Jump to content

நிலக்கரி பிரச்சினைக்கான காரணம் யார்?


Recommended Posts

நிலக்கரி பிரச்சினைக்கான காரணம் யார்?

நிலக்கரி பிரச்சினைக்கான காரணம் யார்?

 

அமைச்சர்களுக்கு இணக்கமான நிறுவனங்களுக்கு டெண்டர்களை பயன்படுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதன் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

நொரோச்சோலை நிலக்கரி ஆலைக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் என அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஊவா பரணகம, பலகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிவாயு நெருக்கடியால் ஐரோப்பியர்கள் அடுத்த குளிர்காலத்தில் வேறு நாடுகளுக்கு செல்ல தயாராகும் நிலையில் இந்த நாட்டில் மின்வெட்டு காலம் அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ள காரணத்தால் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.