரேனிய அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, "கார்கிவ் பகுதியின் பல்வேறு ஊர்கள் மற்றும் நகரங்களில் 10க்கும் மேற்பட்ட சித்திரவதை அறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள்

இத்தகைய சூழலில்தான் ஏழு இலங்கையர்கள் சுதந்திரம் அடைந்தது போல உணர்ந்துள்ளனர். வோவ்சான்ஸ் உள்ளிட்ட கிழக்கு யுக்ரேனின் பகுதிகளை அந்நாட்டு ராணுவம் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் மீட்டு வருகிறது.

இதையடுத்து மீண்டும் இந்த இலங்கையர்கள் கார்கிவ் நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளனர். தனிமை, செல்பேசி இல்லாத நிலை போன்றவற்றால் தங்களுடைய குடும்பத்தை தொடர்பு கொள்ளவும் இவர்களுக்கு வழி ஏதுமிருக்கவில்லை.

ஆனால், கைகொடுத்த அதிர்ஷ்டம் போல, வழியில் பார்த்த யாரோ ஒருவர் இவர்களை அடையாளம் கண்டு, காவல்துறைக்கு தகவல் தந்தார். அதன் பிறகு ஒரு அதிகாரி தமது செல்பேசியை இவர்களுக்கு வழங்கினார்.

குழுவில் இடம்பெற்றவர்களில் ஒருவரான 40 வயதாகும் ஐங்கரன் கணேசமூர்த்தி தன் மகளையும் மனைவியையும் செல்பேசி திரையில் பார்த்தபோது கண்னீர் வடித்தார். அவரைத் தொடர்ந்து அடுத்தவர், அடுத்தவர் என ஒவ்வொருவரும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியபோது அந்த இடமே கண்ணீரால் பெருக்கெடுத்தது.

கடைசியாக செல்பேசி வழங்கிய அந்த காவல் அதிகாரியை இந்த குழுவினர் கட்டிப்பிடித்து தங்களுடைய உணர்ச்சி மயமான நன்றியை வெளிப்படுத்தினர்.

இப்போது இந்தக் குழு கார்கிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம், உடற்பயிற்சியகம் அடங்கிய மறுவாழ்வு மையத்தில் படுத்துறங்கும் இவர்களுக்கு புதிய ஆடைகள் கிடைத்துள்ளன.

"இப்போது நான் மிக, மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று புன்னகைக்கிறார் திலூக்ஷன்.

இந்தப் போரால் யுக்ரேன் முடங்கிப் போயிருக்கலாம். ஆனால், இவர்களைப் போன்ற பார்வையாளர்கள், ரஷ்யாவால் தாங்கள் அடைந்த இன்னல்களை பகிரும் அதே வேளையில், இந்த நாட்டுடன் குறிப்பிடத்தக்க ஒருவித பிணைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

இலங்கை அரசு பதில் என்ன?

யுக்ரேனில் இலங்கையர்கள் அனுபவித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இந்த ஏழு இலங்கையர்களும் சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவிற்கு குடியேற முயற்சித்த குழுவாகும். இலங்கையின் வடகிழக்கு பிராந்தியங்களில் வசிப்பவர்களான இந்தக் குழு கடந்த மார்ச் மாதம் ரஷ்யப் படையினரால் பிடிக்கப்பட்டதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். எவ்வாறாயினும், இலங்கையர்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவர்கள் தற்போது உக்ரேனிய புனர்வாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எமக்கு மேலும் தெரிவித்தார். ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிகாரப்பூர்வ பதில் இது தொடர்பாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கும், புதுடெல்லியில் உள்ள இலங்கை உக்ரைன் தூதரகத்திற்கும் BBB சிங்கள சேவை மின்னஞ்சலை அனுப்பி அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/global-62967765

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரஞ்சித் said:

இவர்களைப் போன்ற பார்வையாளர்கள், ரஷ்யாவால் தாங்கள் அடைந்த இன்னல்களை பகிரும்......

உத்தம 'புதின்' மீது வேண்டுமென்றே பழிபோடும் வகையில் பரப்புரை செய்யும் பிபிசி தமிழின் செயற்பாடு கண்டனத்திற்குரியது. இவர்கள் உக்ரேன் படையால் துன்புறத்தப்பட்டிருக்கலாம். மாற்றிக் கூறுகிறார்களோ என்று ஐயமாக உள்ளது.

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nochchi said:

உத்தம 'புதின்' மீது வேண்டுமென்றே பழிபோடும் வகையில் பரப்புரை செய்யும் பிபிசி தமிழின் செயற்பாடு கண்டனத்திற்குரியது. இவர்கள் உக்ரேன் படையால் துன்புறத்தப்பட்டிருக்கலாம். மாற்றிக் கூறுகிறார்களோ என்று ஐயமாக உள்ளது.

இதற்காக ரசியாவின்  அதி உச்ச  அதிகார ஐனாதிபதி  புட்டினுக்கு

நன்றியும் பாராட்டுக்களும்  சொல்ல  கடமைப்பட்டிருக்கின்றேன்

எமக்கு சிங்களவர்கள்  தந்ததில்

செய்த  அநியாயங்களில்

நாம் அனுபவித்த  சித்திரைவதைகளில் ஒரு  துளியையாயினும்  அவர்களுக்கும் கொடுத்து

எம் வலியை இனியாவது உணர  செய்தமைக்காக...

நன்றி  ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nochchi said:

உத்தம 'புதின்' மீது வேண்டுமென்றே பழிபோடும் வகையில் பரப்புரை செய்யும் பிபிசி தமிழின் செயற்பாடு கண்டனத்திற்குரியது. இவர்கள் உக்ரேன் படையால் துன்புறத்தப்பட்டிருக்கலாம். மாற்றிக் கூறுகிறார்களோ என்று ஐயமாக உள்ளது.

இருக்கும் இருக்கும்! 

12 minutes ago, விசுகு said:

இதற்காக ரசியாவின்  அதி உச்ச  அதிகார ஐனாதிபதி  புட்டினுக்கு

நன்றியும் பாராட்டுக்களும்  சொல்ல  கடமைப்பட்டிருக்கின்றேன்

எமக்கு சிங்களவர்கள்  தந்ததில்

செய்த  அநியாயங்களில்

நாம் அனுபவித்த  சித்திரைவதைகளில் ஒரு  துளியையாயினும்  அவர்களுக்கும் கொடுத்து

எம் வலியை இனியாவது உணர  செய்தமைக்காக...

நன்றி  ஐயா

அண்ணை, இவங்கள் தமிழாக்கள் போல எல்லோ கிடக்கு?!

இது தமிழர்களென்று நினைக்கின்றேன். தூதுவரின் வக்காளத்தை கவனித்தீங்களா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

இது தமிழர்களென்று நினைக்கின்றேன். தூதுவரின் வக்காளத்தை கவனித்தீங்களா?

உண்மை நொச்சி, தமிழர் என்றவுடன் சட்டவிரோத குடியேற்றக்காரர்களாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி புட்டின் ?? 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம்… இலங்கைத் தமிழர்களின் கண்ணீர் கதையாம் என்று…
பி.பி.சி. தமிழ் சொல்லுது.
முதல் முறையாக இலங்கைத் தமிழர்கள் என்ற பதத்தை…
“றோ” பி.பி.சி. பாவித்து… துக்கம் கொண்டாடுது. 😎

ஆரம்பத்தில்… படிக்கச் சென்ற பல்கலைக் கழக மாணவர்கள் என்றார்கள்.
இப்போ… சட்ட விரோத குடியேறிகளாம். 
 
நகத்தை, புடுங்கி இருந்தால்… அந்தப் படத்தை போடுறதை விட்டுட்டு,
பி.பி.சி. தமிழ். குரூப் போட்டோ எடுத்துக் காட்டுது.

இலங்கையில்… 2009’ம் ஆண்டுக்கு பிறகு கார் குண்டு வெடிப்பு நடந்ததா?

புளுகன் செலென்ஸ்கியின் யோக்கியதையும்,
பி.பி.சி. யின் யோக்கியதையும் உலகம் அறிந்த விடயங்கள்.
இவர்களை நம்பி… கம்பு சுத்துற ஆட்களுக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள். 😂

பல விடயங்களில்… இவர்கள் மூக்கு உடை பட்டவர்கள். 🤥
இந்தச் செய்தியை நம்பி கருத்து வைக்க… நான் முட்டாள் இல்லை. 😁
நன்றி வணக்கம். 🙏

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:
5 hours ago, nochchi said:

உத்தம 'புதின்' மீது வேண்டுமென்றே பழிபோடும் வகையில் பரப்புரை செய்யும் பிபிசி தமிழின் செயற்பாடு கண்டனத்திற்குரியது. இவர்கள் உக்ரேன் படையால் துன்புறத்தப்பட்டிருக்கலாம். மாற்றிக் கூறுகிறார்களோ என்று ஐயமாக உள்ளது.

இருக்கும் இருக்கும்! 

ஓம். உத்தமர் புரின் உலகத்திற்காக உழைக்கும் நல்லவர் மீது பழிபோடும் கெட்டவர்களான மேற்குலகத்தின் சதி இது. புரினும் இப்படியான செயல்களை செய்மாட்டார் அவரது நட்பு நாடு இலங்கையும் செய்யாது.

4 hours ago, ரஞ்சித் said:

அண்ணை, இவங்கள் தமிழாக்கள் போல எல்லோ கிடக்கு?!

அவர்கள் தமிழர்கள் தான்.
இலங்கை அமைச்சு தெரிவித்துள்ளதாம் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக ஐரோப்பா செல்வதற்காக உக்ரேனுக்கு சென்றுள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அடப்பாவி புட்டின் ?? 😭

விசுகர்  இப்படி சொன்ன நம்ம உறவுகள் கோவிப்பார்கள்.  அதி உத்தமர்  மான்புமிகு புட்டின்   எனக் கூற வேண்டும் 🤣

5 hours ago, nochchi said:

இது தமிழர்களென்று நினைக்கின்றேன். தூதுவரின் வக்காளத்தை கவனித்தீங்களா?

யாழ்ப்பாணத்தில்  வீடுகள் கட்டி கொடுக்கிறார்கள் நீங்கள் கேள்வி படவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சியப் படைகள் செய்ததை குற்றமாக கருதும் பிபிசி.. சொறீலங்கா படைகள் பல தசாப்தங்களாக செய்த சித்திரவதைகள் பற்றியும்.. அதில் பிரிட்டனால் உருவாக்கப்பட்ட சிங்கள அதிரடிப்படை ஆற்றிய பங்களிப்பு பற்றியும் மூச்சும் விடத் தயாரில்லை

Mary, her face already scarred by a car bomb in Sri Lanka, has a heart condition, but didn't receive any medicine for it.

இலங்கையில் கார் குண்டு விடிப்பாம்..??! அதெப்ப நடந்தது..??!

இவர்கள் அசைலம் அடிக்க வந்த வழியில் ரஷ்சியப் படைகளிடம் மாட்டி இருக்கினம். அவன் பிடிச்சுக் கொண்டு போய் வேலை வாங்கிட்டு விட்டிருக்கிறான். இப்ப உக்ரைன் படைகளிடம் ரஷ்சிய படைகளைப் பற்றி குறைவாகச் சொன்னால்.. உக்ரைன் படைகள் தங்களை விட்டிடும்.. தாங்கள் தங்கள் பயணத்தை தொடரலாம் என்பதாக இவர்களின் நோக்கம் இருக்க தான் வாய்ப்பு அதிகம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனில் இன பேதம்,நிற பேதம் பார்த்து இந்திய மாணவர்களை தாக்கியதும் ரயிலில் ஏற்ற மறுத்ததெல்லாம் மறந்து போச்சு போல......

அதில் நிற்பவர்களை பார்த்தால் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் மாதிரியா தெரியுது???? 

செலென்ஸ்கிக்கு சிறிலங்கா எண்டால் இரத்தம் துடிக்குது ஏனெண்டு தெரியேல்லை.

8 hours ago, ரஞ்சித் said:

நகங்களை பிடுங்கினர்

இங்கே மற்றவர்கள் நாள்பட அனுபவித்த கொடுமைகளின் அடையாளம் மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. அதில் ஒரு ஆண் தனது ஷூவை கழற்றிக் காண்பித்தபோது, அவரது கால் நகங்கள் கட்டிங்ப்ளேயர் மூலம் பிடுங்கப்பட்டிருந்தன. இரண்டாவது நபரும் அதே மாதிரியான துன்புறுத்தலை அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இந்த குழு தேவையற்ற காரணங்களுக்காக தாங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஒரு ரஷ்ய வீரர் குடித்து விட்டு தங்களை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவர்கள் கூறினர்.

"அவர்கள் என் உடல் முழுவதும் துப்பாக்கியால் தாக்குவார்கள்," என்று 35 வயதான தினேஷ் குகேந்திரன் கூறினார். ஒருவர் தன்னை வயிற்றில் குத்திய பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு வலியால் அவதிப்பட்டேன். பிறகு அந்த நபர் என்னிடமே பணம் கேட்டார்," என்கிறார் அவர்.

"நாங்கள் மிகவும் கோபத்தோடும் வருத்தத்தோடும் ஒவ்வொரு நாளும் அழுதோம். அனைத்தையும் கடந்து எங்களை பிடிப்புடன் வைத்திருந்தது பிரார்த்தனையும் குடும்பத்தின் நினைவுகளும்தான்" என்கிறார் 25 வயதான திலுக்ஷன் ராபர்ட்கிளைவ்.

எந்தவொரு ஆக்கிரமிப்பு ராணுவமும் தான் ஆக்கிரமித்து நிற்கும் பகுதிகளில் உள்ள மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதில்லை. அவர்கள் அங்கே ஆக்கிரமித்து நிற்பது அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே. ஆகவே, அம்மக்களை எதிரிகளாகப் பாவித்து, அவர்களை கடுமையாக நடத்துவதைத்தவிர அவர்கள் வேறு எதையுமே செய்யப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உக்ரேனில் இன பேதம்,நிற பேதம் பார்த்து இந்திய மாணவர்களை தாக்கியதும் ரயிலில் ஏற்ற மறுத்ததெல்லாம் மறந்து போச்சு போல......

அதில் நிற்பவர்களை பார்த்தால் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் மாதிரியா தெரியுது???? 

செலென்ஸ்கிக்கு சிறிலங்கா எண்டால் இரத்தம் துடிக்குது ஏனெண்டு தெரியேல்லை.

எந்தவொரு ஆக்கிரமிப்பு ராணுவமும் தான் ஆக்கிரமித்து நிற்கும் பகுதிகளில் உள்ள மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதில்லை. அவர்கள் அங்கே ஆக்கிரமித்து நிற்பது அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே. ஆகவே, அம்மக்களை எதிரிகளாகப் பாவித்து, அவர்களை கடுமையாக நடத்துவதைத்தவிர அவர்கள் வேறு எதையுமே செய்யப்போவதில்லை.

உக்ரேனிடம் நிற்கும்போது ரஸ்யர்களைப் பேசுவதும், ரஸ்யர்களிடம் நிற்கவேண்டி வரும்போது உக்ரேனியர்களை ஏசுவதும்தான் தப்புவதற்கான ஒரே வழிமிறை. இதில் தவறேதும் காண முடியாது. 

மிகவிரைவில் இவர்களது பேட்டி வேறுவிதமாக வெளிவரும். அப்போது அவர்கள் உக்ரேனில் நிற்கப்போவதில்லை. 

😉

We Were Treated Like Terrorists': Brits Charged With ‘Racial Hatred’ Over Russian Flag Speak Out

Prisoner - Sputnik International, 1920, 20.09.2022
CC0 / / 
 
Subscribe
International
India
Wyatt Reed
Exclusive
The charges have been dropped and the group is pursuing legal action against the arresting officers, a spokesman told Sputnik. He condemned the UK’s dystopian double standard: “you can wave the Ukraine flag – in fact, we could have had swastikas and they wouldn’t have said anything – but not a Russian flag.”
British protesters who were taken into custody on charges of “inciting racial hatred” for displaying Russian flags in public earlier this year are suing the police, a spokesman for the demonstrators told Sputnik News.
Footage recently published on social media shows Essex police arresting all six activists holding Russian flags as they protested official government Covid policies outside the Colchester General Hospital on March 15.
In the video, an officer is shown telling the group that they’ve committed a “public order offense” because “people are taking offense to the Russian flags that you are displaying as there is currently a war going on in Ukraine with Russia.” The activists would ultimately be charged with not only disturbing the peace, but also using “threatening or abusive language,” as well as “inciting racial hatred.”
For Ian Drew, a 72-year-old retiree who serves as spokesman for the unnamed and loosely-organized coalition that’s been protesting government injustice since 2020, the only offense committed that day was carried out by the police.
 
“We were treated like terrorists, really treated like terrorists for having a Russian flag,” he said, calling the officers’ decision to arrest him and his compatriots for charges which would ultimately all be dropped an “abuse of their powers.”
 
“We were wrongfully arrested and imprisoned.”
Drew confirmed that the arrests had a chilling effect on the group’s freedom of expression, noting they haven’t “used the Russian flag so much” since being detained for doing so.
The group is reportedly now pursuing legal action against Essex police for wrongful arrest and false imprisonment in an effort to “clean up the police.”
According to Drew, the previous week the activists brought larger Russian flags to a demonstration, and at one point explained to officers they were “supporting the Russian people because we felt that they are being persecuted over what's happened in Ukraine.” But on the day of the arrest, they were actually carrying a “seven-meter-long bunting,” which contained the flags of “every nation in the world.”
 
“We said that we are supporting all nations who are affected by conflict – most of which is caused by NATO – and by the wars around the world. So when they said that one of the charges was actually inciting racial hatred, you know, they could not substantiate that charge.”
 
But officers apparently decided to move in anyway. The aging activist, who’s affectionately known around town as “the protesting pensioner,” says he and all five of his compatriots were quickly arrested by police – several of whom were armed with pistols – and held overnight on charges which would ultimately be dropped four months later.
A bail hearing notice issued to Colchester’s “protesting pensioner” shows the crimes Essex police accused six demonstrators of before quietly dropping the charges months later. - Sputnik International, 1920, 20.09.2022
A bail hearing notice issued to Colchester’s “protesting pensioner” shows the crimes Essex police accused six demonstrators of before quietly dropping the charges months later.
© Courtesy of Ian Drew
For Drew, it wasn’t his first run-in with the cops in Essex. “Our faces are known by the police,” he explained, describing frequent surveillance from officers, who seem to be monitoring the group’s online activity:
 
“Every time we went into the town, everywhere we went, [police] would turn up – they must be looking at social media because they were always aware of where we were going to be.”
 
In their last contentious interaction with police, Drew says while officers may not have agreed with their message, they at least allowed them to express it. That came in recent months amid nationwide protests which called on the government to alleviate British motorists’ pain at the pump as Western nations’ sanctions on Russia hit their working populations hardest.
Drew characterizes the sanctions regime as an intentional effort by the ruling class to “wipe out” small businesses “by making their fuel bills so high that they can't work.” He adds, “this is another way of getting control of everybody.”
While gas prices have subsided somewhat since August, Drew predicts the government will “gradually start pulling [the cost] up again and blaming [Russian President Vladimir] Putin” when they do.
 
“Everything is ‘let’s blame Russia,’” he laments, adding “it's so false, but unfortunately, loads of people believe it because they listen to the BBC and they think what the government says is right – even though they know deep down the government lied to you because of all those things they got up to during the COVID lockdowns.”
 
“They didn't take part in lockdowns. They had their parties… and all the little scams they were involved in, where they were getting money for all the PPE stuff that had to be bought for covid.”
Allegations of rampant bribery and nepotism were widespread in Britain during the early days of the pandemic. A report from the British Medical Journal (BMJ) in 2021 found that “a fifth of UK government contracts awarded to respond to the Covid-19 pandemic last year contained red flag indicators of possible corruption.”
“They were all in on it,” says Drew. “And people have been told this and they still trust the government.”
Until more Brits wise up, the fiery group has pledged to continue their efforts.
“We’re still supporting people who are affected by wars around the world,” says Drew. As for the latest act of police intimidation?
“It’s not gonna stop us.”
 
மேற்கின் சனநாயகம் .....😉
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் ரஷ்யப் படைகளின் காவலில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனரா?

உக்ரைன் இராணுவத்தினரால்... மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள், ரஷ்யப் படைகளின் காவலில் சித்திரவதைக்கு... உட்படுத்தப்பட்டனரா?

உக்ரைன் இராணுவத்தினரால் அண்மையில் மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் ரஷ்யப் படைகளின் காவலில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் காக்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 7 இலங்கையர்களின் காட்சிகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

இந்நிலையிலேயே, இந்த 7 இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்ததாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் நட்பு நாடான ரஷ்யாவுடனான உறவுகளை சேதப்படுத்துவதற்கு இந்த விடயம் பயன்படும் என்பதால், இதனை மிகுந்த கவனத்துடனும் அவதானத்துடனும் கையாள வேண்டும் என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் இலங்கை ரஷ்ய நட்புறவு சங்கத்தின் செயலாளருமான கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலங்கையர்கள் 7 பேரும் வெளிப்படுத்திய உண்மைகளின் அடிப்படையில் ரஷ்யா போர்க்குற்றம் புரிந்ததாக நேரடியாகக் குற்றம்சாட்ட முடியாது என சமன் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1300332

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமிக்காறனிட்ட இருந்து தப்புறதிக்கும், அசைலம் அடிக்கிறதுக்கும் எவ்வளவு பொய்களைச் சொல்லியிருப்போம்....🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

ஆமிக்காறனிட்ட இருந்து தப்புறதிக்கும், அசைலம் அடிக்கிறதுக்கும் எவ்வளவு பொய்களைச் சொல்லியிருப்போம்....🤣

தற்செயலாக, இவர்கள் ஊருக்கு வந்தால்…. உக்ரைன் இராணுவம் தான்,
அப்படி சொல்லச் சொல்லி… எங்களை கொடுமை படுத்தினவர்கள் என்பார்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு, இலங்கையர்கள் 7 பேரும் வெளிப்படுத்திய உண்மைகளின் அடிப்படையில் ரஷ்யா போர்க்குற்றம் புரிந்ததாக நேரடியாகக் குற்றம்சாட்ட முடியாது என சமன் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அட..அவர் உங்கடை நண்பனெல்லே...  அதைச் சொல்ல வேண்டாம்...அப்படிச் சொல்லமுதல் உங்கடை வாயைக்கொப்பளியுங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் ரஷ்யப் படைகளின் காவலில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனரா?

உக்ரைன் இராணுவத்தினரால்... மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள், ரஷ்யப் படைகளின் காவலில் சித்திரவதைக்கு... உட்படுத்தப்பட்டனரா?

ஆதவன் ஏன் ஆக்களின்ர கண்ணை மட்டும் மறைக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஆதவன் ஏன் ஆக்களின்ர கண்ணை மட்டும் மறைக்குது?

ஆதவனுக்கு… நட்டு, கழண்டு போச்சுது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி 
ருசியாவிடம் பிடிபட்டவுடன் என்ன சொல்லியிருப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள ஒவ்வொரு தமிழனும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத “ நிலையில் தான் வாழ்கிறார்கள்  ஆகவே  அகதிகளை எற்றுகொள்ளும் நாடுகளில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பிக்க முடியும்  அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு ஒழுங்கான வழிமுறைகள் இல்லை   எனவே… களவாகத் தான்  செல்ல வேண்டும்   அதில் என்ன பிழை உண்டு?  எங்களாது கடந்த காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்  இவர்கள் நிலையில் நாங்கள் இருத்திருக்கிறோமில்லையா?.   இந்த 7 பேரில் நாங்கள் ஒருவர் இல்லை.  எங்கள் உறவினர் கூட இல்லை   எனவே… எமக்கு கவலை இல்லை  இவர்கள் எப்படி ஆவது போகட்டும் என்று கருத்துகள் வைக்க முடியாது கூடாது  

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் நட்பு நாடான ரஷ்யாவுடனான உறவுகளை சேதப்படுத்துவதற்கு இந்த விடயம் பயன்படும் என்பதால், இதனை மிகுந்த கவனத்துடனும் அவதானத்துடனும் கையாள வேண்டும் என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் இலங்கை ரஷ்ய நட்புறவு சங்கத்தின் செயலாளருமான கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உக்ரைனை ஆக்கிரமிக்க தொடங்கியதில் இருந்து புதினின் ரஷ்யாவின் கோர முகம் வெளியே தெரிய தொடங்கும் போது எல்லாம்  மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழ் புரின் ஆதரவாளர்கள் எந்தவித பயனுமற்ற இலங்கை தமிழர்களுக்கு எதிரான ரஷ்யாவுக்காக ஓடிவந்து அதை மறைப்பதற்கு கடுமையான முயற்சிகள் செய்யும் போது இவர் அப்படி சொல்வதில் வியப்பு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

இலங்கையில் உள்ள ஒவ்வொரு தமிழனும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத “ நிலையில் தான் வாழ்கிறார்கள்  ஆகவே  அகதிகளை எற்றுகொள்ளும் நாடுகளில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பிக்க முடியும்  அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு ஒழுங்கான வழிமுறைகள் இல்லை   எனவே… களவாகத் தான்  செல்ல வேண்டும்   அதில் என்ன பிழை உண்டு?  எங்களாது கடந்த காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்  இவர்கள் நிலையில் நாங்கள் இருத்திருக்கிறோமில்லையா?.   இந்த 7 பேரில் நாங்கள் ஒருவர் இல்லை.  எங்கள் உறவினர் கூட இல்லை   எனவே… எமக்கு கவலை இல்லை  இவர்கள் எப்படி ஆவது போகட்டும் என்று கருத்துகள் வைக்க முடியாது கூடாது  

ஒரு சர்வாதிகாரி மீதான கண்மூடிதனமான பற்றுதல் தான் வாழவைத்த நாடு தான் வந்த நிலைமை எல்லாவற்றையும் மறக்கடிக்கபண்ணிவிடுகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு சர்வாதிகாரி மீதான கண்மூடிதனமான பற்றுதல் தான் வாழவைத்த நாடு தான் வந்த நிலைமை எல்லாவற்றையும் மறக்கடிக்கபண்ணிவிடுகிறது.

வசதியாகத்தானே இருக்கின்றீர்கள்.அவர்களை ஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுறது?

Link to comment
Share on other sites

53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உக்ரைனை ஆக்கிரமிக்க தொடங்கியதில் இருந்து புதினின் ரஷ்யாவின் கோர முகம் வெளியே தெரிய தொடங்கும் போது எல்லாம்  மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழ் புரின் ஆதரவாளர்கள் எந்தவித பயனுமற்ற இலங்கை தமிழர்களுக்கு எதிரான ரஷ்யாவுக்காக ஓடிவந்து அதை மறைப்பதற்கு கடுமையான முயற்சிகள் செய்யும் போது இவர் அப்படி சொல்வதில் வியப்பு இல்லை.

ஸெலன்ஸ்கியை ஐ.நாவில் உரையாற்ற விடுபவர்கள் 30 வருடமாக போராடிய  மே.த பிரபாகரனை ஏன் பேச விடவில்லை?. அவரும் சிறுபான்மை மக்களுக்காக தானே போரடியவர்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.