Jump to content

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனத் தூதுவரின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நிதியுதவி பங்கிட்டு வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மட்டுமே முழுத் தொகையும் பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது.

சீனத் தூதரகத்தின் இந்த நிதியுதவியின் கீழ் மாணவர்களுக்கான மாதந்த உதவிப்பணம் உட்பட பல நலனோம்புச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பல்கலைக்கழக நலச்சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1302473

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வர்ரே வா 🤣

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

தொலைநோக்கற்ற தமிழ்த்தலைவர்களைப்போல, தமிழ்மக்களும் இந்துயாவின் கோவணத்துள் தொங்குவதற்கு யோசிக்காது சிங்களவரைப்போல மாத்தி யோசிக்கவேண்டும். எம்மைப் போக்குக் காட்டியழிக்க முனையும் இந்துயாவைவிட சீனாவோடு தமிழினம் ஏன் நட்பாகி  எமது இலக்குகளை அடையக்கூடாது.   

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

தொலைநோக்கற்ற தமிழ்த்தலைவர்களைப்போல, தமிழ்மக்களும் இந்துயாவின் கோவணத்துள் தொங்குவதற்கு யோசிக்காது சிங்களவரைப்போல மாத்தி யோசிக்கவேண்டும். எம்மைப் போக்குக் காட்டியழிக்க முனையும் இந்துயாவைவிட சீனாவோடு தமிழினம் ஏன் நட்பாகி  எமது இலக்குகளை அடையக்கூடாது.   

இபோதுள்ள இரட்டை வேட  தமிழ்த் தலைமை வருகின்ற தேர்தலுடன் காணாமல் போய்விடும்.
ஆனால்... மிக அவசரமாக, புதிய  ஒரு மாற்றுத் தலைமை  உருவாகுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உதவியை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் சிங்கள பகுதிகளுக்கு கொடுத்து விடுவார்கள்.....நாங்கள் பெற்றுக் கொள்வது நல்ல செயல் அதுவும் நேரடியாக பெறுவது மிகவும் சிறப்பு  பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள் 😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

இபோதுள்ள இரட்டை வேட  தமிழ்த் தலைமை வருகின்ற தேர்தலுடன் காணாமல் போய்விடும்.
ஆனால்... மிக அவசரமாக, புதிய  ஒரு மாற்றுத் தலைமை  உருவாகுதல் வேண்டும்.

அப்படியானதொரு சூழலே தென்படுகிறது. இதனால் டக்ளஸ் - கருணா- பிள்ளையான் போன்ற சக்திகள் முன்னோக்கித் தள்ளுப்படக்கூடும். இதனை மக்கள்(சிவில்) குமுகாய அமைப்புகள் சரியாகக் கையாள வேண்டும். மணிவண்ணன் போன்றோர்மீதும் அண்மையில் நடைபெற்ற தியாக தீபத்தின் வணக்க நிகழ்வுக் குளறுபடிகளால் நம்பிக்கை போய்விட்டது. இனத்துக்காக உண்மையாக முன்வரும் இளையோரை ஒட்டுக்குழுக்கள் மற்றும் அரசபடைகள் விட்டுவைக்குமா என்பதும் கவனத்திற்குரியது. அப்படித் துணிவோடு இறங்குவதாயின் மில்லரைப்போல முடிவெடுத்தே, அதாவது சாவைச் சந்திக்கத்தயாராக இறங்கவேண்டும். எமதினத்திலே அரசியல் தெளிவும் உறுதியும் உடையதொரு தலைமையின் அவசியம் குறித்த உரையாடல்களை இப்போதிருந்தாவது(நான் இதனை வேறொரு திரியிலும் சுட்டியிருந்தேன்) தொடங்கவேண்டும். யார் தொடங்குவது என்பதே பெரியதொரு வினா? கஜன் சக கஜன் போன்றோர் இன்றுவரை குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் நிலையிலேதான் இருக்கிறார்கள். இந்தியாவைப் பகைக்கக் கூடாதென்பதற்காக, இந்தியாவால் கையாளப்படமுடியாமல் மட்டும் இருப்பதுதான் விடியலுக்கான செயற்பாடாக நினைக்கிறார்கள் போல் உள்ளது. 
நன்றி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

பல்கலைக்கழகத்தில் சீன கற்கைநெறி ஒன்றையும், சீனாவின் முன்ணணி பல்கலைக்கழகங்களின் புலமைப்பரிசில் திட்டத்தையும் கொண்டுவந்தால் நன்று. 

25 minutes ago, nochchi said:

தொலைநோக்கற்ற தமிழ்த்தலைவர்களைப்போல, தமிழ்மக்களும் இந்துயாவின் கோவணத்துள் தொங்குவதற்கு யோசிக்காது சிங்களவரைப்போல மாத்தி யோசிக்கவேண்டும். எம்மைப் போக்குக் காட்டியழிக்க முனையும் இந்துயாவைவிட சீனாவோடு தமிழினம் ஏன் நட்பாகி  எமது இலக்குகளை அடையக்கூடாது.   

சரியான கேள்வி. 

இப்படியான சிந்தனைகளைக் கிளறிவிடுவதுதான் இந்த உதவிகளின் நோக்கமாக இருக்குமோ ? 

 • Like 1
Link to comment
Share on other sites

சீனாவோடு தமிழர்கள் தொடர்புகளைப் பேணுதல் நல்லது. இது சிங்களத்தைப் போலவே இந்தியாவை எதிர்க்கும் நோக்கம் அல்ல. இந்தியா, காந்தி ஜெயந்தி போன்ற தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையைக் குறைக்கலாம்.

ஒரு வேளை (🤪) இந்தியா தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர முன்வந்தால் அதனை சீனா சிங்களத்தோடு சேர்ந்து நின்று எதிர்க்கும்.

இதேவேளை சீனா எமக்கான தீர்வினை வழங்க முன்வந்தால் அதனை இலங்கை இந்தியாவோடு சேர்ந்து நின்று முறியடிக்கும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அப்படியானதொரு சூழலே தென்படுகிறது. இதனால் டக்ளஸ் - கருணா- பிள்ளையான் போன்ற சக்திகள் முன்னோக்கித் தள்ளுப்படக்கூடும். இதனை மக்கள்(சிவில்) குமுகாய அமைப்புகள் சரியாகக் கையாள வேண்டும். மணிவண்ணன் போன்றோர்மீதும் அண்மையில் நடைபெற்ற தியாக தீபத்தின் வணக்க நிகழ்வுக் குளறுபடிகளால் நம்பிக்கை போய்விட்டது. இனத்துக்காக உண்மையாக முன்வரும் இளையோரை ஒட்டுக்குழுக்கள் மற்றும் அரசபடைகள் விட்டுவைக்குமா என்பதும் கவனத்திற்குரியது. அப்படித் துணிவோடு இறங்குவதாயின் மில்லரைப்போல முடிவெடுத்தே, அதாவது சாவைச் சந்திக்கத்தயாராக இறங்கவேண்டும். எமதினத்திலே அரசியல் தெளிவும் உறுதியும் உடையதொரு தலைமையின் அவசியம் குறித்த உரையாடல்களை இப்போதிருந்தாவது(நான் இதனை வேறொரு திரியிலும் சுட்டியிருந்தேன்) தொடங்கவேண்டும். யார் தொடங்குவது என்பதே பெரியதொரு வினா? கஜன் சக கஜன் போன்றோர் இன்றுவரை குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் நிலையிலேதான் இருக்கிறார்கள். இந்தியாவைப் பகைக்கக் கூடாதென்பதற்காக, இந்தியாவால் கையாளப்படமுடியாமல் மட்டும் இருப்பதுதான் விடியலுக்கான செயற்பாடாக நினைக்கிறார்கள் போல் உள்ளது. 
நன்றி

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அய்யா சீன தூதுவர் அவர்களே.

யாழ் இந்துக் கல்லூரியில் மாண்டரின் மொழி படிக்க உதவ முடியுமா? 🤔

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
58 minutes ago, Kandiah57 said:

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

இங்கு ஆயுதத்தைத் தூக்குங்கள் என்று யாரையும் கோரவில்லை. ஆனால், மக்கள் தொடர்ந்து போராடவேண்டிய நிலையிலேயே ஈழத்தீவிலே தமிழ்பேசும் மக்களை சிங்களமும் உலகும் வைத்திருக்கிறது. நாங்கள் எதிர்பார்ப்பது சுயநலமற்ற இனச்சுயநலத்தோடு சிந்திக்கும் திடசங்கற்பமுள்ள தலைமையே இன்றைய தேவை. அதனையே பலர் சுட்டுகின்றார்கள். போராட்டமென்றவுடன் ஏ.கே.47ஐ நினைக்கவேண்டிய தேவையில்லை. ஆனால் உலகிலே இன்றும் விடுதலைக்காக அவைகளே பேசுகின்றன. அதனைப் பார்த்து கையறு நிலையில் நிற்கிறது புலிகளுக்கு வகுப்பெடுத்த மேற்குலகு என்பது வேறுகதை. 

நீங்கள் சொல்வதுபோல் சனத்தொகை பெருக்கமென்ற மூலோபாயம் கடந்த பத்தாண்டுகளாகப் பேசப்படும் விடயம். பொருண்மியச்சுமையால் நெரிபடும் ஒரு பிள்ளையுள்ள குடும்பத்தை காணும் தம்பதிகள் உறையோடுதான் கட்டிலுக்குப் போகிறார்கள். உறைவேண்ட வழியற்றவனோ கொஞ்சம் தள்ளிப்படப்பா என்ற நிலை. பொருண்மியத் தேடலுக்கான நிலை களைப்பு சோர்வு என்பன தம்பதியரிடையேயான கூடல்களையே ஊடலாக்கி ஊடுருவியுள்ள நுகர்வுப் பொருணமியச் சூழல் என்பனவும் இனவிருத்திக்குத் தடையான கரணியங்கள் ஆகும். எனவே பொருண்மிய வளப்பெருக்கமற்று மகிழ்வான வாழ்வுச் சூழலற்ற ஒரு நாடாக ஈழம் இருக்கும்வரை சாத்தியமா என்று சிந்திக்க வேண்டும். அதேவேளை இனவிருத்திக்கான பரப்புரையையும் வேலைத்திட்டத்தையும் புலத்திலிருந்து உங்களைபபோன்ற சிந்தனையாளர்கள் முன்னெடுத்தால் புலத்தமிழர் கரம்கொடுப்பார் என்பதில் ஐயமில்லை. 
நன்றி

1 hour ago, இணையவன் said:

சீனாவோடு தமிழர்கள் தொடர்புகளைப் பேணுதல் நல்லது. இது சிங்களத்தைப் போலவே இந்தியாவை எதிர்க்கும் நோக்கம் அல்ல. இந்தியா, காந்தி ஜெயந்தி போன்ற தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையைக் குறைக்கலாம்.

ஒரு வேளை (🤪) இந்தியா தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர முன்வந்தால் அதனை சீனா சிங்களத்தோடு சேர்ந்து நின்று எதிர்க்கும்.

இதேவேளை சீனா எமக்கான தீர்வினை வழங்க முன்வந்தால் அதனை இலங்கை இந்தியாவோடு சேர்ந்து நின்று முறியடிக்கும்.

உண்மைதான்,

நாம் எதிர்க்கத்தேவையில். ஏன் சிங்களத்தைபோன்றதொரு அரசியல் பொறிமுறையை வகுத்துப் பிரித்து நாடுகளுக்கும் நிலைமைகளுக்கும் ஏற்றவாறு செயற்படுத்தக்கூடாது. சிங்களத்தின் இராயதந்திரத்தினைப்பாருங்கள் வரலாற்றுக் காலத்திலேயே சோழரை எதிர்க்க பாண்டியரோடு(தென்னிந்தியரோடு) கரம்கோர்க்கவில்லையா?  

Edited by nochchi
திருத்தம்
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திலீபன் அண்ணாவின் மண்ணில் காந்திக்கு மிதிவண்டிப் பயணம் செய்யும் மறதிச்செம்மல்களை நினைக்க வேதனையாக உள்ளது. இதை நினைக்க கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. 

ஒருவன் நிலாக்காட்டி பழஞ்சோறூட்ட நினைக்கிறான்!
இன்னொருவன் நிலாவிற்குப் போக வழிகாட்டுகிறான்!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

ஐயா, 

அனக்கு நான்கு பிள்ளைகள். என்னுடைய நண்பர்கள் பலரை கிண்டலடித்து ஆகக் குறைந்தது 3 பிள்ளைகளாவது பெற்றுக்கொண்டுள்ளனர்.  

இதுதான்  என்னால் செய்யக்கூடியது, இப்போதைக்கு..... 😀

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பங்களிப்பின் அடுத்த கட்டமாக

சீனதூதுவரை  சந்தித்து நன்றி சொல்வதுடன் 

முடிந்தால்  சீனா  சென்று சீன அரசுடன்  பேசத்தொடங்கவேண்டும்

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

இருக்கலாம், அண்மையில் சீனத்தூதுவரின் அறிக்கைக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் சீனத் தூதுவருக்கு நமது நிலைமைகளை விளக்கி, இப்படியான அறிக்கைகளை எதிர்காலத்தில் தவிர்க்கச் செய்யலாம். ஆனா அவர்கள் ஒன்றும் தெரியாமல் செய்யவில்லை. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுகிறார்கள். இதை வெட்டியாடும் திறமை நாங்கள் ராஜ தந்திரிகள் என்று அலட்டிக்கொண்டு திரியும் நம்ம தலைமைகளுக்கு உண்டா? நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. சிறிதாயிருக்கும் போதே தீர்க்க முடியாதவர்கள் இனிமேல் மூடிக்கொண்டு படுக்க வேண்டியதுதான். நாங்கள் இனிமேல் சிங்களத்தோடு மட்டுமல்ல அவன் அழைத்து வைத்து கடன் வாங்கிய நாடுகளோடும் போராட வேண்டியுள்ளது. போராட்டம் என்றவுடன் ஆயுதத்தை யாரும் நினைக்க வேணாம், அதற்கு துணிவுள்ளவன் யாரும் வரப்போவதில்லை, வந்தாலும் சாதிக்க முடியாது. பேசத் துணிவுள்ளவன் வரவேண்டும்! தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் அதற்கு அனுமதிக்கப்போவதுமில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கு பின்னாலேயே அலைந்து, அவர்களை ஓரங்கட்டி, நாறடித்து, பயமுறுத்தி, அரசாங்கத்தால் அச்சுறுத்தி, இனவாதிகளை கிளப்பி வெளியேற்றிவிடுவார்கள். சிங்களவரை விட இந்த தமிழ் தேசியத்தை வைத்து வயிறு வளப்பவர்களை சமாளிப்பதே  மிகப்பெரிய சவால்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தானே அவலங்களும் அழிவுகளும் நடந்தது.
ஆயுத போராட்டமில்லாமல் பத்து வருடங்களாகி விட்டதே?
அரசியல் பேச்சுக்களால் ஏதாவது முன்னேற்றம் கண்டீர்களா?

இஸ்ரேலின் சனத்தொகைக்கும் அவர்களின் பரம எதிரியான அரபு உலகின் சனத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2022 at 15:16, nochchi said:

நாங்கள் எதிர்பார்ப்பது சுயநலமற்ற இனச்சுயநலத்தோடு சிந்திக்கும் திடசங்கற்பமுள்ள தலைமையே இன்றைய தேவை.

இலங்கை தமிழ் மக்களுக்கு தந்தை செல்வா  சிறந்த தலைவராக இருந்தார்  அகிம்சை வழியில் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள் பண்டா- செலவா ஓப்பந்தம்,டல்லி -செல்வா ஓப்பந்தம். நடைமுறைபடுததப்படவில்லை யாரில் பிழை உண்டு” செலவாவில் இல்லையே   சிங்கள தலைவர்களில் தான் பிழையுண்டு.....பண்டா.     ,டல்லியை. விட  கடும் போக்கான சிங்கள தலைவர்களே இன்று இருக்கிறார்கள் எதிர்காலத்திலும் இருப்பார்கள் ஆகவே இன்று தந்தை செல்வா இருந்தாலும் அல்லது நீங்கள் விரும்புவது போன்ற தமிழ் தலைவர் இருந்தாலும் நான் உறுதியாக சொல்லுகிறேன் தீர்வு பெற்று தரமாட்டார்கள் தரமுடியாது காரணம் சிங்களவன்  ஒருபோதும் தரமாட்டான்  எனவே… தமிழர்களின் தலைவராக சம்பந்தனோ சுமந்திரனோ மாவையோ. ..அல்லது எவரும் இருக்கலாம் இது எனது தனிப்பட்ட உறுதியான கருத்துகள் 😀 இன்றைய நிலையில் இலங்கையில் ஒரு அரச தலைவர் தமிழருக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு கொண்ட சிங்கள தலைவர் தேவ....அதேபோல இந்தியா அரச தலைவரும் தமிழ்நாடு அரச தலைவரும் அமைய வேண்டும் அல்லது நாங்கள் உருவாக்கவேண்டும் [ இது மிகவும் கடினம் ] எங்கள் தமிழ் தலைவர்கள் எப்படி இருந்தாலும் இவர்களால் தீர்வு பெற்று தரமுடியும்  🤣மேலும் ஆயுதப் போராட்டத்திலும். நாங்கள் மிக சிறந்த தலைவரை கொண்டிருந்தோம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தானே அவலங்களும் அழிவுகளும் நடந்தது.
ஆயுத போராட்டமில்லாமல் பத்து வருடங்களாகி விட்டதே?
அரசியல் பேச்சுக்களால் ஏதாவது முன்னேற்றம் கண்டீர்களா?

இஸ்ரேலின் சனத்தொகைக்கும் அவர்களின் பரம எதிரியான அரபு உலகின் சனத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

அண்ணை இலங்கை வாழ் இந்தியா தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்நது உள்ளது” அதேபோல இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது  ஆனால் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைத்து உள்ளது இப்படியாக அழிந்துபோகும் இனத்துக்கு ஏன் சுயாட்சி அல்லது தீர்வு  ?.     பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்டுவதற்கு என்ன வழி உண்டு?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

சம்சும் கொம்பனியை கூண்டோடை நாடு கடத்துவது

 • Haha 2
Link to comment
Share on other sites

1 hour ago, Kandiah57 said:

அண்ணை இலங்கை வாழ் இந்தியா தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்நது உள்ளது” அதேபோல இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது  ஆனால் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைத்து உள்ளது இப்படியாக அழிந்துபோகும் இனத்துக்கு ஏன் சுயாட்சி அல்லது தீர்வு  ?.     பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்டுவதற்கு என்ன வழி உண்டு?

வடமாகாணத்தில்  ஒரு உறுப்பினர் அதிகம் என வாசித்த நினைவு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

இலங்கை தமிழ் மக்களுக்கு தந்தை செல்வா  சிறந்த தலைவராக இருந்தார்

6 hours ago, Kandiah57 said:

ஆயுதப் போராட்டத்திலும். நாங்கள் மிக சிறந்த தலைவரை கொண்டிருந்தோம் 

நன்று, இந்த இருவரைத்தவிர யாராவது ஒருவராவது இப்படிச் சிந்தித்தார்களா? இல்லையே. தந்தை செல்வா அவர்களின் அறவழிப்போர் தோற்றபோது வரலாற்றின் தன்னியல்பாக ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. அது கணிசமான வெற்றியைத் தொட்டு நின்றபோது இந்திய-மேற்குக் கூட்டணியின் நாசகார நிலைப்பாடு கரணியமாக வீழ்த்தப்பட்டதோடு, தமிழினம் சற்றேனும் மிதந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா, அது சூனியக்காரியின் தலைமை முதல் மோடி வரை இன அழிப்புககான உதவி தொடர்கிறது. சீனாவும் உதவிவருகிறது. இதிலே சீனா தமிழர்களை நோக்கி அசைவதொன்றும் சாதாரணமல்ல. ஒருவேளை கொழும்பு மேற்கோடு இறுக்கமாகக் கைகோர்த்தால் அதனை ஈடுகட்ட அவர்களுக்கும் ஆட்கள் தேவை. அதனால்தான் இறால் போடுகிறார்கள். தமிழ் மீன்கள் தந்திரமாக இறாலை மட்டும் கௌவுவதா இல்லை தூண்டிலில் மாட்டுவதா என்பதை நெறிப்படுத்த ஒரு சாதுரியம் மிக்க தலைமை தேவை. அதனையே தமிழினம் எதிர்பார்க்கிறது. மேற்குடனான கரம்கோர்ப்பென்பது இந்தியாவுக்கு அது சாதகமே. ஆனால், அப்படியொரு இறுக்கம் (யே.ஆர். காலத்பை;போல்) ஏற்படுமாயின் மேற்குத் தமிழரது பிரச்சினையை உறைநிலைக்கு தள்ளிவிடுவதோடு, இந்தியாவுக்கும் அல்லவா கொடுத்துவிடும். இவற்றுக்கால் சுழித்தோடும் சட்டநுணுக்கம் மற்றும் புவிசார் அரசியல் தெளிவுடன் சிந்திக்கும் தலைமையால் மட்டுமே சரியான திசைகாட்ட முடியும். 
நன்றி 
 
On 3/10/2022 at 23:39, குமாரசாமி said:

ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தானே அவலங்களும் அழிவுகளும் நடந்தது.
ஆயுத போராட்டமில்லாமல் பத்து வருடங்களாகி விட்டதே?
அரசியல் பேச்சுக்களால் ஏதாவது முன்னேற்றம் கண்டீர்களா?

இஸ்ரேலின் சனத்தொகைக்கும் அவர்களின் பரம எதிரியான அரபு உலகின் சனத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

நன்றி 

சிந்தனைக்குரியது.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நன்று, இந்த இருவரைத்தவிர யாராவது ஒருவராவது இப்படிச் சிந்தித்தார்களா? இல்லையே. தந்தை செல்வா அவர்களின் அறவழிப்போர் தோற்றபோது வரலாற்றின் தன்னியல்பாக ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. அது கணிசமான வெற்றியைத் தொட்டு நின்றபோது இந்திய-மேற்குக் கூட்டணியின் நாசகார நிலைப்பாடு கரணியமாக வீழ்த்தப்பட்டதோடு, தமிழினம் சற்றேனும் மிதந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா, அது சூனியக்காரியின் தலைமை முதல் மோடி வரை இன அழிப்புககான உதவி தொடர்கிறது. சீனாவும் உதவிவருகிறது. இதிலே சீனா தமிழர்களை நோக்கி அசைவதொன்றும் சாதாரணமல்ல. ஒருவேளை கொழும்பு மேற்கோடு இறுக்கமாகக் கைகோர்த்தால் அதனை ஈடுகட்ட அவர்களுக்கும் ஆட்கள் தேவை. அதனால்தான் இறால் போடுகிறார்கள். தமிழ் மீன்கள் தந்திரமாக இறாலை மட்டும் கௌவுவதா இல்லை தூண்டிலில் மாட்டுவதா என்பதை நெறிப்படுத்த ஒரு சாதுரியம் மிக்க தலைமை தேவை. அதனையே தமிழினம் எதிர்பார்க்கிறது. மேற்குடனான கரம்கோர்ப்பென்பது இந்தியாவுக்கு அது சாதகமே. ஆனால், அப்படியொரு இறுக்கம் (யே.ஆர். காலத்பை;போல்) ஏற்படுமாயின் மேற்குத் தமிழரது பிரச்சினையை உறைநிலைக்கு தள்ளிவிடுவதோடு, இந்தியாவுக்கும் அல்லவா கொடுத்துவிடும். இவற்றுக்கால் சுழித்தோடும் சட்டநுணுக்கம் மற்றும் புவிசார் அரசியல் தெளிவுடன் சிந்திக்கும் தலைமையால் மட்டுமே சரியான திசைகாட்ட முடியும். 
நன்றி 

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழினத்திற்கு அவசியம் தேவையானது சிறந்த தலைமை மட்டுமே. வேறெதுவும் தேவையில்லை.

சிறந்த தலைமையும் ஆளுமையும் இருந்தால் மற்றதெல்லாம் தானாக வரும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சிறந்த தலைமையும் ஆளுமையும் இருந்தால் மற்றதெல்லாம் தானாக வரும்.

இல்லை ஒருபோதும் வராது” எப்படி வரும் என்று விளங்கப்படுததுங்கள் பார்ப்போம் 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

இல்லை ஒருபோதும் வராது” எப்படி வரும் என்று விளங்கப்படுததுங்கள் பார்ப்போம் 

ஒரு கைத்துப்பாக்கியோடு தொடங்கி விமானப்படை வரையான வளர்முகத்தை கண்ட நாட்டில் இப்படியொரு  ஐயமா?

 • Like 1
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • படித்ததில் பிடித்தது...😉 A young black man is asked the… question, “How are your grades and what do you want to do with your life?” He likes to play soccer and he’s getting Cs he says. Someone asks him if he plans on playing professional soccer since he didn’t say anything else about his future. “I’m just having fun playing,” he replies. “What about them grades?” another brother presses. “Are you going to bring those up?” His response is well-rehearsed and unsettling, “I feel like I’m at a really good spot with Cs. I don’t have to feel the pressure and stress others have with getting As and Bs. I’m good.” …………..contd. Slave Mentality “Slave mentality” is a phrase packed with a lot of meaning. It’s a disease inflicted by America. On the one hand, it is the perception that one merely accepted slavery as their lot in life. It’s realizing that things are never going to get any better. It’s a recognition of your bondage and trying to make the best out of the worst… out of beatings, rapes, whippings, constant exhaustion, near starvation and brutal lynchings. You get by to survive. Naturally, there were many who, mentally, had given up even if their hearts yearned for freedom.  https://joantrumpauermulholland.org/the-slave-mentality/  
  • மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட்டில்  லபுஷேன், ஸ்மித் இரட்டைச் சதங்கள் குவிப்பு By SETHU 01 DEC, 2022 | 05:31 PM மேற்கிந்தியத் தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 598 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.  அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நேற்று இப்போட்டி ஆரம்பமாகியது. முதல் நாள் ஆட்டமுடிவின்போது அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 293 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 2 ஆவது நாளான இன்று அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இரட்டைச் சதங்களைக் குவித்தனர். மார்னஸ் லபுஷேன்,  350 பந்துகளில் ஒரு சிக்ஸர், 20 பவுண்டறிகள் உட்பட 204 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரின் 8 ஆவது டெஸ்ட் சதம் என்பதுடன், 2 ஆவது இரட்டைச் சதமும் ஆகும். ஸ்டீவ் ஸ்மித் 311 பந்துகளில் 17 பவுண்டறிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைக் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித்தின் 29 டெஸ்ட் சதம் இதுவென்பதுடன் அவரின் 4 ஆவது இரட்டைச் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது, ட்ரேவிஸ் ஹெட் 95 பந்துகளில் 99 ஓட்டங்களைப் பெற்றார்.  ஸ்மித் 200 ஓட்டங்களைப் பெற்றவுடன் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. மேற்கிந்திய பந்துவீச்சாளர்களில் கிறேக் ப்ராத்வெய்ட் 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். கீல் மேயர்ஸ் 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜேடன் சீல்ஸ் 95 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி,  25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கிறேக் ப்ராத்வெய்ட் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களைப் பெற்றார். தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் டேஜாநாரின் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்றிருந்திருந்தார். இவர் மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிவ்நாரின் சந்தர்போலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/141881
  • பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து புதிய சாதனைகள்: 110 வருட சாதனையை தகர்த்தது இங்கிலாந்து By SETHU 01 DEC, 2022 | 06:27 PM   பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று, இங்கிலாந்து அணி பல உலக சாதனைகளைப் படைத்தது. ஒருநாள் போட்டிப் பாணியில் இங்கிலாந்து வீரர்கள் துடுப்பெடுத்தாடினர்.  பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இன்று வியாழக்கிழமை இப்போட்டி ஆரம்பமாகியது. இங்கிலாந்து குழாமிலுள்ள 14 பேருக்கு நேற்று திடீர் சுகவீனம் ஏற்பட்டதால் இப்போட்டி ஒத்திவைக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவியது. இப்போட்டியை திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்வதற்கு இருநாடுகளின் கிரிக்கெட் சபைகளும் இன்று காலையில்தான் தீர்மானித்தன. அந்தளவுக்கு இங்கிலாந்து வீரர்களின் உடல்நிலை நேற்று மோசமாக இருந்தது. ஆனால், இன்று போட்டி ஆரம்பித்தவுடன் பாகிஸ்தானின் அனுபவமற்ற பந்துவீச்சு வரிசையை இங்கிலாந்து வீரர்கள் துவம்சம் செய்தனர். இங்கிலாந்து வீர்ரகள் நால்வர் சதங்களைக் குவித்தனர். இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டமுடிவின்போது 4 விக்கெட் இழப்புக்கு 506 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இவை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைகளாகும். இதற்குமுன் டெஸ்ட் போட்டியொன்றின் முதல் நாளில் ஓர் அணியும் 500 ஓட்டங்களைக் குவித்தில்லை. இதற்குமுன் முதல் நாளில் அணியொன்றின் நான்கு வீரர்கள் சதம் குவித்ததுமில்லை.  இதற்குமுன் 1910 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றின் முதல் நாளில் அவுஸ்திரேலிய அணி 494 ஓட்டங்களைக் குவித்தமையே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது, இதேவேளை ஒரு நாளில் 4 வீர்ரகள் சதம் குவித்த சாதனையை இதற்குமுன் இங்கிலாந்து 3 தடவைகளும் இலங்கை ஒரு தடவையும் நிகழ்;த்தியுள்ளது. ஆனால் அவை முதல் நாளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஓவர் ஒன்றுக்கு சராசரியாக 6.74 ஓட்டங்களை இங்கிலாந்து குவித்தது. இங்கிலாந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஸாக் க்ராவ்ல 111 பந்துகளில் 122 ஓட்டங்களைக் குவித்தார்.  பேன் டக்கெட் 110 பந்துகளில் 107 ஓட்டங்களைக் குவித்தார். ஒலீ போப் 104 பந்துகளில் 108 ஓட்டங்களைக் குவித்தார்.  ஹரி புறூக் 81 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களைக் குவித்தார். அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார். ஜோட் ரூட் மாத்திரம் பிரகாசிக்கத் தவறினார். அவர் 31 பந்துகளில் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில்ஸஹீத் மஹ்மூத் 160 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்;த்தனார். ஹரீஸ் ரவூப் 78 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மொஹம்மத் அலி 96 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.  இவர்கள் மூவரும் அறிமுக வீரர்கள் ஆவர்.  பாகிஸ்தானின் சௌத் ஷகீல், அஷான் ரஸா, இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோன், வில் ஜெக்ஸ் ஆகியோரும் இப்போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/141884
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.