Jump to content

ஜப்பானின் முன்னாள் பிரதமர், ஷின்சோ அபேக்கு... அஞ்சலி செலுத்த, அலைமோதும் மக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த அலைமோதும் மக்கள்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர், ஷின்சோ அபேக்கு... அஞ்சலி செலுத்த, அலைமோதும் மக்கள்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த, மக்கள் கூட்டம் திரண்டு வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற விளையாட்டு மற்றும் கச்சேரி அரங்கான நிப்பான் புடோகானில் நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக உலகெங்கிலும் உள்ள சுமார் 4,300 சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு அருகில் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் அல்லது அதற்கும் மேலாக அருகிலுள்ள அதிகாரிகளால் மேசையில் பூக்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ஆம் திகதி, ஜப்பானின் மேற்கில் உள்ள நாரா நகரில் பிரச்சாரக் கூட்டத்தில் தனது கட்சிக்காக ஸ்டம்ப் உரையை நிகழ்த்தியபோது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1301429

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of map and text

ரணில்... பதவி ஏற்ற குறுகிய காலத்தில்...  இரண்டு செத்தவீட்டுக்கு போய் விட்டார்.
1) எலிசபெத் மகாராணி.  2)  ஜப்பானின் முன்னாள் பிரதமர், ஷின்சோ அபே.
முதல் பயணங்களே... செத்தவீடாய் கிடக்கு மோனே. -ஊர்க்கிழவி.-  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஜப்பானின் முன்னாள் பிரதமர், ஷின்சோ அபேக்கு... அஞ்சலி செலுத்த, அலைமோதும் மக்கள்!

ஏன் இவ்வளவு நாள் பிந்தி நடக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஏன் இவ்வளவு நாள் பிந்தி நடக்குது?

 அந்திரட்டியையும், செத்த வீட்டையும்…. ஒண்டாய் செய்யிறது ஜப்பான் வழக்கம் ஆக்கும். 😜 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

 அந்திரட்டியையும், செத்த வீட்டையும்…. ஒண்டாய் செய்யிறது ஜப்பான் வழக்கம் ஆக்கும். 😜 😂

 

ரணில் ஐனாதிபதியாகி  வருமட்டும் காத்திருந்திருப்பார்கள்???😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏன் இவ்வளவு நாள் பிந்தி நடக்குது?

அவரை எரித்து, மனைவி, சாம்பலை கலசத்தில் கொண்டுவந்தார். அதுக்கே அஞ்சலி செலுத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

ரணில் ஐனாதிபதியாகி  வருமட்டும் காத்திருந்திருப்பார்கள்???😂

எலிசபெத் கிழவியும்… ரணில் ஜனாதிபதி ஆகிறதை பார்த்த பிறகுதான்,
கண்ணை மூடுவேன் என்று, காத்திருந்து கண்ணை மூடியிருக்கு போலை…. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2022 at 17:43, Nathamuni said:

அவரை எரித்து, மனைவி, சாம்பலை கலசத்தில் கொண்டுவந்தார். அதுக்கே அஞ்சலி செலுத்துகிறார்கள்.

ஐரோப்பியன் நாடுகளிலை எண்டால் அடுத்த கலியாணம் செய்திருப்பினம்......இவ்வளவு இடைவெளி விட மாட்டினம். 😁

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.