கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted October 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 9, 2022 அரிய படங்களுடன் கட்டுரை இருப்பது இன்னும் சிறப்பு. 👍🏽 உண்மையிலேயே… இது வருங்கால சந்ததிக்கு பயனுள்ள கட்டுரை. நன்றி ரஞ்சித். 🙂 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted October 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 9, 2022 நல்ல கட்டுரை, கட்டுரையின் மூலம் சிறந்த தமிழ் அரசியல்வாதிகள் (தந்தை செல்வா) இருந்துள்ளார்கள் எனபது தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் முயற்சிக்கு நன்றி. தமிழர்கள் சாதி, மதம், இடம் என பலவீனப்பட்டுள்ளார்கள், இட வேறுபாட்டினையுடைய மலையக தமிழரை இலங்கை தமிழர் ஆககுறைந்த பட்சம் தமிழர் என ஏனோ ஏற்றுகொள்ளவில்லை. அதே போல் இஸ்லாமியரையும் வேற்றாக நினைக்கும் நிலை உள்ளது, ஆனால் இஸ்லாமியரும் தம்மை தமிழரிலிருந்து வேறுபடுத்துவது அரசியல் ரீதியாக இலாபம் என நினைக்கிறார்கள், அது மிகப்பெரிய வரலாற்று தவறாக எதிர்காலத்தில் மாறலாம். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted November 1, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 1, 2022 கூட்டணி முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கை 1. இலங்கைச் சமஷ்ட்டி ஒன்றியத்திற்குள் மொழி அடிப்படையில் தமிழர்க்கென்று தனியான அதிகாரம் மிக்க பிரதேசத்தையோ அல்லது பிரதேசங்களையோ உருவாக்க வேண்டும். 2. தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்து மீளவும் கொடுக்கப்படுவதுடன், அரச அகரும மொழியென்கிற அந்தஸ்த்தும் சிங்கள மொழிக்கு நிகராக தமிழ் மொழிக்கும் வழங்கப்படுதல் அவசியம். 3. நடைமுறையிலிருக்கும் அநீதியான பிரஜாவுரிமைச் சட்டத்தினை ரத்துச் செய்து, மலையகத் தமிழருக்கான பிரஜாவுரிமையினை மீளவும் வழங்க வேண்டும். 4. தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சமஷ்ட்டிக் கட்சியினருடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று தொடர்பாக ஒருமித்துச் செயற்படப்போவதாக பண்டாரநாயக்க அறிவித்திருந்தார். மொழிப்பிரச்சினை தொடர்பான சிக்கலுக்கு பண்டாவின் தனிச் சிங்களக் கொள்கையினை விட்டுக் கொடுக்காமலும், செல்வாவின் இரு மொழிக் கொள்கையினை ஏற்றுக்கொண்டும் பொதுவான இணக்கப்பட்டிற்கூடான தீர்வொன்றை எட்டுவதென்றும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையின்படி தமிழும் தேசிய மொழியாக்கப்படுவதுடன், தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழே நிர்வாக மொழியாக இருக்கும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த உடன்பாடும் சிங்களவர்களால் கைவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1956 இல் டட்லியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழே நிர்வாக மொழியாக இருக்கும் என்ற ஒப்புதலும் கைவிடப்பட்டது. மேலும், தமிழர்கள் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழில் உரையாடி தமது நாளாந்த அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்கிற உடன்பாடும் கைவிடப்பட்டது. 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted November 1, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 1, 2022 @ரஞ்சித், @nochchi, @நன்னிச் சோழன் 👉 https://www.facebook.com/30sec2remember 👈 தமிழர் படுகொலை சம்பந்தமான பதிவுகள்... மேலே உள்ள இணைப்பில் உள்ளது. தகவல்களை திரட்ட, உங்களுக்கு உதவியாக இருக்கும் என எண்ணியதால் பதிந்துள்ளேன். 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nochchi Posted November 1, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 1, 2022 தமிழ்சிறியவர்களே இணைப்புக்குநன்றி. மூன்று லட்சம் உக்ரெனியருக்காக இன்று அழுகிறது உலகு அது சரியாதும் கூட. ஆனால் ஒரே இரவில் 5இலட்சம் மக்களது இடப்பெயர்வுகுறித்து எங்காவது மேற்குலக ஊடகங்கள் பேசியுள்ளனவா? 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விசுகு Posted November 1, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 1, 2022 தொடர்ந்து இணையுங்கள் ரகு நன்றி Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted November 2, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 2, 2022 (edited) பாதுகாப்பும் பந்தோபஸ்த்தும் 1968 ஆம் ஆண்டு, தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்ட தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் மிகுந்த விரக்தியோடும், ஆத்திரத்தோடும், டட்லி சேனநாயக்கவின் அரசின் பங்காளிகள் எனும் நிலையிலிருந்து வெளியேறிச் சென்றனர். தந்தை செல்வாவின் கட்சி மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமுமே தாம் தொடர்ச்சியாக சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டுவருவது குறித்து இதே காலப்பகுதியில் மிகுந்த சினங்கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது குறிப்பிடத்தக்களவு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில், தமிழர்களின் ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் அடக்குவதற்கு தமது அரச அதிகாரத்தையும், ராணுவ பலத்தையும், கூடவே சிங்களக் குண்டர்களையும் சிங்களத் தலைவர்கள் பாவிக்கத் தொடங்கியிருந்தனர். காலிமுகத்திடலில் தமிழ்த்தலைவர்கள் நடத்திய சத்தியாக்கிரக நிகழ்வினை குண்டர்களைக் கொண்டு அடித்து அழித்த சிங்களத் தலைவர்கள், அதனைத் தொடர்ந்து கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தில் வேலை செய்துவந்த தமிழ் அதிகாரிகள் மீதும், தமிழ் விவசாயிகள் மீதும் கடுமையான வன்முறைகளை அவிழ்த்துவிட்டிருந்தனர். இருவருடங்களுக்குப் பின்னர், 1958 இல் தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகள் இலங்கையின் பல பாககங்களிலும் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்டன. இத்தாக்குதல்களில் முதலாவது பொலொன்னறுவையூடாகச் சென்றுகொண்டிருந்த கொழும்பு - மட்டக்களப்பு ரயில் மீது பதவியா குடியேற்றத்தில் வசித்துவந்த சிங்களக் குண்டர்களால் நடத்தப்பட்டது. பின்னர் இத்தாக்குதல்கள் அநுராதபுரம், தலைநகர் கொழும்பு, கண்டி உட்பட பல மலையகத் தமிழ்ப்பகுதிகளுக்கும் பரவியது. தமிழர்கள் சகட்டுமேனிக்குத் தாக்கப்பட்டதுடன், குழந்தைகள் கொதிக்கும் தார்ப் பீபாய்க்களுக்குள் வீசிக் கொல்லப்பட்டனர். பலர் தாம் உடுத்திருந்த உடைகளுடன் அவர்களின் வீடுகளிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டதுடன், ஆங்காங்கே அமைக்கப்பட்ட அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இப்படித் தஞ்சம் புகுந்த தமிழர்களை அரசு கப்பல்கள் மூலமும், ரயிகள் மூலமும் வடக்குக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தது. தமிழர்கள் மீது சிங்களக் காடையர்களும், அரச இயந்திரமும் திட்டமிட்ட வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்க, இந்த வன்முறைகளுக்கான காரணம் தமிழ் சமஷ்ட்டிக் கட்சியினர் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டதுதான் என்றும் குற்றஞ்சாட்டிய பண்டாரநாயக்கா, சிங்களவர்களின் ஆத்திரத்தைத் தணிப்பதற்கு ஒரே வழி சமஷ்ட்டிக் கட்சியினரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் என்று கூறியதுடன் அவர்களை 1958 ஆனி 4 ஆம் திகதிலிருந்து 1958 புரட்டாதி 4 வரை சிறையில் அடைத்தார். அவ்வாறே சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு சமஷ்ட்டிக் கட்சியினர் இலங்கையில் தமிழருக்கென்று தனியான நாடொன்றினை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்கிற குற்றஞ்சாட்டி 1961 ஆம் ஆண்டு சித்திரை 17 இல் மீண்டும் சிறையில் அடைத்தது. அவர்கள் சிறையிலடைக்கப்பட்ட தருணத்தில் அரச வானொலியில் உரையாற்றிய சிறிமாவோ பின்வருமாறு கூறினார், "கடந்த வாரம் சமஷ்ட்டிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் தமிழர்களுக்கென்று தபால் சேவை ஒன்றினையும், காவல்த்துறை ஒன்றினையும், காணி கச்சேரியையும் உருவாக்கி, தமிழர்களுக்கு காணிகளுக்கான அதிகாரத்தினையும் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது சட்டபூர்வமாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அவமத்திக்கின்ற, அதன் அதிகாரத்திற்குச் சவால் விடுகின்ற நடவடிக்கையாவதோடு, தமிழர்களுக்கென்று தனியான நாடொன்றினை இலங்கையில் உருவாக்குவதனை நோக்காகக் கொண்டே இது நடத்தப்பட்டுவருகின்றது என்பதும் தெளிவு". சிறிமாவின் முக்கிய மந்திரிகளில் இருவரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா மற்றும் சி பி டி சில்வா ஆகியோர் டட்லியின் அரசைத் தோற்கடிக்க தந்தை செல்வாவின் உதவியினை முன்னர் நாடியிருந்தனர். பின்னர் 1960 இல் தேர்தலில் வெற்றிபெற்ற இவர்கள் இருவரும் தனிச் சிங்களச் சட்டத்தினை தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் அமுல்ப்படுத்த 1961 இல் முன்னின்று செயற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனைத் தொடர்ந்து, யாழ் கச்சேரிக்கு முன்பாக சமஷ்ட்டிக் கட்சியினர் இன்னொரு சத்தியாக்கிரக நிகழ்வினை 1961, மாசி 20 ஆம் நாள் ஒழுங்குசெய்தனர். ஆரம்பத்தில் சமஷ்ட்டிக் கட்சியினரால் மட்டுமே நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியது. யாழ் கச்சேரியின் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் சிங்களத்தில் நிர்வாகம் நடத்தப்படுவதனை தடுக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் ராணுவச் சரித்திரத்தில் முதன்முறையாக பங்குனி 30 அன்று ஒரு தொகுதி கடற்படை வீரர்களை இலங்கையரசு வான்வழியாக யாழ்ப்பாணத்தில் தரையிறக்கியது. யாழ் கச்சேரியினைச் சுற்றிவளைத்து தமிழர்கள் இப்பகுதிக்கு வருவதனைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. ஆனால், தனியார் காணிகளுக்கூடாகவும், சிறுவீதிகள், ஒழுங்கைகளுக்கூடாகவும் பெருமளவு தமிழர்கள் கச்சேரிநோக்கி திரள் திரளாக வந்துகொண்டிருந்ததால் சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கை பிசுபிசுத்துப் போனது. அகிம்சை ரீதியிலான தமது ஆர்ப்பாட்டத்தை ராணுவ ரீதியில் அடக்க அரசு முனைந்ததற்குப் பதிலடியாக சமஷ்ட்டிக் கட்சி தமது சத்தியாக்கிரக நடவடிக்கைகளை ஏனைய தமிழ்ப் பகுதிகளான வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இருந்த கச்சேரிகளுக்கு முன்னாலும் விஸ்த்தரித்துக் காட்டியது. தமது அகிம்சை ரீதியிலான போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் வலுத்துவரும் ஆதரவினை உணர்ந்துகொண்ட சமஷ்ட்டிக் கட்சியினர், சில குறிப்பிட்ட சட்டங்களை வேண்டுமென்றே மீறுவதன்மூலம் சிறை செல்ல எத்தனித்தனர். அதன்படி சித்திரை 14 இல் தமிழ் அரசு தபால்ச் சேவை எனும் நடவடிக்கையினை அவர்கள் ஆரம்பித்தனர். தபால் அதிபராக தன்னை அமர்த்திக்கொண்ட தந்தை செல்வா அவர்கள் ஆயிரக்கணக்கான தபால்த் தலைகளை விநியோகித்தார். மேலும் சித்திரை 16 ஆம் திகதி தமிழ் அரசு காணிக் கச்சேரியையும் அவர் ஆரம்பித்தார். இதன்மூலம் தமிழ் விண்ணப்பதாரிகளுக்கு அரச காணிகள் உரிமையாக்கப்பட்டன. சமஷ்ட்டிக் கட்சி தனது சத்தியாக்கிரக போராட்டத்தை, அரசுக்கு அடிபணியாமைப் போராட்டமாக முன்னெடுத்திருப்பதைக் கண்ட சிறிமா அரசு இதற்குப் பதிலடி கொடுக்க நினைத்தது. உடனடியாக அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திய சிறிமா, தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க ராணுவத்திற்கு சகல அதிகாரங்களையும் வழங்கி அனுப்பிவைத்தார். இதன் முதற்படியாக சமஷ்ட்டிக் கட்சியின் சத்தியாக்கிரக ஏற்பாட்டாளர்களையும், அதற்குத் துணையாக பணிபுரிந்த பல தொண்டர்களையும் ராணுவம் கைதுசெய்தது. சத்தியாக்கிரகப் போராட்டங்கள் அரச அடக்குமுறையினால் செயலிழக்க வைக்கப்பட்டாலும் கூட தமிழ் மக்களிடையே விடுதலைக்கான வேட்கை சிறிது சிறிதாக பற்றியெரிய இச்சத்தியாக்கிரக நடவடிக்கை காரணமாகியது. மேலும், தமது அகிம்சைவழிப் போராட்டத்தை கொடூரமாக அடக்க இறக்கப்பட்டிருக்கும் அரச ராணுவத்துடன் நேரடியாக மோதுவது எனும் மனநிலையினை தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் இது ஏற்படுத்திவிட்டிருந்தது. Edited November 2, 2022 by ரஞ்சித் 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted November 2, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 2, 2022 (edited) தமிழர்கள் பொறுமையிழந்த காலம் 1961 இல் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு தமிழ் சிங்கள இனங்களிடையிலான உறவில் ஒரு பாரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழர்கள் அரசியல் ஞானம் பெற்றவர்கள் என்பதும், அரசியல் ரீதியாக தீவிரமாகச் செயற்படக் கூடியவர்கள் என்பதனையும் இந்நிகழ்வு சுட்டிக் காட்டியது. அதுவரை காலமும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த இளைஞர்களையும், மாணவர்களையும் தீவிரமான அரசியலில் ஈடுபட இந்த நிகழ்வு உந்தித் தள்ளியிருந்தது. அன்றிலிருந்து இளைஞர்கள் அரசியல் ரீதியான கேள்விகளைத் தமது தலைவர்களிடம் முன்வைக்கத் தொடங்கியதோடு, தமது கோரிக்கைகளுக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவும் தலைப்பட்டனர். டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளை வென்றுவிடலாம் என்கிற தந்தை செல்வாவின் முயற்சி தோற்றுப்போனதையடுத்து, தமது உரிமைகளுக்காக தாமே போராடவேண்டும் என்கிற மனநிலைக்கு இளைஞர்கள் அபோது வந்திருந்தனர். 1970 இல் டட்லியின் அரசைத் தொடர்ந்து சிறிமாவின் அரசு ஆட்சிக்கு ஏறிய தருணமே தமிழர்கள் தமது போராட்ட வழிமுறையினை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவையினை ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழர்கள் வெகுவாகக் காயப்பட்டுப் போன உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிறிமாவின் அரசு வேண்டுமென்றே தமிழர்களைக் மேலும் மேலும் காயப்படுத்தும் நோக்கில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அரச வேலைவாய்ப்பிற்கு கட்டாயமாக சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற சட்டத்தினை உருவாக்கியதன் மூலம் தமிழர்கள் தமது பிரதேசங்களில்க் கூட அரச வேலைகளைப் பெற்றுக்கொள்வதை சிறிமாவோ அரசு முற்றாகத் தடுத்தது. அதுமட்டுமல்லாமல் மொழி அடிப்படையிலான தரப்படுத்தல்களை பல்கலைக்கழக அனுமதிக்கு கட்டாயமாக்கியதன் மூலம் பெருமளவு தமிழ் இளைஞர்களின் பல்கலைக்கழக தகுதியினை இல்லாமலாக்கியது. தமது கல்வியில் பாரிய தாக்கத்தை சிங்கள அரசு ஏற்படுத்தியமை தமிழ் மாணவர்களை சிங்களவர்களிடமிருந்து அந்நியமாக்கியதுடன், தமது தமிழ் அரசியல்த் தலைமைகளிடமிடுந்து அந்நியப்பட வைத்தது. தரப்படுத்தலின் பாதிப்புப் பற்றி தமிழ் அரசியல்த் தலைமைகள் காட்டிய அசமந்தப்போக்கும், அதன் தாக்கம் குறித்த போதிய அறிவின்மையும் தமிழ்த் தலைமைகளை இளைஞர்களிடமிருந்து அந்நியப்படுத்தக் காரணமாகின. தமிழர்களில் பலர் சமஷ்ட்டிக் கட்சியின் ஆதரவுடன் அரச அதிகாரிகளாக, ஆசிரியர்களாக பதவிவகித்து வந்தனர். பல தமிழர்கள் சமஷ்ட்டிக் கட்சியில் இணைவதன் மூலம் தமது வேலைவாய்ப்பு வசதிகளைப் பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், சமஷ்ட்டிக் கட்சியின் செயற்குழு தரப்படுத்தல்பற்றி அதிக்க அக்கறைப்படாமல் இருந்ததுடன், தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களில் அது ஆறில் ஒன்று மட்டுமே என்கிற நிலைப்பாட்டிலும் செயற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தமது அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு தமக்கான பிரச்சினைகளை தாமே தீர்க்கும் முடிவிற்கு வந்தனர். அதன் முதற்படியாக தமிழ் மாணவர் பேரவை எனும் அமைப்பு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக பொன்னுத்துரை சத்தியசீலன் தெரிவுசெய்யப்பட்டார். மேலும் இவ்வமைப்பின் முக்கிய பொறுப்புக்களில் பிரபாகரன், சிறிசபாரட்ணம், சிவகுமாரன் ஆகியோரும் செயற்பட்டனர். பின்னர் இவ்வமைப்பு தமிழ் இளைஞர் பேரவை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. Edited November 2, 2022 by ரஞ்சித் 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted November 2, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 2, 2022 தொடருங்கள் ரஞ்சித். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted November 2, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 2, 2022 தந்தை செல்வாவின் வெற்றியும் "தம்பியின்" வெளிப்படுத்தலும் 1972 ஆம் ஆண்டில் சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட அரசிய சட்டத்திற்கு எதிராகவும், தரப்படுத்தல்களுக்கெதிராகவும் தமிழ் மாணவர் பேரவை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. 1970 பொதுத் தேர்தல்களில் வெற்றிபெற்ற கூட்டணியான சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்மியூனிஸ்ட் கட்சி என்பன இணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கியிருந்தன. சமஷ்ட்டிக் கட்சியும் தனது பங்கிற்கு ஒரு அரசியலமைப்பு நகலை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தது. சமஷ்ட்டிக் கட்சியின் அரசியலமைப்பு நகலின்படி இலங்கை ஒரு சமஷ்ட்டிக் குடியரசாக இருப்பதுடன் ஐந்து சுய அதிகாரம் பெற்ற பிரதேசங்களையும் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஐந்து சுயாட்சி பிரதேசங்களாவன, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஊவா, சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணங்கள், வடமாகாணமும், கிழக்கின் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களும், இறுதியாக அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்குப் பிரதேசமும் ஆகும். சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்த யோசனைகளை பாராளுமன்றம் ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பின்வரும் அரசியலமைப்பினை அது முன்வைத்தது, "சிறிலங்கா குடியரசு ஒரு ஒற்றையாட்சி நாடாகும். சிங்களமே இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகும். பெளத்த மதம் நாட்டிலுள்ள அனைத்து மதங்களிலும் மேலானதாக போற்றிக் காக்கப்படும்" என்று கூறியது. இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள், உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு விலகுமாறு சமஷ்ட்டிக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கவே, அக்கட்சியும் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று விலகிக் கொண்டது. இப்புதிய அரசியலமைப்புக் குறித்துப் பேசிய தந்தை செல்வா, "இது ஒரு அடிமைச் சாசனம்" என்று குறிப்பிட்டிருந்தார். 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு, தமிழ் இளைஞர்களை தமிழர்களுக்கான தனிநாடு ஒன்றிற்கான போராட்டம் நோக்கித் தள்ளிவிட்டிருந்தது. புதிய அரசியலமைப்பு அமுல்ப்படுத்தப்படுவதற்கு சரியாக 8 நாட்களுக்கு முன்பு, வைகாசி 14, 1972 இல் தமிழ்க் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் அமைப்பை உருவாக்கின. இதில் சமஷ்ட்டிக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாட்டுக் கட்சி மற்றும் சில தொழிற்சங்கங்கள் என்பனவும் பங்குகொண்டிருந்தன. ஒருங்கிணைக்கப்பட்ட தமிழர் ஐக்கிய முன்னணி வைகாசி 22, 1972 இல் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தது. இளைஞர்கள் இப்போராட்டத்தை கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்றனர். கிராமங்கள் தோறும் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டதோடு சிங்கள பெளத்தத்தை பிரகடனப்படுத்தும் இலங்கைத் தேசியக்கொடியும், அரசியலமைப்பின் மாதிரிகளும் இளைஞர்களால் தமது எதிர்ப்பினைக் காட்டும் முகமாக எரிக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பிற்குத் தமிழர்களிடத்திலிருந்த எதிர்ப்பினை அரசு புரிந்துகொள்ளச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காக தந்தை செல்வா தனது பாராளுமன்ற பதவியினை ராஜினாமாச் செய்திருந்தார். செல்வாவின் தொகுதிக்கான இடைத்தேர்தலை 1975 வரை அரசு பின்போட்டுக்கொண்டே வந்தது. தனது புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டத்தை அடக்க சிங்களத் தலைமை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. அதன்படி இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னால் நின்று செயற்பட்ட 70 இளைஞர்களை அது கைதுசெய்தது. இது அரச காவல்த்துறையுடனும், ராணுவத்துடனும் தமிழ் இளைஞர்கள் நேரடியாக மோதும் நிலையினை உருவாக்கியது. தரப்படுத்தலினால் மிகுந்த விரக்திக்கும், கோபத்திற்கும் உட்பட்டிருந்த இளைஞர்கள் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ அடக்குமுறைக்கெதிராகத் தீவிரமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். அத்துடன், அகிம்சை ரீதியிலான போராட்டமும், அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படும் வழிமுறையும் முற்றாகத் தோற்றுவிட்டதனையும் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கத் தலைப்பட்டனர். வங்கதேசத்தில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சியையும், தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆயுதக் கிளர்ச்சியையும் முன்னுதாரணமாகக் காட்டி, ஆயுதப் போராட்டம் ஒன்றினாலன்றி தமிழருக்கான சுதந்திரம் சாத்தியமில்லை என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக ரகசிய தமிழ் ஆயுத அமைப்புக்கள் உருப்பெறத் தொடங்கின. அவற்றுள் ஒன்றே பிரபாகரனின் புதிய தமிழ்ப் புலிகள் எனும் அமைப்பாகும். 1974 ஆம் ஆண்டு தமிழர் ஆராய்ச்சி மாநாடு மீது சிங்கள அரசு நடத்திய மிலேச்சத்தனமான படுகொலைகள் தமிழ் இளைஞர்களை வெகுவாக ஆத்திரம் கொள்ள வைத்திருந்தது. சிவகுமாரன் அடங்கலாக பெருமளவு இளைஞர்கள் இத்தாக்குதலை அரசு திட்டமிட்டே நடத்தியதாக வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து வந்தனர். இதன் ஒரு கட்டமாக பெருமளவு ஆர்ப்பாட்டங்களை இளைஞர்கள் ஒழுங்குசெய்தனர். தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கு பழிவாங்கியே தீர்வேண்டும் என்கிற வெறி சிவகுமாரன் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டிருந்தது. அவரின் இலக்குகளாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சி. குமாரசூரியர், யாழ்ப்பாண மேயர் அல்பிரெட் துரையப்பா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர சந்திரசேகர ஆகியோரே இருந்தனர். ஆனால், 1974, ஆனி 4 ஆம் திகதி கோப்பாய் மக்கள் வங்கிக் கொள்ளையில் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்ப வழியின்றி சிவகுமாரன் தனது சயனைட் வில்லையினை உட்கொண்டு மரணமாக வேண்டி ஏற்பட்டது. அவரது மரணம் வடபகுதி மக்களிடையே ஆற்றொணாத் துயரத்தையும், ஆத்திரத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. 1975, மாசி 6 ஆம் திகதி காங்கேசன் துறையில் நடந்த இடைத்தேர்தலில் தந்தை செல்வா அமோகமான வெற்றியடைந்ததையடுத்து, தனிநாட்டிற்கான கோரிக்கையும், விருப்பும் தமிழ் மக்களிடையே வெகுவாக அதிகரித்திருந்தது. தனது தேர்தல் வெற்றியினையடுத்து மக்களிடம் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், " சரித்திர கால்கம்தொட்டு இந்த நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனி இறையாண்மையுள்ள இன மக்களாக வாழ்ந்தே வந்தனர். அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிக்கும்வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. கடந்த 25 வருடங்களாக இந்த நாட்டில் சிங்களவருக்கு நிகரான அரசியல் உரிமைகளை தமிழர்களும் அனுபவிக்கவேண்டும் என்கிற நோக்கிலேயே போராடி வருகிறோம். ஆனால், துரதிஷ்ட்டவசமாக ஆட்சிக்கு வரும் அனைத்துச் சிங்களத் தலைவர்களும் தமது பலத்தினைப் பாவித்து தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றனர். எமது அடிப்படை உரிமைகளைத் தரமறுப்பதுடன், எமது உணர்வுகளையும் நசுக்கி வருகின்றனர். எனக்கு நீங்கள் இன்று தந்திருக்கும் மகத்தான வெற்றி கூறும் செய்தி ஒன்றுதான், அதாவது, தமிழ்மக்களுக்கு சரித்திரகாலம் தொட்டு இருந்துவரும் இறையாண்மையினைப் பாவித்து, எமக்கான தனியான நாடான தமிழீழத்தை உருவாக்கி, நம்மை மீண்டும் விடுதலைபெற்ற இனமாக உருவாக்க வேண்டும் என்பதுதான். தமிழர் ஐக்கிய முன்னணியினரின் சார்பாக நான் உங்களுக்குக் கூறும் உறுதிமொழி என்னவெனில், உங்களின் ஆணையான சுதந்திரத் தமிழீழத் தனிநாட்டினை உருவாக்கியே தீருவோம் என்பதுதான்". கூடியிருந்த இளைஞர் வெற்றிமுழக்கம் செய்ததோடு, தமிழீழம் மட்டுமே எமக்கு வேண்டும், வேறெதுவும் வேண்டாம்" என்று வானதிரக் கோஷமிட்டனர். ஒருசிலர் தமது சுட்டுவிரலை ஊசிகளால் துளைத்து, வெளிக்கசிந்த குருதியெடுத்து தந்தை செல்வாவின் நெற்றியில் இரத்தத் திலகமிட்டு, தாம் தமது இலட்சியத்தை அடைய எத்தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தினர். இந்த ஒன்றுபட்ட விடுதலை உணர்வே 1976 இல் செய்யப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னோட்டமாக அமைந்தது. 1976, வைகாசி 5 ஆம் நாளன்று, வட்டுக்கோட்டைத் தீர்மான நடைபெறுவதற்கு சரியாக 9 நாட்களுக்கு முன்னர், 21 வயதே நிரம்பிய, எல்லாராலும் தம்பி என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட பிரபாகரன் தனது ஆயுத அமைப்பான புதிய தமிழ்ப் புலிகளுக்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று பெயர் சூட்டி வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிதர்சனமாவதற்கான அனைத்தையும் செய்வேன் என்று சபதமெடுத்தார். 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted November 2, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 2, 2022 பல வடிவங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஊடாக, எவ்வளவு சிரமப் பட்டு... எமது போராட்டத்தை முன் எடுத்து, இறுதி வடிவம் பெறும் வேளையில்... எமது இனத்தவர்களாலேயே காட்டிக் கொடுக்கப் பட்டமை மிகப் பெரும் இழிவு. காட்டிக் கொடுத்தவர்கள்... அதற்கான தீர்வை, இன்னும்.. பெற்றுத்தர முயற்சிக்காமல் இருப்பது இன்னும் கேவலமான செயல். தொடருங்கள் ரஞ்சித். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted November 2, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 2, 2022 வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர் ஐக்கிய முன்னணி தனது முதலாவது வருடாந்த மாநாட்டினை வட்டுக்கோட்டை பிரதேசத்திலுள்ள பண்ணாகத்தில் வைகாசி 14, 1976 அன்று நடத்தியது. இளைஞர்கள், குறிப்பாக ரகசிய ஆயுதக் குழுக்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்தவர்களில் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்கள். தமிழருக்கான தனியான நாட்டிற்கான பிரகடனத்தையும், தனிநாட்டிற்கான அரசியல் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கில் தமிழர் ஐக்கிய முன்னணியினை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் விடுதலைக்கான அமைப்பாக மாற்றும் நிகழ்வினையும் உறுதிப்படுத்தவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். இத்தீர்மானம் தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்டதோடு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் சரத்து பின்வருமாறு, தமிழர் ஐக்கிய முன்னணியின் முதலாவது வருடாந்த மாநாடு வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் வைகாசி 14, 1976 இல் கூடி பிரகடனம் செய்வது என்னவெனில், இலங்கைத் தமிழர்கள் மிகப்பெருமை வாய்ந்த மொழியினையும், மதங்களையும், கலாசாரத் தொன்மையினையும் கொண்டிருப்பதுடன், அந்நியர்களின் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறும்வரை பல நூற்றாண்டுகாலமாக தமக்கே உரித்தான சுதந்திரமான இறையாண்மையுள்ள தாயகத்தையும் கொண்டிருந்தார்கள். அத்துடன், தாம் சுதந்திரமாகவும், சிங்களவர்களின் அதிகாரத்தின் கீழ் அல்லாமலும், தமது சொந்தத் தாயகத்தில் வாழுதலுக்கான பூரண உரிமையினையும் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழர்கள் இந்த உலகிற்கு கூறுவது என்னவெனில், 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டு, சிங்களவர்களால் ஆளப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமது அரச அதிகாரத்தின் மூலம் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவருவதோடு, தமிழரின் கலாசாரம், பொருளாதாரம், பிரஜாவுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் திட்டமிட்ட ரீதியில் அழித்து வருவதன் மூலம், தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள். ஆகவே இப்பிரகடனம் கூறுவது யாதெனில், இழக்கப்பட்ட தமிழரின் உரிமைகள் மீள பெறப்படுவதற்கும், சுதந்திரமான, இறையாண்மையுள்ள, மதச் சார்பற்ற சோசலிச தேசமான தமிழ் ஈழத்தை சுய நிர்ணய அடிப்படையில் உருவாக்குவதே இந்த நாட்டில் தமிழரின் இருப்பினைப் பாதுகாப்பதற்கும் உள்ள ஒரே வழியென்பதாகும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted November 4, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 4, 2022 (edited) மக்கள் ஆணையும் அமிர்தலிங்கத்தின் ஏமாற்றலும் மிதவாதியின் கொலை என்று நான் எழுதிய புத்தகத்தில் மிதவாதிகள் எவ்வாறு தமது தவறுகளாலும், சிங்கள இனவாதிகளின் அரசியல் சூழ்ச்சிகளாலும் ஓரங்கட்டப்பட்டார்கள் என்பது குறித்து எழுதியிருக்கிறேன். 1977 சித்திரை 5 ஆம் திகயன்று தந்தை செல்வா மரணைத்ததையடுத்து அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அவரது முதலாவது இலக்கு 1977 ஆம் ஆண்டின் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதாக இருந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மக்கள் ஆணையினை தமது தேர்தல் விஞ்ஞாபனமூடாக முன்வைத்து மக்களிடம் கோருவதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீர்மானமாக இருந்தது. இதன்மூலம் தமிழ் ஈழத்தின் தேசிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக புதிய அரசியல் நகலை வரைந்துகொள்வதும் அவர்களது நோக்கமாக இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறியிருந்தது, "இத்தேர்தல் மூலம் தெரிவாகும் தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழ் ஈழத்தின் தேசிய பாராளுமன்றத்திற்கும் தேர்வுசெய்யப்படுவர். இவர்களூடாக தமிழீழத்திற்கான அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதோடு அதனை நடைமுறைப்படுத்த அகிம்சை முறை மூலமாகவோ அல்லது போராட்டங்கள் மூலமாகவோ நாம் முயற்சிப்போம்". தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொண்டவாறே தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தமது ஆணையை வழங்கினர். கூட்டணி நிறுத்திய வேட்பாளர்களில் 17 பேர் அதிகூடிய வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர். காங்கேசந்துறை தொகுதியில் போட்டியிட்ட அமிர்தலிங்கம் 31,155 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள அதே தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் வெறும் 5322 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார். தனது தேர்தல் வெற்றி உரையில் பேசிய அமிர்தலிங்கம் தமது கட்சி கேட்ட ஆணையை மக்கள் வழங்கி விட்டார்கள் என்று கூறியதோடு, பின்வருவனவற்றைச் செய்யப்போவதாக சூளுரைத்தார், "இனிமேல் நாம் பின்நோக்கிப் பார்க்கப்போவதில்லை. எமது இலட்சியமான தமிழீழத்தை அடையும் நோக்கில் நாம் முன்னோக்கி அணிவகுத்துச் செல்வோம்". ஆனால், தேதல் முடிவடைந்ததன் பின்னர், தான் கூறிய வாக்கிலிருந்து அமிர்தலிங்கம் பின்வாங்கினார். தமிழ் ஈழத்திற்கான பாராளுமன்றத்தை அமைப்பதாகவும், அதற்கான அரசியல் யாப்பை வரைவதாகவும் கூறிக்கொண்டு தேர்தலில் மக்களின் ஆணையைக் கோரிய கூட்டணி, அதனைத் தேர்தலின் பின்னர் முற்றாகக் கைவிட்டிருந்தது. அதற்குப் பதிலாக வவுனியாவில் கூடிய கூட்டணியினர், அரசால் தமக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதென்றும், பாராளுமன்றத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நடந்துகொள்ளப்போவதாகவும் முடிவெடுத்தனர். 1977 , ஆவணி 4 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடியபோது கூட்டணியின் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். பிரேமதாசவினால் சபாநாயகராக முன்மொழியப்பட்ட ஆனந்த தீச டி அல்விஸின் பெயரினை அமிர்தலிங்கமே வழிமொழிந்து ஏற்றுக்கொண்டார். புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "இந்த பாராளுமன்றத்தின் அனைத்துச் சட்ட திட்டங்களையும் கூட்டணி ஏற்றுக்கொள்வதோடு, பிரதம மந்திரியுடன் ஒரும்னித்துச் செயற்பட விரும்புகிறோம்" பாராளுமன்ற பதவிகளை ஏற்றுக்கொள்வதில்லை, பாராளுமன்றத்திற்குச் சமூகமளிக்கப்போவதில்லை என்று தாம் நடத்திவந்த 20 வருட கால எதிர்ப்பினைக் கைவிட்ட அமிர்தலிங்கமும் கூட்டணியும், பாராளுமன்றம் புதிதாகத் திறந்துவைக்கப்படும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்லாமல், அரசுடன் சிநேகமான உறவினை உருவாக்கிக்கொள்வதற்காக பொறுமையுடன் செயற்படும் முடிவினையும் அது எடுத்துக்கொண்டது. இது தமிழ் இளைஞர்களுக்கும் கூட்டணிக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்தியது. கூட்டணியினர் பாராளுமன்றத்தைப் புறக்கணித்திருந்த காலத்தில் தமிழ் இளைஞர்களினால் பெரிதும் விரும்பி மதிக்கப்பட்டு, "தளபதி" என்று அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் அவர்களால் வெறுக்கப்படும் நிலைக்கு இறங்கினார். தமிழ் இளைஞர்களுக்கும், அமிர்தலிங்கத்திற்கும் இடையில் உருவாகி வரும் பிளவினை நன்கு உணர்ந்துகொணட் ஜே ஆர் ஜெயவர்த்தன, அதனை மேலும் ஆளமாக்கும் கைங்கரியங்களில் ஈடுபடத் தொடங்கினார். தமிழ் இளைஞர்களை மேலும் வெறுப்பேற்றும் நடவடிக்கையில் இறங்கிய ஜே ஆர், அமிர்தலிங்கத்திற்கு உத்தியோக பூர்வ வாசஸ்த்தலம் ஒன்றினையும், சொகுசு வாகனமொன்றையும் வழங்கினார். அத்துடன் அவருக்குத் தேவையான பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணிக்கு அமர்த்தினார். அமிர் மட்டுமல்லாமல் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்கள் அரசிடம் கேட்டுக்கொண்ட சொந்த வேண்டுகோள்கள் உட்பட அனைத்துச் சலுகைகளும் கிரமமாக அவர்களுக்கு ஜே ஆரினால் வழங்கப்பட்டது. அரசுடன் புதிதாக தாம் ஏற்படுத்திக்கொண்ட ஸ்நேகத்தை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் அமிர்தலிங்கம் இறங்கினார். பாராளுமன்ற குழுக்களின் கூட்டங்களில் தாமாகவே பங்கேற்கத் தொடங்கிய கூட்டணியினர், மாதாந்த அமைச்சரவைக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட சபைகளுக்கான தேர்தல்களில் பங்கேற்கலாம் என்று எண்ணிய கூட்டணியினர், ஆனி 1981 இல் இடம்பெற்ற மாவட்டசபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த 10 இடங்களையும் வென்றனர். இத்தேர்தல்களில் கூட்டணி 263,369 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி 23,302 வாக்குகளையும், தமிழ் காங்கிரஸ் 21,682 வாக்குகளையும் பெற்றன. ஆனால், தமிழ் மக்களிடையே கூட்டணியின் ஆதரவு மிகக்கடுமையான வீழ்ச்சியினை அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் சந்தித்தது. 1983 வைகாசி 18 இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் அதுகடுமையான பின்னடைவினைச் சந்தித்தது. 1983 இல் இடம்பெற்ற தேர்தல்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையினை முற்றாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்கள், அத்தேர்தல்களைப் பகிஷ்கரித்திருந்ததுடன் கூட்டணியினை முழுமையாகவும் புறக்கணித்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 86 வீதமான வாக்காளர்கள் வாக்களிப்பினை புறக்கணித்திருந்தனர். அதேவேளை பருத்தித்துறையில் 99 வீதமானவர்களை தேர்தலைப் புறக்கணித்திருக்க, பிரபாகரனின் பிறந்த இடமான வல்வெட்டித்துறையில் 98 வீதமான வாக்களர்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் கூட, புலிகளின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு உள்ளூராட்சிச் சபைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வுகளை புறக்கணித்திருந்தனர். Edited November 4, 2022 by ரஞ்சித் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விசுகு Posted November 4, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 4, 2022 தொடருங்கள் ரகு. நன்றிகள் 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted November 5, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 5, 2022 (edited) தமிழ் மக்களால் தூக்கியெறியப்பட்ட அமிரின் மாவட்ட அபிவிருத்திச் சபை டெயிலி நியுஸ் எனும் ஆங்கிலப் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த அமிர்தலிங்கம், "தமிழ் மக்கள், கூட்டணி மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள், அவர்கள் வேறொரு தலைமை மீது ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்" என்று வெளிப்படையாகவே கூறினார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது என்கிற புலிகளின் பரப்புரையினை எம்மால் சமாளிக்க முடியாத நிலைக்கு நாம் இறங்கிவிட்டிருக்கிறோம். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்கிற வெற்றுக் கோதுகளை வைத்துக்கொண்டு நாம் மக்களிடம் போக முடியாது". என்று அவர் மேலும் கூறினார். அமிர்தலிங்கமும், கூட்டணியும் தாம் செய்யாப்போவதாக உறுதியளித்த எதனையும் செய்யப்போவதில்லை என்று இளைஞர்கள் தமிழ்மக்களிடையே தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், கூட்டணியினரை ஜே ஆர் தொடர்ந்தும் ஏமாற்றிவருவதாகவும், கூட்டணியினர் இதனைத் தெரிந்திருந்தும் அதற்குத் துணைபோவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். மேலும், கூட்டணியின் தலைவர்கள் தமது தொகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு என்னவாயிற்று என்றும் கடுமையாகக் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்தனர். அமிர்தலிங்கத்தின் யாழ்ப்பாண விஜயங்களின்போது, நகரின் பலவிடங்களிலும் "மக்கள் ஆணைக்கு என்ன நடந்தது? தமிழ் ஈழத்திற்கான தேசிய பாராளுமன்றக் கூட்டம் எப்போது?" போன்ற கேள்விகளுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதே காலத்தில் விரக்தியும், கோபமும் கொண்ட இளைஞர்கள் ஆங்காங்கே பொலீஸார்மீதும், ராணுவத்தினர்மீதும் சிறி சிறு தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். தமிழ் மக்களுக்கும் அமிர் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே வளர்ந்துவரும் விரிசலை மேலும் பெரிதாக்க எண்ணிய ஜே ஆர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரத்தையோ, சட்டமியற்றும் அதிகாரம், வரியை அறவிடும் அதிகாரம் போன்ற எவற்றையுமே ஒருபோதும் வழங்கமாட்டேன் என்று கூறிவிட்டார். கூட்டணியின் தமிழ் மக்கள் மீதான பிடியைப் பலவீனமாக்குவதனூடாக தமிழ் மக்களின் தனிநாட்டிற்கான கோரிக்கையினை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று ஜே ஆரும் அவரின் ஆலோசகர்களும் எண்ணியிருந்தனர். இதற்காக சிறில் மத்தியூ எனும் பேர்பெற்ற சிங்கள இனவாதியின் தலைமையில் பிரச்சாரக் குழு ஒன்றினை இயக்கிவிட்ட ஜே ஆர், தமிழ் ஆயுதக் குழுக்களின் பின்னால் அமிர்தலிங்கமே இருப்பதாக கடுமையான பிரச்சாரத்தினை சிங்களவர்களிடையே செய்யத் தொடங்கினார். எதிர்கட்சித் தலைவராக இருந்த அமிருக்கு எதிராக பாராளுமன்றத்தில் அரச பாராளுமன்ற உறுப்பினர்களால் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டதுடன் , சிங்கள மன்னர் காலத்தில் துரோகிகளுக்கு வழங்கப்படும் தண்டனையான ஒருவரை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொல்வதுபோல், அமிரும் கொல்லப்படவேண்டும் என்று கோஷமிட்டனர். தமிழர்களைப் பலவீனப்படுத்தும் முகமாக ஜே ஆர் மிகவும் திட்டமிட்ட முறையில் தனது குண்டர்களைப் பாவித்து தமிழர்கள் மீது இரு முறை தாக்குதல்களை மேற்கொண்டார். 1977 இல் இலங்கைத் தமிழர்கள் மீதும், 1979 இல் மலையகத் தமிழர்கள் மீதும் இந்த வன்முறைகள் ஜே ஆரினால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதே வழிமுறையினைப் பின்பற்றி, அரச ராணுவம் மற்றும் பொலீஸாரைப் பாவித்து 1983 இல் தமிழ் மக்கள் மிகவும் கொடூரமான இன்னுமொரு இரத்தக்களரியை ஜே ஆரும் அவரது ஆலோசகர்களும் நடத்தி முடித்தனர். பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு பற்றிய அத்தியாயம், மிதவாதியின் கொலை எனும் பதிவிலிருந்தே ஆரம்பிக்கிறது. Edited November 5, 2022 by ரஞ்சித் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted November 6, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 6, 2022 பிரபாகரனின் இலட்சியம் பிரபாகரனின் இலட்சியம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கூறப்பட்டதுபோல இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்களுக்கான தனிநாடான ஈழத்தை அடையவேண்டும் என்பதாகவே இருந்தது.1977 இல் தமிழ் மக்கள் கூட்டணிக்கு வழங்கிய ஆணையின்படி தமிழ் ஈழத்திற்கான அரசியல் யாப்பினை வரையும்படியும், அதன் பிரகாரம் சமாதான வழியிலோ அல்லது போராட்ட வழிமுறைகளைப் பாவித்தோ அதனை அடையும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால், அந்த மக்கள் ஆணையினை கூட்டணி உதாசீனம் செய்து தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியிலிருந்தும் விலகியிருந்தார்கள். அத்துடன், சமாதான வழிமுறைகளில் தமிழர்களுக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வது இயலாத காரியம் என்பதனையும் கூட்டணியினர் உணர்ந்திருந்தார்கள். மேலும், தந்தை செல்வா அதுவரை காலமும் பரீட்சித்துப் பார்த்துவந்த விட்டுக்கொடுப்புகள், ஒத்துப்போதல்கள், வன்முறையற்ற அகிம்சை ரீதியிலான நேரடியான மக்கள் போராட்டங்கள் என்று அனைத்துமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை தமிழ் மக்களுக்கு நன்கு உணர்த்தியே இருந்தது. அதனாலேயே, தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே தீர்வு ஆயுத ரீதியிலான மக்கள் போராட்டம் மட்டும்தான் என்பதை பிரபாகரன் நன்றாக உணர்ந்திருந்தார். தமிழ் மக்கள் எதிர்கொண்ட சொல்லொணா துன்பங்களும் துயர்களும் பிரபாகரனை ஆயுதரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைக்கு உந்தித் தள்ளியிருந்தன. அதனாலேயே நகர்ப்புற கரந்தடிப்படையான புலிகளை அவர் உருவாக்கினார். அந்த கரந்தடிப்படையினை உருவாக்குவதில் அவர் பட்ட துன்பங்கள், அவர் பெற்ற வெற்றிகள், எதிர்கொண்ட தோல்விகள், தனது கரந்தடிப்படையினை ஒரு மரபு வழி ராணுவமாக மாற்றியமைக்க அவர் செய்த வேலைத்திட்டங்கள், தியாகத்தின் உயரிய தற்கொலைப்படையினை உருவாக்கியமை, மிகப் பலமான கடற்படையொன்றினை உருவாக்கியமை, தமிழருக்கான காவல்த்துறையினை நிறுவியமை, தமிழருக்கான நீதிச்சேவைகள், மிகவும் திறன்வாய்ந்த நிர்வாகக் கட்டமைப்பு என்பவை அனைத்துமே ஒரு கரந்தடிப்படையொன்றினால் செய்யக் கூடியவை என்பதை இந்த உலகில் முன்னர் எவருமே கண்டிராதது. நான்காவது வாழ்க்கைச் சரித்திரத்தை நான் பிரபாகரன் தொடர்பாக எழுத ஆரம்பித்தபோது, பல இடர்களைச் சந்திக்க நேரிடும் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன். இதற்கு முன்னர் நான் எழுதிய மூன்று வாழ்க்கைச் சரித்திரங்களும் ஒப்பீட்டளவில் இலகுவானவை. 1957 இல் இருந்தே தொண்டைமான், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் நான் பழகியே வந்திருக்கிறேன். அவர்கள் இறக்கும்வரை அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளை நான் கொண்டிருந்தேன். இதனாலேயே அவர்களின் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளை பதிவுசெய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் வாழ்வினைப் பாதித்த நிகழ்வுகள், காலங்கள் குறித்து பலமுறை அவர்களுடன் சந்திப்புக்களை நடத்திக் கலந்தாலோசித்திருக்கிறேன். ஆனால், நான் ஒருபோதுமே பிரபாகரனையோ அல்லது அவரது மூத்த உதவியாளர்களையோ சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அரச பத்திரிக்கை நிறுவனமான லேக் ஹவுஸில் பணிபுரிந்ததனால், ராணுவம் வெளியிடும் செய்திகளை அப்படியே வெளியிடுவது மாத்திரமே எனது தொழிலாக இருந்தது. இலங்கையில் மிகவும் தேடப்பட்ட மனிதரான பிரபாகரன் பற்றி நான் எழுதுவதென்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டே இருந்தது. ஆனாலும், பிரபாகரன் பற்றி எழுதும் வேறு எந்த எழுதாளருக்கும் கிடைக்காத வரப்பிரசாதம் ஒன்று எனக்கு இருந்தது. நான் மிதவாதத் தமிழ்த் தல்கைவர்களுடம் மிக நெருக்கமாகவே பழகிவந்தேன். அதுமட்டுமல்லாமல் இனப்பிரச்சினையில் அதிகளவு பங்களிப்பைச் செலுத்திய சிங்களத் தலைவர்களான சிரில் மத்தியூ, லலித் அத்துதல்முதலி, காமினி திசாநாயக்க, ரஞ்சன் விஜேரத்ன, ரணசிங்க பிரேமதாசா, பேராசிரியல் ஜி எல் பீரிஸ் மற்றும் பலருடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். மேலும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை நெறிப்படுத்திய இந்தியர்களான ஜி கே சத்வால், ஜே என் டிக்ஷீட், எல் மெஹோத்ரா போன்றவர்களுடன் எனக்கு நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 1996 இல் அமிர்தலிங்கம் பற்றிய எனது புத்தகத்தை வெளியிட்ட சில காலத்திலேயே பிரபாகரன் பற்றியும் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு வந்தது. அமிர்தலிங்கம் தொடர்பான புத்தக் வெளியீட்டிற்கு நீலன் திருச்செல்வத்தை நான் அழைத்திருந்தேன். அச்சந்திப்பில்த்தான் அவர் நான் பிரபாகரன் பற்றியும் எழுதவேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் அப்படி என்னைக் கேட்டது என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது. "எங்கள் போராட்டத்தினை அவர் ஒரு முடிவிற்குக் கொண்டுவரப்போகிறார்" என்று நீலன் அன்று எதிர்வுகூறினார். கின்ஸி டெரேஸில் அமைந்திருந்த நீலனின் அலுவலகத்திலிருந்து குயீன் வீதியில் அமைந்திருந்த குமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்குச் சென்றேன். நீலனின் வேண்டுகோளை குமாரும் ஏற்றுக்கொண்டதுடன், பிரபாகரன் தொடர்பான எனது புத்தகத்திற்கு தன்னாலான் உதவிகளைச் செய்யவிரும்புவதாகவும் அவர் கூறினார். இது ஒரு மிகவும் சிக்கலான காரியம் என்பதை நான் உணர்வேன். பத்திரிக்கையாளனாக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, பக்கச்சார்பில்லாமல், நடுநிலை தவறாது, ஒருவிடயத்தைக் கூறவேண்டும் என்றே பழக்கப்பட்டிருக்கிறேன். நான் எழுதும் விபரங்கள் உண்மையானவையாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். அதனால, அவற்றில் தவறுகள் இருப்பின், அதற்கான முழுப் பொறுப்பினையும் நானே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதும் எனக்கு நன்கு தெரியும். இவ்விடயங்கள் குறித்து எவரும் சுட்டிக்காட்டும் தறுவாயில் அவற்றை தவறாது திருத்திக்கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன். எமது காலத்தில் வாழ்ந்த ஒரு சிறந்த மேதையான பிரபாகரனின் வாழ்க்கைச் சரித்திரம் இதனால் மேலும் மெருகூட்டப்படும் என்பதில் எனக்கு துளியும் ஐய்யமில்லை. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted November 13, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 13, 2022 அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை ? பாணந்துரை பிள்ளையார் கோயில் பூசகரை சிங்களவர்கள் உயிருடன் தீக்கிரையாக்கிய செய்தியை தனது தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனான பிரபாகரனின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது, "அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை அப்பா?" என்பதுதான் அது. சமஷ்ட்டிக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவின் தீவிர ஆதரவாளரான வேலுப்பிள்ளையிடம் தனது மகனின் கேள்விக்கான பதில் இருக்கவில்லை. தமது உரிமைகளை காந்தீய, வன்முறையற்ற போராட்ட வழிகளில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அவரைப்போன்றவர்கள் அதுவரை நம்பியே இருந்தனர். காலிமுகத்திடலில் கால்களை மடக்கிக் குந்தியிருந்து, தமது தெய்வங்களை நோக்கி மன்றாட்டுக்களை வைப்பதுவும், வேண்டுவதுமே சிங்களத் தலைவர்களின் கல்மனங்களைக் கரைத்துவிடும், அதன்பின் தமக்கான உரிமைகள் கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். பாணந்துரை பிள்ளையார் கோயில் ஆனால், மூன்றரை வயதே நிரம்பிய, வீட்டில் எல்லாராலும் "துரை" என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிறுவன் பிரபாகரனின் இந்தக் கேள்வி அங்கிருந்த எல்லோருக்கும் நியாயமானதாகவும், தர்க்கரீதியில் சாதகமானதாகவும் அன்று தெரிந்தது. வீட்டில் தான் விரும்பியதைச் செய்யவும், கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் தனது பெற்றோரிடமிருந்தும், சகோதர சகோதரிகளிடமிருந்தும் எப்போதும் நினைத்ததை அடைந்துகொள்ளும் சிறுவன் பிரபாகரனுக்கு அவரது தாயார் பார்வதியம்மாள் சரியாகவே "துரை" என்று பெயர் வைத்திருந்தார். நான்கு பிள்ளைகளில் இளையவராகப் பிறந்த பிரபாகரன் தகப்பனாரின் செல்லப்பிள்ளையாக இருந்ததுடன், சிறுவனாக இருந்த காலத்தில் தகப்பனாருடன் தூங்குவதை வழக்கமாகவும் கொண்டிருந்தார். பிரபாகரன் யாழ் வைத்தியசாலையில் 1954 ஆம் ஆண்டு, கார்த்திகை 26 இல் பிறந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தனது தந்தையாருடன் அவரது நண்பர்கள் மாலை வேளைகளில் தனது வீட்டில் நடத்தும் சந்திப்புக்களில் பிரபாகரனும் தவறாது சமூகமளிப்பார். 50 களின் இறுதிப்பகுதிகளில் இலங்கையில் நடைபெற்று வந்த தமிழருக்கெதிரான பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன. தனிச்சிங்களச் சட்டம், காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம், சத்தியாக் கிரகப் போராட்டக்காரர்கள் மீதான சிங்களக் காடையர்களின் மூர்க்கமான தாக்குதல்கள், கொழும்பிலிருந்து ஏனைய பகுதிகளுக்கும் பரவிய தமிழர் மீதான வன்முறைகள், கல்லோயாக் குடியேற்றவாசிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள், பண்டா செல்வா ஒப்பந்தமும் அதன் தோல்வியும், 1958 இல் அரசால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தமிழர் மீதான தாக்குதல்கள், இறுதியாக பாணந்துரை பிள்ளையார் கோயில் பூசகரின் கொடுமையான கொலை என்று பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன. சிறுவனாக தலைவர் பிரபாகரன் அந்த நிலையில் இலங்கையில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பாரிய பிளவொன்று தோன்றியிருந்ததுடன், ஒருமித்த இலங்கை எனும் கோட்பாட்டையும் அது பலவீனப்படுத்திவிடும் என்கிற நிலைமையினையும் தோற்றுவித்திருந்தது. தமிழரின் பூர்வீக தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எல்லைகளை ஊடறுத்து அரசால் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்கள் இரு இன மக்களுக்கும் இடையே உணர்வுபூர்வமான எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. மேலும் ஏறத்தாள பத்து லட்சம் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமையினைப் பறித்த நிகழ்வு சிங்களவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதனையும் தமிழர்களுக்கு மிகவும் தெளிவாகவே உணர்த்தியிருந்தது. தமிழ் மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்த்து கொடுக்கப்பட மாட்டாது என்கிற சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு ஏற்கனவே கொதிநிலையில் இருந்த தமிழரின் உணர்வுகளை மேலும் அதிகமாக்கி விட்டிருந்தது. இந்த மூன்று காரணங்களையும் முன்வைத்து தந்தை செல்வாவினால் முன்மொழியப்பட்ட தமிழருக்கான தனி அதிகாரம் மிக்க நாட்டினை இலங்கைக்குள் உருவாக்குவதெனும் கருத்தினை தமிழ் மக்களிடையே உறுதிப்படுத்தியதுடன், 1948 இல் முதன்முறையாக செல்வாவினால் முன்மொழியப்பட்ட இக்கருதுகோள் 1956 தேர்தல்களில் தமிழ் மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளவும் பட்டது. அன்றிலிருந்து ஆனி 1956 முதல் வைகாசி 1958 வரையான காலப்பகுதிவரை தமிழர் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களால், தமிழரின் பாதுகாப்பு எனும் நான்காவது காரணமும் தமிழ் - சிங்கள பகையுணர்விற்கான காரணங்களுடன் சேர்க்கப்பட்டது. ஆனி 5, 1956 இல், இரு அரச பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் சென்ற சிங்களக் காடையர்கள் அன்றைய பாராளுமன்ற முன்றலில், காலிமுகத்திடலில் அமைதிவழியில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட சுமார் 250 தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலினை மேற்கொண்டதுடன், தமிழர்களை மிகவும் கேலவலமாக நடாத்தி அவமானப்படுத்தியது. இத்தாக்குதலினை சுற்றியிருந்து பார்த்து ரசித்த ஏனைய சிங்களவர்கள் தமிழர்கள் மீது கற்களை எறிந்து எள்ளி நகையாடியதுடன், கிழக்கு மாகாணத்திலிருந்து வருகை தந்த தமிழர்கள் தமது ரயிலுக்காக புகையிரத நிலையத்தை நோக்கி ஓடுவரை வீதிகள் தோறும் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார்கள். காலிமுகத்திடலில் தமிழர்கள தாக்கப்படுவதை ரசித்த அரசு, மறுநாள் கொழும்பின் பல பகுதிகளிலும் தமிழர்கள் மீது தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியது. இதன் ஒரு கட்டமாக, கல்லோயா குடியேற்றம் என்று சிங்களவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழரின் பூர்வீக நிலமான பட்டிப்பளையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் மீதும் அரசு தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் சிக்குண்டவர்கள் போக ஏனையவர்கள் இரவோடு இரவாக அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தமிழரின் பூர்வீகத் தாயகத்திலிருந்து தமிழர்கள் வன்முறைகள் மூலம் விரட்டியடிக்கப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் ஆரம்பப்புள்ளியே பட்டிப்பளையிலிருந்தே ஆரம்பமாகியது. பட்டிப்பளை (கல்லோயாக் குடியேற்றத் திட்டம்) 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted November 13, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted November 13, 2022 (edited) வைகாசி 1958 இல் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் பரவலாக ஒரே நேரத்தில் நடத்தப்பட்டவை. இலங்கையின் பொருளாதாரத்தின்மீது தமிழ் வர்த்தகர்கள் கொண்டிருந்த செல்வாக்கினை அழிக்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தென்னிலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மொத்த தமிழ்ச் சமூகமுமே இத்தாக்குதலிற்குள் அகப்பட்டுப் போனது. மாகாண நகரங்களில் இயங்கிவந்த தமிழரின் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டபின் தீக்கிரையாக்கப்பட்டன. சைவ ஆலயங்கள் இடிக்கப்பட்டதுடன், எல்லையோரத் தமிழ்க் கிராமங்களில் வசித்துவந்த தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவ்வாறு தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்ட பூர்வீக தமிழ்த் தாயகத்தில் உடனடியாகவே சிங்களவர்கள் அரசினால் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே அகதி முகாம்களில் தஞ்சமடைந்த பெருமளவு தமிழர்களை ராணுவப் பாதுகாப்புடன் தமிழரின் பூர்வீக வாழிடமான வடக்குக் கிழக்கிற்கு "இதுதான் உங்களுக்குப் பாதுகாப்பான பகுதி" என்று அரசு அனுப்பி வைத்தது. இத்தாக்குதல்கள் தாம் பாதுகாப்பற்றவர்கள், ஆகவே எம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், கெளரவமாக வாழவும் எமக்கான தனியான தேசம் வேண்டும் என்கிற சிந்தனையினை தமிழர்கள் மனதில் ஆழமாக ஏற்படுத்தி விட்டிருந்தது. மாவட்ட காணி அதிகாரியாக இருந்த வேலுப்பிள்ளை அவர்கள் சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் நடத்திவரும் அழிப்புப் பற்றியும், தமிழர் மீதான அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள தொடர்பாகவும் மாலை வேளைகளில் தனது வீட்டில் கூடும் நண்பர்களுடன் கலந்துரையாடி வருவார். "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் தந்தை செல்வாவின் சுலோகம் அடிக்கடி வேலுப்பிள்ளையின் நாவில் தவழ்ந்துகொண்டிருக்கும். தமிழரின் தாயகம் பாதுகாப்பட்டால் ஒழிய தமிழ் இனத்தின் தனித்துவத்தினைக் காப்பாற்ற முடியாது என்பதே அவரின் வாதமாக இருந்தது. பிரபாகரனின் அரசியல் பிரவேசம் இங்கிருந்தே ஆரம்பமாகியது. தனது வீட்டில் குழுமியிருந்து பெரியவர்கள் பேசும் விடயங்களை அவர் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். ஆனால், அந்த பேச்சுக்களில் அவர் ஒருபோதும் பங்குகொண்டது கிடையாது. இந்த சிறப்பியல்பு அவரை சிறந்த செவிமடுப்பாளனாக உருவாக்கியதுடன், நாளடைவில் அவரது குணாதிசயங்களில் மிக முக்கியமானதாகவும் மாறிப்போனது. தமிழ்ப் பூசகரை உயிருடன் தீக்கிரையாக்கிய விடயம் அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அவரை கடுமையான சீற்றத்திற்குள்ளும் அது தள்ளியிருந்தது. "அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை அப்பா?" என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அந்தப் பூசகரும் தமிழர்களும் திருப்பி அடித்திருக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்தும் அவர்களுடன் விவாதம் செய்துகொண்டிருந்தார். அப்பூசகரால் திருப்பி அடிக்க முடியவில்லை. அன்று கால கொழும்பின் பல பகுதிகளில் சிங்களவர்கள் கூடுவதை அவர் அறிந்துகொண்டார். அக்கூட்டம் மாலையாகியதுடன் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளை உடைத்து கொள்ளையில் ஈடுபடத் தொடங்கியது. தமிழர்களின் கடைகள் முற்றாகச் சூறையாடப்பட்ட பின்னர் அவற்றிற்கு சிங்களவர்களால் தீவைக்கப்பட்டது. நகரின் பலவிடங்களில் தமிழர்களின் வீடுகளும் குறிவைத்து தக்கப்பட்டு, கொள்ளையிட்டபின்னர் எரியூட்டப்பட்டன. அதுமட்டுமல்லாமல், அரச அலுவலகங்களில் வேலைபார்த்துவந்த தமிழர்கள் அவ்விடங்களிலேயே அச்சத்தில் ஒளிந்திருந்த வேளை அவர்களை வீதிகளுக்கு இழுத்துவந்த சிங்களவர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். திருவேங்கடம் வேலுப்பிள்ளை பாணந்துரை சந்தியில் கூடிய காடையர் கூட்டம் தனது கோயில் நோக்கி வருவதை அவதானித்த பூசகர் மிகவும் பதட்டமடைந்தார். உடனடியாக தனது அறைக்குள் ஓடிய பூசகர், தனது கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டார். தாம் தேடிவந்த பூசகரை அறையினுள் கண்டுபிடித்த காடையர் கூட்டம் அவரை தலை முடியில் பிடித்து வெளியே இழுத்து வந்தது. பக்கத்தில் இருந்த எரிபொருள விற்பனை நிலையத்திலிருந்து தாம் எடுத்துவந்த பெற்றோலினை அவர்மீது ஊற்றிய அச்சிங்களக் காடையர்கள் அவர்மீது தீவைத்தனர். தனது உயிருக்காகக் கதறிக்கொண்டு பூசர் எரிந்துகொண்டிருக்க சுற்றியிருந்த சிங்களக் காடையர்கள் "பறத் தமிழனுக்கு பாடம் புகட்டிவிட்டோம், இனிமேல் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்த்தும் , தமிழருக்கு உரிமையும் கேட்கட்டும் பார்க்கலாம்" என்று எக்காளமிட்டுச் சிரித்துக்கொண்டு போனது. தமது மதகுரு ஒருவரை உயிருடன் எரித்தது தமிழ்ச் சைவர்களை வெகுவாகப் பாதித்திருந்தது. மிகுந்த இறைபக்தி உள்ள குடும்பத்தில் வளர்ந்துவந்த சிறுவன் பிரபாகரனை இது அதிகம் வேதனைப்பட வைத்திருந்தது. அவரது பெற்றோர்கள் ஊரில் கோவில்களைக் கட்டி வாழ்ந்த பரம்பரையினைச் சேர்ந்தவர்கள். வல்வெட்டித்துரையில் இருக்கும் மிகப்பெரும் கோயிலான வல்வை சிவன் கோவிலின் பிரதம நிர்வாகியாக வேலுப்பிள்ளை இருந்துவந்தார். பிரபாகரனின் மூதாதையர்களில் ஒருவரான திருமேனியார் வெங்கடாச்சலம் என்பவரால் அக்கோயில் கட்டப்பட்டது. அக்கோயில் மட்டுமல்லாமல் இன்னும் இரு கோயில்களான நெடியகாடு பிள்ளையார் கோயில், வல்லை முத்துமாரியம்மண் கோயில் ஆகியனவற்றின் கட்டுமானத்தில் பிரபாகரனின் குடும்பம் பாரிய உதவியினை வழங்கியிருந்தது. பிரபாகரனின் தாயரான வல்லிபுரம் பார்வதியம்மாளும் ஊரில் கோயில் கட்டும் குடும்பம் ஒன்றினைச் சேர்ந்தவர். இன்னொரு வடபகுதி துறைமுக நகரான பருத்தித்துறை மெத்தை வீட்டு நாகலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். மிகுந்த இறைபக்தி கொண்ட அவர், தொடர்ச்சியான விரதங்களையும் மேற்கொண்டு வந்தவர். தந்தை பிரதான ஆலய நிர்வாகியாகவும், தாயார் மத அனுஷ்ட்டானங்களில் பயபக்தியுடன் ஈடுபட்டுவருபவராகவும் இருக்க சிறுவன் பிரபாகரன் இவ்வாறான மதச் சூழ்நிலையிலேயே வளர்ந்துவந்தார். அவரது வீட்டின் பூஜை அறையில் சிவனுக்கான பெரிய உருவப் படமும் முருகன் பிள்ளையாருக்கென்று சிறு படங்களும் எப்போதுமே வைக்கபட்டிருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் அனைவரும் நாளாந்தம் மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தேவாரங்களையும் பாடிவந்தனர். தீயவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் முருகனை பிரபாகரன் தனது பிரதான கடவுளாக வழிபட்டு வந்தார். Edited November 13, 2022 by ரஞ்சித் 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted December 6, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 நான் இத்தொடரில் பின்னாட்களில் எழுதிய பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது. அவற்றைச் சேமித்து வைக்கத்தவறியமைக்காக வருந்துகிறேன். நேர விரயம். 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 கவலை அண்ணா. நீங்கள் நவெம்பர் 18 க்கு பின்பு எழுதியவை இல்லை என்று நினைக்கிறேன். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 17 hours ago, ரஞ்சித் said: நான் இத்தொடரில் பின்னாட்களில் எழுதிய பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது. அவற்றைச் சேமித்து வைக்கத்தவறியமைக்காக வருந்துகிறேன். நேர விரயம். ரஞ்சித் மொழிமாற்றம் செய்து பதிவுகளையிட நீங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பீர்கள் என்பதை எண்ண மிகவும் கஸ்டமாகவே இருக்கிறது. விளையாட்டுத் திரியால் நானும் கடைசி நேரத்தில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை.அதை எண்ண என் மீதே எனக்கு கோபமாக இருக்கிறது. ஒரு பகுதியைக் காணவில்லை எனும் போதே எவ்வளவு சஞ்சலப்படுகிறோம். போராட்டத்தில் இப்படி எத்தனை ஏற்ற இறக்கங்கள் வந்திருக்கும். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள்+ நன்னிச் சோழன் Posted December 10, 2022 கருத்துக்கள உறவுகள்+ Share Posted December 10, 2022 மொழிபெயர்த்தவுடன் ஒரு படியை எடுத்து கூகிள் டொக்ஸில் போடுவது நல்லம். எனக்கும் இவ்வாறு சிலவேளைகளில் நடப்பதுண்டு. மனஞ்சோராமல் தொடர்ந்து செய்யுங்கள். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted December 17, 2022 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted December 17, 2022 பிரபாகரனின் வரலாறு .......... சுவற்றில் பல சைவக் கடவுள்களின் படங்களோடு ஒரு சில இந்தியர்களின் படங்களும் தொங்கும். நேருவும் காந்தியும் தவறாமல் அங்கே இருக்க சைவ சிந்தனையாளர் விவேகானந்தரின் படமும் வேலுப்பிள்ளையால் கொழுவப்பட்டிருந்தது. பிரபாகரனும் தனது பங்கிற்கு இருவரின் படங்களை அங்கே பதிவிட்டிருந்தார். அகிம்சை வழியை விடவும் ஆயுத ரீதியிலான எதிர்ப்பினால் மட்டுமே ஆங்கிலேய ஆதிக்கத்தினை இந்தியாவிலிருந்து விரட்ட முடியும் என்றும் நம்பிய சுபாஸ் சந்திரபோஸினதும் பகத் சிங்கினதும் படங்களே அவை. யாழ்ப்பாண அரசர் காலத்தில் வல்வெட்டித்துறை மிகவும் சுறுசுறுப்பானதும், பிரபல்யமானதுமான துறைமுகமாக இயங்கி வந்தது. ஆனால், போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் அத்துறைமுகத்தின் பயன்பாடும் முக்கியத்துவமும் குறைவடையத் தொடங்கியதுடன், பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாகச் செயலிழந்துபோனது. ஆனாலும், கப்பலோட்டுவதுவதில் மிகவும் தீரர்களான வல்வெட்டித்துறையின் மைந்தர்கள் ஆங்கிலேயரின் அடக்குமுறையினையும் மீறி கப்பலோட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்ததனால் ஆங்கிலேயர்களால் "கடத்தல்க்காரர்கள்" என்று அழைக்கப்பட்டனர். இதனால் ஆங்கிலேயக் காவலர்களுடனும், பிற்காலத்தில் ஆட்சியில் அமர்ந்த சிங்களப் பேரினவாதிகளினால் இறக்கிவிடப்பட்ட காவல்த்துறை மற்றும் ராணுவத்தினருடனும் அவ்வப்போது வல்வெட்டித்துறையின் மைந்தர்கள் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 10,000 பேர்கொண்ட வல்வெட்டித்துறைத் தமிழர்கள் மிகவும் நெருக்கமான சமூகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தார்கள். கடத்தல்க் காரர்களைத் தேடுகிறோம் என்கிற போர்வையில் சிங்கள காவல்த்துறையும் ராணுவமும் வல்வெட்டித்துறை மக்களை ஆரம்பத்திலிருந்தே துன்புறுத்தி வந்ததனால், அம்மக்கள் ராணுவத்தின்மீதும் காவல்த்துறை மீதும் கடுமையான அதிருப்தியைக் கொண்டிருந்தனர். வல்வெட்டித்துறையை கடத்தல்க்காரர்களின் சொர்க்கபுரி என்று சிலர் ஒரு காலத்தில் அழைத்ததுண்டு. சோசலிச இலங்கைக் குடியரசில் கிடைக்காத பல பொருட்கள் வல்வெட்டித்துறையில் தாராளமாகக் கிடைத்ததே இதற்குக் காரணம் என்றால் மிகையில்லை. கப்பலோட்டத்தில் மிகச் சிறந்து விளங்கிய வல்வையின் மைந்தர்கள் பல கடற்கொந்தளிப்புக்களை எதிர்கொண்டு மியன்மார், தாய்லாந்து, இந்தியா என்று பல நாடுகளுக்குச் சென்று பல பொருட்களைக் கொண்டுவந்து சேர்த்ததுடன், செல்வத்துடனும் விளங்கினர். தமது கடுமையான கடற்பயணங்களின்போது அவ்வப்போது கரையோரக் காவல்த்துஇறையுடன் சமர்புரியும் சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு அமைந்திருந்தன. 1 Link to comment
Recommended Posts