Jump to content

பிரித்தானியா வாழ் இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா வாழ் இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக்கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ளார்.

மன்னர் சார்லஸ் பதவியேற்ற பின்னர், இங்கிலாந்து முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதன்போது இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் ஒன்றிணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா வாழ் இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ் | British King Charles Meet The Srilankan Community

வரவேற்பு நிகழ்வு

பிரித்தானியா வாழ் இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ் | British King Charles Meet The Srilankan Community

இந்தநிகழ்வில் இங்கிலாந்து முழுவதிலுமிருந்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு பாரம்பரியத்தைச் சேர்ந்த 200-300 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய சுகாதார சேவை முதல் கலை, ஊடகம், கல்வி, வணிகம் மற்றும் ஆயுதப்படைகள் வரை பிரித்தானிய வாழ்க்கையில் இந்த சமூகங்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா வாழ் இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ் - தமிழ்வின் (tamilwin.com)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

பிரித்தானியா வாழ் இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ்

இந்த சந்திப்பில் பிரித்தானியாவால் தமிழர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை யாராவது எடுத்து சொல்வார்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த சந்திப்பில் பிரித்தானியாவால் தமிழர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை யாராவது எடுத்து சொல்வார்களா?

போறதுகள் தமிழ் தெரியாத தமிழர்களாய் இருக்கும்.......

நான் பார்த்த அளவில் இங்கிலாந்தில் அகதியாக வந்த தமிழர்கள் தான் அதிகமாக தமிழ் கதைக்கிறார்கள். உயர் படிப்பிற்காக வந்த தமிழர்களும் அவர்கள் குடும்பங்களும் ஒரே ஆங்கில மயம்தான். சில வேளை எனது கணிப்பு தவறாக இருக்கலாம். 🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தநிகழ்வில் இங்கிலாந்து முழுவதிலுமிருந்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு பாரம்பரியத்தைச் சேர்ந்த 200-300 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு பேருக்கும்தான் பார்ட்டி...பிறகு ஏன் ...இந்த தலைப்பு..

மன்னர் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக்கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ளார்.

ரணில் பார்த்து அட்ஜஸ்ட் செய்யச் சொன்னவரோ ?😁

 

Edited by alvayan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, alvayan said:

ரணில் பார்த்து அட்ஜஸ்ட் செய்யச் சொன்னவரோ ?😁

இங்கு ரணிலின் ராஜதந்திரமும் ஊத்தி கிட்டு வந்த தலைவர்களை பார்ட்டி கொடுத்து கவில்ப்பம் என்ற தந்திரமும் பலனளிக்க வில்லை ஆகா மொத்தம் கமேரூன் மாத்திரம் பதவியில் உள்ள போது அவர் சொன்ன ஆலோசனைகளை கடைபிடிக்கும் படி கேட்டு கொண்டார் .மேல் உள்ள செய்தி உண்மை எழுதியவர்கலுக்கு தான் புரியும் .

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் முன்வர வேண்டும். எம்மைப் பொறுத்தவரையில், தற்போது இந்த நாட்டின் அரசியல் யாப்பில் நடைமுறையில் இருக்கின்ற எமது அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம். இல்லாததைப் பற்றிக் கதைத்து இருப்பதையும் கைவிட்டு விடக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம். தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போதே சில நாடகங்கள் அரசியல் அரங்கில் மேடையேற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=168438
  • யாழ். பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!       யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளுடன் வீதிகளில் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் வாடகை அறைகளில் தங்கியுள்ள மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு தமது தங்குமிடத்திற்கு திரும்பும் வேளைகளில் பல்கலையை சூழவுள்ள வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்கும் இளைஞர்கள் கும்பல்கள் மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசுதல் , தமது அந்தரங்க உறுப்புக்களை காட்டுவது , ஆபாசமாக சைகைகளை காட்டுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் 300 பேர் கையொப்பம் இட்டு , பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முறையிட்டு இருந்தனர். பல்கலைக்கழகத்திற்கு வெளியே இவ்வாறான செயற்பாடுகள் நடப்பதனால் , மாணவிகளால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளத்துடன் ,பல்கலைக்கழக சூழலில் சிவில் உடைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.   -யாழ். நிருபர் பிரதீபன் https://tamil.adaderana.lk/news.php?nid=168441
  • 60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது!       அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம். மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு திருத்தத்துடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=168417
  • போத்துக்கல் 6 சுவிஸ் 1. போத்துக்கல் சுவிசை வீட்டுக்கு அனுப்பி உள்ளது.
  • இலங்கை மீண்டும் அபிவிருத்தி அடையும் எனும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம் .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.