Jump to content

கோவை, திருப்பூர், ஈரோட்டில் குவிக்கப்படும் அதிரடிப்படை - பதற்றத்தில் மாவட்டங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவை, திருப்பூர், ஈரோட்டில் குவிக்கப்படும் அதிரடிப்படை - பதற்றத்தில் மாவட்டங்கள்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கோவை திருப்பூர் அதிரடிப்படை

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் வசிக்கும் வீடுகள், அலுவலகங்களை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்களால் அந்த மாவட்டங்களில் மத்திய அதிரடிப்படை குவிக்கப்பட்டு வருகிறது. என்ன நடக்கிறது?

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் வாழும் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் இணைந்து மிகப்பெரிய சோதனையை வியாழக்கிழமை நடத்தின.

தீவிரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு சில பிஃப்ஐ தலைவர்கள் உதவி செய்ததாகவும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடும்போக்கு அமைப்பில் சேர உறுப்பினராக சேருவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே கேரளாவில் 8, கர்நாடகாவில் 15, தமிழ்நாடு, உத்தர பிரதேசத்தில் 1, ராஜஸ்தானில் 2 என மொத்தம் 45 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின்போது தமிழ்நாட்டில் பதிவான இரண்டு வெவ்வேறு வழக்குககள் ஒன்றில் மூன்று பேரும் மற்றொன்றில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பிஃஎப்ஐ அமைப்பு முறைப்படி அரசியல் கட்சியாக பதிவாகியுள்ளது. அதன் பிரதிநிதியாக செயல்படும் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருக்கிறனர்.

RC 14/2022/NIA/DLI என்ற முதல் தகவல் அறிக்கை பதிவான வழக்கில், மொஹம்மத் அலி ஜின்னா, மொஹம்மத் யூசுஃப், ஏ.எஸ். இஸ்மாயிலும், RC 42/2022/NIA/DLI என்ற முதல் தகவல் அறிக்கை பதிவான வழக்கில் சையது இஷாக், வழக்கறிஞர் காலித் மொஹம்மத், ஏ.எம். இட்ரிஸ், மொஹ ம்மத் அபுதாஹிர், எஸ். காஜா மைதீன், யாசர் அராஃபத், பரக்கதுல்லா, ஃபயாஸ் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ஐஏ கைதுக்கு எதிர்வினையா?

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகளை இலக்கு வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தால் அங்கு அமைதி யற்றசூழல் காணப்படுகிறது. இதையடுத்து அந்த மாவட்டங்களுக்கு மத்திய படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 

மத்திய படையினர்

கலவர காலங்களில் வன்முறையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு அங்கமான அதிவிரைவு அதிரடிப்படையின் (ஆர்ஏஎஃப்) இரண்டு கம்பெனி படையினர் இந்த மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் இருந்து இந்த மாவட்டங்களுக்கு வந்த படையினர், முதலாவதாக நகரின் முக்கிய சாலைகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

பெட்ரோல் குண்டு பாட்டில்கள் எங்கெல்லாம் வீசப்பட்டன?

கோவையில் மூன்று இடங்களிலும் பொள்ளாச்சியில் இரண்டு இடங்களிலும் மேட்டுப்பாளையத்தில் ஒரு இடத்திலும் பாஜகவினருக்கு சொந்தமான பகுதிகளில் பாட்டில் குண்டு வீசப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த வேளையில், பாஜகவினர் பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 'எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கு காரணம்' என அவர்கள் கோஷமிட்டனர்.

இந்த நிலையில் கோவை மாநகரில் கல்லாமேட்டில் பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் இரவோடு இரவாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆரிஸ், இப்ராஹிம், ஜபருல்லா ஆகிய அந்த மூன்று பேர் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் கூறினர்.

ஆரிஸின் தாயார் ரஹ்மத் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இன்று அதிகாலை 3 மணி அளவில் எங்கள் வீட்டு கதவை யாரோ பலமாக தட்டினர். யார் என்று விசாரிப்பதற்குள் கதவை உடனடியாக திறக்கா விட்டால் உடைத்து விட்டு உள்ளே வருவோம் என மிரட்டினர். வீட்டு வாயிலில் நூற்றுக்கணக்கான போலீசார் இருந்தனர். என் மகன் ஆரிஸை வலுக்கட்டாயமாக அவர்கள் அழைத்துச் சென்றனர்," என்றார்.

"லுங்கி அணிந்து உறங்கிக் கொண்டிருந்தவரை ஆடை கூட மாற்ற விடாமல் பூட்ஸ் காலை வைத்து மிதித்து இழுத்துச் சென்றனர். எங்கள் வீட்டில் இருந்த மூன்று செல்போன்களையும் எடுத்துச் சென்று விட்டனர். தற்போது வரை அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்கிற தகவல் இல்லை. எதுவும் செய்யாத அப்பாவிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்படி ஏதாவது தவறு செய்திருந்தால் தலைமறைவு ஆகாமல் ஏன் வீட்டில் வந்து இருக்கப் போகிறார்கள்," என்றார்.

இப்ராஹிம் என்பவரை தொழுகை சென்றபோது காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளதாக அவரின் தங்கை சஜினா கூறுகிறார். "இப்ராஹிம் உடல்நலம் முடியாதவர் தொழுகைக்காக சென்றபோது காவல்துறையினர் எந்த தகவலும் தெரிவிக்காமல் அழைத்துச் சென்றனர்" என்றார்.

இந்த நிலையில், பிடிபட்ட மூன்று பேரும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

Presentational grey line

 

Presentational grey line

தமிழ்நாட்டில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வந்துள்ள வேளையில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் "கோயம்புத்தூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும்," என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

காவல் ஆணையர் பேட்டி

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், "கோவை மாநகரில் 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்படுகிறது. அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்," என்று தெரிவித்தார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி அமைப்பின் ஆதரவாளர்கள் மதன் குமார் மற்றும் சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடையின் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை ஒருபுறம் நடந்த வேளையில்தான் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிய பாட்டில்கள், பாக்கெட்டுகளை சில இடங்களில் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

 

கோவை மரக்கடை

கோவை மாநகர் கரும்புக்கடை, ஆத்துப்பாலம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கோவை பெட்ரோல் குண்டு

 

பாஜக கோவை தீ பெட்ரோல் குண்டு

ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம், டெலிபோன் நகரில் உள்ள பூந்துறை பிரதான சாலையில் பாஜக தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவரது மர சாமான் கடையை நோக்கியும் மர்ம நபர்கள் நான்கு டீசல் நிரப்பிய பாக்கெட்டுகளை வீசினர்.

 

ஈரோடு பாஜக

இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து பார்த்தபோது, ஒரு டீசல் பாக்கெட்டில் ஏற்பட்ட தீயால் கடையின் ஜன்னல் அருகே தீ பிடித்திருந்தது. மற்ற மூன்று டீசல் பாக்கெட்டுகள் எரியாமல் அப்படியே கிடந்தன.

 

பெட்ரோல் குண்டு

 

பெட்ரோல் குண்டு

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரியாமல் கிடந்த மூன்று டீசல் பாக்கெட்டுகளையும், அருகிலிருந்த தீக்குச்சிகளையும் கைப்பற்றிய போலீஸார், அவற்றை வீசிய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பாஜகவினர், அந்த கடை முன்பாக பெருமளவில் திரண்டனர்.

 

கோயம்புத்தூர்

முன்னதாக, வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் கோவை மாநகரின் சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை நோக்கியும் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி விட்டு தப்பிச் சென்றனர்.

இரண்டு இடங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வெடிக்காததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும், சம்பவத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இரு இடங்களிலும் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசப்பட்ட பகுதிகளுக்கு அருகே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிவான காட்சிகளை வைத்து, இந்த செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-63011659

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்களைக் குறிவைத்து பெட்ரோல் குண்டு தாக்குதல்கள் - எங்கெங்கு நடந்தன?

24 செப்டெம்பர் 2022, 05:51 GMT
 

பெட்ரோல் குண்டு

பட மூலாதாரம்,TNPOLICE

தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் தீவைப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இன்றும் தொடர்ந்துள்ளன.

மூன்றாவது நாளாகச் இத்தகைய சம்பவங்கள் நடக்கும் நிலையில், ஏற்கெனவே பல்வேறு மாவட்டங்களில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சமூகத்தைச் சீண்டும் வகையிலும், வன்முறைக்கு வித்திடும் வகையிலும் அமைந்திருப்பதாக காவல்துறை கூறுகிறது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் இணைந்து மிகப்பெரிய சோதனையை வியாழக்கிழமை நடத்தின.

 

தீவிரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு சில பிஎஃப்ஐ தலைவர்கள் உதவி செய்ததாகவும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடும்போக்கு அமைப்பில் சேர உறுப்பினராக சேருவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்த அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனைகளில் கேரளாவில் 8 பேர், கர்நாடகாவில் 15 பேர், தமிழ்நாடு 14 பேர், உத்தர பிரதேசத்தில் ஒருவர், ராஜஸ்தானில் இருவர் உள்ளிட்ட மொத்தம் 45 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின்போது தமிழ்நாட்டில் பதிவான இரண்டு வெவ்வேறு வழக்குககள் ஒன்றில் மூன்று பேரும் மற்றொன்றில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின்போது சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.

எங்கெங்கு தாக்குதல்கள், தாக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன?

  • ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு மருத்துவரான மனோஜ் குமார் பாஜகவின் ஆதரவாளர். அவருக்கு கேணிக்கரையில் சொந்தமாக மருத்துவமனை உள்ளது. நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அளவில் இவரது மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களுகள் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். கார் தீ வைத்து எரிக்கபட்டது இடத்திற்கு அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.
  • திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டியில் நகர முன்னாள் துணைத் தலைவர் சிவசேகர் என்பவரது மாருதி சுசுகி வாகனத்துக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு தீவைத்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்ததாகவும் கார் முழுவதும் எரிந்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பெட்ரோல் குண்டு

பட மூலாதாரம்,TNPOLICE

  • திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைப் பட்டியைச் சேர்ந்த பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் செந்தில் பால்ராஜ் என்பவரது வாகனங்கள் மீது நள்ளிரவு நேரத்தில் தீவைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கார், 4 இரு சக்கர வாகனங்கள் எரிந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்திலும் அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்துச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • கோயம்புத்தூர் மாவட்டம் கோவைப் புதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக, கேரள கேந்திர பொறுப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
 

பெட்ரோல் குண்டு

பட மூலாதாரம்,TNPOLICE

  • கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் கமலக்கண்ணன் என்பவர் வீட்டில் ஒரு கும்பல் அதிகாலை 3.30 மணிக்கு கற்களை வீசி தாக்கியதாகவும் வாகனங்களுக்கு தீவைத்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் வாகனங்கள் எரிந்து சேதமடைந்ததுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துவிட்டன என காவல்துறை கூறுகிறது.
  • சென்னையை அடுத்த தாம்பரத்தில் சீதாராமன் என்பவரது வாகனங்களுக்கு இன்று அதிகாலை தீவைக்கப்பட்டது என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
  • மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல் வந்திருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சீண்டி, வன்முறையைத் தூண்டும் வகையில் இவை அமைந்திருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.

https://www.bbc.com/tamil/india-62997596

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2022 at 19:10, ஏராளன் said:

எரியாமல் கிடந்த மூன்று டீசல் பாக்கெட்டுகளையும், அருகிலிருந்த தீக்குச்சிகளையும் கைப்பற்றிய போலீஸார், அவற்றை வீசிய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பாஜகவினர், அந்த கடை முன்பாக பெருமளவில் திரண்டனர்.🤔

தென் மாநிலங்களிலே மதவாத அரசியல் வேரூன்ற முடியாத நிலையொன்று தொடர்ச்சியாக இருந்துவருகின்ற சூழலில் அதனை முறியடித்து மக்களை மதவாதக் கட்சிகளை நோக்கியிழுக்க 'வன்முறை'யைத் தோற்றுவித்துப் பதற்றத்தின் ஊடாக மோதல்களைத் தூண்டி இன்னொரு பாபர் மசூதிக் காலத்தை ஏற்படுத்தவும், அதனூடாகப்  பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்றன தமது நலன்களை அடைய முயற்சிக்கும் தாக்குதல்களாக இருக்கலாம்மோ என்று ஐயப்படாமலிருக்கமுடியவில்லை. கொழும்புத் தேவாலயங்கள் மீதான கோத்தாவின் தாக்குதல் நடவடிக்கை என்று முணுமுணுக்கப்படும் சம்பவம் நினைவுக்குவருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வீடுகளில் தாக்குதல் - அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

33 நிமிடங்களுக்கு முன்னர்
 

annamalai bjp

பட மூலாதாரம்,@ANNAMALAI_K TWITTER

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு தாக்குதல்கள், வாகனங்கள் எரிக்கப்படும் நிகழ்வுகள் ஆகியவை குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே தாக்குதல் செயல்களில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்று (செப்டெம்பர் 24) கே. அண்ணாமலை அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சூழ்நிலை சரியாகும்வரை தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் அமித் ஷாவின் அலுவலகம் தமிழ்நாடு அரசுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி. எஃப்.ஐ) அமைப்பினர் தொடர்பான இடங்களில் சோதனை செய்ததே சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

 

இந்த சோதனைகளுக்கு பிறகு பி. எஃப்.ஐ அமைப்பினர் 11 பேர் கைது செய்யப்பட்டது அந்த அமைப்பினர் மற்றும் உள்நோக்கத்துடன் செயல்படும் சில இஸ்லாமிய அமைப்புகளிடையே அமைதியின்மையை உண்டாக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக உறுப்பினர்கள் மற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சொல்வது என்ன?

 

Sylendra babu ips

பட மூலாதாரம்,SYLENDRA BABU IPS FACEBOOK

 

படக்குறிப்பு,

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு

சமீபத்திய தாக்குதல்களுக்கு பிறகு அந்தந்த காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோருக்கு நேற்று அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு, உள்துறைச் செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகியோர் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து நேற்று மதியம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

இதனிடையே இந்த செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதுவரை 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 100 பேரிடம் விசாரணை தொடர்வதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்களைக் குறிவைத்து பெட்ரோல் குண்டு தாக்குதல்கள்

பட மூலாதாரம்,TN POLICE

கோவை மாநகரில் ஆர்.ஏ. எஃப் (அதிவிரைவு அதிரடிப் படையினர்) இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படையினர் இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படையினர் இரண்டு பிரிவுகள் என அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது. சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பி. தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 1410 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல் வீசிய 19 பேரும், தஞ்சாவூரில் பேருந்து மீது கல்வீசி சேதப்படுத்திய அரித்திரி, சலீம், சிறாஜிதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மீதான சோதனைகள்

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் இணைந்து மிகப்பெரிய சோதனையை வியாழக்கிழமை நடத்தின.

 

கோவையில் இந்திய அரசின் அதிவிரைவு அதிரடிப் படையினர் நடத்திய அணிவகுப்பு.

 

படக்குறிப்பு,

கோவையில் இந்திய அரசின் அதிவிரைவு அதிரடிப் படையினர் நடத்திய அணிவகுப்பு.

தீவிரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு சில பிஎஃப்ஐ தலைவர்கள் உதவி செய்ததாகவும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடும்போக்கு அமைப்பில் சேர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்த அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனை நடவடிக்கையின்போது தமிழ்நாட்டில் பதிவான இரண்டு வெவ்வேறு வழக்குககள் ஒன்றில் மூன்று பேரும் மற்றொன்றில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வுகளுக்கு தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் பிறகு பாஜக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது மற்றும் வாகனங்கள் எரிக்கப்படும் நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின.

தமிழ்நாட்டில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வந்திருந்த வேளையில் இந்த சம்பவங்கள் நடந்தன.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் வெள்ளியன்று (செப்டெம்பர் 23) தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் மற்றும் மத்திய அரசின் அதிவிரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/india-63024776

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணெண்ணெய் குண்டு சம்பவங்கள்: திருமாவளவன், சீமான் எழுப்பிய சந்தேகமும், ஐ.ஜி. எச்சரிக்கையும்

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசிய வழக்கில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்ற வைத்து, வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இதுதொடர்பாக சேலம் மாநகர், அம்மாபேட்டை காவல் நிலையத்தில், ராஜன் அளித்த புகாரின்பேரில் ஏழு பேரை அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

இதில் சிசிடி கேமரா பதிவின்படி காதர் உசேன், சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசியதாக போலிசாருக்குத் தெரியவந்தது.

இதை தொடர்ந்து எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் சையத் அலி மற்றும் 34 வது கோட்ட கிளை எஸ்டிபிஐ தலைவர் காதர் உசேன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த இருவர் மீதும் தீவைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சித்தல், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நீதிமன்ற காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இதற்கிடையே சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

சேலம் மாநகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தேகத்திற்குரிய நபர்கள் இருவரை பிடித்து விசாரணை செய்ததில் சையதுஅலி, காதர் உசேன் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்துள்ளோம்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் முழுவதும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் நஜ்மல் கோடா தெரிவித்தார்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் முகமது ரஃபி, மற்றும் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், முகமது ஆரிஸ், காஜா உசேன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமாவளவன் எழுப்பிய சந்தேகம்

 

அஸ்ரா கார்க்

திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம் போன்ற இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டு பிறர் வீசியதாக கூறிய நிகழ்வுகள் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளன என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சமீபத்திய நிகழ்வுகளின் பின்னாலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் இருக்க வாய்ப்புண்டு என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

தமிழ்நாடு காவல்துறை இந்த கோணத்திலும் அந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சீமான் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதும் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாகக் கூறி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ள அந்த அறிக்கையில் தென் மாநிலங்களே தமது இலக்கென பாஜகவின் தலைவர்கள் கூறிவரும் நிலையில் அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழ்நாட்டில் மதமோதல், கும்பல் வன்முறைகளை ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயல்கின்றனவோ என்ற ஐயம் வலுப்பதாக கூறியிருக்கும் சீமான் "ஆங்காங்கே ஆர்.எஸ்.எஸ்., பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகிற செய்திகள் கடந்த காலத்தையை நினைவூட்டுகின்றன. தாங்களே தங்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி, தங்கள் வாகனத்தை எரித்து அரசியல் லாபம் பெற முயன்ற பாஜக நிர்வாகிகளின் முந்தைய செயல்பாடுகள் யாவும் சமகாலச் சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் என்னும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை..." என்றும் கூறியிருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அத்துடன் ஆர்.எஸ்.எஸ். 50 இடங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ள ஊர்வலம் பற்றி குறிப்பிட்ட சீமான், உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலுவான வாதங்களை வைக்கத் தவறியதன் விளைவாகவே அந்த ஊர்வலங்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை

இந்நிலையில் விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக் வீசிக்கொண்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளரிடம் பேசுமையில்,

"திண்டுக்கல் அடுத்துள்ள குடைபாறைபட்டியைசேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாநகரத் தலைவர் செந்தில் பால்ராஜ் செட்டில் இருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்த வழக்கில் திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் (29) என்பவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மேலும் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. சுமார் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்களில், சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் ரோந்துப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

தற்போதைய சூழலில் விசாரணை என்பது முழு முன்னேற்றத்தில் சீராக சென்று கொண்டிருக்கிறது.

முக்கியமான இடங்களில் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் சில்லறையில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவர்களும் காவல்துறையின் அறிவுறுத்தலை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் யாரெல்லாம் முக்கிய நபர்கள் குறித்து முழு விவரம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய வீடு, அலுவலகம் அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்தார்.

'முதல்வர் விழித்து கொள்ள வேண்டும்'

 

அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசுகையில், "மத்திய அரசு அமலாக்கத் துறை, மாநில காவல் துறை இணைந்து செய்த சோதனைக்கு பாஜக தொண்டன் என்ன செய்வான்? பாஜக தொண்டரின் வீடு உட்பட 25 இடங்களுக்கு மேல் குண்டு போட்டிருக்கிறார்கள். தமிழக காவல்துறை எத்தனை பேரை கைது செய்துள்ளது. தமிழக முதல்வர் விழித்துக் கொள்ள வேண்டும்.

கோவை மாவட்ட காவல்துறை நடந்து கொண்ட விதம் சரியில்லை. இது திமுகவுக்கும் பாஜகவுக்கும் நடக்கின்ற போர். காவல்துறை அதிகாரிகள் இதில் சிக்கிக் கொள்ளாமல் விலகி இருக்க வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும். பாஜக தொண்டர்களிடம் அத்துமீறிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நானே புகார் அளிப்பேன்." என்றார்.

https://www.bbc.com/tamil/india-63026410

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.