Jump to content

கற்கண்டு இதழ் சுவைப்பது எப்போது?


Recommended Posts

inpavathai.jpg

துடைத்து வைத்த

கண்ணாடி போல

இருந்ததடி

என் உள்ளம்!

இப்போதெல்லாம்

அதில்

தெரிகின்றதடி

உன் விம்பம்!

சலனம் இன்றிப்

பயணித்தவன் நான்

என்னுள்ளே நீ

வந்தபின்

உன் பெயரை

மனனம் செய்யப்

பழகிக் கொண்டவன்

மரணம் வரும்

எப்போதோ

நானறியேன்

அதுவரை

சரணம் என்றுன்னை

அணைப்பேன்

ஊரெல்லாம்

ஏதேதோ கதைக்க

நீயும் நானும்

வாய்மூடி

மெளனிகளாவோம்

உன் மனம்

நானறிய

என் மனம்

நீயறிய

உதவாத கதையெல்லாம்

எமக்கெதற்கு?

சிந்தை சிதறாது

காதலி

முந்தை வினையெல்லாம்

கூடி

எம்மை அலைக்கழிக்கும்

பந்தை பக்குவமாய்

வெட்டி விளையாடும்

கால்பந்து வீரனாவோம்!

விந்தை எதுவுமின்றி

விரண்டோடும்

வினையெல்லாம்!

கற்கண்டு இதழ்

அங்கிருக்க

கண்ணே நான்

இங்கிருக்க

எப்போது

தமிழ்ச் சொற்கொண்டு

விளையாடி

உன்மேல் தள்ளாடி

விழுவது?

என்னப்பன்

விநாயகன்

மனசு வைக்கவேணும்

தன் தம்பிக்கு

உதவியது போல்!

Link to comment
Share on other sites

நல்லதொரு கவிதை. எனக்கு பிடித்த வரிகள்

"மரணம் வரும்

எப்போதோ

நானறியேன்

அதுவரை

சரணம் என்றுன்னை

அணைப்பேன்"

இணைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

கவிரூபன் அண்ணாவை கனகாலம் காணவில்லை பல நாட்களிற்கு பிறகு அவரின் கவிதை படிப்பது மிகவும் நன்றாக இருகிறது...............நல்ல கவிதை அண்ணா அதிலும் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது........... :D

துடைத்து வைத்த

கண்ணாடி போல

இருந்ததடி

என் உள்ளம்!

இப்போதெல்லாம்

அதில்

தெரிகின்றதடி

உன் விம்பம்!

கடைசியாக விநாயகரையும் உதவ கொண்டு வந்து சென்றது சூப்பர் அண்ணா......... :( :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.