Jump to content

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனத் தூதுவரின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நிதியுதவி பங்கிட்டு வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மட்டுமே முழுத் தொகையும் பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது.

சீனத் தூதரகத்தின் இந்த நிதியுதவியின் கீழ் மாணவர்களுக்கான மாதந்த உதவிப்பணம் உட்பட பல நலனோம்புச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பல்கலைக்கழக நலச்சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1302473

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வர்ரே வா 🤣

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

தொலைநோக்கற்ற தமிழ்த்தலைவர்களைப்போல, தமிழ்மக்களும் இந்துயாவின் கோவணத்துள் தொங்குவதற்கு யோசிக்காது சிங்களவரைப்போல மாத்தி யோசிக்கவேண்டும். எம்மைப் போக்குக் காட்டியழிக்க முனையும் இந்துயாவைவிட சீனாவோடு தமிழினம் ஏன் நட்பாகி  எமது இலக்குகளை அடையக்கூடாது.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

தொலைநோக்கற்ற தமிழ்த்தலைவர்களைப்போல, தமிழ்மக்களும் இந்துயாவின் கோவணத்துள் தொங்குவதற்கு யோசிக்காது சிங்களவரைப்போல மாத்தி யோசிக்கவேண்டும். எம்மைப் போக்குக் காட்டியழிக்க முனையும் இந்துயாவைவிட சீனாவோடு தமிழினம் ஏன் நட்பாகி  எமது இலக்குகளை அடையக்கூடாது.   

இபோதுள்ள இரட்டை வேட  தமிழ்த் தலைமை வருகின்ற தேர்தலுடன் காணாமல் போய்விடும்.
ஆனால்... மிக அவசரமாக, புதிய  ஒரு மாற்றுத் தலைமை  உருவாகுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவியை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் சிங்கள பகுதிகளுக்கு கொடுத்து விடுவார்கள்.....நாங்கள் பெற்றுக் கொள்வது நல்ல செயல் அதுவும் நேரடியாக பெறுவது மிகவும் சிறப்பு  பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

இபோதுள்ள இரட்டை வேட  தமிழ்த் தலைமை வருகின்ற தேர்தலுடன் காணாமல் போய்விடும்.
ஆனால்... மிக அவசரமாக, புதிய  ஒரு மாற்றுத் தலைமை  உருவாகுதல் வேண்டும்.

அப்படியானதொரு சூழலே தென்படுகிறது. இதனால் டக்ளஸ் - கருணா- பிள்ளையான் போன்ற சக்திகள் முன்னோக்கித் தள்ளுப்படக்கூடும். இதனை மக்கள்(சிவில்) குமுகாய அமைப்புகள் சரியாகக் கையாள வேண்டும். மணிவண்ணன் போன்றோர்மீதும் அண்மையில் நடைபெற்ற தியாக தீபத்தின் வணக்க நிகழ்வுக் குளறுபடிகளால் நம்பிக்கை போய்விட்டது. இனத்துக்காக உண்மையாக முன்வரும் இளையோரை ஒட்டுக்குழுக்கள் மற்றும் அரசபடைகள் விட்டுவைக்குமா என்பதும் கவனத்திற்குரியது. அப்படித் துணிவோடு இறங்குவதாயின் மில்லரைப்போல முடிவெடுத்தே, அதாவது சாவைச் சந்திக்கத்தயாராக இறங்கவேண்டும். எமதினத்திலே அரசியல் தெளிவும் உறுதியும் உடையதொரு தலைமையின் அவசியம் குறித்த உரையாடல்களை இப்போதிருந்தாவது(நான் இதனை வேறொரு திரியிலும் சுட்டியிருந்தேன்) தொடங்கவேண்டும். யார் தொடங்குவது என்பதே பெரியதொரு வினா? கஜன் சக கஜன் போன்றோர் இன்றுவரை குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் நிலையிலேதான் இருக்கிறார்கள். இந்தியாவைப் பகைக்கக் கூடாதென்பதற்காக, இந்தியாவால் கையாளப்படமுடியாமல் மட்டும் இருப்பதுதான் விடியலுக்கான செயற்பாடாக நினைக்கிறார்கள் போல் உள்ளது. 
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

பல்கலைக்கழகத்தில் சீன கற்கைநெறி ஒன்றையும், சீனாவின் முன்ணணி பல்கலைக்கழகங்களின் புலமைப்பரிசில் திட்டத்தையும் கொண்டுவந்தால் நன்று. 

25 minutes ago, nochchi said:

தொலைநோக்கற்ற தமிழ்த்தலைவர்களைப்போல, தமிழ்மக்களும் இந்துயாவின் கோவணத்துள் தொங்குவதற்கு யோசிக்காது சிங்களவரைப்போல மாத்தி யோசிக்கவேண்டும். எம்மைப் போக்குக் காட்டியழிக்க முனையும் இந்துயாவைவிட சீனாவோடு தமிழினம் ஏன் நட்பாகி  எமது இலக்குகளை அடையக்கூடாது.   

சரியான கேள்வி. 

இப்படியான சிந்தனைகளைக் கிளறிவிடுவதுதான் இந்த உதவிகளின் நோக்கமாக இருக்குமோ ? 

  • Like 1
Link to comment
Share on other sites

சீனாவோடு தமிழர்கள் தொடர்புகளைப் பேணுதல் நல்லது. இது சிங்களத்தைப் போலவே இந்தியாவை எதிர்க்கும் நோக்கம் அல்ல. இந்தியா, காந்தி ஜெயந்தி போன்ற தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையைக் குறைக்கலாம்.

ஒரு வேளை (🤪) இந்தியா தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர முன்வந்தால் அதனை சீனா சிங்களத்தோடு சேர்ந்து நின்று எதிர்க்கும்.

இதேவேளை சீனா எமக்கான தீர்வினை வழங்க முன்வந்தால் அதனை இலங்கை இந்தியாவோடு சேர்ந்து நின்று முறியடிக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

அப்படியானதொரு சூழலே தென்படுகிறது. இதனால் டக்ளஸ் - கருணா- பிள்ளையான் போன்ற சக்திகள் முன்னோக்கித் தள்ளுப்படக்கூடும். இதனை மக்கள்(சிவில்) குமுகாய அமைப்புகள் சரியாகக் கையாள வேண்டும். மணிவண்ணன் போன்றோர்மீதும் அண்மையில் நடைபெற்ற தியாக தீபத்தின் வணக்க நிகழ்வுக் குளறுபடிகளால் நம்பிக்கை போய்விட்டது. இனத்துக்காக உண்மையாக முன்வரும் இளையோரை ஒட்டுக்குழுக்கள் மற்றும் அரசபடைகள் விட்டுவைக்குமா என்பதும் கவனத்திற்குரியது. அப்படித் துணிவோடு இறங்குவதாயின் மில்லரைப்போல முடிவெடுத்தே, அதாவது சாவைச் சந்திக்கத்தயாராக இறங்கவேண்டும். எமதினத்திலே அரசியல் தெளிவும் உறுதியும் உடையதொரு தலைமையின் அவசியம் குறித்த உரையாடல்களை இப்போதிருந்தாவது(நான் இதனை வேறொரு திரியிலும் சுட்டியிருந்தேன்) தொடங்கவேண்டும். யார் தொடங்குவது என்பதே பெரியதொரு வினா? கஜன் சக கஜன் போன்றோர் இன்றுவரை குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் நிலையிலேதான் இருக்கிறார்கள். இந்தியாவைப் பகைக்கக் கூடாதென்பதற்காக, இந்தியாவால் கையாளப்படமுடியாமல் மட்டும் இருப்பதுதான் விடியலுக்கான செயற்பாடாக நினைக்கிறார்கள் போல் உள்ளது. 
நன்றி

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா சீன தூதுவர் அவர்களே.

யாழ் இந்துக் கல்லூரியில் மாண்டரின் மொழி படிக்க உதவ முடியுமா? 🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

இங்கு ஆயுதத்தைத் தூக்குங்கள் என்று யாரையும் கோரவில்லை. ஆனால், மக்கள் தொடர்ந்து போராடவேண்டிய நிலையிலேயே ஈழத்தீவிலே தமிழ்பேசும் மக்களை சிங்களமும் உலகும் வைத்திருக்கிறது. நாங்கள் எதிர்பார்ப்பது சுயநலமற்ற இனச்சுயநலத்தோடு சிந்திக்கும் திடசங்கற்பமுள்ள தலைமையே இன்றைய தேவை. அதனையே பலர் சுட்டுகின்றார்கள். போராட்டமென்றவுடன் ஏ.கே.47ஐ நினைக்கவேண்டிய தேவையில்லை. ஆனால் உலகிலே இன்றும் விடுதலைக்காக அவைகளே பேசுகின்றன. அதனைப் பார்த்து கையறு நிலையில் நிற்கிறது புலிகளுக்கு வகுப்பெடுத்த மேற்குலகு என்பது வேறுகதை. 

நீங்கள் சொல்வதுபோல் சனத்தொகை பெருக்கமென்ற மூலோபாயம் கடந்த பத்தாண்டுகளாகப் பேசப்படும் விடயம். பொருண்மியச்சுமையால் நெரிபடும் ஒரு பிள்ளையுள்ள குடும்பத்தை காணும் தம்பதிகள் உறையோடுதான் கட்டிலுக்குப் போகிறார்கள். உறைவேண்ட வழியற்றவனோ கொஞ்சம் தள்ளிப்படப்பா என்ற நிலை. பொருண்மியத் தேடலுக்கான நிலை களைப்பு சோர்வு என்பன தம்பதியரிடையேயான கூடல்களையே ஊடலாக்கி ஊடுருவியுள்ள நுகர்வுப் பொருணமியச் சூழல் என்பனவும் இனவிருத்திக்குத் தடையான கரணியங்கள் ஆகும். எனவே பொருண்மிய வளப்பெருக்கமற்று மகிழ்வான வாழ்வுச் சூழலற்ற ஒரு நாடாக ஈழம் இருக்கும்வரை சாத்தியமா என்று சிந்திக்க வேண்டும். அதேவேளை இனவிருத்திக்கான பரப்புரையையும் வேலைத்திட்டத்தையும் புலத்திலிருந்து உங்களைபபோன்ற சிந்தனையாளர்கள் முன்னெடுத்தால் புலத்தமிழர் கரம்கொடுப்பார் என்பதில் ஐயமில்லை. 
நன்றி

1 hour ago, இணையவன் said:

சீனாவோடு தமிழர்கள் தொடர்புகளைப் பேணுதல் நல்லது. இது சிங்களத்தைப் போலவே இந்தியாவை எதிர்க்கும் நோக்கம் அல்ல. இந்தியா, காந்தி ஜெயந்தி போன்ற தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையைக் குறைக்கலாம்.

ஒரு வேளை (🤪) இந்தியா தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர முன்வந்தால் அதனை சீனா சிங்களத்தோடு சேர்ந்து நின்று எதிர்க்கும்.

இதேவேளை சீனா எமக்கான தீர்வினை வழங்க முன்வந்தால் அதனை இலங்கை இந்தியாவோடு சேர்ந்து நின்று முறியடிக்கும்.

உண்மைதான்,

நாம் எதிர்க்கத்தேவையில். ஏன் சிங்களத்தைபோன்றதொரு அரசியல் பொறிமுறையை வகுத்துப் பிரித்து நாடுகளுக்கும் நிலைமைகளுக்கும் ஏற்றவாறு செயற்படுத்தக்கூடாது. சிங்களத்தின் இராயதந்திரத்தினைப்பாருங்கள் வரலாற்றுக் காலத்திலேயே சோழரை எதிர்க்க பாண்டியரோடு(தென்னிந்தியரோடு) கரம்கோர்க்கவில்லையா?  

Edited by nochchi
திருத்தம்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

திலீபன் அண்ணாவின் மண்ணில் காந்திக்கு மிதிவண்டிப் பயணம் செய்யும் மறதிச்செம்மல்களை நினைக்க வேதனையாக உள்ளது. இதை நினைக்க கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. 

ஒருவன் நிலாக்காட்டி பழஞ்சோறூட்ட நினைக்கிறான்!
இன்னொருவன் நிலாவிற்குப் போக வழிகாட்டுகிறான்!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

ஐயா, 

அனக்கு நான்கு பிள்ளைகள். என்னுடைய நண்பர்கள் பலரை கிண்டலடித்து ஆகக் குறைந்தது 3 பிள்ளைகளாவது பெற்றுக்கொண்டுள்ளனர்.  

இதுதான்  என்னால் செய்யக்கூடியது, இப்போதைக்கு..... 😀

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களிப்பின் அடுத்த கட்டமாக

சீனதூதுவரை  சந்தித்து நன்றி சொல்வதுடன் 

முடிந்தால்  சீனா  சென்று சீன அரசுடன்  பேசத்தொடங்கவேண்டும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சீனா தனது உதவியினை... நேரடியாக மாணவர்  நலச் சேவைகளுக்கென வழங்குவதன் மூலம் 
எதிர் காலத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம், 
தனது காய் நகர்த்தலை செய்ய முடிவெடுத்துள்ளது போல் தெரிகின்றது. 🙂

இருக்கலாம், அண்மையில் சீனத்தூதுவரின் அறிக்கைக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் சீனத் தூதுவருக்கு நமது நிலைமைகளை விளக்கி, இப்படியான அறிக்கைகளை எதிர்காலத்தில் தவிர்க்கச் செய்யலாம். ஆனா அவர்கள் ஒன்றும் தெரியாமல் செய்யவில்லை. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுகிறார்கள். இதை வெட்டியாடும் திறமை நாங்கள் ராஜ தந்திரிகள் என்று அலட்டிக்கொண்டு திரியும் நம்ம தலைமைகளுக்கு உண்டா? நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. சிறிதாயிருக்கும் போதே தீர்க்க முடியாதவர்கள் இனிமேல் மூடிக்கொண்டு படுக்க வேண்டியதுதான். நாங்கள் இனிமேல் சிங்களத்தோடு மட்டுமல்ல அவன் அழைத்து வைத்து கடன் வாங்கிய நாடுகளோடும் போராட வேண்டியுள்ளது. போராட்டம் என்றவுடன் ஆயுதத்தை யாரும் நினைக்க வேணாம், அதற்கு துணிவுள்ளவன் யாரும் வரப்போவதில்லை, வந்தாலும் சாதிக்க முடியாது. பேசத் துணிவுள்ளவன் வரவேண்டும்! தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் அதற்கு அனுமதிக்கப்போவதுமில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கு பின்னாலேயே அலைந்து, அவர்களை ஓரங்கட்டி, நாறடித்து, பயமுறுத்தி, அரசாங்கத்தால் அச்சுறுத்தி, இனவாதிகளை கிளப்பி வெளியேற்றிவிடுவார்கள். சிங்களவரை விட இந்த தமிழ் தேசியத்தை வைத்து வயிறு வளப்பவர்களை சமாளிப்பதே  மிகப்பெரிய சவால்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

போராட்டம் வேண்டாம்  போராட்டத்தால் எமது மக்களை இழந்தது போதும்  சிங்களவனுக்கு எம்மை விட சனத்தொகை மட்டுமே அதிகம் உள்ளது மற்றைய விடயங்களில் சிங்களவனுககு சமன் அல்லது அதிகம்  எனவே… தயவுசெய்து சனத்தொகையையும் பெருக்க திட்டமிடப்பட்ட முறையில் முயற்சி செய்யுங்கள்   நாங்களும் இலங்கையை ஆளக்கூடிய நிலை வரும்..அந்த நிலையில் சிங்களவனே சொல்லுவான். பிரிந்து போ என்று   ஏன் அடிபட்டு நாங்கள் உயிர் இழக்க வேண்டும் 

ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தானே அவலங்களும் அழிவுகளும் நடந்தது.
ஆயுத போராட்டமில்லாமல் பத்து வருடங்களாகி விட்டதே?
அரசியல் பேச்சுக்களால் ஏதாவது முன்னேற்றம் கண்டீர்களா?

இஸ்ரேலின் சனத்தொகைக்கும் அவர்களின் பரம எதிரியான அரபு உலகின் சனத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2022 at 15:16, nochchi said:

நாங்கள் எதிர்பார்ப்பது சுயநலமற்ற இனச்சுயநலத்தோடு சிந்திக்கும் திடசங்கற்பமுள்ள தலைமையே இன்றைய தேவை.

இலங்கை தமிழ் மக்களுக்கு தந்தை செல்வா  சிறந்த தலைவராக இருந்தார்  அகிம்சை வழியில் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள் பண்டா- செலவா ஓப்பந்தம்,டல்லி -செல்வா ஓப்பந்தம். நடைமுறைபடுததப்படவில்லை யாரில் பிழை உண்டு” செலவாவில் இல்லையே   சிங்கள தலைவர்களில் தான் பிழையுண்டு.....பண்டா.     ,டல்லியை. விட  கடும் போக்கான சிங்கள தலைவர்களே இன்று இருக்கிறார்கள் எதிர்காலத்திலும் இருப்பார்கள் ஆகவே இன்று தந்தை செல்வா இருந்தாலும் அல்லது நீங்கள் விரும்புவது போன்ற தமிழ் தலைவர் இருந்தாலும் நான் உறுதியாக சொல்லுகிறேன் தீர்வு பெற்று தரமாட்டார்கள் தரமுடியாது காரணம் சிங்களவன்  ஒருபோதும் தரமாட்டான்  எனவே… தமிழர்களின் தலைவராக சம்பந்தனோ சுமந்திரனோ மாவையோ. ..அல்லது எவரும் இருக்கலாம் இது எனது தனிப்பட்ட உறுதியான கருத்துகள் 😀 இன்றைய நிலையில் இலங்கையில் ஒரு அரச தலைவர் தமிழருக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு கொண்ட சிங்கள தலைவர் தேவ....அதேபோல இந்தியா அரச தலைவரும் தமிழ்நாடு அரச தலைவரும் அமைய வேண்டும் அல்லது நாங்கள் உருவாக்கவேண்டும் [ இது மிகவும் கடினம் ] எங்கள் தமிழ் தலைவர்கள் எப்படி இருந்தாலும் இவர்களால் தீர்வு பெற்று தரமுடியும்  🤣மேலும் ஆயுதப் போராட்டத்திலும். நாங்கள் மிக சிறந்த தலைவரை கொண்டிருந்தோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தானே அவலங்களும் அழிவுகளும் நடந்தது.
ஆயுத போராட்டமில்லாமல் பத்து வருடங்களாகி விட்டதே?
அரசியல் பேச்சுக்களால் ஏதாவது முன்னேற்றம் கண்டீர்களா?

இஸ்ரேலின் சனத்தொகைக்கும் அவர்களின் பரம எதிரியான அரபு உலகின் சனத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

அண்ணை இலங்கை வாழ் இந்தியா தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்நது உள்ளது” அதேபோல இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது  ஆனால் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைத்து உள்ளது இப்படியாக அழிந்துபோகும் இனத்துக்கு ஏன் சுயாட்சி அல்லது தீர்வு  ?.     பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்டுவதற்கு என்ன வழி உண்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

சம்சும் கொம்பனியை கூண்டோடை நாடு கடத்துவது

  • Haha 2
Link to comment
Share on other sites

1 hour ago, Kandiah57 said:

அண்ணை இலங்கை வாழ் இந்தியா தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்நது உள்ளது” அதேபோல இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது  ஆனால் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைத்து உள்ளது இப்படியாக அழிந்துபோகும் இனத்துக்கு ஏன் சுயாட்சி அல்லது தீர்வு  ?.     பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்டுவதற்கு என்ன வழி உண்டு?

வடமாகாணத்தில்  ஒரு உறுப்பினர் அதிகம் என வாசித்த நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

இலங்கை தமிழ் மக்களுக்கு தந்தை செல்வா  சிறந்த தலைவராக இருந்தார்

6 hours ago, Kandiah57 said:

ஆயுதப் போராட்டத்திலும். நாங்கள் மிக சிறந்த தலைவரை கொண்டிருந்தோம் 

நன்று, இந்த இருவரைத்தவிர யாராவது ஒருவராவது இப்படிச் சிந்தித்தார்களா? இல்லையே. தந்தை செல்வா அவர்களின் அறவழிப்போர் தோற்றபோது வரலாற்றின் தன்னியல்பாக ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. அது கணிசமான வெற்றியைத் தொட்டு நின்றபோது இந்திய-மேற்குக் கூட்டணியின் நாசகார நிலைப்பாடு கரணியமாக வீழ்த்தப்பட்டதோடு, தமிழினம் சற்றேனும் மிதந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா, அது சூனியக்காரியின் தலைமை முதல் மோடி வரை இன அழிப்புககான உதவி தொடர்கிறது. சீனாவும் உதவிவருகிறது. இதிலே சீனா தமிழர்களை நோக்கி அசைவதொன்றும் சாதாரணமல்ல. ஒருவேளை கொழும்பு மேற்கோடு இறுக்கமாகக் கைகோர்த்தால் அதனை ஈடுகட்ட அவர்களுக்கும் ஆட்கள் தேவை. அதனால்தான் இறால் போடுகிறார்கள். தமிழ் மீன்கள் தந்திரமாக இறாலை மட்டும் கௌவுவதா இல்லை தூண்டிலில் மாட்டுவதா என்பதை நெறிப்படுத்த ஒரு சாதுரியம் மிக்க தலைமை தேவை. அதனையே தமிழினம் எதிர்பார்க்கிறது. மேற்குடனான கரம்கோர்ப்பென்பது இந்தியாவுக்கு அது சாதகமே. ஆனால், அப்படியொரு இறுக்கம் (யே.ஆர். காலத்பை;போல்) ஏற்படுமாயின் மேற்குத் தமிழரது பிரச்சினையை உறைநிலைக்கு தள்ளிவிடுவதோடு, இந்தியாவுக்கும் அல்லவா கொடுத்துவிடும். இவற்றுக்கால் சுழித்தோடும் சட்டநுணுக்கம் மற்றும் புவிசார் அரசியல் தெளிவுடன் சிந்திக்கும் தலைமையால் மட்டுமே சரியான திசைகாட்ட முடியும். 
நன்றி 
 
On 3/10/2022 at 23:39, குமாரசாமி said:

ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தானே அவலங்களும் அழிவுகளும் நடந்தது.
ஆயுத போராட்டமில்லாமல் பத்து வருடங்களாகி விட்டதே?
அரசியல் பேச்சுக்களால் ஏதாவது முன்னேற்றம் கண்டீர்களா?

இஸ்ரேலின் சனத்தொகைக்கும் அவர்களின் பரம எதிரியான அரபு உலகின் சனத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

நன்றி 

சிந்தனைக்குரியது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நன்று, இந்த இருவரைத்தவிர யாராவது ஒருவராவது இப்படிச் சிந்தித்தார்களா? இல்லையே. தந்தை செல்வா அவர்களின் அறவழிப்போர் தோற்றபோது வரலாற்றின் தன்னியல்பாக ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. அது கணிசமான வெற்றியைத் தொட்டு நின்றபோது இந்திய-மேற்குக் கூட்டணியின் நாசகார நிலைப்பாடு கரணியமாக வீழ்த்தப்பட்டதோடு, தமிழினம் சற்றேனும் மிதந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா, அது சூனியக்காரியின் தலைமை முதல் மோடி வரை இன அழிப்புககான உதவி தொடர்கிறது. சீனாவும் உதவிவருகிறது. இதிலே சீனா தமிழர்களை நோக்கி அசைவதொன்றும் சாதாரணமல்ல. ஒருவேளை கொழும்பு மேற்கோடு இறுக்கமாகக் கைகோர்த்தால் அதனை ஈடுகட்ட அவர்களுக்கும் ஆட்கள் தேவை. அதனால்தான் இறால் போடுகிறார்கள். தமிழ் மீன்கள் தந்திரமாக இறாலை மட்டும் கௌவுவதா இல்லை தூண்டிலில் மாட்டுவதா என்பதை நெறிப்படுத்த ஒரு சாதுரியம் மிக்க தலைமை தேவை. அதனையே தமிழினம் எதிர்பார்க்கிறது. மேற்குடனான கரம்கோர்ப்பென்பது இந்தியாவுக்கு அது சாதகமே. ஆனால், அப்படியொரு இறுக்கம் (யே.ஆர். காலத்பை;போல்) ஏற்படுமாயின் மேற்குத் தமிழரது பிரச்சினையை உறைநிலைக்கு தள்ளிவிடுவதோடு, இந்தியாவுக்கும் அல்லவா கொடுத்துவிடும். இவற்றுக்கால் சுழித்தோடும் சட்டநுணுக்கம் மற்றும் புவிசார் அரசியல் தெளிவுடன் சிந்திக்கும் தலைமையால் மட்டுமே சரியான திசைகாட்ட முடியும். 
நன்றி 

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழினத்திற்கு அவசியம் தேவையானது சிறந்த தலைமை மட்டுமே. வேறெதுவும் தேவையில்லை.

சிறந்த தலைமையும் ஆளுமையும் இருந்தால் மற்றதெல்லாம் தானாக வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சிறந்த தலைமையும் ஆளுமையும் இருந்தால் மற்றதெல்லாம் தானாக வரும்.

இல்லை ஒருபோதும் வராது” எப்படி வரும் என்று விளங்கப்படுததுங்கள் பார்ப்போம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

இல்லை ஒருபோதும் வராது” எப்படி வரும் என்று விளங்கப்படுததுங்கள் பார்ப்போம் 

ஒரு கைத்துப்பாக்கியோடு தொடங்கி விமானப்படை வரையான வளர்முகத்தை கண்ட நாட்டில் இப்படியொரு  ஐயமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.