Jump to content

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2023 at 07:03, ரஞ்சித் said:

சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் எனும் இயற்பெயரைக் கொண்ட கிட்டு வல்வை சிதம்பராக் கல்லூரியில் கல்விகற்றவர். அவரது தந்தை நெல்லியடியில் அச்சகம் ஒன்றை நடத்திவந்தவர்,

கிட்டு என்கின்ற கிருஸ்ணகுமார் தனது மேற்படிப்பை மேற்கொண்டது பருத்தித்துறையில் உள்ள  புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை (வேலாயுதம் மகா வித்தியாலயம்) இல். மற்றது அவர்களதுகாந்தி அச்சகம்இருந்தது பருத்தித்துறை  முதலாம் குறுக்குத் தெருவையும் நகரையும் இணைக்கும் பகுதியில். இன்னும் விபரமாகச் சொல்ல வேண்டுமானால் வீரபாகு கிட்டங்கியின் தென்பகுதியில்.  இராணுவம் அவரைத் தேடும் வரை தனது தமையனான காந்திதாசனுக்கு உதவியாக அவர் அங்கு பணியாற்றியிருக்கிறார்.

On 17/12/2022 at 14:00, ரஞ்சித் said:

வீட்டில் செய்யும் வேலைகளுக்காக, சிறு உதவிகளுக்காக கைப்பணமாகத் தனக்குக் கிடைக்கும் சிறியதொகைப் பணத்தினைக் கொண்டு பிரபாகரன் காலைக்கதிர் எனும் மாதாந்த விஞ்ஞான வெளியீட்டையும், மஞ்சரி எனும் மாதாந்த செய்தித் தொகுப்பையும் வாங்கிப் படித்தார்.

கலைக்கதிர்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 535
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்

@Kavi arunasalam

அண்ணா புலோலி என்ற ஊரின் சரியான அமைவிடம் எது? மேலைப் புலோலி என்றும் ஊர் உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

கிட்டு என்கின்ற கிருஸ்ணகுமார் தனது மேற்படிப்பை மேற்கொண்டது பருத்தித்துறையில் உள்ள  புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை (வேலாயுதம் மகா வித்தியாலயம்) இல். மற்றது அவர்களதுகாந்தி அச்சகம்இருந்தது பருத்தித்துறை  முதலாம் குறுக்குத் தெருவையும் நகரையும் இணைக்கும் பகுதியில். இன்னும் விபரமாகச் சொல்ல வேண்டுமானால் வீரபாகு கிட்டங்கியின் தென்பகுதியில்.  இராணுவம் அவரைத் தேடும் வரை தனது தமையனான காந்திதாசனுக்கு உதவியாக அவர் அங்கு பணியாற்றியிருக்கிறார்.

கலைக்கதிர்

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். இது சபாரட்ணம் அவர்கள் எழுதிய தகவல் என்பதால் நான் சரி பிழை பார்க்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருங்கிணையும் சிங்கள இனவாதிகள்

E.H.%20Premachandra.jpg

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் செயல்களை நியாயப்படுத்தி வாதிடுவதற்கென்று ஒரு சிறந்த பேச்சாளர் இருந்தார். அவரது பெயர் ஜி எம் பிரேமச்சந்திர. அவர் பாராளுமன்றத்தில் அரசுக்கு முன்வைத்த கோரிக்கையில் அனைத்து பிரிவினைவாத அமைப்புக்களையும் உடனடியாகத் தடைசெய்யவேண்டும் என்று கேட்டிருந்தார். சகல சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும் இதன்மூலம் செயற்படுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இவற்றுள் முக்கியமானது மூன்று நிக்காயக்களின் சங்க சபா என்றழைக்கப்பட்ட மூன்று முக்கிய பெளத்த பீடங்களின் பெளத்த பிக்குகளும் உள்ளடங்கிய பெளத்த இனவாத அமைப்பு. இவ்வமைப்பு அரசுக்கு விடுத்த கோரிக்கையில் சிங்களவர்களுக்கெதிராகவும், நாட்டிற்கெதிராகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரச்சாரம் செய்யும் அனைவருக்கும் எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருந்தது. 

இவ்வமைப்பைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து சிங்கள பெளத்த இனவாத அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைக் கண்டிக்கத் தொடங்கியதுடன் அமிர்தலிங்கத்தின்மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவர்கள் சிலரின் தீர்மானங்கள் அமிர்தலிங்கத்தை "துரோகி" என்று விழித்திருந்தன. ஐக்கிய பெளத்த மண்டலய எனும் பெளத்த சிங்கள அமைப்பு தனிநாட்டிற்கெதிரான தீர்மானத்தினை நிறைவேற்றியது. அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் பலிபான சந்தானந்த தேரரும், மல்வத்தை பீடத்தின் அனுனாயக்கரான ரம்புக்வல்ல சிறி சோபித தேரரும் இத்தீர்மானங்களுக்கு தமது ஆதரவினைத் தெரிவித்திருந்ததுடன், தனிநாட்டிற்கான கோரிக்கையினையும் வெகுவாகக் கண்டித்திருந்தனர். 

சிங்கள ஆங்கில நாளிதழ்கள் சிங்களவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் தமிழருக்கும் எதிரான செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வந்தன. சிங்களப் பத்திரிக்கைகள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர்கள் செய்யவேண்டியவை என்ன என்கிற தலைப்பிலும் தமிழர்கள் தமது தனிநாட்டுக் கனவினை ஏன் கைவிடவேண்டும் எனும் தலைப்பிலும் வெளியிடப்பட்டன. அரச ஆதரவிலான டெயிலி நியூஸ் பத்திரிக்கை தனது ஆசிரியர்த் தலையங்கம் ஒன்றில் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது தனிநாட்டுக் கனவினை தூக்கிக் குப்பையில் போடவேண்டும்" என்று கூறியிருந்தது.

"பிரிவினவாதகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமது தனிநாடான தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையினை முன்வைப்பதனை உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரிகளைக் கொல்லுதல், வங்கிகளைக் கொள்ளையிடல், அச்சுருத்தல்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்றும் அது கூறியிருந்தது.

 தனது கட்டுப்பாட்டினை இழந்த அமிர்தலிங்கம்

தமது அரசியல்த் தலைவர்களைப் போலவே சிங்களப் பத்திரிக்கையாளர்களும் தமிழர்களின் உணர்வுகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை. அமிர்தலிங்கத்தை சிங்களவர்களின் நலன்களுக்கு அடிபணியவைக்கும் தமது முயற்சிகள் மொத்தத் தமிழ்ச் சமூகத்தின்மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது  எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை அவர்கள் ஒருபோதுமே எண்ணிப்பார்க்க விரும்பியதில்லை. தமது அழுத்தங்களுக்கு அமிர்தலிங்கத்தைப் பணியவைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தமிழர்கள் முன்னால் அவரை கீழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை அவர்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அதனைச் செய்தார்கள். 1978 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல பேச்சாளர்கள் அமிர்தலிங்கம் சிங்களவர்களுடன் மிகவும் மென்மையாக நடதுகொள்வதாக விமர்சித்திருந்தனர்.  கூட்டத்திற்குத் தலைமை வகித்த சந்ததியார் பேசும்போது "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது தேர்தல் வெற்றிக்காகவே தமிழ் ஈழம் எனும் கோரிக்கையினை முன்வைக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். தனது பேச்சின் முடிவில்,"இனிமேல் தமிழ் இளைஞர் பேரவை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிடமிருந்து பிரிந்து தனித்தே இயங்கும்" என்று கூறினார்.

 See the source image

மாவை சேனாதிராஜா இன்று

 தமிழ் இளைஞர் பேரவையின் இந்த தனித்தியங்கும் முடிவை தனது ஆதரவாளரான மாவை சேனாதிராஜாவைப் பாவித்துத் தடுத்துவிடலாம் என்று அமிர்தலிங்கம் நினைத்தார்.

 சிங்களவர்களிடமிருந்து எழுந்து வந்த கடுமையான அழுத்தத்தினையடுத்து வன்முறைகளைக் கண்டிப்பதாகக் கூறிய அமிர்தலிங்கம், தமிழ் ஆயுத அமைப்புக்களிடமிருந்தும் விலகி நடக்கத் தொடங்கினார். இது, இளைஞர் அமைப்புக்கள் மீது அவருக்கிருந்த செல்வாக்கினை சிறிது சிறிதாக இழக்கக் காரணமாகியது.  1979 ஆம் ஆண்டின் முதற்பாதியில் டெலோ அமைப்பு வீரியமாகச் செயற்பட்டு வந்தது. மார்கழி 13 ஆம் திகதி தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த பொலீஸ் உளவாளி ஐயாசாமி சிவராஜாவை டெலோ இயக்கம் கொன்றது. மாசி 1 ஆம் திகதி பொலீஸ் கொன்ஸ்டபிள் ஞானசம்பந்தம் என்பவர் கொக்குவில்ப் பகுதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பங்குனி 21 ஆம் திகதி இன்னொரு பொலீஸ் கொன்ஸ்டபிள் சிவநேசன் என்பவர் வல்வெட்டித்துறையில் கொல்லப்பட்டார்.ஆனி 30 ஆம் திகதி தொண்டைமனாற்றினைச் சேர்ந்த பொலீஸுக்குத் தகவல் வழங்கும் கணவன் மனைவியான சுவர்ணராஜா தம்பதிகளை டெலோ கொன்றது. 

மாவை சேனாதிராஜா தமிழ் இளைஞர் பேரவையினை தன்பக்கம் மெதுவாகத் திருப்பிக் கொண்டாலும்கூட, அவ்வமைப்பில் செல்வாக்கு மிகுந்தவர்களாக விளங்கிய பல உறுப்பினர்களை  அவரால் தன்பக்கம் இழுத்துக்கொள்ள முடியாமற்போனது. இவர்களுள் சந்ததியார், இரா வாசுதேவா, இறைக்குமரன், யோகனாதன் போன்றோர் தனித்து இயங்கி வந்ததுடன் பின்னாட்களில் ஆயுத அமைப்புக்களின் தலைவர்களாகவும் மாறிப்போனார்கள். சிறிதுகாலம் தமிழ் இளைஞர் பேரவை - விடுதலை அணி என்கிற பெயரில் இயங்கிவந்த இவர்கள் உமாமகேஸ்வரன் 1981 ஆம் ஆண்டு புளொட் அமைப்பினை உருவாக்கியபோது அதில் தம்மையும் இணைத்துக்கொண்டார்கள்.

டெலோ அமைப்பினரது செயற்பாடுகள் ஜெயவர்த்தனவை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன், சிங்கள மக்களின் உணர்வுகளையும் வெகுவாகப் பாதித்திருந்தது. ஐரோப்பாவில் வசித்துவந்த இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு செயற்பட்ட விதமும் சிங்களவர்களுக்கு எரிச்சலையூட்டியிருந்தது. இலங்கையில் பொது எழுதுவிளைஞர்கள் ஒன்றியத்தின் முன்னாள்த் தலைவரும், பின்னர் வழக்கறிஞராகி பிரித்தானிய மற்றும் இலங்கை வழக்காடு மன்றங்களில் வழக்குரைஞராகவும் பணிபுரிந்து ஒரு காலத்தின் சம்பியாவின் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய கிருஷ்ணா வைகுந்தவாசன் அவர்கள் அமெரிக்காவில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் இங்கிலாந்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

51MQwBVEquL._SX314_BO1,204,203,200_.jpg

கிருஷ்ணா வைகுந்தவாசன்

 1978 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் வெளிநாட்டுச் செய்திப் பிரிவிற்கு வந்த உடனடிச் செய்தியொன்று மிகுந்த பரபரப்பாகப் பேசப்பட்டது. ரொயிட்டர்ஸ் செய்திச்சேவையூடாக ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து இலங்கையர்களுக்காக அனுப்பப்பட்ட செய்தி என்று தலைப்பில் அது வந்திருந்தது. 

சுமார் 150 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேச எழுந்த தருணத்தில் இலங்கையின் சிறுபான்மைத் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் இலங்கையில் தமிழ் மக்கள் மேல் சிங்கள அரசு செய்துவரும் கொடுமைகளைக் கண்டிப்பதாக முழக்கமிட்டார். ஆனால், அவர் முழக்கமிடத் தொடங்கிய சில வினாடிகளில் அவரது ஒலிவாங்கியின் இணைப்பு மறுக்கப்பட்டதுடன் அவரைக் காவலர்கள் அங்கிருந்து அகற்றிச் சென்றனர். 

ஐக்கிய நாடுகள் சபையில் சபையில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட அந்த தமிழர் தன்னை கிருஷ்ணா என்று அறிமுகப்படுத்தியிருந்ததோடு, சுமார் 25 லட்சம் மக்களைக் கொண்ட, இந்தியாவிற்கும் சிங்களவர்களின் நாட்டிற்கும் இடையில் அமைந்திருக்கும் தமிழ் ஈழம் எனும் தேசத்தை தான் பிரதிநித்துவம் செய்வதாகவும் கூறியிருந்தார். "தமிழர்கள் மேல் சிங்களவர்களின் தேசம் இனக்கொலையொன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது" என்று அவர் முழக்கமிட்டு முடியும்போது அவரது ஒலிவாங்கியின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. 

ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த சம்பவம் குறித்து தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வந்தது. அதன் இன்னொரு செய்தி பின்வருமாறு கூறியது, 

"இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சாகுல் ஹமீட் பேசும்போது, "எனக்கு முன்னால் பேசிய பேச்சாளருக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எனது நேரத்தில் ஒரு பகுதியினை எடுத்துக்கொண்டாலும் கூட, சபையில் சலசலப்பை ஏற்படுத்தி எனது பேச்சிற்கான முன்னுரையை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்" என்று அச்சம்பவத்தின் தக்கத்தை குறைக்க எத்தனித்தார்" என்று கூறியது. 

அச்செய்தியின் இறுதிப் பகுதி பின்வருமாறு கூறியது.

"கவனயீர்ப்பில் ஈடுபட்ட அந்த நபரை விசாரித்தபோது அவர் இலங்கையைச் சேர்ந்த கே வைகுந்தவாசன் என்று அடையாளம் காணப்பட்டதாக நா பேச்சாளர் தெரிவித்தார். முன்னாள் நீதிபதியான அவர் தற்போது லண்டனில் பணிபுரிந்துவருந்துவருகிறார். அவரது வதிவிட விபரங்கள் தெரியவில்லை. சபையினுள் நுழையும்போது ஏனைய அதிதிகளுடன் அவரும் நுழைந்து வந்துள்ளதனால் அவர் தனது அடையாளம் தொடர்பான அனைத்துச் சோதனைகளும் மிகவும் நுட்பமாகக் கடந்து வந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. நா வின் மாநாட்டு மண்டபத்தில் இராஜதந்திரிகளும் அவர்களது விருந்தினர்களும் அமரும் பகுதியில் அமர்ந்துகொண்ட அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேசுதற்கு அழைக்கப்பட்ட வேளை மேடையில் திடீரென்று ஏறி பேசத் தொடங்கியிருக்கிறார். நா சபையின் பேச்சாளர் கூறும்போது அவரை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச் சென்றதாகவும், இனிமேல் பிரவேசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், வைகுந்தவாசன் அமெரிக்காவில் செய்தியாளர் ஒருவருடன் பேசும்போது நியுயோர்க் நகரில் நடைபெறும் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் பங்குபெற தான் வந்திருந்ததாகக் கூறிய அவர், தமிழரின் அவலங்களை உலகறியச் செய்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கவே நா சபையில் தான் அவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறினார்".

வைகுந்தவாசனின் பேச்சின் முழு வடிவம்,

 "மதிப்பிற்குறிய தலைவர் மற்றும் உலக நாடுகளின் அதிபர்களே! அடக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழர்கள் போன்ற சிறுபான்மையின மக்களுக்கு இந்த உயரிய சபையில் தம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியவில்லையென்றால், அவர்கள் எங்குதான் போவார்கள்? எனது பெயர் கிருஷ்ணா, நான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அமைந்திருக்கும் சுமார் இரண்டரை மில்லியன் தமிழ் மக்களைக் கொண்ட தமிழ் ஈழம் எனும் தேசத்திலிருந்து வந்திருக்கிறேன். தமிழ்த் தேசத்தை முற்றாக அழித்துவிடும் நோக்கில் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை சிங்கள அரசு ஈழத் தமிழர்கள் மேல் ஏவிவிட்டிருக்கிறது". 

"தமிழர்களின் பிரச்சினை இந்திய பிராந்தியத்தின் அமைதியினைக் குலைக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது. உலக நாடுகளின் தலைவர்களாகிய நீங்கள் உடனடியாக எமது பிரச்சினையில் தலையிட்டு ஒரு தீர்விற்கு உழைக்காவிட்டால் ஈழத் தமிழரின் பிரச்சினையும் மிக விரைவில் இன்னொரு பாலஸ்த்தீனமாகவோ அல்லது சைப்பிரஸாகவோ மாற வாய்ப்பிருக்கிறது.  ஆகவே, நாங்கள் உங்களின் உதவியினை வேண்டி நிற்கிறோம்.  மிக்க நன்றி ! அனுமதியின்றி எனது பேச்சினை இங்கே நிகழ்த்தியதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நெடுநாள் வாழ்க தமிழ் ஈழம் !!!".

 இந்தச் சம்பவம் குறித்து வைகுந்தவாசனையும் சாகூல் ஹமீதையும் நான் தனித்தனியாகச் செவ்வி கண்டேன். என்னிடம் பேசிய வைகுந்தவாசன் தனது நோக்கமெல்லாம் தமிழரின் அவலங்களை உலகறியச் செய்வதுதான் என்றும், அதற்காக அதனை தான் மிகவும் திட்டமிட்டு நிகழ்த்தியதாகவும் கூறினார். ஹமீத் என்னிடம் பேசும்போது, அந்த அசாதாரண சூழ்நிலையினை தணிக்கவேண்டிய தேவை தனக்கு இருந்ததனால் தான் மிகவும் இயல்பாக நடந்துகொள்ள எத்தனித்ததாகக் கூறினார். தான் இயல்பாக நடந்துகொண்டமைக்காக பலராலும் கெளரவப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். 

ஆனால், கொழும்பு அரசாங்கமோ கொதித்துப் போயிருந்தது. வைகுந்தவாசனின் செயலை அமிர்தலிங்கம் வரவேற்றிருந்ததனால் தனது ஆத்திரம் முழுதையும் அவர்மீதே கொழும்பு அரசாங்கம் காட்டியது.

அமிர்தலிங்கத்தின் அறிக்கை இவ்வாறு கூறியது,

 " திரு வைகுந்தவாசன் அவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தமிழ் ஈழத் தனிநாட்டின் தேவையினையும், நவ காலணித்துவவாதிகளான சிங்களவர்களிடமிருந்து தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கான தேவையினையும் மிகச் சுருக்கமாக சர்வதேச அவையில் கொண்டுவந்திருக்கிறார். எம்முன்னால் உள்ள இன்றைய தேவை என்னவென்றால் சர்வதேசத்தின் முன்னால் தமிழர்களின் போராட்டம்பற்றி பிரச்சாரம் செய்வதுதான். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேசுவதற்கு முன் மேடையில் வைகுந்தவாசன் பேசியதன் மூலம் உலக வரைபடத்தில் தமிழ் ஈழத்தினையும் அவர் இடம்பெறச் செய்திருக்கிறார்" என்று அவ்வறிக்கை கூறியது.

இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து விவாதித்த எதிர்க்கட்சியினர், இந்த சம்பவம் சிங்களவர்களின் அதிகாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினர். உலகத்தின் கண்களில் சிங்களவர்கள் அடக்குமுறையாளர்களாக இதன்மூலம் காட்டப்பட்டிருப்பதாக அவர்கள் மேலும் கூறினார்கள்.

மசாசுசெட்ஸ் தீர்மானம்

1979 ஆம் ஆண்டு வைகாசி 10 ஆம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அமெரிக்க ஜனாதிபதியும், காங்கிரஸின் உறுப்பினர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பாவித்து இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசுகளினால் நிகழ்த்தப்பட்டுவரும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளையும், மனிதவுரிமை மீறல்களையும் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்று கேட்டிருந்தது. இதுவும் ஜெயவர்த்தனவையும் சிங்கள மக்களை வெகுவாக ஆத்திரப்பட வைத்தது. 

சமர்வில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான மேரி ஹவீ என்பவரால் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானத்தில் சுமார் 8000 சதுர மைல்களைக் கொண்ட தமிழ் ஈழம் எனும் நிலப்பரப்பில் வாழும் சுமார் 30 லட்சம் தமிழ் மக்கள் இலங்கையில் சிங்களவர்களால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வாழ்வதாகக் கூறியிருந்தார். மேலும் இலங்கையில் சரித்திர காலம் தொட்டு இரு வேறு இனங்களான தமிழர்களும் சிங்களவர்களும் தனித்துவமான மத, கலாசார, மொழிகளையும் கொண்டிருப்பதாகவும், வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட  இவ்விரண்டு தேசங்களும் பிரிட்டிஷாரின் நிர்வாகத் தேவைகளுக்காக ஒன்றக்கப்பட்டதாகவும் அவர் விளக்கப்படுத்தியிருந்தார். 

அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதன்படி பிரஜாவுரிமை, மொழி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை உட்பட்ட பல விடயங்களில் தமிழர்கள் சிங்களவர்களால் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் சிங்கள அரசுகளால் கொண்டுவரப்பட்ட யாப்புகளில் தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

அவரின் உரையின் முடிவில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பின்வருமாறு அம்மாநில அவை கூறியிருந்தது, 

"இத்தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளும் இந்த அவை, அமெரிக்க ஜனாதிபதியும், காங்கிரஸ் தலைவர்களும் தமது அதிகாரத்தினைப் பாவித்து தமிழர்மீது நடத்தப்பட்டுவரும் அநீதியான அடக்குமுறைகளையும், மனிதவுரிமை மீறல்களையும் உடனே நிறுத்தி தீர்வொன்றினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது" என்று கூறியதுடன் இதன் பிரதிகளை அமெரிக்க ஜனாதிபதி, காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற அவையின் பிரதிநிதிகள், அமெரிக்க அரசுச் செயலாளர், உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தது.

Edward J. King in 1978.

ஆளுநர் எட்வேர்ட் கிங்

அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து மசாசுசெட்ஸ் மாநிலத்தின் ஆளுநர் எட்வேர்ட் கிங் அவர்கள் 1979 ஆம் ஆண்டு, வைகாசி 22 ஆம் திகதியினை "தமிழ் ஈழம் நாள்" என்று பிரகடண்ம் செய்ததுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரும், நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான சிவசிதம்பரத்தையும் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தமிழ் ஈழம் நாள் நிகழ்வில் பங்குபற்றுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.  மசாசுசெட்ஸ் மாநில ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் ஈழ நாள் பிரகடணத்தின் பிரதி சிவசிதம்பரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. 

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயற்பாடுகள் சிங்கள மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது. ஆகவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் தடைசெய்யும் முயற்சிகள் மீளவும் முன்னெடுக்கப்படலாயின. ஆடி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய பிரேமச்சந்திர மற்றும் சுனில் ரஞ்சன் ஜயக்கொடி ஆகியோர் இந்த விடயத்தை மீளவும் முன்வைத்துப் பேசினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தனா விசேட சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதனைப் பயன்படுத்தி தீவிரவாதத்தை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும், அச்சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும்  கூறினார். 

manogaran5.jpg

தனது விசேட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்காகக் காத்திருக்கும் வேளையில், வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாகக் குடியேற்றப்பட்டு வாழ்ந்துவந்த பகுதிகளை அநுராதபுர மாவட்டத்துடன் ஜெயவர்த்தன இணைத்துக்கொண்டார். இதற்கெதிராக செயற்பாடுகளில் இறங்கிய முன்னணியினர் பாராளுமன்றத்தைலிருந்து வெளிநடப்புச் செய்தனர். தீவிரவாத எண்ணங்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்றத்தின் அனைத்து குழுக்களிலிருந்தும் வெளியேறவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதற்குப் பதிலளித்த அரசாங்கம் பிரேமச்சந்திரவையும், ஜெயக்கொடியையும் பாவித்து இரு தீர்மானங்களை முன்வைத்தது. வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புக்களையும், தனிநாடு கோரும் அரசியல்க் கட்சிகளையும் தடைசெய்யவேண்டும் என்று பிரேமச்சந்திர முதலாவது தீர்மானத்தை முன்வைத்தார். இரண்டாவது தீர்மானத்தை முன்வைத்த ஜயக்கொடி தமிழ் ஈழத்திற்காகப் பிரச்சாரம் செய்வோர் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருசுவாமியின் கொலை

அதிகரித்து வந்துகொண்டிருந்த முறுகல் நிலை, டெலோ அமைப்பினரால் பொலீஸ் பரிசோதகர் குருசுவாமி 1979 ஆம் ஆண்டு ஆடி 1 ஆம் திகதி கொல்லப்பட்டபோது மேலும் தீவிரமாகியது. 1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தி இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான பொலீஸ் மற்றும் இராணுவத்தினரின் வன்முறைகளை விசாரிக்கவென்று அமைக்கப்பட்ட சன்சொனி  விசாரணைக் கமிஷனின் முன்னால் அழைக்கப்பட்ட இரு தமிழ் பொலீஸ் அதிகாரிகளில் குருசுவாமியும் ஒருவர்.   மற்றைய அதிகாரியான தாமோதரம்பிள்ளை கமிஷனின் முன்னால் பேசும்போது யாழ்ப்பாண பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தில் கடைகளுக்கும் சந்தைக் கட்டிடத் தொகுதிக்கும் தீவைத்ததாகக் கூறினார். அவர்கள் எவரும் சீருடையில் இருக்கவில்லையென்றும், எவரும் தமது அடையாள இலக்கத் தகடுகளை அணிந்திருக்கவில்லை என்றும் மேலும் கூறினார்.

 Former Chief Justice Milliani Claude Sansoni

 முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனி

See the source image

யாழ்ப்பாணம் சந்தை

 

ஆவணி 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பொலீஸார் நடத்திய வன்முறைகளில் இருமுக்கிய விடயங்களில் பொலீஸாரைப் பாதுகாக்கும் வகையில் குருசுவாமி சாட்சியமளித்திருந்தார். முதலாவது, யாழ்ப்பாண பழைய சந்தைக்குத் தீமூட்டிய விவகாரம். இந்த தீவைப்புச் சம்பவத்தில் பொலீஸார் எவரும் ஈடுபடவில்லை என்று அவர் கூறினார். இரண்டாவது யாழ்ப்பாணத்தில் வாழும் சிங்களவர்கள் தாக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் நாகவிகாரை தமிழர்களால் எரியூட்டப்பட்டதாகவும் வேண்டுமென்றே பொலீஸாரால் அனுப்பப்பட்ட செய்தி. யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியான நாணயக்கார அனுப்பிய இந்த விஷமத்தனமான அறிவிப்பை அவர் செய்யவில்லை என்று குருசுவாமி கமிஷனிடம் கூறினார். யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்கவின் நெருங்கிய தோழரான குருசுவாமி தனது பொலீஸ் நண்பர்களைக் காப்பதில் மிகுந்த கவனம் எடுத்திருந்தார். குருசுவாமியின் வாக்குமூலம் பத்திரிக்கைகளில் வெளிவந்தபோது தமிழர்கள் மிகவும் ஆத்திரமடைந்தனர். பல தமிழர்கள் அவரைத் தமிழினத் துரோகி என்று அழைக்கத் தலைப்பட்டனர். தமிழர்களின் வெறுப்பினை அவர் சம்பாதித்துக்கொண்டதால் அவரின் பாதுகாப்பிற்கென்று தானியங்கிக் கைத்துப்பாக்கியொன்றும் அவருக்கு பொலீஸாரால் வழங்கப்பட்டது. 

 Thangathurai.jpg

நடராஜா தங்கவேல் (தங்கத்துரை)

தங்கத்துரையின் அமைப்பு குருசுவாமியைக் கொல்லத் தீர்மானித்தது.

குருசுவாமியைக் கொல்லும் பணி குட்டிமணி, ஜெகன் மற்றும் ஒபரோய் தேவனிடம் வழங்கப்பட்டது. கொழும்பில் அமைந்திருக்கும் உல்லாச விடுதியான ஒபரோய் ஹோட்டலில் சிலகாலம் தேவன் கடமையாற்றி வந்ததினால் அவர் ஒபரோய் தேவன் என்று அழைக்கப்பட்டு வந்தார். குருசுவாமியைச் சுட்டுக் கொல்லும் பொறுப்பு தேவனுக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் குருசுவாமியின் இல்லம் அமைந்திருந்தது. குருசுவாமியைக் கொல்லும் குழு அவரது வீட்டை நெருங்கிய நேரத்தில், அருகிலுள்ள வீடொன்றில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக்கொண்டிருக்க இன்னொரு புறத்தில் வெடிகளும் கொழுத்தப்பட்டன. குருசுவாமியின் வீட்டுக் கதவை குட்டிமணி தட்டினார். குருசுவாமி கதவினருகில் வரும்போது அவரைச் சுட்டுக் கொல்வதே தேவனுக்கு வழங்கப்பட்டிருந்த பணி. யன்னலின் அருகில் பதுங்கியிருந்த தேவன், வீட்டினுள் இருந்து கதவுநோக்கி குருசுவாமி வருவதைக் கண்டதும் பதட்டமடையத் தொடங்கினார். அவரை நடுக்கம் பற்றிக்கொண்டது. அதுவே தேவனின் முதலாவது கொலை. 

"சுடடா" என்று தேவனைப் பார்த்துக் கட்டளயிட்டார் குட்டிமணி.

 தேவனுக்கு இன்னமும் நடுக்கம் நின்றிருக்கவில்லை.

"டேய், சுடடா" மீண்டும் குட்டிமணி தேவனைப் பார்த்துக் கத்தினார். 

இந்தமுறை தேவன் சுட்டார்.

 அருகில் வெடிச்சத்தம் காதைப் பிளந்துகொண்டிருக்க, தாம் வந்த சைக்கிள்களில் ஏறி மறைந்தது குருசுவாமியைக் கொல்ல வந்த குழு.

 

 

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். இது சபாரட்ணம் அவர்கள் எழுதிய தகவல் என்பதால் நான் சரி பிழை பார்க்கவில்லை. 

ரஞ்சித்,

குமார் அச்சகத்தை காந்தி அச்சகம் என்று தவறுதலாக நான் குறிப்பிட்டுவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.

70களில்தான் எனக்கு அவர்களுடனான பழக்கங்கள் கிடைத்தன. ஒருவேளை முன்னர் அவர்கள் நெல்லியடியில் அந்த அச்சகத்தை வைத்திருந்தார்களோ எனக்குத் தெரியாது. ஆக திரு சபாரத்தினம் எழுதியது சரியாகக் கூட இருக்கலாம். எது எப்படியோ பருத்தித்துறையில் இருந்த குமார் அச்சகம் 1984இல் சிறீலங்கா இராணுவத்தால்  எரிக்கப்பட்டது

13 hours ago, MEERA said:

அண்ணா புலோலி என்ற ஊரின் சரியான அமைவிடம் எது? மேலைப் புலோலி என்றும் ஊர் உள்ளதா?

MEERA,

பருத்தித்துறைக்கு முன்பாக உள்ளதுதான் புலோலி. இதற்கு தெற்கு, கிழக்கு, மேற்கு என பிரிவுகள் உண்டு. இதில்  புலோலி மேற்குதான் மேலைப் புலோலி. மேலைப் புலோலி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருபவர் சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kavi arunasalam said:

 

MEERA,

பருத்தித்துறைக்கு முன்பாக உள்ளதுதான் புலோலி. இதற்கு தெற்கு, கிழக்கு, மேற்கு என பிரிவுகள் உண்டு. இதில்  புலோலி மேற்குதான் மேலைப் புலோலி. மேலைப் புலோலி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருபவர் சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்கள்.

நன்றி அண்ணா, 

எங்கு ஆரம்பித்து எங்கு முடிவடைகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 15/2/2023 at 07:36, ரஞ்சித் said:

முதலாவது விமானத் தகர்ப்பு

Colombo-Ratmalana | Bureau of Aircraft Accidents Archives

 

ஐயனே, இதில் இருப்பது அவ்ரோ அல்ல... அந்தக் காலத்திய அவ்ரோவின் இரு இறக்கைகளிலும் ஒரு இயந்திரம் தான் இருக்கும் (மொத்தம் இரண்டு.) ஆனால் இதில் நான்கு உள்ளது...

இது புலிகளால் தகர்க்கப்பட்டது இல்லை. வேறு ஏதோ ஒரு வானூர்தி.

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

ஐயனே, இதில் இருப்பது அவ்ரோ அல்ல... அந்தக் காலத்திய அவ்ரோவின் இரு இறக்கைகளிலும் ஒரு இயந்திரம் தான் இருக்கும் (மொத்தம் இரண்டு.) ஆனால் இதில் நான்கு உள்ளது...

இது புலிகளால் தகர்க்கப்பட்டது இல்லை. வேறு ஏதோ ஒரு வானூர்தி.

 

 

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் சோழன். ஆனால் இரத்மலானை விமானத் தகர்ப்பு என்று தேடினால் இதுதான் வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
27 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் சோழன். ஆனால் இரத்மலானை விமானத் தகர்ப்பு என்று தேடினால் இதுதான் வருகிறது. 

தேவைப்பட்டால் இதற்குள் உள்ள படிமங்களைப் பயன்படுத்துங்கள். இதற்குள் உள்ள படிமங்கள்தான் புலிகளால் தகர்க்கப்பட்ட வானிழுனையின் (airline) படிமங்கள்.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைக் கமிஷன்களில் நம்பிக்கையிழந்த தமிழர்கள்

 

நீதித்துறை மீதிருந்த தமிழர்களின் நம்பிக்கை இல்லாமற்போனது

1977 ஆம் ஆண்டு ஆவணியில் தமிழர்களுக்கெதிரான பொலீஸாரின் வன்முறைகளை மறைக்கத் துணைபோன குற்றத்திற்காக பொலீஸ் ஆய்வாளர் குருசாமி டெலோ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசாங்கத்தால் அமைக்கப்படும் விசாரணைக் கமிஷன்களில் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாகவே குருசாமியின் தண்டனை நிகழ்ந்திருந்தது. முக்கியமாக கண்துடைப்பிற்காக அமைக்கப்பட்ட சன்சொனி விசாரணைக் கமிஷன் அரசு எதிர்பார்த்ததையே செய்துமுடித்திருந்தது.

ஆவணி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பொலீஸார் மேற்கொண்ட அட்டூழியங்களைப் பாராளுமன்றத்தில் பதிவுசெய்து, அவைதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று அமிர்தலிங்கம் கேட்டுக்கொண்டதன் பின்னர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சன்சொனி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை ஜெயவர்த்தன 1977 ஆம் ஆண்டு கார்த்திகை 9 ஆம் திகதி அமைத்திருந்தார். அமிர்தலிங்கத்தைப் பொய்யர் என்று நிறுவுவதற்கும், பொலீஸாரின் வன்முறை குறித்த அவரது தகவல்கள் யாவும் பொய்யானவை என்று நிறுவுவதற்கும் சன்சொனி விசாரணைக் கமிஷனை அரசும் பொலீஸாரும் மிக நேர்த்தியாகப் பாவித்துக் கொண்டனர். தனிநாட்டிற்கான கோர்ரிக்கையினை தமிழ் மக்களும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்ததும், அதுநோக்கிய வன்முறைச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதும் சிங்கள மக்களை சினங்கொள்ள வைத்தது மட்டுமல்லாமல் ஆவணி வன்முறைகள் நடைபெறுவதற்கு ஏதுவான பதட்டமான சூழ்நிலையினை தமிழர்களே ஏற்படுத்தியிருந்தனர் என்றும் சன்சொனி கமிஷன் கூறியிருந்தது. முடிவாக, "நீங்கள் கேட்டுக்கொண்டதே உங்களுக்கு வழங்கப்பட்டது" என்று தமிழர்களுக்கு இந்தக் கமிஷன் பதிலளித்திருந்தது.

LordSoulbury.jpg

சோல்பரி பிரபு

ஆனால், இலங்கையின் நீதித்துரை மீதிருந்த நம்பிக்கையினை தமிழர்கள் ஏற்கனவே இழந்துவிட்டிருந்தனர். சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் சரத்து 29 இல் குறிப்பிடப்பட்டிருந்த சிறுபான்மையின மக்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதை இலங்கையின் நீதித்துறை முற்றாக மறுத்திருந்தது.

சோல்பரி யாப்பின் சரத்து 29 இவ்வாறு கூறுகிறது,

"ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்த ஒருவருக்கோ அல்லது ஒரு பிரிவினர்க்கோ வழங்கப்படும் அந்தஸ்த்து மற்றைய இன, மத பிரிவுகளைச் சேர்ந்த ஒருவருக்கோ அல்லது ஒரு பிரிவினருக்கோ வழங்கப்படும் அந்தஸ்த்தினைக் காட்டிலும் அதிகமாக இருக்க முடியாது"

"பாராளுமன்றத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்குமிடத்து அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யவியலும்"

சோல்பரி யாப்பின் பிரகாரம் நீதிக்கு முறணான வகையில் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட பல லட்சம் மலையகத் தமிழர்கள் விடயத்தில் நீதித்துறை தலையீடு செய்து தவற்றினைத் திருந்த்திக்கொள்ள இருவேறு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன. முதலாவது தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசுகள் கொண்டுவந்த பாகுபாட்டு முறைகளைத் திருத்தக்கூடிய சந்தர்ப்பம். பதுர்தீன் எனும் மனிதர் ஆரம்பித்த வழக்கில் இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தில் புகுத்தப்பட்ட "சாதாரண வதிவாளர்" எனும் பதத்தினை நீதித்துறை பாவித்த விதம் பற்றியது. அரச வழக்கறிஞர்களின் கூற்றுப்படி மனுதாரரின் மனைவியும் பிள்ளைகளும் குறைந்தது 7 வருடங்களாவது இலங்கையில் வாழ்ந்திருந்தால் மட்டுமே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகமையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் வழக்கின் நீதிபதி பஸ்நாயக்கவோ, 7 வருடங்கள் தேவையில்லை, விண்ணப்பிக்கும் நேரத்தில் அவரது குடும்பம் அவருடன் இருந்தாலே போதுமானது என்று கூறி தீர்ப்பு வழங்கியிருந்தார். இதன்மூலம் சுமார் 50,000 தமிழர்கள் தமது பிரஜாவுரிமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் வழி பிறந்திருந்தது. ஆனால் சுதாரித்துக்கொண்ட அரசு தனது பிரஜாவுரிமைச் சட்டத்தினை தனக்கு ஏற்றவகையில் மாற்றி இந்தச் சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கியது. இதன்மூலம் பல்லாயிரம் தமிழர்களுக்கு நீதித்துறையின் தலையீட்டினால் கிடைத்திருக்கவேண்டிய பிரஜாவுரிமை அரசால் தட்டிப் பறிக்கப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பினைப் பாவித்தே அரசு இதனைத் தனக்குச் சாதகமாக மாற்றியிருந்தது.

சோல்பரி அரசியல் யாப்பின் பிரிவு 29 இன்படி முதன்முதலாக பதிவுசெய்யப்பட்ட வழக்கு கேகாலை மாவட்டத்தின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் கே ஜி எஸ் நாயர் என்பவரால் பதிவாளருக்கு எதிராகப் போடப்பட்டிருந்தது. தேர்தல் தொகுதியில் தன்னை ஒரு வாக்காளராக பதிவு செய்ய மறுத்தமைக்காகவே இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என் சிவஞானசுந்தரம், நாயரின் பெயர் வாக்காளர் பட்டியலில் மீளவும் சேர்க்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். சோல்பரி யாப்பின் சரத்து 29 இன்படி ஒரு இனம் மற்றைய இனம் மீது நீதிக்குப் புறம்பான வகையில் சலுகைகளைப் பெறமுடியாது எனும் சரத்தினைப் பயன்படுத்தியே பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு மேலாகச் சென்று யாப்பின்பிரகாரம் நீதி வழங்கியிருந்தார்.

ஆனால், இந்த தீர்ப்பிற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றை  குடியகல்வு - குடிவரவு ஆணையாளர் மதநாயக்க பதிவுசெய்தார். இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளான ஜயதிலக, புள்ளே மற்றும் சுவான் ஆகியோர் 1952 ஆம் ஆண்டு கேகாலை மாவட்ட நீதிபதியின் தீர்ப்பை உடைத்தெறிந்ததோடு பிரஜாவுரிமைச் சட்டம் எந்தவொரு இனப்பிரிவிற்கும் மற்றைய இனப்பிரிவுகளைக் காட்டிலும் அதிக சலுகைகள் வழங்கவில்லையென்றும், சோல்பரி யாப்பிற்கெதிராக பிரஜாவுரிமைச் சட்டம் பாவிக்கப்படவில்லையென்றும் தீர்ப்பு வழங்கினர்.

1961 ஆம் ஆண்டு மார்கழியில் அரசால் வெளியிடப்பட்ட திறைசேரியின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் அரச சேவையில் எழுதுவிளைஞராகப் பணிபுரியும் ஒருவர் சம்பள உயர்வினைப் பெறவேண்டுமென்றால் சிங்கள மொழிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் அரச எழுதுவிளைஞராக இருந்த சி. கோடீஸ்வரன் அவர்களின் வருடாந்த சம்பள உயர்வுகள் அவர் சிங்கள மொழிப் பரீட்சையினை எழுதாதனால் தடுத்துவைக்கப்பட்டிருந்தன. ஆகவே, சோல்பரி யாப்பில் கூறப்பட்டதற்கு முரணான விதத்தில் இந்த சுற்றுநிருபம் அனுப்பட்டுள்ளதென்றும், ஆகவே தனது சம்பள உயர்வுகள் தடையின்றித் தனக்குக் கிடைக்கப்பெறவேண்டும் என்றும் கோரி கோடீஸ்வரன் அவர்கள் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த சுற்று நிருபத்தை அனுப்பும்படி கட்டளையிட்டவர் அன்றிருந்த அரச சேவைகள் அமைச்சரான பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்க என்பதுடன், தனிச்சிங்களச் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றுநிருபம் சகல அரச நிறுவனங்களுக்கும் கூட்டுத்தாபனங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

FelixRDiasBandarnaike1980.jpg

 

பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க

கொழும்பு நீதிமன்றத்தில் தனது வழக்கினைப் பதிவுசெய்த கோடீஸ்வரன் சிறுபான்மையினமான தமிழினத்திலிருந்து தான் வந்துள்ளதால் சிங்களம் தெரிந்தாலன்றி சம்பள உயர்வு தரமுடியாதென்பது சோல்பரி யாப்பிற்கெதிரான செயற்பாடு என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் தமிழர்களின் பாரம்பரிய வாழிடங்களில் பணிபுரியும் சிங்கள அதிகாரிகள் தமிழில் பணிபுரியத் தேவையில்லை என்கிற அனுமதி இருக்கின்ற அதேவேளை, தமிழர்களின் பூர்விக்கத் தாயகத்தில் தனது சொந்த மொழியான தமிழில் பணிபுரியும் தமிழர்கள் கட்டாயம் சிங்கள மொழியினைக் கற்றிருக்கவேண்டும் என்கிற அழுத்தம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இது தமிழர்களைக் குறிவைத்தே கொண்டுவரப்பட்ட சதியென்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்த வழக்கு அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துகொண்ட அரச தலைமைச் சட்ட அதிகாரி, அரச பணியில் இருக்கும் ஒருவர் சம்பள உயர்வு தொடர்பாக அரசிற்கெதிராக வழக்குத் தக்கல் செய்யமுடியாது எனும் விவாதத்தை முன்வைத்து இவ்வழக்கிற்கெதிரான தடையொன்றினைக் கேட்டிருந்தார்.

அரச தலைமை சட்டவாளரின் தடைக் கோரிக்கையினை நிராகரித்த மாவட்ட நீதிபதி கோடீஸ்வரனுக்குச் சார்பாக தீர்ப்பளித்ததோடு சோல்பரி அரசியல் யாப்பிற்கு எதிராக தனிச் சிங்களச் சட்டம் இயங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இத்தீர்ப்பிற்கெதிராக அரசு உச்சநீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. அரசு சார்பில் வழக்காடிய வழக்கறிஞர்கள் கோடீஸ்வரனின் வழக்கு ஆங்கில சட்டங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், சாதாரண ஊழியர் ஒருவர் அரசுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று வாதாடினர். ஆனால் கோடீஸ்வரனின் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் ரங்கனாதன் மூல வழக்கு ரோமன் டச்சுச் சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டதால் அரச ஊழியர் ஒருவர் அரசிற்கெதிராக வழக்காட முடியும் என்று வாதாடினார். வழக்கின் முடிவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு ஆங்கில சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் ஊழியர் ஒருவர் சம்பள விடயங்கள் தொடர்பாக அரசிற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்ததுடன் தனிச் சிங்களச் சட்டத்தினை இந்த நீதிமன்றத்தில் விவாதிக்கவேண்டிய தேவையும் இல்லையென்று கூறியிருந்தார்.

ஆனால் தொடர்ந்தும் போராடிய கோடீஸ்வரன், ஆளுநரால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் முன்னிலையில் தனது வழக்கைக் கொண்டு சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, கோடீஸ்வரன் அரசிற்கெதிராக வழக்காடும் உரிமையினைப் பெற்றிருப்பதாகக் கூறித் தீர்ப்பளித்ததுடன், தனிச் சிங்களச் சட்டம் குறித்து வழக்கில் எதுவும் குறிப்பிடப்படாததால் இந்துதொடர்பாக தாம் தீர்ப்பெதுவும் வழங்கத் தேவையில்லை என்றும் கூறியது. மேலும், தேவையேற்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் தனிச்சிங்களச் சட்டம் குறித்து விசாரிக்கலாம் என்று கூறியபோதும் இலங்கையரசு வழக்கை நீட்டிச் செல்வதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. கோடீஸ்வரன் விரும்பியிருந்தால் வழக்கினை மேலும் தொடர்ந்திருக்க முடியும். ஆனால், அரச நிர்வாக அமைச்சினால் விநியோகிக்கப்பட்ட சுற்று நிருபத்தில் மாற்றங்களைச் செய்து தமிழர்கள் அனைவருக்கும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வுகளை மீள வழங்க அரசு ஒத்துக்கொண்டதனால் அவரும் தொடர்ந்து வழக்காடுவதை நிறுத்திக்கொண்டார்.

இந்த மூன்று நீதிமன்றங்களிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களின்படி தனிச்சிங்களச் சட்டம் செல்லுபடியற்றதாக நிரூபிக்கப்பட்டதுடன், அதுதொடர்பாக விவாதங்களையும் இம்மூன்று நீதிமன்றங்களும் தவிர்த்தே வந்தன. ஆனாலும், இந்த நீதிமன்றங்களின் கருத்தினை உதாசீனம் செய்த அரசு தொடர்ந்தும் தனிச் சிங்களச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்ததுடன், நீதித்துறையின் சுயாதீனத்தையும் கேள்விக்குள்ளாக்கியது.

1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமா, நீதிமன்ற தீர்ப்பினை மீறி, தனிச்சிங்களச் சட்டத்தினை 1972 ஆம் ஆண்டு யாப்பினுள் உள்வாங்கியதோடு, சோல்பரி அரசியல் யாப்பிலிருந்தும் விலகிக்கொண்டார். 1972 ஆம் ஆண்டு யாப்பின்படி பாராளுமன்றா அதிகாரம் பொறுந்திய அமைப்பாக மாறியதுடன், ஆளுநரூடாக வழக்குத் தாக்கல் செய்யும் பிரிவி செயன்முறையினையும் முற்றாக இல்லாமலாக்கியிருந்தது.

அமிர்தலிங்கத்திற்கெதிராக பதிவுசெய்யப்பட்ட ட்றையள் அட் பார் வழக்கில்  1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பு இரு முக்கிய விடயங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தது.

வழக்கறிஞர் திருச்செல்வம் இதுதொடர்பாக வாதிடுகையில் சோல்பரி யாப்பின் பிரிவு 29.4 இன்படி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் யாப்பின் சரத்துக்கள் மாற்றப்படலாமேயன்றி, யாப்பினை முற்றாக மாற்ற முடியாது என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த அரச தலைமை வழக்கறிஞர் ஐக்கிய முன்னணி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் மக்கள் ஆணையினைப் பெற்றிருப்பதாகக் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்து மூன்று நீதிபதிகளும் இதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்ததுடன், திருச்செல்வம் முன்வைத்த இன்னுமொரு முக்கிய விடயத்தையும் வேண்டுமென்றே தட்டிக்கழித்தனர். திருச்செல்வத்தின் வாதத்தின்படி ஐக்கிய முன்னணி அரசாங்கம் மக்கள் ஆணையினைப் பெற்றிருந்தாலும் கூட, அது வெறுமனே சிங்கள மக்களின் ஆணை மட்டுமேயன்றி , இன்னொரு தேசிய இனமான தமிழ் மக்களின் ஆதரவு இந்த புதிய அரசியல் அமைப்புருவாக்கத்திற்குக் கிடைக்கவில்லை என்று வாதிட்டிருந்தார். தமிழ் மக்கள் சமஷ்ட்டி முறையிலான ஆட்சியொன்றிற்கு 1970 ஆம் ஆண்டு தேர்தல்களில் வாக்களித்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தவிடயத்தை முற்றாகப் புறக்கணித்த மூன்று நீதிபதிகளும் அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் கைதுசெய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் காலவதியாகிவிட்டதனால், அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியாது என்று மட்டுமே தீர்ப்பளித்தனர். மேலும், இந்த நீதிமன்றம் யாப்பின் பிரகாரம்  உருவாக்கப்படாததனால், குடியரசு யாப்பின் ஏற்புடைமை குறித்து தம்மால் கருத்தெதுவும் கூறமுடியாதென்று கைவிரித்து விட்டனர்.

உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்த அரச பிரதான வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் கூறுவதுபோல அவசரகாலச் சட்டம் வழக்கற்றுப்போனாலும் கூட, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அது இன்னமும் நடைமுறையிலேயே இருக்கிறது. ஆகவே இந்த நீதிமன்றமும் யாப்பின்படியே உருவாக்கப்பட்டிருக்கிறது, ஆகவே அமிர்தலிங்கத்திற்கெதிரான வழக்கு தொடர்ந்தும் நடைபெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், திடீரென்று சட்ட மாதிபர் வழக்கினை வாபஸ் வாங்கியதால் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பின் ஏற்புடைமையினை உரசிப்பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று அரசால் திட்டமிட்ட ரீதியில் தவிர்க்கப்பட்டிருந்தது.

 1976 ஆம் ஆண்டு புரட்டாதி 20 ஆம் திகதி அமிர்தலிங்கத்திற்கெதிரான வழக்கின் தீர்ப்பு நீதிபதி ஜே. எப். . சோசா அவர்களால் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புப்பற்றி தந்தை செல்வாவிடம் கேட்டேன். வெளிப்படையாக எதனையும் சொல்ல மறுத்த செல்வா அவர்கள் ஒரு விடயத்தைப் பொதுவாகச் சொன்னார். இலங்கையில் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தினூடாகவோ, நீதித்துறை ஊடாகவோ அல்லது அதிகாரத்திலிருப்பவர்களூடாகவோ தமக்கான நீதியை ஒருபோதுமே பெற்றுவிட முடியாதென்பது தெரிகிறது என்று மட்டும் கூறினார்.

"தமிழர்கள் இலங்கையின் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையிழந்துவிட்டார்கள். சோல்பரி யாப்பின் பிரிவு 29 இன்படி சிறுபான்மையின மக்களுக்கான நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய இலங்கையில் உள்ள எந்த நீதிமன்றமும் தயாராக இல்லை" என்று தந்தை செல்வா கூறினார்.

 

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்சொனி ஆணைக்குழு

 1978 ஆவணியில் யாழ்ப்பாணப் பொலீஸார் மேற்கொண்ட அட்டூழியங்களை விசாரிக்கவென சன்சொனி ஆணைக்குழுவை ஜெயவர்த்தனா அமைத்தார். ஆனால், விசாரணைகளின் முடிவில் ஆணைக்குழுவினரால் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்ட பல விடயங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஏமாற்றி விட்டிருந்தன.  பாராளுமன்றத்தில் ஆவணி 18 ஆம் திகதி அமிர்தலிங்கம் செய்த முறைப்பாட்டின் பின்னர் பொலீஸாரின் அடாவடித்தனத்தை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை ஜெயவர்த்தனா அமைக்கப்போவதாக அறிவித்தபோது தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆவணி 22 ஆம் திகதி பறங்கி இனத்தைச் சேர்ந்தவரும், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான ஓய்வுபெற்ற முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனியை ஜே ஆர் அணுகி யாழ்ப்பாணத்திலும் பின்னர் நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான  விசாரணைகளுக்குத் தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது தமிழர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. 

ஒற்றை நீதிபதியின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த விசாரணை ஆணைக்குழு மூன்று விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 

1. இலங்கையில் 1977 ஆவணி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து புரட்டாதி மாதம் 15 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வன்முறைகளுக்கான மூல காரணம் மற்றும் வன்முறைகள் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியிருந்த புறக் காரணிகளைக் கண்டறிதல். 

2. தனிநபரோ, அல்லது ஒரு குழுவோ அல்லது ஒரு அமைப்போ இந்த வன்முறைகளின் பின்னால் இருந்துள்ளதா என்று கண்டறிதல். 

3. வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புணர்வாழ்வு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இவ்வாறான வன்முறைகள் இனிமேல் நடவாதிருப்பது ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை மேற்கொள்வது.

 

தனது முதலாவது அமர்வினை 1978 ஆம் ஆண்டு மாசி மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த ஆணைக்குழு இறுதியாக 1979 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் திகதியுடன் தனது விசாரணைகளை பூர்த்தி செய்துகொண்டது. யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு, கண்டி, திருகோணமலை ஆகிய இடங்களின் இந்த விசாரணைகளுக்கான அமர்வுகள் இடம்பெற்றன. விசாரணைகள் சாட்சியங்களூடு பூரணப்படுத்தப்பட்டிருந்தது என்று கூறலாம். விசாரணைகளின் இறுதி அறிக்கை 1980 ஆம் ஆண்டு ஆடி 22 ஆம் திகதி ஜெயவர்த்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதே வருடம் கார்த்திகை 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் பிரதான குறிக்கோளாக இருந்தது வன்முறைகளுக்கான மூல காரணத்தையும், சூழ்நிலைகளையும் கண்டறிதல் மற்றும் வன்முறைகளின் பின்னாலிருந்த தனிநபர்கள் அல்லது அமைப்புக்களைக் கண்டறிதல் என்றே கூறப்பட்டிருந்தது. சுமார் 277 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையில் வன்முறைகளுக்கான மூல காரணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைமைப்பீடமே என்று தீர்க்கமாக வரையறை செய்துகொண்டே தனது அறிக்கையினைச் சமர்ப்பித்திருந்தார். வன்முறைகள் உருவாவதற்கான சூழ்நிலையினை நாட்டில் உருவாக்கியது முன்னணியினர் தான் என்று குற்றஞ்சாட்டிய சன்சொனி, வன்முறைகளைச் செய்தவர்கள் யாரென்பதை  எவ்விடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை. 

தனிநாட்டிற்கான கோரிக்கையினை தமிழ்த்தலைவர்கள் முன்வைத்து வந்தமையும், தமிழ் ஆயுத அமைப்புக்களை ஊக்குவித்து வந்தமையுமே சிங்கள மக்களின் ஒரு பிரிவினரை இதற்கெதிரான பழிவாங்கல் நிலைக்குத் தள்ளியிருந்ததாக சன்சொனி குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு கூறியதன் மூலம் ஒரு நாட்டில் சிறுபான்மையின மக்கள் தமக்கும் சம அந்தஸ்த்துக் கோரும்போது, அது பெரும்பான்மையின மக்களைக் கோபப்படுத்துமிடத்து, சிறுபான்மையின மக்களுக்கெதிரான வன்முறைகளில் பெரும்பான்மையின மக்கள் இறங்கலாம் எனும் புதிய சட்டத் தேற்றத்தை உருவாக்கியிருந்தார். இதனை இன்னும் சுருக்கமாகக் கூறினால், "நீங்கள் பெரும்பான்மைச் சமூகத்தை கோபப்பட வைத்தால் அதன் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள்" அல்லது "பெரும்பான்மைச் சமூகத்தைக் கோபப்படுத்தியதால் உங்களுக்கு நீங்கள் கேட்டது கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று பொருள்.

 சன்சொனி மேலும் கூறுகையில், "இலங்கையின் மொத்த மக்களையும் பொறுத்தவரையில் தனிநாடு என்பது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும். அதனை பெரும்பான்மையின மக்கள் இறுதிவரை எதிர்ப்பார்கள். வன்முறைகளோ, அல்லது வன்முறைகளுக்கான ஊக்கப்படுத்தல்களோ மேலும் மேலும் வன்முறைகளையே கொண்டுவரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. 1977 ஆவணியிலும் புரட்டாதியிலும் இடம்பெற்ற சம்பவங்கள் எங்களுக்குக் கற்றுத்தரும் பாடங்கள் இவைதான்" என்று கூறினார். 

இந்த அறிக்கையினை ஆராய்ந்த பலர் சன்சொனி கூறியிருப்பது 1977 ஆம் ஆண்டு ஆவணி 18 இல் பாராளுமன்றத்தில் ஜெயவர்த்தன நிகழ்த்திய தமிழர்களைச் சீண்டும் விதமான ஆணவப் பேச்சிற்குச் சற்றும் சளைத்தது இல்லை என்று கூறியிருந்தனர்.  பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தன பின்வருமாறு பேசியிருந்தார், 

"நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களைப் போன்று, குறிப்பாக முன்வரிசயில் அமர்ந்திருக்கும் அதிகாரம் மிக்க உறுப்பினர்களுக்கு இருக்கின்ற பொறுமையோ சகிப்புத்தன்மையோ கிடையாது. தனியான நாடொன்றினை அமைக்கப்போகிறார்கள் என்று மக்கள் கேள்விப்படும்போது அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. இந்து சமுத்திரத்தின் திறவுகோல் திருகோணமலையென்று நெப்போலியன் ஒருமுறை சொன்னானாம், ஆகவே தமிழர்கள் தமது தனிநாட்டிற்குத் திருகோணமலையை தலைநகராக்கப் பார்க்கிறார்களாம். "

 "எது எப்படியிருந்தாலும், நீங்கள் தனிநாட்டுக்கான அறிக்கைகளை விடும்போது பத்திரிக்கைகள் அதனை நாடு முழுதும் கொண்டு செல்கின்றன. நீங்கள் வன்முறையினை விரும்பவில்லை என்று கூறிக்கொண்டே எதிர்காலத்தில் வன்முறையினைப் பாவிக்கலாம் என்று கூறும்போது, இலங்கையில் வாழும் மற்றைய மக்கள் என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்குப் போர் வேண்டும் என்றால், போர் செய்துபார்க்கலாம். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமென்றால், சமாதானம் செய்து பார்க்கலாம்" என்று ஜெயவர்த்தனா முழங்கியபோது அவரது கட்சியினர் பலத்த கரகோஷம் செய்தனர்.

 கரகோஷங்களுக்குப் பின்னர் தொடர்ந்து பேசிய ஜெயவர்த்தன, "இதனை நான் சொல்லவில்லை, எனது மக்களே சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் நடக்கும்போது, சிங்களவர்கள் தாக்கப்படும்போது, அவர்களது கடைகள் எரிக்கப்படும்போது, அங்கிருந்து தப்பி ரயில்களில் ஏறி தென்பகுதிக்கு வரும் சிங்களவர்கள் தமக்கு நடந்தவற்றைச் சொல்கிறார்கள். இதன் விளைவாகவே பல தமிழ் உயிர்களும், முஸ்லீம் உயிகளும் பலியாகின. இவை நடந்திருக்கத் தேவையில்லை. அவை நடந்ததற்காக நான் வருந்துகிறேன்" என்று கூறி முடித்தார்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கெதிராக கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்துவரும் ராஜன் ஹூல் என்பவர் சன்சொனியின் அறிக்கை பற்றிக் கூறும்போது, பாதிக்கப்பட்ட 952 பேரின் சாட்சியங்களை 298 அமர்வுகளில் விசாரித்தும்,  பாதிக்கப்பட்ட 275 வாக்குமூலங்களை விசாரணை செய்தும் முடிக்கப்பட்ட அறிக்கையினை ஒருவர் படிக்கும்போதும்,  இந்த அமர்வுகளைத் தொடர்ச்சியாக பார்த்தும் வரும் போதும், 1977 ஆம் ஆண்டில் ஜெயவர்த்தனவின் ஆக்ரோஷமான பேச்சினை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கயினை வெளியிடவேண்டும் என்கிற அழுத்தம் சன்சொனி மீது பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பது இலகுவாகப் புரியவரும் என்று கூறுகிறார்.  

சன்சொனி தனது அறிக்கையின் முழுவதிலும் தனிநாட்டிற்கான கோரிக்கையும், அதனை நோக்கிய வன்முறைகள் அல்லது வன்முறைகளுக்கான ஊக்கப்படுத்தல்களே இனவன்முறைக்குக் காரணமாக அமைந்தன என்று கூறிவந்தார். தம்மீது நடத்தப்பட்ட சிங்களக் காடையர்களின் தாக்குதல்களுக்கு தமிழர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். "வன்முறைகளுக்கான சூழ்நிலையினை நீங்களே உருவாக்கினீர்கள், அதனையே நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் " என்று அவர் தமிழர்களைப் பார்த்துக் கூறினார். இதுதான் அவரது தீர்ப்பு. அவர் சொல்லாது விட்ட ஒரு விடயம் தான், "வன்முறைகளுக்கு நீங்கள் தகுதியுடையவர்கள் தான்" என்பது.

 "தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்ட வேண்டும்" என்பதும் "தமிழர்கள் தாக்கப்படும்போது, மற்றையபக்கம் பார்த்துக்கொண்டு நில்" என்று பொலீஸாருக்குக் கட்டளையிடுவதுமே சுதந்திர இலங்கையில் அரசியல் இலட்சணமாகிவிட்டது. தமிழர்களால் முதன் முதலாக முன்னெடுக்கப்பட்ட அகிம்சை வழியிலான போராட்டத்திற்கும் சிங்களவர்கள் கொடுத்த பதில் இதுதான். 1956 ஆம் ஆண்டு ஆனி 5 ஆம் திகதி, தமிழுக்கும் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்த்தினை வழங்குங்கள் என்று அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவைக் கோரி, காலிமுகத்திடலில் கால்களை மடித்து பிரார்த்தனையில் ஈடுபட்ட சுமார் 200 தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியபோது, அருகிலிருந்து பொலீஸார் எதுவுமே செய்யாது வேடிக்க பார்த்துக்கொண்டிருந்ததுடன், பலர் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்தனர். 

See the source image

 சத்தியாக்கிரகம்

 தமிழ் மக்கள் மீதான "பாடம் புகட்டும் தாக்குதல்களும்" பொலீஸாரின் பாராமுகமும் அன்று கொழும்பிலும், மறுநாள் கல்லோயாவிலும் இடம்பெற்றன. 1958 ஆம் ஆண்டு இதே "பாடம் புகட்டுதல்களும்" பாராமுகமும் இன்னும் பெரிய அளவில் இடம்பெற்றன. 1961 ஆம் ஆண்டின் சமஷ்ட்டிக் கட்சியினர் செய்த சத்தியாக்கிரக போராட்டத்தைக் கலைப்பதற்கும் சிறிமா இதே அரசியல் கலாசாரத்தையே பாவித்தார்.  ஜே ஆரை பொறுத்தவரை வன்முறை என்பது ஆர்ப்பாட்டங்களை அடக்க தேவையானதும், வீரியம் மிக்கதுமாகக் காணப்பட்டது. ஆடி, 1977 ஆம் ஆன்டு தனது அரசியல் எதிரிகள் மீது, குறிப்பாக சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டார். தான் செய்யப்போவது குறித்து அவர் முன்னரே அறிவித்தும் இருந்தார். 

1956 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரக நிகழ்வுபற்றி புத்தகம் ஒன்றினை எழுதிய எஸ் பொன்னையா, சிங்களவரின் அரசியல் கலாசாரம் வன்முறையினை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கான சாட்சியம் ஒன்றினை குறிப்பிட்டிருந்தார்.

1956 ஆம் ஆண்டு, ஆனி 5 ஆம் திகதி, காலை 9:30 மணிக்கும் 10:00 மணிக்கும் இடையிலான நேரத்தில் பாராளுமன்றத்தில் தனது தனிச்சிங்களச் சட்டத்தினை பிரகடணப்படுத்த காரில் வந்துகொண்டிருந்தார் அன்றைய பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க.  காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளோரைக் கண்டதும் தனது காரினை அவர் நிறுத்தினார். சத்தியாக்கிரகிகள் மீது சிங்களக் குண்டர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்துவதைப் பார்த்து சிரித்துக்கொண்டே சில நிமிடங்கள் அவர் அங்கே நின்றிருந்தார். அங்கு கடமையில் நின்ற சிரேஷ்ட்ட பொலீஸ் அதிகாரியொருவர் பண்டாரநாயக்காவின் காரின் அருகில் வந்து, "தாக்குதல் நடத்தும் குண்டர்களைக் கலைத்து விடலாமா?" என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பண்டாரநாயக்கா, "இல்லையில்லை, அவர்களைக் கலைக்க வேண்டாம். தமிழர்களுக்கு ஒரு பாடம் புகட்டப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தின்பின்னர் தலையில் காயத்துடன் பாராளுமன்றம் வந்த அமிர்தலிங்கத்தைப் பார்த்து கேலியுடன் பேசிய பண்டாரநாயக்க, "போரில் ஏற்பட்ட விழுப்புண்களா?" என்று வினவினார்.

 "தேர்தல்களின் பின்னர் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொலீஸாருக்கு விடுமுறை வழங்குங்கள்" 

1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர், அரச திணைக்கள வாகனங்களில் நாடு முழுவதும் பவனி வந்த ஜே ஆரின் ஆதரவாளர்கள் ஜே ஆரின் வெற்றியைக் கொண்டாடியதோடு, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர். பொலீஸார் இவற்றைக் கண்டும் காணாததுபோல பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டனர். ஆவணி 77 இல் நடந்தவை இதற்குப் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளே. 1980 ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் மீதும் இதே பாணியிலான அரசியல் வன்முறைகளை ஜே ஆர் ஏவி விட்டார். தொழிற்சங்க தலைவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு, பல தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 1981 இலும் 1983 இலும் தமிழர்களுக்கு மேலும் பல பாடங்கள் சிங்களவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு, பிரதம நீதியரசரான ஹேமா பஸ்நாயக்கவுக்கும் பாடம் புகட்டப்பட்டது. ஜெயவர்த்தனவை விமர்சித்தார் என்பதற்காக அவரது உத்தியோகபூர்வ இல்லம் சுற்றிவளைக்கப்பட்டு காடையர்களால் தக்கப்பட்டு அவரும் அச்சுருத்தப்பட்டார்.

 

 

 

  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறைக் கலாசாரத்தை நியாயப்படுத்திய நீதிபதி சன்சொனி

Torching Jaffna, Part 1

 

சன்சொனி தனது விசாரணை அறிக்கையில் வன்முறைக் கலாசாரத்தை நியாயப்படுத்தியிருந்தார். விசாரணைகளின் இரு முக்கிய வினாக்களுக்கான பதிலை அவரால் இறுதிவரை கண்டறிய முடியாமற்போனதே அவரது விசாரணை முற்றாகத் தோல்வியடைவதற்குக் காரணமாகியது. ஆவணி 16 ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணச் சந்தைக்குத் தீ வைத்தது யாரென்பதையும், யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த தமிழருக்கெதிரான வன்முறைகள் பின்னர் நாடு முழுதிற்கும் எவ்வாறு பரவின என்பதற்கும் அவரால் காரணங்களைக் கண்டறிய முடிந்திருக்கவில்லை. 

ஆவணி 16 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் பழைய சந்தைப்பகுதிக்குத் தீவைத்தது யார்? இது நடந்த சூழ்நிலையினை மீளுருவாக்கம் செய்வதற்கு சன்சொனியினால் சேகரிக்கப்பட்ட ஆதராங்களை நாம் முதலில் பார்க்கலாம்ம். ஆவணி 15 ஆம் திகதி, பிற்பகல் புத்தூர் சந்தியூடாக சைக்கிள்களில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இளைஞர்களை பொலீஸார் மறிக்கின்றனர். பொலீஸார் தம்மை மறிக்கவே, தாம் வந்த சைக்கிள்களை எறிந்துவிட்டு அந்த இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர். அப்படித் தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியினால் பொலீஸாரை நோக்கிச் சுட்டுவிட்டே ஓடியிருக்கிறார். இச்சம்பவத்தின்போது பொலீஸ் கொன்ஸ்டபிள் பண்டாரவின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. 

ஆவணி 15 பிற்பகல் நடந்த இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர் எஸ் செனிவிரட்ணவை கொழும்பு டெயிலி சண் பத்திரிகைக்காக யாழ்ப்பாண நிருபர் எல் சவரிமுத்து பேட்டி கண்டிருந்தார். செனிவிரட்ண இச்சம்பவம் குறித்து மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டார். செய்தியாளரிடம் பேசிய பொலீஸ் அத்தியட்சகர், அரச ஊழியரான பண்டார மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்காக தமிழ் மக்கள் பாரிய விலையைச் செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்திருந்தார். 

தமிழ் பொலீஸ் கொன்ஸ்டபிளான சட்டநாதப்பிள்ளை வழங்கிய வாக்குமூலத்தில், "இச்சம்பவம் நடந்த ஆவணி 15 ஆம் நாள் இரவு தனது வாசஸ்த்தலத்தில் பொலீஸார் அனைவரையும் அழைத்த யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர் செனிவிரட்ண, கூட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார். இக்கூட்டத்தில் பேசிய அத்தியட்சகர் தமிழரை மிகவும் இழிவாகப் பேசியிருக்கிறார். சிங்களப் பொலீஸாரின் மீது சுடுவதென்பது இனிமேல் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அவர் அங்கு பொலீஸாரின் முன்னிலையில் கூறியிருக்கிறார். அக்கூட்டம் முடிந்தபின் ஒரு தொகுதி பொலீஸார் தமது நடவடிக்கைப் புத்தகத்தில் புங்குடுதீவுக்குச் செல்கிறோம் என்று கூறிவிட்டு, யாழ்நகருக்குள் சென்று அங்கிருந்த பழைய சந்தைக்கு காலை 1:30 மணியளவில் தீவைத்தனர்" என்று அவர் கூறியிருந்தார்.

 பொலீஸாரே யாழ்ப்பாணம் பழைய சந்தைக்குத் தீவைத்தனர் என்பதை அப்பகுதியில் வியாபார நிலையங்களை நடத்திவந்த வர்த்தகர்களும், ஏனையோரும் உறுதிப்படுத்தியிருந்தனர். அவர்களின் கூற்றுப்படி சுமார் 100 பேர் அடங்கிய பொலீஸ் குழுவொன்று வாகனங்களில் வந்திறங்கி சந்தைப்பகுதிக்குத் தீவைத்திருக்கிறார்கள். சந்தைக்குத் தீவைத்தவர்களின் தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. அவர்கள் காக்கிக் காற்சட்டைகளை அணிந்திருந்தனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் சிங்களத்தில் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பொலீஸ் வாகனங்களிலேயே வந்திறங்கியிருந்தார்கள். அவர்கள் வந்திறங்கிய பொலீஸ் வாகனங்கள் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

அப்பகுதியில் வியாபார நிலையங்களை நடத்திவந்த பல வர்த்தகர்கள் இதுகுறித்து வழங்கியிருந்த வாக்குமூலங்களில் , சந்தைப்பகுதிக்கு பொலீஸார் தீவைக்கிறார்கள் என்கிற செய்திபரவியபோது, மக்கள் அப்பகுதிநோக்கி அணிதிரண்டதுடன், சந்தைக்குத் தீவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொலீஸார் சந்தையின் ஏனைய பகுதிகளுக்குள் நுழைந்து எரிப்பதை தடுப்பதற்கு மக்கள் வீதிகளில் டயர்களை எரித்து பொலீஸாரின் நடமாட்டத்தைத் தடுக்க முனைந்திருக்கிறார்கள். தமிழர்கள் அப்பகுதிக்கு அதிகமாக வருவதுகண்டு உசாரான பொலீஸார் தாம் வந்த வாகனங்களில் ஏறி பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், இச்சட்சியங்களை முற்றாக மறுத்த சன்சொனி, "இவை போதுமானவையாக இல்லை, பொலீஸார் மீது வேண்டுமென்றே பழிசுமத்தும் நோக்கோடு கூறப்பட்ட குற்றச்சட்டுக்கள்" என்றும் கூறியிருந்தார். 

அப்படியானால் பழைய சந்தையினை எரித்தது யார்? உதவிப் பொலீஸ் மாதிபர நூர்டீன் தலைமையில் ஆதாரங்களைச் சேகரித்த குழு, யாழ்ப்பாணம் சந்தைப்பகுதியில் குழுவொன்று தீவைப்புச் சம்பவத்தில் ஈடுபடுவதாகத் தமக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதன்பின்னர் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட பொலீஸார் அங்கு சென்றதாகவும் கூறியிருந்தது. இதனையே சன்சொனி சாட்சியமாக ஏற்றுக்கொண்டார். சன்சொனி தனது அறிக்கையில், சந்தைப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளை அடக்கவே பொலீஸார் அப்பகுதிக்குச் சென்றனர் என்று இதனை முடித்திருந்தார். 

சன்சொனி பல சாட்சியங்களை வேண்டுமென்றே உதாசீனம் செய்திருந்தார். மதிப்பிற்குரிய பிரமுகர்களான வைத்தியர் பாலசிங்கம், வர்த்த பெரும்புள்ளி எம் ஆர் ஜோசேப் ஆகியோர் கூறிய "பொலீஸாரின் அட்டூழியங்கள்" எனும் கருத்தை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஜோசேப் வழங்கிய வாக்குமூலத்தில் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் தனது வாகனத்தில் யாழ்ப்பாணப் பேரூந்து நிலையம் நோக்கி வெகு வேகமாகப் பயணித்ததைக் கண்டதாகவும், அங்கு வன்முறைகளில் ஈடுபட்டிருந்த பொலீஸாரைப் பார்த்து, "அவர்களை நாய்களைப் போல் சுட்டுத் தள்ளுங்கள், நாங்களா அவர்களா என்று பார்த்துவிடலாம்" என்று கட்டளையிட்டதாகவும் கூறினார். 

சன்சொனி கேட்கமறுத்த கேள்விகளாவன, 

1. வன்முறையில் ஈடுபட்ட குழு எதற்காக நகர்ப்பகுதியை அதிகாலை 1:30 மணிக்குத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது? 

2. தமிழர்கள் தமது சொந்த நகரையே தீவைத்து எரிக்க வேண்டிய தேவை என்ன?

 

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொலீஸ் பயங்கரவாதம்

Ganegoda Appuhamelage Don Edmund Ananda Seneviratne.jpg

பொலீஸ் பயங்கரவாதி - அனா செனிவிரட்ண

யாழ்ப்பாணத்தில் பொலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பகையுணர்வு என்பது பல வருடங்களாக இருந்து வரும் ஒரு விடயம். குறிப்பாக 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 11 அப்பாவிகள் கொல்லப்படக் காரணமான பொலீஸாரின் அடாவடித்தனம் இடம்பெற்ற காலத்திலிருந்து இந்தப் பகைமையுணர்வு அதிகரித்தே வந்திருந்தது. ஆனால், பொலீஸாரின் தமிழ் மக்கள் மீதான இந்த வன்மத்தை சன்சொனி பார்க்க விரும்பவில்லை. மேலும், 1974 ஆம் ஆண்டுப் படுகொலையில் நீதிபதி கிரெஸ்டர் அளித்த தீர்ப்பில் பொதுமக்களின் கொலைக்கு பொலீஸாரின் நடவடிக்கைகளே காரணம் எனும் முடிவை பொய்யாக்க பொலீஸாருக்கு ஒரு சந்தர்ப்பத்தையும் சன்சொனி ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். 

மேலும், தமிழ் மக்களுக்கு சரியான பாடம் ஒன்றினைப் புகட்டவேண்டும் என்று செயலாற்றிய அனைத்துப் பொலீஸ் அதிகாரிகளும் பதவியுயர்வுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் அப்பாவித் தமிழர்களைக் கொன்றதற்காக சிறிமாவினால் உதவி பொலிஸ் அத்தியட்சகரான சந்திரசேகரவிற்கு பதவியுயர்வு வழங்கப்பட்டது போன்றே, 1977 ஆம் ஆண்டு பொலீஸார் நடத்திய படுகொலைகளுக்காக அனா செனிவிரட்ண, ஜெயவர்த்தனவினால் பொலீஸ் மாதிபராக பதவியுயர்வு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இந்தப் பதவி உயர்வு பொலீஸார் மீதான குற்றச்சாட்டுக்களை சன்சொனி விசாரித்துவந்த நிலையிலேயே நடந்தேறியது என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் யாழ்ப்பாண  பொலீஸ் அத்தியட்சகர் உதவிப் பொலீஸ் மாதிபராகவும், யாழ்ப்பாணத் தாக்குதல்களில் முன்னின்று செயலாற்றிய ரொனி குணசிங்க, எஸ் செனிவிரட்ணவின் உதவியாளராகவும் பதவியுயர்த்தப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தின் சந்தைப்பகுதியை பொலீஸார் எரித்துக்கொண்டிருந்தவேளை அப்பகுதிக்குச் சென்றிருந்த கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வாக்குமூலம் பின்வருமாறு,

" 15 ஆம் திகதி இரவு யாழ்ப்பான நகரின் பல பகுதிகளில் தீவைக்கப்பட்டிருப்பதாகவும், பொலீஸாரே கடைகளுக்குத் தீ வைப்பதாகவும் எமக்குச் செய்தி கிடைத்தது. பல இளைஞர்கள் அப்பகுதி நோக்கி அவசரமாகச் சென்றுகொண்டிருந்தனர். என்னை எக்காரணம் கொண்டும் வீட்டிற்கு வெளியே வரக்கூடாது என்று கூறிவிட்டு எனது மூத்த சகோதரனும் யாழ்நகரப்பகுதிக்கு விரைந்தார். ஆனால், நானும், எனது வயதினை ஒத்த சில நண்பர்களும் வைத்திய சாலை வீதியும், காங்கேசந்துறை வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் ஒளிந்துகொண்டு, எனது சகோதரனின் கண்ணில்ப் படாமல்  நடப்பதை அவதானிக்கத் தொடங்கினோம். நாங்கள் பொலீஸாரையும் அவரது வாகனங்களையும் நகரத்தில் கண்டோம். சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன. தெய்வாதீனமாக அவர்கள் கண்களில் நாங்கள் படவில்லை". 

"சில மூத்தவர்கள் டயர்களை இழுத்துவந்து காங்கேசந்துறை வீதிக்குக் குறுக்கே குவியலாகப்  போட்டு தீமூட்டினார்கள். பொலீஸார் நாம் இருந்த பக்கம் வருவதைத் தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அப்படியிருந்தும், நாமிருந்த பக்கத்திற்கு அருகில் வந்த பொலீஸார் வீதிகளின் பெயர்களைத் தாங்கி நின்ற பெயர்ப்பலகைகளை கீழே இழுத்து வீழ்த்தினார்கள். பெயர்ப்பலகைகள் பொறுத்தப்பட்டிருந்த தூண்களைக் கொண்டு எரிந்துகொண்டிருந்த டயர்களை ஒவ்வொன்றாக இழுத்துச் சென்று எரிபொருட்கள் சேமிக்கப்பட்ட கடைகள் மீதும், பழைய சந்தைமீதும் அவர்கள் எறிந்த போது அவை தீப்பிடிக்கத் தொடங்கின. நாம் அவர்கள் மீது கற்களை எறிய ஆரம்பித்தோம். எம்மைப்போன்றே பலரும் அவர்கள் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தவே அவர்கள் ஓடிச்சென்று தமது வாகனங்களில் ஏறித் தப்பிச் சென்றார்கள்". 

"மறுநாள் காலை நான் பாடசாலைக்குச் செல்லும்போது, வங்கியின் காவலுக்கு வந்த இரு பொலீஸ்காரர்களிடமிருந்து அவர்களின் ஆயுதங்களைப் பொதுமக்கள் பறித்துக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன். அவர்களில் ஒருவர் தாக்கப்படுவதையும் நான் கண்டேன். எனது பாடசாலைப்பையிலிருந்த வட்டாரியினைக் கொண்டு அந்தப் பொலீஸ்காரரின் தொடையில் குத்தி விட்டு பாடசாலைக்குச் சென்றேன். ஒரு துப்பாக்கி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மற்றையதைப் பறித்தவர்கள் அதனை வெளியே வைத்துவிட்டு தேநீர் அருந்தச் சென்றவேளை அங்கு வந்த பொலீஸார் அதனை எடுத்துச் சென்றார்கள்" என்று கூறினார்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரேடியோத் தகவலின் மர்மம்

File:Jaffna Naga Vihara.JPG - Wikipedia

 சன்சொனி பார்க்கத் தவறியிருந்த இரண்டாவது விடயம் தான் யாழ்ப்பாணத்தில் பொலீஸாரால் தமிழ் மக்கள் மேல் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகள் எவ்வாறு நாடுமுழுதுவதற்கும் பரவியது என்பது. தமிழ் மக்கள் மீது நாடு தழுவிய ரீதியில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்குக் காரணமாக இருந்தது யாழ்ப்பாணம் ஆரிய குளத்தருகில் அமைக்கப்பட்டிருந்த நாக விகாரை தமிழர்களால் எரியூட்டப்பட்டு விட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பொலீஸார் அனுப்பிய ரேடியோத் தகவலே. இந்த ரேடியோச் செய்தி யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகரிடமிருந்து பொலீஸ் மாதிபருக்கு ஆவணி 17 அன்று காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

"இன்று இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் நான்கு எரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்களவர்களைத் தாக்குவதற்காக ரயில்நிலையத்தில் பாரிய கூட்டம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது, நிலைமை மிக மோசமாக இருக்கிறது" என்று அந்த ரேடியோச் செய்தி அனுப்பப்பட்டிருந்தது. 

இந்த ரேடியோச் செய்தியில் அனுப்பப்பட்ட அத்தனை தகவல்களும் தவறானவை, பொய்யானவை. ஒரு போக்குவரத்துச் சபை பஸ்தன்னும் எரியூட்டப்படவில்லை. ஆணைக்குழுவின் முன்னால் பலர் அளித்த சாட்சியங்களில் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சில பஸ்களை கடத்திக்கொண்டு  யாழ்நகரின் நகைக்கடைகளுக்குச் சென்றது யாழ்ப்பாணப் பொலீஸாரே என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 நகைக்கடைகளை உடைத்த பொலீஸார் அவற்றைக் கொள்ளையடித்தனர்.  நாக விகாரை ஒருபோதுமே தாக்குதலுக்குள்ளாக்கப்படவில்லை. ரயிலில் வரும் பயணிகளைத் தாக்கவென ஒரு தமிழர் கூட புகையிரத நிலையத்தில் காத்துக் கிடக்கவில்லை. 

விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்த போலீஸார் சிலர்கூட அனுப்பப்பட்ட ரேடியோத் தகவல் பொய்யானது என்று கூறியபோது சன்சொனி அதனை ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படியானால், இந்த பொய்யான செய்தி எங்கிருந்து உருவானது? இதன் பின்னால் இருந்தது யார்? 

ஆணைக்குழுவின் சாட்சியமளித்த பொலீஸ் கொன்ஸ்டபிள் குமாரசாமி, பொலீஸ் தலைமைக் காரியாலயத்தின் தலைமை அதிகாரி குணசேகர தன்னைப் பணித்தன்படியே  தான் அந்தத் தகவலைத் தயார் செய்ததாகக் கூறியதுடன் அத்தகவலை ரேடியோ அறையில் பணிபுரியும் ரேடியோ  இயக்குநரான ஜேக்கப்பிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறினார். மேலும் , குணசேகர தனக்குக் கூறியதன்படி தகவலை தான் எழுதிக்கொண்டிருக்கும்போது, குணசேகரவுடன் பொலீஸ் பரிசோதகர் குருசாமியும் அருகில் இருந்ததாக அவர் கூறியிருந்தார். பின்னர் ரேடியோ இயக்குநர் அத்தகவலை கொழும்பு பொலீஸ் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்ப, அத்தகவல் நாட்டிலுள்ள அனைத்துப் பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. 

குணசேகர பொய்யான தகவலை குமாரசாமியைக் கொண்டு எழுதும்போது தான் அருகில் நிற்கவில்லை என்று முதலில் குருசாமி மறுத்திருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர் சார்பாக வாதாடிய  வழக்கறிஞர் லெஸ்லி பார்லெட்ட் குருசாமியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, அத்தகவல் குணசேகரவால் தயார் செய்யப்படும்போது தானும் அருகில் இருந்ததை குருசாமி ஒப்புக்கொண்டதுடன், மேலிடத்திலிருந்து வந்த கட்டளையின்பேரிலேயே அத்தகவலைத் தாங்கள் தயார் செய்து அனுப்பியதாகவும் கூறினார். 

பொலீஸாரைத் தொடர்ச்சியாகக் குறுக்கு விசாரனை செய்த லெஸ்லி பார்லெட்ட் பின்வரும் விடயங்களைக் கண்டறிந்திருந்தார்.

"ஆவணி 17 ஆம் திகதி காலை, பொலீஸ் செயற்பாட்டு அறையில் குருசாமியும், குமாரசாமியும் கடமையில் இருந்தார்கள். காலை 11 மணியளவில் செயற்பாட்டு அறைக்குள் நுளைந்த குணசேகர, குமாரசாமியைப் பார்த்து நான் கூறுவதை அப்படியே எழுதுங்கள் என்று கட்டளையிட்டுவிட்டு பேசத் தொடங்கினார், "4 .போ. பஸ்வண்டிகள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நாக விகாரை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ரயில்களில் வரும் பயணிகளைத் தாக்குவதற்கு பாரிய குழு ஒன்று புகையிரதநிலையத்தில் காத்துக்கிடக்கிறது. நிலைமை மோசம்" என்று கூறிவிட்டு, இந்தத் தகவலை உடனடியாக பொலீஸ் மா அதிபருக்கு ரேடியோ மூலம் அறிவிக்குமாறு குணசேகர குமாரசாமியைப் பணிக்கிறார். அருகில் இருந்த குருசாமியும், குமாரசாமியிடம் அத்தகவலை உடனடியாக அனுப்புமாறு அழுத்தம் கொடுக்கிறார். அதன்பிறகு அத்தகவலை எடுத்துச் சென்று ரேடியோ அறையில் கடமையிலிருந்த ரேடியோ இயக்குநர் ஜேக்கப்பிடம், குமாரசாமி கொடுத்துவிடுகிறார். இறுதியாக ஜேக்கப்பினால் அத்தகவல் 11 மணிக்கு பொலீஸ் மாதி அபருக்கு அனுப்பப்படுகிறது".

"இத்தகவலைப் பெற்றுக்கொண்ட கொழும்புப் பொலீஸ் தலைமையகத்தின் ரேடியோப் பிரிவு இத்தகவல் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்துங்கள் என்று யாழ்ப்பாண பொலீஸ் ரேடியோப் பிரிவிற்கு தகவல் அனுப்புகிறது. பொலீஸ் பரிசோதகர் குருசாமி உடனடியாக ரேடியோ அறைக்கு அழைக்கப்படுகிறார். குருசாமி 11:05 இற்கு அளித்த ரேடியோப் பதில் இப்படிக் கூறியது, " எனது தற்போதைய தகவலுக்கு மேலதிகமாக வேறு தகவல்கள் இல்லை, இத்தகவலை புறக்கணியுங்கள், வேறு தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் - இப்படிக்கு யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 "காலை 11:20 இற்கு, யாழ்ப்பாண ரேடியோ அறைக்கு பொலீஸ் மா அதிபரிடமிருந்து பின்வரும் கட்டளை கிடைத்தது, "கடற்படையினர் நாக விகாரைக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள். நாக விகாரையின் பாதுகாப்பிற்கு காவலர்களை ஒழுங்கு செய்யுங்கள்" . இத்தகவலின் பின்னர் பொலீஸ் மா அதிபரிடமிருந்து வேறெந்த தகவல்களும் வரவில்லை.

 அதன்பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து வேறெந்த தகவலும் அனுப்பப்படவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவல் தவறானது என்பதையும் போலீஸ் மா அதிபர் ஸ்டான்லி சேனநாயக்கவும் எவருக்கும் அறிவிக்கவில்லை. கடைசியாக ரேடியோவில் பகிரப்பட்ட தகவல் 11:20 இற்கு பொலீஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய தகவல் மட்டும்தான். அத்தகவலில் யாழ்ப்பாணத்திலிருந்த இரு பிரதான பெளத்த விகாரைகளுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டிருந்தது.  அத்தகவல் எச்சரிக்கையுடன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பிறகு பொலீஸ் ரேடியோ அலைவரிசயில் நிசப்தமே நிலவியது. இந்தச் செய்திகள் அனைத்தும் பொலீஸாரை ஆத்திரப்படவைக்க அவர்கள் எவ்வாறு தமிழ்மக்களுடன் நடந்துகொண்டார்கள் என்பதை விசாரணைக் குழுவிற்குக் கிடைத்த ஆதாரங்கள் விளக்கியிருந்தன.

விசாரணைகளின்போது, பொய்யான பொலீஸ் செய்தியத் தயாரித்தது யாரென்பதை மறைக்க பொலீஸார் பகீரதப் பிரயத்தனத்தனத்தில் ஈடுபட்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தப் பொய்களை மறைக்கும் கைங்கரியம் குருசாமியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. முதலில், அத்தகவல் தயாரிக்கப்படும்போது குணசேகரவுடன் தானும் குமாரசாமியின் அருகில் இருந்ததை அவர் மறுத்திருந்தார். பின்னர், குணசேகர அத்தகவலை தயாரிக்குமாறு குமாரசாமிக்குக் கட்டளையிடவில்லை என்று அவர் கூறினார். ஒருகட்டத்தில் அத்தகவலை யார் தயாரித்தார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். ஆனால், குமாரசாமியுடன் சேர்ந்து தான் அத்தகவலை கொழும்பிற்கு அனுப்பி சரியாக 5 நிமிடங்களில் கொழும்பிலிருந்து தாம் அனுப்பிய தகவலை உறுதிப்படுத்துமாறு தகவலொன்று வந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். குமாரசாமி கைப்பட எழுதிய முதலாவது தகவலை தான் கண்ணுற்றதாகவும், பின்னர் அத்தகவல் தவறானது, மேலதிக தகவல்களுக்காகக் காத்திருங்கள் என்று கொழும்பிற்குத் தகவல் அனுப்பியதாகவும் குருசாமி கூறினார். குணசேகரவும் முதலில் அத்தகவலைத் தான் தயாரிக்கவில்லை என்று மறுத்தார். அத்தகவல் குறித்து முதன்முதலாக தான் கேள்விப்பட்டது புரட்டாதியில் விசாரணைக் குழுவினரூடாகத்தான் என்று கூறினார்.

வழக்கறிஞர் லெஸ்லி பாட்லெட்,  குருசாமியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, தனது மேலதிகாரிகளிடமிருந்து வந்த கட்டளையின்படி செயலாற்றியிருக்கும் குருசாமி, முதலில் அனுப்பப்பட்ட பொய்யான தகவலை திருத்திக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்தபோதும் வேண்டுமென்றே தாமதித்து 10 நிமிடங்களின் பின்னரே அத்தகவல் தவறானது, வேறு தகவலுக்காகக் காத்திருங்கள் என்று கொழும்பிற்குத் தகவல் அனுப்பியிருக்கிறார். மேலும், மேலிடத்து அழுத்தத்தினால், குருசாமி தவறான தகவல்பற்றிய மேலதிக விபரங்களை கொழும்பிற்கு தெரிவிக்காதும் விட்டிருக்கிறார் என்று கூறினார். விசாரணைகளின் முடிவில் மனமுடைந்து அழுத குருசாமி, அத்தகவல் பொய்யானதென்று தனக்குத் தெரியும் என்றும், பொய்யொன்றையே தாம் செய்தியாக ரேடியோவூடாக அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டார்.

 இறுதியாக வாக்குமூலமளித்த குருசாமி, தனது மேலதிகாரிகளின் சதியே இவற்றிற்கான காரணம் என்று கூறியதுடன், தனக்கும் இச்சதிக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார். லெஸ்லி பார்லெட் முன்வைத்த தனது அறிக்கையில், பொலீஸ் ரேடியோச் சேவையூடாக வேண்டுமென்றே பொய்யான தகவலை அனுப்பிய பொலீஸ் அத்தியட்சகர் செனிவிரட்ணவும் ஏனைய உயர் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாது என்று எழுதியிருந்தார்.

"பொய்யான தகவல் பரப்பப்பட்டபோது பொலீஸ் மா அதிபர் அனா செனிவிரட்ண, பொலீஸ் அத்தியட்சகர் . எஸ். செனிவிரட்ண, பொலீஸ் தலைமையக பரிசோதகர் குணசேகர ஆகியோர் தத்தமது செயற்பாட்டு அறைகளில் இருந்திருக்கின்றனர், ஆகவே இவர்களே இந்தப் பொய்யான தகவல் நாடு முழுவதற்கும் பரப்பப்படக் காரணமானவர்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை" என்று லெஸ்லி பார்ட்லெட் முன்வைத்த அறிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்த சன்சொனி, இதனை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று கூறினார். ஆகவே, இப்பொய்யான தகவலை யார் தயாரித்திருப்பார்கள் என்பதை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி கையை விரித்துவிட்டார்.

மேலே குறிப்பிடப்பட்ட இரு முக்கியமான கேள்விகளுக்குமான பதிலை சன்சொனி தேடியிருந்தால், 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கு யார் காரணம் என்பதை மிக இலகுவாக அவரால் கண்டுபிடித்திருக்க முடியும்

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பரம வைரியும், ஆய்வாளருமான ராஜன் ஹூலின் கருத்துப்படி தமது புதிய அரசியல் எஜமானர்களான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் கட்டளையின்பேரிலேயே பொலீஸார் இந்த வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கூறுகிறார். 

ஜெயவர்த்தனவின் ஆட்சியில், தமிழரின் விடுதலை வேட்கையினை அடக்குவதற்கு அவர்கள் மீதான இனவன்முறையே கட்டாயமான  ஆயுதமாகப் பாவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ் மிதவாதிகளுடன் தொடர்பாடலைப் பேணுவதற்கான கதவினை அவர் இறுக மூடிக்கொண்டார். இரு வருடங்கள் கழித்து, 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் எனும் புதிய சட்டத்தினை உருவாக்கியதன் மூலம் ஜனநாயக வழியிலான தீர்விற்கான முழுக்கதவினையும் அடைத்துக்கொண்டதோடு, பொலீஸாருக்கும், இராணுவத்திற்கும் மிதமிஞ்சிய அதிகாரங்களை அள்ளி வழங்கி மிதவாதத் தமிழர்கள் மீது ஆயுத வன்முறையினையும் கட்டவிழ்த்து விட்டார்.

 

 

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட அன்டன் பாலசிங்கம்

***************************************************************************************************

செய்திக்குறிப்பு : திரு சபாரட்ணம் அவர்களுக்கு அவரது வாசகர் ஒருவர் அனுப்பிய தகவல் ஒன்றினை சபாரட்ணம் இணைத்திருந்தார். அதன் விபரங்கள் கீழே.

 

1978 முதல் 1979 வரையான காலப்பகுதியில் புலிகளும் டெலோ அமைப்பும் இளைஞர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் ஆட்டங்களையும், உதைபந்தாட்டங்களையும் வட மாகாணத்தில் ஒழுங்கு செய்திருந்தனர்.  கல்வி உயர்தரப் பரீட்சை நடந்துவந்த காலப்பகுதியில் வடமராட்சியின் வதிரி, துன்னாலை மற்றும் கரணவாய் ஆகிய பகுதிகளில் இந்த ஆட்டங்கள் நடந்தன. யாழ்ப்பாணம் மற்றும் அதனோடு அண்டிய பகுதிகளிருந்து வந்த அணிகளுடன் வடமாராட்சி அணிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட முக்கியமானவர்களில் பொன்னமான் (குகன் - யோகியின் சகோதரர்) யாழ் இந்துக்கல்லூரியில் பயின்றுவந்த திறமையான கிரிக்கெட் வீரர். அப்படியான போட்டியொன்றில் நான் பிரபாகரனைக் கண்டேன். போட்டியின் பின்னர் வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துரையாடுவதுடன் உணவுவகைகளையும் பகிர்ந்துகொள்வது வழக்கம். இப்படியான கலந்துரையாடல்களில் அரசியலும் வழமையாக இடம்பெறுவதுடன் ஒரேவகையான கருத்தினைக்  கொண்டவர்கள் ஒன்றிணைந்து பயணிப்பதும் வழமையானது. 

கடல்ப்புறா எனும் சரித்திர நாவல் சோழர்களின் பெருமையினைப் பற்றியும், அவர்களின் கடலறிவு பற்றியும் பேசுகிறது. இந்த நாவலின்ன் பெரும்பகுதி கடாரம் எனப்படும் பகுதியினை மையப்படுத்தியே கூறப்படுகிறது. மேலும், அகூதா எனும் பிரபலமான பெயர் ஒன்றும் இக்கதையில் கூறப்பட்டிருக்கிறது. 

திரு பிரபாகரன் இந்த நாவலை வாசித்திருந்தார். சோழர்களின் கடல்வலிமை பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தது. இதனாலேயே கேர்ணல் சங்கர் முதலாவது கப்பலை புலிகளுக்காக அமைத்தபோது அதற்கு பிரபாகரன் கடல்ப்புறா என்று பெயரிட்டார். பின்னாட்களில், 1987 ஆம் ஆண்டு புலிகளின் மூத்த தளபதிகளான லெப்டினன்ட் கேணல்கள் குமரப்பாவும் புலேந்திரனும் கடல்ப்புறாவில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.  

நான் இந்தச் சம்பவம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நன்கு அறிந்திருந்தேன்.  அதுலத் முதலியுடன் இக்காலப்பகுதியில் அடிக்கடி தொடர்புகொண்டு வந்திருந்தேன். அதுபற்றிய தகவல்களை இங்கே தருகிறேன், 

குமரப்பாவின் தற்கொலையோடு தொடர்புபட்ட விடயம் ஒன்றைப்பற்றியும், அது என்னை எவ்வளவு தூரத்திற்குப் பாதித்திருந்தது என்பது பற்றியும் கூறுகிறேன். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் பொறியியலாளராகப் பணியாற்றிவந்த ஒருவரின் மனைவி தனது கணவருக்கு என்ன நடந்தது என்பற்றி அறிந்துகொள்ள டெயிலி நியூஸ் காரியாலயத்திற்கு வந்திருந்தார். மூத்த ஆசிரியர் மணிக் டி சில்வா அவரை என்னிடம் அழைத்து வந்திருந்தார். அந்தப்பெண் எனக்கு முன்னால் அமர்ந்துகொண்டார். நான் யாழ்ப்பாண அரசாங்க அதிபரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த இளம் பொறியியலாளர் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறினார். அந்த பொறியியலாளரை நான் கண்டிருக்கிறேன், கைத்தொழில் அமைச்சரான சிறில் மத்தியூ காங்கேசந்துறைக்கு விஜயம் செய்தவேளை நானும் அவருடன் சென்றபொழுது அந்தப் பொறியியலாலறைச் சந்தித்திருந்தேன். அவர் இறந்த செய்தி எனக்குக் கண்ணீரை வரவழைத்தது.

********************************************************************************************* 

இனப் பூசலின் அரசியல்

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னைப் பலப்படுத்திக்கொண்ட ஜெயவர்த்தனவின் பலம் சிறிமாவை மேலும் பலவீனப்படுத்தி மக்கள் முன் அவரது நம்பகத்தன்மையை வலுவிழக்கப்பண்ணியதன் மூலம் இன்னும் பலமடைந்து வந்தது. அவரது அடுத்த இலக்காக இருந்தது இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகுவதுதான். 

புதிய அரசியலமைப்பின் மூலம் அவர் நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராகவும், முப்படைகளின் பிரதான கட்டளையிடும் தளபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு பங்குனி 20 ஆம் திகதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து சிறிமாவின் அரசியல் நம்பகத்தன்மையினை வெகுவாக அழித்திருந்தார். 1970 இலிருந்து 1977 வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்த சிறிமா அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று ஜெயவர்த்தன குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது முதலாவது பதவிக்காலம் 1960 இலிருந்து 1965 வரை நடைபெற்றிருந்தது. அவருக்கெதிராக முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், அளவுக்கதிகமான விவசாயக் காணிகளை வைத்திருக்கும் நிலச் சுவாந்தர்களிடமிருந்து அவற்றினை கையகப்படுத்தி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் சட்டத்தினை சிறிமா கொண்டுவரவிருந்த சமயத்தில் தனக்குச் சொந்தமான தென்னங்காணிகளின் ஒருபகுதியினை அவர் தனியாருக்கு விற்றிருந்தார் என்பது. இதனால் அவரை ஒரு எமாற்றுப்பேர்வழி என்று மக்கள் அக்காலத்தில் தூற்றி வந்திருந்தனர். 

ஜே ஆர் இனால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளான வீரரட்ண, சர்வானந்தா, அல்விஸ் ஆகியோர் அடங்கிய ஆணைக்குழுவினருக்கு, ஆணைக்குழு அமைக்கப்பட்ட ஆண்டிற்கு முன்னதாக நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றினை விசாரிக்கும் அதிகாரம் இல்லையென்று சிறிமா தாக்கல் செய்த வழக்கினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

ஆனால், சிறிமா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்ட ஜெயவர்த்தன, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1978 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜே ஆர் முன்வைத்த திருத்தத்தினை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியினால் அமைக்கப்படும் விசேட விசாரணைக் குழுக்களின் தீர்ப்புக்களுக்கெதிராக மேல்முறையீடு செய்யமுடியாது என்ற திருத்தம் அரசியல் யாப்பில் இணைக்கப்பட்டது.

1982 இல் ஜெயவர்த்தனவினால் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு பற்றிய சட்டத் திருத்தம் தன்னை அடுத்துவரவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பங்கெடுக்காது தடுக்கவே என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டிய சிறிமா, இந்த விசாரணைகளில் பங்குகொள்வதை நிராகரித்திருந்தார். தனது காரணத்தை விவரித்து சிறிமா எழுதிய கடிதத்தினை உதாசீனம் செய்த விசாரணை ஆணைக்குழு அவரது பிரசன்னம் இன்றியே விசாரணைகளை நடத்தினர். மூன்று நீதிபதிகளடங்கிய குழு, சிறிமா தனது அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்திருந்தார் என்று தீர்ப்பளித்திருந்தனர். 1980 ஆம் ஆண்டு புரட்டாதி 24 ஆம் திகதி பாராளுமன்றம் இந்த ஆணைக்குழுவின் தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டது.

 

 ஜோன் கொத்தலாவலை 

முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவலை உட்பட பல பிரமுகர்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் சிறிமாவுக்கெதிரான சிவில்த் தடைகளை பாராளுமன்றத்தின் ஆதரவுடன் ஜெயவர்த்தன  நடைமுறைப்படுத்தினார். சாதாரண பொதுமகன் ஒருவருக்கிருக்கும் உரிமைகள் பறிக்கப்பட்ட சிறிமா 7 வருடங்கள் அவதிப்பட்டிருந்தார். 

சிறிமாவுக்கெதிரான உரிமை மறுப்பு நடவடிக்கைகளை அமிர்தலிங்கம் கடுமையாகக் கண்டித்திருந்தார். ஆனால், சிறிமாவின் உரிமைகளுக்கெதிரான தீர்மானம் 139 இற்கு 19 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், சுதந்திரக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. சிறிமாவின் மீதான உரிமை மறுப்பு நடவடிக்கை இரு கட்சி ஜனநாயக அரசியலினை ஒரு பக்கமாகச் சரிக்கவே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. 

சிறிமாவின் நெருங்கிய நண்பராக இருந்த இதிரா காந்தி, சிறிமா மீதான தடையினை ஜனநாயகத்திற்கெதிரான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். ஜெயவர்த்தனா அமெரிக்கா நோக்கிச் சாய்ந்துவருவதை உணர்ந்துகொண்ட இந்திரா, அதனை மாற்றுவதற்கு அடுத்த தேர்தலில் சிறிமா மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அது நடைபெறாமல்ப் போய்விட்டது. சிறிமாவை அரசியலிலிருந்து முற்றாக அகற்றியதன் பின்னணியில், அமெரிக்காவின் பக்கம் நோக்கிச் சாய்ந்துவரும் இலங்கையை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்திடலாம் என்று இந்திரா எதிர்பார்த்ததும் நிகழாது போய்விட்டது.

 புது தில்லியிலும், கொழும்பிலும் என்னுடன் பேசிய சில இந்திய அதிகாரிகள், சிறிமாவின் அரசியல் மீள்வருகை முற்றாக அழிந்துவிட்டதன் மூலம் இந்தியாவின் நலன்களுக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி தனக்கு விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு இந்திரா தம்மைக் கேட்டிருந்ததாகவும், அந்த அறிக்கையில் அலசப்பட்ட விடயங்களிலிருந்து இலங்கையினை மீளவும் அணிசேரா நாடுகளின் அமைப்பிற்குள் எப்படிக் கொண்டுவரலாம் என்பதுபற்றிய திட்டங்களையும் வகுத்துக்கொண்டதாகவும் கூறியிருந்தனர். இந்த தேடுதல்களின் விளைவாகவே தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு உதவுவதன் மூலம், அவர்களைக் கருவியாகப் பாவித்து, ஜெயவர்த்தனவின் அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்று இந்திரா முடிவெடுத்ததாகவும் கூறியிருந்தனர்.

சிறிமாவை 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலி பங்குபற்றுவதிலிருந்து அகற்றுவது மட்டுமே ஜனநாயத்திற்கெதிரான செயலாக ஜெயவர்த்தனவினால் செயற்படுத்தப்படவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனக்கு அடிபணிய வைக்கவும் ஜெயவர்த்தன அதனைச் செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாகவும், அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராளுமன்றத்தில் அமர்ந்தபோது ஜெயவர்த்தனா அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் தனக்கு அடிபணிந்து தான் செய்வதை ஆமோதிக்கக் கூடிய ஒரு பொம்மை எதிர்க்கட்சியைத்தான். ஆனால், தான் எதிர்பார்த்தது நடக்காது போகவே தமிழர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டவும், அமிர்தலிங்கத்தை அச்சுருத்தி தனக்கு அடிபணிய வைக்கவும் 1977 ஆம் ஆண்டு ஆவணிக் கலவரத்தை ஜெயவர்த்தனா திட்டமிட்டு நடத்தினார். 

தான் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாவதற்கு சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை  முற்றாகப் பலவீனப்படுத்துவதும் தமிழர்களின் வாக்குகள் அனைத்தையும் தனக்கே விழும்படி பார்த்துக்கொள்வதும் அவசியம் என்பதை ஜெயவர்த்தனா உணர்ந்திருந்தார். இதனை விடவும், காலம் காலமாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்துவரும்  சிங்கள கடும்போக்குத் தேசியவாதிகளின் வாக்குகளையும் கவர்வதன் மூலம் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தனது வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிந்துவைத்திருந்தார். புதிய அரசியலமைப்பின்படி தேர்தலில் முதலாவது சுற்றில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே ஜனாதிபதியாகமுடியும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

 

  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் குறிவைத்த ஜே ஆர்

 

கைதேர்ந்த அரசியல் மூலோபாயவாதியாக விளங்கிய ஜெயவர்த்தன, சிங்களக் கடும்போக்குத் தேசியவாதிகளின் வாக்குகளை சிறில் மத்தியூவைக் கொண்டு பெற்றுவிட திட்டமிட்டுச் செயற்பட்டுவந்தார். ஒரு சிங்களத் தேசியத் தலைவராக வளரும்வரையில் மத்தியூ,  ஜெயவர்த்தனவினால் ஊக்குவிக்கப்பட்டார். தமிழர்களை உசுப்பேற்றும் வெறித்தனம் கொண்டவராக மத்தியூ செயற்படவைக்கப்பட்டார். இந்தச் சதிகுறித்து அறிந்திராத அமிர்தலிங்கம், இயல்பாகவே வருத்தமடைந்து காணப்பட்டார். ஆகவே, மத்தியூ தன்மீது முன்வைத்துவந்த விஷமத்தனமான பிரச்சாரங்கள் குறித்தும் கேலிகள் குறித்தும் ஜெயவர்த்தனவிடம் முறையிடலானார் அமிர்தலிங்கம். மத்தியூவின் பேச்சுக்களால் தமிழ் மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செல்வாக்குச் சரிந்துவருவதாகவும் கூறிக் கவலைப்பட்டார். "மத்தியூ எம்மை காலையும் மாலையும் வசைபாடி பேசி வரும் நிலையில், நாம் உங்கள் அரசாங்கத்தை எவ்வாறு ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவர் ஜே ஆரை வினவினார். அதற்கு ஜே ஆர் தந்த பதில் இப்படியிருந்தது, "மத்தியூ கூறுவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் தமிழ் மக்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறேன் என்று பிக்குகளும் சிங்களத் தேசியவாதிகளும் எனது அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் முகமாகவே மத்தியூ தமிழர்களுக்கெதிரான பிரச்சாரத்தைச் செய்யவேண்டியிருக்கிறது" என்று கூறினார்.

AmirthalingamNSivasithamparam.jpg

அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும்

இதனைக் கேட்டதும் அமிர்தலிங்கம் கவலையடைந்தார். இதுகுறித்து அவர் என்னிடம் பேசுகையில், "ஜெயவர்த்தன அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பகையுணர்வை வளர்க்கிறார். சிங்களவர்களுக்கு முன்னால் தன்னை ஒரு மீட்பராகக் காட்ட அவர் எத்தனிக்கிறார். தமிழர்களை நசுக்கக்கூடிய ஒரே தலைவர் தானே என்று சிங்களவர்களுக்குக் காட்ட நினைக்கிறார்" என்று கூறினார். ஜே ஆரின் பதிலின் பின்னர் அமிர்தலிங்கம் ஜே அர் மீது வெறுப்புக் கொண்டிருந்தார்.

ஆகவே, எதிர்க்கட்சியுடன் நெருங்கிவரும் இரகசிய நடவடிக்கையொன்றினை அமிர் மேற்கொண்டார். 1978 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அவருக்கு இதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. இலங்கை சம சமாஜக் கட்சியின் தலைவர்கள் அமிரையும், சிவசிதம்பரத்தையும் அவரது வீட்டில் சந்தித்து ஜெயவர்த்தனவுக்கெதிரான பரந்துபட்ட தேர்தல் கூட்டணியொன்றினை உருவாக்குவதுபற்றிக் கலந்துரையாடினர். ஆரம்பத்தில் இந்தக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிப்பவனவாகத் தெரிந்தன. தான் விட்ட பழைய தவறுகளைத் திருத்திக்கொள்ள சிறிமாவோ தயாராக இருப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவர்கள் அமிரிடம் கூறினர். இந்த இரகசிய பேச்சுவார்த்தையினை அறிந்துகொண்ட ஜெயவர்த்தனா, கொழும்பிலிருந்த தமிழ் வர்த்தகப் புள்ளியொருவரூடாக அமிர்தலிங்கத்திற்குச் செய்தியொன்றினை அனுப்பினார். "நீங்கள் எதிர்க்கட்சியுடன் தொடர்ந்து இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் கொழும்பில் தமிழருக்கெதிரான இன்னொரு கலவரம் வெடிக்கும்" எனும் எச்சரிக்கை தான் அது.

இதனால் அச்சமடைந்த அமிர்தலிங்கம் எதிர்க்கட்சியினருடனான இரகசியப் பேச்சுவார்த்தைகளை இடைநடுவில் முறித்துக்கொண்டார். அமிர் கவலையடைய. சிவசிதம்பரமோ கலங்கிப் போனார். தனது நண்பர்களுடன் பின்னர் பேசிய அமிர்தலிங்கம், "தமிழர்களால் இன்னொரு இனக்கலவரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது" என்று கூறியிருந்தார்.

எதிர்க்கட்சிக்கும், முன்னணிக்கும் இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தையினைக் குழப்புவது ஜெயவர்த்தனவின் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் கோபத்தினை ஊதிப் பெருப்பித்து ஈற்றில் தமிழ் ஆயுதக் குழுக்களை முற்றாக அழிப்பதே அவரது திட்டத்தின் மீதிப்பகுதியாக இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஆவணியில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான வன்முறையினை விசாரித்த சன்சொனி ஆணைக்குழ் வழங்கிய இறுதி அறிக்கையினைப் பாவித்து அமிர்தலிங்கம் மீது கடுமையான விமர்சனங்களை ஜெயவர்த்தன மேற்கொண்டார். பொலீஸாரினால் சோடிக்கப்பட்ட பொய்யான ஆதாரங்களை ஆணைக்குழுவின் முன்னால் வைத்து, அமிர்தலிங்கம் ஒரு இரத்த வெறிபிடித்த, சிங்களவருக்கெதிரான இனவாதியென்றும், அவரது கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே தமிழ் ஆயுதக் குழுக்களின் வன்முறைகளின்  பின்னால் இருந்ததென்றும் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஜெயவர்த்தன பிரச்சாரம் செய்துவந்தார்.

பொன் சிவகுமாரனின் இறுதிச் சடங்கின்போதும், 1977 ஆம் ஆண்டின் தேர்தல்ப் பிரச்சாரங்களின்போதும் அமிர்தலிங்கமும் அவரது துணைவியார் மங்கையற்கரசி பேசிய பேச்சுக்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கெதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. தமிழ் இளைஞர்களை வன்முறையினை நோக்கித் தூண்டும் மனிதரே அமிர்தலிங்கம் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது. தமிழ் ஆயுத அமைப்புக்களுக்குப் பின்னால் நின்று ஊக்குவிக்கும் சக்தியாக அமிர்தலிங்கத்தைக் காட்ட சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன.

அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையீனத்தை இளைஞர்களிடையே அமிர்தலிங்கம் ஏற்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு ஆதாரமாக யோகேஸ்வரனின் பேச்சில் கூறப்பட்ட, "தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் ஒரு அந்நிய அரசாங்கமாகும். தமிழ் மக்களை ஆள்வதற்கான எந்தவித அதிகாரமும் இந்த அரசாங்கத்திற்குக் கிடையாது" எனும் பகுதி இதற்கு சாட்சியமாக அரசால் பாவிக்கப்பட்டது. "சிங்களவருக்கெதிரான வன்மத்தை தமிழர்களிடையே முன்னணி வளர்த்து வருகிறது" எனும் குற்றச்சாட்டும் அரசால் முன்வைக்கப்பட்டு வந்தது.

யாழ்ப்பாணத்தில் பெளத்த மதகுருவாக இருந்த வீரமுவே விமலபாரதி எனும் பிக்கு தன்னைத் தமிழ் இளைஞர்கள் தாக்கியதாகவும், "இனிமேல் நீ யாழ்ப்பாணத்தில் இருக்கத் தேவையில்லை" என்று கூறியதாகவும் பொய்வாக்குமூலம் கூறும்படி அரசால் கட்டாயப்படுத்தப்பட்டார். தனது பெளத்த நிலையத்தை தமிழர்கள் எரித்ததாகவும் அவர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கூறினார். இவ்வாறே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவந்த பல சிங்களவர்களும் தமது உடமைகள் எரிக்கப்பட்டு, தாம் அங்கிருந்து விரட்டப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னால் கூறவைக்கப்பட்டார்கள். சிங்கள பஸ் சாரதியான தர்மசேன கூறுகையில், தனது பஸ்வண்டி பாதையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, தான் சுடப்பட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த சிங்களப் பெண்மணியான கருணாவதி கூறுகையில் தனது குடும்பம் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றப்பட்டு அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறினார். இந்த வன்முறைகள் எல்லாம் முன்னணியினரின் தூண்டுதலினாலேயே தமிழ் இளைஞர்களால் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னால் கூறப்பட்டது.

அமிர்தலிங்கம் மீண்டு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார். ஆணைக்குழுவின் முன்னால் 1979, சித்திரை 30 அன்று சாட்சியமளித்த அமிர்தலிங்கம், ஜனநாயக வழிகள் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவே தனது கட்சி முயன்றுவருவதாகக் கூறினார். தனது கட்சி வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக பொலீஸார் கூறிய குற்றச்சாட்டினை அவர் முற்றாக மறுத்தார். ஆனால், அமிர்தலிங்கத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நீதிபதி சன்சொனி, அரசு மீதான தமிழர்களின் அவநம்பிக்கைக்கும், வன்முறைகளைத் தூண்டிவிட்டமைக்கும் அமிர்தலிங்கமே பொறுப்பு என்று தீர்ப்பளித்தார். மேலும், அமிர்தலிங்கம் தமிழ் ஆயுத அமைப்புக்களோடு ஒத்துழைத்துவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அமிர்தலிங்கத்தைக் கொல்லுமளவிற்கு, அவர்மீதும், அவரது கட்சிமீதும் அரசால் திட்டமிட்டு முன்வைக்கப்பட்ட வந்த விஷமத்தனமான பிரச்சாரங்கள் சிங்களவர்களைத் தூண்டியிருந்தது. ஜெயவர்த்தனவின் செல்லப்பிள்ளைகளான பிரேமச்சந்திரவும், ஜெயக்கொடியும் 1979 ஆம் ஆண்டு ஆடி 3 ஆம் திகதி பாராளுமன்ற குழுக்கள் கூட்டத்தில் ஆற்றிய உரைகளில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கெதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை முன்வைத்தனர். இதற்குப் பதிலளித்த ஜெயவர்த்தன, இதனைச் செய்வதற்கான சட்டவாக்கல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அந்த மாதத்திலேயே அச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தூதுக்குழுவில் இடம்பெற்ற புலிகளின் உறுப்பினர்கள்

தமிழ் ஆயுத அமைப்புகளோடு அமிர்தலிங்கத்திற்குத் தொடர்பிருக்கிறது என்கிற சன்சொனியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை. பாதுகாப்பு அமைச்சிற்கு பொலீஸார் வழங்கிய தகவல்களில் அமிர்தலிங்கத்தைச் சந்திக்க யாழ்ப்பாணத்திலிருந்த அவரது வீட்டிற்கு பிரபாகரன், உமா மகேஸ்வரன் மற்றும் தங்கத்துரை ஆகியோர் வந்து சென்றிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 1974 முதல் 1980 வரையான காலப்பகுதியில் வழக்கப்பட்ட இவ்வாறான தகவல்கள் ஜெயவர்த்தன நிலையத்தில் இன்றுவரை இருக்கிறது. ஜெயவர்த்தனவின் குடும்பத்துடன் நெருக்கமான ஒருவரின் உதவியோடு இந்தத் தகவல்களைப் படிக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்திருந்தது.

புரட்சிசெய்யத் துடிக்கும் இளைஞர்களுடன் எப்போதுமே தொடர்பைப் பேணவேண்டும் என்பது தந்தை செல்வாவினால் அமிர்தலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்ட பணியாகும். தமிழர்களின் அரசியலின் தந்தை என்று அறியப்பட்ட தந்தை செல்வா ஆயுத அமைப்புக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பியிருந்தார். ஆயுத அமைப்புக்களின் விமர்சனங்கள், விருப்பு வெறுப்புக்களை உள்வாங்கி தமது கொள்கைகளிலும், செயற்பாட்டு முறைகளிலும் மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று தந்தை செல்வா விரும்பியிருந்தார். இளைஞர்களை வழிநடத்த அமிர்தலிங்கம், ராஜதுரை மற்றும் நவரட்ணம் ஆகியோரை செல்வா அமர்த்தினார்.

ThirukoneeswaramTemple.jpg

திருக்கோணேஸ்வரம் ஆலயம்

புலிப்படை எனும் அமைப்பு 1961 ஆம் ஆண்டு, தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கும் முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஒரு அரச ஊழியர் உட்பட 20 பேர்வரையான இளைஞர்கள் புலிப்படையினை உருவாக்கியிருந்தார்கள். 1961 ஆம் ஆண்டு ஆவணி 12 ஆம் திகதி புலிப்படையின் உறுப்பினர்கள் சரித்திரைப் பழமை வாய்ந்த திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் கூடினர். காலை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அக்குழுவினர் மலைக்குச் சென்று, தனியான தமிழ் தாய்நாடொன்றிற்காகப் போராடுவது என்று சபதம் எடுத்துக்கொண்டனர். 1961 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வை சிறிமாவோ தனது இராணுவத்தைக் கொண்டு கலைத்தமையே இந்தக்குழுவினர் தனிநாடு நோக்கிப் பயணிக்கும் தேவையினை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் புலிப்படை மீன்பிடிக்காகவும், ஆயுதங்களைக் கொண்டுவருவதற்காகவும் ஒரு கப்பற் கம்பெனியொன்றை உருவாக்கியிருந்தது. சில துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததுடன், மாணவர் மன்றங்கள் சிலவற்றையும் ஏற்படுத்திவிட்டு செயலற்றுப்போனது. இந்தக் குழுவின் செயற்பாடுகளை அமிர்தலிங்கமும், நவரட்ணமும் அவதானித்து வந்தபோதும், அவர்களின் செயற்பாடுகளில் தலையிட்டிருக்கவில்லை.  பொலீஸாரும் இக்குழுவினரின் இருப்புக் குறித்து அதிக ஆர்வம் காட்டியிருக்கவில்லை.

தமிழ் இளைஞர்கள் தம்மை மீளவும் ஒழுங்குபடுத்திய நிகழ்வு 1970 இல் இடம்பெற்றது. தமிழ் மாணவர் பேரவை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு 1972 இல் தமிழ் இளைஞர் பேரவையாக மாற்றங்கண்டது. இந்த அமைப்பினை  அமிர்தலிங்கமும், நவரட்ணமும் நெருங்கி அவதானித்து வந்ததுடன், இந்த அமைப்பினரும் அமிர்தலிங்கத்தை தமது "தளபதி" என்று கருதி வந்தனர். இளைஞர்கள் தமது விமர்சனங்களைப் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என்றும், தமது உணர்வுகளுக்கு அது வடிகாலாக அமையும் என்று அமிர்தலிங்கம் அவர்களிடம் கூறிவந்தார். ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வந்தாலும், நிலமை கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. 

ஆனால், இந்த செயற்பாடுகளை அரசு இனவாதப் புரட்சி என்று கருதியதாலும், அதனை அடக்க பொலீஸாரையும், இராணுவத்தினரையும் முடுக்கி விட்டதாலும் நிலைமை மாறத் தொடங்கியது. தமிழ் இளைஞர் பேரவையினரைத் தேடி வேட்டையாடிய பொலீஸார் அவர்களில் 42 பேரைக் கைது செய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவருமே பிற்காலத்தில் ஆயுதப் போராளிகளாக மாற்றம்பெற்றனர். தங்கத்துரை, குட்டிமணி, பிரபாகரன், பாலக்குமார். பத்மநாபா, வரதராஜப் பெருமாள், சிறி சபாரட்ணம் ஆகியோர் அமிர்தலிங்கத்தை மதித்து வந்ததுடன், அவர் சொல்வதையும் கேட்டு வந்தனர்.

  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கியூபாவிற்குச் சென்ற புலிகள் 

போராளி அமைப்புக்களின் முக்கியஸ்த்தர்கள் அமிர்தலிங்கத்தின் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து வந்த நிகழ்வுகள் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின்னரும் நடந்தது. இந்தப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுள் பிரபாகரனே அனைவராலும் அதிகம் நேசிக்கப்பட்டார். மங்கயற்கரசி என்னிடம் ஒருமுறை பேசும்போது "பிரபாகரன் எங்களின் மகன்களில் ஒருவராக எங்களுக்குத் தெரிந்தார்" என்று கூறினார். " அவர் எமது வீட்டிற்கு வரும்போதெல்லாம் நான் அவர் விரும்பி உண்ணும் கோழிக்கறியைச் சமைப்பேன். அவர் எம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது எனது மகன்களை முத்தமிடுவது போல அவரையும் முத்தமிட்டே அனுப்பிவைப்பேன்" என்று அவர் கூறினார். அமிர்தலிங்கத்தின் பிரத்தியேக காரியாதிரிசியான ஆர். பேரின்பநாயகம் பேசும்போது, பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் அவரைச் சந்திக்கச் செல்லும்போது அவருக்குப் பிடித்தமான கோழி இறைச்சிப் பொறியலை மங்கையற்கரசி எடுத்துச் செல்வது வழமை என்று கூறினார். அமிர்தலிங்கத்தின் வெள்ளிவிழா கொழும்பில் 2003 ஆம் ஆண்டு ஆவணி 24 ஆம் திகதி நடைபெற்றபோது பேசிய மங்கையற்கரசி பிரபாகரன் மீது தான் வைத்திருந்த பாசம் குறித்துப் பேசத் தவறவில்லை. 

அமிர்தலிங்கமும் பிரபாகரனை மிகவும் அன்புடனேயே நடத்தி வந்தார். பதிலுக்கு பிரபாகரன் அமிர்தலிங்கத்தைப் பெரிதும் மதித்து நடந்துவந்தார். 1981 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவின் மாவட்ட சபை மந்திரிப்பொறுப்புக்கள் எனும் பொறிக்குள் அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் விழும்வரை இந்த உறவு மாறாமலேயே இருந்து வந்தது. அமிர்தலிங்கத்தைப் பலப்படுத்துவதன்மூலம் பிரபாகரனைப் பலவீனமாக்குவதற்குப் பதிலாக, ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்தைப் பலவீனப்படுத்தி பிரபாகரனைப் பலப்படுத்தியிருந்தார். இதுவே இலங்கையின் சரித்திரத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதுபற்றிய தகவல்கள் இனிவரும் அத்தியாயங்களில் பேசப்படும்.  

CarribbeanMap.gif

கியூபா

நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, கியூபாவிற்குச் சென்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தூதுக்குழுவில் புலிகளின் உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். 

1979 ஆம் ஆண்டு கியூபாவின் ஹவானாவில் உலக மாணவர் மற்றும் இளைஞர்களுக்கான விழா நடந்திருந்தது. இந்த விழாவிற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைக் கேள்விப்பட்ட உமா மகேஸ்வரன் அமிர்தலிங்கத்தை அணுகி இக்குழுவில் புலிகள் அமைப்பின் மூன்று உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார். 1977 ஆம் ஆண்டு புலிகளுக்கும் முன்னணிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒப்பந்தம் ஒன்றிற்கு அமைவாக முன்னணியின் அரசியல்த் தலைமையின் கீழ் இரகசிய ஆயுத அமைப்பாக புலிகள் இயங்குவார்கள் என்றும், அதற்குப் பதிலாக சர்வதேசத்து விடுதலை அமைப்புக்களிடமிருந்து பணம் முதலான உதவிகளைப் புலிகள் பெற்றுக்கொள்ள அமிர்தலிங்கம் உதவ ஒத்துக்கொண்டதாகவும் தெரியவருகிறது. ஆகவே, இவ்வாறான் இளைஞர் நிகழ்வொன்றிற்குச் செல்வதன் மூலம் ஏனைய கெரில்லா அமைப்புக்களின் பரிட்சயமும் தமக்கு ஏற்படும் என்று உமா அமிர்தலிங்கத்திடம் கூறியிருக்கிறார். இதுபற்றி பின்னர் நடந்த விசாரணைகளில் அரசை ஏமாற்றி புலிகளையும் தமது தூதுக்குழுவில் முன்னணியினர் அனுப்பியிருந்தனர் என்று பொலீஸார் குற்றஞ்சாட்டியுமிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

புலிகளின் இந்த வேண்டுகோளினை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்டார். மாவை சேனாதிராஜாவை தமது தூதுக்குழுவின் இளைஞர் அமைப்பின் தலைவராகவும் காசி ஆனந்தனை தமிழர் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளின் தலைவராகவும் அமிர்தலிங்கம் நியமித்தார். தூதுக்குழுவின் ஏனைய மூன்று இடங்களையும் சிங்கநாயகம், சாந்தன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நிரப்பினர். இது முன்னணிக்குள் சில கசப்புணர்வுகளை ஏற்படுத்தி விட்டிருந்தது. முன்னனியின் பிரதிநிதியாக இந்த நிகழ்விற்குச் செல்ல விரும்பிய வண்ணை ஆனந்தனுக்கு புலிகள் தமது குழுவில் இடம்பெற்றது மகிழ்வைக் கொடுக்கவில்லை. 

ஹவானாவில் இடம்பெற்ற விழா நிகழ்வின் போது காசி ஆனந்தன் தமிழில் கவிதை ஒன்றைப் படித்தார்,

பலமான சொண்டுகள் கொண்ட பறவைகள் நாங்கள்
நாம் பாடுவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம்
அழகான சிறகுகள் கொண்ட பறவைகள் நாங்கள்
ஆனால் பறப்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம்
கூண்டில் அடைக்கப்பட்ட அடிமைகள் நாங்கள் 

  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணா

AVvXsEh0Gt3M8fU9sFTpxW2J3RXt7XIVzEiDgPM6HBZSm77Epcx6SON0jtX6jKO8vWNBr6_DzfcE_2eO0Ix_KdiN_lNZDKZ-i725yO91bKggSZOVHKH9z5rvEh3eQo8OGxcCn2IIuz-vXbGLpkHtAoSAFXP1fiSVwMDKDtsVqSUMa37SUBhzeswd0vztwfz9=s640

இந்த இளைஞர் விழா நிகழ்வினைத் தமக்குச் சாதகமாகப் பாவித்த புலிகள் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய துண்டுப்பிரசுரங்களை அங்கு வந்திருந்த வேறு நாட்டு இளைஞர்களிடம் விநியோகித்தனர். இந்தத் துண்டுப் பிரசுரம் அன்டன் ஸ்டனிஸ்லோஸ் பாலசிங்கம் எனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனால் வெளிநாடொன்றில் வாழ்ந்துவந்த இளைஞர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் வீரகேசரி பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும் பின்னர் கொழும்பில் இயங்கிவந்த பிரித்தானியாவின் உயர்ஸ்த்தானிகராலயத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டு வந்தவர் அன்டன் பாலசிங்கம். பின்னர் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் காலத்தில் அவரது துணைவியார் கடுமையான சிறுநீரகக் கோளாறினால் மரணமானார். அதன்பிறகு, அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்த தாதியான அடேலை பாலசிங்கம் மணமுடித்தார். இவர்கள் இருவரும் லண்டன் பலகலைக் கழகத்தில் சமூகவியல் கற்கை நெறிக்கான காலத்தில் சந்தித்திருந்தனர். 

வட்டுக்கோட்டைத் தீர்மானம், தனிநாடொன்றினை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை, 1977 ஆம் ஆண்டுத் தேர்தல், அதன்பின்னரான தமிழர் மீதான வன்முறைகள், புலிகளின் வெளிப்படுத்தல், அவ்ரோ விமானம் மீதான தாக்குதல் ஆகிய விடயங்கள் லண்டனில் வாழ்ந்துவந்த பல தமிழ் இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்க , அவர்கள் 33 வயது நிரம்பிய, தமது பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவரான பாலாவைச் சூழ்ந்துகொண்டு ஊர் நிலவரங்கள் பற்றிப் பேசத் தொடங்கினர். அந்த இளைஞர்களில் ஒருவரான ஞானசேகரன் தமிழர்களின் பிரச்சினை குறித்து கட்டுரை ஒன்றை வரையும்படி பாலாவைக் கேட்டார். அவர் கேட்டுக்கொண்டதன்படியே பாலா செய்தார். பாலா எழுதிய துண்டுப்பிரசுரம் இப்படிக் கூறியது, "தமிழ்த் தேசியப்பிரச்சினை தொடர்பாக". பாலசிங்கத்தின் இந்த முயற்சி அவரை லண்டனில் வாழ்ந்துவந்த புலிகளியக்க தொடர்பாளர்கள் மற்றும் ஈரோஸ், டி.எல்.ஒ ஆகிய ஏனைய அமைப்பின் செயற்பாட்டாளர்களுடனும் நெருக்கத்தை ஏற்படுத்த உதவியது. 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயவர்த்தனவிடம் அடைக்கலமாகிப்போன அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும்

தமிழருக்கான சுயநிர்ணய உரிமையினை மார்க்ஸிச - லெனினிஸக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கவேண்டும் அல்லது வேண்டாம் என்கிற பாரிய சர்ச்சையொன்று தமிழ் மற்றும் சிங்கள இடதுசாரி அறிவுஜீவிகள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. சிங்கள இடதுசாரிகளைப் பொறுத்தவரை தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்குத் தகுதியுடையவர்கள் ஆனபோதும் கூட நாட்டைப் பிரித்து தனியான நாடொன்றினை உருவாக்கும் நிலைப்பாட்டை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாலசிங்கம் தனது இரண்டாவது பிரசுரத்தில் இவ்வாறு எழுதினார், "சோசலிசத் தமிழீழம் நோக்கி". அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் என்கிற வகையில் தமிழர்கள் பிரிந்துசெல்வதற்கு உரித்துடையவர்கள் என்று அவர் எழுதினார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகத்தின் பிரதியொன்று பிரபாகரனுக்கும் கிடைத்தது. பாலசிங்கம் எழுதிய இப்புத்தகத்தை பிரபாகரன் படித்தபோது அதன்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டதாக "சுதந்திர வேட்கை" எனும் புத்தகத்தில் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். 

பாலசிங்கத்தின் தாத்துவார்த்த ரீதியிலான ஆய்வுகள் லண்டனில் இயங்கிவந்த புலிகளின் செயற்பாட்டாளர்களான கிரிஷ்ணன், ஆர் ராமச்சந்திரன் (அன்டன் ராஜா) ஆகியோருடன் அன்டன் பாலசிங்கம் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. பாலசிங்கத்தை அடிக்கடி சந்தித்துக்கொண்ட இவர்கள், புலிகளின் செயற்பாடுகள் குறித்து அவருக்குத் தொடர்ச்சியாக அறிவூட்டியும் வந்தார்கள். அத்துடன் தமது அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு பாலசிங்கத்தின் உதவியினையும் நாடத் தொடங்கினார்கள். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறை, உலக இளைஞர் மாநாட்டில் தமிழரின் போராட்டம் தொடர்பான அறிக்கையொன்றினை வெளியிடத் தீர்மானித்தது. இதற்கு பாலசிங்கத்தின் உதவியை உமா மகேஸ்வரன் நாடினார். பாலசிங்கம் எழுதிய அந்த அறிக்கை ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜேர்மனிய, போத்தூகேய மற்றும் தமிழ் மொழி ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகியது. இந்த அறிக்கை, மாநாட்டிற்கு வந்திருந்த அனைத்துலகப் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. 

 

போரும் சமாதானமும் விளையாட்டு

புலிகளை சர்வதேச அளவில் பிரபல்யப்படுத்தும் உமா மகேஸ்வரனின் திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்படுவதில் சிக்கல்கள் தோன்றியது.  1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் இலங்கையில் தோன்றியிருந்த கருத்து வேறுபாடே இதற்குக் காரணமாக அமைந்தைருந்தது.

 BullWeeratunga.jpg

காளைமாடு - வீரதுங்க

 எதிர்க்கட்சியினருடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சேர்ந்தால் தமிழருக்கெதிரான  இன்னொரு வன்முறைக் கலவரத்தை உருவாக்குவேன் என்று அச்சுருத்தி, அந்த முயற்சியைத் தவிடு பொடியாக்கியிருந்த ஜெயவர்த்தன, தனது போர் விளையாட்டுக்களை முன்னெடுப்பதில் உறுதியுடன் செயற்படத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு ஆடியில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அவர் நடைமுறைப்படுத்தினார். இந்தச் சட்டம் பாராளுமன்றத்தால் ஆடி 20 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வடமாகாணத்திலிருந்து தீவிரவாதத்தை முற்றாக அழித்துவிடவேண்டும் என்கிற கட்டளையுடன் தனது மருமகனான, "காளை மாடு" என்றழைக்கப்பட்ட திஸ்ஸ வீரதுங்கவை வடமாகாணத்திற்கான இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக அவர் ஆடி 14 இல் நியமித்தார்.

ஜெயவர்த்தன, காளைமாட்டு வீரதுங்கவிற்கு இட்ட ஆணை இவ்வாறு கூறியிருந்தது

 "தீவிரவாதத்தையும், அதன் அனைத்து விதமான வடிவங்களையும் இந்த நாட்டிலிருந்து, குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து, நாட்டின் அனைத்துச் சட்டங்களின் பிரகாரம்   முற்றாக அழித்தொழிப்பதற்கு நீர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறீர். இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் அனைத்து மக்களையும் உமது இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உம்மால் மேற்கொள்ளப்படும் இந்த பயங்கரவாத அழிப்பு நடவடிக்கை 1979 ஆம் ஆண்டு மார்கழி 31 ஆம் திகதிக்குள் முற்றுப்பெறவேண்டும்".

வீரதுங்கவின் இராணுவ நடவடிக்கைக்கு ஏதுவாக ஆடி 12 ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் சரத்து 14 இனைப் பாவித்து அவசரகால நிலைமையினை ஜெயவர்த்தன பிரகடணப்படுத்தினார். இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகத்திற்கிடமான எவரையும் உடனேயே சுட்டுக் கொல்லும் அதிகாரமும், அவர்களது உடல்களை விசாரணையின்றி எரித்துவிடும் அதிகாரமும் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டது. 

பொலீஸாரினதும், இராணுவத்தினதும் மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்குவதாகக் கணிக்கப்பட்ட சுமார் 200 போராளிகளுக்கெதிராகவே ஜெயவர்த்தனவின் இந்த இராணுவ நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. தமிழ் பொலீஸ் பரிசோதகர் குருசாமியின் இழப்பிற்குப் பின் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த பொலீஸ் உளவுப்பிரிவு சரிவைச் சந்தித்திருந்தது. அதேவேளை, பலாலி இராணுவ முகாமில் கப்டன் முனசிங்க தலைமையில் உருவாக்கப்பட்டு வந்த  இராணுவப் புலநாய்வுப் பிரிவு செயற்படும் நிலைக்கு வந்திருந்ததுடன், அப்பிரிவு யாழ்ப்பாண இராணுவத் தளபதி பிரிகேடியர் ரணதுங்கவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கத் தொடங்கியது. 

இராணுவம் முறுக்கேற்றப்பட்ட நிலையிலும்,  அந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான சட்டப் பாதுகாப்புக்கள் பலமாக இடப்பட்ட நிலையிலும், ராணுவ தீர்வில் வெகு இறுமாப்புடன் இருந்த ஜெயவர்த்தன, தனது கவனத்தை அரசியல்க் களம் நோக்கித் திருப்பத் தொடங்கினார். தன்னால் அடிபணியவைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தையும், அவரது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தொடர்ந்தும் தமிழருக்கெதிரான கலவரம் பற்றி அச்சத்தில் வைத்திருக்க தனது பிரதமரான ரணசிங்க பிரேமதாசாவை ஜெயவர்த்தன பாவித்தார். இந்தச் செய்தியை பதியும்படி நான் பணிக்கப்பட்டிருந்தேன். நான் அமிர்தலிங்கத்துடனும் சிவசிதம்பரத்துடனும் பல சந்திப்புக்களில் கலந்துகொண்டேன். அவர்கள் மிகுந்த பதற்றத்துடனும், அதேவேளை கவலையுடனும் காணப்பட்டார்கள். "தமிழர்களால் இனியொரு இனக்கலவரத்தைச் சந்திக்க முடியாது" என்று அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பக் கூறினார்கள்.

 இனங்களுக்கிடையிலான பதற்றநிலையினைத் தவிர்ப்பதற்கு இருபகுதியினரும் இணைந்து சில நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று பிரேமதாச முன்னணியினரிடம் ஆலோசனை கூறினார். அதற்கு உடனடியாகவே அமிர்தலிங்கம் ஒப்புக்கொண்டார். பாராளுமன்றத்தின் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் பின்னர் பிரேமதாசவுடன் இணைந்து அறிக்கையொன்றினை முன்னணியினர் தயாரித்தனர். நாட்டு மக்களிடம் முன்வைக்கப்பட்ட அந்த வேண்டுகோள் இப்படிக் கேட்டிருந்தது, 

"நாம் இந்த நாட்டு மக்களிடம் வேண்டுவது யாதெனில், தீய சக்திகளின் வதந்திகளாலும், நடவடிக்கைகளாலும் ஆட்கொள்ளப்பட்டு விடாது, அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான். பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அனைத்து அரசியல், மதத் தலைவர்கள், சமூக சேவைகள் அமைப்புக்கள் ஆகியோரிடமும் நாம் மக்களிடையே அமைதியையும் சமாதானத்தையும், சட்டம் ஒழுங்கினையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த தம்மாலான சகலதையும் செய்யவேண்டும் என்றும், தமது தேர்தல்த் தொகுதிகள், கிராமங்கள் மட்டத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுத்து மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவதைத் தடுக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" 

"தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கி மக்கள் மீது இனரீதியான வன்முறைகளை ஏவிவிடக் காத்திருப்போரிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் நாம் எம்மாலான சகலதையும் செய்வோம் என்று உறுதியெடுக்கிறோம்".

"எமது நாட்டை உலுக்கிவரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் சமாதான ரீதியில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று திடமாக நம்பும் அதேவேளை, அரசியல் லாபத்திற்காக சில விஷமிகள் விரித்துவரும் வலையில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்"

"நாகரீகமடைந்த மக்கள் கூட்டம் என்கிற வகையில், எமக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளை சமாதான வழிகளில் எம்மால் தீர்த்துக்கொள்ள எமது மதங்களோடு இணைந்த பாரம்பரியங்கள் எமக்கு எப்போதும் துணைநிற்கும் என்பதை நாம் சர்வதேசத்திற்குப் பாடமாக எடுத்துக் கூறுவோம்".

 இந்த ஒருங்கிணைந்த வேண்டுகோளிற்கே ஒரு அரசியல்க் காரணம் இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜெயவர்த்தன முயன்று வந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த ஆடி 19 ஆம் திகதி, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உருவாக்கம் பற்றிக் கலந்துரையாடுவதற்கு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சிக்கும் அழைப்பு விடுத்தார் ஜெயவர்த்தன. இந்த அழைப்பினை உடனடியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள, எதிர்க்கட்சியோ அழைப்பை நிராகரித்திருந்தது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனது அழைப்பிற்குச் சாதகமாகப் பதிலளித்ததையடுத்து, அதற்குப் பிரதிபலனாக ஜெயார் சில விடயங்களைச் செய்யப்போவதாக அறிவித்தார். வவுனியாவில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக வாழும் மூன்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அநுராதபுரம் மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் தனது முடிவினை நடைமுறைப்படுத்தப்போவதில்லை எனும் அறிவிப்பு மற்றும் லலித் அத்துலத் முதலி தலைமையில் உருவாக்கப்படும் பாராளுமன்றத் தெரிவிக்குழுவினூடாக யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை செய்யப்போவதாக ஜெயவர்த்தன முன்னணியினரிடம் தெரிவித்தார். 

ஜெயவர்த்தனவை எப்படியாவது மகிழ்வித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தாம் அதுவரை பகிஷ்கரித்து வந்த பாராளுமன்ற அமர்வுகளில் இனிக் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்தது. தனது போர் விளையாட்டு வெற்றிபெற்று வருவது கண்டு பூரிப்படைந்த ஜெயவர்த்தன, தமிழர்களுக்கு நீதிவழங்கத் தான் தயாராக இருப்பதாகவும், பேராசிரியர் .ஜே.வில்சனுடனான தனது கலந்துரையாடல்களின் அடிப்படியில் மாவட்ட அதிகார சபைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமிக்கப்போவதாகவும் அறிவித்தார். இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் .ஜே. விஜேகோனும், ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி. .ஜே. வில்சன், கலாநிதி. ஜே..எல். குரே, கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் .சி.எம்.அமீர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.  

இது ஜெயவர்த்தனவின் மிகச்சிறந்த தந்திர நகர்வாகக் கருதப்பட்டது. இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக அவர் வரிந்துகொண்டார். இதன்மூதல் தமிழ்ப் போராளிகளுக்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே நிரந்தரப் பிரிவை அவர் உருவாக்கினார். இதன்மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முற்றான தோல்வியையும் அவர் உறுதிப்படுத்தினார்.

 

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் 

z_p17-Search-1.jpg?itok=g-z9QZKW

லலித் அதுலத் முதலியின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இத்தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் எனும் சொற்பதத்திற்கான விளக்கம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்துச் சட்டத்தின் படி பயங்கரவாதம் எனும் சொல்லிற்கு பின்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது, "அரசியல் ரீதியிலான முடிவுகளை நோக்கி நடத்தப்படும் வன்முறைகள்". இலங்கை உருவாக்கிய 1979 இல் உருவாக்கிய சட்டம் முன்னர் உருவாக்கப்பட்ட சட்டத்திற்கான திருத்தங்கள் என்று மட்டுமே கூறியிருந்தது. இச்சட்டத்தின்படி குற்றங்களும் தண்டனைகளும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டிருந்தன,

தமிழ் மக்கள் மேல் குரூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்த இந்தச் சட்டத்தின் சில பகுதிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்,

1. ஒரு குறித்த நபருக்கு மரணத்தை விளவிக்கும் அல்லது ஒரு குறித்த நபரைக் கடத்தும் அல்லது ஒரு குறித்த நபர் மீது தாக்குதலை நடத்தும் எந்த ஒரு நபரும் குற்றத்தடுப்புச் சட்டத்தின்படி மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 

2. ஒரு குற்றத்திற்கான சாட்சியாக இருக்கும் ஒரு நபரை கொல்லும் அல்லது கடத்திச் செல்லும் அல்லது அந்தச் சாட்சி மீது தாக்குதல் நடத்தும் எவரும் குற்றத்தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 

3. ஒரு குறித்த நபருக்கு அச்சுருத்தல் விடுப்பது அல்லது சாட்சியொன்றிற்கு அச்சுருத்தல் விடுப்பது, அரச சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, திணைக்களங்கள், பொதுமக்கள் கூட்டுத்தாபனங்கள், வங்கிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது,  அல்லது இந்த அரச சொத்துக்களைக் கையாடுவது, சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆயுதங்களை, தோட்டாக்களை, வெடிமருந்துகளை, அவற்றின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வது அல்லது தயாரிப்பது மற்றும் இவற்றினைப் பாவிப்பது அல்லது பாவிப்பதற்கு உத்தேசித்திருப்பது , பாதுகாப்புப் பகுதியொன்றில் ஆயுதங்களை, வெடிபொருட்களை, உதிரிப்பாகங்களை வைத்திருப்பது, அவற்றைப் பாவிப்பது அல்லது பாவிக்க உத்தேசித்திருப்பது,   

4. இனங்கள், மதங்கள், சமூகங்களுக்கெதிரான வார்த்தைகளை, சொற்களை, பிரசுரங்களை இனங்களுக்கிடையே பகைமையினை வளர்க்கும்படி பாவிப்பது, அல்லது பாவிக்க உத்தேசித்திருப்பது

5. சட்டத்திற்குப் புறம்பான வகையில் பெருந்தெருக்கள், வீதிகள், பொதுமக்கள் பாவிக்கும் சொத்துக்களில் இருக்கும் அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட ஏனைய அறிவித்தல்களை அழிப்பது, மாற்றம் செய்வது, சேதப்படுத்துவது,

6. குற்றச்சாட்டிற்குள்ளான ஒரு நபரை மறைத்துவைப்பது அல்லது அவர கைதுசெய்யப்படுவதைத் தடுப்பது அல்லது கைது நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிப்பது,

ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடும் எந்த ஒருவரும் இச்சட்டத்தின்படி தண்டணைக்குள்ளாவார். 

7. இவ்வாறு குற்றவாளிகளால் இலக்குவைக்கப்படும் குடிமக்கள் நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ, அமைச்சர்களாகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, உள்ளூர் அதிகாரிகளாகவோ, இராணுவம் மற்றும் பொலீஸ் உறுப்பினர்களாகவோ, சட்டத்துறையில் செயலாற்றுபவர்களாகவோ இருப்பர். 

இதற்குத் தண்டனையாக மரண தண்டனையினை அல்லது 7 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையினைப் பெற்றுக்கொள்வார். 

8. சட்டத்தின் பகுதி 2 மற்றும் பகுதி 3 இன் அடிப்படையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். இந்த குற்றவாளியால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் முறையற்றவை என்று பிரகடணப்படுத்தப்படும். 

9. ஒரு நபர் குற்றமொன்றைச் செய்யவிருக்கிறார். அல்லது குற்றத்தைச் செய்துவிட்டார் என்று தெரிந்தும் அதனை மறைத்தல், அவரது நகர்வுகளை அதிகாரிகளுக்கு வழங்க மறுத்தல், குற்றவாளியினது மறைவிடங்கள் பற்றிய தகவல்களை வழங்க மறுத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஏழு வருடங்களுக்கு உட்பட்ட வகையில் சிறைத்தண்டனை வழங்கப்படும். 

10. மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடும் தனிநபரோ, அமைப்போ, நிறுவனமோ இதேவகையான தண்டனைக்கு உள்ளாகும். 

தமிழ் மக்களை இலக்குவைத்தே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, இச்சட்டத்தினை எதிர்க்க முன்வராமல் மெளனம் காக்கத் திட்டமிட்டது. முன்னணியினருக்கு தனது மகிழ்வான முகத்தை அப்போது காட்டிக்கொண்டிருந்த ஜெயவர்த்தனவைக் கோபப்பபடுத்திப் பார்க்க முன்னணியின் எந்த உறுப்பினரும் தயாராக இருக்கவில்லை. 
இச்சட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பதை விடுத்து, விவாதத்தில் கலந்துகொள்ளாது விடுவதன் மூலம் ஜெயாரை சாந்தப்படுத்திய முன்னணியினர், தமிழ் இளைஞர்களைச் சாந்தப்படுத்த இச்சட்டத்தினை விமர்சித்து அறிக்கையொன்றினை மட்டும் வெளியிட்டனர். மேலும், தமது கட்சியின் மத்திய குழுவில்க் கூட இச்சட்டம் பற்றிய விவாதங்களை நடத்த  தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை மறுத்துவிட்டது. ஆனால், பாராளுமன்றத்தில் இச்சட்டத்தினை எதிர்க்கட்சியாகவிருந்த சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களித்தது. வெறும் 8 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த அக்கட்சியினால் இச்சட்டத்தினைத் தடுத்து நிறுத்தவியலாமல்ப் போய்விட்டது. 

இந்தக் கொடூரமான சட்டம் நாட்டிலிருந்த மனிதவுரிமைகள் செயற்ப்பாட்டாளர்களினதும், பல நீதிபதிகளினதும் கண்டனத்திற்குள்ளானது.

கண்டனத்துக்குள்ளாக்கப்பட்ட இச்சட்டத்தின் சில பகுதிகளாவன,

1. பொலீஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சியமாகப் பாவிக்கப்படக்கூடியன.
2. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வைத்திருந்த எந்தப் பொருளும், ஆவணமும் அவருக்கெதிராக சாட்சியமாகப் பாவிக்கப்படும்.
3. ஒருவர் குற்றவாளியாக இருக்கலாம் என்று அமைச்சர் சந்தேகப்படுமிடத்து, அந்த நபர் குறைந்தது 18 மாதங்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட முடியும். 
 

  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரவதைக் கூடமாக மாறிய யாழ்ப்பாணக் குடாநாடு

செயலில் இறங்கிய அரச பயங்கரவாதம்

1979 ஆம் ஆண்டு ஆடி 13 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் முதன் முதலாக அரச பயங்கரவாதத்தின் முழு வீச்சினையும் கண்டுகொண்டது. நள்ளிரவு வேளை இலக்கத்தகடற்ற இரு வாகனங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிளம்பின. இவ்வாகானங்களில் அவசரப்பட்டு ஏறிக்கொண்ட பொலீஸ் குழுவொன்று தனது கொலை வேட்டைக்காக பயணித்துக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண நகருக்கு வெளியே இருந்த நவாலி எனும் சிற்றூரை நோக்கி பிரிட்டிஷ் தயாரிப்பான - 40 கார்வண்டியொன்று மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. மற்றைய ஜீப் வண்டி யாழ்நகரின் எல்லையில் அமைந்திருந்த, நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட முடமாவடி நோக்கி விரைந்துகொண்டிருந்தது.

இன்பம் மற்றும் செல்வம் ஆகிய பெயர்களைக் கொண்ட இரு இளைஞர்களின் வீட்டின் முன்னால் அந்த - 40 கார் நின்றது. அந்தக் காரிலிருந்து திடு திடுப்பென்று மூன்று பொலீஸ்காரர்கள் காக்கிக் காற்சட்டையும், வெண்ணிற டீ சேர்ர்ட்டுக்களும் அணிந்தபடி இறங்கினர். அந்த இளைஞர்கள் இருவரும் துரையப்பாவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தவர்கள். ஆனால், அவர்களை மேலும் விசாரிக்கவேண்டும் என்று கூறி மூன்று பொலீஸ் குண்டர்களும் அவர்களை தமது காரில் இழுத்து ஏற்றினார்கள். பின்னர் அதே பகுதியில் வாழ்ந்துவந்த பாலேந்திரா எனும் இளைஞரையும் அவர்கள் இழுத்து ஏற்றிக்கொண்டார்கள்.

Jaffnamap3.jpg

யாழ்ப்பாணக் குடாநாடு

ஜீப் வண்டியில் சென்ற பொலீஸார் முதலில் ஆயுர்வேதக் கல்லூரியில் பயின்றுவந்த இந்திரராஜா எனும் இளைஞரை அவரது வீடு அமைந்திருந்த நல்லூர், பருத்தித்துறை வீதி, இரண்டாம் ஒழுங்கைப் பகுதியில் வைத்து கைதுசெய்து வண்டியில் ஏற்றிக்கொண்டனர். அங்கிருந்து கிளம்பிய அந்தப் பொலீஸ் குழு பின்னர் முடமாவடியில் வாழ்ந்துவந்த தபாலதிபரான செல்வதுரையின் வீட்டிற்குச் சென்றது. பொலீஸாரிடம் பேசிய செல்வதுரை தனது இரு மகன்களான ராஜேஸ்வரனும், பரமேஸ்வரனும் சாவகச்சேரிப் பகுதியில் அவர்களது மனைவிமார்களின் வீட்டில் வசித்து வருவதாகக் கூறினார். அந்த சகோதரர்கள் இருவரும் சோதிடரான சந்திரசேகரத்தின் இரு மகள்களை மணமுடித்திருந்தனர். 

மறுநாள் காலை பண்ணைப் பாலத்தினருகில் உருக்குலைந்த நிலையில் 27 வயது நிரம்பிய இன்பம் எனப்படு விஸ்வஜோதி இரத்திணம் மற்றும் 29 வயது நிரம்பிய செல்வம் எனப்படும் செல்வரட்ணம் ஆகியோரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அவர்களின் உடல்களில் கடுமையான சித்திரைவதைக் காயங்களும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் காணப்பட்டன. அவர்களின் மண்டையோடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. இந்திரராஜா மூன்று நாட்களுக்குப் பின்னர் யாழ் வைத்தியசாலையில் பொலீஸார் கையளிக்கப்பட்ட பின்னர் இறந்துபோனார். அவரது உடலில் இருந்த காயங்கள் அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதைப் பறைசாற்றியது.

அவசரகாலச் சட்டத்தின்படி பொலீஸாராலும், இராணுவத்தாலும் கொல்லப்படும் நபர்களின் மரணம் தொடர்பாக எவரும் விசாரிக்கமுடியாது என்கிற கட்டுப்பாடு இருந்தபோதிலும், யாழ் வைத்தியசாலை அதிகாரிகள், பொலீஸாரால் கடுமையான சித்திரவதைகளின் பின் சுட்டும் அடித்தும் கொல்லப்பட்ட இன்பம், செல்வம் மற்றும் இந்திரராஜா ஆகியோரின் மரண விசாரணைகளைச் செய்திருந்தனர். யாழ்ப்பாண நீதவான் இந்திரராசாவின் மரணம் தொடர்பாக 1980 ஆம் ஆண்டு தை 8 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில், "உடலில் ஏற்பட்ட பல காயங்களின் விளைவாகவும் அதிர்ச்சியின் காரணமாகவும் இந்திரராசவுக்கு கடுமையான இரத்தப் போக்கும் , இருதயச் செயலிழப்பும், சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டிருப்பதால் மரணமடைந்திருக்கிறார். பொலீஸாரின் கடுமையான தாக்குதல்களாலேயே இவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்று தீர்ப்பளிக்கிறேன்" என்று கூறியிருந்தார். ஏனைய இரு இளைஞர்களான இன்பம், செல்வம் ஆகியோரின் மரண விசாரணை அறிக்கைகளும் இதனையே கூறின.

அன்று நள்ளிரவு பொலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ஏனைய மூன்று இளைஞர்களான ஆர்.பாலேந்திரா, எஸ்.ராஜேஸ்வரன், எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் தடயங்களின்றி காணாமலாக்கப்பட்டனர். வடமாகாணத்திலிருந்து காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் பட்டியலில் பாலேந்திராவின் பெயர் இன்னமும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இக்கொலைகள் நடைபெற்று சரியாக இரு நாட்களின் பின்னர் வீரதுங்க யாழ்ப்பாணம் சென்று வடமாகாண இராணுவத் தளபதியாக பொறுப்பெடுத்துக்கொண்டார். தனது நியமனம் கிடைத்த நாளே தனது பிறந்தநாள் என்பதால், அந்நாளில் பதவியேற்பதைத் தவிர்த்துவிட்டார். தனது நியமனத்தையும், பிறந்தநாளையும் வெகு விமர்சையாக அவர் கொண்டாடினார். வீரதுங்க யாழ்ப்பாணத்திற்குச் சென்று பொறுப்பெடுத்தவுடன், தமிழ் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள் பலமடங்கு அதிகரித்தன. போராளிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். போராளிகள் என்று காட்டிக்கொடுக்கப்பட்ட பல இளைஞர்கள் கொல்லப்பட்டு யாழ்ப்பாணமெங்கும் பொதுமக்களின் கண்களில் படும்படி  வீசியெறியப்பட்டனர்.  யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினரின் விசாரணை என்பது "சித்திரவதைகளின் பின்னர்  கொன்றுவிடுவதே" என்று ஆகிப்போனது. பலநூற்றுக்கணக்கான இளைஞர்கள் இக்காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவின் பிற்பகுதியில் இராணுவக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றினை அப்பகுதி மக்கள் சித்திரவதைக் கூடாரங்கள் என்றே அழைத்துவந்தனர். பத்திரிக்கையாளர்களிடமும், மனிதவுரிமை அமைப்புக்களிடமும் பேசிய சுண்டுக்குளிப் பகுதி மக்கள் இரவுவேளைகளில் இந்த கூடாரங்கள் இருக்கும் பகுதியில் இருந்து அழுகுரல்களும், ஓலங்களும் தொடர்ச்சியாகக் கேட்டு வந்ததாகவும், தமிழ் இளைஞர்கள் வலியினால் துடி துடித்துக் கதறுவதை தாம் பலமுறை கேட்டதாகவும் கூறியிருந்தனர். இந்த அவலங்களால் தாம் மிகுந்த அச்சமுற்று இரவுகளைக் கழித்து வருவதாகவும் கூறினர்.

யாழ்ப்பாணத்து மக்கள் ஒவ்வொரு காலைகளிலும் உருக்குலைக்கப்பட்ட  நிலையில் கொன்று எறியப்பட்ட தமது இளைஞர்களின் உடல்களைக் கண்டனர். யாழ்ப்பாண மக்களை அச்சுருத்தி பணியவைக்கவே இந்தக் கொலைகளை இராணுவத்தினர் செய்துவந்தனர். உருக்குலைக்கப்பட்டு கிடந்த தமிழ் இளைஞர்களின் உடல்களை வெளிப்படையாக பொதுமக்களின் பார்வைக்கு வைத்ததன் மூலம் இராணுவம் தமிழ் மக்களுக்கு கூறிய செய்தி, "போராளி அமைக்களில் இணைந்தாலோ அல்லது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தாலோ உங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்பதுதான்.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வீசி எறியப்பட்ட உடல்கள் அனைத்துமே இறந்திருக்கவில்லை. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டைக்கு முன்னால் இருந்து யாழ் சிறைச்சாலை காவலர்களால் கண்டெடுக்கப்பட்டு யாழ்வைத்தியசாலையில் கையளிக்கப்பட்ட ஜெயெந்திரனின் உடலில் இன்னமும் உயிர் இருந்தது. அவர் இன்னமும் கஷ்ட்டப்பட்டு சுவாசித்துக்கொண்டிருந்தார். அவரைப் பரிசோதித்த வைத்தியர் ஜெயெந்திரன் இறக்கவில்லை என்பதனை உறுதிப்படுத்தினார். உடுவில் பகுதியிலிருந்து இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்ட ஜெயெந்திரன், மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் அதுலத் முதலியின் விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியமளிக்கும் வரை உயிரோடு இருந்தார். அதுலத் முதலியின் விசாரணைக் குழு ஆடி 13 ஆம் திகதி காணமலாக்கப்பட்ட 6 இளைஞர்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. 

பொலீஸாரின் கொடூரங்கள் பற்றி அதுலத் முதலியின் குழுவின் முன்னால் சாட்சியமளித்த இன்னொருவர் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த நகைத் தொழிலாளரான மதியாபரணம் என்பவர். நடுத்தர வயது கொண்டிருந்த மதியாபரணம் அவர்கள் துப்பாக்கிகளைத் திருத்துவதற்கான சட்டரீதியான அனுமதிப் பத்திரத்தைக் கொண்டிருந்தவர். ஆனைக்கோட்டைப் பொலீஸ் நிலையத்தின் துப்பாக்கிகளை அவர் பழுதுபார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்த பொலீஸ் அதிகாரிகளை அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஒருநாள் இரவு, அவரது நண்பரான சந்திரன் என்பவர் தனது நண்பர் ஒருவரின் பொலீஸாருடனான பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதற்கு உதவிநாடி  மதியாபரணத்தைச் சந்திக்க வந்திருந்தார். மூவரும் பொலீஸ்நிலையம் நோக்கிச் சென்றபின்,  சந்திரன் தனது சைக்கிளில் வெளியே காத்துநிற்க மதியாபரணமும், சந்திரனின் நண்பரும்  உள்ளே சென்றனர். மதியாபரணமும் சந்திரனின் நண்பரும் தமது வேலை முடிந்து பொலீஸ்நிலையத்திற்கு வெளியே வந்தபோது அங்கே சந்திரனைக் காணவில்லை. அவரது உடல் மறுநாள் செம்மணி சுடலையின் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. மதியாபரணம் இதனை மனிதவுரிமை செயற்பாட்டாளர்களிடமும் அதிகாரிகளிடமும் கூறினார். அவரைப் பழிவாங்க நினைத்த பொலீஸார், அவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்து, அவர் தொடர்ந்தும் தமது அக்கிரமங்கள் பற்றிப் பேசுவதைத் தடுத்தனர்.

பொலீஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஒருநாள் இரவு தமது ஜீப் வண்டி பழுதடைந்துவிட்டதனால், மதியாபரணத்தை தமது ஜீப் வண்டியத் தள்ளுமாறு பொலீஸார் கேட்டனர். அப்போது ஜீப்பின் பின்பகுதியில் நான்கு உடல்களை அவர் கண்டார். அவற்றுள் ஒன்று ராஜேஸ்வரனுடையது. ஆனால், அவர் இன்னமும் இறந்திருக்கவில்லை. அவரை தனது மடியில் தூக்கிவைத்து காப்பற்ற மதியாபரணம் முனைந்தவேளையில், அவரது மடியிலேயே ராஜேஸ்வரனின் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவத்தை மதியாபரணம் அதுலத் முதலியின் ஆணைக்குழுவின் முன்னால் கூறினார்.

அவர் தொடர்ந்தும் சாட்சியமளிகையில், காணமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்களை பொலீஸார் யாழ்ப்பாணம் கேரதீவுச் சாலையின் பகுதியொன்றில் புதைத்ததாகக் கூறினார். "பொலீஸார், தமிழ் இளைஞர்களின் உடல்களை வீதியின் அருகில் புதைத்துக்கொண்டிருக்கையில், நேரதாமதத்தினால் யாழ்ப்பாணம் - கேரதீவு பேரூந்து அவ்வழியால் வந்துகொண்டிருந்தது. பேரூந்திலிருந்த மக்கள் அனைவரும் வெளியே தலைகளை நீட்டி பொலீஸார் இளைஞர்களைப் புதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். இதனால் கொதிப்படைந்த பொலீஸார் என்னை அங்கேயே விட்டு விட்டு அவசரத்துடன் கிளம்பிச் சென்றார்கள்" என்று அதுலத் முதலியின் குழுவின் முன்னால் கூறினார்.

ஆனால் மதியாபரணத்தின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் என்று ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஆகவே, இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதே பொலீஸாரிடம் ஆணைக்குழு கேட்டுக்கொண்டது. இந்த ஆணைக்குழுவின் முக்கிய தோல்வி, ராஜேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரது காணாமற்போதல்கள் பற்றிய அவர்களது மாமனாரான சந்திரசேகரத்தின் வாக்குமூலத்தை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள மறுத்ததுதான். அவர்களின் தந்தையாரான செல்வதுரையின் வாக்குமூலத்தினை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டாலும் கூட, அவரது பிள்ளைகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டது சாவகச்சேரியிலிருந்த அவர்களது மாமனாரின் வீட்டில் இருந்துதான் என்பதும், இதற்கு அவர்களது மாமனாரே கண்ணால் கண்ட சாட்சியம் என்பதும்  குறிப்பிடத் தக்கது. ஆணைக்குழு முன்னால் சந்திரசேகரம் வாக்குமூலமளிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வேண்டுமென்றே தடுக்கப்பட்டன. சாவகச்சேரிப் பாராளுமன்ற உறுப்பினரான வி.என். நவரட்ணத்தை சந்திரசேகரம் இதுகுறித்து உதவுமாறு கோரி அணுகியபோது, "இது என்னுடைய பிரச்சினையில்லை, நான் தலையிட முடியாது" என்று கூறி கையை விரித்துவிட்டார். அதுலத் முதலியின் ஆணைக்குழுவில் சிவசிதம்பரம் ஒரு உறுப்பினராக இருந்தபோதும் ஜெயாருடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு உருவாகி வந்த நட்பைப் பாதித்து விடும் என்பதனால சந்திரசேகரத்தின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளவைக்க எந்த முயற்சியிலும் அவர் ஈடுபட விரும்பவில்லை.

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.