Jump to content

குருந்தூர்மலையை அண்டி பௌத்தக் கட்டுமானம்; மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்


Recommended Posts

குருந்தூர்மலையை அண்டி பௌத்தக் கட்டுமானம்; மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்

 

image_b9ab770744.jpg

 

 விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால்  இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுககூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும்,கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச்சென்ற மக்கள் அங்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 19.06.2022அன்று குருந்தூர்மலைக்கு விஜயம்செய்து, இதற்குமேல் கட்டுமானப்பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இருப்பினும் தற்போதும் அங்கு நீதிமன்றத்தின் கட்ளையை மீறி பௌத்த கட்டுமானப்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அங்கு மேலதிக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் காணப்படுவதுடன், அங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதற்கு தயாரான நிலையில் கலவைசெய்யப்பட்ட சீமெந்து, மற்றும் கட்டுமானப் பணிகளுக்குரிய பொருட்களும் அங்கு காணப்பட்டன.

அத்தோடு அங்கு மீண்டும் பௌத்த கண்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்கார்களால் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களாடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது அங்கு சற்று சலசலப்பும் தோன்றியது.

இந் நிலையில் அங்கு பாரிய அளவில் ஆயுதங்கள் தாங்கிய பொலீசார் குவிக்கப்பட்டடதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துகின்றவகையில் போலீசார் புகைப்படங்களையும் எடுத்திருந்தனர்.

பொலிசாரின் இத்தகைய நடடிக்கையைக் கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படக்கூடாது என்ற நீதிமன்றக் கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும் பொலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ், கரைதுறைப்பற்று பிரதேசசபை  உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஜோன்சன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

image_c33067650a.jpg

image_49b7d00788.jpg

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/குருந்தூர்மலையை-அண்டி-பௌத்தக்-கட்டுமானம்-மக்கள்-திரண்டு-ஆர்ப்பாட்டம்/150-304544

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே புத்தர் தமிழன் என்று சொல்லி தேவாரம் பாடுங்கோ....இல்லை என்றால் இந்த காடையர்கள் எங்களை அழித்து விடுவார்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, putthan said:

மக்களே புத்தர் தமிழன் என்று சொல்லி தேவாரம் பாடுங்கோ....இல்லை என்றால் இந்த காடையர்கள் எங்களை அழித்து விடுவார்கள்🤣

எங்கட தமிழ் அரசியல்வாதிகளை நம்பிக்கொண்டு இருக்கிறதை விட  புத்த தேவாரம் படிக்கலாம் போல கிடக்கு....

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எங்கட தமிழ் அரசியல்வாதிகளை நம்பிக்கொண்டு இருக்கிறதை விட  புத்த தேவாரம் படிக்கலாம் போல கிடக்கு....

 

ஹிந்தி படிப்பதைவிட இது எவ்வளவோ மேல். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஹிந்தி படிப்பதைவிட இது எவ்வளவோ மேல். 

வாற பேயை விட இருக்கிற பேய் நல்லம் எண்டுறியள்? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வாற பேயை விட இருக்கிற பேய் நல்லம் எண்டுறியள்? 😄

மரத்தில் தொங்கும்  பலாக்காயைவிட, கையில் இருக்கும் கிளாக்காய் மேல் எல்லோ 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ், கரைதுறைப்பற்று பிரதேசசபை  உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஜோன்சன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆமா .....  நம்ம பெரிய துரை வெகு பிஷியோ தலைவரை வீட்டுக்கு அனுப்புவதில்? இப்படிப்பட்ட பிரச்சனைகளில் கலந்து கொள்ள மாட்டார், மக்கள் பேரணி, கப்பல் விடுவதில் தான் அவருக்கு ஆர்வம். ஆனால் பத்திரிகைகளில் தனது பெயர் வாற மாதிரி பாத்துக்கொள்வார்.  ஐயா, தீபாவளிக்கு முதல் தனது பதவி பறி போகப்போகுது என்கிற கலக்கத்திலேயே தூங்கப்போகிறார். சுமந்த்திரனை பதவி பிடிக்குமோ, பழி பிடிக்குமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!!

குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம்- ரவிகரன் மற்றும் மயூரன் கைது!

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்று குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு பொலிஸார் பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந் நிலையில் பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1300425

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுகிடக்க ..அங்காலை இரண்டுபேர்...பயங்கரவாதச் சட்டத்துகு எதிரா கைநாட்டு வாங்குவதில் தீவிரமாயிருக்கினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அங்கை ஒரு தம்பி சொல்லுறார்; மக்கள் புரட்சியால் ஏலாதது ஒன்றுமில்லையாம், ஆனால் அவரே பயந்து நாட்டை விட்டு தப்பியோட வெளிக்கிட்டு பிடிபட்டவர். எதுக்கும் இந்த ஆர்பாட்டங்களையும், கைதுகளையும் நேரடியாக சர்வதேசத்துக்கு அனுப்பலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலை விவகாரம்; கைது வேட்டையில் பொலிஸார்

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இவ்வார்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்ட  வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும்,  கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்னாள் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய  விசாரணைகளை மேற்கொள்வதற்காக து.ரவிகரன் மற்றும், இ.மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு பொலிஸார், நேற்று மாலை பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். 

இந் நிலையில் பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் நேற்றிரவு  பொலிஸார் கைது செய்திருந்தனர். இதனை தொடர்ந்து மேலும் பலரை கைது செய்ய முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றம் அழைத்து சென்றுள்ளனர் .

இதேவேளை பொலிஸாரின் நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்றுக்கும் தயாராகி வருகின்றனர். (R)

 

https://www.tamilmirror.lk/வன்னி/கரநதரமல-வவகரம-கத-வடடயல-பலஸர/72-304591

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலை போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

By Vishnu

22 Sep, 2022 | 10:50 AM
image

சண்முகம் தவசீலன்

குருந்தூர் மலையில் இடம்பெற்ற  போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் இராணுவத்தினர் உள்ளிட்ட ஏனைய தரப்புக்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

vlcsnap-2022-09-22-08h16m18s505.png

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் 21 ஆம் திகதி குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

PXL_20220921_042351503.jpg

குறிப்பாக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்று கூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச்சென்ற மக்கள் அங்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

PXL_20220921_043054420.jpg

நேற்றைய தினம் போராட்டம் ஆரம்பிக்கின்ற வேளையிலே அந்த இடத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை அங்கிருந்த இராணுவத்தினர் விபரங்களை பதிவிடுமாறு கோரியுள்ளனர்.

இருப்பினும் ஊடகவியலாளர்கள் விபரங்களை பதிவிட முடியாது என மறுப்புத் தெரிவித்த  நிலையில் அங்கு மக்கள் அதிக அளவில் ஒன்று கூடிய நிலையில் அவர்கள் அந்த பதிவு முயற்சியை கைவிட்டு உள்ளனர்.

PXL_20220921_043033989.jpg

தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான போராட்டங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் போராட்ட நேரங்களிலும் அதன் பின்னரும் அச்சுறுத்தப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ச்சியாக காணப்படுகிறது.

 

 

 

https://www.virakesari.lk/article/136171

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.