Jump to content

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

By DIGITAL DESK 5

28 SEP, 2022 | 10:14 AM
image

‘கலாசாரம் , மதம் என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது,  ஆதலால் கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்கி அதை ஏற்றுமதி செய்து வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டிய அதே வேளை இரவு 10 மணி வரை நாட்டில் மதுபான நிலையங்களையும் திறந்து வைக்க ஆவண செய்ய வேண்டும்’ என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கடந்த புதன்கிழமை பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார்.

இந்த விடயங்களை அடிக்கடி வலியுறுத்தி வரும் ஒரு மக்கள் பிரதிநிதியாக அவர் விளங்குகிறார்.  சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராவதற்கு முன்பதாகவே இந்த விடயங்களை பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றிலும் பொது இடங்களிலும் பேசி வருகின்றார். இலங்கையின் பெருந்தோட்டப்பயிராக ஆரம்பத்தில் கோப்பி விளங்கியது. 

அதுவே 1823 இலிருந்து 1875 வரை பிரதான ஏற்றுமதி பயிராகவும் அந்நிய செலாவணியைப் பெற்றுத்தந்த வர்த்தக பொருளாகவும் விளங்கியது. 1868 இன் இறுதிப்பகுதியில் தேயிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் பிரதான ஏற்றுமதி பொருளாக உள்ளது. இறப்பர் மற்றும் தென்னை போன்றவை பெருந்தோட்ட பயிர்கள் என்ற பிரிவுக்குள் அடக்கப்பட்டாலும்   சிறு ஏற்றுமதி பொருட்களாகவே அவை கணிக்கப்படுகின்றன. 

தேயிலையை மட்டும் நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்றும் மாற்று பயிர்ச்செய்கை குறித்த சிந்தனை அவசியம் என்ற ரீதியில் நாட்டின் தென்பகுதிகளில் பாம் எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிக்கும் செம்பனை செய்கை ஆரம்பிக்கப்பட்டது. 

இந்தப் பயிர்ச்செய்கையால் சுற்று சூழல் பாதிப்பு , நிலம் வரண்டு போதல் போன்றன ஏற்படும் அதே வேளை, பாரம்பரிய தேயிலை பயிர்ச்செய்கை பாதிக்கப்படும் என்றும் ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழப்பர்  என்பதாலும் அதை மத்திய மலை பிரதேசங்களில் ஊக்குவிக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மேலும் செம்பனை செய்கையை மலேசியா போன்ற நாடுகள் பெருமளவில் முன்னெடுக்கின்றன. அதற்கான வர்த்தக நாமத்தை எந்த நாடுகளும் பிரத்தியேகமாக கொண்டிருக்கவில்லை. ஆனால் இலங்கையானது கடந்த 150 வருடங்களாக, ‘சிலோன் டீ’  என்ற இலங்கை தேயிலையின் வர்த்தக நாமத்தை உலகெங்கினும் கொண்டிருக்கின்றது. பல நாடுகள் இலங்கைத் தேயிலையை விரும்பி இறக்குமதி செய்கின்றன. 

இவ்வாறான நிலையிலேயே தற்போது கஞ்சா செய்கை பற்றி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பேசி வருகின்றார். கஞ்சா என்பது மருத்துவ தேவைக்கு சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையாக இருந்தாலும் அதை போதை தரும் செயற்பாடுகளுக்காகவே உலகெங்கும் பலர் அதிகமாக ப்பயன்படுத்துகின்றனர்.  

பாரியளவில் பயிரிட்டு அதை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உலகெங்கினும் மருத்துவ தேவையை உடைய மூலிகையாக கஞ்சா இல்லை என்பதை அனைவரும் அறிவர். மேலும் எந்த நாடும் கஞ்சா செடியை   ஏற்றுமதி செய்யும் அளவுக்கு  பொருளாதார பின்னடைவை கொண்டிருக்கவில்லை. அவ்வாறு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நாடுகளும் இப்படியானதொரு முடிவை எடுக்க துணியவில்லை. 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் சிந்தனையில் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனென்றால் அவர் மது பான நிலையங்களை அதிக  நேர உபயோகத்துக்கு திறந்து  விட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

இன்று எமது நாட்டில் மதுபான விற்பனையின் மூலம் கிடைக்கும் வரிவருமானத்தை விட, அதன் பாவனையால் நோயுற்றவர்களுக்கு சுகாதார அமைச்சு செலவிடும் தொகையே அதிகம் என்ற விடயம் டயானா கமகேவுக்கு தெரியவில்லை. 

இந்த விடயத்தை சுட்டிக்காட்டியே ஒரு தடவை சுகாதார அமைச்சராக இருந்த நிமால் சிறிபால டி சில்வா, மது பாவனையால் நோயுற்றவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் இலவசமாக மருத்துவம் பார்க்க முடியாது என்று தெரிவித்திருந்தார். 

மேலும் இலங்கையில் இடம்பெறும் நானாவித குற்றச்சம்பவங்களுக்கு 90 வீத காரணியாக இருப்பது மது மற்றும் போதை பொருட்கள் தான் என்ற தகவல்களை அவர் பொலிஸ் தரப்பிடம் பெறலாம். கஞ்சா என்பது எமது கலாசாரத்துடன் தொடர்புடையது என்று கூறும் அவர் அதை மருத்துவ மூலகையாக பெருமளவில் பயன்படுத்தும் இலங்கை பாராம்பரிய மருத்துவர்களின் விபரங்களையும் வைத்தியசாலைகளின் விபரங்களையும் பெற வேண்டும்.

மருத்துவ தேவைகளுக்காக பாரியளவில் ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவைகள் இருக்கின்றது என அவர் கூறுகின்றார். அப்படியானால் அதை அத்தேவைகளுக்காக பெருமளவில் கஞ்சா செடிகளை  இறக்குமதி செய்யத் தயாராக இருக்கும் நாடுகள் எவை போன்ற விபரங்கள் இங்கு அவசியம். நாட்டை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்க எதை வேண்டுமானாலும் செய்து பணத்தைப் பெற்றால் போதும் என்ற மனப்பான்மையிலிருந்து டயானா கமமே வெளியே வர வேண்டும்.  மீன் விற்ற பணம் மணக்காது என்பர்.   

கஞ்சா விற்ற பணம் போதை தராது என்றாலும் இந்த திட்டத்தின் பின்விளைவுகள் எந்தளவுக்கு ஆபத்தானவை என்பதை யதார்த்தம் விளங்காத டயானா எம்.பிக்கு உரியோர் விளக்கமளிக்க வேண்டும். இலங்கையின் வர்த்தக நாமம் சிலோன் டீ என தேயிலையைக் குறித்து நிற்கும் போது அதை கஞ்சா என்று மாற்றினால், இலங்கையர்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் அவ்வாறு பெயர் சொல்லி அவர்களை  அழைப்பதை இந்த மக்கள் பிரதிநிதி விரும்புகின்றாரா?  அதை இலங்கையர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ன? இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…? | Virakesari.lk

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.