Jump to content

பேராதனை பல்கலைகழக மாணவன் தற்கொலை - பகிடிவதையா காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேராதனை பல்கலைகழக மாணவன் தற்கொலை - பகிடிவதையா காரணம்?

By RAJEEBAN

22 SEP, 2022 | 03:39 PM
image

பேராதனை பல்கலைகழக மாணவனின் தற்கொலை பகிடிவதை குறித்து மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளது.

பேராதனை பல்கலைகழக மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நாட்டின் பல்கலைகழகங்களில் பகிடிவதை குறித்த விவாதங்களை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

பேராதனை பல்கலைகழகத்தில் உளவியல் கற்றுக்கொண்டிருந்த 24 வயது மாணவன் காணாமல்போய் ஐந்து நாட்களின் பின்னர் மகாவலி ஆற்றின் கரையோரம்21 ம் திகதி மாலை சடலமாக மீட்கப்பட்டான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

raging1.jpg

பிரதேப்பரிசோதனை முடிவுகள் இன்னமும் வெளியாகத போதிலும் குறிப்பிட்டமாணவன்  சக மாணவர்களால்  பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதால் தற்கொலை முடிவை நாடியிருக்கலாம் என பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாணவனின் உடல் மீட்கப்படுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் முன்னைய வாரம் பல்கலைகழகத்தின்  சிற்றூண்டிச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் மூன்று மாணவர்களை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

மாணவன் காணாமல்போன தினத்தன்று  கலைப்பீடத்தை சேர்ந்த வன்முறைகும்பல் சட்டபீட மாணவர்கள் 12 பேர் மீது தாக்குதலை மேற்கொண்டது என பல்கலைகழகத்தின் சட்ட பீடத்தின் பழையமாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

பகிடிவதையில் ஈடுபடும் அதற்கு ஆதரவளிக்கும் கலைப்பீட மாணவர்களே திட்டமிட்டு இலக்குவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர் என கருதுவதாக பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

பகிடிவதையை அனுமதிப்பதில்லை ஏற்றுக்கொள்வதில்லை  என்ற மிகவும் உறுதியான கொள்கையை சட்டபீடம் பின்பற்றுகின்றது என பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

பகிடிவதைக்கு எதிரான மாணவர்கள் அவர்களிற்கு அனுமதிவழங்கப்படாத இடத்தில் உணவருந்தியதன் காரணமாகவே  இந்த தாக்குதல்  இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை கண்டித்து சட்டமாணவர்கள் சங்கமும் சுயாதீன சட்டமாணவர் இயக்கமும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

இலங்கை கல்விச்சட்டத்தின் அடிப்படையில் பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ளது.

no_to_ragging.jpg

சில பீடங்களும் பல்கலைகழகங்களும் பகிடிவதைக்கு வெற்றிகரமாக முடிவு கண்டுள்ள போதிலும் பேராதனை பல்கலைகழகத்தின் சில பீடங்களி;ல உள்ள சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை தொடர்வதை உறுதி செய்யும் நயவஞ்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பஸ் கார்ட்டை பயன்படுத்தி பகிடி வதை இடம்பெற்றுள்ளமை குறித்து உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரேஸ்ட மாணவர்களின் கம்பஸ் கார்ட் கனிஸ்ட மாணவர்களிற்கு கிடைப்பது பெரிய விடயம்,ஆனால் கனிஸ்ட மாணவர்களிற்கு இந்த கார்ட் கிடைக்காது, என தெரிவித்துள்ள உள்ளக தகவல்கள் அந்த கார்ட்டை கனிஸ்ட மாணவர்களிற்கு வழங்கவேண்டும் என்றால் சிரேஸ்ட மாணவர்கள் யார் தகுதியான கனிஸ்ட மாணவன் என்பதை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் அனைவரையும் பகிடிவதை செய்யவேண்டும்,கார்ட் கிடைப்பதால் கிடைக்க கூடிய நன்மைகளை கருத்தில்கொண்டு கனிஸ்ட மாணவர்களும் பகிடிவதைக்கு இணங்குகின்றனர் என தெரிவித்துள்ளன.

குறிப்பிட்ட கார்ட் அல்லது சிரேஸ்டமாணவர்களின் அனுமதியின்றி கனிஸ்ட மாணவர்கள் பல்கலைகழகத்தின் சில பகுதிகளிற்கு கழகத்திற்கு செல்ல முடியாது.

பகிடிவதை என்பது பல்கலைகழக கலாச்சாரத்தின் ஒரு பகுதி என கருதும் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்கள் பட்ச் பிட் என கருதப்படு;ம் தோழமை உணர்வை இது உருவாக்குகின்றது என கருதுகின்றனர்.

https://www.virakesari.lk/article/136203

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

பகிடிவதை என்பது பல்கலைகழக கலாச்சாரத்தின் ஒரு பகுதி என கருதும் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்கள் பட்ச் பிட் என கருதப்படு;ம் தோழமை உணர்வை இது உருவாக்குகின்றது என கருதுகின்றனர்.

மனித வதை செய்வதை கலாச்சாரத்தின் ஒரு பகுதி, தோழமை உணர்வை உருவாக்குகின்றது  என்கின்ற இவர்கள் காட்டுமிராண்டிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.