Jump to content

மார்ச் 26இன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 26இன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்!

தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தால், கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இன்னும் அதிகாரம் இல்லை என்றும் மார்ச் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னரே பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனினும் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதனை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
http://www.samakalam.com/மார்ச்க்கு-பின்னர்-பாராள/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 26இன் பின்னர், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம்... ஜனாதிபதிக்கு கிடைத்தால்,
ராஜபக்சவின் மொட்டுக் கட்சி பாராளுமன்றத்தில், அடக்கி வாசிக்கும் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மார்ச் 26இன் பின்னர், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம்... ஜனாதிபதிக்கு கிடைத்தால்,
ராஜபக்சவின் மொட்டுக் கட்சி பாராளுமன்றத்தில், அடக்கி வாசிக்கும் என நினைக்கின்றேன்.

அதற்கு முன்பாக சனாதிபதிமீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தால் இவர் சனாதிபதியே இல்லையென்றாகிவிடும். எல்லா அரசியற் கள்வர்களும் ஒத்து ஓடுகிறார்கள். ஒருவேளை கலைத்துத் தேர்தலை வைத்தாலும் எந்தவொரு முன்னணி அரசியற்கட்சிகளாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறக்கூடிய வாய்ப்பில்லை. தேர்தலில் தொங்கு நாடாளுமன்றமே சாத்தியம் அல்லது குட்டிக்கட்சிகளின் கூட்டணியாட்சியும் சாத்தியமாகலாம். எது அமைந்தாலும் தற்போதைய நிலையைவிட இன்னும் குழப்பம் நிறைந்ததாகவே இருக்கும். ஒரு தேர்தலைச் சந்திக்கும் மனோநிலை மக்களுக்கு இருக்கிறதா? போராட்டக்களம் சுழியமாகி உறைநிலைக்குச் சென்றுவிட்டது. போராட்டத் தலைமைகளை சிறையில் அடைத்தாயிற்று. அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசு தொடர்கிறது. மக்கள் சலப்படைந்தநிலை என பெரியதொரு ஆர்வமான தேர்தலாக இருக்காதென்றே நம்புகின்றேன். 

தமிழரது நிலை சிங்களத் தரப்பைவிட மிகவும் மோசமானதாக அமையலாம். அதனையே சிங்கள-இந்திய சக்திகள் செயற்படுத்தி வருகின்றன. அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக "தியாக தீபம் திலீபனின் நினைவு நாள்' எப்படிக் குழப்பியடிக்கப்பட்டது என்று எல்லோரும் அறிந்ததே. இவற்றை ஆய்வுக்குட்படுத்தி தமிழ் மக்களும், அறிவார்ந்த தரப்புகள், பல்கலைக் கழக குமுகம் என்பன இப்போதே அணைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு மேசைக்கு கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அப்படி உடன்படாதவிடத்து புதிய இளையதலைமுறை துணிவோடு களமிறங்கி தலைமைதாங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

தேர்தலூடாக அமையும் பலமற்ற நாடாளுமன்றோடு, சாதுரியமாக அரசியல் செய்வதற்குத் தமிழரிடையே பெரும்பான்மைப் பலத்துடனான அரசியல் தலைமையின் அவசியத்தைத் தமிழர்கள் இலக்கு வைப்பதும், அதனைச் சாத்தியமாக்கவுமான கருத்தியலை வளர்த்தெடுத்தலும் இன்றைய சூழலாகவுள்ளதை நாம் மறுத்துவிடமுடியாதென நம்புகின்றேன். கடன்வேண்டும் பொருண்மியமுறைமையிலான எந்தவொரு அரசும் தொடர் இனவாத பிடிமானத்தில் நின்றுபிடிக்கப் போவதில்லை. கனிந்துவரவுள்ள அகப்-புறச் சூழலைத் தமிழினம் அறிவார்ந்த நோக்கில் சிந்திந்து முடிவெடுத்தால் தமிழரது அரசியல் இலக்கை கணிசமாக நகர்த்த முடியும்.  

நன்றி  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அதற்கு முன்பாக சனாதிபதிமீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தால் இவர் சனாதிபதியே இல்லையென்றாகிவிடும். எல்லா அரசியற் கள்வர்களும் ஒத்து ஓடுகிறார்கள். ஒருவேளை கலைத்துத் தேர்தலை வைத்தாலும் எந்தவொரு முன்னணி அரசியற்கட்சிகளாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறக்கூடிய வாய்ப்பில்லை. தேர்தலில் தொங்கு நாடாளுமன்றமே சாத்தியம் அல்லது குட்டிக்கட்சிகளின் கூட்டணியாட்சியும் சாத்தியமாகலாம். எது அமைந்தாலும் தற்போதைய நிலையைவிட இன்னும் குழப்பம் நிறைந்ததாகவே இருக்கும். ஒரு தேர்தலைச் சந்திக்கும் மனோநிலை மக்களுக்கு இருக்கிறதா? போராட்டக்களம் சுழியமாகி உறைநிலைக்குச் சென்றுவிட்டது. போராட்டத் தலைமைகளை சிறையில் அடைத்தாயிற்று. அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசு தொடர்கிறது. மக்கள் சலப்படைந்தநிலை என பெரியதொரு ஆர்வமான தேர்தலாக இருக்காதென்றே நம்புகின்றேன். 

இலங்கையில் பாராளுமன்றம் ஊடாக, ஜனாதிபதியை கிளம்புவது மிகவும் கடினமான விடயம். அப்படி ஒரு பிரேரணை வருகிறது என தெரிந்தால், வருவதுக்கு முன்பே, பாராளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைப்பு செய்தால், கதை கந்தல். பிரேரணை (ரகசியமாக) வந்துவிட்டால், ஒத்திவைக்க முடியாது.

அப்படி ரகசியமாக வந்தது, பிரேமதாசவுக்கு எதிராக. இருந்தாலும், சபாநாயகர் மொகமட்டை கடைசீல தொப்பியை பிரட்ட வைத்து தப்பிவிட்டார்.

அதாவது, இலங்கை ஜனாதிபதி பதவி மிகப் பலமானது.

தனது கட்சிக்கு ஒரு ஆசனமேனும் இல்லாத நிலையில், மொட்டுக் கட்சி, மக்களின் வெறுப்பை பெற்றுள்ள நிலையில் ரணில் தேர்தலையே விரும்புவார். அதனையே மேலை நாடுகள் வலியுறுத்தும்.

ரணில் பாராளுமன்ற பலமடைந்தால், ராஜபக்சேக்கள் ஆபத்துக்குள்ளாவர்.

சேர்பியா போல், இன்னார்களை விசாரணைக்கு கையளித்தால் மட்டுமே நிதி என்று சொல்லக்கூடும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத்தைக் கலைத்து தன் பதவிக்கே வேட்டு வைக்க ரணிலுக்கு என்ன பைத்தியமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புலவர் said:

பாராளுமன்றத்தைக் கலைத்து தன் பதவிக்கே வேட்டு வைக்க ரணிலுக்கு என்ன பைத்தியமா?

பாராளுமன்றினை கலைத்தால், ரணிலுக்கு ஆபத்தா? எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மார்ச் 26இன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்!

பாராளுமன்றைக் கலைக்க மகிந்த தரப்பு ஒருபோதும் சம்மதிக்காது.எப்போதும் இல்லாதளவு உறுப்பினர்கள் புதிதாக வந்தவர்கள்.இனி ஒரு தேர்தல் வந்தால் இப்படி வெற்றியடையவும் முடியாது.

அத்தோடு இலங்கைச் சட்டப்படி 5 வருடம் பதவியை பூர்த்தி செய்யவில்லை என்றால் ஓய்வூதியமும் கிடைக்காதென்றே எண்ணுகிறேன்.

பாராளுமன்றைக் கலைத்தாலும் ஜனாதிபதி பதவியிலேயே இருப்பார்.

எனவே பாராளுமன்றை கலைக்க முதலே ரணிலுக்கு ஆப்பு வைப்பார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

எனவே பாராளுமன்றை கலைக்க முதலே ரணிலுக்கு ஆப்பு வைப்பார்கள்.

👇

1 hour ago, Nathamuni said:

இலங்கையில் பாராளுமன்றம் ஊடாக, ஜனாதிபதியை கிளம்புவது மிகவும் கடினமான விடயம். அப்படி ஒரு பிரேரணை வருகிறது என தெரிந்தால், வருவதுக்கு முன்பே, பாராளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைப்பு செய்தால், கதை கந்தல். பிரேரணை (ரகசியமாக) வந்துவிட்டால், ஒத்திவைக்க முடியாது.

அப்படி ரகசியமாக வந்தது, பிரேமதாசவுக்கு எதிராக. இருந்தாலும், சபாநாயகர் மொகமட்டை கடைசீல தொப்பியை பிரட்ட வைத்து தப்பிவிட்டார்.

அதாவது, இலங்கை ஜனாதிபதி பதவி மிகப் பலமானது.

தனது கட்சிக்கு ஒரு ஆசனமேனும் இல்லாத நிலையில், மொட்டுக் கட்சி, மக்களின் வெறுப்பை பெற்றுள்ள நிலையில் ரணில் தேர்தலையே விரும்புவார். அதனையே மேலை நாடுகள் வலியுறுத்தும்.

ரணில் பாராளுமன்ற பலமடைந்தால், ராஜபக்சேக்கள் ஆபத்துக்குள்ளாவர்.

சேர்பியா போல், இன்னார்களை விசாரணைக்கு கையளித்தால் மட்டுமே நிதி என்று சொல்லக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

பாராளுமன்றினை கலைத்தால், ரணிலுக்கு ஆபத்தா? எப்படி?

இப்போதிருக்கும் பாராளுமன்றத்தில் மகிந்தவின் ஆதரவு உறுப்பினர்களாலேயே ரணில் ஜனாதிபதியானார்.பாராளுமன்றத்தைக்கலைத்து தேர்தல்நடந்தால் ரணிலின் ஐக்கிய தேசியக்கட்சி பலமற்ற நிலையில் இருக்கும் நிலையிலும் விகிதாசார பிரதிநிதித்தவ முறையிலும் ரணிலின் சார்பானவர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் வரவார்கள் என்று சொல்ல முடியாது.பாரளுமன்றத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். ரணிலின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் சிரமம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இலங்கையில் பாராளுமன்றம் ஊடாக, ஜனாதிபதியை கிளம்புவது மிகவும் கடினமான விடயம். அப்படி ஒரு பிரேரணை வருகிறது என தெரிந்தால், வருவதுக்கு முன்பே, பாராளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைப்பு செய்தால், கதை கந்தல். பிரேரணை (ரகசியமாக) வந்துவிட்டால், ஒத்திவைக்க முடியாது.

இலங்கை சனாதிபதியே அதியுயரதிகாரம் கொண்டவரென்ற சட்டப்பாதுகாப்பு இருந்தாலும், தனியே நின்று எவளவு காலத்துக்குக் கத்தியைச் சுழற்ற முடியும்? ஆகவே இறங்கவேண்டியே வரும். அதற்குமுன் தனது கட்சியைப் பலப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், சஜித்தோடு போனவர்களை உள்ளிழுக்காது கட்சிபலமடைய வாய்ப்புண்டா? தேர்தலுக்கான அழுத்தங்கள் கூடும்போது, எதிர்க்கட்சிகளும், மொட்டுக் கட்சியின் அதிருப்திக் குழுக்கள், மற்றும் ஏனைய கட்சிகள் வீதிக்கிறங்கினால் ரணிலால் சமாளிக்க முடியுமா? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

இப்போதிருக்கும் பாராளுமன்றத்தில் மகிந்தவின் ஆதரவு உறுப்பினர்களாலேயே ரணில் ஜனாதிபதியானார்.பாராளுமன்றத்தைக்கலைத்து தேர்தல்நடந்தால் ரணிலின் ஐக்கிய தேசியக்கட்சி பலமற்ற நிலையில் இருக்கும் நிலையிலும் விகிதாசார பிரதிநிதித்தவ முறையிலும் ரணிலின் சார்பானவர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் வரவார்கள் என்று சொல்ல முடியாது.பாரளுமன்றத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். ரணிலின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் சிரமம் இருக்கும்.

1 hour ago, nochchi said:

இலங்கை சனாதிபதியே அதியுயரதிகாரம் கொண்டவரென்ற சட்டப்பாதுகாப்பு இருந்தாலும், தனியே நின்று எவளவு காலத்துக்குக் கத்தியைச் சுழற்ற முடியும்? ஆகவே இறங்கவேண்டியே வரும். அதற்குமுன் தனது கட்சியைப் பலப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், சஜித்தோடு போனவர்களை உள்ளிழுக்காது கட்சிபலமடைய வாய்ப்புண்டா? தேர்தலுக்கான அழுத்தங்கள் கூடும்போது, எதிர்க்கட்சிகளும், மொட்டுக் கட்சியின் அதிருப்திக் குழுக்கள், மற்றும் ஏனைய கட்சிகள் வீதிக்கிறங்கினால் ரணிலால் சமாளிக்க முடியுமா? 

இரண்டு விடயத்தில் கவனம் செலுத்துங்கள்.

முதலாவது இலங்கை பிச்சை பாத்திரத்துடன் நிக்கும் நாடு. புதுசா இறக்கின சோறு வேண்டாம், பழையது இருந்தாலாவது போடுங்க நிலையில்..... ராஜபக்சேக்கள் ராச வாழ்க்கை நடாத்தியவர்கள். இந்த பிச்சை நிலையில் ஆட்சி வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்கள். அவர்கள் மீண்டும் வர இப்போதைக்கு சந்தர்ப்பம் இல்லை.

இரண்டாவது, ரணிலை மேல ஏத்தினது மக்கள் அல்ல, மொட்டுக் கட்சியின் கையை முறுக்கியது மேற்கு.

சேர்பியா, மேற்காபிரிக்காவின் ஒரு நாடு (ஜவரி கோஸ்ட் என்று நிணைக்கிறேன்) யுத்தத்தின் பின்னான வங்குரோத்து நிலையில், யுத்தக்குற்ற வாளிகளை கையளித்தாலே, நாட்டுக்கு நிதி என்று கிடுக்குப்பிடி போட்டார்கள்.

கொடுத்தார்கள், கிடைத்தது.

ஜெனிவாவில கதை விட்டுக் கொண்டிருந்தவர்கள் எப்படி மாட்டுவார்கள் என்று பார்க்கத்தான்போகிறோம்.

கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு.

பசில், ரெலிபோனையும் கடாசிவிட்டு, அமேரிக்காவில் ஒளிந்து விட்டார். ஆயினும் வெள்ளைக்கொடி விவகாரம் பிரச்சணை கொடுக்கும். கோத்தாவை காட்டி விட்டு தப்பலாம்.

இதனால், ரணிலை பலப்படுத்த தேர்தல் வரும். அதுக்கு முதல் மொட்டுக்கட்சி கூடாரம் காலி ஆகும். பலர் மேல் வழக்கு வரும்.

சிலவேளை தேர்தல் தேவையில்லை என்ற நிலையும் வரலாம்.

சஜித் கட்சிக்காரர் தாய்கட்சியான ஜதேக பாயலாம். மொட்டுக் கட்சியில் சிலர் பாயலாம்..... தொப்பிக் கட்சியினர், மலையக, மேலக, கூட்டமைப்பில் கொஞ்சம் என்றும் பாயலாம்.

பதவிக்காக.....

நாட்டு நிதிநிலை சீராகும் வரை, ரணில் சேடம் இழுத்தே ஆட்சி நடாத்துவார். அந்த வேளையில் ராஜபக்சேக்கள் ஆட்சியை பிடிக்க முயலார்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.