Jump to content

புடின் அதிரடி உத்தரவு!!! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info எதிர்ப்பு கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

புடின் அதிரடி உத்தரவு!!! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது | Partial Mobilisation Call Protests Across Russia

உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யா பின்னடைவு

உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த பகுதி அணிதிரட்டல் அவசியம் என்று புடின் கூறியுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 210 நாட்களை கடந்துள்ள நிலையில், முதன் முறையாக இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தேசிய உரையின் போது புடின் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷ்ய இராணுவ அணி திரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ரஷ்யா உடனான போரில் ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்ட உக்ரைன் தற்போது வேகமாக முன்னேறி வருகின்றது. ரஷ்யாவின் பிடியில் இருந்த வடக்கு கார்கிவ் பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரேனியப் படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளன.

புடின் அதிரடி உத்தரவு!!! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது | Partial Mobilisation Call Protests Across Russia

புடினின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

இந்நிலையிலேயே, ரஷ்ய ஜனாதிபதி இராணு அணித்திரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான ஆணையில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த ஆணை தொடர்பான விவரங்கள் குறைவாக உள்ளன.

எண்கள் மீதான வரம்பு பற்றியோ அல்லது மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யாதது போன்ற விதிவிலக்குகள் பற்றி எதுவும் கூறவில்லை. மாறாக, ஒதுக்கீட்டை எவ்வாறு சந்திப்பது என்பது பிராந்திய தலைவர்களுக்கு விடப்பட்டுள்ளது.

புடின் அதிரடி உத்தரவு!!! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது | Partial Mobilisation Call Protests Across Russia

இதன்படி, அணிதிரட்டலில் இருந்து விலக்கு பெறுபவர்களை மிக விரைவில் அறிவிக்கும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், புடினின் இந்த அறிவிப்பு உக்ரைனை இரத்தத்தில் மூழ்கடிக்க விரும்புவதை இது காட்டுகிறது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், புடினின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.        

https://tamilwin.com/article/partial-mobilisation-call-protests-across-russia-1663787931?itm_source=parsely-api

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு  நல்ல  செய்தி🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

புடினின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

அமெரிக்கா இதுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்குது?
ரஷ்யா அமெரிக்க  நாட்டு விசயத்திலை மூக்கை நுழைக்குதா என்ன?
வாழ்க புட்டின். வளர்க கொள்கை. மேற்குலக முதலாளிகளின் கொட்டத்தை அடக்கும் மாவீரன் புட்டின். 💪🏼

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

காலையில் ஒரு  நல்ல  செய்தி🤣

காலை போனால் மாலை வரும்..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

காலை போனால் மாலை வரும்..🤣

இனி  காலையும்  மாலையும்

ரசியா உள்ளுக்குள்ளேயே  கொதித்துக்கொண்டே  இருக்கும்😂

வாழ்க  புட்டின்

புட்டின் கோ  கோம்🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இனி  காலையும்  மாலையும்

ரசியா உள்ளுக்குள்ளேயே  கொதித்துக்கொண்டே  இருக்கும்😂

வாழ்க  புட்டின்

புட்டின் கோ  கோம்🤣

2009 ல் வன்னியில் கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பாக மூத்தவரின் நிலைப்பாடு என்னவோ? 

(சப்பைக்கட்டு கட்டக்கூடாது குசா 😉)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2017 ஆம் ஆண்டின் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிச் சார்பாக பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட்ட டொனால்ட் டிரம்பின் வெற்றிவாய்ப்பினை உறுதிப்படுத்த 2016 ஆம் ஆண்டே புட்டின் தனது உளவுப்பிரிவினரை பணிக்கு அமர்த்தியிருக்கிறார். டிரம்ப் வெல்வதனை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்த உளவுப்பிரிவு பணிக்கப்பட்டது.

தமது ஆதரவின் மூலம் பதவிக்கு வரும் டிரம்ப்பை, தனது தேவைக்கு ஏற்றவாறு ஆட்டுவிக்கலாம் என்று புட்டின் கருதியதாலேயே டிரம்ப்பை எப்படியாவது வெல்லவைக்கவேண்டும் என்று அவர் உழைத்திருந்தார். அவரது உழைப்பும் வீண்போகவில்லை. புட்டின் விரும்பியவாறே டிரம்ப் ஜனாதிபதியாக 2017 இல் தெரிவானார். 

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் தமக்குச் சார்பான, தமது சொல்கேட்கக் கூடிய தலையாட்டி பொம்மையினை ரஸ்ஸியர்கள் கொண்டுவரமுடியுமென்றால், ரஸ்ஸியாவில் ஜனநாயகத்திற்கு விரோதமான கட்டாய ராணுவ ஆட்சேர்ப்புப்பற்றி அமெரிக்கர்கள் கரிசணை கொல்வதில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

வன்னியில் நடந்த கட்டாய ஆட்சேர்ப்பு தம்மை ஆக்கிரமிப்பிலிருந்து காத்துக்கொள்ள நடத்தப்பட்டது. போரிடாதிருந்தால் முற்றாக அழிக்கப்பட்டுவிடுவோம் என்பதற்காக நடத்தப்பட்டது.

ஆனால், ரஸ்ஸியாவில் நடப்பது இன்னொரு இறையாண்மையுள்ள நாட்டின்மீது தான் அடாத்தாக நடத்திவரும் ஆக்கிரமிப்பை நிலைநிறுத்த நடத்தப்படுவது. 

இரண்டு புறநிலைக் காரணிகளும் வேறானவை.

ஆனால், கட்டாய ஆட்சேப்பு,  சேர்க்கப்படும் இளைஞர் யுவதிகளின் விருப்பத்திற்கு மாறானது. அவர்களின் அடிப்படை மனித உரிமைக்கும் அவர்களின் சுதந்திரத்திற்கும் மாறானது. ஆகவே, தவறுதான். வன்னியாயிருந்தாலென்ன, மாஸ்கோவாக இருந்தாலென்ன. 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

அமெரிக்கா அந்த அளவில் வீக்கா? 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

2009 ல் வன்னியில் கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பாக மூத்தவரின் நிலைப்பாடு என்னவோ? 

(சப்பைக்கட்டு கட்டக்கூடாது குசா 😉)

இது தான்  மீண்டும்  மீண்டும் ஆட்டுக்குள்ள  மாடு???😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இது தான்  மீண்டும்  மீண்டும் ஆட்டுக்குள்ள  மாடு???😪

இதைத்தான் இரட்டை நிலைப்பாடு என்பது. ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்லடி மகளே..😀

எல்லாப் போருக்குமான அடிப்படை ஒன்றுதான் குசா.

கூட்டிக் கழிச்சுப் பாருங்கோ எல்லாம் சரியா வரும். 

32 minutes ago, ரஞ்சித் said:

2017 ஆம் ஆண்டின் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிச் சார்பாக பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட்ட டொனால்ட் டிரம்பின் வெற்றிவாய்ப்பினை உறுதிப்படுத்த 2016 ஆம் ஆண்டே புட்டின் தனது உளவுப்பிரிவினரை பணிக்கு அமர்த்தியிருக்கிறார். டிரம்ப் வெல்வதனை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்த உளவுப்பிரிவு பணிக்கப்பட்டது.

தமது ஆதரவின் மூலம் பதவிக்கு வரும் டிரம்ப்பை, தனது தேவைக்கு ஏற்றவாறு ஆட்டுவிக்கலாம் என்று புட்டின் கருதியதாலேயே டிரம்ப்பை எப்படியாவது வெல்லவைக்கவேண்டும் என்று அவர் உழைத்திருந்தார். அவரது உழைப்பும் வீண்போகவில்லை. புட்டின் விரும்பியவாறே டிரம்ப் ஜனாதிபதியாக 2017 இல் தெரிவானார். 

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் தமக்குச் சார்பான, தமது சொல்கேட்கக் கூடிய தலையாட்டி பொம்மையினை ரஸ்ஸியர்கள் கொண்டுவரமுடியுமென்றால், ரஸ்ஸியாவில் ஜனநாயகத்திற்கு விரோதமான கட்டாய ராணுவ ஆட்சேர்ப்புப்பற்றி அமெரிக்கர்கள் கரிசணை கொல்வதில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

வன்னியில் நடந்த கட்டாய ஆட்சேர்ப்பு தம்மை ஆக்கிரமிப்பிலிருந்து காத்துக்கொள்ள நடத்தப்பட்டது. போரிடாதிருந்தால் முற்றாக அழிக்கப்பட்டுவிடுவோம் என்பதற்காக நடத்தப்பட்டது.

ஆனால், ரஸ்ஸியாவில் நடப்பது இன்னொரு இறையாண்மையுள்ள நாட்டின்மீது தான் அடாத்தாக நடத்திவரும் ஆக்கிரமிப்பை நிலைநிறுத்த நடத்தப்படுவது. 

இரண்டு புறநிலைக் காரணிகளும் வேறானவை.

ஆனால், கட்டாய ஆட்சேப்பு,  சேர்க்கப்படும் இளைஞர் யுவதிகளின் விருப்பத்திற்கு மாறானது. அவர்களின் அடிப்படை மனித உரிமைக்கும் அவர்களின் சுதந்திரத்திற்கும் மாறானது. ஆகவே, தவறுதான். வன்னியாயிருந்தாலென்ன, மாஸ்கோவாக இருந்தாலென்ன. 

இது ஒரு உசாத்துணைக்கு மட்டும்தான். இதைவிட இன்னும் அதிகமான கட்டுரைகள் பொது வெளியில் கிடக்கு. 

(நாங்கள் எல்லோருமே புலி அங்க அடிக்க வேணும், இங்க அடிக்க வேணும். அங்க அடிச்சாத்தான் சரி, இங்க அடிச்சத்தான் சரி என பத்திரிகைகள் கக்கியதை 2009 மே வரை நம்பியவர்கள்தானே.)

முரளீதரனிடம் ஒரு ஊடகவியலாளர் "அண்ணை , தமிழாக்கள் உங்கள துரோகி எண்டு சொல்லுறாங்களே என்று கூறியதற்கு அவர் கூறினாராம் "உனக்கு சண்டை என்றால் என்ணெண்டு தெரியுமோ." என்றாராம். இதற்கு அர்த்தங்கள் ஆயிரம். 

Bombshell court filing suggests the FBI knew 'Russiagate' was a fraud in January of 2017, but it kept up its pressure on Trump

Igor Danchenko's confession appears to reveal the bureau's true intentions
 
Bombshell court filing suggests the FBI knew 'Russiagate' was a fraud in January of 2017, but it kept up its pressure on Trump

©  Brendan Smialowski / AFP

Lawyers for Igor Danchenko, the primary source of the notorious and utterly discredited "Trump-Russia|" dossier compiled by former British spy Christopher Steele, have filed a motion to dismiss the charges brought against their client by special counsel John Durham.

In the process, they have revealed another startling and potentially criminal dimension to the FBI’s probe of potential collusion between the campaign of former President Donald Trump and the Kremlin.

Danchenko’s case

Durham charged Danchenko in November 2021 with five counts of lying to the bureau. Four of those relate to statements he made in a February 2017 interview, in which he repeatedly claimed to have met and had conversations with Sergey Millian, a Belarusian-born businessman who claimed ties with the Trump campaign.

Danchenko, and thus Steele, claimed Millian was a key source of the dossier’s most explosive allegations – namely, that there was a “well-developed conspiracy of cooperation”between Trump and the Kremlin, that Russia’s GRU had hacked the Democratic National Convention email server and provided the content for WikiLeaks for the purposes of “plausible deniability,” and the then-Presidential candidate had received a “golden shower” from prostitutes while in Moscow years earlier, which was filmed by Russian intelligence and could be used as “kompromat.”

RT

FILE PHOTO. Russian analyst Igor Danchenko arrives at the Albert V. Bryan U.S. Courthouse before being arraigned on November 10, 2021 in Alexandria, Virginia. ©  Chip Somodevilla/Getty Images 

In his FBI interview, conducted between February 9 and 12, 2017, Danchenko claimed to have received this incendiary intelligence through telephone conversations and email exchanges with Millian, who also suggested they discuss matters further in person in New York City. However, Durham charges that Danchenko fabricated these calls, repeatedly emailed Millian without response, and was never invited to any meeting anywhere.

The new court filing shows that to buttress these claims, Danchenko provided the Bureau with a synopsis of a mid-August email he sent to Millian, a month prior to his sit-down interview series. Yet, as the filing notes, the communication makes no mention of the phonecalls they’d purportedly engaged in previously, or the prospect of meeting in person. 

Leaked documents expose Ukrainian attempts to destabilize Russia and draw NATO into a full-scale war with Moscow

Danchenko’s lawyers now argue that this email in fact proves he wasn’t lying about having had direct contact with Millian, and made clear they’d never spoken to his interviewers. Problematically for all involved, though, Danchenko, and as a result Steele, both attributed wild charges against the Trump campaign to Millian before this email.

FBI vs the truth

In turn too, this means the FBI had concrete reasons to believe at least some of the Steele dossier was bogus on January 25, 2017 at the very latest. But the Bureau, undeterred, continued to not only “assess” the dossier’s veracity, but to use it as a justification for further surveillance of Trump 2016 presidential campaign adviser Carter Page, and intensifying its investigation of the campaign.

The FBI’s questionable use of the dossier in court submissions to secure FISA warrants against Page is well-known, and was a key criticism of a December 2019 Justice Department Inspector General review, which determined the Bureau made 17 errors or omissions in its FISA applications. 

Even more damningly though, just two days after Danchenko presented the discrediting email to the FBI, Trump privately met with then-FBI director James Comey, and the President specifically raised the Steele dossier.

RT

©  Global Look Press/Richard B. Levine 

According to Comey’s account of the dinner, as retold in the Mueller report: “the President…stated that he was thinking about ordering the FBI to investigate the [Steele] allegations to prove they were false. Comey responded that the President should think carefully about issuing such an order because it could create a narrative that the FBI was investigating him personally, which was incorrect.”

Exposed: The vast pro-Ukrainian 'bot army' designed to influence Western policy makers

In other words, Comey played Trump, appealing to his ego and feigning concern for his reputation, when he knew better than anyone bar Steele and Danchenko themselves that the FBI was already investigating the former MI6 operative’s “allegations” and knew them to be meritless. Had he told the truth, perhaps the entire Russiagate fraud would’ve collapsed before it had even properly erupted publicly.

If he'd known, the President may not have been successfully pressured into demonstrating his anti-Russian credentials with an increasingly hostile and belligerent stance towards Moscow, which saw Trump go to dangerous lengths the previous administration had deliberately avoided, such as arming and legitimizing the Neo-Nazi Azov Battalion, and shredding vital Cold War arms control treaties, brinksmanship that brought us to where we are today.

Hate of Bureau

In any event, while the filing is in many ways useful confirmation of top-level FBI knowledge of the dossier’s inherent worthlessness at an early stage, it could pose problems for Danchenko’s prosecution. 

NATO's bombing of Yugoslavia: How the illegal US-led attack on the Balkan state changed the course of European history

His conviction hangs on the ability of Durham’s team to prove his lies to the FBI materially influenced its investigation, and it can be easily argued that the Bureau’s evident determination to investigate Trump’s non-existent Russia ties meant no disclosure, true or false, would’ve convinced the agency to stop.

That the FBI was utterly determined irrespective of facts to damage Trump, first as a candidate, then as leader, has long-been clear, yet it has largely faded from public memory. One might argue it’s quite incredible that even the former president’s supporters have not invoked this dubious history in the wake of the Bureau’s raid on Mar-a-Lago, which bears clear hallmarks of being likewise politically motivated.

Evidence of the FBI’s anti-Trump agenda is amply available in black and white - so too the agency’s surging Russophobia. Two of the key Bureau figures central to the Trump-Russia probe, one-time lovers Peter Strzok and Lisa Page, spelled this out both in public testimony and private text messages.

RT

(L) Lisa Page; (R)Director Peter Strzok. ©  SAUL LOEB, ANDREW CABALLERO-REYNOLDS / AFP 

On the latter front, Strzok texted Page in July 2016 - right when the Trump-Russia probe was launched - to declare, “f*** the cheating motherf***ing Russians…bastards…I hate them…I think they’re probably the worst. F***ing conniving cheating savages.” He also pledged that the pair would together “stop” Trump from winning. Page was only slightly less foul-mouthed when she testified to Congress in July 2018:

“It is my opinion that with respect to Western ideals and who it is and what it is we stand for as Americans, Russia poses the most dangerous threat to that way of life.”

Quite why Strzok and Page, along with many other Bureau operatives, haven’t been prosecuted for their role in arguably the biggest US national security scam since the Iraq War isn’t clear.

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

இதைத்தான் இரட்டை நிலைப்பாடு என்பது. ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்லடி மகளே..😀

எல்லாப் போருக்குமான அடிப்படை ஒன்றுதான் குசா.

கூட்டிக் கழிச்சுப் பாருங்கோ எல்லாம் சரியா வரும். 

ஆரம்ப  எழுத்துக்களைப்பார்த்து கொஞ்சம்  விசயம்  தெரிந்தவர்  என்று நினைத்திருந்தேன்

உங்களுக்கு தமிழர்  போராட்டத்தை  பற்றியே ஒன்றும் தெரியல

தலைவர் எவரது  மண்ணிலும் ஒரு  அடி கூட பிடித்ததில்லை  பிடிக்க  நினைத்தில்லை என்று கூட புரியல😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

ஆரம்ப  எழுத்துக்களைப்பார்த்து கொஞ்சம்  விசயம்  தெரிந்தவர்  என்று நினைத்திருந்தேன்

உங்களுக்கு தமிழர்  போராட்டத்தை  பற்றியே ஒன்றும் தெரியல

தலைவர் எவரது  மண்ணிலும் ஒரு  அடி கூட பிடித்ததில்லை  பிடிக்க  நினைத்தில்லை என்று கூட புரியல😪

தடம் மாறாதீர்கள். 

எங்கள் தரப்பு  நியாயங்கள் ஆயிரம் இருக்கும். ஆனாலும் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு எங்கேயும் எதிர்ப்பு இருக்கும். அதைத்தான் கூற வந்தேன். 

நான் ஒருபோதும் எமது போராட்டத்தை எதனுடனும் ஒப்பிட்டதில்ல. ஒப்பிடப்போவதும் இல்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு படுதோல்விக்கு கொண்டு சேர்க்கும் என்பதை வரலாறு மீண்டும் எழுதப் போகின்றது. அது ஆக்கிரமிப்பாக இருந்தால் என்ன, ஆக்கிரமிப்புக்குள்ளான பகுதியை விடுவிப்பதாக இருந்தால் என்ன, கட்டாயப்படுத்தி போரிடச் செய்ய முடியாது.

டொட்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைப்புண்ணிற்கு கண்ணாடி தேடுவதென்பது இதுதான். 2017 அமெரிக்கத் தேர்தலில் ரஸ்ஸியாவின் பங்கு என்னவென்பது உலகம் முழுக்கத் தெரிந்த விடயம். அது அப்படியில்லை என்று நிறுவுவதற்கு எங்கோ ஒரு பத்திரிக்கையில் யாரோ ஒருவர் எழுதியதைத் தேடி வந்து இணைக்கிறீர்கள். ஒருவிடயத்தை நம்பவும் அல்லது நம்பாதிருக்கவும் ஒருவருக்கு இருக்கும் உரிமையினை நான் மதிக்கிறேன். . 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kapithan said:

இதைத்தான் இரட்டை நிலைப்பாடு என்பது. ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்லடி மகளே..😀

எல்லாப் போருக்குமான அடிப்படை ஒன்றுதான் குசா.

கூட்டிக் கழிச்சுப் பாருங்கோ எல்லாம் சரியா வரும். 

எப்பிடி உங்களால் இரண்டையும் ஒப்பிட முடிகிறது? இரண்டு போர்களுக்குமான அடிப்படை ஒன்றல்ல. எமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை, ரஷ்யா செய்வது மற்ற நாடுகளை பிடிக்கும் ஆதிக்க கொழுப்பு, பக்கத்து நாடுகளின் எல்லைப்புறங்களில்  ரஷ்யர்களை குடியேற்றுதல், எமக்கு மணல்ஆறிலும், கிழக்கிலும் நடந்தது போல் அவர்களை பெரும்பான்மையாக்குதல்,பிறகு அவர்களுக்கு சுதந்திரம் என்று அந்த இடங்களை பிடித்தல். இவர்களின் பிரச்னை உக்ரைனிடம் மாத்திரம் நிற்கவில்லை, பக்கத்து நாடுகள் எல்லாவற்றிலில் புகைந்துகொண்டு உள்ளது

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் வலுக்கட்டாயமாய் ஆள் சேர்க்கிறது குற்றம் எண்டால் உக்ரேன் செலென்ஸ்கி ஏன் ஆண்களை நாட்டை விட்டு வெளியேற விடுறார் இல்லை?????

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8 minutes ago, குமாரசாமி said:

புட்டின் வலுக்கட்டாயமாய் ஆள் சேர்க்கிறது குற்றம் எண்டால் உக்ரேன் செலென்ஸ்கி ஏன் ஆண்களை நாட்டை விட்டு வெளியேற விடுறார் இல்லை?????

விடை இதுக்குள்ள  இருக்கு அண்ணா

57 minutes ago, நீர்வேலியான் said:

எப்பிடி உங்களால் இரண்டையும் ஒப்பிட முடிகிறது? இரண்டு போர்களுக்குமான அடிப்படை ஒன்றல்ல. எமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை, ரஷ்யா செய்வது மற்ற நாடுகளை பிடிக்கும் ஆதிக்க கொழுப்பு, பக்கத்து நாடுகளின் எல்லைப்புறங்களில்  ரஷ்யர்களை குடியேற்றுதல், எமக்கு மணல்ஆறிலும், கிழக்கிலும் நடந்தது போல் அவர்களை பெரும்பான்மையாக்குதல்,பிறகு அவர்களுக்கு சுதந்திரம் என்று அந்த இடங்களை பிடித்தல். இவர்களின் பிரச்னை உக்ரைனிடம் மாத்திரம் நிற்கவில்லை, பக்கத்து நாடுகள் எல்லாவற்றிலில் புகைந்துகொண்டு உள்ளது

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

விடை இதுக்குள்ள  இருக்கு அண்ணா

நீர்வேலியான் உக்ரேன்/ரஷ்யா சம்பந்தமாக குறிப்பிடும் தகவல்கள் ஒரு ஊகத்திலானான மேற்கத்திய செய்திகளே தவிர உண்மை அதுவல்ல.

மேற்குலக ஊடகங்கள் பிள்ளைபிடிகாரர் செய்திகளை பக்காவாக வெளியிடுவர்.....🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நீர்வேலியான் உக்ரேன்/ரஷ்யா சம்பந்தமாக குறிப்பிடும் தகவல்கள் ஒரு ஊகத்திலானான மேற்கத்திய செய்திகளே தவிர உண்மை அதுவல்ல.

காரணம்  எதுவாக  இருந்தபோதும்

அவர்களுக்கு அவர்களது  நிலம்

அதை அபகரிக்க  முயல்பவருக்கு  எதிராக  அவர்கள் திரள்வார்கள் அபகரிப்பவர்களை  விட  அதிகமாக...

ஆனால் அபகரிக்க  முயன்றவர் ஆயுதங்கள் தானில்லை என்று பார்த்தால்

போராட ஆட்களே  இல்லாமல்  இறங்கியிருக்கிறார்

அதனால் தான் அவரது  மக்களே சூடாகிறார்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

புட்டின் கோ  கோம்🤣

இதை நீங்கள் சொல்ல கூடாது ரஷ்யார்கள்  சொல்ல வேண்டும் புட்டின் 2036 ஆம் ஆண்டு வரை பதவியில் இருக்க மக்கள் ஆணை வழங்கி உள்ளார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

இதை நீங்கள் சொல்ல கூடாது ரஷ்யார்கள்  சொல்ல வேண்டும் புட்டின் 2036 ஆம் ஆண்டு வரை பதவியில் இருக்க மக்கள் ஆணை வழங்கி உள்ளார்கள் 

கோத்தா 67 வீதமான மக்கள்  ஆதரவுடன் தெரிவாகி 2024வரை  கால  அவகாசமும் இருந்தது தானே அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

2009 ல் வன்னியில் கட்டாய ஆட்சேர்ப்பு தொடர்பாக மூத்தவரின் நிலைப்பாடு என்னவோ? 

(சப்பைக்கட்டு கட்டக்கூடாது குசா 😉)

இந்த கேள்வி புட்டினை அவமானப்படுத்துகிறது   உலகில் இரண்டாவது படை பலத்தை உடைய ரஷ்யா நாட்டை அவமானப்படுத்துகிறது  ரஷ்யா உலகில் முதலாவது பெரிய நாடு   மக்கள் தொகையும் பல கோடி   25 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட புலிகளுடன்  ஒப்பிடுகிறீர்களே? ரஷ்யாவின்  படை பலத்துக்கு.  புலிகள் பலமற்றவார்கள  என்றே சொல்லி விடலாம் புலிகள் கட்டாயம் கட்டாய ஆள் சேர்ப்பு செய்யலாம்   ஆனால்  உலகின் இரண்டாவது பெரிய படை கட்டாய ஆள் சேர்ப்பு செய்வது… பல பெரிய சந்தேகங்கள் இருக்க வாய்ப்பு உண்டு   ரஷ்யா கட்டாய ஆள் சேர்ப்பு செய்யவே கூடாது’ காரணம் அது உலகில் வல்லரசு இரண்டாவது மிகப்பெரிய இராணுவம்  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

நீர்வேலியான் உக்ரேன்/ரஷ்யா சம்பந்தமாக குறிப்பிடும் தகவல்கள் ஒரு ஊகத்திலானான மேற்கத்திய செய்திகளே தவிர உண்மை அதுவல்ல.

மேற்குலக ஊடகங்கள் பிள்ளைபிடிகாரர் செய்திகளை பக்காவாக வெளியிடுவர்.....🤣

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா
யூ ஆர் ஸ் த‌ கிரெட் மான் 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

கோத்தா 67 வீதமான மக்கள்  ஆதரவுடன் தெரிவாகி 2024வரை  கால  அவகாசமும் இருந்தது தானே அண்ணை?

ஆமாம் உண்மை  ரஷ்யா இடம் எரிவாயு எரிபொருள் உண்டு”  உணவு  பொருள்களுக்கு தட்டுப்பாடு எற்ப்பட்டால்.   நீங்கள் சொன்னது நடைபெறலாம்  பொறுத்து இருந்து பார்ப்போம் 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது விசயம் தெரியாதவைக்கு மேற்குலகம் அவிக்கும் செய்தி தான்.

ரஷ்சிய முப்படையின் அளவு 29 இலட்சம். அதில் 9 இலட்சம் சேவையிலும் 20 இலட்சம்.. ரிசேவ் ஆகும்.

உக்ரைன் படையின் அளவு 10.96 இலட்சம். அதில் 1.96 இலட்சம் சேவை. 9 இலட்சம் ரிசேவ்.

ரஷ்சிய அதிபர் 20 இலட்சம் ரிசேவில் 3 இலட்சத்தை தான் அழைத்திருக்கிறார். அவர்கள் கடமைக்குச் செல்ல வேண்டியது தாய் நாட்டுக்கான கடப்பாடாகும்.

இதில் மேற்குலக செல்வாக்கு அதிகமுள்ள மாஸ்கோ உள்ளிட்ட சில இடங்களில் புட்டினுக்கு எதிரானவர்களால் தூண்டிவிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தாலும்.. புட்டின் நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்த அழைப்பை விட்டுள்ளார்.

Ukraine: What have been Russia's military mistakes? - BBC News

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.