கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் பதியப்பட்டது September 28, 2022 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது September 28, 2022 (edited) பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/ Edited September 28, 2022 by ரஞ்சித் 8 8 Link to comment Share on other sites More sharing options...
இணையவன் Posted September 28, 2022 Share Posted September 28, 2022 நல்லது ரஞ்சித். இக் கட்டுரை குறிப்பிட்ட இணையத்தளத்திலிருந்து நீக்கப்படலாம். பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை மொழி பெயர்ப்பதற்கான காப்புரிமை எவ்வாறானது என்று தெரியவில்லை. கட்டுரை ஆசிரியரின் தொடர்பு இருக்குமானால் அனுமதி கேட்டுப் பார்க்கலாம். 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted September 28, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted September 28, 2022 நல்லது ரஞ்சித். தொடர்ந்து எழுதுங்கள். மிகவும் ஆவலாக உள்ளோம். நன்றி. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted September 28, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted September 28, 2022 1 hour ago, ரஞ்சித் said: இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன். எமது அன்புக்குரிய தேசியத் தலைவரைப் பற்றி… தமிழில் வாசிக்க ஆவலாக உள்ளேன். அந்தக் கட்டுரைகளை யாழ். களத்தில் மொழி பெயர்த்து பதிவதன் மூலம்…. இங்கு ஓரு ஆவணமாக பதியப் பட்டிருக்கும். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted September 28, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted September 28, 2022 2 hours ago, இணையவன் said: நல்லது ரஞ்சித். இக் கட்டுரை குறிப்பிட்ட இணையத்தளத்திலிருந்து நீக்கப்படலாம். பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை மொழி பெயர்ப்பதற்கான காப்புரிமை எவ்வாறானது என்று தெரியவில்லை. கட்டுரை ஆசிரியரின் தொடர்பு இருக்குமானால் அனுமதி கேட்டுப் பார்க்கலாம். மிக்க நன்றி இணையவன், தமிழ்ச் சங்கம் ஆசிரியருடன் இதுபற்றிக் கேட்டிருக்கிறேன். அவரது பதில் வந்தவுடன் நான் இதனை எழுத ஆரம்பிக்கலாம். 57 minutes ago, ஈழப்பிரியன் said: நல்லது ரஞ்சித். தொடர்ந்து எழுதுங்கள். மிகவும் ஆவலாக உள்ளோம். நன்றி. மிக்க நன்றி அண்ணா, எனக்கும் எழுதவே விருப்பம். அனுமதிக்காகக் காத்திருக்கிறேன். 57 minutes ago, தமிழ் சிறி said: எமது அன்புக்குரிய தேசியத் தலைவரைப் பற்றி… தமிழில் வாசிக்க ஆவலாக உள்ளேன். அந்தக் கட்டுரைகளை யாழ். களத்தில் மொழி பெயர்த்து பதிவதன் மூலம்…. இங்கு ஓரு ஆவணமாக பதியப் பட்டிருக்கும். மிக்க நன்றி சிறி, அனுமதி கிடைத்தவுடன் ஆரம்பிக்கலாம். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted September 28, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted September 28, 2022 நற்செயல்....தொடருங்கள் ரஞ்சித் 1 Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted September 28, 2022 Share Posted September 28, 2022 29 minutes ago, ரஞ்சித் said: தமிழ்ச் சங்கம் ஆசிரியருடன் இதுபற்றிக் கேட்டிருக்கிறேன். அவரது பதில் வந்தவுடன் நான் இதனை எழுத ஆரம்பிக்கலாம். உங்கள் நேரத்துக்கு நன்றி ரகு. வாசிக்க ஆவலுடன் உள்ளேன். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் Posted September 28, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted September 28, 2022 மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட வரலாறுகள் தெளிவாக எழுதப் பட வேண்டும். ஆவணப் படுத்தப் பட வேண்டும். எழுதுங்கள்….! 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் Posted September 30, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted September 30, 2022 நீங்கள் தமிழில் எழுதும் போது வாசிக்க நன்றாக இருக்கும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nochchi Posted September 30, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted September 30, 2022 நல்லவிடயம். தொடருங்கள். காலத்தேவைகருதியதாக அமையும் . நன்றி Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted October 2, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 2, 2022 அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் அடிப்படையே நான் இதுவரை எழுதிய மூன்று வாழ்க்கை வரலாறுகளினதும் கருப்பொருளாக இருந்தது. அதுவே நான் இன்று எழுதும் பிரபாகரன் எனும் ஆளுமையின் வாழ்க்கைச் சரித்திரனதும் மூலமாக இருக்கிறது. அத்துடன் தமிழர்கள் தமது தாயகத்தைக் காக்கத் தவறுவதும், தமது சனத்தொகையினை வளர்ப்பதில் தவறுவதும், தமது மொழியின் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறுவதும், இன்னும் குறிப்பாகச் சொன்னால் தமது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறுவதும் அவர்களின் இருப்பையே முற்றான ஆபத்தில் தள்ளிவிடும் என்பதையே இவ் வாழ்க்கைச் சரித்திரங்களின் மூலம் பதிவிட்டு வருகிறேன். மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, நேர்த்தியாகச் செயற்படுத்தப்பட்டுவரும் முற்றான இனவழிப்பிற்குள் தமிழினம் இன்று உட்பட்டு வருகிறது. அரச ஆதரவுடன் நடந்துவரும் திட்டமிட்ட நிலக்கொள்ளைகள் மூலம் தமிழினம் தனக்குரிய தாயகத்தினை சிறிது சிறிதாக இழந்துவருகிறது. மலையகத் தமிழரின் வாக்குரிமைகளை மறுத்துவிட்டதன் மூலம் அவர்களின் சனத்தொகை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் தனிச் சிங்களச் சட்டம் மூலம் அவர்களை கற்பதிலிருந்தும் தடுத்துவிட்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டினை தாரக மந்திரமாக வரைந்துகொண்டதன் மூலம் சிங்கள அரசுகள் அவர்களை அடிமைகளாகவே நடத்தி வருகின்றன. இறுதியாக, திட்டமிட்ட ரீதியில் அரசின் பின்புலத்துடன் அவர்கள் மேல் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டு வரும் வன்முறைகளின் மூலம் அவர்கள் உயிர்வாழ்தலுக்கான அடிப்படை உரிமையினைக் கூட இழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள இனவாதத்தின் கோட்டையென்று கருதப்படும் லேக்ஹவுஸ் பத்திரிக்கையில் நான் செய்தியாளராகக் கடைமையாற்றிய காலத்தில் இக்கதைபற்றி எழுத விரும்பியிருந்தேன். 1957 இல் நான் சாதாரண பத்திரிகையாளராக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பதிப்பான தினகரனில் இணைந்துகொண்டதிலிருந்து 1997 இல் அந்நிறுவனத்தில் ஆங்கிலப் பதிப்பிற்கான மூத்த உப ஆசிரியராக பதவியிலிருந்து ஓய்வுபெறும்வரை எமது இனப்பிரச்சினை குறித்த பல முக்கிய நிகழ்வுகளை நான் பதிவுசெய்து வந்ததோடு, தமிழருக்கெதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த பல முக்கிய சிங்களத் தலைவர்களுடனும் எனக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. செளமியமூர்த்தி தொண்டைமான் முதலாவது வாழ்க்கைச் சரித்திரம், நட்பிற்காக தொண்டைமானுக்காக எழுதப்பட்டது. மலையகத் தமிழர்களின் தலைவரான அவருக்கும் எனக்கும் சுமார் 41 வருடங்களாக நெருங்கிய நட்பு இருந்துவந்தது. 1988 கார்த்திகை மாதத்தில் தனது சரிதை பற்றி எழுதுமாறு அவர் என்னை அழைத்திருந்தார். அவர் விரும்பியவாறே அவரின் சரிதையும் என்னால் எழுதப்பட்டு அடுத்தவருடமே பிரசுரிக்கவும் பட்டது. சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் என்னை மீளவும் அழைத்த அவர், தனது சரிதைபற்றிய தகவல்களை மேலும் விரிவாக்கும்படி என்னிடம் கேட்டுக்கொள்ளவே, அவருக்காக அதனையும் நான் செய்தேன். அவர் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னரே மேம்படுத்தலின் பிரதி வெளிவந்தது. பின்னர் இணையப் பத்திரிக்கையான ஏசியன் ட்ரிபியூனில் இச்சரித்திரம் ஒரு தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. தொண்டைமான் அவர்களின் சரிதையினை நான் எழுதியபோது, வேண்டுமென்றே இரு முக்கிய விடயங்களை எழுதுவதை நான் தவிர்த்திருந்தேன். தமிழர்களின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த அக்கறை தொடர்பாகவும், சிங்களவர்களால் தனது அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சி எடுத்திருந்த சில நடவடிக்கைகள் தொடர்பாகவும் நான் எழுதுவதைத் தவிர்த்துவிட்டேன். முதலாவது சம்பவம் 1986 ஆம் ஆண்டு மார்கழி முதலாம் திகதி நடந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த டொலர் மற்றுன் கென்ட் பாம் எனப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தியிருந்தார்கள். தாக்குதல் நடந்த அன்று கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அலுவலக உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் நான் நுழைந்தேன். "நீங்கள் செய்தி கேள்விப்பட்டீர்களா?" என்று என்னைப்பார்து கேட்டார் தொண்டைமான். அவரது கேள்வியை நான் அவ்வளவாகச் சட்டை செய்யாதது போலக் காட்டிக்கொண்டிருக்க, அவரோ, "சிங்கள அரசு எல்லாவற்றிற்கு மேலானது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர்களை விடப் பலமானவர்களும் இருக்கிறார்கள். பிரபாகரன் அவர்களுக்கொரு பாடத்தினைப் புகட்டியிருக்கிறார்" என்று அவர் முடித்தார். இரு சிங்களக் குடியேற்றங்கள் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு, பல சிங்களவர்கள் கொல்லப்பட்டிருந்தபோதும்கூட, இத்தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் தொண்டைமானுக்கு இருந்தன. 1979 ஆம் ஆண்டு, தொண்டைமான் அவர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களாக இருந்த பல்லாயிரக்கணக்கான மலையகத் தொழிலாளர்கள் மீது அரசும் குண்டர்களும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களில் அடித்து விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்களைக் குடியேற்றி மீள்வாழ்வளிப்பதற்காகவே கென்ட் மற்றும் டொலர் பாம் எனப்படும் விவசாயப் பண்ணைகளை தமிழ்த் தன்னார்வ அமைப்புக்கள் ஆரம்பித்து நடத்தி வந்தன. ஆனால், 1986 ஆம் ஆண்டு ராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடவடிக்கைகள் மூலம் அப்பகுதியில் வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை அடித்து விரட்டிவிட்டு அப்பகுதிகளை தெற்கில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக அந்நாட்களில் காணி மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமிணி திசாநாயக்கா மாற்றியிருந்தார். தனது மக்கள் தமது வாழிடங்களிலுருந்து விரட்டப்பட்டதற்கும், அவ்விடங்கள் ராணுவத்தினரின் உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டதற்கும் தனது கடுமையான கண்டனத்தினை தொண்டைமான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும்கூட, அவை எதுவுமே சிங்கள் அரசினால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆகவே, தன்னால் செய்ய முடியாது போனதை பிரபாகரன் செய்தது அவருக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்திருந்தது. 3 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted October 2, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 2, 2022 சிறு பிள்ளையாக பிரபாகரன் தொண்டைமான் பற்றி நான் முன்னர் பதியாத இன்னொரு முக்கியமான விடயம் அடுத்த வருடம் நடந்தேறியது. 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் தரையிறங்கும் என்று கூறப்பட்டது. பலாலி வினாமப்படைத் தளத்தில் வந்திறங்கிய விமானங்களிலிருந்து இறக்கப்பட்ட டிரக் வண்டிகளில் இந்திய ராணுவத்தினர் வந்திறங்கினர். பலாலி யாழ்ப்பாண வீதியில் அவர்கள் பவணி வந்தபோது பலத்த ஆரவாரத்துடனான வரவேற்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், பிரபாகரனை இந்திய அரசு தில்லியில் ஒரு கைதியைப் போல அடைத்து வைத்திருக்கிறது என்கிற செய்தி பரவியபோது இந்திய ராணுவத்தை வரவேற்ற தமிழ் மக்களின் மனோநிலை மாறத் தொடங்கியது. அவர்கள் இந்திய ராணுவத்தின்மீது தமது எதிர்ப்பினைக் காண்பிக்கத் தலைப்பட்டனர். இந்திய ராணுவ வாகனங்களை வீதிகளில் வழிமறித்தனர்.தமது தலைவர் மீளவும் பாதுகாப்பாக தம்மிடம் திருப்பியனுப்பப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். பிரபாகரன் மீது தமிழர்கள் வைத்திருந்த பாசத்தினையும், நம்பிக்கையினையும் கொழும்பிலிருந்தே அவதானித்துக்கொண்டிருந்த தொண்டைமான் அதிசயித்துப் போனார். "பிரபாகரன் ஒரு மக்கள் தலைவனாக உருவாகிவருகிறார்" என்று அவர் என்னிடம் கூறினார். பிரபாகரன் தொடர்பாக தொண்டைமான் அதுவரை வைத்திருந்த கண்ணோட்டத்தில் இது மிகப்பெரிய வேறுபாட்டினைக் கொண்டிருந்ததாக நான் அப்போது உணர்ந்தேன். அதுவரை பிரபாகரனை ஒரு ராணுவ வல்லுனனாக, ஒரு சிறந்த ராணுவத் திட்டமிடலாளனாகவே அவர் எண்ணியிருந்தார். ஜெயவர்த்தனாவின் அரசையும் ராணுவத்தையும் ராணுவப் பலத்தின் மூலம் முடக்கி சமாதான மேசைக்குக் கொண்டுவருவதில் பிரபாகரன் முயலும் அதேவேளை, ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகள் அரசியலமைப்பினை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றே அவர் நம்பியிருந்தார். பிரபாகரன் தொடர்பாக நீங்கள் கொண்டிருந்த கண்ணோட்டம் மாறக் காரணம் என்ன என்று அவரிடம் வினவினேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார், "மக்கள் அவருடன் இருக்கிறார்கள்". 1989 ஆம் ஆண்டிலிருந்து பிரபாகரனுடன் அவர் தொடர்ச்சியான தொடர்பாடல்களில் ஈடுபட்டு வரத் தொடங்கினார். தனது சரிதையினை விரிவாக்க அவர் என்னை இரண்டாவது முறை அழைத்தபோது பிரபாகரனுக்கும் தனக்கும் இடையே இருந்த உறவினை தனது வாழ்வின் மிக முக்கிய விடயமாகக் குறிப்பிடவேண்டும் என்று என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார். 3 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted October 2, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 2, 2022 பிரஜாவுரிமைப் பிரச்சினை தொண்டைமானின் வாழ்வினூடாகவும், அவரது சேவையினூடாகவும் தமிழர்கள் முகங்கொடுத்த முக்கியமான பிரச்சினையான பிரஜாவுரிமைப் பிரச்சினையினை நான் கண்களூடு பார்க்கமுடிந்தது. தமிழர்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் நோக்கில் சிங்களத் தலைவர்களால் செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான வஞ்சனை இதுவென்றால் அது மிகையில்லை. தமிழர்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் ஒரே வஞ்சனையுடனேயே இந்தச் சட்டத்தினைச் சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களான டி எஸ் சேனநாயக்காவும், ஒலிவர் குணத்திலக்கவும் சோல்பரி கமிஷனை சூட்சுமத்துடன் வழிநடத்தியதன் மூலம், பிரஜாவுரிமை பற்றிய விவாதங்களை நடத்தவும், அதுதொடர்பான முடிவினை எடுக்கவும் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றமே சிறந்தது எனும் வாதத்தினை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டனர். சுதந்திரம் கிடைத்து சரியாக 6 மாதங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் உதவியுடன் புதிய சட்டமான இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினைக் கொண்டுவந்து சுமார் பத்து லட்சம் தமிழர்களின் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்தனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், மற்றும் இலங்கையின் பிரஜைகளாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் என்கிற அடிப்படைகளில் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமது கைங்கரியத்தினை அவர்கள் அரங்கேற்றினார்கள். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஆகியவற்றில் பூர்வீகமாக பிரஜாவுரிமைக்குத் தகுதியானவர்கள் யாரென்று விபரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நாளான 1948, கார்த்திகை 15 இற்கு முன்னர் இலங்கையில் பிறந்த ஒருவரின் தந்தையோ, அல்லது பாட்டனாரோ அல்லது பாட்டனாரின் தந்தையோ இலங்கையில் பிறந்திருப்பின் அந்த நபர் இலங்கையின் பிரஜை ஆவார் என்று கூறுகிறது. அதேவேளை பிரிவு 5 இன்படி, ஒருவர் 1948, கார்த்திகை 15 இற்குப் பின்னர் இலங்கையில் பிறந்திருப்பின், அவரது தந்தையார் இலங்கைன் பிரஜையாக இருந்தால் மாத்திரமே அந்த நபர் இலங்கையின் பிரஜையாகக் கருதப்படுவார் என்று கூறியது. இதன்படி, பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரஜாவுரிமையின்படி சிங்களவர்களும், இலங்கைத் தமிழர்களும், இலங்கை முஸ்லீம்களும் இலங்கையின் பிரஜைகளாக வரையறுக்கப்பட இந்தியத் தமிழர்களும், இந்திய முஸ்லீம்களும் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்மூலம் சுமார் 90 வீதமான மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டதுடன், நாடற்றவர்கள் எனும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இச்சட்டத்தின் பிரிவு 11 இலிருந்து 17 வரையானவற்றில், பிரஜைகளாகப் பதியப்பட்டவர்களின் பிரஜாவுரிமை என்பது ஒருவர் பூரண வயதினை அடைந்தவராகவும், புத்தி சாதுரியமானவராகவும், இலங்கையில் வதிபவராகவும், தொடர்ந்தும் இலங்கையிலேயே வதியும் விருப்பினைக் கொண்டவராகவும், அவரது தாயார் இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் பிரஜாவுரிமைக்காக பதிவுசெய்யும் தகுதியினைப் பெற்றுக்கொள்கிறார் என்று கூறுகின்றது. இதுகூட, ஒருவரின் தாயார் தனது பிள்ளை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் திகதியிலிருந்து குறைந்தது 7 வருடங்களுக்கு முன்னான காலத்தில் இலங்கையில் வசித்திருப்பது அவசியம் என்றும் கூறுகின்றது. இந்தியத் தமிழர்கள் தம்மை இலங்கையின் பிரஜைகளாக பதிவுசெய்வதை முற்றாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டங்களை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த இனவாதச் சட்டத்தினை எதிர்த்துச் செயற்பட்ட இணைந்த தமிழர்களின் அமைப்பான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் உப தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் இச்சட்டம் நிச்சயமாக இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கவே பாவிக்கப்படுகிறது என்று கூறினார். "இந்தவகையான தமிழர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக அழிப்பதிலோ அல்லது பாக்கிஸ்த்தான் போன்றதொரு தமிழர்க்கான தனியான நாட்டினை இலங்கையில் ஏற்படுத்துவிதிலோதான் சென்று முடியும்" என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அன்றைய பிரத மந்திரி டி எஸ் சேனநாயக்க, இந்தியத் தமிழர்கள் இலங்கையின் தற்காலிக வதிவாளர்கள் என்றும், பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காகவே பிரிட்டிஷாரினால் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியதோடு, அடிக்கடி தமிழ்நாட்டிலிருக்கும் தமது கிராமங்களுக்கு அவர்கள் சென்றுவருவது அவர்கள் கூட இலங்கையினைத் தமது சொந்த நாடாகக் கருதவில்லை என்பதனையே காட்டுகிறது என்றும் பதிலளித்திருந்தார். மேலும் இந்தியத் தமிழர்கள் இந்தியாவையே தமது காவலனாகப் பார்ப்பதாகவும், அவர்கள்மேல் இந்தியா எப்போதும் ஒரு கரிசணையான பார்வையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியதோடு, அவர்கள் உண்மையாகவே இந்தியாவுக்குச் சொந்தமானவர்கள், ஆகவே அவர்களை இந்தியா மீள அழைத்துக்கொள்வதுதான் சரியானது என்றும் வாதாடினார். ஆனால், இந்தியாகூட அவர்களை அன்று மீள அழைத்துக்கொள்ள முற்றாக மறுத்துவிட்டது. 3 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted October 2, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 2, 2022 உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பதற்கு, தமிழர்களில் ஒரு பிரதான பிரிவினரை இன்னொரு சட்டத்தினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தன்பக்கம் இழுத்துக்கொண்டார். அதுதான் இந்திய - பாக்கிஸ்த்தான் பிரஜைகளுக்கான பிரஜாவுரிமைச் சட்டம். இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொள்வதற்கான தகமைகள் குறித்து இச்சட்டம் விவரித்திருந்தது. ஜி ஜி பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த ஜி ஜி பொன்னம்பலம் அவர்களுக்கு தொழிற்துரை மற்றும் மீன்வள அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன் அவரும் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார். அவருடன் சேர்ந்து இன்னும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணைந்துகொண்டனர். அரசுடன் இணைந்து புதிதாகக் கொண்டுவரப்பட்ட இந்திய - பாக்கிஸ்த்தானிய பிரஜைகளும், இலங்கையில் வதிபவர்களுக்குமான இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் வக்களித்ததோடு, இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின்மூலம் தாம் இழந்த பிரஜாவுரிமையினை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இவர்கள் வாதாடினர். ஆனால், புதிய சட்டம் மிகக் கடுமையான நிபந்தனைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. திருமணம் முடித்த ஒரு விண்ணப்பதாரி 1939 தை 1 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத விண்ணப்பதாரியொருவர் 1936, தை 1 ஆம் திகதியிலிருந்து 10 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறியது. அதுமட்டுமல்லாமல், இலங்கையில் வசிப்பதற்கு இவர்கள் தேவையானளவு பணத்தையோ வளங்களையோ கொண்டிருத்தல் அவசியம் என்றும் இது கூறியது. தொடர்ச்சியாக இலங்கையில் வதிதல் எனும் சொற்பதத்தின் மூலம், தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நாட்களுக்கு பயணம் செய்த இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின் மூலம் பிரஜாவுரிமையினை பெறமுடியாதவர்களாக ஆக்கப்பட்டனர். இச்சட்டத்தினையடுத்து மொத்த இந்தியத் தமிழச் சமூகமுமே, கிட்டத்தட்ட 975,000 தமிழர்கள் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்கள் அனைவரையும் இந்தியா மீள அழைத்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கை பிடிவாதம் பிடித்தது. ஆனால், இந்தியா இந்த வேண்டுகோளினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துகொண்டு வந்தது. பின்னர் இலங்கையின் பிரதமராக வந்த சிறிமா இந்தியாவின் பிரதமர்களான சாஸ்த்திரியுடன் 1964 இலும், இந்திரா காந்தியுடன் 1974 இலும் இரு வேறு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டதன் மூலம் 525,000 இந்தியத் தமிழர்களை இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார். மீதமாக இருந்தவர்களில் சுமார் 300,000 இந்தியத் தமிழர்களுக்கு வேண்டாவெறுப்பாக இலங்கை பிரஜாவுரிமையினை வழங்கியது. இரண்டாவது ஒப்பந்தத்தின்படி மீதமாகவிருந்த 150,000 தமிழர்களை சரிசமமாக இலங்கையும் இந்தியாவும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் முடிவிற்கு நாடுகளும் இணங்கிக்கொண்டன. இந்தியா சுமார் 600,000 இந்தியத் தமிழர்கள் மீளவும் இந்தியாவுக்குத் திரும்ப விண்ணப்பிக்க முடியும் என்று அழைத்தபோதும்கூட, 504,000 இந்தியத் தமிழர்கள் மட்டுமே இந்த அழைப்பினை ஏற்று மீள இந்தியா திரும்ப விண்ணப்பித்தனர். ஆனால், 1983 ஆண்டு யூலைக் கலவரத்தினால் இந்தியா திரும்பும் நோக்கத்துடன் இருந்த 84,000 தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கையிலேயே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையில் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ள முடியாமலும், இந்தியாவுக்கு மீளத் திரும்ப முடியாமலும் இலங்கையில் வசித்துவந்த இந்தியத் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொடுப்பதில் தொண்டைமான் வெற்றிகண்டார். இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. இதன்மூலம் பிரஜாவுரிமைப் பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட்டதோடு, இந்தியத் தமிழர்களில் கிட்டத்தட்ட பாதியளவுக்கும் சற்று அதிமானவர்கள் இலங்கையின் பிரஜைகளாகும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் இன்று முக்கிய சக்தியாக மலையகத்தில் உருவெடுத்திருப்பதோடு தமது அடையாளத்தினைத் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான அரசியல்க் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நிலைக்கும் உயரும் வாய்ப்பிருக்கின்றது. 4 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted October 2, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 2, 2022 அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் எனது இரண்டாவது சரிதை சமஷ்ட்டிக் கட்சியின் ஸ்த்தாபகரும், தலைவருமான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தினுடையது. அவரது நூறாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு தினகரன் வாரமஞ்சரியில் தொடராக இதனை எழுதிவந்தேன். இலங்கைத் தமிழரின் மிக முக்கியமான அரசியல்த் தலைவராகவிருந்த செல்வாவின் நூறாவது பிறந்தநாள் நினைவினை அவருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையுடன் அனுட்டிக்க அவரது கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி முயலவில்லை என்பது வேதனை. நான் எழுதிவந்த இத்தொடரில் தமிழர்களின் அவலங்களான அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள், அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளமை, தமிழ் மொழியினை திட்டமிட்டு புறக்கணித்தமை ஆகியவை தொடர்பாகவும் எழுதி வந்தேன். அத்துடன், தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற ஜனநாயக வழிப் போராட்டங்கள் பற்றியும், அவை சிங்களத் தலைவர்களாலும், சிங்களக் குண்டர்களாலும் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டு நசுக்கப்பட்டன என்பது குறித்தும் விலாவாரியாகத் தேடி எழுதிவந்தேன். மேலும் தந்தை செல்வாவின் விட்டுக்கொடுக்கா மனோநிலைபற்றியும், இரு சிங்களப் பிரதமர்களோடு அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகள் பற்றியும், அவ்வுடன்படிக்கைககளின் தோல்விபற்றியும், சிங்கள அரசுகளுடனான அவரது ஒத்துப்போதல்கள் பற்றியும் எழுதினேன். 1957 இலிருந்து 1968 வரையான 11 வருட காலப்பகுதியில் இலங்கை அரசுகளுடன் ஒத்துப்போதல் எனும் தந்தை செல்வாவின் பரீட்சாத்த நடவடிக்கையின் தோல்வி அவரை மிகக் கடுமையான அதிருப்திக்கும், விரக்திக்கும் உள்ளாகியதுடன், தமிழர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தமிழ் ஈழம் எனும் தனியான நாட்டினை இலங்கையிலிருந்து பிரித்தெடுப்பதற்கான நடவடிக்கையின் முதற்படியான 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை செய்யுமளவிற்கு தள்ளிச் சென்றது. 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kandiah57 Posted October 2, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 2, 2022 3 hours ago, ரஞ்சித் said: அத்துடன் தமிழர்கள் தமது தாயகத்தைக் காக்கத் தவறுவதும், தமது சனத்தொகையினை வளர்ப்பதில் தவறுவதும், தமது மொழியின் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறுவதும், இன்னும் குறிப்பாகச் சொன்னால் தமது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறுவதும் அவர்களின் இருப்பையே முற்றான ஆபத்தில் தள்ளிவிடும் என்பதையே இவ் வாழ்க்கைச் சரித்திரங்களின் மூலம் பதிவிட்டு வருகிறேன். தமிழ் ஈழம் கிடைக்காமைக்கு இதுவும் ஒரு காரணம்....முக்கியமாக சனத்தொகையை வளர்ப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் போராடமாலேயே. தமிழ் ஈழம் கிடைக்கலாம் 😂 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள்+ நன்னிச் சோழன் Posted October 2, 2022 கருத்துக்கள உறவுகள்+ Share Posted October 2, 2022 1 hour ago, Kandiah57 said: தமிழ் ஈழம் கிடைக்காமைக்கு இதுவும் ஒரு காரணம்....முக்கியமாக சனத்தொகையை வளர்ப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் போராடமாலேயே. தமிழ் ஈழம் கிடைக்கலாம் 😂 மூன்டு நாலு பிள்ளைகள் பெற்ற குடும்பத்தை கீழ்த்தனமாக பார்ப்பதை முதலில் எங்கடையாக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மட்டுமன்றி, அதை ஊக்கப்படுத்த வேண்டும். அப்பதான் எமது சனத் தொகை உயரும். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted October 3, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 3, 2022 1947 இல் சுதந்திரம் அடைந்தபின்னர் இலங்கையில் தமிழர்கள் இருவகையான ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தந்தை செல்வா எச்சரித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய தந்தை செல்வா அவர்கள் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் ஊடாகவும் இலங்கையில் தமிழர்களின் இருப்பிற்கு பாரிய அச்சுருத்தால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை "நில அபகரிப்பு" என்றும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினை "தமிழருக்கான அதிகாரங்களைக் கொள்ளையிடல்" என்றும் அவர் விழித்துப் பேசினார். இவையிரண்டின் மூலம் தமிழர்கள் வெகு விரைவில் சிங்களவர்களுக்கு அடிமையாக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு இலங்கையிலிருந்து தமிழினத்தை முற்றாக அழித்துவிடும் முயற்சியின் ஒரு அங்கம்தான் என்றும் அவர் முழுமையாக நம்பியிருந்தார், அதையே மக்களிடம் கூறிவந்தார். சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வொன்றே இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்திற்கும் அவர்களைன் அடையாளத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார். தனது இந்தக் கண்ணோட்டத்தை மக்களிடையே பரப்புவதற்காக சமஷ்ட்டிக் கட்சியென்று புதியதொரு அரசியல்க் கட்சியை அவர் ஆரம்பித்தார். தனது புதிய கட்சியினை 1949, மார்கழி 18 இல் ஆரம்பித்து வைத்துப் பேசிய தந்தை செல்வா அவர்கள் பல்லின, பல்கலாசார மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டிற்கு ஒற்றையாட்சி ஒருபோதுமே தீர்வாக அமையாதென்றும், இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு சமஷ்ட்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே மிகவும் சிறந்தது என்று அவர் கூறினார். அவர் மேலும் பேசுகையில், "ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் கீழ் நாம் முதலில் அரசில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பங்கினை இழந்தோம். அடுத்ததாக தேர்தலில் எமது வாக்குப் பலத்தினைக் குறைப்பதற்காக இந்தியத் தமிழ்ச் சகோதரர்களின் பிரஜாவுரிமையினை அவர்கள் பறித்தார்கள். தமிழரின் பூர்வீக தாயகத்தைச் சிதைக்கும் நோக்குடன் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஆகவே, சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வு தமிழருக்கு சட்டபூர்வமாகக் கிடைக்கவேண்டிய அரச அதிகாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும். இதன்மூலம், கட்டுபாடின்றி சட்டத்திற்குப் புறம்பான முறையில் தமிழர் தாயகத்தின் மேல் நடத்தப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படும்" என்று அவர் கூறினார். திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்பட்டு வந்த தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதனால், "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் சுலோகத்தினை அவர் முன்வைத்து வந்தார். தமிழர் தாயகம் அவர்களின் கைகளில் இருந்தால் மட்டுமே இனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று அவர் தொடர்ச்சியாக வாதாடி வந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பிரதேசமான பட்டிப்பளை கல்லோயா எனும் சிங்களக் குடியேற்றமாக அரசினால் கபளீகரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தந்தை செல்வா மிகத் தீவிரமாக தமிழர் தாயகம் காக்கப்படல் வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்து பேசத் தொடங்கினார். இலங்கையின் இரு பிரதமர்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளின் கருப்பொருளாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதே அமைந்திருந்தது. 1957, ஆடி 25 இல் பிரதமர் பண்டாரனாயக்கவுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, தமிழர் தாயகத்தில் இடம்பெறும் குடியேற்றங்களை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரினார். அவ்வுடன்படிக்கையின் சரத்து "பி" இவ்வாறு கூறுகிறது, "புதிதாக மேற்கொள்ளப்பட்டும் குடியேற்றத் திட்டங்கள் அப்பிராந்திய அதிகார சபைகள் ஊடாகவே நிர்வகிக்கப்படவேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த குடியேற்றங்களை யார் யாருக்கு வழங்குவதென்கிற அல்லது யார் யார் இத்திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவர் என்கிற தீர்மானத்தினை இந்த பிராந்திய நிர்வாகங்களே தீர்மானிக்கும். தற்போது கல்லோயா திட்டத்தை நிர்வகிக்கும் கல்லோயா சபையின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படல் அவசியம்". அதேபோல 1965 , பங்குனி 24 இல் தந்தை செல்வா அவர்கள் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழரின் தாயகம் தமிழர்களினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார். அவ்வொப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது, சரத்து 4 ) நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரச் சட்டம் சீர்திருத்தப்பட்டு இலங்கையின் குடிமக்கள் நிலங்களை உரிமையாக்கிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும். மேலும் தந்தை செல்வாவின் கோரிக்கைகளுக்கு இணங்கிய டட்லி, குடியேற்றத் திட்டங்களின் மூலம் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும்பொழுது பின்வரும் விடயங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கவனிக்கப்படுதல் அவசியம் என்றும் ஏற்றுக்கொண்டார். 1) வடக்குக் கிழக்கில் பகிர்ந்தளிக்கப்படும் நிலங்கள், இம்மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே முதலில் வழங்கப்பட வேண்டும். 2) இந்நிலங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். 3) வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்ததாக முன்னுரிமை வழங்கப்படுதல் அவசியம். ஆனால், தமிழரின் தாயகத்தை காக்கவேண்டும் என்கிற நோக்கில் தந்தை செல்வா அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இந்த இரு ஒப்பந்தங்களையும் சிங்களவர்கள் தூக்கியெறிந்ததன் மூலம் உருக்குலைந்து போயின. இவ்வொப்பந்தங்களின் தோல்வியே சிங்களத் தலைவர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடக்குக் கிழக்கில் தமிழரின் நிலங்களை கூறுபோட்டு அபகரிக்கவும், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கவும் வழியமைத்துக் கொடுத்தன. இதன்மூலம் இப்பிரதேசங்களில் இருந்த தமிழருக்கான தேர்தல் பலமும் மிகப் பலவீனமான நிலைக்கு இழுத்து வீழ்த்தப்பட்டு, இப்பகுதிகள் சிங்களத் தேர்தல்த் தொகுதிகளாக மாற்றப்பட்டன. 1881 இலிருந்து 1981 வரையான நூற்றாண்டுக் காலத்தில் தமிழர் தாயகம் எவ்வாறு இனப்பரம்பல் மாற்றத்தை எதிர்கொண்டது என்பதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. இதன்படி கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் அடங்கியிருந்தது. அத்துடன் 1965 இல் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத் தனியே காட்டப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டம் என்பது தமிழ்பேசும் மாவட்டமான மட்டக்களப்பிலிருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்டு சிங்கள மாவட்டமாக உருவாக்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது. Table-1 Demographic Change in the North-East Province 1881- 1981 Year 1881 1946 1981 District Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Jaffna 0.3 98.3 1.0 1.07 96.3 1.3 0.60 95.3 1.7 Mannar 0.67 61.5 31.1 3.76 55.1 33.0 8.10 50.6 26.6 Vavuniya 7.4 80.9 7.3 16.6 69.3 9.3 16.6 59.9 6.9 Batticoloa 0.4 57.5 30.7 4.0 69.0 27.0 3.2 70.8 24.0 Ampara 18.24 30.0 50.4 16.7 28.3 54.9 37.6 20.1 41.5 Trincomalee 4.2 63.6 25.9 20.7 40.1 30.6 33.6 33.8 29.0 The most significant change was in the Amparai District. Table 2- Demographic Change in the Amparai District – 1911- 1981 Year Sinhalese Tamils Muslims 1911 4762 7.0% 24733 37% 36843 55% 1921 7285 25203 31943 1953 26459 39985 37901 1963 62160 29% 49220 23.5% 97990 45.6% 1971 82280 30.% 60519 22% 126365 47% 1981 146371 38.01% 78315 20% 126365 47% Next comes the Trincomalee district. Table 3- Demographic change in the Trincomalee district 1901-1981 Year Tamils Muslims Sinhalese Others 1901 17069 60% 8258 29.90% 1203 4.2% 1921 6.8% 1911 17233 57.8% 9714 32.6% 1138 3.8% 1700 5.7% 1921 18556 54.5% 12846 37.7% 1501 4.4% 1179 3.5% 1946 33795 44.1% 23219 30.6% 15706 20.7% 3501 4.7% 1953 37517 44.7% 28616 34.1% 15296 18.2% 2488 3% 1963 54050 39.1% 42560 30.8% 39950 28.9% 1600 1.2% 1971 71749 38.1% 59924 31.8% 54744 29.1% 1828 1.0% 1981 93510 36.4% 74403 29.2% 86341 33.4% 2536 1.10% 3 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted October 3, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 3, 2022 (edited) 1 hour ago, ரஞ்சித் said: 1947 இல் சுதந்திரம் அடைந்தபின்னர் இலங்கையில் தமிழர்கள் இருவகையான ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தந்தை செல்வா எச்சரித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய தந்தை செல்வா அவர்கள் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் ஊடாகவும் இலங்கையில் தமிழர்களின் இருப்பிற்கு பாரிய அச்சுருத்தால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை "நில அபகரிப்பு" என்றும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினை "தமிழருக்கான அதிகாரங்களைக் கொள்ளையிடல்" என்றும் அவர் விழித்துப் பேசினார். இவையிரண்டின் மூலம் தமிழர்கள் வெகு விரைவில் சிங்களவர்களுக்கு அடிமையாக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு இலங்கையிலிருந்து தமிழினத்தை முற்றாக அழித்துவிடும் முயற்சியின் ஒரு அங்கம்தான் என்றும் அவர் முழுமையாக நம்பியிருந்தார், அதையே மக்களிடம் கூறிவந்தார். சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வொன்றே இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்திற்கும் அவர்களைன் அடையாளத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார். தனது இந்தக் கண்ணோட்டத்தை மக்களிடையே பரப்புவதற்காக சமஷ்ட்டிக் கட்சியென்று புதியதொரு அரசியல்க் கட்சியை அவர் ஆரம்பித்தார். தனது புதிய கட்சியினை 1949, மார்கழி 18 இல் ஆரம்பித்து வைத்துப் பேசிய தந்தை செல்வா அவர்கள் பல்லின, பல்கலாசார மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டிற்கு ஒற்றையாட்சி ஒருபோதுமே தீர்வாக அமையாதென்றும், இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு சமஷ்ட்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே மிகவும் சிறந்தது என்று அவர் கூறினார். அவர் மேலும் பேசுகையில், "ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் கீழ் நாம் முதலில் அரசில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பங்கினை இழந்தோம். அடுத்ததாக தேர்தலில் எமது வாக்குப் பலத்தினைக் குறைப்பதற்காக இந்தியத் தமிழ்ச் சகோதரர்களின் பிரஜாவுரிமையினை அவர்கள் பறித்தார்கள். தமிழரின் பூர்வீக தாயகத்தைச் சிதைக்கும் நோக்குடன் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஆகவே, சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வு தமிழருக்கு சட்டபூர்வமாகக் கிடைக்கவேண்டிய அரச அதிகாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும். இதன்மூலம், கட்டுபாடின்றி சட்டத்திற்குப் புறம்பான முறையில் தமிழர் தாயகத்தின் மேல் நடத்தப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படும்" என்று அவர் கூறினார். திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்பட்டு வந்த தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதனால், "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் சுலோகத்தினை அவர் முன்வைத்து வந்தார். தமிழர் தாயகம் அவர்களின் கைகளில் இருந்தால் மட்டுமே இனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று அவர் தொடர்ச்சியாக வாதாடி வந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பிரதேசமான பட்டிப்பளை கல்லோயா எனும் சிங்களக் குடியேற்றமாக அரசினால் கபளீகரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தந்தை செல்வா மிகத் தீவிரமாக தமிழர் தாயகம் காக்கப்படல் வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்து பேசத் தொடங்கினார். இலங்கையின் இரு பிரதமர்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளின் கருப்பொருளாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதே அமைந்திருந்தது. 1957, ஆடி 25 இல் பிரதமர் பண்டாரனாயக்கவுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, தமிழர் தாயகத்தில் இடம்பெறும் குடியேற்றங்களை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரினார். அவ்வுடன்படிக்கையின் சரத்து "பி" இவ்வாறு கூறுகிறது, "புதிதாக மேற்கொள்ளப்பட்டும் குடியேற்றத் திட்டங்கள் அப்பிராந்திய அதிகார சபைகள் ஊடாகவே நிர்வகிக்கப்படவேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த குடியேற்றங்களை யார் யாருக்கு வழங்குவதென்கிற அல்லது யார் யார் இத்திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவர் என்கிற தீர்மானத்தினை இந்த பிராந்திய நிர்வாகங்களே தீர்மானிக்கும். தற்போது கல்லோயா திட்டத்தை நிர்வகிக்கும் கல்லோயா சபையின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படல் அவசியம்". அதேபோல 1965 , பங்குனி 24 இல் தந்தை செல்வா அவர்கள் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழரின் தாயகம் தமிழர்களினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார். அவ்வொப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது, சரத்து 4 ) நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரச் சட்டம் சீர்திருத்தப்பட்டு இலங்கையின் குடிமக்கள் நிலங்களை உரிமையாக்கிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும். மேலும் தந்தை செல்வாவின் கோரிக்கைகளுக்கு இணங்கிய டட்லி, குடியேற்றத் திட்டங்களின் மூலம் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும்பொழுது பின்வரும் விடயங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கவனிக்கப்படுதல் அவசியம் என்றும் ஏற்றுக்கொண்டார். 1) வடக்குக் கிழக்கில் பகிர்ந்தளிக்கப்படும் நிலங்கள், இம்மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே முதலில் வழங்கப்பட வேண்டும். 2) இந்நிலங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். 3) வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்ததாக முன்னுரிமை வழங்கப்படுதல் அவசியம். ஆனால், தமிழரின் தாயகத்தை காக்கவேண்டும் என்கிற நோக்கில் தந்தை செல்வா அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இந்த இரு ஒப்பந்தங்களையும் சிங்களவர்கள் தூக்கியெறிந்ததன் மூலம் உருக்குலைந்து போயின. இவ்வொப்பந்தங்களின் தோல்வியே சிங்களத் தலைவர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடக்குக் கிழக்கில் தமிழரின் நிலங்களை கூறுபோட்டு அபகரிக்கவும், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கவும் வழியமைத்துக் கொடுத்தன. இதன்மூலம் இப்பிரதேசங்களில் இருந்த தமிழருக்கான தேர்தல் பலமும் மிகப் பலவீனமான நிலைக்கு இழுத்து வீழ்த்தப்பட்டு, இப்பகுதிகள் சிங்களத் தேர்தல்த் தொகுதிகளாக மாற்றப்பட்டன. 1881 இலிருந்து 1981 வரையான நூற்றாண்டுக் காலத்தில் தமிழர் தாயகம் எவ்வாறு இனப்பரம்பல் மாற்றத்தை எதிர்கொண்டது என்பதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. இதன்படி கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் அடங்கியிருந்தது. அத்துடன் 1965 இல் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத் தனியே காட்டப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டம் என்பது தமிழ்பேசும் மாவட்டமான மட்டக்களப்பிலிருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்டு சிங்கள மாவட்டமாக உருவாக்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது. Table-1 Demographic Change in the North-East Province 1881- 1981 Year 1881 1946 1981 District Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Jaffna 0.3 98.3 1.0 1.07 96.3 1.3 0.60 95.3 1.7 Mannar 0.67 61.5 31.1 3.76 55.1 33.0 8.10 50.6 26.6 Vavuniya 7.4 80.9 7.3 16.6 69.3 9.3 16.6 59.9 6.9 Batticoloa 0.4 57.5 30.7 4.0 69.0 27.0 3.2 70.8 24.0 Ampara 18.24 30.0 50.4 16.7 28.3 54.9 37.6 20.1 41.5 Trincomalee 4.2 63.6 25.9 20.7 40.1 30.6 33.6 33.8 29.0 The most significant change was in the Amparai District. Table 2- Demographic Change in the Amparai District – 1911- 1981 Year Sinhalese Tamils Muslims 1911 4762 7.0% 24733 37% 36843 55% 1921 7285 25203 31943 1953 26459 39985 37901 1963 62160 29% 49220 23.5% 97990 45.6% 1971 82280 30.% 60519 22% 126365 47% 1981 146371 38.01% 78315 20% 126365 47% Next comes the Trincomalee district. Table 3- Demographic change in the Trincomalee district 1901-1981 Year Tamils Muslims Sinhalese Others 1901 17069 60% 8258 29.90% 1203 4.2% 1921 6.8% 1911 17233 57.8% 9714 32.6% 1138 3.8% 1700 5.7% 1921 18556 54.5% 12846 37.7% 1501 4.4% 1179 3.5% 1946 33795 44.1% 23219 30.6% 15706 20.7% 3501 4.7% 1953 37517 44.7% 28616 34.1% 15296 18.2% 2488 3% 1963 54050 39.1% 42560 30.8% 39950 28.9% 1600 1.2% 1971 71749 38.1% 59924 31.8% 54744 29.1% 1828 1.0% 1981 93510 36.4% 74403 29.2% 86341 33.4% 2536 1.10% ரஞ்சித் உங்கள் நேரத்திற்கும், மொழி பெயர்ப்புக்கும் மிக்க நன்றி. திருகோணமலையில் 1901´ம் ஆண்டு இருந்த தமிழரின் சனத்தொகை விகிதத்திற்கும், தற்போது (2022) உள்ள நிலைமையையும் நினைக்க கவலையாக உள்ளது. இது... மெதுவாக... புதிய விகாரைகள் அமைப்பதன் மூலம் தமிழரின் இருப்பு... மற்றைய மாவட்டங்களுக்கும் பரவிக் கொண்டுள்ளது. இதனை... ஒரு பெரிய விடயமாக, தமிழ் அரசியல் கட்சிகள் சர்வதேசத்திடம் கொண்டு செல்லாதது.. மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகின்றது. Edited October 3, 2022 by தமிழ் சிறி 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nochchi Posted October 3, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 3, 2022 ரஞ்சித் அவர்களே காலத்தேவைகருதியதும், நாம் அறியாத பகுதிகளையும், உரையாடல்களையும் உள்ளடக்கியதாக உள்ளன. இது எமது இளைய தலைமுறை படித்தறிய வேண்டிய விடயமுமாகும். உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுகள். 47 minutes ago, தமிழ் சிறி said: ரஞ்சித் உங்கள் நேரத்திற்கும், மொழி பெயர்ப்புக்கும் மிக்க நன்றி. திருகோணமலையில் 1901´ம் ஆண்டு இருந்த தமிழரின் சனத்தொகை விகிதத்திற்கும், தற்போது (2022) உள்ள நிலைமையையும் நினைக்க கவலையாக உள்ளது. இது... மெதுவாக... புதிய விகாரைகள் அமைப்பதன் மூலம் தமிழரின் இருப்பு... மற்றைய மாவட்டங்களுக்கும் பரவிக் கொண்டுள்ளது. இதனை... ஒரு பெரிய விடயமாக, தமிழ் அரசியல் கட்சிகள் சர்வதேசத்திடம் கொண்டு செல்லாதது.. மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகின்றது. தமிழ்த்தலைவர்களில் பெரும்பகுதியானோர் இனத்துக்கான பேரம்பேசல்களில் ஈடுபடுவதில்லைத்தானே. அவர்கள் தமக்கான பெட்டிகளுக்கான பேரம்பேசல்களில் இருப்பதால் இனமாவது நிலமாவது....... தேவையேற்பட்டால் அவர்கள் பெயரைக்கூட மாற்றிக்கொண்டு வாழ்ந்துவிடுவர். அப்படியான சுயநலமிகளிட நீங்கள் எதிர்பார்க்கலாமா? 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted October 9, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 9, 2022 அம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்கு கல்லோயாக் குடியேற்றத்திட்டம் காரணமாயிருந்தது போல திருகோணமலை மாவட்டத்தின் அல்லை, கந்தளாய் ஆகிய பகுதிகளில் வலிந்து ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களும், புதிதாக ஏற்படுத்தப்பட்ட மொறவெவ, மஹதுவுலுவெவ ஆகிய குடியேற்றங்களும் காரணமாய் அமைந்திருந்தன. வவுனியா மாவட்டத்தின் தமிழர் சனத்தொகை வீதத்தை வெகுவாகக் குறைக்கவும், சிங்களவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும் பதவிய எனும் சிங்களக் குடியேற்றம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. தமிழரின் பூர்வீகத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கான தனியான சிங்களத் தேர்தல்த் தொகுதிகளையும் சிங்கள அரசு அறிவித்தது. தமிழரின் பாரம்பரிய வாழிடங்களான அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்லை எனும் புதிய தேர்தல் தொகுதியும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில எனும் புதிய தேர்தல் தொகுதியும் ஏற்படுத்தப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்தத் தேர்தல் தொகுதிகள் மூலம் 1977 ஆம் பொதுதேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து இரு சிங்களவர்கள் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பும் இதனால் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 1978 இல் ஏற்படுத்தப்பட்ட வீதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் இச்சிங்கள ஆசனங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதுபோல் வவுனியா மாவட்டத்திலிருந்தும் மேலதிகமாக ஒரு சிங்களவர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. 1977 இல் தந்தை செல்வா அவர்கள இறந்ததையடுத்து தமிழர் தாயகத்தில் அரச ஆதரவில் ஏற்படுத்தப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அரசியல் - ராணுவப் பின்புலத்துடன் அசுர கதியில் முடுக்கிவிடப்பட்டன.தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கின் நிலத்தொடர்பினைத் துண்டிப்பதன் மூலம் அவர்களைன் தாயக் கனவைக் சிதைக்கவும் , தமிழ்ப் போராளிகளை வடக்கிற்குள் முடக்கி முற்றாக அழிக்கும் நோக்கிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுப் பகுதியில் "வலிஓயா" எனும் பெயரில் முற்றான ராணுவப் பலத்துடன் சிங்களக் குடியேற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதுபற்றிப் பிரபாகரனின் கதையில் நாம் மேலும் பேசலாம். அதிகாரங்களைப் பகிர்தல் அரசாங்கத்தில் தமக்கு நீதியாகக் கிடைக்கவேண்டிய அதிகாரப் பகிர்வைத் தமிழர்கள் முற்றாக இழக்கும் சந்தர்ப்பம் உருவாகிவருவதுபற்றி தந்தை செல்வா அச்சம் கொண்டிருந்தார். ஒற்றையாட்சியின் கீழ் மொத்த ஆளும் அதிகாரமும் எண்ணிக்கையில் பெரும்பானமையினரான சிங்களவர்களிடமே குவிக்கப்படும் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். தமது பெரும்பான்மைப் பலத்தினூடாக தமிழர்களை அடக்கவும், வஞ்சிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு இதனால் ஏற்படுத்தப்பட்டது. தன்னால் ஆரம்பிக்கப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியினூடாக அவர் நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்காக சிங்களவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி முறைமையினை நீக்கி, அதிகாரங்களைப் பகிரும் சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் திட்டமொன்றை முன்வைக்குமாறு அவர் அரசைக் கேட்டுக்கொண்டார். அவரது தீர்மானத்தின் சாராம்சம் கீழே..... தமிழருக்கான சுயாட்சி அதிகாரமுள்ள பிரதேசம் ஒன்றினை சமஷ்ட்டி ஒன்றியமான இலங்கைக்குள் பெற்றுக்கொள்ளுதல்...... சமஷ்ட்டிக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு திருகோணமலையில் 1951 ஆம் ஆண்டு சித்திரை 12 இலிருந்து 15 வரை நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இலங்கையில் தமிழருக்கு இருக்கும் ஒரே தீர்வு சம்ஷ்ட்டி ஒன்றியமான இலங்கைக்குள் அவர்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் ஒன்றினை உருவாக்குவதுதான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1952 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் தமது தேர்தல் விஞ்ஞாபனமாக தமிழருக்கான சுயாட்சிப் பிரதேசம் எனூம் கோரிக்கையினை தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழரிடம் முன்வைத்ததோடு ஒற்றையாட்சி முறைமையினை முற்றாக நிராகரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்தனர். ஆனால் இத்தேர்தலில் இந்தக் கோட்பாட்டினைக் கண்டுகொள்ள மறுத்த தமிழர்கள் தமது தவறை உணர்ந்து 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் இக்கோரிக்கைக்கான தமது ஆதரவினை நல்கினர். இத்தேர்தலில் வடக்குக் கிழக்கின் 14 இடங்களில் போட்டியிட்ட தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஒற்றையாட்சிக்கெதிரான தமிழ் மக்களின் முற்றான நிராகரிப்பை பறைசாற்றியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களான பங்குனி 1960, ஆடி 1960 மற்றும் 1965, 1970 ஆகிய தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கெதிரான தமது எதிர்ப்பினைக் காட்டியிருந்தனர். இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், 1977 ஆம் ஆண்டுப் பொதுதேர்தலில் தமிழருக்கென்று தனியான சுதந்திர நாடொன்றினை உருவாக்குவதற்கான தமது ஆணையினை தமிழ்மக்கள் வழங்கினர். 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted October 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 9, 2022 ரஞ்சித் மிகுந்த நேரத்தை செலவிட்டு தமிழாக்கம் செய்து இங்கு பதிவேற்றுவதற்கு மிகவும் நன்றி. தொடருங்கள். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted October 9, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 9, 2022 (edited) சமஷ்ட்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்விற்கெதிரான சிங்கள பெளத்தர்களின் கடுமையான எதிர்ப்பினை அறிந்துவைத்திருந்த தந்தை செல்வா அவர்கள் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கான அடித்தளத்தினை உருவாக்குவதில் 1957 ஆம் ஆண்டிலிருந்து 1968 வரையான தனது அரசியல்க் காலத்தினைச் செலவிட்டிருந்தார். பண்டாரநாயக்காவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் பிராந்திய சபைகளின் உருவாக்கம் பற்றி அவர் கோரிக்கையினை முன்வைத்து அதற்கான சம்மதத்தினை பண்டாரநாயக்காவிடமிருந்து பெற்றுக்கொள்வதிலும் வெற்றி கண்டிருந்தார். இவ்வொப்பந்தத்தின் மூலம் வடக்கிற்கென்று ஒரு பிராந்திய சபையும், கிழக்கிற்கென்று இரு பிராந்திய சபைகளும் உருவாக்கப்படும் என்று ஒத்துக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தேவையேற்படும் பட்சத்தில் மாகாண எல்லைகளைத் தாண்டி இரு வேறு பிராந்தியங்கள் ஒன்றாக இணைக்கப்பட முடியும் என்கிற கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான நிர்வாகம் தமிழ் மொழியிலேயே நடைபெற வேண்டும் என்கிற கோரிக்கையும் அவ்வொப்பந்தத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான அடித்தளமும் இடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் முக்கிய சில பகுதிகள், 1. குறித்த கால அட்டவணையின்படி பிராந்திய சபைகளின் உருவாக்கம் நடத்தப்பட வேண்டும். 2. வட மகாணம் ஒரு பிராந்தியமாக மாற்றப்படும் அதேவேளை கிழக்கு மாகாணம் இருவேறு பிராந்தியங்களாகப் பிரிக்கப்படும். 3. ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் ஏற்பாடுகள் மூலம் மாகாண எல்லைகளைக் கடந்துகூட இரு வேறு பிராந்தியங்கள் ஒன்றாக இணைக்கப்பட முடியும். அதேபோல ஒரு பிராந்தியம் இரண்டாகப் பிரிக்கப்படும் தேவையேற்படின் பாராளுமன்ற அதிகாரம் மூலம் அதனைச் செய்யமுடியும். அத்துடன், பொதுவான ஒரு நோக்கத்திற்காக இரு பிராந்தியங்கள் ஒன்றாக இணைத்துக்கொள்ளப்பட முடியும். 4. பிராந்தியங்களுக்கான தனியான தேர்தல்களை நேரடியாக நடத்த முடியும். ஆனால், தந்தை செல்வாவுடன் தான் செய்துகொண்ட இந்த உடன்படிக்கையினை 1958 ஆம் ஆண்டு சித்திரை 9 ஆம் நாளன்று ஒருத்லைப் பட்சமாக பண்டாரநாயக்கா கைவிட்டார். தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தல்கம் அமைந்திருந்த ரோஸ்மீட் பிளேஸின் முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான பெளத்த துறவிகளின் அழுத்தத்திற்குப் பணிந்து தந்தை செல்வாவுடன் தான்செய்துகொண்ட ஒப்பந்தத்தினை அவர் முற்றாகக் கைவிட்டார். மேலும் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி இவ்வொப்பந்தத்தினை எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை ஒன்றினையும் ஆரம்பித்திருந்தது. ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் இரு சிங்களக் கட்சிகளும் சிங்களவர்களின் நலன்களைக் காப்பதில் தாமே மேலானவர்கள் என்று காட்டுவதற்காக ஏட்டிக்குப் போட்டியாக தமிழர்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை அன்றிலிருந்து முடுக்கிவிட்டிருந்தனர். பண்டாரநாயக்காவின் கொலையினையடுத்து இரு சிங்களத் தேசியக் கட்சிகளுக்கிடையேயும் ஆட்சியைக் கைப்பற்றும் கடுமையான போட்டியொன்று ஆரம்பித்திருந்தது. இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து தந்தை செல்வா அவர்கள் அரசாங்கத்தினை அமைக்கவும், தேவையேற்படும்போது அதனைக் கலைக்கவும் கூடிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பலம் கிடைத்தது. 1960 பங்குனியில், பண்டாவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை அப்படியே நடைமுறைப்படுத்துவோம் என்கிற சிறிமாவின் உறுதிமொழிக்கு அமைவாக அவருக்கு ஆதரவளித்ததன் மூலம், டட்லியின் ஐக்கிய தேசியக் கட்சியினைத் தோற்கடித்து சிறிமா தலைமையிலான சுதந்திரக் கட்சியினை ஆட்சி ஆட்சியமைக்க தந்தை செல்வா உதவினார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் தான் கொடுத்த உறுதிமொழியை உதாசீனம் செய்த சிறிமாவோ, தொடர்ந்தும் தமிழர் விரோத நிலைப்பாட்டில் செயற்பட ஆரம்பித்தபோது தந்தை செல்வா, 1965 இல் சிறிமாவின் அரசிற்கு கொடுத்த ஆதரவினை விலத்தி, டட்லியுடன் சேர்ந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்தார். Edited October 9, 2022 by ரஞ்சித் 1 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts