Jump to content

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லையாம் – சரத் வீரசேகர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் – சரத் வீரசேகர

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லையாம் – சரத் வீரசேகர

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிப்போம் என உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இதயசுத்தியுடன் அரசு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மூன்று தலைவர்களினதும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மூவின மக்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருப்பதாகவும் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய பேரவையில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வைக் காணும் பேச்சை அரசாங்கம் இதயசுத்தியுடன் நடத்த வேண்டும் என எவ்வாறு கோரமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் மக்களுக்கு நாட்டில் சுதந்திரம் காணப்படும் நிலையில், சிங்கள மக்களுக்கு எதிராகவும், பௌத்த மதத்துக்கு எதிராகவும்தான் தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1302213

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களில் வயிறுகாய..அண்ணர் வழிக்கு வருவார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனுக்கு விசர், பேசாமல் விட தானாகவே அங்கொடைக்கு போகும் நிலை வரலாம். அடுத்த சுனாமியோடு அள்ளுண்டு போகப்போறான், ரொம்பத்தான் துள்ளுறான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லையாம் – சரத் வீரசேகர

அப்ப ஏன் ?

போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை என்று போனீர்கள்?

போரில் வெல்வதற்கான சூழ்ச்சியா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பிரச்சனை பொதுவாக இலங்கை பிரச்சனை என்று தான் சொல்லப்படுகின்றது    எனவே… தமிழ் மக்களுக்கு பிரச்சனை இல்லையென்றால் இலங்கைகு பிரச்சனை இல்லை என்றாகிறது   மேலும் இலங்கை பிரச்சனை என்ன என்று தெரியாதவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக பதவி வகிக்க தகுதியற்றவார்கள்.  உடனடியாக சரத் வீரசேகர பதவி விலக வேண்டும் இவர் போன்றோர் முக்கிய பதவியில் இருப்பது தமிழ் மக்களின் மிகப் பெரிய பிரச்சனையாகும்.     இது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாது 

Link to comment
Share on other sites

இவரை போன்றவர்கள் தமிழ் மக்களை கிலேசம் கொள்ள வைப்பார்கள் என இனவாத சிங்கள அரசு நினைக்கிறது. தமிழ் மக்கள் கொதிப்படையாமல் இவர்களை கையாண்டால் இல்லாமலே போய்விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பைத்தியக்காரத்தனம் எப்படி இருக்கென்றால்.. இலங்கை உலகின் முதன்மைப் பொருண்மிய நாடாக விளங்கிறது என்பதற்கு இணையாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை தமிழ் கோஷ்டியளே  தமிழருக்கு பிரச்சனை இல்லையெண்டு சொல்லேக்கை சிங்களவன் எந்த மட்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் அலம்புகிறான் என்றால்; சிங்கள மக்களை அமைதிப்படுத்த முடியாத பிரச்சனை தலைக்கு மேல் போய்விட்டது என்றே அர்த்தம். பிரச்சனை இல்லையென்றால் எதற்காக ஜெனீவாவுக்கு போகிறார்கள்? அறிக்கை சமர்பிக்கிறார்கள்? உறுதி வழங்குகிறார்கள்? கால அவகாசம் கேட்கிறார்கள்? நம்ம தலைவர்கள் இதுபற்றி கதைப்பதில்லை, கதைப்பவர்களையும் குற்றம் சுமத்தி ஓரங்கட்டுவதால் அதையே இவன் போன்றவர்கள் சாதகமாக்குகிறார்கள். தாங்கள் தமிழருக்கு தீர்வை வைத்தால் சிங்கள மக்கள் இனமுரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் கலகம் ஏற்படுமாம். அவர்களை அடக்கி நீதியை நிலைநாட்ட முடியாதவர்கள் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? இப்போ எப்படி அந்த மக்களின் நிஞாயமான போராட்டங்களை இரும்புக்கரம் அடக்கினார்கள் என்கிற கேள்வி எழுகிறது. இவன் கத்துவதும் ஓர் வகையில் நன்மைக்கே.  இந்த முட்டாளின் கையில் நெருப்பை கொடுத்துவிட்டு மற்றவர்கள் குளிர் காய காத்திருக்கிறார்கள். இது ஒவ்வொன்றாக கூக்குரலிடுது, வாய்த்தால் லாபம் இல்லையென்றால் அது அவரின் தனிப்பட்ட கருத்து என கையை கழுவி விடலாம் என நினைக்கிறார்கள். இது இவர்களுக்கே ஆபத்தாக முடியும் என சித்திக்க தெரியவில்லை. அங்காலை எங்கட இன்னொன்று கூவுது. நாட்டில் தமிழ்க் கோவில்களை அமைக்கும்போது சிங்களவர் பிரச்சனை செய்வதில்லையாம், விகாரைகள் கட்டினா தமிழர் குழம்புகிறார்களாம். விகாரையும் கோவிலும் இங்கு பிரச்சனையில்லை, அது அமையும் இடம், விதம், எந்த நேரம் என்பதே பிரச்சனை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை  உணரத் தெரியாததெல்லாம் நித்திரையால எழும்பி சிங்களத்துக்கு முண்டு கொடுக்குது. இன்றைய தமிழ்ச் சமூகம் எதைப்பற்றி யோசிக்குது? இதற்காகத்தான் நமது தலைமை அழிக்கப்பட்டது. அதற்கு நம்மில் படித்த, படிக்காத சுயநலவாதிகள் துணை போயினர், போய்க்கொண்டும் இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.