Jump to content

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

By VISHNU

28 SEP, 2022 | 10:35 PM
image

இலங்கைக்குள் சிறுவராக இருக்க வேண்டிய ஒருவரின் வயதெல்லையை பதினாறிலிருந்து பதினெட்டாக உயர்த்தப்பட வேண்டும் என, சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் அண்மையில் கூடியபோது இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய “சிறுவர் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டம்” என்ற பதத்துக்குப் பதிலாக “சிறுவர் கட்டளைச் சட்டம்” என்றும், “சிறுவர் மற்றும் இளம் ஆட்கள்” என்ற வசனத்துக்குப் பதிலாக “சிறுவர்” என்ற பதத்தைத் திருத்துவதற்கும் இதன் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், முதன்மைச் சட்டவாக்கத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஏதேனும் ஒழுங்குவிதியில் அல்லது விதியில் அல்லது முதன்மைச் சட்டவாக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்பில், அறிவித்தலில், ஒப்பந்தத்தில், தொடர்பாடலில் அல்லது வேறு ஆவணத்தில் “சிறுவர்கள்” எனக் குறிப்பிடப்படும் அனைத்து இடங்களிலும் அந்த வசனம் நீக்கப்பட வேண்டும் என இதன் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது.

முதன்மைச் சட்டத்தின் 71 பிரிவின் (6) உப பிரிவில் உள்ள ‘இந்த வயதுப் பிரிவில் உள்ள எந்தவொரு சிறுவர் அல்லது இளம் ஆட்களுக்குத் தண்டனை வழங்கும்போது எந்தவொரு பெற்றோர், ஆசிரியர் அல்லது உத்தியோகபூர்வ பாதுகாவலருக்குக் காணப்படும் உரிமையைப் பாதிக்கும் வகையில் அமையக் கூடாது’ என்ற திருத்தம் இத்திருத்தச் சட்டமூலகத்தின் ஊடாக நீக்கப்பட்டுள்ளது.

23ஆவது அத்தியாயமான சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தின் நோக்கமானது சிறுவர்களின் மற்றும் இளம் ஆட்களின் பாதுகாப்புக்காக சிறுவர் குற்றவாளிகளைக் கண்காணிக்க சிறுவர்களுக்கான நீதிமன்றத்தை நிறுவுவதற்கான உத்தரவுகளை உருவாக்குவதாகும்.

2022.07.18ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தம்) சட்டமூலத்துக்கு அமைய 23ஆவது அத்தியாயம் திருத்தப்படவிருப்பதுடன், நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்படும் தினத்திலிருந்து இத்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்.

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் 14 இக்குள்ளேயே முத்தீடுதுகள். 16 இல் இருந்து 14 க்கு குறைப்பம் எண்டில்லை 18 இக்கு கூட்டியிருக்குதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் தேர்தல் வாக்காளர் வயதெல்லையும் உயர்த்தப்படுமா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் ரிக்கற், சினிமா தியேட்டர் ... 18 முடியுமட்டும் அரைவாசி தானே... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

இச்சட்டத்துகான அவசியம் என்ன?

இளவயதுச் சீரழிவுகளைக் கட்டுப்டுத்தும் நோக்காக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

இச்சட்டத்துகான அவசியம் என்ன?

 பெரிய பிக்குமார்..... இளம் பிக்குகளை, பாலியல் வன்கொடுமை செய்வதால்....
இரண்டு வயதை கூட்டி... இளம் பிக்குவுக்கு, பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்.  😂 🤣

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.