Jump to content

தமிழர்களின் தொன்மை வாய்ந்த அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன - தவராசா கலையரசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தொன்மை வாய்ந்த அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன -  தவராசா கலையரசன்

By T YUWARAJ

22 SEP, 2022 | 09:08 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

 

தமிழ் மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த கடும்போக்கான பேரனவாதத்தை தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தொடர்வார்களா, ஒருபுறம் புலம்பெயர் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை எடுக்கப்படுவதுடன். மறுபுறம் தமிழர்களின் தொன்மை வாய்ந்த அம்சங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றமை நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

கடும் இனவாத போக்கினை கொண்ட கிழக்கு மாகாண ஆளுநரின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டையும்,தமிழரின் வரலாற்று அம்சங்கள் மீது இலக்கு வைத்துள்ள தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடு குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற நிலையியல் கட்டளை விதப்புரை திருத்தம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகை

நிலையியல் கட்டளைகள் திருத்ததம் தொடர்பான விவாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எமது மக்கள் மீது திணிக்கப்படும் அடாவடித்தனம் தொடர்பில் பேசும் நிர்பந்தம் காணப்படுகிறது.குறிப்பாக வடக்கையும்,கிழக்கையும் மையமாக கொண்டு அரசாங்கம் மேற்கொள்ளும் குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள்; மற்றும் ஏனைய விடயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிக மோசமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டம் தமிழ்கள் செறிந்து வாழ்ந்த தொண்மை வாய்ந்த மாவட்டமாக காணப்பட்டது.தற்போது சிங்கள அரச தலைவர்கள் தமிழ் விகிதாரத்தை குறைத்து தமிழ் மக்களை சிறுபான்மையினாக்கி திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்களை முடக்கியுள்ளார்கள். திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கை நிரந்தராக துண்டாடும் வகையில் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றத்தை உருவாக்க தொல்லியல் திணைக்களமும்,இந்த அரசாங்கமும் அவதானம் செலுத்தியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கடும்போக்கான சிங்களவர்களின் ஆதரவுடன் தொல்லியல் திணைக்களத்துக்கு 20 பேரை நியமித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு எமது மதம் மற்றும் கலாசார அம்சங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.1960ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் பெருமளலான நிலப்பரப்பை கொண்டிருந்தது.1960ஆம் ஆண்டு அங்கு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு தமிழ்கள் சிறுபான்மையாக்கப்பட்டார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணேச்சரம் ஆலயத்தை தொல்லியல் நடவடிக்கைக்கு உட்படுத்தி எமது கலாசாரத்தை கேள்விக்குள்ளாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.குறிப்பாக 2010ஆம் ஆண்டு அங்கு மீனக குடியேற்றம் உருவாக்கப்பட்டு தற்போது 60 இற்கும் அதிகமான குடும்பங்கள் அங்கு வாழ்கிறார்கள்.

மிகவும் இனவாத போக்கினை உடைய கிழக்கு மாகாண ஆளுநர் இந்த மீனவ குடியேற்றத்திற்கு சென்று அவர்களுக்கு 18ஆயிரம் ஹெக்கர் விடுவிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்.நீண்டகாலம் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்த எமது மக்களை நிம்மதியாக வாழ அரசாங்கம் இடமளிப்பதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம் பெயர் அமைப்புக்களுடன் பேசுகிறார்.மறுபுறம் பௌத்த பேரினவாதத்தினால் பழமைவாய்ந்த எமது கலாசாரங்கள் அழிக்கப்படுகின்றன.ஆகவே ஜனாதிபதி,மற்றும் பிரதமர் ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவின் கடும்போக்கான செயற்பாடுகள் எமது மக்கள் மத்தியில் தொடர அனுமதிப்பார்களா என கேள்வியெழுப்புகிறோம். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/136225

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிடவே வழியில்லாமல் பிச்சைக்கார நாடுகளிலெல்லாம் தெண்டல் போடும் நரி அரசு...இந்த தொல்லியல் நடவடிக்கையை நிறுத்தினாலே மில்லியன் கணக்கா மிச்சம் பிடிக்கலாம்தானே..

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.