-
Tell a friend
-
Topics
-
0
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி: சி குழுவில் இலங்கை By DIGITAL DESK 5 08 FEB, 2023 | 09:09 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் மத்திய பகுதியில் நடைபெறவுள்ள 16ஆவது வலைபந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற இலங்கை தகுதிபெற்றுக்கொண்டது. இங்கிலாந்தின் லிவர்பூரில் 2019இல் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் அவுஸ்திரேலியா, ஸிம்பாப்வே, வட அயர்லாந்து ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த இலங்கை, கடைநிலை அணிகளுக்கான 2ஆம் சுற்றில் சமோஆ, பிஜி ஆகிய அணி களிடம் தோல்வி அடைந்தது. எனினும் சிங்கப்பூரை 2ஆம் சுற்றில் வீழ்த்திய இலங்கை, 15ஆம், 16ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியிலும் சிங்கப்பூரை வெற்றிகொண்டது. 6 போட்டிகளில் விளையாடிய தர்ஜினி சிவலிங்கம் 348 கோல்களைப் போட்டு அதிக கோல்கள் போட்டவர்கள் பட்டியலில் முதலாம் இடத்தைப் பிடித்தார். தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் தர்ஜினி சிவலிங்கம், 2023 உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இலங்கை வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் திலகா ஜினதாச, உதவிப் பயிற்றுநர் பி. டி. பிரசாதி மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தர்ஜினி குறித்து தீர்மானிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜெமெய்க்காவை ஜூலை 28ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்காவை 29ஆம் திகதியும் வேல்ஸை 30ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும். முதல் சுற்றில் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஜுலை 31ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் ப்ளே-ஆவ்ஸ், நிரல்படுத்தல் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன ஆகஸ்ட் 4ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதிவரை நடைபெறும். பங்குபற்றும் நாடுகள் (நிரல்படுத்தல் வரிசையில்) ஏ குழு: அவுஸ்திரேலியா, டொங்கோ, பிஜி, ஸிம்பாப்வே. பி குழு: இங்கிலாந்து, மலாவி, ஸ்கொட்லாந்து, பார்படோஸ். சி குழு: ஜெமெய்க்கா, தென் ஆபிரிக்கா, வேல்ஸ், இலங்கை. டி குழு: நடப்பு சம்பியன் நியூஸிலாந்து, உகண்டா, ட்ரினிடாட் அண்ட் டுபாகோ, சிங்கப்பூர். https://www.virakesari.lk/article/147743 -
மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் -பசில்
By ஏராளன் · பதியப்பட்டது
மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் -பசில் By RAJEEBAN 08 FEB, 2023 | 04:36 PM இரட்டை பிரஜாவுரிமை தனது அரசியல் எதிர்காலத்திற்கு நடவடிக்கைகளிற்கு தடையாகயிருந்தால் அமெரிக்க பிரஜாவுரிமையை துறக்க தயார் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். நான் வெற்றிபெறவேண்டுமா அல்லது தோல்வியடையவேண்டுமா என்பதை இந்த நாட்டின் மக்கள் தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 6.9 மில்லியன் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என குறிப்பிட்டுள்ள அவர் அரகலய காரணமாக வீட்டிலிருந்து நாங்கள் வெளியே காலடி எடுத்துவைக்க முடியாத நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் ரணில்விக்கிரமசிங்க இந்த நிலைமைய மாற்றினார் எரிபொருளுக்கான வரிசை உட்பட பல விடயங்களிற்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வை காணமுடிந்தது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது நாங்கள் எந்த சமூக பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணக்கூடிய தனிநபர் என நாங்கள் நம்பினோம் அவர் அது சரியானது என நிரூபித்துள்ளார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/147736 -
By ஏராளன் · பதியப்பட்டது
மனதை படிக்கும் சக்தி - சர்ச்சை சாமியாருக்கு சவால் விட்ட மூடநம்பிக்கை ஒழிப்பாளர் கீதா பாண்டே பிபிசி 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FB/BAGESHWARDHAMSARKAROFFICIAL இந்தியாவில் மதகுருக்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் சமீப நாட்களில் ஒரு சர்ச்சைக்குரிய சாமியார் தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் பெயர் திரேந்திர கிருஷ்ண ஷாஸ்திரி. அவரை பாகேஷ்வர் தாம் சர்கார் என்ற பெயரில் அழைக்கின்றனர். அவரின் ஆதரவாளர்கள் அவருக்கு 'தெய்வீக சக்தி' உள்ளது என்றும் 'அவரால் நோயுற்றவர்களையும் பேய் பிடித்தவர்களையும் குணப்படுத்த முடியும்' என்றும் கூறுகின்றனர். மேலும் 'வியாபாரம் மற்றும் நிதி சிக்கலில் இருந்தும் பக்தர்களை அவர் விடுவிப்பார்' என்றும் கூறுகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் கோவிலின் முதன்மை பூசாரியான 26 வயது பாகேஷ்வர் தாம் சர்கார், வண்ணமயமான உடைகளை அணிந்து, 18ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவை ஆண்ட பேஷ்வா மன்னர்கள் அணிந்த தொப்பியை அணிகிறார். அதிகாரம் படைத்த அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும் இவரை பின் தொடருவோர் பட்டியலில் உள்ளனர். இவர் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்படுகிறார். சமீப வாரங்களில் இந்தியாவின் ஹிந்தி மொழி சேனல்கள் பல இந்த சாமியார் குறித்தும் அவருக்கு இருக்கும் 'சக்திகள்' குறித்தும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. மதமாற்றம், மாற்று மத திருமணங்கள் ஆகியவை குறித்து அவர் பேசியதை 'ப்ரேகிங் நியூஸாக' சேனல்கள் ஒளிபரப்பின. சமூக வலைதளங்களில் அவரை பின் தொடருவோரின் எண்ணிக்கை சட்டென 75 லட்சத்துக்கும் மேல் அதிகரித்தது. முகநூலில் 34 லட்சம் பேரும், யூட்யூபில் 39 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் மூன்று லட்சம் பேரும், டிவிட்டரில் 72 ஆயிரம் பேரும் அவரை பின் தொடருகின்றனர். அவரின் சில வீடியோக்கள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. கர்ப்பம் தரித்த தந்தை, தாயாக போகும் திருநங்கை - மாற்றுப் பாலின தம்பதியின் கதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமனம் - தொடரும் சர்ச்சைகளின் பின்னணி ஜனவரி மாதம் ஷாஸ்திரி, தனக்கு பிறரை குணப்படுத்தும் சக்திகள் இருப்பதாகவும், மக்கள் மனங்களை படிக்கும் வல்லமை கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதை எதிர்த்து மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அமைப்பை நடத்தி வரும் ஷ்யாம் மானவ் கேள்வி எழுப்பியபோது ஷாஸ்திரி மேலும் பிரபலமடைந்தார். ஷ்யாம் மானவ், தான் தேர்வு செய்யும் 10 பேரின் மனதில் உள்ளதை சரியாக சொல்லிவிட்டால் 30 லட்சம் ரூபாய் தருவதாக சவால் விட்டார். பட மூலாதாரம்,FB/BAGESHWARDHAMSARKAROFFICIAL படக்குறிப்பு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஷாஸ்த்ரியை சந்தித்தபோது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் ஷாஸ்திரி முகாமிட்டபோது இந்த சவால் விடுக்கப்பட்டது. மானவும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்தான். சவாலை ஏற்காமல் ஷாஸ்திரி நகரை விட்டு ஓடிவிடுவார் என்று பலரும் கூறினர். அப்போதிலிருந்து பல்வேறு தொலைக்காட்சிகளில் நேர்காணல் அளித்துக் கொண்டிருக்கும் ஷாஸ்திரி தாம் எங்கும் ஓடப்போவது இல்லை என்றும் சவாலை ஏற்க தயாராக இருப்பதாகவும் ஆனால் மகாராஷ்டிராவில் சவாலை ஏற்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக அண்டை மாநிலமான சத்திஸ்கரில் தான் சவாலை சந்திக்க தயார் என்றும் அது இருவருக்கும் பொதுவான ஒரு இடம் என்றும் கூறியுள்ளார். ஆனால் மகாராஷ்டிராவில் வைத்து தனக்கு அதீத சக்திகள் இருப்பதாக ஷாஸ்திரி கூறியதால் அங்கு வைத்துதான் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று மானவ் தெரிவித்தார். இந்த சர்ச்சை தொடங்கியதிலிருந்து மானவிற்கு அச்சுறுத்தல்கள் வருகிறது என்றும் அதனால் அவருக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு ஷாஸ்த்ரியும் தனக்கு அலைபேசி மூலமாக அச்சுறுத்தல்கள் வருவதாக காவல்துறையில் புகார் தெரிவித்தார். இந்த சர்ச்சையும் சேனல்களில் வெளியாகும் செய்திகளும் ஷாஸ்த்ரியை மேலும் பிரபலமாக்குகின்றன. அதில் ஒரு சேனலின் செய்தியாளர் மண்டியிட்டு, ஷாஸ்திரி நோயுற்றவர்களை குணமடைய செய்வார் மற்றும் மக்களின் மனதில் இருப்பதை சொல்வார் என்ற கூற்றுக்கு ஆதரவாக பேசுகிறார். பட மூலாதாரம்,FB/SUHANISHAH படக்குறிப்பு, மேஜிக் கலைஞரான சுஹானி ஷா பாகேஷ்வர், சர்காரின் கூற்றுகள் குறித்து கேள்வி எழுப்புகிறார் பாகேஷ்வர் தாம் கோவிலின் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்படும் வீடியோக்களில் ஆயிரக்கணக்கானோர் ஷாஸ்திரியின் உரையை கேட்க கூடியுள்ளனர். அதில் ஒரு வீடியோவில் '4 லட்சம் பேர் அங்கு கூடியிருப்பதாக' அவர் தெரிவிக்கிறார். மேடையில் தோன்றும் போது ஷாஸ்திரி சிரிக்கிறார், வசனங்களை பேசுகிறார், கேமராவுக்கு முன் கையை நீட்டி வேறு குரலில் பேசுகிறார். ஒரு கூட்டத்தில் வேஷ்டி அணிந்த ஒருவரை முகேஷ் என்ற பெயரில் அழைக்கிறார். அந்த நபர் மேடையில் தோன்றியதும், அவரிடம் பேசாமல் முகேஷையும் அவரின் குடும்பத்தையும் வருத்தும் பிரச்னைகளை ஒரு காகிதத்தில் எழுதுகிறார். அதை படித்த முகேஷ் அப்படியே அதை ஒப்புக் கொள்கிறார். யார் இந்த ஆசாராம் சாமியார்? #BBCSpecial அதானி - ஹிண்டன்பெர்க்: ஷார்ட் செல்லிங், ஷெல் நிறுவனம், சந்தை மூலதனம் - எளிய விளக்கம் மற்றொரு நிகழ்வில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனை கொண்ட தாயை அழைத்து அவருக்காக சில மந்திரங்களை எழுதுகிறார். "இதை தினமும் சொல்லுங்கள், இது உங்கள் மகனை குணமாக்கும். உங்கள் பணக்கஷ்டத்தை தீர்க்கும்" என்கிறார். இம்மாதிரியான செய்கைகள் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தருகிறது. அதனால் அவருக்கு 'மூன்றாம் கண் இருப்பதாகவும் அதன்மூலம் அவர் இதயங்களுக்குள் நுழைய முடியும்' என்றும் அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஷாஸ்த்ரி மூட நம்பிக்கைகளை பரப்புவதாகவும், மலிவான தந்திரங்களைச் செய்து மக்களைக் கவர முயற்சிப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேஜிக் நிபுணர்கள் மற்றும் மனதை படிக்கும் நிபுணர்கள் சிலர், மனதைப் படிப்பது என்பது ஒரு கலை மட்டுமே அது எந்த தெய்வீக சக்தியாலும் ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,FB/BAGESHWARDHAMSARKAROFFICIAL "அவர் மனதை படிப்பார் என்று கூறும்போதும் அது ஏதோ ஒரு அதிசய சக்தி என்று கூற கூடாது, அது கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கலை. அது ஒரு தெய்வீக சக்தி என்று யாரானேனும் கூறினால் அது மூட நம்பிக்கை. அவர் பொய்யை பரப்புகிறார்," என தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார் சுஹானி, இவர் ஒரு மனதைப் படிக்கும் வல்லுநர். தான் மூட நம்பிக்கையைப் பரப்புவதாக தன்மீது தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாகவும் தான் அனைத்துவித பிரச்னைகளையும் தீர்த்துவிடுவேன் என்று கூறவில்லை என்றும் ஷாஸ்திரி தெரிவித்தார். சில இந்து மத தலைவர்களும் ஷாஸ்திரியின் சக்தி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அவருக்கு அவ்வளவு சக்திகள் இருந்தால் ஜோஷிமத்தில் விரிசல் விடும் வீடுகளை காப்பாற்றற்றும் என்று இந்து மத தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஷாஸ்திரி அரசியல் ரீதியான சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இந்தியா ஒரு இந்து தேசம் என்று கூறி சிறுபான்மை மக்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல ஒரு நபரை பார்த்து 'என்னை தொடாதே நீ ஒரு தீண்டத்தகாதவர்' என்று கடந்த வருடத்தில் ஷாஸ்திரி கூறும் வீடியோ ஒன்றும் வைரலானது. ஆனால் பல வலது சாரி இந்து தலைவர்கள் ஷாஸ்த்ரிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்துக்கள் மதம் மாறுவதற்கு எதிராக அவர் பேசுவதால் அவர் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்படுகிறார் என்று அவர்கள் கூறுகின்றனர். "யாரேனும் மதமாற்றம் குறித்துப் பேசினால்…அவர்கள் தவறாக குற்றம்சாட்டப்பட்டு தாக்கப்படுகின்றனர். பாகேஷ்வர் மகாராஜாவுக்கு எதிரான தாக்குதலுக்கு இதுதான் காரணம். அதனால்தான் நாங்கள் அவருக்கு உறுதுணையாக நிற்கிறோம்." என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கபில் மிஷ்ரா சமீபமாக டிவிட்டரில் தெரிவித்தார். ஷாஸ்திரி தன்னை அடிக்கடி 'பட்டிக்காடு' என்றும் 'படிக்காதவர்' என்றும் கூறி கொள்கிறார். கோவிலின் வலைதளத்தில் அவருக்கு மதம் மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்ததாகவும், வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கோவிலுக்கு வந்ததாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள காடா என்ற கிராமத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் 1996ஆம் ஆண்டு பிறந்த ஷாஸ்த்ரி, குடும்பத்திற்கு வருமானம் ஈட்டப் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு ஷாஸ்திரி ஒரு வருட காலமாக காணாமல் போய்விட்டார் என அவருடன் பள்ளியில் படித்த நபர் ஒருவர் பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்தார். மேலும் அவர் திரும்பி வந்த பிறகே அரசியல் தலைவர்கள் மற்றும் பிற சக்திவாய்ந்த மனிதர்கள் அவரை பார்க்க கோவிலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். "அதேபோல ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்" என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இன்று பத்துக்கு மேற்பட்ட கார்கள் ஷாஸ்த்ரியின் காரை பின் தொடர்ந்து செல்கின்றன. சில நேரங்களில் தனியார் விமானத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார். https://www.bbc.com/tamil/india-64545084 -
By தமிழ் சிறி · Posted
வாசித்த கருத்து தெரிவித்தமைக்கு... நன்றி புங்கையூரான். 🙏 ஏன்... இப்போ அதிகம் எழுதுவதில்லை. உங்கள் எழுத்துக்களை ஆவலுடன் வாசிப்பதில் நானும் ஒருவன். 🙂 -
By தமிழ் சிறி · Posted
யாழ். களத்தில் சேர்ந்த நாளில் இருந்து, உங்களைப் போல ஆட்களுக்காக, பிரசர் குளிசை போட ஆரம்பித்து விட்டேன். 😂 🤣
-
Recommended Posts