Jump to content

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச

Sri Lanka ArmySri Lankan TamilsWimal WeerawansaUniversity of JaffnaSri Lankan political crisis
2 மணி நேரம் முன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 12 நாட்கள் திலீபனை பகிரங்கமாக கொண்டாடியமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

இராணுவத்தை சாடல்

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச | Veeravansa Slams The Army For Celebrating Dileep

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதன் தலைவர்களை கொண்டாடுவதும், அதற்காக வாகன அணிவகுப்பு நடத்துவதும் சிங்கள மக்களை கோபமடைய செய்யும்.

 

தமிழ் மக்களாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் சமூக ஊடகங்களிலும் திலீபன் கொண்டாடப்பட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை நடத்தி அதனுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

திலீபனின் நினைவேந்தல்கள் பகிரங்கமாக நடத்தப்படும் போது இராணுவ பொலிஸார் ஏன் மௌமான இருந்தனர்.”என கூறியுள்ளார்.

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச | Veeravansa Slams The Army For Celebrating Dileep

 

யாழ்.குடாநாட்டை இந்திய அமைதிப்படை ஆக்கிரமித்திருந்த நிலையில், 987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து, திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து முப்பத்தைந்து வருடங்களாகின்றன.

அரச படையினரால் பல தடவைகள் தகர்க்கப்பட்ட நல்லூரில் உள்ள திலீபன் நினைவுத் தூபிக்கு அருகாமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மாவீரரின் பெற்றோர்களின் பங்களிப்புடன் நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நினைவுத்தூபிக்கு முன்பாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இம்முறை முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாண குடாநாட்டைச் சுற்றி வாகன பேரணி ஒன்றையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.

 

பிரதமரின் கருத்து

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச | Veeravansa Slams The Army For Celebrating Dileep

திலீபன் நினைவேந்தல் ஆரம்பமாகியிருந்த நிலையில், யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொரு நபரையும் அவர்களது உறவினர்கள் மற்றும் அந்த இனத்தவர்களுக்கு நினைவு கூறுவதில் எவ்வித தடையும் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் ரீதியாகவும், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தியும், இன வேறுபாடுகளை தூண்டி ஒரு சார்புடையதாகவும் இருக்கக் கூடாது எனக் கூறிய பிரதமர், அவ்வாறு மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

 

நினைவேந்தலுக்கான தடைகள்

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச | Veeravansa Slams The Army For Celebrating Dileep

கடந்த சில ஆண்டுகளாக, தமிழர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற போதிலும், அரசு பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியே வருகின்றனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் பொத்துவிலில் இருந்து நல்லூருக்கு சென்ற வாகன ஊர்வலத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக அப்பகுதி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாகன தொடரணியை இடைமறித்த பொலிஸார், திலீபனின் உருவம் பொறிக்கப்பட்ட வாகனங்களில் பயணித்த அனைவரின் பெயர்களையும் ஊர்களையும் பதிவு செய்துள்ளனர்.

விமல் வீரவன்ச

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச | Veeravansa Slams The Army For Celebrating Dileep

இந்நிலையில் விமல் வீரவன்ச, திலீபனை நினைவு கூறுவோரை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆனால் இவர் வடக்கில் இந்திய அமைதி காக்கும் படையினர் வடக்கை ஆக்கிரமித்திருந்த போது அதற்கு எதிராக ஆயுதம் ஏந்திய மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் பிரிவின் வீரராவார்.

பின்னர், அந்த முன்னணியில் இருந்து பிரிந்து ராஜபக்ச ஆதரவாளராக ஆட்சிக்கு வந்த வீரவன்ச, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து சில நாட்களில் அதனை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச - தமிழ்வின் (tamilwin.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனோடை விடையம்..இன உணர்வுடன் சம்பந்தப்பட்டது..நீங்க நெடுகச் சொல்வதுதானே. விட்டுடுங்க,,,,..உங்கடை வீட்டு விசயத்தை மறந்து கதைக்கிறீங்க...உங்க மனைவியுடன் தொடர்பில் இருந்த சின்னப் பொடியனை அடிச்சுச் சாவடித்துவிட்டு...  ஏதோஎல்லாம் நாடகமடித்து..கேசைமுடித்து இப்ப வெளியில் இருந்து சண்டித்தனம் கதைப்பப்து..என்ன நியாயம்...மனிசியுடன் நேரில் கதைக்க பயந்து ..அவரையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு...இப்ப வெளியில் இருந்து பெண்களுடன் கொட்டமடிப்பதை ..ஆமியும் பார்த்துக்கொண்டுதானே இருக்குது...அதைவிட உங்கட ஆபீசு சோதனையிட ..கைப்பற்றிய ஆணுறையும் ..மாத்திரைகளையும் உங்கடை ஆமிதானே பிடித்தது...அப்பவும் உங்கடைஆமி பேசாமல்தானே இருந்தது...இப்ப  ஏன் ஆமியை உசுப்பிறியள்...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

“நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதன் தலைவர்களை கொண்டாடுவதும், அதற்காக வாகன அணிவகுப்பு நடத்துவதும் சிங்கள மக்களை கோபமடைய செய்யும்.

தமிழர் கழித்தாலும் சிங்களமக்களுக்கு கோபம் வருமென்று தெரியும், ஆனால் எங்கட கோயிலை இடித்து விகாரை காட்டினாலும் தமிழருக்கு கோபம் வரக்கூடாது அதுக்கும் சிங்களமக்கள் கோபமடைவர் என்று சொல்வதுதான் கொஞ்சம் கேள்விக்குரியது. இருப்பவர் இருந்திருந்தால் எல்லாத்தையும் பொத்திக்கொண்டு இருந்திருப்பீர்கள், நிலைமை இறங்கி வந்ததால் குதிக்கிறீர்கள். இன்னும் பாதாளத்திற்கு நாடு போகப்போகுது. இந்தியன் தன்னாட்டு குடிமகனுக்கு இங்கு விழா எடுக்கிறான் அதற்கு தடையில்லை, இந்த நாட்டின் குடிமக்கள் தங்கள் இறந்த உறவுகளை நினைத்து உருகினால் உங்கள் குற்ற நெஞ்சு குறுகுறுக்கத்தான் செய்யும். இதுகளுக்கு ஒருவிதமான பைத்தியம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, alvayan said:

திலீபனோடை விடையம்..இன உணர்வுடன் சம்பந்தப்பட்டது..நீங்க நெடுகச் சொல்வதுதானே. விட்டுடுங்க,,,,..உங்கடை வீட்டு விசயத்தை மறந்து கதைக்கிறீங்க...உங்க மனைவியுடன் தொடர்பில் இருந்த சின்னப் பொடியனை அடிச்சுச் சாவடித்துவிட்டு...  ஏதோஎல்லாம் நாடகமடித்து..கேசைமுடித்து இப்ப வெளியில் இருந்து சண்டித்தனம் கதைப்பப்து..என்ன நியாயம்...மனிசியுடன் நேரில் கதைக்க பயந்து ..அவரையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு...இப்ப வெளியில் இருந்து பெண்களுடன் கொட்டமடிப்பதை ..ஆமியும் பார்த்துக்கொண்டுதானே இருக்குது...அதைவிட உங்கட ஆபீசு சோதனையிட ..கைப்பற்றிய ஆணுறையும் ..மாத்திரைகளையும் உங்கடை ஆமிதானே பிடித்தது...அப்பவும் உங்கடைஆமி பேசாமல்தானே இருந்தது...இப்ப  ஏன் ஆமியை உசுப்பிறியள்...

தங்களின் ஊழல்களையும், கேவலங்களையும் மறைத்து தம்மை நாட்டுப்பற்றாளர்களாக காட்டுவதற்கு அரசியலும், இந்தஊளையிடலும் தேவைப்படுகிறது இவர்களுக்கு. இந்தநாட்டின் குடிமக்களோடு உரிமைகளை பகிர்ந்து வாழ விரும்பாமல், அந்நிய நாடுகளை அழைத்து, அவர்கள் தங்கள் மொழியையும், கலாச்சார நிகழ்வுகளையும்,  நினைவேந்தல்களையும்  கொண்டாடுகிறார்கள், தங்கள் மொழியில் பெயர்பலகைகளை நடுகிறார்கள், கட்டிடங்களை கட்டுகிறார்கள், தொழில் நிறுவனங்களை நிறுவுகிறார்கள் அதை கேட்க தடுக்க துப்பில்லை, தமிழன் என்ன செய்கிறான்? எப்போ தும்முகிறான்? எங்கே கழிக்கிறான் என்று திரியுங்கோ, துப்புக்கெட்டதுகள்! இதுகளின்ர முட்டாள்தனத்தை வெளிநாடுகள் தமக்கு சாதகமாய் பயன்படுத்தி, தமக்கு வேண்டிய நன்மைகளை சுலபமாய் அடைகிறார்கள். அது சிங்கள மக்களுக்கு தெரிவதில்லை, தெரியப்படுத்துவதுமில்லை, அவர்களுக்கு அதையிட்டு கோபமுமில்லை. அவர்களின் கோபமெல்லாம் தமிழர்மேலே. அவ்வளவு பொறாமை தமிழனின் முன்னேற்றத்தில், திட்டமிட்டு அழித்துக்கொண்டும், பிடுங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். இன்னும் பசி தீரவில்லை அவர்களுக்கு! அடைகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அடிக்கடி தான் எங்க இருந்து வந்தன் என்றதை மறக்கும் வியாதியுள்ளது.

இவரை உருவாக்கிய ஜே வி பி.. இவர் அதில் அங்கத்தவராக இருந்த போது சொந்த இன மக்களின் இராணுவத்தையே அரச கூலிகளாகக் காட்டிக் கொன்றவர்.  இவர் எல்லாம் ஒரு பேரினவாதச் சிந்தனையோட்டத்தில் இருந்த போர்வெறி கொண்ட வேறொரு இனத்தின் அரசாங்கத்திடம் இருந்து தன் சொந்த இனத்தைக் காப்பாற்ற போராடிய திலீபனைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்குது.

ஆனால் ஒன்று இவர்கள் இப்படிக் கத்தும் போதுதான் தமிழர்கள் சிலருக்கு தங்கள் நிலை தெரிய வரும். அதனாலாவது ஒற்றுமைப்பட்டால் நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

இவர்கள் இப்படிக் கத்தும் போதுதான் தமிழர்கள் சிலருக்கு தங்கள் நிலை தெரிய வரும். அதனாலாவது ஒற்றுமைப்பட்டால் நல்லது. 

அற நனைஞ்சாருக்கு கூதலுமில்லை காய்ச்சலுமில்லை!

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.